வா.. வா.. என் அன்பே - 118

902 50 7
                                    

❤️பகுதி - 118❤️

சத்தம் இல்லா பிள்ளையாய் அவள் , வளைந்து நெளிந்து புன்னகையுடன் மலையின் உச்சியில் தவழும் நீரோடை அவள் .  பற்றிக் கொள்ள தாயவள் இல்லாமல் போனதில் பள்ளத்தில் தவறி விழவே அலறும் குழந்தையாய் , ஆர்ப்பரித்ததோ ? கொட்டும் மலை அருவி..!

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எங்கும் பச்சை நிறங்களும் , வானில் இருந்து இறங்கிய வெள்ளிக்கம்பி அருவிகளுமே கண்களுக்கு விருந்தாக , அந்த ஏகாந்தமான இடத்திலும் குளுமையை தொலைத்தவனாய் இயக்குநர் வேந்தன் இருந்தான் .

" ஏய்.. என்னடா அங்க சத்தம்..", என்று ஓங்கிய குரல் அந்த இடத்தையே ஒரு நொடி உறைய செய்யவே திடுக்கிட்ட பறவைகளோ கூச்சலுடன் வானில் படபடத்து பறக்க.. அங்கு இருந்த ஆட்களோ மூச்சு விடவும் மறந்தே போயினர் .

வேந்தனின் குரலில் இருந்த வேகத்திலேயே , விரைவாக நெருங்கிய அசிஸ்டன்ட் டைரக்டரான தமன்.. ஓடி வந்தவன் ,

" அது.‌ அது அது ஒன்னும் இல்லை ஸார் டைய்லாக் சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன் ஸார் ... வேற.. வேற ஒன்னும் இல்லை ஸார் .", என்று கிசுகிசுத்த குரலில் மிகுந்த பணிவுடன் அச்சத்தையும் மறைத்தவனாக , அவனிடம் குனிந்து பேச ,

" என்ன பு*** இப்ப தெரிஞ்சிடும்..", என்று சீறிக் கொண்டே

" கெட் ரெடி..", என்று மீண்டும் ஒரு அலறலை விடுத்து எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க நகர்ந்து இருந்தான் .

" வந்ததுமே இன்னைக்கு ஆரம்பிச்சுட்டான் . தனியா நகர்ந்தப்பவே உஷாராகாம விட்டுடேன் ‌. ", என்று புலம்பியவனாகவே தமன் நடிகர்களிடம் சென்று தயாராக கூறியவன் மறக்காமல் அவன் மனநிலையையும் விவரித்து , ஒழுங்க நடிங்க என்றும் கூறியே அவன் வேலைகளில் கவனமானான் .

சற்று தொலைவில் , சென்று புகையை பற்ற வைத்தவனுக்கும் நெஞ்சில் இருந்த நெருப்பு அடங்க மறுத்ததாய் . " யாரு இப்போ.. இவளை கூப்பிட சொன்னது  ச்சை..", என்று மனதோடு குமுறியவன் தன் வாலக்காலால் தரையை எட்டி உதைத்து சினத்தை வெளிப்படுத்திய பின்பும் காதுமடல் வரை சூடு ஏறி இருந்தது குறையவில்லை ‌ . தன் கரத்தில் இருந்த அலைபேசியை வெறித்தவனாக சிலகணங்கள் நேரத்தை செலவிட்டவன்... இப்படியே , நின்றுக் கொண்டு இருந்தால் மேலும் மேலும் மண்டையின் சூடு அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று எண்ணியவனாய் வேலைக்குள் தன்னை மூழ்கடிக்க நினைத்து  நகர்ந்து இருந்தான் .

வா.. வா... என் அன்பே...Donde viven las historias. Descúbrelo ahora