வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 92

866 36 17
By kanidev86

பகுதி - 92

சரணின் வேகத்திற்கு என்றுமே தடுமாறும் வைஷ்ணவ்.. இன்று , எதுவும் செய்ய முடியாதவனாக.. மூச்சு விடவும் திணறிக் கொண்டிருந்தான் .

வெகு நாட்களுக்கு பிறகான வருகை.. தினமும் அவன் அலைபேசியின் வாயிலாக திரைப்பட நிறுவனத்தின் நிகழ்வுகளை அறிந்து கட்டளைகளை பிறப்பித்தவனாக இருந்தாலும்.. மாதங்கள் கடந்து அலுவலகத்திற்குள் நுழைந்திருப்பவனின் அசுர வேகம் வைஷ்ணவையும்.. ப்ரொடக்ஷன் நிர்வாகிகளையும் முழி பிதுங்க செய்திருந்தது .

மதியம் போலவே , சிறு இடைவெளி வைஷ்ணவ்விற்கு கிடைத்திருக்க.. ' அப்பாடா..', என்று பொத்தென்று விழுந்தவனை முழுமையாக இரு நிமிடங்கள் அனுபவிக்க விடாமல் வந்து சேர்ந்திருந்தாள் பிரபல நடிகை ஜாஸ்..

குப்பென்று , மூக்கில் ஏறிய வாசனையில் விழி திறந்து பார்க்க.. நடிகை ஜாஸ் அவனிடம் வந்துக் கொண்டிருந்தாள் .

" வாங்க மேம்..", என்று அழைத்தவனிடம்..

" ஹேய் மேன்.. சரண் இங்கே இருக்காரா..", என்று ஆங்கிலத்தில் மிகவும் ஒயிலாக கேட்டதுடன்.. அவன் அனுமதி வழங்குவதற்கு முன்பாக அமர்ந்திருந்தாள் ‌ .

ஏற்கனவே காலை முதல் மண்டை காய்ந்து போயிருந்தவனுக்கு இவளது வருகை பெரும் பீதியை கிளப்பிவிட்டு இருந்தது .

" ஆத்தாடி.. இவ ஏன் இப்ப வந்திருக்கா.. ஸாரை வேற கேக்குறாளே..", என்று கண்களை உருட்டி அவள் வந்திருக்கும் தோரணையை ஆராய்வது போல் ஏறிட்டிருந்தான் ‌.

வெறித்த ரத்த சிவப்பு ஆடையோ , மறைக்க வேண்டிய அனைத்து இடங்களையும் தாராளமாக காட்டிக் கொண்டிருந்தது . இவளிடம் முன் அனுமதி பெற்றிருக்கிறாய் என்று கேட்டாலும் வில்லங்கம்.. அதே சமயம் அவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே அனுப்பினாலும் சரணிடம் இருந்து தலைக்கே உத்திரவாதம் இல்லாத போது எங்கே வேலையை பற்றி யோசிக்க முடியும். இவ்வாறு , திகைப்பின் பிடியில் சிக்கித் தவித்தது ஒரு சில நொடிகளே.. தன்னை தானே உடனடியாக மீட்டு எடுத்துக் கொண்டவன்..

" வாவ்.. என்ன மேம்.. அப்படியே அசரடிக்கிறீங்களே.. இப்ப , உங்களை ஸார் பார்த்தாரு.. அவ்வளவு தான்..", என்று அவளுக்கு மேலோன கொஞ்சல் மொழியில் வழிவது போல் கூறவும்.. சட்டென்று , எழுந்தவள்.. அவன் அருகே சென்று இரு கைகளையும் மேஜையின் மீது ஊன்றியவளாக.. பெண்ணின் பாகங்கள் இரண்டும் வைஷ்ணவ்வின் விழிகளில் விழும்படியாக நின்றவள்..

" அப்போ.. உடனே நான் அவரை பார்க்கணுமே.. போகவா..", என்று நெளிந்துக் கொண்டே.. மார்க்கமான குரலில் கொஞ்சுவது போல் பேசிட..

