வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 106

1.5K 50 19
By kanidev86

பகுதி - 106

வானில் நட்சத்திரங்களின் ஊர்வலம் தெளிவாக தெரிய துவங்கிய பின்பும் ஆரவ் தங்களின் வீட்டுக்கு திரும்பி இருக்கவில்லை .  தாமரைக்கு தங்க அறையை காட்டியதும் நுழைந்தவள் தான்.. இரவு உணவு அருந்தவும் வெளி வர வில்லை . இன்னும் , எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையையும் தன்னால் தனித்து சமாளிக்க தெரியாது.. முடியாது என்பதை முழுமையாக புரிந்த தருணமாக நினைத்து உள்ளங்கையில் வைத்து இருந்த அலைபேசியையே வெறித்தவளாக , மான்சி அமர்ந்து இருந்தாள் ‌ .

இருபது முறைக்கு மேல் ஆரவ்விற்கு அழைத்த பின்பும் , மான்சிக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை , ' ஸ்டுபிட்.. மொபைல ஒழுங்கா சார்ஜ் போட்டே வைக்க மாட்டான்.. இவனுக்கு எதுக்கு செல் ஃபோன்னு தெரியலை..", என்று தனக்குள் எழும் பதற்றத்தை.. அவன் மீது பலி சுமத்தியவளாய் இருந்தவள் , இரண்டு சாப்பாத்திகளை வயிற்றுக்குள் தள்ளி , பழசாறுடன் ஆர்வ் வரவிற்காக காத்து இருக்க துவங்கினாள் .

வீட்டின் நிசப்தத்தை கிழித்து , அவளுடைய அலைபேசி இசைக்கவும் , அவசரமாக அழைப்பை ஏற்றவளோ , ஹலோ என்றும் விழும்பாது , " ஆரவ்.. உங்களுக்கு எத்தனை தடவை கால் பண்றது. ஏன் , நாட் ரீச்சபிள்லையே இருக்கு..", என்று பொறிந்து தள்ள..

எடுத்ததும் இப்படிப்பட்ட வெளிப்பாட்டை அவளிடம் இருந்து கிடைக்கும் என்று நினைக்காதவன் , வியப்பில் ஆழ்ந்த போதும் ,  " வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ் பேபி.. என்னோட , பேச இவ்வளவு ஆர்வமா இருந்து இருக்க.. இது தெரியாம நான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணீட்டேனே..", என்று குதூகலத்துடன் ஆரவ் குரல் ஒலித்து இருந்தது .

" ம்ச்சு.. ", என்று சலிப்புடன் ஒலி எழுப்பி இருந்தாள் அவனது மனையாள்..

அதனை கண்டுக் கொள்ளாது , "சொல்லு பேபி.. அப்படி என்ன முக்கியமான விஷயம்..", என்று முகத்தில் அரும்பிய குறுஞ்சிரிப்பு மாறாதவனாய் , தன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவாறே , மனைவியுடன் பேச்சில் ஈடுபட்டு இருக்க..

" எங்க இருக்கீங்க.. எப்போ , வீட்டுக்கு வருவீங்க.", என்று விசாரணையில் ஈடுபட்டு இருந்தவளின் செயல்.. முற்றிலும் புதுமையாக இருக்கவே  ,

" வாவ் மானு..  ஷாக் மேல ஷாக்கா கொடுக்குறியே.. நான் கனவு எதுவும் காணுறேனா..", என்று தொடர் வம்பு அளந்தவனாய் , ஆள் அரவம் அற்ற பாதையில்.. அழுத்தமான தன் வேக நடையை தொடர்ந்ததில் , அதன் மெல்லிய சப்தம்.. டக்..டக்.. என்று மான்சியின் காதையும் தீண்டவே ,

" ஆரவ்.. ஆபீஸ்ல யாரும் இல்லையா என்ன.. அப்புறம் , நீங்க அங்கே என்ன பண்றீங்க..", என்று அவன் கேட்கும் காரணத்திற்கு பதில் கூறாதவளாய்.. அவன் நிலையை அறிய விரும்பியவளாய் ,  குழப்பத்துடன் கேள்விபுரிந்தவளின் பேச்சால்.. மேலும் , இதழ் விரித்தவனாக ,

" ஸ்டுடியோல இருந்து வரேன் மான்சி.. ஆமா , என்ன என் மேல இத்தனை பாசம் , அக்கறை. புதுசா இருக்கு.. ரொம்பவே , என்னை எதிர்பார்த்திட்டு இருக்க போல..", என்று விஷமாக கூறியவனின் பேச்சும் அவளுக்கு புரிந்து இருக்கவில்லை .

" ஆமா.. உங்களுக்காக டூ ஹார்ஸ்ஸா வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.. வேலை பார்த்தா மொபைல் ஆன்ல வச்சுக்கவே கூடாதுனு எதாவது இருக்கா.. அப்புறம் நான் எப்படி உங்களோட பேச.. ", என்று தாமரையின் அறைக் கதவை பார்த்தவாறே  பொறிந்து தள்ள..

" மை காட்.. என்ன பேபி.. இவ்வளவு ஹாட்டா இருக்கே.. எதுக்கு கால் ( call ) பண்ணின எனக்கு.. இந்த அளவுக்கு நீ கோவப்படுறதை பார்த்தா.. என்னை விட , நீ ஸ்வீட் நியூஸ் சொல்ல கூப்பிட்டு இருப்ப போல‌. என்ன இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் வச்சுக்கலாம்னு சொல்ல கூப்பிட்டியா.. நான்  சொதப்பிட்டேனா.. வித் இன் டென் மினிட்ஸ் டியர்.. ஐ ல் பீ தேர்..", என்று உற்சாகத்தை வர வழைத்தவனாக வம்பிற்கு இழுக்க..

" ஆர்வ் , டோன்ட் ப்ளே.. தாமரை நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா..", என்று சொல்லி நிறுத்தி இருந்தாள் ,

காரில் அமர்ந்து வண்டியை ஆன் செய்தவன் .. அப்படியே , அசையாமல் ஒரு விநாடி இருக்க..
" ஆரவ்.. என்ன எதுவும் சொல்லாம இருக்கீங்க..", என்று அவள் கேட்ட பிறகே ,

" ஆங்.. சொல்லு.. எதுவும் சொன்னாளா.. எப்படி இருக்கா..", என்று சில நொடிகள் முன் வரை சீண்டிக் கொணடு இருந்தவனின் குரலுக்கு முற்றுலும் மாறுபட்டு வெளி வந்து இருந்தது.. அதன் வேகத்தை தன் ரிவேர்ஸ் கியரிலும் காட்டியவனாக காரை கிளப்பி இருக்க..

