வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.‌. வா.‌ என் அன்பே - 90

1.3K 42 15
By kanidev86

பகுதி - 90

ரிச்சர்ட் , தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவனாக , வாசலை நோக்கி நடந்துவிட்டான் .

சாந்தியும் அவரின் சஞ்சலத்தை மறைத்தவராக , " என்னாச்சு கண்ணு.. ஏன் ரொம்ப சோர்வா இருக்க.. ", என்று தாமரையிடம் வாஞ்சையாக வினவ..

" ஒன்னுமில்லை க்கா.. ", என்றாள் ‌.

" பொறவு ஏன் மாப்பிள்ளை வெல்லன ( விரைவாக ) கிளம்பினாக.. இவனும் குதிக்கிறான்.. ", என்று மென்குரலில் வருத்தமாக சொல்ல..

" ஆங்.. குதிக்கிற உங்க பையன கேள்வி கேளுங்க.. எதுக்காக ஆளாளுக்கு இவளை வறுத்து இடுக்குறீங்க..', என்று ஆரா சத்தமிட..

" ஆரா.. சும்மா இரு புள்ளை..", என்று அடக்கியவள்..

" உங் கூட ரெண்டு நாள் இருந்திட்டு போலாம்னு நினைச்சேன் க்கா.. அதுக்கு அவிய வரச் சொல்லீட்டாக.. அண்ணனும் கண்டுகிச்சு ( கண்டு கொண்டான்) .. அதேன்.. கபி இன்னும் எழுந்திரிக்கலையே.. ", என்று தாமரை பேசிக் கொண்டிருக்கும் பொழுதே.. ரிச்சர்ட் விடாமல் அடித்த ஹாரன் ஒலி அனைவரின் காதுகளை கிழிக்கவும்..

" சரி ஆத்தா.. நான் அவனை பார்த்துக்குறேன்.. இப்ப வெரசா ( விரைவாக ) நீ கிளம்பு.. நா ரெண்டு ஒரு நாள்ல.. முறையா உங்க வீட்டுகே வந்து அழைக்கேன்.. சரியா.. போ.. போ.. அவன் உள்ள வரதுக்கு முந்தி கிளம்பு.. கோவக்காரப் பைய கை நீட்டிப் புடுவான்.. ", என்றவராக வாயிலை நோக்கி நடக்க துவங்கி இருந்தார் .

அவரின் பின்னே தொடர்ந்தவள்..
" வந்துட்டேன் ண்ணே.. எல்லார்கிட்டயும் சொல்லிக்க வேணாமா.. அவியலுக்கு மேல இருக்க..", என்று மென்மையாக கடிந்தவளாகவே வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் .

" ரிச்சா.. பார்த்து கூட்டிட்டு போ.. அலைச்சல்ல சோந்து தெரியுறா..", என்று சாந்தியும் விடைக் கொடுக்க.. தங்கை அமர்ந்ததுமே , வேகமாக கிளம்பி இருந்தான் .

பயணத்தில் ஈடுபட்டிருந்தவனுக்கும் சரணின் செயலும் , சினமும் உள்ளுக்குள் நெருடலை ஏற்படுத்தி இருந்தது . தாமரை அவனை நெருங்க முயற்சிப்பதும்.. அதற்கு சரண் தவிர்ப்பது.. அப்பட்டமாக தெரிந்ததை நொடிக்குள் கண்டுக் கொண்டவனுக்கோ.. எத்தனை நாட்களாக என்ற கேள்வியில் வந்து நிற்க.. கல்யாண வேளையில் , கவனிக்க தவறிவிட்டாதாக மனம் அடித்துக் கூறியது .

" ரெண்டு பேருக்கும் அப்படி என்ன வருத்தமா இருக்கும்.. ", என்று நெற்றி மத்தியில் முடிச்சிட்டவனாக , யோசித்தவாறே தங்கையை கண்ணாடியின் வழியாக கவனிக்க..

அவளோ , வழியும் கண்ணீரை அவசர அவசரமாக துடைத்தவளாக இருந்தாள் . இனியும் , மௌனம் காக்க வேண்டாம் என்று நினைத்தவன்..

