வா.. வா... என் அன்பே...

By kanidev86

203K 5.3K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 93

987 41 20
By kanidev86

பகுதி - 93

நடிகை ஜாஸ்.. இருபது ஆண்டுகளாக சீனியர் முன்னணி நடிகையாக இன்றும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.. நாற்பது வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாதவளாக வலம் வருபவள் .

ஏனோ , இளம் நடிகர்களுடன் ஹீரோயினாக நடிப்பதாலோ என்னவோ.. சரணிடம் நெருக்கம் காண்பிக்க எவ்வித தயக்கங்களும் அவளுக்கு உண்டாகவில்லை . ஆனால் , சிறு பயம் இருந்தது மட்டும் முற்றிலும் உண்மையாக இருந்தது . அவனை நெருங்குவதோ.. ஏன் நேரில் சந்திப்பது என்பதோ அறிதான செயலாக தங்கள் வட்டாரங்களுக்குள் குறிப்பிடுவதாலேயே அதனை.. தன் பெயர்.. புகழால்..  உடைத்து எறிய வேண்டும் என்பதை சவாலாகவே நினைத்து இங்கு வந்திருந்தாள் .

ஜாஸ் ஒன்றை மறந்திருந்தாள் ‌. ஆர்.பீ. எஸ்ஸின் தொழில் சாதூர்யத்தை பற்றி.. தன் சொந்த விருப்புகளை என்றுமே தொழிலில் திணிக்க விரும்பாதவன் என்பதையும் அறியாதவளாய் இருந்தாள்.. அவ்வளவு எளிதாக எவரையும் பகைத்துக் கொள்ள நினைக்காதவன் என்றும்.. . அவனின் பகைமையும்.. அவனுடைய எதிரிகளால் வாய்விட்டு பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கும் என்பதும் .

சரணும் ஜாஸ் பற்றி நன்கு அறிவான் . ஆனால் ,  தன்னை காண இத்தனை துணிச்சலுடன் வருகை தந்திருப்பதற்கான காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கவே.. மௌனமாய், அவளை சந்திக்க சம்மதித்தான் . எல்லைகளை தாண்டுபவள் என்று நன்கு தெரிந்ததே.. அதனை , தன்னிடமும் காட்டுவாள் என்று நினைக்கவில்லை ‌. அதேசமயம் , அவனின் அழுத்தமான ஆளுமையும்.. அவளது எல்லையை அறிய முற்படவே அமைதி காக்க செய்திருந்தது .

தீண்டியும் தீண்டாமலும் பதித்த இதழ் ஒற்றல்.. சரணிடம் காட்டிய முன்னோட்டம் என்பதை அறியாதவன் இல்லை . அதேசமயத்தில் , தான் அனுமதி வழங்காமல் அவனது அறைக்குள் வைஷ்ணவாலேயே நுழைய முடியாது என்பதால்.. அலட்சியமாகவே , அவளை கவனித்தவனாக இருந்தான் . எதிர்பாராத நிகழ்வாய் , அவன் மனைவி தாமரை முறியடிப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை .

ஜாஸ்ஸின் மூளை சரணின் ஆளுமையால் கவர்ந்து இழுக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல்.. அவனுடைய ஏற்கும் மனநிலையும் அவளை அதிகமாக சூடேற்றிவிட்டு இருந்ததில்.. திடீரென்று , கேட்ட கதவின் திறப்பு சத்தத்தில் நிலைத் தடுமாறியவளாக.. அமர்ந்திருத்த சரணின் மீது.. முழுமையாக விழுந்து , அழுத்தமாக இதழுடன் தீண்டியவளாக அவன் மீதே சரிய.. நொடிக்குள் , அக்காட்சி முழுவுதும் தாமரைக்கு விருந்தாகி இருந்தது .