" ரொம்பவே டல்லா இருக்கா ஆரவ்.. எதுக்குமே , கை நீட்டவே மாட்டா.. ஆனா , இன்னைக்கு வாசல்ல நின்னு கை நீட்டி காசு ஆட்டோக்கு கேட்டு நிக்கிறா.. எனக்கு தூங்கணும்னு சொன்னாளா.. கெஸ்ட் ரூம்ல படுக்க வைச்சு இருக்கேன்..", என்று  மான்சி பரிதவிப்புடன் தாமரை படுத்து இருக்கும் அறையை திரும்பி திரும்பி  பார்த்தவளாக சொல்லி முடிக்க..

" ஓகே மான்சி.. ஐயம் ஆன் த வே.. பார்த்துக்கோ..", என்று அழைப்பை துண்டிக்க போகையில்..

" ஆரவ்.. நீங்க எதுக்காக எனக்கு கூப்பிட்டீங்க..", என்று அவள் வினவ ,

" ம் வந்து சொல்றேன்.. பாய்..", என்று தீவிரமாக கூறியவன்‌‌.. நெருக்கடி நிறைந்த சாலையில் கவனத்தை பதித்து.. வேகமாக இயக்கிக் கொண்டு இருக்க.. பல குழப்பங்கள் அவனை சூழ்ந்ததாய்‌..
 
மான்சிக்கும் உறங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்க.. முன் இரவில் தாமரை நின்ற கோலமே , அவள் மனதை பிசைந்ததாக இருந்தது .

எதற்காகவும் , எப்பொழுதும்.. சிறு வயது முதல் கரம் நீட்டாதவள் .. அதை விரும்பவும் செய்யாதவள். ஆனால் , இன்று தன் முன் நின்ற நிலையை நினைத்தால் , நெஞ்சம் பரிதவித்து போனதாய்..

முன்பு ஒரு சமயம் , தாமரை அவளது அறையை சுத்தம் செய்துக் கொண்டு இருக்க , தன் கைபேசியில் கவனமாக இருந்த மான்சிக்கு , அவளது டெபிட் கார்ட் தேவைப்படவே ,

" ஹேய் குட்டி.. என் பௌச் எடுத்து தா..", என்று ஒற்றை கையால் அலைபேசியை தாங்கி இருந்தவள்.. மற்றொரு கரத்தை நீட்டியவளாக கேட்டிட..

" எங்குன இருக்கு க்கா..", என்றாள்.. கழுத்தில் , முத்துமணி.. கரங்களை அலங்கரித்த பிளாஸ்டிக் வளையல்கள்.. காதில் சிறியளவில் தங்கக் குமிழ் காதணி.. அடர் கூந்தலை இரட்டை பின்னலில் மறைத்தவளாக , சுடிதார் அணிந்து இருந்த.. பதிமூன்று வயது பெண்ணாக நின்று இருக்க..

" அங்க டேபிள்ல பாரு..‌" என்று தன் அவசரம் புரியாதவளாய் இருந்த தாமரையை அவள் கடிந்துக் கொள்ளவே.. விரைந்து தேடி எடுத்துக் கொடுத்தவளிடம்..

" யாரு இதை ஓபன் பண்ணுவா.. உனக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்கணுமா‌.. பேங்க கார்ட் எடு..", என்று பொறுமை இழந்தவளாக கத்தவும் , மிரண்டவளாக , தன் விழிகளை விரித்து.. ' இதுல என்னத்தை எடுக்க.. இவியல கேட்டாக்க என்ன சொல்வாகளோ..',  என்ற அச்சம் மிகுந்தவளாய் ,

பர்ஸை திறந்தவளாக நடுங்கும் குரலில் , " எதுன்னு தெரியலையே க்கா..", என்று நைந்து வெளி வரவும் , நிமிர்ந்தவள் அவளுள் என்ன நினைத்தாலோ , ஒரு முறைப்புடன்.. " கோல்டன் கலர் கார்ட்..", என்று குனிந்துக் கொள்ள..

தாமரை எடுத்ததும் , நீட்டியவாறு இருந்த அவள் கரத்தில் வைத்து.. அவளது வேலை முடியும் வரை அமைதியாக இருந்தவள்.. அதன் பின் மென்குரலில் , " மான்சி க்கா.. இனிமேல் எதுனாலும் தான்னு கேளுங்க.. கொடுக்கும் போது வாங்கிக்கங்க.. அது யார் கிட்டேனாலும்.. எப்பவும் கை நீட்டாதீய.. அது தப்பு.‌", என்று கூறும் பொழுதே , அவளது பிஞ்சு கன்னத்தில் மான்சியின் தாய் ஓங்கி அறை ஒன்றை கொடுத்து இருந்தார் . 

அத்துடன் , " உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்.. என் பொண்ணையே அதிகாரம் பண்ற..", என்று மிரட்டியவர் காலினாலும் எட்டி உதைக்க..

" அம்மா.. ஆ..",என்று சுருண்டு கீழே விழுந்தவளின் மீது மான்சிக்கும் இரக்கம் பிறக்கவில்லை மாறாக , தாய் கூறியவற்றை நம்பியவளாக ,

" நான் கேட்டா நீ எடுத்து தரணும்.. அதோட உன் வேலை முடிஞ்சது.. இதை செய்யாத அதை செய்யாதேன்னு.‌. எனக்கே அடர் போடுற வேலை வச்சிக்கிட்ட.. தொலைச்சிடுவேன்.. ", என்று அவள் பங்கிற்கு  .. தாமரையை மேனியில் அகப்பட்ட இடத்தில் ஒரு அடிக் கொடுத்து.. அந்த டெபிட் கார்டையும் , முகத்தில் வீசியவளாக.. " எடுத்த இடத்தில வை..", என்று கத்தி இருந்தாள் .

அதற்கு அவளது தாயோ , " ஏய் , நீ பர்ஸை தொட வேண்டாம்.. எடுத்து டேபிள் மேல வை..", என்று அதிகாரமாய் விரட்டியதில் , நடுங்கியவளாக.. தன் குடும்பத்திற்கு தாமரையின் வருமானம்.. அவளது தாய்க்கு பெரும் உதவியாய் இருக்கும் என்பதாலும்.. அவர்களின் நிலைக்கு சற்று கூடுதலாக சம்பளமாக மான்சி கொடுப்பதாக நினைத்தவள்.. தன் தாய்க்காக , அவர்களால் ஏற்பட்ட வலியையும் தாங்கிக் கொண்டே பயத்துடன் சொன்னதை செய்து முடிக்க..