" குட்டி.. என்னாச்சு ஏன் சரண் கோபமா இருக்காரு..", என்று அழுத்தமாக கேட்டிட..

' ஒன்னுமில்லை ண்ணே..', என்று சொல்லவே மனம் பரபரத்தாலும் , தன் உள்ளக்குமுறலை எவரிடமாவது பகிர்ந்துக் கொண்டால் அழுத்தம் குறையாதோ என்ற பரிதவிப்பில் இருந்தவளுக்கு.. சகோதரனிடம் ஆறுதல் தேடச் செல்லி மனம் கூக்குரலிட்டது .

அசோக் பில்லரை நெருங்கியதும் , அங்கிருந்த கடைக்கு முன்பாக நிறுத்தியவன் , " இறங்கு.." என்று சொல்ல.. கண்களாலேயே , ஏன் என்று வினவிய தாமரையிடம்..

" என்ன குடிக்கிற.." என்றான் .

எவரிடமும் பகிர்ந்து இருக்காத போதும்.. அவள் உடல்நிலையைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியுமே.. அதனால் , " சாத்துக்குடி ஜுஸ் சொல்லு ண்ணே.." என்றவளாக.. கண்களை சுழற்றி.. காலியான இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் . உடல் சோர்வை.. காட்டிலும் மனச்சோர்வு பெரிதும் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது .

" என் பலவீனம் தெரிந்தே அடுச்சுட்டேல்ல..", என்று வலி நிறைந்த சரணின் குரலே இதயம் முழுவதிலும் எதிரொலிக்க.. கண்களில் உற்பத்தியாகும் கண்ணீரை நிறுத்தவே பெரும் போராட்டத்திற்குள் ஆளானாள் .

'என் அருகாமை அவரை வசம் இழக்கச் செய்கிறது..' என்று ஒருபுறம் மழைச்சாரலாய் மனதை குளிர்வித்த போதும்.. அதை வெறுத்து.. விரும்பாத தன்னவனின் நினைப்பு.. எரித்தணலை கொட்டுவது போல் வலி கொடுத்திருந்தது . தன் சிந்தனையில் முழக்கியவள் விழிகளை மூடி தன்னைத்தானே நிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க.. கரத்தில் ஏந்திய பழச்சாறுடன் நின்றிருந்த ரிச்சர்ட்டிற்கே , தனக்கு அடியில் பூமி பிளந்திருப்பது போலானது .

இதுநாள் வரை சரணின் செயல்கள் எதுவும் பாதித்தது போல் தாமரை நினைத்ததும் இல்லை.. அதற்காக வருந்தி.. தன்னைத்தானே வதைத்துக் கொண்டதும் இல்லை என்பதை அறியாதவன் இல்லையே .

பல மாதங்களுக்கு முன்பாக , ஏன் வருடத்திற்கே முன்பாக.. கிழிந்த நாறாக திரும்பிய போதும் அவனை பற்றி ஒரு வார்த்தை கூறவில்லையே..

பாரீசில் , சரணை பார்த்ததும்.. தன் கவலைகள் அனைத்தும் மறந்தவள் போல் , " அண்ணே.. மித்ரன் ஸார் ண்ணே..", என்று துள்ளியதை அவனால் மறக்க முடியுமா.. இல்லை‌‌.. இன்று வரை அவள் கூறியதை ஏற்றதும்.. அவள் விழிகளில் வழிந்த நம்பிக்கையை அழிக்க மனம் இல்லாதவனாக.. சரண் மித்ரனை காண அவனே , அந்த ஹோட்டல் வாயிலில் விட்டு வந்ததை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் தான் மறுக்க முடியுமா..?

தன் நினைவுகள் எங்கோ இழுத்துச் செல்வதை ஏற்க முடியாதவனாக , பெருமூச்சை வெளியேறறியவன்.. "தாமரை.. உடம்புக்கு என்ன பண்ணுது.. இந்தா முதல்ல இதை குடி..", என்று பழச்சாறை நீட்டிட..

