வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 110

2.1K 59 14
By kanidev86

பகுதி - 110

எவ்வளவு முயன்ற போதும் , கட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிந்தோட நின்று இருந்தாள் ‌தாமரை . அவன் உயரம் மறந்து , தாயிடம் ஆறுதல் தேடும் சிறு குழந்தையை போல் அவளது இடையைக் கட்டிக் கொண்டு கதறுபவனின் தலைக்கோதவே மெல்லியாலின் விரல்கள்  தவியாய் தவித்தாலும் , தன்னைத்தானே அடக்கி ஆண்டவளாய் இரும்பு என நின்று இருந்தாள் ‌.

அவ்விருவருக்கும் தனிமையை கொடுக்க விரும்பியவர்களாக , விலகியே இருந்தாலும் , அவர்களின் அனைவரின் கவனமும் சரண் மற்றும் தாமரை இடத்திலேயே நிலைத்து இருந்ததாய் . தாமரையின் கோபத்தை அறிந்தவர்களால் சரணின் மனதில் என்ன ஓடுகிறது என்று சரிவர புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தார்கள் என்றே கூற வேண்டும் .

தன் அறையை விட்டே வெளி வராதவனாய் , சரண் இருந்த போதும் , தாமரை ஆரவ் மற்றும் மான்சியுடன் இருப்பதை அறிந்த பின்பும் எவ்வித உணர்வுகளையும் வெளியிடாமல் இருக்கவே.. பெரியவர்களால் அவன் நினைப்பை பற்றி புரிந்துக் கொள்ளவே இயலவில்லை ‌ .  எதுவாக இருந்தாலும் , அவன் வாயில் இருந்தை வெளி வரட்டும் என்று நெஞ்சை கல்லாக்கியவர்களாக அமைதி காத்து இருக்க.. அதுவும் , இன்று காலை வரை மட்டுமே நிலைக்கச் செய்ததாய் ‌.

தாமரையின் பேச்சு , ரிச்சர்ட் மற்றும் விக்கி தவிர அனைவருக்குமே பெரும் அதிர்வை நிகழ்த்தி இருந்தது . ஒரு பெண்ணிடம், அத்துமீறி நடந்துக் கொள்ளும் அளவிற்காக மிருகமாய் மாறி போனான் என்று பெண்கள் அதிர செய்து இருந்தது என்றால் தாமரையின் தொடர் பேச்சோ ,  ' அய்யோ..', என்று கையறு நிலைக்கு அழைத்துச் சென்றதாய் .

தன் நண்பனின் இத்தகைய நிலைக்கு காரணமாக இருந்தவளின் மீது அத்தனை கோபமும் திரும்ப தீ பார்வையால் மான்சியை எரிக்க நினைத்து திரும்பியவளுக்கு , மேலும் அதிர்வு அலைகள் காத்து இருக்க.. ஸ்தம்பித்துவிட்டாள் ‌ .

உடல் விரைக்க நின்று இருந்தாலும் , மான்சியை தோளோடு அணைத்து தாங்கியவனாய் ஆரவ் நின்று இருக்க.. மான்சியோ , அவனது தோள் வளைவில் முகம் புதைத்தவளாய் அழுது துடிக்க.. சரணின் கதறலை கேட்ட பிறகோ , அவனை விட்டு வேகமாக நகர முற்பட்டவளை இழுத்து பிடித்து வைத்து இருந்தான் என்றே கூற வேண்டும் .

" ஆரவ்.. ஆரவ்‌‌.. ஷா.. ன்..", என்று விம்மித் தவித்தவளை அணைப்பால் அடக்கி , "போகாதே..", என்று விழிகளால் கூறியவனாய்.. " அவனோட , வைஃப் பார்த்துக்குவா மான்சி..", என்று ஒருவித அழுத்தத்துடன் கூறவே , அவனின் மார்பில் விழுந்து கதறி கரைந்து இருந்தாள்‌.

தாமரையின் பேச்சு ரிச்சர்ட்டை மொத்தமாகவே வீழ்த்தி இருந்தது . இதுநாள் வரை , தோன்றாத எண்ணம் முதல்முறையாக தோன்றியதாய் . தன் தங்கை என்று அவனிடம் அறிமுகம் செய்யாது பிழை செய்துவிட்டதை நினைத்து  இறுக்கத்திற்கு தாவியவனாய்.. முகம் சிவக்க அமர்ந்து இருந்து இருக்க.. அடுத்த நொடியே ,  சரணின் கதறல் கேட்டதில் மொத்தமாக திகைப்பில் ஆழ்ந்தவனாய்.. தடுமாறி போனான்  .

