வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 98

1K 42 15
By kanidev86

ஹாய் நட்புகளே ,

நான் பத்து தடவைக்கு மேல படித்து  எடிட்டி பண்ணினாலே , அவ்வளவு எழுத்துப்பிழை இருக்கும்.. இன்றைக்கோ , தூங்கி விழுந்தே.. செய்தேன்.. ஸோ , தப்பை பொறுத்து.. படித்து கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு ,

உங்கள் கனி தேவ்💞💞💞

❇️❇️❇️❇️❇️❇️

பகுதி - 98

மயூரியும் நேற்று முதல் தாமரையின் சோர்வை கவனித்தவராகவே இருக்கிறார் . ஒருவேளை , சரண் மித்ரன் அவருக்கு அழைக்காமல் இருந்திருந்தால் , மிரட்டியேனும் அவளை வாய் திறக்க செய்திருப்பார் . இப்பொழுதோ , அவளது இந்நிலைக்கு முழு காரணம் மகன் என்பது தெளிவாக புரிந்திருக்க.. என்ன நஞந்தது என்று கேட்கும் தைரியம் அற்றவராக.. அதேசமயத்தில் , தன் மருமகளின் வேதனையை , அதிகரிக்க விரும்பாதவராக.. அமைதியாக வேலையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார் .

நள்ளிரவு நேரத்தில் , டில்லியை சென்று அடைந்து.. தங்கும் இடத்திற்கு வந்த பிறகு.. இருவருக்கும் , தனித்தனி அறையாக பதிவு செய்து இருந்த போதும்,  தாமரையை தனியே விட மனம் இல்லாதவராக.. அவளுடனே தங்கிக் கொண்டார் .

" நீ.. தூங்குடா.. மார்னிங் சீக்கிரமா எழுந்திரிக்கணும்.. ", என்றவராக.. தன் உதவியாளினி கொடுத்திருந்த ரிப்போர்ட்டில் கவனம் பதிக்க.. தாமரையும் , படுத்துவிட்டாள் .

ஒவ்வொரு இரவிலும் தன் மார்பையே மஞ்சாமாக்கி துயில் கொள்பவள்.. எப்பொழுது , அவன் நெஞ்சு அவளுக்கு தலையணையாக மாறக் கூடுமோ.. இருவருக்குமே தெரியாது .  ஆனால் , தாமரைக்கு சரண் மித்ரனின் இதயத் துடிப்பே ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும் தாலாட்டு இசை . அது கிடைக்காமல் , அவன் அறையில்.. அவன் படுக்கையில்.. அவன் வாசத்தில் திருப்தி அடைந்தவளாக அரைகுறையாக நான்கு மாத காலங்களாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு.. இன்று அதுவும் கிடைக்காமல் போனதில்.. கண்கள் எரிந்து உறக்கத்திற்கு கெஞ்சிய போதும்.. தூங்க முடியாது புரண்டவளாகவே இருக்க.. மருமகளின் மீது கவனமாக இருந்த மயூரிக்கு தாளவே முடியவில்லை .

பார்த்துக் கொண்டு இருந்த வேலையை , பாதியில் விட்டவராக.. அவளை நெருங்கியவர் ,  "தாமரை ம்மா.. என்னாச்சு டா.. அமைதியா தூங்கு அத்தை உன் கூடவே இருக்கேன்.. தூங்குடா ம்மா.. எதையும் யோசிக்காம தூங்கு..", என்று அவள் அருகில் அமர்ந்து மென்மையாக , அரைமணி நேரத்திற்கு மேலாக தலைக் கோதிய பிறகே.. அமைதியாய் ஆழ்ந்த துயிலுக்கு சென்றிருந்தாள் . அவளிடம் சீராக வந்த மூச்சுக்காற்றை பார்த்த பிறகே எழுந்தவர்.. தன் அலைபேசியுடன் சிட் அவுட்டிற்கு சென்று ராம் ப்ரசாத்தை அழைத்திருந்தார் .

