வா.. வா.. என் அன்பே - 31

1.5K 39 8
                                    

பகுதி - 31

பல பிரச்சனைகள் தன்னை சுற்றி இருந்தாலும் ,அவர்களது அறையில் இருக்கும் சரண் மான்சியின் புகைப்படத்தை பார்த்தாலே, தாமரையின் மனம் நினைவுகளில் பின்னோக்கி சென்றுவிடும் . ஆனால், இன்று இந்த அறையை நிறைத்து ஒலிக்கு அவளது குரல்.. எதைஎதையோ தட்டி எழுப்பக் கொண்டு கண்களை நனையச் செய்திருந்தது.

சரண் , மான்சியின் வீடு தேடி வந்த அன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் .‌ மான்சிக்கு அன்று ஷூட்டிங் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்க. அன்றைய நாட்களில் கண்டிப்பாக தன் முகத்திற்கு ஃபேஸியல் பேக் என்று எதையாவது செய்து கொள்வது அவள் வழக்கம் . அதுபோல் , முகத்திற்கு பேக் போடுவதற்கு , முன் புருவத்தை அவளை திருத்தம் செய்ய சொல்ல .. தாமரையும் அந்த செயலில் ஈடுபட்டிருந்தாள் .

" ஹேய் தாமரை.. ஒரு பாட்டு பாடு " என்று மான்சி கேட்டிட.. இது எப்பொழுதும் நடக்கும் வழக்கம். இயல்புலேயே , நல்ல குரல் வளம் உடையவள் தாமரை. ஒருமுறை அவள் பாடியதை கேட்டதில் இருந்து... அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாள்.

அதேபோல் , இன்றும் கேட்க... சிரிப்புடனே , " என்ன பாட்டுக்கா ? 

"ம்ச்சு எதாவது நல்ல பாட்டா பாடு...", என்றதும்...

"ம்... ஆங்...",

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

என்று தன் வேலையில் கவனமாக பாடவே... அதில் லயித்தவளாய் மெய் மறந்து மான்சி கேட்டுக் கொண்டிருந்தாள்... பாட்டு பாடி முடித்தவள் இரு புருவங்களை திருத்தி முடித்திருக்க...

"அக்கா.. முடிச்சிட்டேன்.,.. போய் கை கழுவீட்டு வந்துறேன்..",  என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே...

மான்சியின் அறைக் கதவு தட்டப்பட்டது...

"சரி நீ போ..",  என்றவள்

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now