மான்சியின் தாய் ரதியோ  , "செல்லம்.. என்ன பண்ற நீ.. அந்த வேலைக்காரிய பர்ஸை திறக்க விடுற.. உனக்கு ஒன்னு தெரியுமா , நம்ம தக்ஷி இருக்கால்ல.. அவ வீட்டு வேலைக்காரி.. கொஞ்சம் கொஞ்சமா வைக்கும் பணம் குறையறது தெரியாத அளவுக்கு எடுத்துட்டே இருந்திருக்கா. நம்ம ரெட்டி கொடுத்த அட்வேன்ஸ் பணத்திலேயும் கை வச்சுட்டா போல.. அதுல தான் கண்டு பிடிச்சு இருக்காங்க.. நீ உன் கார்டை எடு வைன்னு சொல்லும் போது.‌ பணம் எடுத்தாலும் உனக்கு தெரியாதே செல்லம்.. எல்லோரையும் உடனே நம்பீடுவ , உன்னோட நல்ல மனசு யாருக்கு வரும்.. சொல்லு.. இவளுக்கு இந்த அளவுக்கு அதிகமா இடம் கொடுத்து நாளைக்கு உன்னை ஏமாத்திட்டா. நீ தாங்கிக்க மாட்டேயே செல்லம்.‌ அதுக்கு தான் மாம் சொல்றேன் . அதுங்களை வைக்க வேண்டிய இடத்துல நீ வைக்கணும் புரிஞ்சதா.. டே அன்ட் நைட் கண் முழிச்சு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்.. கண்ட நாய் எடுத்து அனுபவிக்க இல்லை புரிஞ்சதா.. ", என்று போலியான குரலில் குழைவாய் பேசியவரை புரிந்துக் கொள்ளாமல் ,

" ஸாரி ம்மா.. இனிமேல் கவனமா இருக்கேன். நீங்களே வைங்க..", என்று பர்ஸஸையும் எடுத்துக் கொடுத்த.. நல்ல மகளாய் மான்சி , நடந்துக் கொள்ள

சில்லு சில்லாய் நொறுங்கியவளாய் , நின்று இருந்த தாமரையை கண்டுக் கொள்ள தான் அங்கே ஆள் இல்லாமல் போனது .

அதில் , அடுக்கடுக்காய் இருந்த கார்ட்டுகளும் , சில்லரை என்ற பெயரில் திணிக்கப்பட்டு இருந்த பணத்தையும் பார்வையாலேயே எவ்வளவு என்று கணித்தவருக்கு , மான்சி தாமரையின் நெருக்கம் பிடிக்காது இருந்ததால் ,

" செல்லம் , ஒரு டூ தௌசன்ட் ருபீஸ்  கம்மியா இருக்கே..", என்று சொல்லவும் ,

" ஏய்.. நீ எடுத்தியா டீ..", என்று இரு கண்களை உருட்டி தாமரையிடம் மீண்டும் மிரட்டவே.. 

" இல்லை.. இல்லை.. நான் எதையும் தொடவே இல்லை.. க்கா.. நான் உங்க முன்னாடி தான கார்ட் எடுத்தேன்.. வேற எதுவும் எடுக்கலை.. ", என்று பதிமூன்று வயது சிறுமியாக இருந்தவளின் மீது கருணை என்பது மருந்திற்கும் பிறக்காமல் போகவே ,

" அப்போ , என் மம்மி பொய் சொல்றாங்கன்னு சொல்றியா..", என்று வேகமாக எழுந்த மான்சி , தாமரையின் கூந்தலை கொத்தாக பற்றவும்.. வன்மமான புன்னகை ரதியின் இதழ்களில் தவழ்ந்து இருந்தது.

" போதும் அவளை விடு செல்லம் , உனக்கு கை வலிக்க போகுது.. அவ சம்பளத்தில ரெண்டு ஆயிர ரூபாய் பிடிச்சுக்கலாம்..", என்று அசலாட்டாக கூறியவர்.. தாமரையின் அதிர்ச்சியில் மேலும் குதூகலத்தவள்.. மகளுடன் பப் , பார்ட்டி.. என்று பேச்சை துவங்கி..

" ஏய் , போய் செல்லத்துக்கு ஜூஸ் எடுத்திட்டு வா.. எனக்கும்.. ", என்று மேலும் அதிகாரத்தில் விரட்ட.. மெதுவாக , தலை அசைத்தவளாய் நகர்ந்து இருந்தாள் .

அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்ட தாமரை  தலைக்குனிந்தவளாக இருந்தாலே தவிர.. ஒரு சொட்டு கண்ணீரை அவர்கள் முன்னிலையில் விடவே இல்லை . என்ன ஒரு நெஞ்சு அழுத்தம் , என்று குமுறிய ரதியின் பேச்சும்  மேலும் தாமரையின் மீது சினத்தை அதிகரிக்க செய்து இருக்க.. காய்ந்துக் கொண்டே இருந்தாள் .

" அக்கா ஜூஸ்.‌.", என்று கொடுத்தவளை முறைத்தவளாக ,

" அங்க வை..", என்று அதட்டலுடன் கரத்தில் வாங்கிக் கொள்ளாமல் கூறவும் , உதடுகள் துடித்து அவமானத்தை ஏற்றுக் கொள்ளதவள் போல் குறுகி நின்று இருக்க.. ஒருவித திருப்தி மான்சிக்கு நிலவியது என்றால் , ரதியோ , மீண்டும் அவள் கன்னத்தில் அறைந்து ,

" மேடம்.. மேடம்னு சொல்லணும்.. புரிஞ்சதா..", என்று சத்தம் போடவே.. ஏனோ , அதற்கு மட்டுமாக , " மம்மி.. விடுங்க. இனிமேல் அப்படி கூப்பிட மாட்டா..", என்று தாயை தடுத்து இருந்தாள் ‌.

அதன் பின் , இரு நாட்களுக்கு மேலாக.. தாமரை மான்சியிடம் பேசவே இல்லை ‌. அவள் கேட்பதற்கு பதில் கூறினாலும்.. எதோ குறைவது போல் இருந்ததே தவிர அது என்ன என்று மான்சியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை ‌ .

" ஏய் குட்டி.. நாளைக்கு ஷுட்டிங் இருக்கு. ஸ்டுடியோக்கு ஸ்ரைட்டா  வந்துடு.. ", என்று கூறவும் ,

" ஓகே மேடம்..", என்றாள் பணிவுடன்..

