வா.. வா.. என் அன்பே - 27

1.6K 30 4
                                    

சென்னையின் மையப் பகுதியில் , விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் கட்டிங்களுள் ஒன்றாக..  பி.கே. எண்டர்டெயின்மெண்ட் என்று பெயர் பலகையை பதித்த.. பெரிய நுழைவாயிற்குள் நுழைந்தான் சரண் மித்ரன்.

தன் ஆறடி உயரத்தை மேலும் அதிகரித்து காண்பித்தவனாக.. மிடுக்கான நடையோடு.. புயலென நுழைந்தவனின் அழகு.. திமிருக்கு உருவம் கொண்டு எழுந்து வந்தது.. போல் இருக்க.. முழுமையான கருப்பு வெள்ளை அலுவல் உடையில்.. வரவேற்பரையின் பெண்களின் முன் நிற்க..

முழு செயற்கை அலங்காரத்தில்..  உயிருள்ள பொம்மைகளாக.. குளிர்ந்த ரோஜா வண்ணத்தில் நின்றிருந்தவர்கள் இருவரும் தங்களை மறந்தவர்களாக.. யாரிவன் என்று சில கணங்கள் ஆராய்ந்திருக்க.. கண்களை உயர்ந்த விலையுடைய கருப்பு நிற கண்ணாடியால்.. பார்வையை மறைத்தவனாக முன் நின்றிருந்தான்  சரண் மித்ரன்...

"சரண் மித்ரன்.. ", என்று தன்னை அறிமுகம் செய்துக் கொள்ள.. இன்னும் அந்த பொம்மைகளுக்கு.. உயிர் திரும்பி இருக்கவில்லை போலும்.. அந்த ஆடவனின் ஆண்மையான குரலில் கட்டுண்டு இருக்க.. வேகமாக நெருங்கிய.. நாற்பது வயதை ஒத்த பாஸ்கர்..
" வெல்கம் ஸார்.." என்று மூச்சு வாங்க.. வரவேற்றார்..

அவரின் வருகையில் தெளிந்தவர்கள்.. மேலும் அதிர்ந்து தங்களது பணியை செய்பவர்களாக , வரவேற்க.. இறுகிய  உதட்டை அடர்ந்த மீசைக்கடியில் புதைத்து.. சூடெரிக்கும் சூரியனாய் தகிக்கும்.. கண்களை தன் கருப்பு நிறக் கண்ணாடியில் மறைத்தவனாக , அழுத்தமான காலடிகளோடு.. வேகமாக நடக்க.. பாஸ்கருக்கும் அவருடைய உதவியாளனுக்கும் பின்னோடு ஓட வேண்டியதாகவே இருந்தது.

குளுமை நிலவென.. ஒளிர்ந்தவனாய் வலம் வந்தவனின் வேகத்தின் மாற்றம் கண்டு மிரண்டே போனார்கள் . நேராக , தந்தை அறையின் முன் நின்றவன்.. மரியாதை நிமித்தமாக ஒரிரு நிமிடங்கள் உரையாடிய பின்.. ஒருமுறை சுற்றி வரப் போவதாக கூறி வெளியேறிவிட்டான். அவன் நுழைந்த சிறிது நாட்களிலேயே.‌. பெரிய மாற்றங்களை நிர்வாகத்தில் புகுத்தியவனின் சிந்தனை வேகத்திற்கும்.. செயலின் வேகத்திற்கும் ஈடு கொடுக்க முடியாததாகவே இருந்தது..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now