வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 103

1.3K 46 10
By kanidev86

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

பச்சரிசி மாக்கோலம் , மாவிலை தோரணம்.. சூரியபகவானின் ஆசீர்வாதத்துடன் விறகு அடுப்பில் சக்கரை பொங்கல்.. மூக்கரும்பின் பந்தல்.. புத்தாடைன்னு கோலாகலமா எங்கள் வீட்டில் கொண்டாடியாச்சு..

இதேபோல் , நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .

பொங்கும் பொங்கல் போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சிகள் பெருக இறைவனிடம் வேண்டுவோம்‌..

எப்பவும் போல் தாமதமான பதிவிறக்கு மன்னிப்பு வேண்டுகிறேன் . கடந்த பத்து நாட்களாக , அலைபேசியை கையில் எடுக்கவே முடியாத அளவிற்கு வீட்டு வேலைகள் நெட்டி தள்ளிவிட்டது.. கூடவே , வாண்டுகளின் பள்ளி விடுமுறை .. சொல்லவே வேண்டாம்..ஸாரி.. ஸாரி..😔😔🤪🤪

ப்ராப்பரா எடிட் பண்ணல.. ஸோ , மிஸ்டேக்ஸ் இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க.. 🤪🤪

இப்படிக்கு ,

கனிதேவ் 💞💞💞

❇️❇️❇️❇️❇️

பகுதி - 103

சரண் , வேண்டாம் என்றதுடன் ப்ளீஸ் என்று கண்களில் உயிர் வலியை தேக்கியவனாய் ஆறுதல் தேடவும்.. மொத்தமாக துடித்த தாமரையின் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகள் கடைவிழி ஓரம் வழிந்து ஓடினாலும் , தன்னவனை ஆறுதல் செய்வதே முதன்மையாக தோன்றியதில் , அவளது விரல்கள் மிகவும் மென்மையாக தலையை கோத.. அது தந்த இதத்திலும் ஆறுதலிலும் தன்னை நிதானித்தவனாக.. சிறிதளவு தெளிந்தவன்.. அவளில் இருந்து கீழே சரிந்து , தாமரையை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கமாக அணைந்துக் கொள்ள.. நெகிழ்ந்து இருக்கும் மனமோ , அழகான புன்னகை பூக்கச் செய்ய.. காதலின் சோர்வு முழுவதும் பரவி இருந்த போதிலும்.. பனியில் நனைந்த மலராக இருப்பவளை , மேலும் ஆரத் தழுவியவன்..

" பாப்பா.. நாளைக்கு நான் ஜம்மு போறேன்.. ஏர்லியரா கிளம்பனும்.. ம்.. வர பத்து நாள் ஆகும் .. சான்ஸ்கர்ல மொமைல் எடுக்காது.. ஸோ , அங்க இருக்குற வரைக்கும் பேச முடியாது.. ( இல்லேனா மட்டும் அவளோட நீ குழவீட்டா டா இருக்க.. ) என்று மனசாட்சி கடிப்பதையும் கண்டுக் கொள்ளாதவனாக.. மென்மையாக , அவள் கூந்தல் சுருள் முடிகளை காதுமடலுக்குள் நகர்த்தியவனாக , மெதுவாக கூறியவனின் குரலில் வழிந்த ஏக்கம்.. தாமரையை கட்டிப் போட்டு இருந்ததாய் .

ஏனோ , அவளது பார்வை முதல் முறையாக அவனை பார்ப்பது போல் வருடிக் கொண்டிருந்தது . அவள் மீது இருக்கும் கோபத்தையும் , வருத்தத்தையும் ஒதுக்கியவனாக நாடுவதும்.. பிரிவின் துயர் தாளாதவனாய் , முதல்முறையாக.. தான் ஏன் இப்படி ஒருநிலையில் இவனை சந்தித்தோம் என்று மனம் வறுந்தியவளாக.. தவித்து இருந்தாள் . ஒருவேளை , மான்சியை மணப்பதற்கு முன்பே என்னை இவர் பார்த்திருந்தால்.. என்ன செய்து இருப்பார் என்று விபரீதமாகவும் யோசனையில் மூழ்கியவளை.. மனம் தடைவிதிக்க.. இதழ்களோ மனதுடன் இணைய மறுத்து.. வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருந்தது ,