சரணின் நிலையில் மாற்றம் இல்லை.. விழுந்தவளையும் தன் மேனியில் இருந்து அவனாக தூக்கவில்லை.. அதேநேரத்தில் , அதிர்ந்து நின்று இருந்த மனைவியிடமும் எவ்வித வார்த்தைகளையும் வெளியிடவில்லை .  பதற்றத்தில் எழுந்த ஜாஸ் அந்நிலையிலும் வேண்டும் என்றே.. அவளது மேல் பாகங்கள் இரண்டும்.. அவனின் முகத்தை உரசியவாறே எழுந்தவள்..

" ஸா.. ஸா..ரி.. ஸாரி..", என்று மொழிந்து..  " கண்டிப்பா.. நீங்க வரணும்.. ", என்று மீண்டும் அவனை கன்னத்துடன் கன்னம் இழைந்தவளாக முத்தத்தை வெளிநாட்டு பாணியில் கொடுத்து.. " பாய்..", என்று கூறி வெளி ஏறி இருந்தாள் .

வாயில் சிலையென நின்றுக் கொண்டிருந்த தாமரையிடம் வலுக்கட்டாயமான புன்னகையை சிந்தியவாறு வெளியேறிவிட்டாள் . போகும் அவளது முதுகையே வெறித்தவளாக தாமரை நின்றிருக்க.. அவள் கண்களில் இருந்து மறையும் வரையும்.. தாமரை அசைந்து இருக்கவில்லை .

நிர்மலமான பார்வையால் சில நொடிகளே மனைவியை அளந்தவன்..  அவளை வா என்றும் அழைக்காமல்.. தன் கணினியில் , முகத்தை புதைத்துக் கொண்டான் .

" என்ன மேம்.. இங்கேயே நின்னுட்டீங்க..", என்று வெளியே அங்கு வந்த வைஷ்ணவ் வினவிய பிறகே , " ஆங்..", என்று கையில் வைத்திருந்த கூடையை அழுத்தமாக பிடித்தவளாக.. உள்ளே நுழைத்து.. கதவையும் சாற்றி.. சரணை பார்க்க.. அவள் நின்றுக் கொண்டு இருப்பதையும் பொருட்படுத்தாமல் , வேலையில் ஈடுபட்டு இருப்பதையும் காணவும் , அவன் அலட்சியத்தை ஏற்க முடியாதவளாக , உதடு கடித்து தன் உள்ளக் குமறுலை அவன் கண்டுவிடக் கூடாது என்கின்ற பிடிவாதத்துடன் ,

" சாப்.. சாப்பிட வா..ங்..க.. ", என்று மென்குரலில் அழைத்தவளின் குரல் அழுகையை மறைக்க முயன்றதால்.. நடுங்கிக் கொண்டே வெளி வர..

கீ போர்ட்டில் இசைந்து கொண்டிருந்தவனின் விரல்கள்..  நின்று பின் மீண்டும் இயக்கிக் கொண்டிருக்க.. தன் வேலை நிறைவுற்ற பிறகே விழிகளை உயர்த்தியவன் , ' இது என்ன புதுசா..', என்னும் கேள்வியுடன் அழுத்தமாக மூடி இருந்த இதழ்களை பிரிக்காது.. கண்களில் தொக்கி நிற்க..

' இவிய ரொம்பதேன்.. பண்றாக..', என்று அழுகையுடன் எரிச்சலையும் இணைத்தவளாக.. அறையினுள் அவனை நோக்கி அடி வைத்தவளாய் , கூம்பிய முகத்துடன் ,

" காலேலையும் நீங்க சாப்பிடாம வந்துட்டீகன்னு சாந்தி யக்கா.. கொடுத்துவிட்டாக.. விக்கி அண்ணே.. நீங்க இங்க இருக்கறதா சொன்னாப்புல.. அதேன்.. சாப்பிட வாங்க.. " என்று அவள் வந்ததற்கான காரணத்தை அடுக்கடுக்காய் சொல்லி முடித்தவளின் அழைப்பும்.. அவனை அசைத்து பார்த்தா என்றே தெரியவில்லை ..

