வா.. வா... என் அன்பே...

נכתב על ידי kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... עוד

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 89

932 37 10
נכתב על ידי kanidev86

பகுதி - 89

அழுத்தமான முத்தத்தை நெற்றியில் பதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரிச்சர்ட்டின் மார்பில் தஞ்சம் புகுந்த தாரா நிம்மதியாக விழிமூடிட.. அப்படியே , உறங்கியும் போனாள் .

அரை மணி நேரத்தில் , ரிச்சர்ட் கீழ் இறங்கி வர.. அதற்குள்ளாக ஹோட்டலில் இருந்தும் விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.. மீண்டும் , கலகலப்பு துவங்கி இருந்தது . தன் சோகங்கள் அனைத்தையும் மாடி அறையிலேயே விட்டு வந்த தாமரையும் , சாந்தியுடன் இணைந்து சமையல் அறையில் இருக்க.. புது மாப்பிள்ளையின் வருகையை கவனித்தவரோ , வேகமாக வெளி வந்தவர்.. அவனை பார்வையால் ஆராய , சிறு வெட்கம் படர்ந்ததில் , அழுத்தமாக தன் தலை கோதியவன்..

" என்ன க்கா புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறீங்க..", என்று காபியை பெற்றுக் கொள்ளும் சாக்கில் விழிகளை சரித்தவனின் வெட்கம் , அவ்விருவரின் மலர்ச்சியை மறைமுகமாக அவருக்கு தெரிவிக்க..

" ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. உன்னை இப்படி பார்க்க மாட்டேன்னான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா..", என்று நெகிழ்ச்சியாக கூறியவர்..

" தாரா.. எங்க..", என்றார் .

" அவ தூங்குறா.. ", என்பதற்குள் மேலும் தடுமாற.. உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பை மறைத்தவராக..", சரி சரி.. எழுந்து வரும் போது வரட்டும்.. தொந்தரவு செய்ய வேண்டாம்..", என்று நகர்ந்திருந்தார்.

" தாமரை டீ கூட குடிக்காம என்ன வேலையே பார்த்திட்டு இருக்க.. போ.. போ ஹால்ல உட்கார்ந்து நிதானமா குடிச்சிட்டு வா..", என்று அடிக்காத குறையாக சமையல் அறையில் இருந்து அவளையும் விரட்ட.. சிறு ஒட்ட வைத்த புன்னகையுடன் வெளி வந்தவள் ரிச்சர்ட்டின் அருகே அமர்ந்த நேரம் ,
புயல் வேகத்தில் கீழ் இறங்கிக் கொண்டிருந்தான் சரண் மித்ரன்..

அவன் கோபத்தில் மிரண்டிருந்தவள் , அவன் வருவதை உணர்ந்து எழுந்து நிற்க..  ரிச்சர்ட்டிடமும் நின்று பேசாது , " டைம் ஆச்சு..", என்று பொதுவாக கூறியவனாய் வெளியேற..

தாமரையோ , சிறு மேஜை மீது வைத்து இருந்த கோப்பையை அவசரமாக எடுத்தவளாய்.. அவன் பின்னோடு ஓடி.. சரணின் வலக்கரத்தை பிடித்து  நிறுத்தியவளாய்.. தன் கையில் இருந்ததையும் நீட்டியவாறு கலங்கி தவிக்கும் விழிகளால் கெஞ்சிட.. வெந்து தணிந்தவனுக்கு மீண்டும் அமைதியின்றி போக.. அதே சமயத்தில் , அவளை அலட்சியம் செய்து கடக்க முடியாதவனாய் ,

" வேண்டாம்..", என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாய் பற்கள் நறநறவென கடித்தவன் பார்வையை அவள் தொடுகையில் பதிக்க..

உள்ளுக்குள் குறுகிய போதும் , கண்டுக் கொள்ளாதவளாக..,
" வெறும் வயித்தோட கிளம்புறீகளே.. இந்த காபியாவது குடிச்சிட்டு போங்க.. எம் மேல உள்ள கோபத்தை ஏன் உங்க வயித்துல காட்டுறீய.. அண்ணா அண்ணீ ரொம்பவே வருந்துவாக.. ப்ளீஸ்..", என்று கெஞ்சயவள் முன் தோற்று தான் போனான் .