" மேடம்மா..", என்று திகைத்து பின் காரணம் நினைவிற்கு வர , மெல்லியதாக சிரித்தவள்..  'எத்தனை நாளுக்குன்னு பார்க்கிறேன்..', என்று நக்கலாக நினைத்தவளே கெஞ்சிய பிறகும்.. தாமரை அவ்வாறு அழைக்கவே இல்லை . ரதியின் முன்பாக இன்று வரை அழைத்ததும் இல்லை .

" எங்க அம்மா நாம யார் முன்னாடியும் கை நீட்டவே கூடாதுன்னு சொல்லுவாக.. நீங்க இவ்வளவு பெரிய ஆளா இருந்திட்டு.. எங்கிட்டேயே அப்படி நடந்துகிட்டீயளேன்னு தான செய்யாதீகன்னு சொன்னேன்.. என்னை திருடின்னு சொல்லீட்டீயல்ல..", என்று தனித்து இருந்த பொழுது கண் கலங்கவே..

" நான் எங்க அப்படி சொன்னேன்.. மாம்மை எதுத்து பேசாதேன்னு  சொன்னேன்..", என்று அலட்சியமாக தோள் குலுக்களுடன் அன்று தரம் அற்ற தன் தாய்க்காக.. அச்சிறு பெண்ணிடம் அலட்சியமாக , கடந்து விட்டதை நினைத்து.. அவள் நடத்தையை அவளையே வெறுத்தவளாக அமர்ந்து இருந்தாள் .

மான்சி , தன் நினைவில் மூழ்கி இருந்ததால்.. விடாது ஒலித்த அழைப்பு மணியையும் கவனிக்க தவறி இருக்க.. மீண்டும் , அதிர்வாக ஒலித்ததில் திடுக்கிட்டு எழுந்து ஓடி கதவை முழுமையாகவும் திறப்பதற்கு முன்பாக புயல் போல் நுழைந்த ஆரவ் ,

" எவ்வளவு நேரம் பெல் அழுத்துறது.. என்ன பண்ணீட்டு இருந்த..", என்றான் எரிச்சலுடன் ,

" அது.. அது வந்து யோசிச்சிட்டு இருந்தேன்னா‌‌.. கேட்கலை..", என்றாள் தடுமாற்றமாய் ,

" உருப்படியானதா இல்லை.. ", என்று அவளை நன்கு உணர்ந்தவனாக முறைப்புடன் கூறியவாறே.. தன் மேல் அங்கியை ஷோஃபாவில் விட்டு எறிந்தவன்..

" தாமரை என்ன பண்றா..", என்றான் .

ஆரவ்வின் பேச்சு முகம் கன்றி சிவந்து இருந்த போதும் மறைத்தவளாக  மென்குரலில் ,"வந்ததும் ரூமுக்கு போனவ.. வெளில வரவே இல்லை..", என்று தவிப்புடன் கரங்களை பிசைந்தவளாய் நின்று இருந்தவளை.. புருவம் உயர்த்தியவனாக ,

" அவ என்ன பண்றான்னு நீ பார்த்தியா இல்லையா.‌.", என்று அழுத்ததுடன் ஆரவ் வினவ..

" இ.. இ..ல்..லை.. நான்‌‌ எப்படி அவ ரூம்குள்ள..", என்று தடுமாற்றதுடன் முகம் வெளிறி தன் முன்  இருப்பவளை..

" ஓங்கி அறைஞ்சேன்னா பாரு.. உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா.. கதவை லாக்ல இருக்கான்னாவது பார்த்தியா இல்லையா..", என்று முகம் சிவந்தவனாக , அவளை அறைவதற்கு தன் கரத்தை ஓங்கியவன்..

அச்சத்தால் இறுக்கமாக இரு விழிகளை மூடியவள் காதை பொத்திக் கொண்டே தலையை குனிந்துக் கொள்ள.. இமைக்கும் நொடிக்குள் , பயந்தால் செயல்பட்டு இருந்தவலின் செயலில் தெளிந்தவன்.. அவளை கடந்து வேகமாக , விருந்தினர் அறைக்கு சென்று இருக்க , அதன் அரவத்தில் விழித்து.. அவன் பின்னோடு ஓடிய மான்சி ,

" ஆரவ் என்னாச்சு..", என்று சத்தம் வராத குரலில் கேட்டவளாக வர..

கதவை திறந்ததும் , மீண்டும்.. சினம் அதிகரித்தவனாக கண்களால் எதிரே இருந்தவளை சுட்டு எரிக்க.. அதன் காரணமும் , ஏன் என்று புரியாது விழித்தவளை பார்க்கவும் , தன் நெற்றியில் வேகமாக அடித்துக் கொண்டவன்..

இருள் எங்கும் சூழ்ந்து இருந்த அறையில்.. வேகமாக , உள்ளே நுழைய முயன்றவனை தடுத்தவளாக , "ஆரவ் என்ன பண்றீங்க..", என்று கேட்க வேறு செய்ததில்.. ' இவளை அறையாமல் விட்டது என் தப்பு..', என்று வாய்விட்டே அவளுக்கும் கேட்கும் விதமாய் முணுமுணுத்தவன்.. அந்த அறையின் இரவு விளக்கை எரிய விட்டு ஏசியையும் ஆன் செய்தவாறே .. மெத்தையில் இருந்தவளை ஏறிட , வயிற்றில் குழந்தையுடன் இருப்பவள்.. இரு கால்களையும் வயிற்றுடன் குறுகி படுத்து இருந்தவளை காண நேர்ந்ததில்.. ஓ என்றானது . அந்த ஆடவனுக்கு .

அடுத்த நொடி.. அனல் கக்கும் விழிகளால் மான்சியை பொசுக்கியவன்.. மென்மையாக , தாமரையின் தோளை தட்டியவனாக , " குட்டி.. குட்டி.. சாப்பிட வா..", என்று எழுப்ப..

நெஞ்சத்தில் பெரும் மலையை சுமந்து இருப்பது போல் இதயம் கனத்து கிடப்பவளுக்கு.. இமைகள் மட்டும் அவள் பேச்சை கேட்குமா.. அதுவும் மூட மறுத்து இருந்ததாய் . நில்லாது வழிந்து ஓடும் கண்ணீரையும் துடைக்கும் எண்ணம் இல்லாது.. தலையணையை நனைத்துக்  கொண்டு இருந்தவளுக்கு , ஆரவ் மற்றும் மான்சியின் வருகை எட்டாமல் இல்லை .

ஆனால் , அதுவும் தாமரைக்கு வலியையே விதைத்தாய் . குறையா அன்பை கொட்டிக் கொடுக்கும் ஆரவ்வின் பாசத்திற்கு முன் , சரணின் பேச்சு பூதகரமாய் தெரிந்து.. மேலும் , அவளை வலுவிழக்க செய்து இருக்க..