பனிக்கட்டி போல் உறைந்திருந்த அவன் விழிகளில் இருந்தோ.. முகத்தில் இருந்தோ.. எதுவும் அவளால் கண்டுப் பிடிக்க முடியாமல் இருக்க.. அதிகமாக தனக்குள் நொந்தவளாய்..' ஏம் புள்ளை இவியல பத்தி நல்லா தெரிஞ்சிட்டே.. சாப்பாட்டு கூடையோட எதுக்கு இங்க தூக்கீட்டு வந்த.. அப்படியே புலி குகைக்குள்ள நிக்க வச்ச கணக்கா இருக்கு.. எப்படி அசையாம இருக்காக.. பாரு.. இது தேவையா உனக்கு.. எப்பவுமே , வேலில போற ஓணானை  வேடடிக்குள்ள விட்ட கதைதேன்.. நீ பண்றது.. " என்று மனதிற்குள் அவளே காறித் துப்பிக் கொண்டிருந்த போதும்.. அவனுக்காக என்று எடுத்து வந்து இருக்கும் உணவுகளை எங்கு வைப்பது என்று இடம் பார்ப்பதற்காக சுற்றும் முற்றும் விழிகளை சுழற்றியவளை.. சரண் நன்கு நாற்காலியில் சாய்ந்துக் கொண்டே சொடுக்கிட்டு அழைத்தவன்.. கண்களால் வலப்புறத்தை காண்பிக்க.. இதுவரை அவளிடம் ஒட்டிக் கொண்டிருந்த சுணக்கம் மறைந்து சினம் தலை தூக்கியது.. வெளிப்படையாகவே , அவனை  முறைத்தவள்.. அவன் காட்டிய உள் அறைக்குள் மேஜை மீது வேகமாக வைத்து.. தனித்து இருந்த காரணத்தால்.. மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே கோபத்தை வெளிப்படையாக கண்பித்து கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவளை இருந்த இடத்தில் இருந்தே நோட்டமிட்டவன் ஒற்றை புருவத்தை மேலேற்றி இறக்கி இருந்தான் .

சில மணித் துளிகளுக்குள்  நிதானத்திற்கு வந்துவிட்டதாக நினைத்து.. திரும்பி கணவனை ஏறிட.. மீண்டும் , கணினிக்குள் முகத்தை புதைத்து இருந்தான் ‌.
கீழ் உதட்டை கடித்தவளாக ,
' இத்தனை நாளாகியும் இவியல சமாளிக்க தெரியலையே..', என்று நொந்தவளாகவே..

" சாப்பாடு எடுத்து வைக்கவா..", என்றாள் ‌.

' ஸார்..',  என்ற அழைப்பு தொலைந்து இருந்ததை போலவே மித்ரன் என்ற அழைப்பும் மறைந்துவிட்டதையும் குறித்துக் கொண்டவன்.. மௌனம் சாதிக்க.. அச்சிறு கோதையால் தாளவே முடியவில்லை .

இதுவரை மௌனத்தால் அடித்துக் கொண்டிருந்தது போதாது என்று.. இன்று காலையே,  வார்த்தைகளலில் திராவகத்தை ஊற்றியதோடு.. இக்கணம் கண்ட காட்சியாலும் சுழற்றி இருக்க.. இதுவும் போதவில்லை போலும்.. ஆர். பீ. எஸ்ஸின் அவதாரத்தை முழுமையாக வெறுத்து.. வலியை ஏற்க முடியாமல் தடுமாறியவளுக்கோ.. ' நீ எக்கேடோ.. கெட்டு போ..', என்று விலக முடியாமல் இருக்கும் நினைப்பையும் சபித்தவளாக.. நொடிக்கு நொடி.. பஞ்சம் இல்லாமல் உற்பத்தி ஆகும் கண்ணீரையும் சுண்டி எரிந்து.. கோபம் தாளாதவளாய்.. கொண்டு வந்ததை கடை பரப்பும் சாக்கி திரும்பிக் கொண்டாள் .

