வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 94

1K 41 16
By kanidev86

பகுதி - 94

சரண் எதிர்பார்த்து தவித்து இருந்த நேரத்தில் தாமரை காட்ட மறுத்த உரிமையை.. இப்பொழுது , வெறுப்பின் உச்சியில் இருக்கையில் , அவள் காண்பிக்க.. ரசிக்கவும் முடியாமல்.. ஏற்கவும் முடியாதவனாக  இருந்தான் .

தாமரை இயல்பாக கணவனிடம் காட்டிய கோபம் கூட , அவனுக்கு  தன்மானத்தை சீண்டியதாக இருக்கவே ,

" ஓ.. அப்போ.. மேம் என்ன சொல்ல வரீங்க..", என்று நொடிக்குள் ரௌத்திரத்தை தாங்கியவனாய் கண்கள் சிவக்க கடிந்த பற்களுக்கு இடையில் உறுமியதில் ,

தாமரையின் நா மேல் அன்னத்துடன் ஓட்டிக் கொண்டு.. நா உலந்ததாய்.. " நா.. நா..", என்று பெரிதும் தடுமாறியவளாய் நின்று இருந்தவளின் புஜத்தில் கரம் பதித்து , அழுத்தமாக பிடித்து இழுத்தவாறே.. 

" என்ன சொன்ன..", என்று கேள்வியாலேயே , வெட வெடக்க செய்திருக்க..

உதடு துடித்து.. உடல் நடுங்கியவளுக்கோ.. சற்றுமுன் துளிர்த்த சினமும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்திருந்ததாய்.. அவனின் பிடியில் தெரிந்த ஆத்திரத்தில்.. அதிகமாக அஞ்சியவள் , வாய் திறக்கும் வரை விட மாட்டான் என்பதால் , வர வைத்திருந்த தைரியத்துடன் ,

" நா.. நா.. தப்பா.. நி..னை..ச்..சு..", என்று கோர்வை அற்ற வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருப்பதையும்.. முழுவதும்  அவள் முடிக்கும் வரையும் பொறுமை அற்றவனாக ,

" டிட் ஐ ஸே ஸோ..! ( Did i say so ! )  " என்று அவன் புருவம் உயர்த்த.. பிடித்திருந்தவளை  மேலும் இறுக்கியதில்.. தாமரைக்கோ.. வெளிப்படையாகவே உடல் வெடவெடக்க துவங்கிவிட்டது .

" ஏன் டீ.. அப்படி பண்ணின.. எப்படி டீ..?" என்று அவள் முன் குனிந்து ஆத்திரத்தை அடக்க முயன்றவனாய்.. வார்த்தைகளை வெளியிட.. அச்சிறு கோதையின் நெஞ்சமோ , வெடித்து சிதறியதாய்..

தன் மேல் தவறே இல்லாத போதும்.. அவனின் துடிப்பிற்கு , அவளும் ஒருவகையில் காரணமாக இருந்ததை.. இருப்பதை.. தெரிந்த நாளில் இருந்தே.. புழுவென துடிப்பவளுக்கு.. கண்முன் அவனின் வலியையும் சீற்றத்தையும் கண்ட பிறகோ.. தாங்கிக் கொள்ள முடியாதவளாய் ,

" தெரியாதுங்க.. ", என்று அவனின் மீதே விழுந்து சரணின் நெஞ்சை  நனைத்து இருந்தாள்..

" ம்ஹும்.. தெரியாது..", என்று தனக்குள்ளாக முனங்கி.. அலட்சியமாக இறுகியவனை.. மேலும் , அழுத்தமாக கட்டிக் கொண்டவள்..

" சத்தியமா.. எனக்கே தெரியாதுங்க.. தெரியாதுங்க.. ", என்று கதற.. அவனின் உடலில் விறைப்பு அதிகிரித்ததே தவிர.. அவளை அணைத்து.. அவளது சமாதனங்களை ஏற்கும் நிலையில் இல்லாதவளாக நின்றிருந்தான் .