" நீங்க.. மான்சி அக்கா வீட்டுலேயே என்னை பார்த்து இருந்தா.. ", என்று.. ‌

தனக்கு மட்டுமே இடரும் மண வாழ்க்கையை நினைத்து நொந்தவனாக , காயப்படுத்தியவள் இடமே , ஆறுதல் தேடி அலையும் புத்தியை வசைப்பாடிக் கொண்டிருக்க.. தாமரையின் கேள்வி , மித்ரனின் சினத்தை நொடிக்குள் தூண்டியதாக இருந்தபோதும்.. அவ்வாறு , நிகழாமல் போனதே என்னும் ஏக்கம் , ஆழ் மனதில் குமிழிடுவதை தவிர்க்க முடியாது ஏக்கம் சுமந்த விழிகளால் , இமைக்கவும் மறந்தவனாக அவளையே வெறித்தான் .

மித்ரனின் பார்வையில் , ஒரு நொடியே.. அந்த ஏக்கம் மின்னியது.. உடனே மறைய..

" நான் ஏமாந்து இருக்க மாட்டேன்..", என்று உடல் விறைக்க கூறியவன்‌.. மெதுவாக , அவளை விலகி எழ.. அப்பொழுதாவது , தன் வாயை அவள் கட்டுப்படுத்தி இருந்திருக்கலாம் .

" அப்படின்னா.. நீங்க என்ன சொல்ல வரீய..", என்று தன் குரல் நடுங்க கேட்டவளின் கண்களோ , ' நான் தவறானவளா..', என்று பரிதவித்து யாசிப்பை வெளிப்படுத்த..

" பணத்துக்காக..", என்று அவன் ஆத்திரத்தில் வெடிக்க துவங்கிய மறுநொடியே , அதிர்ச்சயை வெளியிட்டவளின் விழிகளில் கண்ணீர் வடிய.. " ச்சை..', என்று கூற வந்ததை பாதியில் நிறுத்தி இறுகியவனாய் காணப்பட்டான் .

சரண் மூளைக்குள் வண்டாக குடைந்து துளையிடும் விஷயத்தில் இருந்து எவ்வாறு வெளி வருவது என்று , அவன் நினைத்து தடுமாறும் நேரத்தில்.. முயன்று அவளுடன் இயல்பை கடைப்பிடிக்க முயன்றால் , தாமரையின் பேச்சு தலைகீழாகப் புரட்டிக் கொண்டே இருந்தது .

இதற்கு முன் அவன் முகத்தில் இருந்த மையலும் , மயக்கமும் தொலைந்து போய் இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருக்க.. ஏதோ ஒன்று , அந்த நேரத் தூண்டுதலில் தன் மனதின் கேள்வியை கேட்டவளுக்கோ , தென்படும் விலகலில்.. அதிகமான காயத்தை கொடுக்கவே.. ' இவியலுக்கு என் மேல நம்பிக்கையே வராதா..', என்று உள்ளுக்குள் மறுகித் துடித்து இருந்தவளுக்கோ.. விதியின் கோரத்தை சபித்தவளாக.. மிகுந்த தவிப்புடன் ஏறிட..

அதற்கு மேல் சரணால் அவள் முன் நிற்கவும் முடியாமல் , " உன்னை பேசாதேன்னு சொன்னேன்..", என்று குதறியவனாக குளியல் அறைக்குள் புகுந்து இருந்தான் . தாமரையின் முகவாட்டத்தை காண சகிக்காதவனாக நகர்ந்து இருந்தாலும்.. நீருக்கு அடியில் நின்றுக் கொண்டவனுக்கோ , தன் பேச்சு , வெகுவாக தன் உயிரானவளை தாக்குவதை நேரடியாக காணவும் சகிக்காமல்.. அதேசமயம், ' இவள்.. இவளா..', என்ற தன் மறுகலையும் அவளிடம் வெளி வந்துவிடுவதை மறைக்கவும் முடியாமல்.. உள்ளம் உடைந்தவளாய் , முகத்தில் வேதனை சுமந்தவளாய் நிற்பதை ஏற்க முடியாமல் தடுமாறி போனான் ‌‌.