ஏனோ ,  அவனது உதாசீனம்.. இதயத்தை அடி ஆழம்வரை தாக்கி இருக்க.. தாக்குப்பிடிக்க தெம்பற்றவளாகவே , கரங்கள் நடுங்க செயல்பட்டுக் கொண்டிருந்தாள் ‌.

" அப்போ , உங்க அக்கா கொடுக்கலேனா.. இங்க வந்து இருக்க மாட்ட..", என்று திடுமென அவன் குரல் ஒலிக்கவே திரும்பியவள் கண்டதோ.. சாய்ந்து நின்றிருந்த அவன் அலட்சிய தோரணையே..

சாந்தி அக்காவின் பெயரை இழுக்கவில்லை என்றால்.. இந்த அறைக்குள்ளே , நிற்கவே அனுமதி கிடைத்திருக்காது என்பதாலேயே பொய் கூறினாள் என்பதை இவனிடம் சொல்லவும் முடியாமல்.. முள்ளின் மீது நிற்பவள் போல் நின்றிருந்தாலும்.. சற்றுமுன் ஜாஸ் காட்டிய நெருக்கத்திற்கு அமைதி காத்த சரணின் செயலே தாமரையை குடைந்து கொண்டிருக்க.. அத்துடன் , சரணின் நக்கல் பேச்சும்.. அலட்சியப் போக்கும் அதீத எல்லையை கடக்கவும் , தாளாமல்.. வெடித்துவிட்டாள் ‌ .

வேக எட்டுகளுடன் அவனை நெருங்கியவள் , "இம்புட்டு நாளா .. அவியதேன் உங்களுக்கு எல்உலாஞ் செஞ்சாவளா..", என்று வெடிக்க..

ஒற்றை புருவம் வெகுவாகவே மேல் உயர்ந்து , " கேட்டதுக்கு பதில்..", என்றான் அழுத்தமாக..

" நானா கொண்டு வந்தேன்னு சொன்னா.. என்னைய உள்ளவிட்டு இருப்பீகளா..", என்று அவளும் அவனை போலவே கரங்களை கட்டிக் கொண்டு எதிராக நின்று நிதானமாய் கேள்வி எழுப்பினாள்..

" பொய்.. ", என்றதும்.. சட்டென்று , கலங்கியவள்.. " இல்லை.. நான்..", என்று அவள் தொடங்கவே.. அவன் கண்டுக் கொள்ளாமல் , கரத்தை கழுவி வந்தவன் மேஜை முன் அமர்ந்து கொள்ள.. அதன் பின் அவளால் வாய் திறக்க இயலுமா.. அமைதியாக , கணவனுக்கு உணவு  பரிமாற.. அவனும் , அமைதியாக உண்டுக் கொண்டிருந்தான் .

அவர்கள் இல்லத்தில் தடுப்புகள் அற்று நடுகூடத்தின் ஓரத்தில் இருக்கும் மேஜையில் அமர்ந்து உணவு உண்ணும் போதே சீண்டிக் கொண்டிருப்பவன்.. இந்த தனி அறையிலும் தனிமையான சந்தர்ப்பத்திலும் அமைதியாக அவள் முகத்தையும் காண மறுத்தவனாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதை தாமரையால் தாங்கிக் கொள்ள முடியாமல் போக..

" என்னோட பேசவே மாட்டியளா.. நான் பொய் சொல்லுவேனா..", என்றவளுக்கோ.. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை வாய் திறவாமல் இருக்க போராடினாலும்.. தோற்றவளாகவே, சரணிடம் தன் குமுறலை வெளிப்படுத்த.. அவளை ஏறிட்டவனோ ,  " குழம்பு எடு..", என்றான் .

