வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 99

1.5K 45 21
By kanidev86

பகுதி - 99

" மேம்..", என்று அவளை அழைப்பதற்கும் சத்தம் வந்து வரவில்லை ரேகாவிற்கு .

" அய்யோ.. என்னாச்சு இவங்களுக்கு.. இப்போ எங்கேன்னு தேடுறது.. ", என்று பதறியவர் மயூரியை நாடி ஓட.. அவரோ , முக்கியமான நிறுவன கருத்தரங்கில் இருந்தார் .

அவ்வளவு வேகமாக , அந்த ஹோட்டலை விட்டு வெளியேறிய தாமரைக்கோ.. நெருப்பு அடங்க மறுத்ததாய்.. அவளின் வருகையை கண்டுக் கொண்ட வாகன ஓட்டி , "மேம் ..", என்று வழி நடத்த.. தன் வேகம் குறையாதவளாய் வண்டியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாலும்.. எரிமலையின் சீற்றம் அடங்க மறுத்ததாய்..

' என்னை பார்த்தா எப்படி இருக்கு எல்லோருக்கும்.. என்னமோ , அவ்வளவு கேவலமா பார்க்குறா.. இவளை விட எந்த வகைல நான் குறைஞ்சு போயிட்டேனாம்.. போகுது.. போகுதுன்னு அமைதியா போனா.. கண்டவங்களும் சீண்டுறாங்க.. இருக்கு அவளுக்கு.. இவ பெரிய அழகின்னா.. அது அவளோட.. என்னை கேவலமா நினைக்க.. இவ யாரு..' என்று தன் உள்ளக் குமுறலின் வேகம் கால்களிலும்.. கைகளிலும் தாண்டவம் ஆட.. பத்தே நிமிடத்தில் , கீழ் இறங்கி வந்திருந்தாள் .

" ம்.. போலாம்..", என்று வாகன ஓட்டியின் மீதும் எரிச்சல்லை கொட்டிக் கவிழ்க்க.. அவனால்.. அவளது மாற்றத்தை பார்த்ததும்  , அவள் கட்டளையும் காதில் விழுந்து இருக்கவில்லை .

" சங்கர்..", என்று அழுத்தமான தாமரையின் அழைப்பிற்கு பிறகே.‌. பூமிக்கு திரும்பியவன் , " ஸ்.. ஸ்.. ஸா.. ஸா..ரி.. மேம்..", என்று தடுமாறி.. மீண்டும் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு செலுத்தினான் .

' ஆள் பாதி.. ஆடை பாதி.. நீ  எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.. ஆனா , உன் நேச்சரான சிம்பிளிசிட்டியை எல்லோரும் நல்ல விதமா பார்க்க மாட்டாங்க.. ஸோ , என் பாப்பா.. இடத்துக்கு தகுந்த ட்ரஸ் போடணும்.. ஓகேயா..', என்று அவனது தாடை ரோமங்கள் பின்னங் கழுத்தில் உரச.. மெதுவாக , அவனது ரோஜா இதழ்கள்.. தன்னை நாடி அவனுக்குள் சுருட்டி வதைத்துக் கொண்டு கூறியதே  ஞாபகத்தில் ஊற்று எடுத்து..  அவன் கை சிறகுக்குள் நுழைந்துக் கொள்ளவே மனம் தவியாய் தவித்திருந்தது .

பெருமூச்சை , வெளியேற்றியவள்.. அழுத்தமாக , கீழ் உதட்டை அவளது மேற்பற்களிடம் சிக்க வைத்து.. கண்களை உருட்டியவளாக.. சரணின் அருகாமையை நினைத்து தடுமாறிக் கொண்டிருந்தாள்.. அதன் தாக்கம், கண்கள் சுரக்கும் உவர்ப்பு நீரை தடுக்க இயலாது போக.. கண்களை நிலையில்லாமல் சுழற்றியவளாய் ,  வேகமாக , மூச்சை வெளியேற்றியவளாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் . 