" அய்யோ.. நாற்றம் தாங்கலையே.. கண்டாறவி..", என்று உள்ளுக்குள் அருவருத்தவன்..

" இதோ.. உடனே.. உடனே ஏற்பாடு பண்றேன்.. நீங்க வெயிட் பண்ணுங்க மேம்..", என்று அலறியது வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டான் .

" ஸோ க்யூட்..", என்று அவள் நீண்ட் விரல்களால் அவனது கன்னம் வருடி.. மீண்டும் , அமர்ந்துக் கொள்ள.. ஈ.. என்று வலுக்கட்டாயமாக பற்களை காட்டி வெளியே ஓடியவன்.. அவனுக்கு கீழ் உதவி புரியும் கார்த்திக்கிடம் வல்லென்று விழுந்த பிறகு.. தலையை சொறிந்தவனாக சரண்மித்ரனின் அறையின் முன் நின்றிருந்தாலும் .. கதவை தட்டும் தைரியம் மட்டும் வந்திருக்கவில்லை .

" ஒன் ஹார்.. எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது..", என்ற கட்டளையுடனே .. அவனுக்கு தற்காலிக விடுதலை அளித்திருந்தான் . ' இந்த ஜில ஜில்லிடம் இதை பற்றி எல்லாம் பேச முடியாது.. பேசினாலும் பலன் இருக்காது..', என்று புலம்பியவனாக.. அவளாக இழுத்து வைத்தால் கூடதலான தலைவலி.. என்பதால் மட்டுமே.. சரண் தேடி வந்துவிட்டான் .

" ஆண்டவா.. இந்த வேலையவிட்டு முதல்ல ஓடணும்..", என்று எப்பொழுதும் போல் ஜபிக்கும் வசனத்தை ஜபித்தவனாக.. கதவிற்கு வலிக் கொடுக்குமோ.. என்னும் ரீதியில் தட்ட.. உள்ள அறையில் இருந்து எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை .

சரணோ , தன் கழுத்துச் சட்டையில் இருக்கும் டையை லேசாக தளர்த்தியவன்.. தன் சட்டையின் கைகளையும் மேமேற்றி.. சாய்வாய் சரிந்திருந்தவனுக்கோ.. காலையில் பார்த்த தாமரையின் அதிர்ந்த கண்ணீர் முகமே தோன்றி அலைகழித்துக் கொண்டிருந்தது .

" ஏன் டீ இப்படி செய்தாய்..", என்று கோடிமுறை இத்தனை மாதங்களில் தனக்குள்ளாக கேட்டவன்.. ஒருமுறையும் , அவளிடம் அக்கேள்வியை கேளாமல் தவிர்த்து வந்திருந்தான் .

அனைவரின் முன்னிலையில் , தாமரை பற்றிய ஆரவ்வின் அறிமுகமும்.. அவளிடம் காட்டிய நெருக்கத்தில் இந்த தோற்றமும்.. பல வருடப் பழக்கத்தை பறைசாற்றியதை ஏற்க முடியாமல்.. எப்பொழுதும் போல் இன்றும் தடுமாறிக் கொண்டிருந்தான் .

தன் ஒற்றை கையால் முகத்தை மூடி இருந்தவனின் நடு விரலோ , நெற்றிப்பொட்டில் மேலும் கீழுமாய் அழுத்தமாக நீவி.. நினைவுகளை தட்டிக் கொண்டிருக்க.. ம்ஹூம்.. ஒருமுறை.. ஒருமுறை கூட.. தாமரையை மான்சியுடன் சந்தித்ததாக நினைவு இல்லை .
'அது எப்படி.. அது எப்படி.. நான் அவளை பார்க்காம இருந்திருப்பேன்..', என்று அவனின் சிந்தனையின் போக்கையும் சரண் உணராமல்.. ஞாபகங்கள் மீட்டிக் கொண்டிருந்தான் .

