வா.. வா... என் அன்பே...

By kanidev86

203K 5.3K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 114

1.5K 45 15
By kanidev86

❤️பகுதி - 114❤️

ரிச்சர்ட் தன் கரங்களில் தாமரையை ஏந்தியவனாக , " சரண்..", என்று அலற..

மறுநொடி , " என்னாச்சு..", என்று அடித்துப் பிடித்து.. தொய்ந்து தலை தொங்கியவளாய் கரங்களுக்குள் சுமந்து வந்தவனிடம் புயலாய் பாய்ந்து இருந்தான் .

" சீக்கிரமா.. வண்டிய எடுங்க..", என்று ரிச்சர்ட்டின் அவசரமும் , நிலைக் குத்திய பார்வையுடன் இருந்த சரணை  தீண்டயதாக தெரியவில்லை .

அவள் அணிந்து இருந்த ஆடையை நனைத்த உதிரத்திற்கு போதவில்லை போலும் , அவள் பாதங்களையும் நனைத்து இருக்க.. சரணின் ஜீவன் அவன் வசம் இல்லை . வெறித்த நிலையிலேயே , நின்று இருந்தவனிடம் வெளிப்படையாக தென்பட்ட பதற்றமும் நடுக்கமும்..

"பாப்பா..", என்ற கதறலுடன் அவளை தாங்க நினைத்து ரிச்சர்ட்டுடன் போராடியவனை , கன்னத்தில் ஒரு அறை அறைந்தே நிதானத்திற்கு அழைத்து வந்து இருந்தா ஆரவ்..  சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டான் .

இரத்த வெள்ளத்தில் , இமை திறவாது கிடந்த தாமரையை பார்க்கவே முடியாதவனாய் , " பாப்பா.. என்னாச்சு டீ.. கண்ணை முழுச்சு பாரு டீ.. ஸாரி ம்மா.. நீ இல்லேனா உன் மித்ரன் செத்துருவேன் டீ..  ", என்று ஏதே ஏதோ அரற்றியவனாக.. புலம்பிக் கொண்டே வர.. அவர்களோடு , உடன் வந்து இருந்த தாரா மற்றும் மான்சிக்குமே.. சரணின் தவிப்பு நில்லாமல் விழி நீரை சுரக்கச் செய்ததாய் .

குழந்தையைப் பற்றிய அக்கறையே அவனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை . மருத்துவமனை வளாகத்திற்குள் , வாகனம் நுழைந்ததோ இல்லையோ.. தன் தோளில் தன்னவளை அள்ளிக் கொண்டு  புயல் வேகத்தில் உள்ளே ஓடத் துவங்கிவிட்டான் ‌.

ஆரவ் தொலைபேசியில் மருத்துவமனையில் மருத்துவரிடம் தகவலை தெரிவித்து இருக்கவே , முன் ஏற்பாடாய் வாயில் நின்று இருந்த ஸ்ரெக்சர் மற்றும் மருத்துவர் குழு எதையும் சரண் கவனிக்க மறந்தவனாய் மனைவியுடன் சூறாவளி போல் நுழைந்து இருக்க.. அவன் பின்னோடு அவர்கள் ஓடி வர வேண்டியதாய் இருந்தது .

அவசரச் சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்ததும்.. மருத்துவரை தேடி அதீத பதற்றத்தில் துடித்த சரணிடம்  ,

" ஸார்.. ப்ளீஸ் காம் டவுன்.. கொஞ்சம் நகருங்க..", என்று அங்கு பணி புரியும் பெண் மருத்துவர் தாமரையின் நிலையை  சோதித்தவாறே ,

" என்னாச்சு..", என்று விசாரிக்க , சரணின் பார்வை மிக அவசரமாய் ரிச்சர்ட்டை தேடிட , அவனின் பரிதவிப்பான பார்வையின் சுழற்சியை கண்டவர் , எழும் பரிதாபத்தையும் மறைத்துக் கொண்டே திரும்பி பார்க்க .. மற்றொரு , ஆடவன் நின்று இருந்தான் .

" மேம் பேசீட்டே இருந்தவங்க திடீர்னு மயங்கீட்டாங்க . அப்புறம் , இப்படி ஆயிடுச்சு..", என்றான்

"மயங்கினதுல  கீழே விழுந்துட்டாங்களா.. ", என்று அவனோடு உரையாடியவராக இருந்தாலும் , அவளை பரிதோசித்தவராகவே வினவ ,

" இல்லை.. டாக்டர்.. பேசீட்டே இருக்கும் போது வயிறை பிடிச்சு சுருண்டு தரைல படுத்துட்டாங்க.. அப்போ , இப்படி ஆச்சு..", என்று அவளது ஆடையை சுட்டிக் காண்பித்து கூறினான் .