அவளிடத்தில் வெடிக்கும் சினத்தையும் மீறி.. நேசமே மேலோங்கி நிற்க.. அருந்தாமல் போனால் , நாள் முழுவதும் அவள் உணவை எடுத்துக் கொள்ளவே மாட்டாள் .. என்று நன்கு தெரிந்து வைத்திருப்பதால் , முறைப்புடனே பெற்றுக் கொண்டான்.. அதுவரை , இருந்த இறுக்கம் தொலைந்தவளாக , இதழ் கடையின் ஓரத்தில்.. சிறு புன்னகை பூ பூக்க.. அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாக நின்றவள்..

" நான் ரெண்டு நாள்.. இங்கே இருந்திட்டு அங்க வரவா..", என்று தைரியத்தை வரவழைத்தவளாக வினவ.. இந்த நொடியிலும் ,' நம்ம வீட்டுக்கு வரவா..' என்று கூறாத அவளது பேச்சு.. சரணின் கோபத்திற்கு தூண்டுகோலாக அமைந்து இருந்ததில்..

" வந்தாலும் சரி.. வராமலேயே இங்கேயே இருந்தாலும் சரி.. அது உன் இஷ்டம்..", என்று நறநறவென கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தைகளை அரைத்து துப்பியவன்..  காலியான கோப்பையை அவளது கையில் திணித்தவனாக ,

முகம் வெளிறியவளாய் நின்று இருந்தவளையும் கண்டுக் கொள்ளாதவனாய்.. யாரையும் கண்டுக் கொள்ளாதவனாக விருட்டென்று , வெளியேறியவன்.. அதன் வேகம் குறையாமல் காரையும் கிளப்பி புறப்பட்டு விட..
தாமரையோ , அவன் கோபத்தில் மிரண்டு சமைந்துவிட்டாள் .

இருவருக்குமான மனக்கசப்பு தெரியாததால் , ரிச்சர்ட்டும் சரணின் செயலால் அதிகமாய் திகைத்திருந்தவன் , வேகமாக
சகோதரியின் அருகே சென்றவன்..

" சரண் ஏன் கோபமா போறாரு குட்டி..", என்று கூர்மையாக வினவ..
அரை விநாடி , என்ன சொல்வது என்று தடுமாறியவள் ,

" அது வேற ஒன்னுமில்லை ண்ணே.. இங்க தங்கீட்டு வரவான்னு கேட்டேன்.. அ..தே‌..ன்.." என்று கண்களை சந்திக்காதவளாய் கூறி.. அவனிடம் இருந்து விலகுவது போல் தப்பித்துக் கொள்ள பார்க்க..

" கிளம்பு.. நான் உன்னைய விட்டுட்டு வரேன்..", என்று ஆணையிட்டு இருந்தான்..

" அ..து.. இல்லை.. ண்ணே..", என்று தடைவிதிப்பது போல் பேசியதையும் மறுத்தவனாக ,

" உன்னைய கிளம்புன்னு.. சொன்னேன்..", என்றவன்.. அவள் கூற வருவதையும் காதில் வாங்காமல் மாடி ஏறி இருந்தான் .

அந்த நேரத்தில் , அங்கு எட்டிப் பார்த்த சாந்திக்கும் மனம் பிசைய.. கேட்பதற்கு பதில் சொல்லாமல் மழுப்பும் தாமரையின் செயலும் சேர்ந்திருப்பதால்.. ரிச்சர்ட்டிடம் கண்டிப்பையும் வெளிப்படுத்த முடியாதவராய் தடுமாற.. இரண்டே நிமிடத்தில் புறப்பட்டு வந்திருந்தான் .

" அண்ணே.. நான் சொல்றதை செத்த ( கொஞ்சம் ) கேளு ண்ணே.." என்று கெஞ்ச.. என்ன என்பது போலான பார்வையை வீசியவனாக நின்றிருந்தாலும் , உன் பேச்சை கேட்கும் நிலையில் நான் இல்லை என்பதை தெளிவாக , கூர் விழி வீச்சாலேயே உணர்த்தி இருக்க.. அதன் பின் அவளது நாவிற்கும் அசையும் தைரியம் வந்திருக்கவில்லை .
பெண்ணவளின் , தவிப்பை காண இயலாதவராய் சாந்தி முன் வந்து..