ராம் ப்ரசாத்தும் , தன் நடிப்பின் காரணமாக லண்டனில் இருக்க.. மனைவி அழைத்த உடனேயே அழைப்பை ஏற்றவர்.." மயூ.. ரீச் ஆயிட்டீங்களா.. சாப்பிட்டாச்சா..", என்று நலம் விசாரிக்கவும்..

" ஆச்சு ராம்..", என்று சோர்வாய் பதில் கூறியதை கண்டுக் கொண்டவர்..

" ஏன்டா டல்லா பேசுற.. எனி ப்ராப்ளம்..",

" ம்.. என்ன சொல்லறது ராம்.. பேசாம , நாம தாமரைய அவன் நடிக்க கூட்டீட்டு வந்தது தெரியும்னு சொல்லி இருந்திருக்கனும்... அப்புறமாக , கல்யாணம் செய்து வச்சிருக்கணும்.. பெரிய தப்பு பண்ணீட்டோம்.. பெரிய தப்பு ராம்..", என்று கண் கலங்கியவராய் புலம்ப..

" மயூ.. என்ன நடந்தது.. தாமரை எங்கே..", என்று அழுத்தமாக வினவும்.. நடந்ததை கூறத் துவங்கினார் .

" ஒரே அழுகை.. அப்படி அழறா ராம்.. என்னன்னு கூட கேட்க முடியலை . சரணை சத்தம் போடலாம்னு நினைச்சு மொபைல் எடுத்தா.. அவனே கூப்பிட்டு அவளை பத்திரமா பார்த்துக்கங்கன்னு சொல்றான் . அவ்வளவு பிடிவாதமா , இந்த பேஷன் ஷோக்கு.. 
நம்ம கடை டிசைனரா பார்ட்டிஸிப்பேட்.. பண்ண வச்சவன்.. எது சின்ன விஷ் பண்ணலேன்னு தெரியலை . நாம , சரண் எப்படி தாமரையை கூட்டீட்டு வந்தான்னு தெரியும்னு சொல்லி மேரேஜ் செஞ்சு வச்சு இருக்கணும் ராம் . பெரிய தப்பு பண்ணியாச்சு.. அவன் நோக்கத்துக்கு விட்டுப் பிடிக்க முடிவு செய்து.. எங்க வந்து நிக்குது பாருங்க.. இவளுக்கும் பிடிவாதம் ஜாஸ்தி.. இப்போ , நம்மளால என்ன பண்ண முடியும் .. இவ அந்த மான்சி பொண்ணு மாதிரி ஆள் உண்டான்னு சொல்லீட்டு திரியுறா.. ஆனா , நம்ம பார்த்த மான்சி.. நம்ம பையன் அவளால பட்ட கஷ்டத்தை நினைக்கும் போது.. கோபமா வருது.. ரிச்சர்ட் மேரேஜ்ல.. அந்த பொண்ணு கேட்ட மன்னிப்பு.. சொன்ன விஷயத்தை யோசிச்சா.. கெஸ் பண்ணவும் பயமா இருக்கு ராம் . நம்ம கண்ணு முன்னாடியே நம்ம சரணை விட்டுட்டோமே ராம் . மறுபடி மறுபடி.. அவனுக்கு..",

" மயூ.. மயூ..", என்று இரண்டாவது முறை மிகவும் அழுத்தமாக அழைத்த பிறகே.. அவர் கவலையில் இருந்து மீண்டவராக.. அமைதியாக..

" மயூ.. இப்போ.. உன் ப்ரோக்ராம் மட்டுந்தான் மைன்ட்ல இருக்கணும் . எதுவா இருந்தாலும் , நீங்க வீட்டுக்கு வந்ததும் சரி பண்ணீடலாம்.. இந்த பத்து நாள் எதையும் நீயும் யோசிக்காம.. தாமரை யோசிக்க விடாம பார்த்துக்கோ.. சரியா.. ", என்று மென்மையாக கூறவும்..

மனமே இல்லாதவராய் , " ம்..", என்று முனங்களுடன் தலை அசைக்க..

" தட்ஸ் குட்.. சாப்பிட்டியா‌..", என்று இருவரும் மேலும் சிறிது நேரம் பேசிய பிறகு.. மருமகளின் அருகே படுத்தவர்.. தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தார் .