மெதுவாக வாங்கியவள் , அதனை குடிப்பதில் கவனமானாள் . அவளையே , இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரிச்சர்ட்டை அறிந்திருந்த போதும் விழிகளை உயர்த்தாது.. தன் வேலையில் கவனமாக இருப்பவள் போல் செயல்ப்பட்டுக் கொண்டிருக்க.. அதிகமாகவே , உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தான் .

" போலாம் ண்ணே..", என்று தாமரையின் குரலில் மீண்டும் அவன் கலைக்க..

" வா.. எதுத்தாப்புல ( எதிரில் ) உள்ள பார்க்குல சின்ன நடைப்போட்டு போலாம்..", என்று சொன்னவன்.. அவள் மறுப்பதற்கும் அவகாசம் வழங்காதவனாக.. அவளது கரத்தை பற்றிக் கொண்டு சாலையை கடந்துவிட்டான் .

பூங்காவிற்குள் இருவரும் நுழைந்து , மௌனமாக நடக்க.. மரத்தின் கீழ் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு செல்ல சொன்னவன், அமைதியாக அமர்ந்து.. அவள் வாய் மலர்வதற்காக காத்திருக்கலானான் .

" என்ன ண்ணே.. என் முகத்தையே பார்த்திட்டு இருக்கீய..", என்று மென்று விழுங்கியவளாய் கேட்டிட..

" நீ எதாவது சொல்லுவியேன்னு தான் குட்டி..", என்றான் .

"எ.. எ..என்..ன சொல்ல.." என்று தடுமாற..

" உனக்கும் மச்சானுக்கும் என்ன வருத்தம்..', என்று நேரடியாக கேட்டவிடம்.. மறைக்க முடியாமல் போக.. அதேநேரத்தில் , இச்சமயம்.. தன் குறித்து அவன் சிந்திக்க வேண்டுமா என்ற எண்ணமும் எழாமல் இல்லை .

" தாமரை..", என்று அழுத்தமாக அழைத்த பிறகு மௌனம் சாதிக்க முடியாதவளாய்..

" என் முகம் பார்த்தே மூனு மாசமாகுது ண்ணே..", என்றாள் துடிக்கும் இதழ்களை கடித்தவளாக..

" என்ன.. என்ன புள்ளை சொல்ற..", என்று அப்பட்டமான அதிர்ச்சியை வெளியிட்டிருந்தான் .

" ஏன்..", என்று இருவருக்குமான பிரச்சினையை ஆராய முற்பட.. சரம் சரமாக கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்ததே தவிர.. அவளால் பதில் அளிக்க முடியவில்லை ‌.

ரிச்சர்ட்டின் நிலையோ , அவள் நிலையை காட்டிலும் மோசமானதாக இருந்தது . தன் திருமணக் கனவுகளில் மூழ்கி இருந்ததால் மட்டுமே சரணை கவனிக்க தவறியதாக அதிகம் தடுமாறியவன்.. ஸ்தம்பித்துவிட்டான் .

ரிச்சர்ட் அறிந்த சரண் மிகவும் பிடிவாதக்காரன் .. அவன் நினைப்பதை நடத்துவதற்கு எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன் ‌. அவனுடைய நற்குணங்கள் மாறாது இருந்த போதும்.. இயல்பில் பல மாற்றங்கள் கொண்டுவிட்டதாக விக்கி அடிக்கடி கூறுவது உண்டு.. அதற்கு சான்று , தாரா.. ரிச்சர்ட்டின் மனைவியாக இருப்பதும்.. தாமரை சரணின் மனைவியாக மாறி இருப்பதுமே சான்று .

விளம்பரத்தை பார்த்து அனைவருக்கும் வியப்பு எழுந்தது என்றால் , டெல்லியில் இருந்து கோபமாக வந்து இறங்கியவன் ரிச்சர்ட் ஒருவனே ‌. தாமரையும்.. அவனும் உணவு உட்கொண்ட வேளையை படமாக்கி இருந்ததால் மட்டுமே அவனது வருத்தம் ஆத்திரமாக மாறியிருந்தது. அவள் தன்னை அண்ணன் என்று அழைத்த பிறகும் தவறாக நடந்துவிட்டான் என்கின்ற கோபம் பொங்கி எழ செய்திருந்ததால் மட்டுமே பணத்தை பற்றிய யோசனையின்றி விமானத்தின் மூலமாக தமிழகத்திற்கு வந்து அடைந்தான் .