"இப்ப எதுக்கு பிள்ளைகிட்ட முகங் காட்டுற.. போனவரை தடுத்து சாப்பிடச் சொல்ல தெரியலை..", என்று அவனிடம் சாட..

" அக்கா.. நீ சும்மா இரு..", என்றவன்.. " சொல்லு என்ன..", என்றான் அதிகாரமாக..

" அ..து.. ஆரா.. எல்லோரும் இங்க இருக்காக.. அதேன்‌.. இங்க ரெண்டு நாளைக்கு.. தங்குறேன்னு சொன்னேன்.." என்று தயக்கமாக கூறவும்..

" தேவையில்லை . ஆரா.. இனிமேல் இங்க தான் படிக்க போற.. இவங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்ப போறாங்க.. இதுக்காக நீ இங்க இருக்க வேண்டியதே இல்லை.. வா.. நான் போய் உங்க வீட்டுல விட்டுட்டு வரேன்..", என்று முன்னே நகர்ந்துவிட..

" சேடிஸ்ட்.. சரியான சேடிஸ்ட்.. நீ போ குட்டி.. நான் உன்னை ஈவினிங் வந்து உங்க வீட்டில பார்க்கிறேன்.. பாரு லட்சணமா பொண்டாட்டியோட இருக்காம.. உனக்கு ட்ரைவர் வேலை பார்க்க கிளம்பீட்டான்..", என்று தன் குமுறலை தாமரையிடம் கூறியவளாக ஆராதனா வெளிப்படுத்தி இருந்தாலும்..

மென்குரலில் , " நான் தாமரையோட இருக்கணும்னு தான் வந்தேன்.. நாளைக்கே காலேஜ் போக ஆரம்பிச்சா.. இவளை பார்க்க கூட முடியாது..", என்று தாமரையின் முதுகோடு ஒட்டியவளாக  , திக்கித்திக்கி.. கூறினாலும் துணிந்து ரிச்சர்ட்டிடம் நேரடியாக பேசிவிட..

ஆராவின் செய்கை.. ரிச்சர்ட்டிற்கு , உதட்டோரத்தில் சிரிப்பை துளிர்க்க செய்த போதும் , சரணின் சினத்திற்கு முன்பாக.. எதுவும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை .

அதனால் , " என்ன பார்க்க முடியாம.. இனிமேல் நீ இங்க தான இருக்க போற.. அவ மட்டுமா இந்த வீட்டுல இருக்கா.. நான் , சாந்தி அக்கா.. தாரா.. நாங்க எல்லோரும் இருக்கும் போது எதுக்கு தாமரை.. அவளை பார்க்கணும்னு தோணுச்சுனா.. அவ வீட்டுல பார்த்தா போச்சு.. வெட்டி அரட்டை அடிக்காம சீக்கிரமா ரெடியாகி வா.. காலேஜ்க்கு போய் ஜாயினிங் ஃபார்மாலிட்டீஸ்... முடிக்கணும்.. நான் அதுக்குள்ள இவளை விட்டுட்டு வந்திறேன்", என்று ஆராவிடமும் கர்ஜனையாக கூறி முடித்திருந்தான் ..

" வ்வ..வ்வ.. " , என்று உதடு சுழித்து கொக்கரித்தவளாக நின்றிருந்தாள் .

" ச்சு.. ச்சு சும்மா இரு ஆரா.." , என்று  அவளை அடக்கிய தாமரை..

" அண்ணி வரட்டுமே ண்ணா.. அவங்க.. இங்க இருக்க எதுவும் சொல்லலை..", என்று தன் பிடியில் பாவமாக நிற்க  ,

" வேற எதுக்கு..",  பட்டென்று எகுறி குதித்த கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறியவளிடம் ,

" வா..", என்றதுடன் வெளியேறி விட்டான் . தாமரைக்குமே , இங்கு.. சரண் இவ்வாறு சொல்லிச் சென்ற பிறகு நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றாததால் மௌனமாய் வெளியேறி இருந்தாள் .

***

காற்றில் ஆடிய சிகையை கோதியவளாக , ஜன்னலின் அருகே நின்றிருந்த மான்சியின் முன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் ஆரவ் .