மறுநாள் , விடியலின் வெளிச்சமும் தாமரையை எழுப்பி விடவில்லை.. மனதின் அயர்ச்சியுடன்.. தாய்மையின் காரணமாக ஏற்பட்ட உடல் மாற்றமும்.. அவளுக்கு விழி திறக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவளாக நித்திரையில் ஆழ்ந்து இருந்தாள் .

அனைவரும் புறப்பட்ட பிறகே , தாமரையை மயூரி எழுப்பினார் , " தாமரை எழுந்திரி.. டைம் ஆச்சு டா..", என்று மெதுவாக தட்டவும்.. விழி மலர்ந்த பிறகே இருக்கும் இடத்தின் நினைவு வர..

" அத்தை.. விடுஞ்சிடுச்சா.. மணி என்ன..", என்று பதற்றமாக ,

" ஷ்.. டைம் ஆகலை.. போய் ரெடியாகி வா.. ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு சரியா இருக்கும்..", என்று மயூரி அன்புக் கட்டளைக்கு அடிப்பணிந்தவளாக.. பத்தே நிமிடங்களில் கிளம்பி வெளி வந்திருந்தாள் .

ஆரஞ்சு நிற பிளௌஸும்.. அடர் நீல நிற ஜார்ஜெட் புடவையில் ஆங்காங்கே.. தங்கம் , ஆரஞ்சு மற்றும் கருப்பு ஜரி நூலிலான  பட்டாம்பூச்சிகள் எங்கும்  பறந்து இருக்க.. உடலை ஓட்டி நேர்த்தியாக கட்டி வந்தவளின் தோற்றம்.. எப்பொழுதும் போல் எளிமையில் ரம்மியமாக இருந்தது  . காதிலும் சிறு தங்கத் தோடு பூப்போன்ற அமைப்பில் இருந்தது . கழுத்திலும் , தாலிச்செயினுடன்.. எப்பொழுதும் அணிந்திருக்கும் சிறிய சங்கலி.. ஒரு கரத்தில் செயின் விரஸ்ட் வாட்ச்.. மற்றொரு , கையிலோ.. இரு தங்க வளையல்கள்.. நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு.. புருவங்களுக்கு மத்தியில் அவளது மெரூன் வட்டப் பொட்டு.. உதட்டிற்கு மட்டுமே மெல்லிய சாயப் பூசு.. முகத்திற்கு பவுடரும் பூசி இருக்கவில்லை . எளிமையான தாமரை பூவாகவே இருந்தவளின் அழகு.. அவர் மனதையும் வசியம் செய்து இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

தங்க நிற தேகம் இல்லை.. ஆனால் , இன்றைய ஃபேஷன் உலகமே மயங்கிக் கிடக்கும் டஸ்கி நிறத்தால் அசரடித்து இருந்தாள் .

" போலாம் அத்தை..", என்று அவரின் சிந்தனையை கலைக்க..

" ம்.. போலாம்.. போலாம்.. வா.. அது எப்படி தாமரை ம்மா.. உனக்கு மட்டும் இந்த மாதிரி கலெக்ஷென்ஸ் கிடைக்குது.. சிம்பிளா இருந்தாலும்.. செமையா இருக்க போ..", என்று பாராட்ட..

" அத்தை விளையாடாதீங்க.. ", என்று புன்னகைத்தவளோ , " இந்த புடவை.. மின்ட் ஸ்ட்ரீட்ல எடுத்தது.. எரணூத்தி என்பது ரூவா ( இருநூற்று எண்பது ரூபாய்) .. என்று சிரிக்க..

அவள் அணிந்து இருக்கும் துணியை பிடித்து இரு விரல்களால் தெய்த்து பார்த்து ஆராய்ந்தவருக்கு‌.. இந்த புடவையின் தரம் இரண்டாம் ரகம் என்பது தெரிந்தாலும்.. இவ்வளவு மலிவான விலை யா என்ற வியப்பை அப்பட்டமாக காண்பிக்க
தவறவில்லை .