" எனக்கு எதுவும் வேண்டாம் ஆரவ் ஸார்..", என்று நைந்து கூறியவளை விட்டுவிடும் எண்ணம் இல்லாத , ஆரவ்வின் பிடிவாதமே வெற்றி பெற்றதாய்.. அவளை உணவு மேஜைக்கு அனுப்பியவன் .

" நீ என்ன சாப்பிட..", என்று மான்சியிடம் கேட்கவும்.. எதையோ தவறாக செய்து வைத்து இருக்கிறோம்.. என்பது மட்டும் நன்றாகவே அவனது கண்டிப்பு நிறைந்த கேள்வியால் புரிந்துக் கொண்டவளுக்கு அது என்ன என்று விளங்கவே இல்லை . இருந்த போதும் , நிறைந்த தயக்கங்களுடன் , " சப்பாத்தி..", என்றாள்.

அந்த உணவு இருப்பதற்கான அறிகுறியே இல்லாததால்.. முறைப்புடன் அவளை ஏறிட , ஏன் முறைத்துக் கொண்டு இருக்கிறான் என்று புரியாமல் கலவரத்தை முகத்தில் சுமந்தவளாய் மான்சி நின்று இருக்க.. அவன் மனைவியால் கண்டுபிடிக்க முடியாததை தாமரை கண்டு கொண்டதில் ,

" விடுங்க ஆரவ் ஸார்.. அக்காக்கு அது எல்லாந் தெரியாது..", என்று தன் சோகத்தை பின் ஒதுக்கியவளாக வறண்ட இதழ்களை பிரித்து கூறியவளிடம் ,

" ஆமா.. ஆமா.. உங்க அக்காக்கு எதுவுமே தெரியாது.. நாங்க பொ***** இருக்கணும். ஆனா , மத்தவங்க எல்லோருக்கும் எல்லாமே தெரிஞ்சி இருக்கணும் உங்களுக்கு.. இல்லை..", என்று தாமரையிடம் அவன் நேரடியாக பாய..

சோகம் இழையோட சோர்வாய் இருந்தவளின் இரு விழிகளில் , அவனது நேர்கொண்ட தாக்குதலில் இப்பொழுது கூர்மை அதிகரித்து அவனை நேர் பார்வை வீசியவள்.. மறு நிமிடமே , அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து எழுந்து உள்ளே செல்ல திரும்ப முயற்சித்து இருக்க.. ஆரவ்வின் குரல் தேக்கி இருந்தது .

" லோட்டஸ்.. நான் எதுவும் சொல்லலை போதுமா.. உங்க க்கா..வை ( ஒரு வித அழுத்ததை குரிலில்  அதிகரித்தவனாய் ) புரிஞ்சதா.. உட்காரு . இந்தா பிரட் இன்னைக்கு இதுதான் எனக்கும் உனக்கும் தலையெழுத்து.. சாப்பிடு.‌", என்று கொடுத்தவன்..

" என்ன ஜேம் தடவவா..", என்று ஒரு ஸ்லைஸை கரத்தில் எடுத்தவனாக கேட்டிட..

" ம்ஹூம்.. பால்ல டிப்பன்னி சாப்பிட்டுகிறேன்..", என்று அவள் கூறியவும் , ஆரவ்வின் பார்வை மிரண்டவளாக நின்று இருந்த மான்சியை மீண்டும் ஏறிட.. அதற்கும் அவள் அசையாமல் நிற்கவும்.. அவற்றை கவனிக்காத தாமரையோ ,

" நானே எடுத்துட்டு வரேன்..", என்று எழ முயன்றவளை தோள் பிடித்து தேக்கியவன்..

" உன்னை உட்கார சொன்னேன்..", என்றவாறு சமையல் அறைக்கு நுழைந்து இருந்தான் .

ஆரவ்வின் கடு கடுத்த முகம்.. மான்சியை நிலைக் கொள்ளாமல் தவிக்க வைத்ததில்.. பின்னோடு , நுழைந்தவள் , " ஆ..ர..வ்..", என்று முடிப்பதற்கு உள்ளாக..

" இப்பவும் உனக்கு உன்கிட்ட வேலை பார்க்கிற பொண்ணை தான் அவ தெரியுற.. ஒரு க்ளாஸ் பால் கொண்டு வந்து கொடுக்கவும் உன் கௌவுரம் தடுக்குது.. நீ யாரு பொண்ணு.. இல்லை நீ யாரு.. இல்லை  நீ என்ன அவளுக்கு நல்லது செஞ்சேன்னு எனக்கு இந்த நிமிஷம் வரை புரியவே இல்லை .. உன் காலை நாய்க்குட்டி மாதிரி இப்ப வரை சுத்திட்டே இருக்கா.. ஆனா , உன்னால கன்சீவ்வா இருக்கிற பொண்ணுக்கு நீ சாப்பிட்ட ரெண்டு சப்பாத்தில எக்ஸ்ட்ராவா செஞ்சு வைக்க கூட முடியலை.. இப்ப பால்ன்னு அவ கேட்ட பிறகும் நின்னுட்டே இருக்க.‌ நீ மாறவே இல்லை.. உன்னால மாறவும் முடியாது . உன்னால உன் அம்மாவால என்னைக்கும் அவளுக்கு என்னைக்குமே நிம்மதிய கொடுக்க முடியாது.யோசிக்க கூட தகுதி இல்லாத உனக்காக.. அவ லைஃபைவே ஸ்பாயில் பண்ணீட்டு இருக்கா.. இடியட்.." , என்று அவள் காதிற்குள் அத்தனை சீற்றங்களையும் ஒன்று திரட்டியவனாக காண்பித்து இருந்தான் . பல வருடத்திற்கு பிறகு.. ஆரவ்வின் வெறுப்பை மீண்டும் கண்டதில் உறைந்தே போனாள் .

இவ்வளவு நிமிடங்களாக சீறியவனின் குரலா இது என்று எண்ணும் அளவிற்கு " லோட்டஸ்.. வார்மா கொண்டு வர வா..", என்று மிக இயல்பாக சத்தமாக பாலை சூடு செய்தவனாக கேட்டிட ,

" ம்.. இல்லை.. நல்லா சூடா தாங்க.. ஒன் ஸ்பூன் சக்கரை போதும்..", என்று பக்கவாட்டில் திரும்பி கூறியவள்.. மீண்டும் , அவள் முன் இருந்த தட்டை வெறிக்க துவங்க..

அதன் பின் , மான்சி என்ற ஒருத்தி தன் அருகில் நின்றுக் கொண்டு இருக்கிறாள் என்பதையும் மறந்தவனாக செயல்பட்டுக் கொண்டு இருந்தான் ஆரவ் .