ஆனால் , அக்கேள்வியோ சரணை மாபெரும் சுழலுக்குள் சுழற்றி அடித்தது . அறியாமலேயே என்னும் போதும் , அவன் தோட்டத்தில் பிடித்துத் தள்ளியதே படமாக விரிய , ஆடவனின் அதரங்கள் வறண்டு‌.. இதயம் நொறுங்கி விடவே , அதன் பிறகு அவரின் எந்த கேள்விகளும் அவனை சென்று அடையாமல் போனதாய் ,

"  எத்தனையாவது மாசம்..", என்று அவரின் விசாரணைக்கு

" அஞ்சு..", என்று தயக்கமாகவே ரிச்சர்டே பதில் அளித்து இருந்தான் .

" ஓகே , ஸிஸ்டர் எழுதி தரதை வாங்கீட்டு வாங்க..  வெளில வெயிட் பண்ணுங்க..", என்றவர் அருகில் இருந்த செவிலியர் இடம் விவரங்களை தெரிவித்து மற்றொரு பெண்ணிடம் ஸ்கேனுக்கான ஏற்பாடுகளையும் , சில இரத்த பரிசோதனைகள் பற்றியும் கூறி அவளது வயிற்றில் குழந்தையின் ஆரோக்கியத்தின் நிலையை அறியும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் .

வெளியே காத்து இருந்தவர்களின் முகங்கள் பெரும் கவலையை பிரதிபலித்தவாறு இருந்தது.. சரணின் உயிரோ , அவன் வசத்தில் இல்லாதது போல் துடிதுடித்துக் கொண்டு இருக்க. அவசர சிகிச்சை பிரிவின் கதவையே வெறித்தவனாய் நின்று இருந்தான் .

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களுக்கு மேல் கடந்தே , மருத்துவர் வெளி வந்து இருந்தார்.. " டாக்டர் , அவங்க எப்படி இருக்காங்க.. நல்லா இருக்காங்களா.. முழிச்சிட்டாங்களா.‌.", என்று கரம் பற்றி விழிகள் மலர்ந்துவிட்டாள் என்று கூறிவிடேன் என்பது போல் எதிர்பார்ப்புடன் ஏக்கம் போட்டிப் போட்டவனாக கரம் பற்றி கெஞ்சுபவனிடம் , அவளுக்கு இன்னும் மயக்கம் தெளிவில்லை என்று சொல்லவதற்கே அவர் அவ்வளவு சங்கடப்பட்டு போனார் .

" டாக்டர்.. குழந்தை..", என்று மயூரி பதற்றமாக கேட்ட மறுநொடி ,

"  மாம்.. ", என்று அலறலாய் கண்டிப்புடன் அழைத்தவன் , " என் பாப்பா என்னோட இருந்தாலே போதும் . அவ ஹெல்தியா எழுந்துட்டான்னா.. ஒன்னு இல்ல பத்து குழந்தை வேணும்னாலும் உங்களுக்கு பெத்துக் கொடுப்பா.. நீங்க கேட்குற குழந்தைக்கும் அவ வேணும் மாம்‌.. ப்ளீஸ் மாம்..", என்று குரலில்  அத்தனை அழுத்தத்தை கொடுத்து இறுகியவனாகவே கூறிய போதும் ,கை எடுத்து கும்பிட்டவனாக , கண்களில் கண்ணீர் வழிவதையும் உணராதவனாய் பேசியவன். அதே வேகத்துடன்  மருத்துவரிடம் ,

" ப்ளீஸ் டாக்டர்.‌. ஹௌவ் ஷீ இஸ்..", என்று இதயத்தையே கையில் சுமந்து நின்று இருப்பவன் போன்று முகம் ஏந்தியவனாய் , அவரை வியப்பில் ஆழ்த்தி இருந்தான் .

அங்கு இருக்கும் அனைவருக்குமே , குழந்தையை பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்க , ஏன் அப்பெண் மருத்துவருமே , சிசுவின் ஆரோக்கியத்தை பற்றி அறிந்துக் கொள்ளவே முதன்மை அளித்து  இருந்தார் . அதற்கு , தாமரையின் ஆரோக்கியமான உடல்நிலையும் காரணமாக இருக்கலாம் ‌ .