கன்னங்களை அவன் முன்  நனைக்கவே கூடாது.. என்ற சபதம் எடுத்தது எல்லாம் காற்றில் பறந்திருக்க.. வழியும் விழிநீருடன் , அவன் கேட்டதை கொடுத்தவள் , 
" நான்.. இன்னைக்கு அத்தை.. டெல்லிக்கு கிளம்பனும்னு சொன்னாங்க.. நைட் ஃப்ளைட்.. போயிட்டு வரவா..", என்று மிகுந்த ஏக்கத்துடன் கூற..

சரணின் நெஞ்சம்.. அவளது கெஞ்சலில் சிதைந்துக் கொண்டு தான் இருந்தது . ஆனாலும் , அவள் மீது விஸ்வரூபகமாக எழுந்திருந்த கோபம்.. அடங்க மறுத்து இருக்க.. தன் பிடியில் இருந்து கீழ் இறங்காதவனாய் ஈகோ என்னும் செடிக்கு நீரூற்றி மரமாக வளர்த்து இருந்தால்.. '  என்னிடம் ஏன் சொல்கிறாய்..', என்பதை கூர்விழிகளால் உறுத்தவாறு வினவியவன்.. எழுந்து கை கழுவ சென்றிடவும்.. அவன் கண்களின் பாஷையை அழகாய் படித்தவளுக்கோ.. வேதனை மீறிய சினம் துளிர்த்து எழலவே.. வேகமாக அவைகளை ஒதுக்கி பைக்குள் திணித்து..

" வேற யாரை கிட்ட.. சொல்ல சொல்றீய..", என்று கொஞ்சம் குரலை உயர்த்தி கேட்டிருந்தாள்.. வியப்புடன் கூடிய நக்கல்.. அதிகமாக அவனிடத்தில் வழிந்தவனாக கணினியை நோக்கி நகர..

" பதில் சொல்லீட்டு போங்க..", என்று கரம் பிடித்து தடுக்கவும் . எப்பொழுதும் , சரணின் செயல்கள் கடுமை மிகுந்து இருப்பது போல் தோன்றினால் , தாமரையின் வெளிப்பாடு அழுத்தத்துடன் கூடிய தெளிவான பேச்சாக இருக்கும்.. ஆனால் , முதல்முறையாக அவள் காண்பிக்கும் கோப முகம்.. அவனிடத்தே , ரசனைக்கு பதிலாக எரிச்சலையே அதிகரிக்க செய்திருந்தது .

" கைய எடு..", என்று இடுங்கிய பார்வையுடன் உறுமவும்..

" ஏன்.. கட்டின பொண்டாட்டி.. தொட்டா பலவீனத்தை சீண்டினேன் சாடுவீக.. ஆனா , எவளையோ.. மடில வச்சுட்டு வேடிக்கை பார்ப்பீய.. அப்படி தான..", என்று ஜாஸ்ஸின் நெருக்கத்தை சுட்டிக் காண்பித்தவளாக கூடுதல் சத்தத்துடன் குரலை அதிகரித்தவளாக பேசவும்..

" வாய மூடு.. அதை கேட்க நீ யார்..", என்று உள்ளடங்கிய குரலில் கர்ஜித்திருக்க..

" நேத்து வரை.. ஏன் போன நொடி வரை நான் உங்களுக்கு யாருன்னு நீங்கதேன் எனக்கே சொல்லிக் கொடுத்ததா ஞாபகம்..", என்று அவளும் அவனுக்கு நிகராக சீறிட..

" ஓ.. அப்போ மேம் என்ன சொல்ல வரீங்க..", என்று கண்கள் சிவக்க.. மேலும் , அவளை நெருங்கிய தோற்றத்தில்.. அரை விநாடிக்குள் , தாமரையின் நா உலர்ந்து போனது .

Continue Reading

You'll Also Like

142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
52.6K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
7K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.