" அக்கா... ஆ..", என்று ஒரே ஒரே தடவை.. ஒரு சிறுபெண்ணின் அலறலை , அவள் வீட்டில் கேட்டதாக ஞாபகம்.. அன்று , எப்பொழுதும் போல்.. மான்சி வீடு தேடி சென்றிருக்க.. கதவின் மணியை அழுத்தியவன்.. தன் அலைபேசியில் விட்ட விளையாட்டை தொடர்ந்திருந்தில் சரண் கதவு திறந்ததையும் கவனியாமல் அதில் மூழ்கி இருக்கவே .. " அக்கா... ஆ..", என்ற அழைப்பு அவனை மீட்டு எடுத்திருக்க‌.. நிமிர்ந்தவன் பார்த்ததோ.. சட்டை பாவடையுடன் படிகளில் முதுகாட்டி ஓடிக் கொண்டிருந்த.. சிறு பெண்ணை மட்டுமே.. தயாராகி கீழ் இறங்கி வந்த மான்சியை பார்த்ததும்.. உலகத்தையே மறந்தவனாக.. அவளுடன் வெளியேறிவிட்டான் .

' அப்போ , அது தாமரையா.. ', என்று தனக்குள்ளாக கேட்டுக் கொண்டவன்.. மீண்டும் , யோசனையில் மூழ்கினால் மான்சியை தவிர.. வேற எதுவும் அவன் நினைவிற்கு வரவில்லை என்பதே நிஜம்.. அவளுடன் சுற்றித்திரிந்த காலத்தில்.. அவன் உலகம் முழுவதும் மான்சியை மட்டுமே கண்மூடித்தனமாக சுற்றி வந்ததை நினைக்க வெட்கமாகவும்.. தன் மீதே அதிகமான சினம் பிறந்ததாகவும் இருக்க.. சரணின் தாடை வெகுவாக இறுகிக் கிடந்தது.

" அது.. அந்த ஒரு விஷயந்தான்.. உன்னை அவ அவ்வளவு சுலபமாக ஏமாத்தி இருந்திருக்கா..", என்று அப்படியே அத்தனை ஆத்திரமும் தாமரையின் பக்கமாக சாய்வதையும் அவனால் தவிர்க்க முடியவில்லை ‌. இமைகள் அழுத்தமாக மூடி இருந்தபோதும் , கருவிழிகள் இரண்டும் அதிவேகமாக , இடமும் வலமுமாய் சுழன்று கொண்டே இருந்ததிலேயே.. மற்றொரு முக்கியமான நினைவும் எழுந்து அவனை பெரும் போராட்டத்திற்குள் தள்ளிய சாட்சியாக காட்சியளித்திருந்தது .

" அப்படீன்னா..", என்ற சரணின் மூளையின் அலறலே அவன் உடல் முழுவதும் விரவி இருந்ததில் சுற்றமும் மறந்தே போனான் .

அவ்வளவு அலட்சியமாகவும் திமிராகவும்.. மார்ட்டன் உடையில் சில வருடங்களுக்கு முன் அவர்கள் இல்லத்தின் மூத்த தலைவரான பால கிருஷ்ணன் மற்றும் அன்னபூரணியின் விழா நாளில் நடந்துக் கொண்ட மான்சி.. மீண்டும் , பட்டும் பொட்டுமாக.. எழில் ஓவியமாக திரும்பி வந்த பொழுது.. சரணின் கண்கள் விரிந்து காதலுடனே வலம் வந்துக் கொண்டிருந்தது .

விழா நிறைவுற்று , விழாவிற்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சென்றிருக்க.. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்த வேளையில்.. காலை முதல் தன்னை அடக்கியவனாக திரிந்தவன்.. ஆசையாக , மான்சியின் அருகில் அமர்ந்து.. தன்னை வியப்பிற்குள் தள்ளியவளின் மீது கொள்ளை கொள்ளையாக ஏற்பட்ட நேசத்துடன் , விழிகள் மின்னல் மின்ன..

" ஓய்.. ஷுட்டிங்ன்னு ஓடின.. இப்போ , என்ன அப்படியே ஆள அசர அடிக்கிற மாதிரி வந்து இறங்கி இருக்க.. என்னை சுத்தல்ல விடலேனா உனக்கு தூக்கமே வராதா.. ", என்று அவள் காதிற்குள் கிசுகிசுப்பது போல்.. உதடுகள் உரச உல்லாசமாக மனைவியின் வருகையை பற்றி விசாரிக்க..