படுக்கையில் , ஒற்றை போர்வைக்குள் சுருண்டு கிடந்த தாமரையின் நிலையோ.. மேலும் , கவலைக்கு உள்ளானதாய் . காதலாக தழுவியவனின் வேகத்தில் பிரிவின் ஏக்கம் கொட்டிக் கிடந்து இருந்த போதும் , அவன் விழிகளில் தென்பட்ட உயிர்வலியை உடனடியாக போக்கிவிடும் வேகம் ‌. இதற்கு தானே காரணமாகி போனோமே என்கின்ற நினைப்பு.. உடனடியாக , மருந்திட முயற்சிக்க வலியுறுத்த.. அவன் பேச்சையும் மீறி தொடர்ந்து இருந்தாள் .

இதுநாள் வரை , பெருஞ்சினம் கொண்டு விலகி இருந்த சரண்.. இன்று , அவற்றை தூக்கிப் போட்டு டெல்லிக்கு வந்து இறங்கிய செயலும் , தனக்காக மட்டுமே என்று அறியாதவள் இல்லையே..! அதன் தைரியமும்.. அது கொடுத்த உந்துதலால் , ' வேண்டாமே..', என்ள அவன் கெஞ்சலையும் மீறி வார்த்தைகளை வெளியிட ,

சரணின் இத்தகைய பதிலை அவள் நினைத்தே இராதது . அவன் அளித்த பதிலோ , தங்கள் பந்ததின் பிணைப்பின் மீது இருக்கும் நம்பிக்கை சரிய வைப்பதாய் , அவன் அதரங்கள் கூறியதை நம்ப முடியாமல் வெறித்தவளாக இருந்தாள் . அவளை உதறிச் சென்றது போல் முழுமையாக சொல்ல வந்ததை.‌. சொல்லாமல்.. நகர்ந்து இருந்ததில் , தன்னை மீறி வெடித்து அழுதவளுக்கோ ,

' எனக்கு மட்டும்.. எனக்கு மட்டும்.. ஏன் இப்படி.. அப்படி நான் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்..", என்று முழங்காலில் முகம் புதைந்து அழுதவளுக்கோ , சற்று முன் வரை இருந்த பூரிப்பும் பெருமிதமும்.. மொத்தமாக அழிந்து இருந்தது ‌.

கண்கள் சிவக்க , குளியலறையில் இருந்து வெளி வந்த சரண் தாமரையை அழுத்தமாக ஏறிட.. வீங்கிய கண்களுடன் , அவன் விழிகளை சந்திக்க துணிவு அற்றவளாய் , மெதுவாக எழுந்து நகர்ந்து இருந்தாள் . சென்ற தாமரையின் முதுகை வெறித்தவனுக்கு , குளித்த பிறகும்.. ஒட்டிக் கொண்டு இருந்த அவளது தேகத்தின் வெம்மையும் , மென்மையும் தன் உடலை விட்டு விலகாதது போலவே இருந்தது .

பெருமூச்சை வெளியேற்றியவன் , இரவு உடையை அணிந்து.. சிகரெட்டை கையில் எடுக்க.. தாமரை நீருக்கு அடியில் நின்று நிலைப்படுத்திக் கொள்ள முயன்று இருக்க.. நீர்பட்ட மேனியில் அங்காங்கே தென்பட்ட எரிச்சல்.. சரண் முரட்டுத்தனத்தின் அடையாளங்களின் மிச்சமாக , இன்பத்தையும் , துன்பத்தையும் ஒருங்கே விதைத்ததாய் .