எவ்வளவு நேரமோ , அவனிடம் மாற்றம் என்பதே வராமல் போக.. தலையை நிமிர்த்தியவள் , பளபளத்த விழிகளுடன்..

" எனக்கு எல்லாமே நீங்க தான..  நான் எப்படி உங்களை.. என்னை பற்றி தெரியாதா உங்களுக்கு.. என்னால உங்களை கஷ்டப்படுத்தி பார்க்க முடியுமா.. ப்ளீஸ்ங்க..", என்று அவனின் கன்னம் தாங்கி கெஞ்சிட.. மனம் இறங்க வேண்டியவனோ.. எஃகு இரும்பாய் நெகிழும் மனதையும் இறுக்கியவனாக நின்றிருக்க..

ஏக்கம் சுமந்த விழிகளால் பார்த்திருந்தவளோ..‌ " நான் பெரிய ஆளா வரணும்னு என்னைவிட நீங்க தான ஆசைப்பட்டீய.. அடுத்த வாரம் , ஷோ வரப் போகுது.. இன்னைக்கு நைட்டே அத்தை டெல்லிக்கு போகணும்னு சொல்றாங்க.. என்னோட முதல் ஷோ.. நீங்க.. நீங்க.. ஒரு விஷ் கூட பண்ண மாட்டீயளா.. ப்ளீஸ் மித்ரன் ஸார்..", என்று அவனிடம் சுயமரியாதையை இழந்துக் கொண்டிருப்பதையும் யோசிக்காதவளாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

எறும்பு ஊர கல்லும் தேயும் என்பார்கள்.. அதுபோல , தன் மனதை வெளியிட்டுக் கொண்டே இருந்தால் ஆவது..  கணவனின் மனது இறங்காதோ.. என்று நாளுக்கு நாள் கைவிடாது முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் . சரணின் இத்தகைய பிடிவாதத்தை ஒருநாளும் தாமரை அறிந்திருக்கவில்லை . ஒருவேளை , முன்னமே தெரிந்திருந்தால்.. கண்டிப்பாக , தான் கழுத்து நெறிபட்டு இறந்தாலும் பரவாயில்லை என்று அன்றே அனைத்து உண்மைகளையும் அவனிடமே போட்டு உடைத்து இறந்தாவது இருக்கலாம் என்று நித்தம் நித்தம் துடித்துக் கொண்டிருந்தாள் .

" பதில் சொல்ல மாட்டீயளா..", என்று கெஞ்சி சரணின் அலட்சியத்தையோ , ஆணவத்தையோ.. கொஞ்சமும் கண்டுக் கொள்ளாதவளாய்..  மன்றாடிக் கொண்டிருந்தவளுக்கு.. சரண் அனுபவித்த துயரங்கள் மட்டுமே சிந்தையில் ஆக்கிரமிப்பு செய்ததாய்.. உண்மையாகவே , சரணின் நிலையும் அவ்வாறே இருந்தது .

அதன் வெளிப்பாடாய் , " அவ தெரிஞ்சே பேசினா.. நீயும் தெரிஞ்சே அமைதியா இருந்திருக்க.. இல்லே.. பதில் சொல்லணுமா.. எதுக்கு டீ.. உனக்கு என் வேலைக்காரிதான் லாக்குன்னு காறித் துப்பினா.‌. அதுக்கா.. அதுதான் உண்மைன்னு நீ.. நீ.. என்னோட.. ப*** நிரூபிச்சிட்ட.. இல்லை..", என்று மான்சி சீண்டிவிட்டு இருந்த தன்மானத்தால்.. தன் உயிரானவள் என்பதையும் மறந்து அவள் இடத்தில் தன் கொதிப்பை இறக்கிக் கொண்டிருந்தான் ஆர். பீ. எஸ்.. .