அவளோ , கண்களால் சிரித்து.. அந்நிலையிலேயே , அவன் முகம் பார்த்தவள்.. " நிஜமாலுமே நான் அழகா இருக்கேனா..", என்றவளின் இதழ்கள்.. அவனுடைய செவ்விதழை உரசியவாறே கவிப் படிப்பது போல்.. மைவிழிகள் அகல விரித்தவளாய் கேட்டிட.. பட்டென்று , முகத்தை நகர்த்தியவனின் பார்வை.. ஒருமுறை எங்கும் சுற்றி வலம் வந்ததுடன்.. " ம்ச்சு.. மான்..", என்று பெருமூச்சுடன் சிறு கண்டிபை கலந்தவனாக அழைக்கவும்..

" என்ன.. எதுக்கு இப்போ.. இந்த முழி முழிக்கிற..", என்றாள் உஷ்ணமாக ‌ .

" எல்லோரும் இருக்கும் போது இப்படியா நடந்துக்குவாங்க..", என்றான் .

அவ்வளவு தான் , தன் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மலை இறங்கி இருந்தவள் நடுகூடம் என்பதையும் மறந்து.." நீ என் காதை எச்சில் பண்ணும் போது.. எல்லோரும் இருந்தது கண்ணுக்கு தெரியலையா.. இப்போ , நான் பேசினா தப்பா..", என்றாள் .

" நான் உனக்கு மட்டும் கேட்கணும்னு காதுல கேட்டேன்.. நீ.. இப்போ செய்த மாதிரியா.. நான்.. ம்ச்சு , மான்.. இது ஹால்டா.. அதுக்கு சொன்னேன்.. சரி சொல்லு.. எங்க போன.. அப்படியே அப்ரஸ் மாதிரி.. வந்திருக்க..", என்றான் ‌.

" ம்ச்சு.. ஷூட்டிங் கேன்சல்.. அதான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்.. அங்க அந்த குட்டி பண்ணின வேலை..", என்று உதடு சுழித்து வளைத்து கூறியவள்.. மேலும் தொடர்ந்தவளாய் ,

" ம்ச்சு நான் இங்க வரலேனா.. மீடியால என்னை பற்றி தேவையில்லாத பேச்சு வரும்னு சொன்னா.. எனக்கு என் ரெப்புட்டேஷன் ரொம்ப முக்கியம்.. அதான் திரும்பி வந்தேன்.. இப்படியேவா போக போறீங்கன்னு.. என் காஸ்ட்யூமையும் அவளே மாத்திவிட்டா.. ம்ச்சு.. ", என்று மிகுந்த சலிப்புடன் கூறியவள்.. எழுந்து நகர்ந்து இருக்க.. முதல் முறையாக சரணுக்கு அவள் மீது சினம் வந்தது .

அதனால் , அவனும் வேகமாக..
" மான்...", என்ற அவன் அழைப்பையும் கண்டுக் கொள்ளாது முன்னேற.. " மான்சி..", என்று சற்று குரல் உயர்த்தி அழுத்தம் திருத்தமாக அழைக்க.. என்ன என்பது போல் பார்வை பார்த்தவள்.. அலட்சியமாக மாடி ஏறிவிட்டாள் ‌ .

சரணின் அழைப்பு.. அங்கு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்ததால்.. மான்சியின் அலட்சியப்போக்கும் அனைவரின் கவனத்தில் விழுந்திருக்க.. நில்லாமல் அவள் சென்ற செயலால் கூனிகுறுகி நின்றவனுக்கு சுறுசுறுவென கோபம் அதிகரித்திருந்ததால்.. அவள் பின்னால் வேக எட்டுக்களுடன் மாடி ஏறியவன்..

" நான் உன்னை கூப்பிட்டேன்.. மான்சி..", என்று கத்த..

" ம்.. கேட்டுச்சு..", என்று அதே தெனாவட்டுடன் பதில் கூறி மிகுந்த அலட்சியத்துடனே.. புடவை தலைப்பின் பின்னை கழற்றியவளாக தன் வேலையில் கவனமாக இருக்க..

" உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.. மீடியா என்ன பேசும்னு யாரோ சொன்னதுக்காகவா திரும்பி வந்த.. அப்போ நீயா வரலை..", என்று பல் கடிக்க..

" நானா வர அளவுக்கு இது என்ன அவ்வளவு முக்கியமானதா.. புல். ஷிட்..", என்று அவளும் தொடர்ந்து சப்தமிட ..

" முக்கியம் இல்லேன்னு சொல்றியா..", என்று அவனும் பதிலுக்கு கத்த..

" காட்.. அப்படி என்ன இம்பார்ட்டன்ட்ன்னு நீ நினைக்கிற.. நான் சும்மா இருந்த டூ ஹார்ஸ்ல.. நான் ஸ்டோரி கேட்டு இருந்தாலும்.. அட்வேன்ஸா த்ரீ க்ரோர் கிடைச்சிருக்கும்.. அதையே நீயும் உருப்படியா செஞ்சிருந்தா.. ஃபைவ்.. இதுல , நீ என்ன பேசுற.. எது முக்கியம்.. இங்க நீ.. என் வீட்டுக்கு போனா.. அவ.. இன்னைக்கு பார்த்து இந்த அம்மா எங்க போனாங்கன்னு தெரியலை‌. அவங்க இருந்திருந்தாலாவது.. இங்க வராம ஷாப்பிங் போயிருப்பேன்.. ", என்றவள்.. கோபத்தில் கட்டி இருந்த புடவையை அவிழ்த்து.. சரணின் முகத்திலேயே எறிந்திருந்தாள் .

சரணின் தன்மானத்திற்கே விழுந்த பெரிய இடி.. அப்புடவையை , தன் கரங்களுக்குள் சுற்றியவன் மிகுந்த சிரமத்துடனேயே எழும் கோபத்தை உள்ளிழுத்துக் கொண்டே.. " பணம் எப்ப வேணாலும் சம்பாதிக்க முடியும்.. ஆனா , இந்த மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்.. குடும்பமா ஒன்னு கூடி இருக்கும் சந்தோஷம் எப்பவும் கிடைக்காது மான்.. அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற.. ரெண்டு படம் நல்லா போகனேனா.. எந்த ப்ராஜெக்ட்டுமே சக்ஸஸ் ஆகாதுன்னு அர்த்தமா.. ஏன் எப்பவும் அதையே பாயின்ட் பண்ற..", என்று அவளின் தோள் தொட..

" தொடாத.. ஷான்.. ", என்று உதறி தள்ளியவள்.. " உனக்கு.. உன்னால இதையும் ஒழுங்கா செய்ய முடியாது..", என்றாள் ரௌத்திரமாக ,

மான்சி கூற வருவதை புரிந்துக் கொள்ளவே சில பல நிமிடங்கள் பிடிக்க.. அதன் முழு அர்த்தம் முழுமையாக புரிந்துக் கொண்டதும்.. தான் கேட்ட விஷயம் சரியா தான என்று உடல் நடுங்க நின்றிருந்த ஆண் மகனோ..

" ஷா.. ஷா..ன்.. நீ.. நீ இப்போ.. என்ன.. எ.ன்ன.. சொ..ன்..ன..", என்று நடுக்கம் பிறந்தவனாய் கேட்டிட..

" இப்போ கட்டிப்பிடிச்சியே.. இதுக்கு கூட நீ லாயிக்கு கிடையாதுன்னு சொன்னேன்.. நிஜமாலுமே , நீ யாரு ஷா..ன்.. ", என்று அவள் முடிப்பதற்குள்ளாக.. இடியென அவன் கரம்.. மான்சியின் கன்னத்தில் இறங்கி இருந்தது .