மான்சிக்கும் , மனதில் நெருடல் அதிகரித்ததாய் இருந்தது . ஆரவ்வின் உயரம் அறியாதவள் இல்லை தாமரை.. அவனிடம் , இது வேண்டும் அது வேண்டும்.. என்று கேட்பவள்.‌ சண்டை போடுபவள்.. இதுவரை , தன்னிடம் இது போல் ஒருமுறையும் பேசியது இல்லை என்பதை புரிந்துக் கொண்டாள் . ஆரவ்விடம் அதிகமான பிரியத்தையும் , மரியாதையும் காண்பிப்பவள்.. ஒருநாளும் இத்தகைய உரிமையையும் நெருக்கத்தையும் அவளிடம் காண்பித்ததே இல்லை என்று தோன்ற துவங்கவே .. ஒருவித வெறுமையாக உணர்ந்தவளாய் நின்றுவிட்டாள் .

கணவனின் நிராகரிப்பும் , தாமரையின் வெளிப்பாடும்.. முதல் முறையாக பெரும் வருத்தத்தை விதைக்க.. பாவம் , மான்சிக்கு இதனை எப்படி சரி செய்வது என்பதும் தெரிந்து இருக்கவில்லை .

மேஜையில் , வந்து அமர்ந்தவன்.. அவளுக்கு கொடுத்து தனக்கு வேண்டியவற்றை எடுத்து உண்டுக் கொண்டு இருந்தாலும்.. மான்சியின் மீது உச்சத்தில் இருந்தான் . தாமரையை ஓரக்கண்ணால் கவனித்தாலோ , மிகவும் அயர்ந்து தெரிந்தாள் ‌. பெரிய அளவு காயப்பட்டு இருக்கிறாள் என்பதும் நன்கு புரிந்தே இருந்ததில்.. அதற்கு காரணமான நபரின் மீது இருந்த ஆத்திரமும் மான்சியின் புறம் திரும்புவதை தடுக்க இயலாமல் திண்டாடி போனான் ‌ஆரவ் .

தாமரை சாப்பிட பிறகு , படுக்கை அறைக்குள் நுழைய புற்படுகையில் ,

" தாமரை , கதவை சாத்த வேண்டாம்..  நான் இதோ , இங்க தான் படுத்துக்க போறேன்..", என்று சொல்ல..

" நீங்க பயப்படாம.. படுக்கிற இடத்தில போய் படுங்க ஸார்.. நான் எதுவும் செய்துக்க மாட்டேன்.. சும்மா சும்மா.. அக்காவை வையாதீய.. ", என்று அவளது இந்த நிலையிலும் மான்சிக்கும் ஆரவ்விற்கும் தன்னால் சண்டைகள் நிகழ்ந்து விடக்  கூடாது என்று பரிதவிப்பில் தாமரை அவசரமாக கூற ,

" ம்.. வைய்யுறாங்க.. குட்டி , நீ இதை யார் வீடுன்னு நினைச்சு வந்தியோ தெரியாது . ஆனா , நான் சொன்னது மாதிரி.. நீ எனக்கு என் கூட பிறக்காத தங்கை தான் . என் குட்டி மேல மத்தவங்களுக்கு அக்கறை இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது . ஆனா , எனக்கு பொறுப்பு இல்லாமல் நடந்துக்கிறது பிடிக்காது .. உன்னை அக்கறையா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு . இது உனக்கு புது இடம்.. சரியா தூங்க முடியும்.. முடியாது . குழந்தையோட , நீ இருக்கும் போது எதுவும் தேவைப்பட்டா நீ கஷ்டப்படக் கூடாதுன்னு..  என் தங்கச்சி மேல ஒரு அண்ணனோட பாசம் புரிஞ்சதா.. அப்புறம் , இந்தா உன் டேப்லெட்ஸ் டாக்டர்கிட்ட பேசி வரும் போதே வாங்கிட்டு வந்துட்டேன் . ஆங் சொல்ல மறந்துவிட்டேன்..
உங்கொக்கா அம்மா ரதி இப்போ மதுரை அப்போலோ ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்து இருக்காங்கலாம் ..", என்றான் இலகுவான குரலில் .. அது வேற எதுவும் இல்லை..

" ஏன்.. என்னாச்சு ‌.", அவசரமாக மான்சி பதற்றத்தை வெளிப்படுத்த.. ஆரவ்வின் கோபத்திற்கு தூபம் போட்டதாய் இருந்தது .

ஆனாலும் ," பத்து ஃபிங்கர்ஸும் நொறுங்கி போச்சாம்.. தாடையிலும் டிஸ்லொக்கேஷன்னாம்..",  என்று தகவலாய் அதே இடத்தில் திசைக்கு ஒன்றாக இருந்த இரு பெண்களிடமும் பொதுவாக கூறியவன்.. ஹாலில் , இருந்த பெரிய சோஃபாவை படுக்கையாக மாற்றிக் கொண்டு இருவரின் அதிர்ச்சியையும் கண்டுக் கொள்ளாமல் படுத்து விட.. தாமரையின் அதிர்ச்சி சில நொடிகளே அதற்குள் அவள் தன்னை மீட்டு எடுத்தவளாய் படுக்கையில் விழ , மான்சியால் அவ்வாறு இருக்க முடியவில்லை .

" எ..ன்..ன என்ன சொல்றீங்க ஆரவ்..", என்று விரைவாக.. அவனை நெருங்கிய மான்சியின் பதற்றம் மேலும் அவனுக்கு எரிச்சலை விதைத்து இருக்க..

"காலையில் சரணும் அங்கே தான் இருந்து இருக்கான் . இப்போ , தாமரை இங்க இருக்கா.. " என்று மண்டிய ஆத்திரத்தில்.. உறுமி இருக்க.. வெளிறியவளாய் மான்சி நின்றுவிட்டாள் என்றால் 'ஓ..', என்ற பாவனையில் தாமரை படுத்துக் கிடந்தாள் .

ஆரவ்வோ, அவன் அருகே இருப்பவளையும் பொருட்படுத்தாது குப்புறப்படுத்து விழிகளை மூடி கொள்ள.. அங்கேயே நிற்க முடியாது அவளது அறைக்குள் திரும்பிவிட்டாள் மான்சி .

' எதையம் நினைக்காதே..', என்று உரு போட்டவளாக , துக்கம் தொண்டை அடைக்க   விழிகளை மூட மறந்தவளாய் தாமரை மெத்தையில் படுத்து கிடந்தாள் .