சரணின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ தாமரையிடம் இருக்கும் மிகுந்த பாசம் மற்றும் அவள் ஆரோக்கியத்தின் மீது அக்கறையை வெளிப்படுத்தினாலும் , பல வருடங்களுக்கு பிறகு , ஏன் போராட்டகளுக்கும் ஏக்கங்களுக்கும் பிறகே கிடைத்த அக்குடும்ப வாரிசின் மீது ஏற்பட்டு இருந்த ஈர்ப்பும் , நெருக்கமும்.. ஜனித்து வெளி வராத ஜீவனின் நிலையை அறிய நினைத்தவராக கேட்டதற்கே மகனின் பேச்சு , மயூரின் நெஞ்சில் பாரம் அதிகரிக்கச் செய்து இருந்தது .

தன் நீண்ட நாள் கனவையும் ஏக்கத்தையுமே மறக்கும் அளவிற்கு இவ்வளவு நேசத்தை சுமந்து இருப்பவன் , அவளிடமும் வெளிப்படுத்தாமல் எதையோ நினைத்து குமைவதை தாள முடியதவராய் ராம் மார்பில் புதைந்து கொண்டு குலுங்கியவருக்கு மகனுக்கு மகிழ்ச்சியான நாட்கள் மீளாமலே போய்விடுமோ என்ற எண்ணமே மேலோங்கி கதற செய்து இருந்ததாய் .

டாக்டர் லஷ்மி , "  தாமரைக்கு ப்ரஷர் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு.. அவங்க  கண் இன்னும் விழிக்களை ஆனா , பயப்பட எதுவும் இல்லை . குழந்தைக்கு துடிப்பு நார்மலா  தெரியுது . பட் அப்படியே விட முடியாது ஸோ , எல்லா டெஸ்ட்ஸ் எடுத்து இருக்கோம் மயூரி . பார்க்கலாம் .. ப்ளீடிங் ஸ்டாப் பண்ணவும் மருந்து கொடுத்து இருக்கு . பார்க்கலாம் . எவ்ரி திங்ஸ் வில் பீ ஃபைன்..", என்று மென்மையாக கூறியவராய் நகர்ந்து இருந்தார் .

சாவித்திரியின் மூலமாகவே ராம் இல்லத்திற்கு விஷயம் தெரிந்து இருக்க.. அனைவரும் , மருத்துவமனைக்கே நேரடியாக வந்துவிட்டர்கள் . மருத்துவர் நகர்ந்து இருந்தாரோ இல்லை மயூரி , இடம் பொருள் பாராமல் முதல்முறையாக சரணிடம் பாய்ந்து இருந்தார் .

" இந்த அக்கறை அந்த பொண்ணு உன் கூட இருக்கும் போது இருந்து இருக்கணும் . உன் பேச்சுக்கும் , செயலுக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் இருக்கா.. வைஃப் வேணும்னு நினைக்கிறவன் யாரும் கூட இருக்கும் போது அடிச்சு துரத்த மாட்டாங்க . உனக்காக.. உன் சந்தோஷத்துக்காக அப்பாவி பொண்ணோட வாழ்க்கைய பலி ஆகிட்டோம் . எங்க சுயநலத்துக்காக அவளை.. அவளை இப்படி படுக்க வச்சுட்டோம் ‌ . ' நீங்க அவங்களுக்கு நல்லது செய்ய நினைக்குறீய ஆனா , அவருக்கு இஷ்டம் இல்லை ‌ . என்னைய பொண்டாட்டியா நடிக்க கூப்பிடுறாக .என் மித்ரன் ஸாரால என்  தம்பி தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் . அவருக்கு உதவ வந்தாலும் உங்க எல்லோரையும் ஏமாத்த எனக்கு மனசு வரலைன்னு சொன்ன பொண்ணாடா உன்னை ஏமாத்தி இருப்பா . உன்னை நம்பி எங்களை நம்பி வந்த பொண்ணை இப்படி இப்படி சாச்சுட்டோமே.. ",  என்று  கதறி இருந்தார் .