வண்டியை ஓட்டிக் கொண்டே கண்ணாடி வழியாக , தாமரையை நோட்டமிட்ட சங்கருக்கு , அவள் வந்த பொழுது இருந்த ஆத்திரம்.. கனல் தெறிக்க இருந்த தோற்றம் இப்பொழுது இல்லை.. ஆனால் , மிடுக்கும்.. இறுகிய முகமும் அவளகடத்தே புதிதாய் குடி ஏறி இருக்க.. பேச நினைத்தாலும் குரல் தொண்டையில் சிக்கியது போல் தோற்றுவித்து இருந்தது .

" அய்யோ.. இந்த பொண்ணு எங்க போச்சுன்னு தெரியலையே.. மேம்மையும் பார்க்க முடியலை .. பதினைந்து நிமிஷத்தில  ப்ரோக்ராம் ஆரம்பிக்க இருக்கு.. இப்போ என்ன பண்றது.. ", என்று புலம்பியவளாக  ரேகா இடமும் வலமுமாய் நடந்து பயின்றுக் கொண்டிருந்த பொழுது.. பார்வையில் விழுந்த தாமரையின் தோற்றத்தில் அப்படியே உறைந்துவிட்டார் .

உடலை ஒட்டிய கருப்பு நிற ப்ளாக் பேன்ட்.. வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற மேல் அங்கி.. என்று அணிந்திருந்தவளின் கூந்தலோ.. உச்சந்தலையில் முடிச்சிட்டு  கொண்டையாக மாறி இருக்க.. நெற்றியில் இருந்த பொட்டின் அளவு குறைந்து இருந்தது . கண்களில் பளிச்சிட்டு இருந்த காஜல்.. அடர் நிற உதட்டுச் சாயம் என்று மொத்தமாக மாறி இருந்தாள் . காதில் மின்னிய வைரக் கம்மல்.. மணிக்கட்டில் , நட்சத்திரமாக ஒளிர்ந்த தற்போதைய விலை மிகுந்த கைக்கடிகாரம்.. பட்டன் மூடப்படாத கழுத்தில் , ஒட்டித் தெரிந்த மெல்லிய செயின்.. என்று மிடுக்குடன் நடந்து வந்தவளின் கம்பீரமும் நளினமும்.. செதுக்கி வைத்த உடலின் அமைப்பில் , வாய் பிளந்தவாராய் நின்றுவிட்டார் .

' இந்த அழகை.. இந்த பொண்ணு இவ்வளவு நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்தது..', என்ற நினைப்பே.. அவருக்கு இப்பொழுது இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி ஆகியிருக்க..

தொலைவில் வரும் பொழுதே , ரேகாவை கவனித்து விட தாமரையின் அதரங்களோ.. கசப்பில் உதடு வளைந்ததாய்..
' மனிதர்களின் குணத்திற்கோ.. பண்பிற்கோ.. ஒருவரிடமும் மதிப்பு இல்லை.. பகட்டிலும் ஆடம்பரத்திற்காகவும் மட்டுமே..', என்று தோன்றுயதுமே , வெறுப்பின் உச்சிக்கு சென்றவளுக்கு.. தன் போல் ஆத்திரம் அதிகரிக்க.. அலட்சியமாகவே அவரை நெருங்கி இருந்தாள் ,

" நான் சொன்னது  முடிஞ்சதா..  ", என்று அதிகாரமாக கேட்டு .. அவரின் நெஞ்சுக்கூட்டிற்குள் குளிர் பரவ செய்திருக்க..

அதில் " அய்யோ..", என்று அலறிய ரேகா.. " அது வந்து மேம்.. ", என்று தடுமாறினார்..

" இல்லை.. இல்லையா..", என்று கண்களை கூர்மையாக சந்திக்க.. அதற்குள் இருவரும் அவர்கள் இடத்திற்கே வந்துவிட்டு இருந்தார்கள் .

மற்ற இரு அழகிகளையும் பார்வையிட்டவளுக்கு.. ஒரு பெண்ணின் அலங்காரத்தில் , திருப்தியின்மை ஏற்பட்டு விடவே..

" வாட் த ஹெல்.. ", என்று மஞ்சரியின் ( மற்றொரு ஸ்டெலிஸ்ட் ) மீது பாய்ந்தவளிடம் பதில் பேச முடியாமல் தலைக் கவிழ..