அவரது அறையில் இருந்த மயூரிக்கு மகனின் வருகையை நினைத்து பெருமிதமாக இருந்தார் . அவன் இங்கு வந்ததில் இருந்து சரணின் பார்வை அவளை மட்டுமே வட்டம் அடித்ததையும் , விழாவின் முடிவிற்குள் தன் கை வளைவிலேயே வைத்து இருந்ததும்.. தனிமைக்காக தவித்ததையும் பார்த்த பிறகோ.. ஒருவித நிம்மதி. கண்டிப்பாக , தாமரையை புரிந்துக் கொள்வான் என்று . இதற்கு முன்பு மான்சியுடன் சண்டை வருகையில் எல்லாம்.. ' நீயே அனுசரித்து போக வேண்டும்.. நீ விரும்பி மணந்தவள் தானே.. குடும்ப கௌரவம் என்றும் உன் திருமணத்தால் குறையக் கூடாது..', என்று அடுக்கடுக்காக கூறி.. அவளை அழைத்து வர அனுப்பிய செயலுக்காக இன்று வருந்தினார் .

பெரியவர்களாக , தம் மகனுக்கு தாங்களே நியாயம் செய்யவில்லையே என்று . அன்று , மான்சியின் தவறுக்கு அவளை கண்டித்து இருந்தால் , இன்று இச்சிறு பெண்ணின் மீது நடந்துக் கொள்ளும் முறைக்கு கண்டிக்கவும் முடியாமல் போனதை நினைத்து குமைந்தவரின் மனதிற்கு.. பால் வார்த்தது போல் , அவன் செயல் இருந்தது .

அதிக சங்கடமும் உறக்கத்தை கெடுக்கும் என்றால் , அதேநிலை உருவெடுக்கும்.. அதீத சந்தோஷத்திற்கும்.. அதன் சான்று நள்ளிரவை கடந்தும் உறங்காமல் பால்கனியில் நின்று இருந்தார் .. அதேபோல் , சரணும் வெளியே நின்று புகைத்துக் கொண்டு இருந்தான் . முதலில் , கவனிக்க தவறியவர்.. ஏதோ தோன்றியதால் , அங்கே பார்வையை சுழற்ற.. முகத்தில் தீவிரத்தை சுமந்தவனாக.. புகைத்துக் கொண்டு இருந்தான் .

ஒருவேளை , தாமரை கருவுற்று இருப்பது தாமதமாக தெரிந்ததால் , வேதனையில் தவிக்கிறானோ என்று அந்த தாய் உள்ளம் நொடிக்குள் பதறி.. ' சரண்..', என்று அழைக்க வாய் திறக்க நினைத்த வேளையில் தாமரையின் வருகை தடை செய்து இருந்தது .

சரண் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்தி இருந்ததாலும் , அதன் அர்த்தம் புரிந்ததில் , இதயம் முழுவதும் பரவிய வலியின் கணம் தாளாதவளாய் துடித்தாலும் ,
' ஏம் புள்ள உனக்கு அவியல பற்றி தெரியாதததா.. அவியபட்ட பாட்டுக்கு ( கஷ்டத்திற்கு ) இந்தளவுக்கு கூட கோவியக்கலேனா ( கோபப்படவில்லை என்றால் ) எப்படி.. எல்லாந் தெரிஞ்ச நீயே வெசனப்படலாமா..) என்று கணவனுக்கு சாதகமாகவே யோசனை வழங்கியதில்.. சிறிது அளவு தெளிந்தவள்.. விம்மும் இதயத்தை கட்டுப்படுத்தியவளாக , ' நான் அப்படிப்பட்டவளா..', என்று வெதும்பும் மனதையும் தட்டிக் கொடுத்து , நடுங்கும் தேகத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை கடைப் பிடிக்க.. எழும் , கோபத்தையோ , வருத்தத்தையோ காண்பிக்க விரும்பாதவளாய் ,

" தூங்காம.. இங்க என்ன செய்றீக..", என்று தனக்குள் எழும் உதறல்கள் அனைத்தையும் புதைத்தவளாக , மென்குரலில் வினவ..

வெண்புகையில் மூழ்கி இருந்தவனுக்கும்.. அவள் தவிப்பு எட்டாமல் இல்லை.. ஆனால் , அவளால் தூண்டப்பட்டு இருந்த சினத்தால் மௌனம் சாதித்து.. அலட்சியம் போல் பதில் கூறாது.. தன் வேலையில் மூழ்கி இருக்க.. பெண்ணவளின் கொலுசு ஒலியோ , அவனை நெருங்கிக் கொண்டு இருந்தது .