" அண்ணி ", என்று அழைத்து அடக்கிய சாவித்திரியின் குரலும் அவரை தேக்கவில்லை . 'குழந்தையையே மறக்கும் அளவிற்கு அவள் மீது அன்பை வைத்து இருப்பவன் . சிறிது அளவு பொறுமையை கடைப்பிடித்து இருந்தால் என்ன என்ற எண்ணமே அவரிடம்  ஆட்டுவித்து இருந்தது..

தாயின் ஒவ்வொரு வார்த்தைகளும் சரணின் ஆழம் வரை நுழைந்து இடி  என இறங்க செய்து இருக்க . ராம் பிடிவாதமாக திருமணம் நடத்தியதற்கான முடிச்சு இன்று தாயின் பேச்சால் அவிழ்ந்து இருந்தது என்றால் , தன் மீது அவள் வைத்து இருந்த நம்பிக்கை.. அடிக்கடி அவன் அதரங்களில் இருந்து வெளிவரும் சொல்லான நம்பிக்கையில் , அதிர்ச்சியில் உறைந்தவனாய் , தாடை இறுக்க நின்று இருந்தான் ‌.

" போதும் டா சாமி.. போதும்.. ஏற்கனவே , என்னாச்சு ஏதாச்சுன்னு உன்னை கேட்காம நாங்க தண்டிச்சதுக்கு , இப்போ நல்லவே  எங்களை வாய் அடைக்கவச்சது போதும் .  நீ நல்லா இருக்கணும் ஆசைப்பட்ட பாவத்துக்கு , நான் எப்படி அவர கல்யாணம் பண்ணிக்க முடியும்னு வந்து நின்ன பிள்ளைய பலி கொடுக்க , நீ தீர்த்துக்கிட்ட வரை போதும். எம் பையன் எப்பவும் எங்க பையனா மட்டுந்தான் இருப்பான்னு.. அவனால எப்பவும் மாற முடியாதுன்னு  நாங்க முட்டாள்த்தனமா நினைச்சதும் போதும் . நீ மாறலை.. மாறவே இல்லை . இவ்வளவு சீக்கிரம் மிருகமா மாறின நீ..  அவ்வளவு ஈசியா உன்னால மனுஷனா மாற முடியல.. உன்னால மாற முடியாது . மாறவும் வேண்டாம் . பூ மாதிரி இருந்த பொண்ணு எப்படி கிடக்கிறா பாருங்க.. இதில , அவ மட்டும் போதுமாம் .. எதுக்கு , எதுக்காக அவளை ஒரேடிய சாய்க்கவா..", என்று அவனும் தவித்து அவளையும் தவிக்க வைத்துக் கொண்டு இருக்கிறானே என்ற ஆதங்கமுமே மகனின் கசங்கிய தோற்றத்தை கண்டு மயூரியை  அதிகமாய் கோபங் கொள்ளச் செய்து இருந்தது .

மயூரியின் வார்த்தைகள் ஒவ்வொன்று அவன் நெஞ்சை குத்திக் கிழிக்க.. கடைசியாக , அவர் கேட்ட ,' அவளை ஒரேடிய சாய்க்கவா..', என்றதில் புழுவாய் துடித்த போதிலும் இறுகிய முகத்துடன் நின்று இருந்தான்  .

மயூரியின் பேச்சு அதிகமாக தாக்கவே , அவசரமாய் அவனை நெருங்கிய தாரா " சரண்..", என்று அவன் கரம் பற்ற , பட்டென்று விலகியதோடு அல்லாமல் வேகமாக அவ்விடத்தில் இருந்தும் வெளியேறி இருந்தான் .

" பாரு.‌. நல்லா பாரு.. இது தான் அவன் . இப்படி தான் அவன் . என் பையன் இப்படியா இருந்தான் ..", என்று மொத்த சீற்றமும் இப்பொழுது மான்சியின் மீது திரும்பி இருக்க.. ராம் ப்ரசாத்தின் கண்டிப்பில் தன்னை அடக்கிக் கொண்டார் .

மயூரியின் வார்த்தைகள் சரணின் மனதை குத்திக் கிழிக்க.. அங்கு நிற்கவே தகுதி இருப்பதாக தோன்றாததாலேயே நகர்ந்து இருந்தவனின் பின்னோடு ஓடிச் சென்ற ரிச்சர்ட் , " குட்டி முழிக்கும் போது நீங்க இல்லேனா தாங்கிக்க மாட்டா..", என்று சொல்லவே , அரைவிநாடி , அமைதியாக இருந்தவன்..' நீ போ..', என்பது போல் கைக்காட்டி , பத்து நிமிடங்கள் கடந்தே மீண்டும் அங்கு வந்து சேர்ந்தான் . அவன் வரவும் , தாமரை கண் விழித்து விட்டதாகவும் கூறினார்கள் .