" ப்ளீஸ்..", என்று அப்பெண்ணை அமரக் கூறி  இருக்கையை காட்டி.. அனைவருக்கும் அதிர்வு ஏற்படுத்தியவளின் பேச்சை மறுக்க முடியாது , அப்பெண் மௌனமாக ஏற்க.. நொடிக்குள் சீர் செய்து.. ஆடை அணிவிக்க கண்களால் கட்டளையிட.. அதற்கு உண்டான வேலையில் மும்மரமாகினார்கள் .

நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டவளாக , " மிஸஸ் ரேகா.. ", என்று அழைத்து ஏன் இவள் செல்லாமல் இருக்கிறாள் என்று பார்வையால் வினவ..

எச்சிலை விழுங்கியவர்.. " மேம்.. அது அவ்வளவு ஈசி கிடையாது..", என்று திணற..

" ஓ.. அப்படியா.. ஏன்..", என்று நிதானமாக , புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பவும்..

" கான்ட்ராக்ட்.. அது மட்டும் இல்லாமல் இவங்க சூப்பர் மாடல்.. ஸோ நமக்கு தலைவலி.. உங்களுக்கு  பிஸ்னஸ் ரிஸ்க் தெரியலை..", என்று மென்குரலில் தமிழில் கூறயவரை ஏளனமாக பார்த்தவள்..

" ஓஹ்ஹோ.. அப்போ எதுவும் தெரியாம வந்து உட்கார்ந்து இருக்கேன்னு சொல்றீங்க..", என்று கேட்டவளின் குரலில்.. என்னை கேலி பேசுகிறாயா.. என்று கண்டனம் மறைந்து இருக்கவும் , அவசரமாக , " அப்படி இல்லை..", என்று தன் மறுப்பை தெரிவித்தவரை கூர்விழிகளால் துளைத்தவளாய் , " கேன்சல் ஹெர் கான்ட்ரேக்ட்.. ( ஒப்பந்ததை ரத்து செய்..) ", என்று ஆங்கிலத்தில் கூறவும்..

" அது முடியாது மேம்..", என்று பல தயக்கங்களுடன்..

" முடியாது.. முடியாதுன்னா நீங்க ஏன் இங்க இருக்கீங்க..  கிளம்புங்க ..", என்று
வேகமாக எழுந்தவள்...

" மேம்.. டோன்ட் யூ திங் தட் ஐ ஹேவ் நோ ரைட்ஸ்.. ( மேடம்.. எனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நினைக்கிறீர்களா..?", என்று புருவம் உயர்த்தவும்..

" அய்யோ.. நான் அப்படி சொல்லலை..", என்று அலறி இருந்தார்..

" Miss sai dhanvi.. age 24.. being super model in this fashion world starts from teen.. Lots of  biggest sponsers are there for you.. but you accept our sponsorship coz of charan.. to use opportunity for your dream as a flim star.. am i right.. whatever.. let i cut to the chase.. totally ten pages of our contract that you signed up..  had you remember the page of nine .. let me once again remain you.. well , page of nine..  point third , incase of any misbehaviour with our staffs.. management have rights to cancel the contract at any time.. that's it , you're fired.. ( மிஸ் சாய் தன்வி..  24 வயது.. உங்க டீன் ஏஜ்ஜில் இருந்து இந்த ஃபேஷன் உலகில் சூப்பர் மாடலாக இருக்கீங்க .. உங்களுக்காக நிறைய பெரிய ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு ஃபிலிம் ஸ்டாராக வலம் வருனும் நினைக்கிற  உங்கள் கனவு.. அதுக்கு நாங்க தந்த வாய்ப்பைப் ஏற்றுக் கொண்டதற்கான காரணம்  சரண் நான் சொன்னது சரிதான.. அது எதுவாக இருந்தாலும் போகட்டும்.. நான் விஷயத்துக்கு வரேன்.. நீங்கள் கையெழுத்திட்ட எங்கள் ஒப்பந்த பத்திரத்தில் மொத்தம் பத்து பக்கங்கள் உண்டு அதில்.. ஒன்பதாவது பக்கம் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கா... சரி, மீண்டும் நானே மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.. , பக்கம் ஒன்பது.. எண் மூன்றாவது  , எங்களது ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டால்.. எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.. அவ்வளவுதான்.., நீங்கள் நீக்கப்பட்டீர்கள்..) என்று அசால்ட்டாக ஆங்கிலத்தில் நளனிமாக கூறியவள்.. தனது வரைப்பட புத்தகத்தை .. எடுத்தவளாக ,