அன்றைய நாளில் , சரணை காண்பதற்கு முன்பாக , விக்கி தனியே அழைத்துச் சென்று மறைமுகமாக சமாதானம் கூறிய பின் மனம் மட்டுப்பட்டிருந்த போதும்.. கனன்றுக் கொண்டிருந்த வருத்தம் அடங்க மறுத்ததாய்..

சரணை நேருக்கு நேர் சந்தித்த பிறகு நண்பர்கள் மூவரும் தனித்து இருந்த நேரத்தில் , ரிச்சர்ட்டின் அமைதி சரணை புருவம் உயர்த்த செய்திருந்ததில் ,

" என்ன.. ரிச்சர்ட் ரொம்பவே அமைதியா இருக்க..", என்று பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மறைமுக கட்டளையை பிறப்பித்தவனாக தெனவாட்டாக வினவ..

விக்கிக்கோ , மூச்சுவிடவும் சிரமத்திற்கு ஆளானவனாய்.. "டேய்.. சரண்.. இப்போ ஏன்டா சும்மா இருக்குறவனை நோண்டுற..", என்று பதற்றத்துடன் சரணை கண்டிக்க..

தாடை இறுக அமர்ந்திருந்த ரிச்சர்ட்டிற்கும்.. தன் இயலாமையின் மீது வேகம் பிறந்ததில் கொந்தளித்துவிட்டான் ..

" ஏன் இப்படி பண்ணுனீங்க.. எல்லா.. எல்லாந் தெரிஞ்சே... அவளை.. நான் அவளுக்கு அண்ணன்னு தெரிஞ்சே.. நீ.. நீ..ங்க.. என் தங்கச்சிய பணத்துக்கு வந்தவன்னு.. ப..படு..", என்று அதற்கு மேல் வார்த்தைகளை தொண்டைக்குள் முழுங்கியவனாக பற்களை கடித்து.. சிவந்து கலங்கிய கண்களை அவன் முன் காட்ட விரும்பாமல் முகத்தை திருப்பியவனாய்‌.. வாய் வழியே , மூச்சுக்காற்றை வெளியேற்றிக் கொண்டு தன்னைத்தானே சமன் செய்ய முயன்றுக் கொண்டிருந்தவனை.. காணவே முடியாதவனாய் விக்கி தடுமாறிக் கொண்டிருந்தான் .

விக்கியிடம் பிறந்த தவிப்பு.. சரணுக்கு இல்லாததுடன்.. தன் நிலையில் மாற்றம் இல்லாதவனாகவே அமர்ந்து இருக்க , " அதுனால இப்ப என்ன கெட்டுப் போச்சு..", என்று தெனாவட்டாகவே கேள்வியும் எழுப்பி இருந்தான் .

" சரண்.. என்ன பேச்சு இது.. நீ எப்படிடா இப்படி ஆன.. ரொம்பவே மாறிட்ட டா.. ச்சை..", என்று அழுத்தமாக ரிச்சர்ட்டின் கரத்தை பற்றியவனாக , வெறுப்பாய் விக்கி வேகமாக சொல்ல..

" மாறாம போயிருந்தா.. நான் பாப்பாவை பார்த்தே இருக்க மாட்டேனே மச்சி..", என்று கண்கள் பனிக்க .. ஐஸ்கட்டியை எடுத்து மதுக்கோப்பைக்குள் போட்டவனாக.. சிரிக்கவும்.. இருவரின் முகங்களும் யோசனை தாங்கியதாய்..

" உன் தங்கச்சின்னு அன்னைக்கு எனக்கு தெரியாது.. தெரிஞ்சிருந்தாலும் , நான்.. சும்மா இருந்திருப்பேன்னான்னா ..", உதட்டை பிதுக்கி தெரியாது.. என்பது போல் தோள்களை குலுக்கி அலட்சியமாக பேச..