அப்பட்டமான அதிர்ச்சியில் உறைந்து அவன் முகத்தில் மட்டுமாக நிலைத்து இருந்தவளிடம் ,

"கைய எடு..", என்றும் அவன் கோபமாக  உறுமி இருக்க...
பட்டென்று ,  அவன் கன்னத்தில் இருந்து வேகமாக தன் இரு கரங்களை எடுத்தவள் , பயத்தில் ஒர் அடியும் அவனை விட்டு விலகி பின்னே நகர்ந்ததுடன்.. நடுக்கத்துடனே ,

" நா.. ன்.. உங்க.. பா..ப்..பா.. இல்..லை..யா...", என்று திணறலாக கேட்கவும் , சரணிற்கே பாவமாகி போனது .

ஒரு விநாடி , உள்ளுக்குள் ஆடியே போனான் . ' நீ என் பாப்பா தான் டீ.. என் பாப்பாவே தான் டீ..', என்று இழுத்து அணைத்து அவனுள் புதைத்துக் கொள்ள துடிக்கும் கரங்களை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு , தன் இறுக்கத்தில் இருந்து இறங்க விரும்பாதவனாக ,

" ரொம்பவே , என்னை பார்த்து பயப்படுறவ தான்டீ.. நீ.. நம்பீட்டேன்..", என்று அவள் வினவியதற்கு பதில் கூறாது.. நடுங்குவதை சாடியவனாக கடித்து குதறி.. அவளிடத்தில் சாயும் மனதை இறுக்கிப் பிடித்தவனாக நிற்க..

தன் வாழ்வின் அச்சாரமே அவன் என்று நினைத்து வாழ்பவளுக்கு.. அவன் கொண்டிருக்கும் கோபத்தை ஏற்க மறுத்திருந்ததாலேயே ,

" என் மேல உள்ள கோபம் போகவே போகாதா..", என்று கேட்டு  அந்நிலையிலும் கெஞ்சிக் கொண்டிருப்பவளிடம் , தளரும் மனதினை அடக்க முடியாமல் அதேசமயம் அவளிடம் , இளக்கம் காண்பிக்க விரும்பாதவனாய்.. இனியும் , அவள் இங்கு இருந்தால்..  அவள் மீதான நேசம் வெட்கம் கெட்டு மீண்டும் வெளிப்பட்டுவிடும் என்பதால்.. அழுத்தமாக அவளது மணிக்கட்டை பிடித்து.. அறையின் வாயிலில் விட்டு கதவை அறைந்து சாற்ற பெரிதும் திகைத்துவிட்டாள் .

❇️❇️❇️❇️

மாலையை நெருங்கி கொண்டிருந்த வேளையில் , சந்தோஷின் நான்குச் சக்கர வாகனமோ.. மௌன்ட் ரோட்டில் மிதமான வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது .

அவன் அருகே , பதுமையென மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும் ஆராதனவிடமும்.. சாலையின் மீதும் என்று பார்வையை வைத்தவனாக ஓடிக் கொண்டே வர.. அதுவே , அரை மணி நேரம் கடந்தும் தொடரவும்.. புன்னகைத்தவாறே ,

" ஆரா.. எப்படி இருக்கு.. எங்கு ஊரு..", என்றான் சந்தோஷ் .

அவன் குரல் கேட்கவும் , அவன்பக்கமாக பார்வை திருப்பியவள் , அவனை போலவே சன்ன சிரிப்புடன்.. " நம்ம ஊர் ரொம்பவே அழகாக இருக்கு..", என்று விழிகள் மின்ன கூறினாள் .

" ஹா.. ஹா.. ஐயம் ஸாரி.. நம்ம ஊர்..", என்று உற்சாகமாக திருத்திக் கொண்டவன்.. " காலேஜ் பிடிச்சு இருக்கா.. ஓகே தான..", என்று தொண்ணூற்று ஒன்பது முறை கேட்ட பின்பும் நூறாவதாக கேட்டிட..

" காலையில் இருந்து எத்தனை தடவை கேட்பீங்க.. எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு ஸார்..", என்றாள் துள்ளலோடு..