❇️❇️❇️❇️❇️

வீட்டிற்குள் நுழைந்ததும்.. தங்களது அறைக்கு ஓடிய சரணுக்கு தாமரையை காணது வெறுமையாக இருக்க..  சரணின் பார்வை குளியல் அறையை தொட்டு மீளவும்.. அங்கும் தாமரை  இல்லை என்பதை கண்டுக் கொண்டான் . அவள் மீதான ஆத்திரம் எல்லையை கடந்ததாக இருந்த போதும் ,

' குழந்தை வராம இருக்க.. எவ்வளவு பணம் வாங்கின..',  என்று கேட்டதற்கு தாமரையின் விழிகளில் விரவி இருந்த வலி.. அவனால் , கண்களையும் மூட முடியாது திண்டாடி போனான் .

' ஏன் டா.. உனக்கு அந்த லேடிய பற்றி நல்லா தெரியுமே.. அப்புறம் , ஏன்.. ச்சை..', என்று கை முஷ்டியை இறுக்கியவனாக தன் சினத்தின் மீதே ஆத்திரம் எழுந்தவனாய் இருக்க..

' அவளுக்கு நான் முக்கியம்னு நினைச்சு இருந்திருந்தா.. எதையும் வாங்கி இருக்க மாட்டா.. ', என்று அவனுள் அழுத்தமாக தோன்றிட.. முகத்திலோ அத்தனை இறுக்கம் , உள்ளுக்குள் பெருகும் வெப்பம் தாளாமல் தலையை தாங்கிக் கொண்டவனால் மனைவியின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலையும் தவிர்க்க முடியவில்லை.. வெகு நேரமாக , தாமரையின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க.. ஆனால் , அவள் அறைக்கு வரவே இல்லை என்றானதும் , நெற்றிப் பொட்டில் விழுந்த முடிச்சுடன்.. கீழ் இறங்கினான் .

வீட்டில் இருக்கும் ஒருவருக்கும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இருக்க.. முகத்தில் உணர்வுகளை வெளியிடாதாது.. அமைதியாக அறைகளுக்கும் செல்லாமல் இருந்தார்கள் .. வேகமாக , இறங்கிய சரணிற்கோ , தாமரையின் மீது இருக்கும் சினத்தால் பெயர் சொல்லி அழைக்கவும் விருப்பம் இல்லை அதேசமயம் , அவளை காணாமலும்  இருக்க முடியாது தவித்தவன்.. சமையல் அறைக்குள் சென்று பார்வையிட.. விளக்குகள் அனைத்தும் அணையப்பட்டு இருந்தது .

‌தாத்தா , பாட்டி அம்மா அப்பா.. என்று ஒருவரின் முகத்தையும் பார்க்கும் துணிவு வலு இழந்து போய் இருந்ததில் சாவித்திரியின் அறைக்கு சென்றவன்.. அங்கு , வெறுமையாக இருக்கவே , சட்டென்று அவன் தேகத்தில் ஒட்டிக் கொண்ட பதற்றத் தீயில் தவித்தவனாய் ,

" பாப்பா.. ஆ.. பாப்பா.. ஆ..", என்று அலறியவனாய்.. அந்த வீட்டில் அவளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் எல்லாம் தேடியவன்.. தோட்டத்திற்கு விரைந்து ஓட , பெரியவர்களுகோ , பேரதிர்ச்சியாக இருந்தது .

அவன் கோபத்தில் வீட்டை விட்டே வெளியே போக சொல்லி தள்ளியதாக அவர்கள் நினைத்து இருக்க.. ஆனால் , இவன் நடந்துக் கொள்வதை பார்த்து திகைத்தவர்களாக நின்றுவிட்டார்கள் .

சரணின் உயிர் அவன் கரத்தில் இருப்பது போல் ," தாமரை எங்கே.." என்று பெரியவர்களின் முன்னால் நிற்க..

" போயிட்டா.. வீட்டை விட்டே போயிட்டா..", என்று வெடித்து இருந்தார் மயூரி . தாமரையின் வலியையும் சரணின் தவிப்பையும் காண முடியாதவராக.. துக்கம் தாளாமல் வெடித்து இருக்க.. தன் கை வளைவில் கொண்டு வந்த ராம் அவரை கட்டுப்படுத்த முயன்றவராய்..

"  ஏற்கனவே , வந்த பொண்ணுக்காக எங்க பையனை விட்டு கொடுத்ததுனால.. ஒரு நல்ல பொண்ணுக்கு நியாயம் செய்ய முடியாத நிலையில் நிக்கிறோமே  .. என் பையன் கிட்ட என்னாச்சு.. ஏன்  எங்க மருமகள் இந்த வீட்டை விட்டு போனான்னு கேட்டா  எங்க நாங்க அவனை நம்பாம போயிட்டோமோன்னு.. விலகி இருக்கிறவன்.. எங்களை வேண்டான்னே போயிடுவானோன்னு எங்களுக்கு பயமா இருக்கு.. இப்பவாவது , எனக்காக நான் வாழ்ந்துகிறேன்னு சொல்லீட்டு போன பொண்ணை தடுக்கவும் முடியாமல் கையை கட்டி  வேடிக்கை பார்க்க வேண்டியதா இருக்கு ஆர் . பீ . எஸ்..", என்று ராம் ப்ரசாத் இதயம் நொறுங்கியவராய் கூறி மனைவியின் கரத்தை அழுத்தமாக பற்ற..

" அன்னைக்கே சொன்னாலே டா.. வயி..", என்று கோபமாக மயூரி எதுவோ சொல்ல இருந்தவரை ,

" மயூரி.. இது அவன் சொந்த விஷயம்.. கணவன் மனைவி பிரச்சினைக்குள்ள நாம நுழைய கூடாது.. ", என்று கட்டளை போல் கூறியவர் ,

" சரண் தாமரை இங்க இல்லை . இது உன் வாழ்க்கை . உன் முடிவு .. நீ சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டதை தவிர வேற எந்த தப்பும் இந்த குடும்பம் செய்ததா ஞாபகத்தில் இல்லை ..", என்று பழைய கம்பீரத்தை மீட்டு எடுத்தவராய்..  அந்த இல்லத்தின் மூத்தவரான பால கிருஷ்ணனின் குரல் ஓங்கி ஒலித்து இருக்க.. அரைநொடி , அங்கு சுழன்ற காற்றும் தன் சுழற்சியை நிறுத்தியதாய் .