அவன் முதுக்கிற்கு பின்பாக நின்றவள் , தன் மீது தவறே இல்லாத போதும்.. " ஸா.. ரி..", என்று முனங்க.. அப்பொழுதும் , சரணிடத்தில் அசைவில்லாமல் போக.. தைரியத்தை திரட்டியவளாக , பணத்திற்காக அவனிடம் வந்ததாக அவன் கூற வந்ததையும் பின்னுக்குத் தள்ளியவளாய் , துடிக்கும் கீழ் இதழை கடித்து நடுக்கத்தை அடக்கி , அவன் மணிக்கட்டை பிடித்தவள் ,

" இனிமேல் , உங்களை மீறி பேச மாட்டேன்.. மன்னிக்க மாட்டியளா..", என்று குரல் நடுங்க பரிதவிப்புடன் பேச.. அதற்கு மேல் அவனால் அசையாமல் இருக்க முடியாமல் , " நீ போய தூங்கு ..", என்ற கட்டளை பிறக்க..

" நீங்களும் வாங்க.. ", என்று கெஞ்சினாள் .

" ம்ச்சு.. ஸ்மோக் பண்ணீட்டு வரேன்.. உள்ள போ டீ..", என்று தன் சிகரெட் பிடித்து இருந்த விரல்களால் அழுத்தமாக நெற்றியை நீவி.. மீண்டிக் கிடக்கும் எரிச்சலையும் அவள் மீது முழுமையாக காட்ட முடியாமல் போவதையும் நினைத்து , சுற்றுப்புறம் மறந்தவனாய்.‌. வேகமாக , இரு கைகளால் அவளது தோள்களை பற்றி இழுத்து ,

" என்ன தான்டீ வேணும் உனக்கு.. ஏன் இப்படி சித்திரவதை செய்ற.. என் கண்ணு முன்னாடி நிக்காம போய் தொலை.. நீ என்ன செஞ்சாலும்.. நானாவே உன் பின்னாடி கெஞ்சீட்டு திரியறதால.. என்ன வேணா செய்யலாம்னு நினைச்சிட்டியா.. ", என்று வெடித்து.. , தன் அழுத்தத்தில் இருந்து வெளி வர நினைத்தவனாக , வேகமாக புகைத்து வெளி விட.. சுரீர் என்று முகத்தில் மோதிய புகையால் உடனடியாக , தாமரைக்கு வயிற்றைப் புரட்டி எடுக்கவே , கட்டுப்படுத்த முயன்று தோற்றவளாய் , வாயில் கையை வைத்து வாஷ்பேஷனிடம் ஓட..

" பாப்பா.. என்னாச்சு..", என்று
கையில் இருந்ததை விட்டு எறிந்தவனாக , அவள் பின்னோடு விரைந்துச் சென்று தாங்கிக் கொண்டான் .

அவர்களையே கவனித்தவராக நின்று இருந்த மயூரிக்கு மருமகளின் அறைக்குள் செல்ல கால்கள் பரபரத்தாலும் , சற்றுமுன் நடந்த நிகழ்வு.. அவரை தேக்க செய்து இருந்தது . தன் மகனின் டென்ஷன் , தாமரையின் சமாதானத்திற்கு காண்பித்த கடுமையான கோபம் , இப்பொழுது அவளை பதற்றத்துடன் தாங்கிய செயல் என்று இருக்க.. அவர்களே , பார்த்துக் கொள்ளட்டும் என்று பிடிவாதமாக நின்றுவிட்டார் ‌. ஆனாலும் , தன் மகனின் போராட்டம் என்று முடிவிற்கு வருமோ என்று கலங்கியவராய் இருந்தார் .

குடல் வெளிவரும் போல் அவள் வாந்தி எடுக்க.. " பாப்பா.. என்னாச்சு.. ஏன் திடீர்னு வாமிட் பண்ற.. இப்ப ஓகேயா..", என்று அடுக்கடுக்காக தாங்கியவனாக பரிதவிக்க..