முதல் ஆளாய் அவளை உள்ளே சென்று பார்த்தவனால் , தாங்கிக் கொள்ள முடியாது , தாமரையின் முகத்தை கையில் ஏந்த.. அவளோ , அயர்ந்த நிலையிலும் வெறுமையாக பார்த்து மேலும் கூறுப் போட்டாள் . அழுத்தமான , முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் பதித்தவன் , கலங்கிய கண்களையும் அவளுக்கு காட்டாது சீர் செய்தவனாக அவளை ஏறிட.. மௌனமாய் , அலைப்புரிந்தவளின் நிலையை காண சகிக்காதவனாய் ,

" அவ்வளவு சீக்கிரம் நம்ம லவ் கிஃப்ட் நம்மள விட்டுப் போகுமா.. ", என்று அவளது வயிற்றில் கரம் பதித்தவனாக , நெற்றியுடனே நெற்றி பதித்தவனாய் சொல்லவே ஆசுவாசமாக உணர்ந்தவளை கண்கள் பனிக்க கனிவாய் ஏறிட்டவன்.. மீண்டும் , ஒரு முத்தம் பதித்தே விலகிக் கொள்ள.. குடும்பத்தில் இருந்த அனைவரும் அவளை கண்டு சென்றார்கள் ‌ .

மறுநாள் , காலையே அறைக்கு மாற்றிவிட.. மேலும் , இரு தினங்கள் மருத்துவமனையில் தங்க நேரிட்டு இருந்தது . அதன்பின் சரணிடம் கோபமாக மயூரி பேசாத போதும் , சரண் ஒருவித அழுத்தத்துடனே இருக்க , தாமரையோ மௌனத்தை கடைப்பிடித்தவளாய் இருந்தாள் ‌. அவன் இல்லை என்றால் பரிதவிப்பாய் அலைபுரிதலான விழிகளோடு இருப்பதும் , அவன் அருகாமையில் மௌனமாய் அவனை கொல்வதுமாய் வதைத்துக் கொண்டு இருந்தாள் ‌ .

எவ்வளவு சினம் அவன் மீது இருந்த போதிலும் , தாமரையின் மனம் அவன் அருகாமை விரும்புவதை உணர்ந்ததாலேயே சரண் மித்ரனும் அமைதியாகவே மனைவியின் தண்டனையை ஏற்று இருந்தான் என்று கூறலாம் .

மேலும் , இரு தினங்களில் அவள் உடல் முன்னேற்றத்தால் , முழுமையான உடல் ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தி வீட்டிற்கு  செல்லலாம் என்று மருத்துவர் கூறி விட , ரிச்சர்ட்  சாந்தி இல்லத்திற்கு அழைக்க , மறுப்பு தெரிவித்த மயூரியிடம் , ' அது அவ அம்மா வீடு மேம்..', என்று பதில் அளித்து பெரியவர்களிடம் அனுமதியும் பெற்று பிடிவாதமாக அழைத்தும் சென்றுவிட்டான் . சரணின் மறுப்பை எதிர்ப்பார்த்து இருந்த அனைவருக்கும் தன் இறுகிய அமைதியால் எதுவும் சொல்லாமல்  மௌனமாக இருக்க.. அவன் மனதில் இருப்பதை அறிய முடியாது திண்டாடிப் போயினர் .

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

டூஊஊஊஊ லேட் யூடி , மொபைல்  இல்லை . ஸோ , பேக் அப் எடுக்க முடியாததால போஸ்ட் பண்ண முடியாம போச்சு . இன்னைக்கு சின்ன யூடிதான் பட் எனக்காக அட்ஜெஸ் பண்ணிக்கங்க . முடிந்த வரை நாளை மறுநாள் போஸ்ட் போட முயற்சிக்கிறேன் ‌ . உங்க எல்லோருடைய பொறுமையையும் அதிகமாவே சோதிக்கிறேன்னு தெரியுது . ஆனாலும் , தவிர்க்க முடியவில்லை நட்புகளே.. 😁😁😁

இப்படிக்கு
கனி தேவ் 💕💕

Continue Reading

You'll Also Like

142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
27.4K 2.6K 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்
7K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.