" மிஸஸ் ரேகா.. நீங்க தான இந்த அக்ரிமென்ட்டையே தயார் செய்தீங்க..", என்று மார்க்கமாக ஆங்கிலத்தில் வினவ..

இத்தனை வருட அனுபவத்தில் ஒருநாளும் இது போல் அவர் தலை கவிழ்ந்து நின்றது இல்லை . இன்று தாமரையின் முன் அவ்வாறு நின்றிருந்தார் .

இவர்களுடன் மிடுக்காக தாமரை விலசிக் கொண்டிருக்கும் பொழுதே அரங்கத்தின் , ஒலிபெருக்கியில் தகவல்கள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தது .

நிகழ்ச்சியின் ஒத்திகை இரண்டு மணி நேரத்திற்கு பிறகே , தொடங்க இருப்பதாக அறித்துக் கொண்டிருந்தார்கள்  .. மற்றும் தாமதத்திற்கு மன்னிக்கவும் என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்‌.

அவற்றை கேட்ட தாமரை , " good.. enough time mrs . Rekha.. ( குட் இனஃப் டைம் மிஸஸ் ரேகா..)",  என்று மீண்டுமாக மொழிந்து வேலையில் மூழ்கிவிட்டாள் ..

அழகி சாய் தான்வியோ , " kindly apologies mam.. ", என்று பணிவுடன் மன்னிப்பு வேண்டி மன்றாட.. தாமரையோ கண்டுக் கொள்ளவே இல்லை .

கருத்தரங்கில் கலந்துக் கொண்டு வெளி வந்த மயூரிக்கு , தாமரையின் அலங்காரமே பெரும் வியப்பை அளித்திருக்க.. அவள் அமர்ந்து இருந்த நிமிர்வும்.. கண்களில் எழுந்து இருந்த சீற்றமும் புதுமையாக இருந்ததில்.. வேகமாக , அவர்களை நெருங்கியவர் , தன்னை மறைத்துக் கொண்டவராகவே அங்கு நடப்பவற்றை கவனிக்க.. மருமகளின் பேச்சில் இருந்து புரிந்துக் கொண்டார் . சாய் எதோ செய்திருக்கிறாள் என்று ..

' உன்னை நீக்கிவிட்டேன்.. நீ போகலாம்..', என்றதுடன் வேலையில் மூழ்கி இருக்க.. கை பிசைந்தவராக ரேகா நின்றிருந்த விதமும் அவருக்கு பெரும் ஆச்சியத்தைக் கொடுத்தது .

இதுவரை ,  எந்த சூழ்நிலையிலும்.. ரேகா அவர் தலைமையின் கீழ் வரும் வேலைகளில் சிறு தவறையும் கண்டுப்பிடிக்க முடியாதவாறு நடந்துக் கொள்வார் . மேலும் , சிக்கல்களையும் அழகாகவே சமாளித்துவிடுவார் . ஆனால் , இன்று தாமரையின் முன் கை பிசைந்தவராக நிற்பதை காணவே , வியப்போடு சிரிப்பையும் கொடுத்து இருந்தது .

" மேம்.. ", என்று மெதுவாக அழைக்க..

" மாடல் பேர் என்ன..",  என்று கேட்டு அதிரடிக்கு மேல் அதிரடியாக நடந்துக் கொண்டிருந்தாள் ..

" மேம்.. அது அவ்வளவு சீக்கிரம் நடக்கும் விஷயமா.. நிறையா மாடல்ஸ் என்கேஜ்டா இருக்காங்க.. ஏஜன்ட்.. இன்னைக்கு முடியாதுன்னு சொல்றான் ...", என்றவர் விழிகளால் என் நிலைமையை புரிந்துக் கொள்ளேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது .

' இங்க என்னையே கண்டுக்க ஆள் இல்லையாம்..', என்று உள்ளுக்குள் மறுகியவள்.. அந்த நினைப்பு கொடுத்த இறுக்கத்தில் மேலும் எகுறுவது போல ,

" ஏன் அந்த ஒரு ஏஜன்ட் மட்டுந்தான் இந்த உலகத்திலேயே இருக்கானா.. ஏஜன்ட் கிட்ட மாடல்ஸ் இல்லேனா.. வேற அரேஜ்மென்ட் பண்ணுங்க‌..", என்று மீண்டும் படம் வரைவதில் கவனமாகியவளுக்கு எப்படி புரிய வைப்பது என்றே குழப்பம் .. தான் சொன்னாலும் காதில் வாங்குவாளா என்றும் தெரியவில்லை.. ஆனாலும் , நிலைமையின் தீவிரத்தை மயூரி வரும் வரையேனும் சமாளிக்க வேண்டிய கட்டாயம்.. அதனால் ,

" மேம்.. அது அவ்வளவு ஈஸி இல்லே.‌. நீங்க ஏதோ , கோபத்தில..", என்று முடிப்பதற்கு முன்பாகவே கரத்தில் இருந்த பேடையும்  பேப்பரையும்.. வேகமாக , மேஜையின் மீது தூக்கிப் போட்டவள்...

" உங்களால் முடியலேன்னு சொல்லுங்க..   முடியவே முடியாதுன்னு சொல்லாதீங்க.. ", என்று வேகமாக அலைபேசியை எடுத்து.. யாருக்கோ அழைக்க..

" ஹேய்.. மிஸ் லிசா ஜான்சன்.. நம்பர் தேர்டி டூ   வர முடியுமா..", என்று கேட்க.. அவர் அதனை ஏற்றதும்  அழைப்பை துண்டித்து இருந்தாள் .

" இவ்வளவு பெரிய கேம்ப்ல.. இத்தனை மாடல் இருக்குற இடத்தில.. உங்களால.. ஒரே ஒரு மாடல் ஏற்பாடு பண்ண முடியலேன்னா.. நீங்க இத்தனை வருஷம் வேலை பார்த்து என்ன கிழிச்சீங்க.. ", என்று வாங்கிக் கொண்டிருக்க.. ஏனோ , மயூரியாலும் அவள் பேசுவதை கேட்க முடியாமல் போக.. தன்னை காட்டிக் கொண்டார் .

" தாமரை.. எந்த அளவுல இருக்கு..", என்று எதுவும் தெரியாதவர் போல் வேலையை பற்றி விசாரித்தவராக அவள் அருகே வர.. ஏனோ , இன்று தன் கோபத்தின் பிடியில் இருந்து இறங்கி வர முடியாதவளாக மயூரியிடம் ,

" என்னை எதுவும் கேட்காதீங்க.. இதோ இங்க நிக்கிற உங்க பிஏவை கேளுங்கள்..", என்று நன்றாகவே கத்தி இருந்தாள் .

முகம் சிவந்து .. கண்களில் செம்மை படர்ந்து இருக்க.. துடி துடித்த இதழ்களை பூட்டியவளாக நின்று இருந்த தோரணை.. முற்றுலும் , மாறுப்பட்டவளாக காண்பிக்க.. அவளுள் பற்றிய நெருப்பு அதிகரித்துக் கொண்டே இருந்ததில்.. அவளது உடலிலும் நடுக்கம் பரவி இருந்தது .

தன் நிலையிலேயே இல்லாதவளாக நின்றிருந்தவளை கவனித்தவருக்கு பதற்றம்.. கொள்ள.. அதனை காண்பிக்க முடியாத சூழல் ...

" ஷ்..  எதுக்கு இவ்வளவு கோபம்.. முதல்ல நீ உட்காரு.."  அருகில் இருந்த குளிர்ந்த நீரை அவள் கரத்தில் திணித்தவர்..,

" முதல்ல குடி.. குடி டா..", என்று அவரே அவளுக்கு புகட்டவும்.. இதுவரை , இருந்த பாதுகாப்பின்மை உணர்வு சட்டென்று பறந்து ஓடி இருக்க.. சிறிதளவு , மயூரியின் அருகாமையில் அவளது உடல் லேசாக தளரவும் செய்தது .