ஓய்தவளாய் , அவன் நெஞ்சின் மீதே சோர்ந்து சாய்ந்தவள் , "ஒன்னுமில்லை.. இப்போ பரவாயில்லை..", என்று அவன் கரங்களுக்குள் இருந்தே நடந்து படுக்கையில் சாய்வாக அமர்த்தியவன் , அவள் அருகில் உட்கார்ந்து , மென்மையாக தலையை கோதியவாறே , "சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா.. வயிறு வலிக்குதா.. டாக்டருக்கு போன் பண்ணவா..", என்று அக்கறையுடன் தவிக்க..

நன்கு அவன் நெஞ்சில் தலையை சாய்த்தவளாக , " ம்ச்சு.. எதுவும் வேண்டாங்க.. மசக்கை.. இந்த சிகரெட் ஸ்மெல் மட்டும் வயித்தை பிரட்டுது.. மூக்குல நெடி ஏறினதும் கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை ..", என்று சோர்வாய் சிரித்து விழிமூடிக் கொள்ள ,

' மசக்கை..' என்ற சொல்லின் அர்த்தம் விளங்காத போதும் , சிகரெட் ஸ்மெல் பிடிக்கவில்லை என்றதிலேயே , " ம்..", என்று முனங்கலாய் பதில் சொல்லவும்..

" ஸாரி.. ", என்று அவள் கண்கள் இறைஞ்சியது , அது தாளாதவனாய் , அவளை இழுத்து அணைத்து தோள் வளைவில் சாய்த்தவனாக , " எதையும் யோசிக்காம தூங்கு.. பாப்பா.. நான் நாளைக்கு சீக்கிரமா கிளம்பனும்..", என்றான் .

" ம்.. கண்டிப்பா நீங்க போயே ஆகணுமா..", என்று வினவ..

" ம்ச்சு.. இது என்ன கேள்வி.. ", என்று சற்று கண்டிப்புடன் குரலை உயர்த்தியதுமே , முகம் புதைத்து விழிமூட முயற்சிக்க..

" பாப்பா.. போயிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்திடுவேன்.. ஓகேயா..", என்று மென்குரலில் அமைதியாக கூறினாலும் , மெதுவாக அவளது வயிற்றை தடவியவனாகவே சொல்லவும் , பளிச்சென்று சிரிக்க முயன்று தோற்றவளாய் நன்கு சாய்ந்துக் கொண்டாள் .

சரணின் விரல்கள்.. வருடல்களை நிறுத்தி இருக்கவில்லை . அவ்வளவு ஓங்காரமாக, வயிற்றைப் பிடித்தவளாக வாந்தி எடுத்ததில் பயந்தே போனான் . வயிற்றில் வலி இருப்பதாக நினைத்து அவன் வருட.. தாமரையோ , தவறாக புரிந்துக் கொண்டாள் .

ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்த போதும் , தாமரை இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்ற எண்ணம் தோன்றியதுமே , ‌அதிகமாக , அவளை அணைத்துக் கொள்ள.. அதன் சுகத்தில் எப்பொழுதோ , உறங்கி இருந்தாள் ‌.

❇️❇️❇️❇️❇️

தன் தாய் வீட்டில் இருந்த தாரா உறங்காமல் , ரிச்சர்ட்டின் வருகைக்காக காத்திருக்க.. அவளது சிந்தனைகளோ , கடந்த ஒரு வாக் கால மண வாழ்க்கையை அசைப் போட்டதாய் .

முதல் இரவு அன்று நல்லப்பிள்ளை போல் விட்டு விலகி உறங்கியவன்.. மறுநாள் , விடிந்தும் விடியாத பொழுதே தேடல்களை துவங்கி துவள செய்தவன் . இன்று வரை , சங்கமத்தில் ஈடுபடவில்லை ‌ . அதேசமயம் , ஆசையான பார்வைக்கோ.. செல்ல சீண்டல்களுக்கும் குறைவு இல்லாமலே இருந்தது . ஆனில் இரவின் கூடல் , ம்ஹும்..