சாவித்திரியின் நிலையோ , சொல்வதற்கே இடம் இல்லாமல் போக , அழுதே குமைந்தார் . 

" பா..ப்..பா.. ஆ..",

" நான் தாமரைன்னு சொன்னேன் .",  என்று தன் பிடியிலேயே நின்றவள்..

" பாட்டு பாடி ஏமாத்தினவ.. பணம் வாங்கி ப*** வந்தவ‌.. இது எல்லாம் நீங்க சொன்னது தானே.. புதுசா நான் எதையும் சொல்லை.   இப்பவும் , அந்த சொத்து எம் பேர்ல தான் இருக்கு.. திடீர்னு எங்க இருந்து வந்தது‌.. இந்த பாசம்.. ஓ.. உங்க வாரிசை சுமக்கறதுனாலையா‌..", என்று இம்மி அளவும் தன் சினம் குறையாதவளாய்.. அவனை கேள்விகளால்  , சாடியதில்.. ரிச்சர்ட்டே , மனம் தாளாதவனாய் அவளை அடக்குவதற்காக புயல் போல் நுழைய , கண்ட காட்சியில் உறைந்தே போனான் .

தாமரையின் முன் மண்டியிட்டவனாய் , அவளது வயிற்றில் முகம் புதைத்து கெஞ்சிக் கொண்டு இருப்பவனை கண்டு‌.. அவனது உயரத்தையும் மறந்தவளாய் , வீம்புடன் பேசுபவளை பார்த்ததில் சினம் பெருக..

வேகமாக அவர்களின் அருகே சென்றவன்  , " சரண் என்னது இது.. முதல்ல எழுந்திரிங்க..", என்று அவனை தோளோடு தூக்கி நிறுத்த முயல.. சரணும் , மறுக்காமல் எழுந்தவன் ஏக்கம் சுமந்த விழிகளோடு மனைவியின் முகத்தையே பார்த்தவாறு நின்று இருக்க..

" அவ வருவா.. நீங்க வாங்க.. டேய் , ஆரவ்..", என்று மிக இயல்பாகவே ஆரவ்வை ரிச்சர்ட் தன் நண்பனையும் துணைக்கு அழைத்ததில்.. அவசரமாக , மான்சியின் கரத்தை ஆறுதலாய் அழுத்திப் பிடித்து தைரியம் அளித்தவனாய் அவர்களை நோக்கி சென்று ' என்ன..', என்பது போல் பார்வையால் வினவ.. அவன் பின்னோடு வந்த விக்கியின் கண்கள் சுருங்கி விரிந்ததாய் .

தாமரை இவர்களிடம் காட்டிய அடைக்கலத்தில் பெரிதாக வியப்பு ஒன்றும் எழுந்துவிடவில்லை ‌. ஆனால் , ரிச்சர்ட்டின் மிக இயல்பான அழைப்பும் , ஆரவ்வின் எதிர்வினையில் இருந்த எதார்த்தமும் விக்கியை புருவம் சுருக்கச் செய்து இருந்தது .

ஆரவ்விடம் கண்களால் சரணை சுட்டிக் காண்பிக்க , " சரண்.. நீ வா..", என்று அழைக்கவும்.. மறுப்பாய் , விழிகளை அசைத்தவன். வேகமாக , மனைவியை இரு கரங்களால் கன்னங்களை தாங்கியவனாக ,

" ஸாரி.. தெரியாம பேசீட்டேன். வா டீ போலாம்..", என்று ஒருவரையும் கண்டுக் கொள்ளாதவனாக மென்குரலில் கெஞ்சிக் கொண்டு இருக்க

" நேத்து , மான்சி யக்கா அம்மா வந்து சொன்னாகன்னு.. அதை நம்பி அடிச்சு துரத்தாத குறையா துரத்துனீய.. நாளைக்கு அந்த அக்காவோட மாமனார் வந்து எதுனாது செய்வான்.. அதுக்கு அடுத்து பத்திரிகைக்காரன் எதுனாது எழுதுவான்.இவிய ஒவ்வொன்னையும் நம்பி என்னைய ஒன்னா பேசாமலே கொல்லுவீய.. இல்லை பேசி பேசியே ரணமாக்குவீய.. ஆனா , என்னைய மட்டும் நம்ப மாட்டீய.. ", என்று மூச்சிரைக்க அவனுக்கு இணையாகவே நெருப்பு பறக்க சத்தம் இல்லாமல் சாடியவளின் பேச்சில் , அதிகமாய் கலங்கித் தான் போனான் .