" வெரி குட்..  எந்த ஹெல்ப் வேணும்னாலும் நீ தயங்காம.. நான் இன்ட்ரோ பண்ணினேன்ல.. அந்த சீனியர்ஸ்கிட்ட கேட்டுக்கோ.. அதே மாதிரி.. உன் டிப்பார்ட்மென்ட் ஹெச். ஓ.டி.‌ வசந்த கிட்டேயும் தயக்கமே இல்லாமல் எந்த ப்ராப்ளமா இருந்தாலும் சொல்லு..", என்று அவன் அடுக்கடுக்காக கூறிக் கொண்டே வரவும்.. அவளிடம் இருந்து சத்தம் வராமல் போக..

ஓரக்கண்ணால் அவளை கவனிக்க.. வேடிக்கை பார்த்தவளாக வந்தபொழுது இருந்த துள்ளலும் மகிழ்ச்சியும் மறைந்திருந்தது.. முகம் சுருங்கியவனாய் , வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தியவன் .

" ஆரா.. என்னாச்சு.. ஏன் டல்லாகிட்ட..", என்று வினவ..

" எனக்கு பயமா இருக்கு..", என்றாள் குழப்பத்துடன்..

" எதுக்கு பயம்..", என்று அவன் தொடர் கேள்வியில் இறங்கிட.. தன் மடியில் கோர்த்திருந்த விரல்களின் மீது பார்வையை பதித்தவளாக.. பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் .

" மச்சு.. ஆரா நிமிர்ந்து என்னை பாரு..", என்று குரலை உயர்த்தி அழுத்தமாக அழைத்த சந்தோஷும்.. அவளிடம் நெருங்கவோ , தோள் தட்டி அழைக்கவோ.. முனையவில்லை .

" ஆராதனா..", என்று மறுபடியும் அழுத்தி அழைத்ததுமே.. கலங்கிய கண்களுடன் ஏறிட்டு இருந்தாள் .

அவளே தொடரட்டும் என்று அமைதியாக பார்த்திருக்க.. "ப்ராப்ளம் எதுவும் வராதே..", என்றாள் .

" ப்ராப்ளம் பண்ற இடத்தில.. உன்னைவிடுவேனா..", என்று திருப்பி வார்த்தைகளை படிக்க.. ம்ஹும்.. என்பது போல் இடமும் வலமும் அவள் அசைக்க..

" அப்புறம் என்ன.. இங்க பாரு.. என்னை நீ நம்புறீயா..", என்று கண்களுடன் கலந்தவனாக கேட்கவும்..

" ம்..", என்ற முனங்களுடன் வேகமாக தலை அசைத்திருந்தாள்..

" உன் ரிச்சர்ட் மாமா அளவுக்கு நம்புறீயா..", என்று அழுத்தமாக மீண்டும் அவன் கேட்கவும் , முறைப்பை பரிசாக அவள் வழங்க..

"அப்போ.. தாராளமா நீ அவங்க எல்லோரையும் நம்பலாம்.. ப்ரியா , வாசுவை நீ நம்ம தாரா மேரேஜ்லேயே நேத்து பார்த்த தான.. என் ஃப்ரெண்ட் வசந்த என்னை விட நல்லவன். உனக்கு அன்ஈசியா.. உன் க்ளாஸ்ல ஃபீல் பண்ணினா.. உடனே அவன்கிட்ட எதையும் மறைக்காம சொல்லணும் ஓகேவா.. ", என்று அவன் இவ்வளவு பேசியதற்கு பல யோசனைகளுடனே தலை அசைக்க..

இப்பொழுது சந்தோஷும் தீவிர சிந்தனைக்கு ஆளானவனாய்  , "என்ன ஆரா இவ்வளவு தூரம் சொல்றேன்.. நீ தெளியாம இருக்க.. பேசாம டெல்லி யுனிவெர்ஸிட்டிக்கு வேணா ஓகே சொல்லீடவா.. ரிச்சர்ட்டே உன்னை பார்த்துக்குவான்.. ", என்று தாடையை தடவியவனாக கூறவும்..