" அவ ஒத்த வார்த்தை சொல்லலை.. ஆனா , ரெண்டு நாள் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டா.. நெருப்பா காய்ச்சல் கொதிச்சது.. இதுக்கு என் சொல்லப் போறீங்க..", என்று காட்டமாக ரிச்சர்ட் தாள முடியாதவனாய் சீறியிருந்தான் .

சரணோ ," நீ அவ அண்ணனா என்னை கேள்வி கேட்டா.. என் பதில் உனக்கு சந்தோஷத்தை தராது மச்சி..", என்றவன் சிறு இடைவெளிக்கு பிறகு , மீண்டும் தொடர்ந்தவனாக ,

" ஒரு பொண்ணை பலவந்தப்படுத்தி சந்தோஷப்படுற அளவுக்கு.. நான் கேடு கெட்டவன் இல்லை.. அதேசமயம் , அன்னைக்கு பாப்பாவோட நிலையையும் யோசிக்கிற அளவுக்கு.. நான் நிதானத்தில இல்லை ‌. ஆனா ஒரு விஷயம் , எந்த நிமிஷம் அவளை பார்த்தேனோ.. அப்பவே எனக்கு சொந்தமாக்கிட்டேன்.. அந்த நொடிலேருந்து.. இப்ப வரை அவளுக்கு மட்டுந்தான் நான் சொந்தமானவனா இருக்கேன் ‌.. எனக்கு தெரியவே தெரியாத பொறாமைய கத்துக் கொடுத்ததே உன் தங்கச்சி தான்டா.. ", என்று மிருதுவாக கூறி சிரித்தவனின் களிப்பு.. எதிரில் இருந்தவர்களை வீழ்த்தியிருக்க.. அவர்களை கண்டுக் கொள்ளாதவனாய் ,

" அம்மு தவறின நேரத்தில.. நீ பேசுனதுக்காக எல்லாம் நான் அமைதியா விட்டுட்டு போகலை.. அவ எனக்கு யாருன்னு எனக்கே தெரிஞ்சுக்க வேண்டி இருந்தது . அப்பாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுதவளுக்கு.. உன் தோளில சாஞ்சு கதறினவளுக்கு.. என் பக்கத்தில கூட வர தோணலை.. நான் அவளுக்கு யாரு.. தெரிஞ்சுக்க தோணுச்சு.. உன் பொறுப்பில் விட்டு ஒதுங்கி இருந்தேன் . அதுவும் , அவ சாப்பிடாமலே இருக்கான்னு தெரிஞ்ச பின்னாடி.. என்னால வேற எதையும் யோசிக்க முடியலை.. அவளை தேடி வந்துட்டேன்.. அதுக்கப்புறம் எதையும் உனக்கு நான் சொல்ல தேவை இல்லேன்னு நினைக்கிறேன்..

மச்சி.. உன்னை மாதிரி கடந்து வந்த இருட்டையே நினைச்சு.. இப்ப எனக்கு கிடைச்சிருக்கும் வெளிச்சத்தை எட்டி உதைக்கிற முட்டாள் நான் இல்லை . பாப்பா இஸ் மை ஹெவன்.. அன்ட் மை ஏஞ்சில்.. அவளை எப்பவும் எதுக்காவும்.. யாருக்காவும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. புரிஞ்சதா.. ", என்று தீவிரமாக கூறியது.. இக்கணம் , நெற்றியில் அறைவது போல் நினைவிற்கு வந்திருக்க.. ரிச்சர்ட் , ஒருபுறம் அதீத யோசனையிலும்.. தாமரை அவளுள் மூழ்கியவளாகவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் .

யாருக்காகவும் சரண் தங்கையை விட மாட்டான் என்று அழுத்தமாக நம்பிக் கொண்டிருக்கும் ரிச்சர்ட்டிற்கும் தெரியவில்லை.. தாமரை என்றால் விட்டுக் கொடுக்காத சரண்.. மான்சி என்றவள் இணைந்திருந்தால் மொத்தமாக தலைகீழாக மாறிவிடும் என்று.. அதனை அறியாதவனாய் அவள் கவலையின் தீவிரம் புரியாதவனாய் , ரிச்சர்ட் இருந்தான் .



Continue Reading

You'll Also Like

165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்