பெண்ணவளின் பேச்சில் இருந்த உண்மைகள் சரணை வெகுவாகவே தாக்கிட..

" ஸாரி டீ.. ", என்று உள்ளுக்குள் துடித்தவனாய் மன்றாட ,

" இந்த ஸாரியும்.. உங்க குழந்தைக்காக என் வயித்துல இருக்கிறதால தானே..",  என்று அவள்  உயிர் வலியை தேக்கியவளாக கூறுவதை தாளாமல் அழுத்தமாக , அவளது இதழில் தன் இதழை ஒற்றி , தாமரையின் வார்த்தைகளுக்கு தடை செய்தவன்.. விலகாமலேயே ,

என்னை கொல்லாதே…
தள்ளி போகாதே…
நெஞ்சை கிள்ளாதே…
கண்மணி…

சொன்ன என் சொல்லில்…
இல்லை உண்மைகள்…
ஏனோ கோபங்கள் சொல்லடி…

உன்னை தீண்டாமல்…
உன்னை பார்க்காமல்…
கொஞ்சி பேசாமல்…
கண்ணில் தூக்கமில்லை…
என்னுள் நீ வந்தாய்…
நெஞ்சில் வாழ்கின்றாய்…
விட்டு செல்லாதே…
இது நியாயமில்லை…

சொன்ன என் சொல்லில்…
இல்லை உண்மைகள்…
ஏனோ கோபங்கள் தானடி…

என்று இருவரின் இதழ்கள் உரச பதறும் உயிரை பிடித்து வைத்து இருந்தவனாக , அவளை போலவே முதல் முறையாக சரணின் இனிமையான குரல் ரகசியமாய் வெளி வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி இருந்தது .

தாமரையின் ஜீவன் அற்ற விழிகளை ஏறிடும் தைரியம் இல்லாதவனாய்..

" நான் என்ன செய்யட்டும்..",

" நீங்க கேட்டுக்கிட்டதை என்னைய செய்ய விடுங்க..",

" என்னால முடியும்னு நினைக்கிறியா..", என்று அவளிடம் வாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் , உள்ளுக்குள் சில்லு சில்லாக நொறுங்கிய போதும்  ' முதல்ல உன்னால அது முடியுமா டீ..', என்று மனதிற்குள் அரற்றியவனாய் கெஞ்சிட.. அவன் மனைவியோ , பிடிவாதமாக கண்களோடு உதட்டையும் மூடிக் கொண்டு மௌனம் சாதித்தாள் ‌.

அருகே நின்றிருந்த ரிச்சர்ட்டிற்கு மனம் கலங்கி நின்றவன்.. அவசரமாய் ஆரவ்வை தேடிட.. அவன் பின்னோடு நின்று இருந்த ஆரவ்விற்கும் அவனை சரியாக படித்தவன் போல் ஆமோதிப்பாய் தலை அசைத்து ..

" சரண்..", என்று மென்குரலில் அழைக்க..

" நீ வா.. ", என்றான் .

' என்னடா நடக்குது இங்கே..', என்று வினவியவனாக விக்கியும் அவர்களோடு இணைந்துக் கொண்டான் .

தாரா , சாவித்திரி மற்றும்  மான்சி மூவரும் ஒருபுறம் தணித்து இருக்க.. ஆண்கள் மூவரும்  அமைதியாக வெளியேறி சோஃபாவில் அமர்ந்துக் கொள்ள.. தாமரையுடன் இருந்த ரிச்சர்ட்டோ ,

" குட்டீ‌‌..", என்று உள்ளடக்கிய சினத்துடன் கண்டிப்பாய் அழைத்தது.. அனைவருககுமே தெளிவாய் செவியில் தீண்டியது .