அவருடைய நினைப்பு சரியாக இணங்க கண்டவளோ.." அத்தை.. நீங்க இது மாதிரி கடைக்கு போகாதுனால உங்களுக்கு தெரியலை..  வாங்க.. இந்த ஒரு வாராத்துல.. டெல்லி கடைத் தெருவையே.. ஒரு கலக்கு கலக்குவோம்..", என்று இருவரும் பல கதைகள் பேசியவர்களாக.. உணவையும் , முடித்து வாகனத்தில் ஏறி இருந்தார்கள் .

மிகவும் , இயல்பானவள் போல் தாமரை அவருடன் பேசிக் கொண்டே வந்தாலும், அவ்வபொழுது.. அவளது அலைபேசியை நோண்டி பார்ப்பதும்.. பின் முகம் வாடுவதும்.. அவர் அழைத்தால் செயற்கையாக மலர்வதுமாய் இருந்தவளை பார்க்க.. துக்கம் பீறிடத் துடித்த போதும்.. ராமின் அறிவுரையால் தன்னை தானே கட்டுப்படுத்தியவராக இருந்தார் .

ஐம்பதிற்கு மத்தியில் இருந்த மயூரியோ.. தன் கூந்தலை விரித்து விட்டிருக்க.. முகத்தில் மெல்லிய ஒப்பனையின் பூச்சு .. இரு புருவங்களில் இருந்த கருமையும் ,  இதழ்களில் வெளிர் ரோஜா நிற உதட்டுச் சாயத்தினாலும் மெறுகேறியவராய்..  பளபளத்த இதழ் விரிப்பால்.. பார்ப்பவர்களை மேலும் கொள்ளைக் கொள்ள..  லேவண்டர் நிற ப்ளாஸோ பேன்ட்.. வெள்ளை நிற சட்டையை டெக் இன் செய்து இருந்தவர்.. அதே லேவாண்டர் முழுக் கை லாங் ஓவர் கோட்டையும் அணிந்து.. கச்சிதமான அலுவல் உடையுடன் இருந்தவரின் காலணிகளோ‌‌.. வெள்ளை நிற ஹைய் ஹீல்ஸ் ஸூ.. மணிக்கட்டிலும் வெண்மை நிற வைரக் கைக்கடிகாரம் இடம் பிடித்திருக்க.. காதிலும் , கழுத்திலும்.. வெண் முத்துக்கள் மாலையாகவும் , கம்மலாகவும் இருந்தது .

ஹோட்டலை அடைந்ததும் இருவரும் இறங்க.. தன் கம்பீரமான நடையால் , சிறு தலையசைப்புடன் , புன்னகை முகமாக புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தவராக , மற்றொரு , கையில் தன் மருமகளையும் விடாது.. உள்ளே நுழைந்துக் கொண்டார் .

அந்த இடத்திற்குள் நுழைந்ததில் ..  அரங்கின் அலங்காரத்தில்.. நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் ஏற்பாடுகளில் என்று விழிகளை விரித்து பார்வையை சுழற்றியவளாக.. அங்குலம் அங்குலுமாய் ரசித்து.. வியந்து என்று நடந்து வந்துக் கொண்டிருந்தவள்.. ஒரு அழகியின் மீது மோதி விட.. கீழே விழ இருந்தவளையும் கரத்தை பற்றி அவள் தாங்கி , சிறு விபத்தையும் அதனால் ஏற்படவிருந்த அவமானத்தையும் காத்தவளிடம் மலர்ந்து சிரித்தவளிடம் ,

" டிஸ்கஸ்டிங்.. ( disgusting..) ", என்று பார்வையால் மட்டும் அல்லாது வார்த்தையாலும் அருவருப்பை உணர்த்தியவளாக கடந்து சென்றிருந்தாள் .