" அது.. ", என்று கண்ணீரை நிறைய தடுமாறியவளை கரத்தை பிடித்து அழுத்தியவர்.. " எக்ஸ்கியூஸ் மீ..", என்று கண்களாலேயே ரேகாவை சமாளிக்க கூறி நகர்ந்து இருந்தார் .

சிறிது நேரம் , மௌனமாய் நடந்தவர்கள்.. அங்கிருந்து வெளியேறி பூந்தோட்டத்து இருக்கையில் அமர்ந்ததும்.. " என்னாச்சு.. எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்.. ", என்று மென்மையாக வினவ..

" அந்த பொண்ணு ரொம்ப ரூடா பிகேவ் பண்ணுச்சு.. எனக்கு ரொம்பவே கஷட்மா போச்சு.. அங்கிருந்த எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்து சிரிக்கிற மாதிரி..  அதான்..", என்று தலைக் கவிழ்ந்தவளாக சொல்லவும்..

" ம்.. அது தப்பு இல்லை.. இந்த அளவுக்கு டென்ஷன் ஆனா.. உன் உடம்பு என்னதுக்கு ஆகுறது.. நான் நினைக்கிறேன்.. அப்போ உனக்கு பீபி செக் பண்ணியிருந்தா.. (blood pressure cuff )  ப்ளட் ப்ரஷர் கஃப் வெடிச்சிருக்கும் .. ", என்று அவளிடம் கேலி பேசி இயல்மு நிலைக்குமாற்ற முயற்சிக்க.. அவளும் சிறு புன்னகையை உதிர்த்து இருந்தார் .

" தாமரை .. முதல் மூன்று நாளைக்கு பெரிசா எதுவும் இருக்காது.. நம்ம ப்ரேக்டீஸ் தான் ஸோ , நீ எந்த டென்ஷனும் இல்லாம நல்லா ரெஸ்ட் எடு .. சரியா..",

" நான்.. அவங்களை..", என்று எப்படி கூறுவது என்று தெரியாமல் தடுமாற..

" நீ சொன்னது போல வேற மாடலை வச்சுக்கலாம்..

வேண்டாம் அத்தை ..  கோபத்தில பேசீட்டேன்.. அவங்களையே , ஃபிக்ஸ் பண்ணீடுங்க..

" அப்போ , உன்னுடைய டிசிஷன் மேல நம்ம ஸ்டாஃப்ஸ்க்கு மதிப்பு இல்லாமல் போகும்.. பரவாயில்லையா..", என்று தீவிரமாக கேட்டவரிடம் ,

புன்னகையுடன் , " நான் சொன்னேன்னு சொல்லீடுங்க..", என்று சிரிக்க..

" அப்போ , நான் டம்மி பீஸ்..", என்று கண்களை உருட்டியவராக சொல்லவும்..

" ஹா.. ஹா.. நானா சொன்னேன்..", என்று சிரிப்புடன் கேலி பேசியவளை , வாஞ்சையாக வருடியவர்..

" இதோ.. இதுதான் எங்க தாமரைக்கு அழகு.. ஸ்மைலிங் பியூட்டி.. நோ , ஆங்கிரி பேர்ட்.. ", என்று அவள் கன்னத்தை கிள்ளியவர்..

" கொஞ்சம் நேரத்தில என்னை ரொம்பவே பயப்பட வச்சுட்டே.. வேர்த்து.. உடம்பு நடுங்குற அளவுக்கா கோபப்படுறது.. உன்னோட ஸ்பெஷலே நிதானம் தான்.. ஆனா , அது இன்னைக்கு  இல்லை..", என்று வருத்தமாக சொல்லவும்..

" ஸாரி அத்தை.. எல்லோருக்குமே நான் வேண்டாதாவளா இருக்கேனே அத்தை.. ஏன்..", என்று தலைக் குனிந்தவளாக கேட்க..

" மச்சு.. கமான்.. அந்த பொண்ணு நமக்கு யாரு.. போயும் போயும்.. அவ நடந்துகிட்டதுக்காக உன்னை நீயே..", என்று தோளுடன் அணைத்தவர்..