அதில் நிலை தடுமாறி படுக்கையில் விழுந்தவளுக்கு , அவன் தன்னை அடித்தது நம்ப முடியாமல் போக.. முதலில் , தடுமாறியவள்.. அதன் பின் அகங்காரமாக எழுந்து , " நில்லு ஷான்.. நான் என்ன தப்பா சொல்லீட்டேன்.. உண்மைய தான சொன்னேன்.. எங்கே உண்மைய சொல்லு.. ஒரு கிஸ்ஸாவது ஒழுங்கா நீ கொடுத்திருக்கியா.. முத்தமே உனக்கு கொடுக்க தெரியாது இதுல மத்தது எல்லாம்.. உனக்கு வைஃபா நான் இருக்க போய்தான்.. நீ இன்னும் இந்த இன்டெஸ்ட்ரீல கௌரவமா இருக்க.. இல்லேனா.. தெரிஞ்சிருக்கும்.. என்னை அடுச்சுட்டேல.. உன்னை நான் சும்மா விட மாட்டேன்..", என்று தன் ஆத்திரம் குறையாதவளாய்.. ஆங்கிலத்தில் , மரியாதை குறைவான வார்த்தைகளால் சாடியவாறே கீழ் இறங்க.. அவளை கட்டுப்படுத்த போராடியவனை கிஞ்சித்தும் கண்டுக் கொள்ளவில்லை .

அவளது பேச்சிலேயே குடும்பத்தவர்கள் தடுமாறிக் கொண்டிருக்க.. மீண்டும் , அனைவரின் முன்னிலையிலும் அவளது பேச்சு எல்லையை தாண்டியதாக இருந்தது ... " நீ என்னை காதலிச்சியா.. இல்லை என் வீட்டு வேலைக்காரியையான்னு இப்பவே எனக்கு தெரிஞ்சாகணும்.. சொல்லு.. ஒருவேளை , அவளை நீ **** ", என்று மீண்டும்.. மீண்டும்.. அசிங்கமான பாதையில் அவளது பேச்சு பயணத்திருக்க.. மீண்டும் , அவன் கரம் அனைவரின் முன்னிலையிலும் உயர்ந்து அடியை இறக்கி இருக்க.. அவ்வளவே.. அதன் பின் மான்சி ஒரு நொடி கூட அங்கே நிற்கவில்லை .

மான்சி கண்டபடி பேசியது.. அவனுக்கு மட்டுமே புரியும்படியாக இருந்ததால்.. தான் அவளை கரம் நீட்டியதே குடும்பத்தில் உள்ளவர்களிடம் பிழையாகி போக.. அவன் நியாயமான கோபத்திற்கும்.. தன்மானத்திற்கும் இடம் இல்லாமல் போனதாய் .

பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு.. சமாதானம் செய்து மலை இறங்க வைத்ததை நினைத்தாலே அவனுள் கசப்பே முதலில் எழும்.. அவள் வீட்டு வாசலில் நாய் போல் காத்திருந்து.. அழைத்து வந்திருந்தான் . முழுமையாக , அவளுடன் ஒன்ற முடியாமல் தவித்த பொழுதெல்லாம் தாலாட்டாகவும்.. ஏமாளியின் அடையாளத்தையும் நினைப்பதற்காகவே அவள் வேலைக்காரி என்று குறுப்பிட்டிருந்த பெண்ணின் பாட்டை கேட்டுக் கொண்டே இருந்தான் .

ஆனால் , அந்த குரலுக்கு சொந்தக்காரி தாமரை .. என்று தெரிந்துக் கொண்ட உண்மை.. அந்த எண்ணமும் நிஜத்தையும் ஏற்க முடியாது.. உடல் முழுவதிலும் கசப்பு பரவி.. இப்பொழுதும் நெருப்பு என எரிய செய்திருக்க.. பட்டென்று , விழிகளை திறந்தவனின் கண்களோ.. நெருப்பு நிறம் பூண்டிருந்ததில்.. அவனை அழைக்க.. அனுமதி பெறாமலேயே உள்ளே நுழைந்த வைஷ்ணவ் ஒரு அடி வேகமாக பின்னே நகர்ந்தவனின் பற்கள் தானாக , வெடவெடக்க துவங்கி இருந்தது .

அழுத்தமாக , தன்னை சமன் செய்துக் கொண்டவன்.. தன்னிலையை வெளிக்காட்டாமல்.. " என்ன..", என்று கண்களில் வினா தொக்கி நிற்க..