' தாமரை இங்கே இல்லை..', என்று அவர் கூறிய பின்.. தன் மொத்த சக்திகளையும் இழந்தவனாக , பொத்தென்று அங்கு இருந்த ஷோபில் விழுந்தவனின் கரங்களோ நடுக்கத்திற்கு தாவியதாய் . அவள் இங்கு இல்லை.. அவனுடைய பாப்பா.. அவனை விட்டு சென்றுவிட்டாள் என்ற உண்மை விஷ ஊசியாய் , நேரடியாக இதயத்தை தாக்கி இருக்க..  வலி தாளாதவனாய் அடைக்கும் தொண்டைக்குள் , தன் துக்கத்தை விழுங்க முயற்சித்து தோல்வியை தவழுவி இருக்க.. மனமோ , ' நீ தானே கூறினாய்..', என்று ஒருபுறம் நிதர்சனத்தை ஏற்க முடியாதவனாய் மற்றவர்கள் இருப்பதையும் மறந்து கதறி இருந்தான் .

' உன்னை வேண்டாம்னு சொல்லீட்டு நான் எங்கே டீ போவேன்.', என்று உள்ளமோ கதறி துடிக்க.. அதன் வெளிப்பாடாய் , " பாப்பா.. ஆ..", என்று வாய் விட்டு கதறி இருந்தான் .

அவன் கதறலில் பெரியவர் துடித்த போதும் , விலகியே நின்று இருந்தார்கள் .

" எங்க போய் இருப்பா.. எதாவது..", என்று தாறுமாறாய் சிந்தனை உதித்தில் , விருட்டென்று , எழுந்தவன்.. மனைவியின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க.. அதுவோ , எப்பொழுதும் போல் எடுக்கப்படாமலே போனது. அது மேலும் சரணிற்கு அச்சத்தை விதைக்கவே , பதற்றத்துடன் தங்கள் அறைக்கு சென்றவனாய் மீண்டும் அவளது அலைபேசிக்கு முயற்சிக்க.. அது அழகாய் அங்கே வீற்று இருப்பதை அவனுக்கு உணர்த்த.. ஓ என அவன் நெஞ்சம் துடிக்க..

இந்த நேரத்தில் யாருக்கும் அழைக்க அவனுக்கு விருப்பம் இல்லை . காலையில் , பார்த்துக் கொள்ளலாம் ரிச்சர்ட்டிம் சென்று இருப்பாள் என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டாலும்.. ஏனோ , முட்டாள் மனம் ஏற்க மறுத்ததாய்  .
 
" பாப்பா.. ஆ..", என்று அரற்றியவனுக்கு அப்பொழுதே , அவன் தாத்தா மற்றும் தந்தையின் பதற்றம் அற்ற நிலை நினைவிற்கு வர.. வேகமாக எழுந்து இருந்தான் .

" ப்பா.. ரொம்ப பயந்துட்டான் போல..", என்று தடுமாற்றத்துடன் ராம் ப்ரசாத் மூத்தவரிடம் மகனுக்காக பரிதவிக்க..

" எந்த விஷயமும் சுலபமா கிடைச்சா.. அதன் அருமை தெரியாது ராம் . இப்போதைக்கு தாமரை இருக்கும் இடம் நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும். அவனா கண்டு பிடிக்கட்டும்..", என்று தீர்க்கமாக அவர் உரைத்திட.. ஏறிய வேகமான செயலில் மயூரியும் ,

" பதட்டமா போறானே மாமா..", என்று மயூரியும் கண்ணீர் வழிய கூறிட..

" ஒன்றை மணி நேரம் கால் போன போக்கில நடந்தே போய் இருக்கா மயூரி.. அவளோட நிலையையும் இந்த நிமிஷம் வரை தெரிஞ்சுக்காமலே இருந்திருக்கான்னா.. என்ன சொல்றது . சரி , இப்பவும் அவ இருக்கிற இடம் தெரிஞ்சா.. சரண் என்ன செய்வான்னு நம்மளால உறுதியா சொல்ல முடியுமா..", என்று அழுத்தமாக வினவ.. அறியா விடைக்கு எங்கனம் பதில் கூற முடியும் .

பெரியவர்கள் இவ்வாறு வாதம் கொண்டு இருக்கையில்.. தட தடவென படிகளில் இறங்கி வந்த சரணோ , அவர்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்று எண்ணியவனாய் ,

"டேட்.. தாமரை எங்க இருக்கா டேட்..", என்று ராமின் முன்.. கண்கள் ரத்தம் நிறம் கொண்டு இருக்க.. கண்ணீரின் தடங்களும் அழுத்தமாக தெரிய.. சில்லிட்டு நடுங்கிக் கொண்டு இருந்த கரங்களால் பற்றியவனாய் கெஞ்சிக் கொண்டு இருப்பவனை காண முடியாதவராய் நொறுங்கி போய் இருந்தாலும்.. சரண் முன் இரும்பு மனிதனாகவே நின்று இருந்தார் .

" ப்ளீஸ்.. டேட்..",

" தெரியாது..", என்று அவரும் அதே வீம்புடன் பதில் கூறி இருந்தார்..

" ஏன் சரண்.. அங்கே இருந்தும் அவ கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளவா..", என்று தன் கொதிப்பை மறைக்காது காட்டி விட..

" டேட்.. ப்ளீஸ் டேட்.. எனக்கு தாமரை வேணும் ப்பா.. அவ எங்க யாரோட இருந்து வந்து இருந்தாலும்.. எனக்கு வேணும் ப்பா.. ஐ நீட் ஹெர் டேட்.. அவ இல்லாம இந்த சரண் இல்லை ப்பா..  ", என்று கசங்கிய முகத்துடன் நின்று இருப்பவனை காணவே அவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் பதறினாலும்.. ஏனோ , அவனே கண்டு பிடித்துக் கொள்ளட்டும் எனற தீர்மனத்துடன் நின்று இருந்தார் எனலாம்..

" சொல்ல மாட்டீங்க.. அவ எங்க இருக்கான்னு சொல்ல மாட்டீங்க.. இல்லை..", என்று கூறியவன்.. மிக அழுத்தமாக தன் கண்களை முகத்துடன் சேர்த்தே துடைத்து வெளியேற திரும்பய நேரம்..

சுழற்றி அடிக்கும் சூறாவளியாய் , நேரம் காலம் பாராமல் சரணின் வீட்டிற்குள் நுழைந்த விக்கி , யாரை பற்றியும் கவலைக் கொள்ளாதவனாய்.. தேடி வந்த நண்பன் எதிரே தென்படவே.. ஓங்கி அறைந்து இருந்தான் .

❇️❇️❇️❇️❇️

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

வெரி லாங் யூடி.. த்ரீ எபிஸ் ஜாயின்டாட போஸ்ட் செய்து இருக்கேன் .எப்பவும் போல 😔😔😔😔.. 😂😂😂 .





Continue Reading

You'll Also Like

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...