" சரி.. சரி.. தேவை இல்லாம எதையும் யோசிக்காம.. நல்லா போய் தூங்கு.. உன் ஹெல்த் எதுக்கு ஆகும்.. இந்த அளவுக்கு டென்ஷன் ஆனா, நீ போன வேகமும் வந்த வேகமும்.. உனக்கு .. எதுனும்னா எங்களால தாங்கிக் முடியுமா.. அவ்வளவு வேகமா படிலேயே ஏறி ஓடி ரூமுக்கு போயிருக்க.. ஆத்திரம் கண்ணை மறைக்கும்னு சொல்லுவாங்க.. கொஞ்சம் நிதானம் தவறி விழுந்திருந்தா.. எதுக்கு ஆகும்.. யோசிக்கிறது இல்லையா.. இதுக்கே , இவ்வளவு கோபப்பட்டா.. இதைவிட ஆயிரம் மடங்கான மக்களை நாம சந்திக்கணும்.. அப்பவும்.. இப்படியா நடந்துக்க போற.. போய் , தூங்கு  சரியா..", என்று அவர் பேச பேச.. தாமரையின் முகம் வெளிறி.. தன் போல் , வலக்கரமோ , வயிற்றில் பதிந்து இருந்தது .

மயூரி நகர்ந்த பிறகும் , உயகர் உள்ள சிலையாக அமர்ந்து இருந்தவளுக்கு மூளையில் பீபி என்ற அவரின் சொல் மின்னல் வெட்ட.. ' அய்யோ..', என்று வேகமாக மருத்துவருக்கு அழைத்துவிட்டாள் ‌..

" டாக்டர்.. நான் தாமரை..",

" ஹலோ.. சொல்லுங்க தாமரை எப்படி இருக்கீங்க.. டேப்லெட்ஸ் ஒழுங்கா எடுத்துக்குறீங்களா..",

" ஹான்.. அது.. அது வந்து.. இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் , அந்த ப்ரெஷர்.. அப்புறம் , சின்ன சந்தேகம்.. கேட்கலாமா..",

" தாராளமா கேட்கலாம்.. என்ன டவுட்..",

" நான் இன்னைக்கு ரொம்ப வேகமாவே ஓடீட்டேன் டாக்டர்.. அதுவும் படியில் ஏழு மாடி இருக்கும்.. அதேபோல , கீழ இறங்கி வந்ததும்.. குழந்தைக்கு.. ஏதுவம் ஆகாதுல்ல..", என்று உயிரை கரத்தில் பிடித்தவளாக.. கேட்க.. அந்த பக்கம் நீண்ட மௌனமே நிலவியது .

" உங்களுக்கு பெயின் இருக்கா..",

" இல்லை..",

" அப்போ சரி.. இனிமேல் , இது மாதிரி செய்யாதீங்க.. தாராளமா நடந்து நீங்க மாடிப்படி ஏறலாம்.. அதுக்காக , படில ஓடுறது.. ஏழு எட்டு மாடி ஏறுவது நல்லது இல்லை சரியா.. நீங்க பீபி டேப்லெட் சாப்பிட்டு இருக்கீங்க.. ஸோ , டென்ஷன் ஆகவே கூடாது . முடிஞ்சா ஈவினிங் வாங்க செக் பண்ணலாம்‌..",

" இல்லை.. டெல்லில இருக்கேன் டாக்டர்..",

" சரி.. லேசான பெயின்.‌ இல்லை ப்ளட்.. எந்த சிம்டம்ஸ் இருந்தாலும்.. ஹாஸ்பிடல் போயிடுங்க.. ", என்று பொறுமையுடன் விளக்கவும் , அவளுக்கு அதிகமான கிலி உண்டாக ,

" என்.. குழந்தை.. என் குழந்தைக்கு எதுவும் ஆகாது தான டாக்டர்..", என்றவளாக பதற்றத்துடன் திரும்ப.. அங்கே , முகம் இறுக மயூரி நின்றிருக்க.. அதிர்ந்தவளாக நின்றுவிட்டாள் .

Continue Reading

You'll Also Like

150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...