" அ..து.. அதூ.. ஜாஸ் மே..ம்.. உங்களை பார்க்க வந்திருக்காங்க..", என்றவன்..

"அப்பாயின்மென்ட் இல்லை ஸார்.. பட்.. ", என்று இழுத்து நிறுத்ல..

" அனுப்பு..", என்று முடித்துவிட்டான் . வைஷ்ணவ்விற்கு வியப்பு தாளவில்லை.. அதேசமயம் , அவனிடம் எதுவும் பேசும் தைரியமும் வந்து இருக்கவில்லை . சற்றுமுன் , அவன் விழிகளில் கண்ட சிவப்பு பொய்யோ என்று நினைக்கும் அளவிற்கு இயல்பு நிலைக்கு மாறி இருந்தது .

ஜாஸ்.. தன் குதிக்கால் செருப்பு சப்தமிட , கேட்வாக் நடையுடன் அவன் அறைக்குள் நுழைந்தவளை.. நிதானமாக , ஏறிட்டவனின் தோரணையில்.. சட்டென்று , அவளுள் உடல் முழுவதும் பெரும் நெருப்பு பற்றிய துவங்கி இருந்தது .

செந்நிற வெல்வட் ஆடையில் வெரி டீப் நெக்.. வீ அமைப்பில் அப்படியே , வயிற்றுப் பகுதி வரை இறங்கி இருக்க.. இடையின் கீழாக மேல் தொடை வரை வெட்டி விட்டிருக்க.. டூ பீஸ் உடையிலும்.. இவ்வளவு வெளிப்படையாக.. அங்கத்தின் பாகங்களை காட்டி இருக்க முடியாது .. அந்த உடையில் ஃபேஷன் ஷோவில் காண்பிப்பது போல் வேறு அவள் இருக்க..

" ஹாய் சரண்.. ", என்று கொஞ்சமும் தயங்காமல்.. நாற்காலியில் அமர்ந்திருந்தவனை குனிந்து கட்டிக் கொண்டவள்.. அதே நிலையில் , அவன் இரு தோள்களிலும் கரம் பதித்தவாறே குனிந்துக் கொண்டே..

" எப்படி இருக்க.. சரண்..", என்று ஆங்கிலத்தில் வழிந்தவளை.. விலக்கவும் இல்லாமல்.. அணைக்கவும் இல்லாதவனாய்.. முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாது.. தலையசைத்தவன்.. அமைதியாக இருக்க..

" ம்ச்சு.. நான் எதுக்கு வந்திருக்கேன்னு கேட்க மாட்டியா..", என்று போதையாக கேட்டிட.. அவனிடத்தே எவ்வித மாற்றமும் இல்லை .

" சரண்.. யூ லுக் ப்ரீத் டேக்கிங் மேன்.. பார்ட்டிக்கு இன்வெய்ட் பண்ண வந்தேன்.. டூ நைட்.. தாஜ்.. கண்டிப்பா வரணும்..", என்று அவள் தன் நீண்ட விரல்களால் அவன் கன்னத்தில் கோடு வரைந்துக் கொண்டே குனிந்த நிலையில் அழைப்புவிடுத்தவள்.. " நீ ஃபீரியா.. ", என்று கன்னத்தில் தடவியவள் பார்வையாலும் மொய்த்தவளுக்கு.. இதுவரை அவன் விலகாமல் அமைதி காப்பது.. ஒரு வித தைரியத்தை அளித்ததில்.. மேலும் நெருங்கியவள்.. அவன் இதழ்களில் பட்டும்படாமலும்.. தன் இதழை தீண்டிய நேரம்‌‌.. பட்டென்று , அவனது அறைக் கதவை திறக்கப்பட்டதில்.. அனுமதி கேட்காமல் யார் இது என்று சுள்ளென்று எழுந்த கோபத்துடன் பார்வையை திருப்பிய சரண் கண்டதோ.. அதிர்ந்து விழி விரிய நின்றிருந்த தாமரையை..!





Continue Reading

You'll Also Like

25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.