நிகழ்ச்சி நிர்வாகிகளின் சந்திப்பு.. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் விலை பேசி இருந்த மாடல்களின் அறிமுகம்.. என்று அந்த ஆடிட்டோரியம் ஹாலுக்குள் நுழைந்ததில் இருந்து.. தங்களது பணியில் இறங்கியவர்களுக்கு நிமிடங்கள் கடந்ததும் தெரிந்து இருக்கவில்லை . மயூரி டீம் மெம்பர்ஸ் பம்பரமாக சுழன்று அனைத்தையும் , கவனித்துக் கொள்ள.. சிகை அலங்காரத்தில் வந்து நிற்கவும்.. மூன்று மாடல்கள் இருக்கவே.. தாமரை ஏற்கனவே.. முடிவு செய்தது போல் , தனக்கு கீழ் இருக்கும் இரு ஸ்டைலிஸ்ட்கள் இடம் , முன்பே ஆடையின் வடிவிற்கு ஏற்ப.. சிகை அலங்காரம் முடிவு செய்யப்பட்டு இருக்க.. அவர்களும் வேலையில் மூழ்கி இருந்தார்கள் .

தாமரை முன் நின்று இருந்த மாடல் சாய் தன்வி மிகவும் பிரபலமானவள் . வெளிநாட்டில் பல  நிறுவனங்களால் கொண்டாடப்பட்டவள் .. பாரீசில் நடைபெறும் பல அழகி போட்டிகளுக்கு  மாடல்களாக , தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய மாடலாக இருக்கும் சென்னை பெண் . வாய்ப்புகள் எங்கு இருந்து வந்தாலும் உடனே ஏற்றுக் கொள்ளும் பழக்கம் கொண்டவள் . சென்னையில் பிரபலமான கடையில் ஒன்றான ஃபேஷன் ஃப்ரடைஸ் பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் , பேஷன் உலகிற்கு பரிச்சயமானவளாக இருந்த போதிலும் , சினிமாவில் நடிப்பதற்கான  வாய்ப்பு கிடைக்காததாலேயே.. இதற்கு , உடனே ஏற்றுக் கொண்டாள் . சற்றுமுன் , தாமரையை அருவருப்பான பார்வையை வீசி.. அவளது கோபத்தையும் தூண்டிவிட்டவள் .

ஆனால் , தனது ஸ்டைலிஸ்டாக , இடித்த பெண்.. தன் முன் நிற்பாள் என்று ஏற்க முடியாமல்.. நின்றிருக்க . அந்த அழகிக்கோ , அவள் அருகில் நிற்பவளை பார்த்தாலே.. ஒவ்வாமையும் , அருவருப்பும் வந்ததுடன் ,  இவளுக்கு என்ன தெரியும் என்ற அலட்சியமும் தன் போல் அவளுள் துளிர்விட்டு இருக்க.. சிகை அலங்காரத்திற்கு , கொஞ்சமும் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கவில்லை .

சாய் தன் கரத்தில் இருந்த அலைபேசியை நோண்டுவதும்.. பின் , வெட்டி அரட்டையில் நண்பர்களுடன் இருப்பதும் என்று ஒழுங்காக காண்பிக்காமல் தாமரையின் பொறுமையை சோதித்துக் கொண்டு இருந்தாள் .

" மேம்.. ப்ளீஸ்.. மேம் டேர்ன் அப்.. மேம்  , ப்ளீஸ் ட்ர்ன் ஆஃப் யுவர் மொபைல்..", என்று கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக பொறுமையுடன் அமைதியாக சொல்லிக் கொண்டிருந்த தாமரைக்கு .. அவள் வேண்டும் என்றே அலைக்கழிப்பது போல் தோன்ற.. ஒன்.. டூ.. த்ரி.. என்று எண்ணியவளால் ஐந்து வரைக்கும் எண்ண முடியாமல் போனதில்.. "மிஸஸ் ரேகா.." என்று அலறி இருந்தாள் .

மயூரியின் உதவியாளினியாக , அவரின் கீழ் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்க.. தாமரையின் சத்தம்.. வெகுவாக திகைக்க வைத்ததில்.. வேகமாக ,  அவர்களிடம் வந்திருந்தார் .

"பையர் அன்ட் செட்டில் ஹர்..  வேற மாடல் ஹையர் பண்ணுங்க.. நான் வரதுக்கு உள்ள..", என்றவளாக வெளி ஏறி இருந்தாள் .

தாமரையின் கோபத்திலும் அதிகாரத்திலும்.. அங்கு இருந்தவர்கள் நொடிக்குள் மிரண்டு போனார்கள் .

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
23K 907 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..