தாமரையோ , பிடிவாதத்துடன் நின்று இருந்தாள் , "  இது என்ன குட்டி.. இதை உன்கிட்ட நிச்சயமாக எதிர்பார்க்கவே இல்லை .. ", என்று அவன் சாட ,

வழிந்த கண்ணீரும் ஆவியாய் மறைந்து இருக்க.. ' நீ கூற வருவது எனக்கு புரியவில்லை..', என்பது போல் ஏறிட்டவளை முறைத்தவனாக , " இந்த அளவுக்கு அவர் கெஞ்சிட்டு இருக்காரு.. நீ என்னன்னா அப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம் குட்டி..", என்று உறுமவே ,

" ஒரு ஆம்பளையா மட்டுத்தேன்.. உன்னால எங்கிட்ட பேச முடியும்னா .. தயவுசெஞ்சு எதுவும் பேசாம போயிடு..", என்று சிவந்தவளாய் மூக்கு நுனி விடைக்க கூறியவளிடம் , ரிச்சர்ட்டும் அடங்கவே நேரிட்டது .

மிகவும் வளைந்து கொடுக்கும் குணம் உடையவள் தாமரை . அவ்வளவு எளிதாக சினம் கொள்பவளும் அல்ல.. அதேசமயம் , அனைத்திற்கும் அடங்கி செல்பவளும் அல்ல .  மனதில் ஒன்றை  தவறு என்று தீர்மானித்துவிட்டால் , அவளது பிடியில் இருந்து இறக்குவது என்பது இயலாத காரியம் என்பதையும் இங்கு இருப்பவர்களில் நன்கு அறிந்தவன் ரிச்சர்ட் மட்டுமே.. ரிச்சர்ட் அளவிற்கு இல்லை என்றாலும் அவனுக்கு அடுத்தபடியாக விக்கி .

" தாமரை.. அவரோட எல்லா விஷயமும் தெரிஞ்ச நீயே இப்படி வேகப்பட்டா என்ன அர்த்தம் சொல்லு..", என்று நிதானமாக வினவ ,

" அதுக்காக , அவிய என்ன பேசினாலும் செஞ்சாலும் சரின்னு சொல்ல சொல்றீயா..", என்றாள்.

" இல்ல குட்டி.. அவரோட , பழைய காயம் அப்படியே இருக்கு.. இப்பவும் அந்த ரதி வந்து..",

" அதுக்கு நான் அவிய .. முத ( முதல் ) பொண்டாட்டி இல்ல ண்ணே..", என்று பட்டென்று கூறியவள் ,

" அவியல மனசுக்குள் நிறுத்திக்காத வரை வலி தெரியலை ண்ணே.. ஆனா , இப்போ..", என்று நெஞ்சின் மத்தியில் அழுத்திப் பிடித்தவளாக கண்ணீர் வழிய இதழ்கள் துடித்து தடுமாறியவளாக நிற்க.. தங்கையின் நிலையை காண சகிக்காதவனாய்.. இழுத்து அணைத்து இருந்தான் .

" இவியலோட கோபம் ஏற்கனவே தெரிஞ்சது தான் . ஆனாலும் , இந்தளவுக்கு ரணமாக்கும்னு நினைக்கலையே.. இந்த வலிக்கு அம்மு மாறி இல்லாமலே போயிட்டா வலிக்காதோன்னு தோணுது ண்ணே..", என்று அவன் அணைப்பில் இருந்தவளாகவே முகம் பார்த்து கூறுவும்.. பாசமான சகோதரன் அணைப்பை இறுக்கிக் கொண்டான் என்றால்.. சரண் மித்ரனோ இதயம் நொறுங்கியவனாய் வெளியேறி இருந்தான் .

" சரண்..", என்று விக்கி மற்றும் ஆரவ்வின் அழைப்பு காற்றோடு கரைந்து போனதில் அவசரமாக பின்தொடர்ந்து இருந்தான் ஆரவ் .

சமையல் அறையிலோ  , ரிச்சர்ட் தங்கையிடம் ," ஷ்.. இப்படி பேசக் கூடாது..", என்று கண்டிப்பை வெளியிட்டாலும் , சில தினங்களுக்கு முன் பூங்காவில் தன்னை சமாதானம் செய்தவளின் பேச்சை பற்றியும் நினைத்தவனாக , தன் வேதனையை மறைத்து ,