திருமணத்தின் மறுநாள் தாமதமாக எழுந்து கீழ் இறங்கி வந்தவளுக்கு வெட்கம் ஆட்கொள்ள , சிறு சங்கடத்துடனே இறங்கி வந்தவளை வரவேற்றது சாந்தி மட்டுமே . தாமரையை , அவளது வீட்டில் விடச் சென்றதாக கூறினார் .

அதன் பின் மறுவீடு.. சொந்தங்களின் வீடுகளுக்கு விருந்து.. என்று நேரங்கள் ரெக்கைக்கட்டிப் பறந்து இருக்க.. இன்று , ஒரு முக்கிய அலுவலக வேலையால் மீட்டிங்க்கு விக்கியுடன் சென்று இருக்கிறான் .

மணி இரண்டை கடந்த பிறகே , வாயிற்மணி ஓசை கேட்க.. அவசரமாக கதவு திறந்தவளை , "உன்னை தூங்குன்னு சொன்னேனே..", என்று மென்மையாக கடிந்தவனாகவே நுழைய.. பளீர் சிரிப்பால் , அதனை கடந்தவள்.. " சாப்பிட்டீங்களா ரிச்சா..",

" ம்.. ரொம்ப டையர்டா இருக்கு தாரா.. ", என்றவனாக அவர்களது அறைக்குள் நுழைந்தவன்.. அவசர குளியலுடன் படுக்கையில் விழ..

" என்னாச்சு ப்பா.. ", என்று மென்மையாக தலைகோத..

" சும்மா.. தாமரை பேசுனாளா.. எப்படி இருக்காளாம்.. சரண் எதுவும் கால் பண்ணினாரா.. ", என்று அடுக்கடுக்காக வினவ..

" பேசவே இல்லை.. நான் அவ மேல பயங்கரமான கோபத்தில இருக்கேன்.. எவ்வளவு அழுத்தம் பாருங்க.. உங்க தங்கச்சில்ல.. அதான்..", என்று படபடவென பொறிந்தவளின் பேச்சில் சோர்வுகள் மொத்தமும் விலகி ஓடி இருக்க...

" அப்படி என்ன அழுத்தமாம் எங்களுக்கு..", என்று குறும்புடன் சிரித்தவனை நன்கு முறைத்தவள்..

" அழுத்தம் இல்லாம.. இப்போ வரை ஐ லவ் யூன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலை.. அவ மட்டும் என்ன.. ", என்று முகம் சிவக்க கடுகடுப்படிக்க..

" ஹா.. ஹா.. எதுக்கு எதை சொல்ற.. நாங்க சொல்லேன்னா என்ன.. உன் ஃப்ரெண்ட் போன் பண்ணினா.. ", என்று சீண்டலாக சொல்லவும். முறைத்தவளாய் முகத்தை திருப்பவும் ,

" ஓய் , என்ன டீ முகத்தை திருப்புற.. உண்மைய சொல்லீட்டா தாங்காதே..", என்று அவள் முதுகுடன் ஓட்டியவனா மேலும் வம்பு இழுக்க..

" ஆமா , பெரிய உண்மை விளம்பி..", என்று அவன் பக்கமாக திரும்பி படுத்தவளாய் முறைக்க..

" இல்லையா பின்னே.. " என்றான் குறும்புடன்.. ரிச்சர்ட் முகத்தில் விரவி இருந்த குறும்பும் விழிகளில் பளபளப்பும் , இதழ்களில் தவழ்ந்த புன்னகையும் என்று மிக நெருக்கமாக தெரிந்தவனின் தோற்றத்தில் .. மாய கண்ணனிடம் மயங்கும் ராதையாக அவள் மாறி..

" நீ இப்படி சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ரிச்சா..", என்று குழைவாக கூற..

மனம் நிறைந்தவளின் பாராட்டும் , விழிகளில் பரவி இருக்கும் மயக்கமும் , தாமரை சரணின் சச்சரவுகளால் குழப்பத்தில் உறங்கி இருந்த அவன் ஆண்மை , அழகு மனைவியின் மையலில் விழித்து விடவே.. ரிச்சர்ட்டின் விழிகளின் நிறம் மாற துவங்கியது .

Continue Reading

You'll Also Like

150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...