" அய்யோ.. வேணாம்.. வேணாம் . நான் இங்கே படிக்கிறேன்.. மாமாட்ட சொல்லீடாதீங்க.. ப்ளீஸ்..", என்று கண்களை சுருக்கி அழகாய் கெஞ்சயவளை பார்த்து.. எழிலாய் சிரித்தவன் ,

" குட்.. வா.. பீச்சுக்கு போகலாம் இறங்கு..", என்று கூறி இறங்கி இருந்தான் ..

" ம்.. வெயிலால்ல இருக்கு..", என்று காரில் இருந்த படியே ஆரா சொல்ல..

" அது தெரியாது.. உன்னை போல அழகாவே இருக்கும் வா..", என்று கதவை திறந்து விட.. பளிச்சென்று , சிரிப்புடன் இறங்கியவள் அமைதியாக உடன் நடந்தாள் .

" தாமரை உங்களை யாருன்னு கேட்டா.. ", என்றாள் திடீரென்று..

" பெயர் சொல்லாம சொல்லி இருப்ப.. இப்பவாவது , என் பெயர் தெரியுமா..", என்று இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல் குறுஞ்சிரிப்பு உதிர்க்க..

" ஆங்.. காலேல மாமா கூப்பிடும் போது தெரிஞ்சுகிட்டேன்..", என்று அசடு வழியவும்.. வாய்விட்டு சிரித்திருந்தான் . அவனிடம் கவனமாக வந்தவளோ , மணலில் கவனம் இல்லாமல் கால் வைக்க.. நிலை தடுமாறிவிட்டாள் .

எவ்வித யோசனையும் இன்றி சந்தோஷ் , ஆராவின் கை பற்றி விழ விடாமல் செய்திருந்தான் . பிடித்த அவளது மணிக்கட்டை விடுவிக்காமலே , " ஆர் யூ ஓகே..", என்று பதற‌..

" ஆங்.. இந்த மாதிரி வந்தது இல்லேல.. அதான்..", என்று பதில் கூறியபோதும் முத்துமுத்தாக வியர்வையில் குளித்திருந்தவளை ஆழ்ந்து ஊடுறுவியவனாக ,

" நம்பிக்கை இல்லையா..", என்று வினவ..

" அச்சோ ஸார்.. உங்களை போய்.. ", என்று ஆராதனா பதறவும்..

" குட்.. ஆரா , செப்பல் இல்லாம.. இந்த இடத்தில நடக்க முடியாது.. ஹைய் ஹுல்ஸ் பேலன்ஸ் பண்ண முடியாது‌. தண்ணீகிட்ட போற வரைக்கும் , நம்பிக்கை இருந்தா.. என் கையை பிடிச்சுக்கோ..", என்று அவளுடன் பேசிக் கொண்டே.. அவன் பிடியில் இருந்தவளை  விடுவித்து.. மீண்டும் , அதே கையை அவள் முன் நீட்டிட..

தயக்கங்கள் , தடுமாற்றங்களுடன்.. பெருத்த கிலியும் உள்ளுக்குள் உண்டாகிய போதும் , சந்தோஷ் வார்த்தைகள்.. அவளை கட்டிப் போட்டிருக்க.. மெதுவாய் , செந்நிறம் பூண்டிருந்த அவன் உள்ளங்கையின் மீது தன் உள்ளங்கையை வைத்தவளாக , இதழ்களை வலுக்காட்டாயமாக பிரித்து.. சிரிப்பது போல் நின்றிருக்க.. ஆடவனின் நெஞ்சமோ , ஆராவின் நிலையை கண்டு நெகிழ்ந்திருந்தது என்றால்..

இவ்விருவரின் , கோலத்தை காண நேரிட்ட சசியின் நெஞ்சமோ வெடித்து சிதறியதாய் ..










Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...