" சரி.. அதுக்கு இப்ப என்ன பண்ணலாம் . நீயே சொல்லு.. ", என்று அமைதியாக வினவே ,

" அவியளோட ( அவர்களோடு ) என்னைய போகச் சொல்றீயளா..", என்று மிதமிஞ்சிய துக்கத்துடன் கேட்கவும் , அவ்வளவு எளிதாக இதுபோல் அவளால் சரணை விட்டுக் கொடுக்க முடியவே முடியாத  ஒன்று . ஆனால் , இன்றோ , கண்ணீர் மல்க கேட்பவளிடம் கோபமும் கொள்ள இயலாமல் போனதில் மென்மையாக தலைகோதியவன் ,

" அதுல என்ன டா தப்பு இருக்கு .. இல்லை வேற என்ன நான் சொல்லுவேன்னு நினைக்கிற . ம்..", என்று பெண்ணின் சகோதரனாகவே பேசிட.. மௌனத்தை தத்து எடுத்து இருந்தாள் .

தன் நண்பனை தொடராதவனாய்  இருந்த விக்கியின் யோசனையும் தாமரையின் குணத்தை பற்றியதாய் ... அன்று ,  ஆர். பீ. எஸ் ஹோட்டல் அறையில் அவளை மிரள வைத்ததற்கு , இன்றுவரை ப்ரியாவை வைத்து அதன் எதிர்வினையை தாமரையால் அனுபவித்து வருவதால் மட்டுமே.. ரிச்சர்ட் போலவே அவளின் பிடிவாத குணத்தை அறிந்து இருந்தான் .

அதற்கு , அவளிடம் சண்டைக்கு சென்றாலோ , நியாயமா என்று  கேள்வி எழுப்பினாலோ.. " ஆங்.. அப்பாவி புள்ளையான என்னைய மிரள வைக்கும் போது.. இந்த அறிவு எங்க போச்சாம்..", என்று அசால்ட்டாக கேட்டு அவனை மிரள வைப்பாள் .

" அடிப்பாவி.. அதுக்கு தான் உங்கிட்ட அப்போவே ஸாரி சொன்னேனே..", என்று அப்பாவியாய் கூறியவனிடம் ,

" ஏங்.. நீங்க ஸாரி சொல்லீட்டா.. நான் பயந்தது இல்லேன்னு ஆச்சா.. இல்லை என்னைய சுத்தல்ல விட்டதுதேன் இல்லேன்னு ஆச்சா..", என்று எகுறிபவளிடம் , தான் ஆண்மகன் என்பதையும் தாண்டி ,

" அதுக்கு..", என்று அவன் அலறினால் ,

" அதுக்கு ப்ரோ.. அது வேற ஒன்னுமில்லை.. உங்க ஆளு உங்களுக்கேன்னு சொந்தமாகும் வரை.. உங்களுக்கு சொந்தம் இல்லை.. நீங்க மட்டுமா வம்பு பண்ணீங்க.. உங்க ஆளும் தான் என்னை ரொம்ப அன்னைக்கு பஸ்ல படுத்தீட்டாங்க.. ஸோ , அவங்களும் அலறனும்.. இதைதேன் எங்க ஊர்ல ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்க தெரியுமா.. ", என்று அப்பாவியாய் இழுத்து நிறுத்தியவளாக , குறும்பு விழிகளால் சிரித்து வம்பு செய்கையிலும் ,

" ஆனாலும் , இந்த அப்பாவி புள்ளைய.. அன்னைக்கு  ரொம்ப பயப்பட வச்சுடீக தெரியுமா..", என்று வருத்தமாக கூறுகையில் எத்தனை மன்னிப்பு வேண்டினாலும் , வருத்தமாகவோ , சீண்டலாகவோ வெளிப்படுத்துபவளாகவே இருந்தாள் .

" யாரு நீ அப்பாவி புள்ளையா.. பாவி.. பாவிப் புள்ளேன்னு தெரியாம செஞ்சுட்டேன்..", என்று பற்களை கடிக்கையில் அழகாய் குறும்புடன் சிரிப்பாள் . ஆனால் , இன்றைய அவளது தோற்றத்தை காணவும் விக்கிக்கு நெஞ்சு அடைக்க செய்து இருந்தது .

தன் நண்பனின் கையில் கிடைத்த அழகான வானவில்லை .. துண்டு துண்டாக வெட்டி எறிந்துவிட்டானே என்று வருந்தியவனுக்கு அவ்வளவு எளிதாக தாமரை மன்னித்து விடுவாள் என்று எல்லாம் தோன்றவில்லை .





Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
9.9K 361 29
தேவதையின் மௌனமான அழுகை