" மான்சி , நான் பேசுறது காதுல விழுகுதா இல்லையா..", என்று கோபத்தின் பிடி இறங்காதவனாய் , கத்திக் கொண்டிருக்க..

" கேட்குது ஆரவ்.. நீங்க மெதுவா பேசுனாலே நல்லா கேட்கும்.. இப்படி காது ஜவ்வு கிழிய கத்தும் போது கேட்காமல் இருக்குமா..? நல்லாவே கேட்குது..", என்று தன் மார்பில் இரு கரங்களையும் , கட்டியவளாக வெகு நிதானமாகவே சொல்லவும்.. அவனின் கோபமும் வேகமும் அதிகரித்ததாய் .

" இந்த வியாக்கியானத்திற்கு எதுனும் குறைச்சல் இல்லை.. ஆனா , நான் சொல்லறதை மட்டும் கேட்க முடியாது.. இல்லை..", என்று எகுற..

" ம்ச்சு.. நான் நைட்டே முடியாதுன்னு சொல்லீட்டேன்.. வாக்கிங் போற வரைக்கும் அமைதியாக தான இருந்தீங்க.. இப்போ , திடீர்னு என்ன..?" என்று அவளும் அவனுக்கு நிகராக புருவம் உயர்த்த..

" வேண்டாம் மான்சி.. நானும் இதையே தான் ஒரு வாரமா சொல்லீட்டு இருக்கேன்.. அப்படி என்ன.. ஒரு பிடிவாதம்.. உங்க அம்மா கேட்குற அந்த கருமத்தை கொடுத்திட வேண்டியது தான.. ஏன்.. எனக்கு அந்த அளவுக்கு வக்கில்லேன்னு நினைச்சுட்டியா..", என்று கண்கள் சிவக்க.. முறுக்கியவாறு நின்றிருந்தவனின் வார்த்தைகள்.. பலமாகவே மான்சியை தாக்கிட.. மலுக்கென்று கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிந்தோட.. அதனை அவனுக்கு காட்ட விரும்பாதவளாய் ஜன்னல் பக்கம்  வேடிக்கை பார்க்கும் சாக்கில் திரும்பி நின்றுக் கொண்டாள் .

அச்செய்கையும் , அவனின் கோபத்தை அதிகரிக்க.. " மான்சி.. ", என்று உறும..

" அது வேண்டாமே ஆரவ்.. நான்தான் எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்திட்டேனே.. இந்த ப்ராப்ர்டியையும் ஏன் கேட்குறாங்க..", என்றுமே முறையிட..

" உனக்கு தலைவலி தர எதுவும் நமக்கு வேண்டாம்.. உனக்கு இது மாதிரி நூறு மடங்கு சொத்து என்னால வாங்கிக் கொடுக்க முடியும்.. அந்த நம்பிக்கை இருந்தா.. நீ எதுவும் மறுப்பு பேசாம , இப்போ ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு கிளம்பு..", என்று இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்தவனாக கூறியவன்.. வெளியேற திரும்பியவனிடம்..

" ஸாரி ஆரவ்.. நான் எங்கேயும் வர மாட்டேன்.. யாருக்கும் அதை கொடுக்க மாட்டேன்..", என்று வீம்பாக கூறினாள்..

" இது தான் உன் முடிவா..", என்று கண்கள் இடுங்க பார்த்தவனை நிமிர்ந்து ஏறிடும் தைரியம் அற்றவளாக தலைக்கவிழ்ந்தவள்..

" அருகதையே இல்லாத தப்பு எல்லாம் பண்ணியிருக்கேன் ஆரவ்.. இந்த சொத்து மூலமா பரிகாரம் செய்ய நினைக்கிறேன்.. அவங்களுக்கு பெண்ணா பிறந்ததுக்கு நான் சம்பாதித்த அத்தனையும் கொடுத்திட்டேன்.. ஆனா , ஷான் வாங்கிக் கொடுத்ததை எதுக்காகவும் அவங்க கைக்கு போக விட மாட்டேன்..  யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு சேரும்.. ஆனா , இவங்களுக்கு நிச்சயமாக கிடையாது.. ", என்று அழுகையும் ஆத்திரமுமாக கூறியவளாய்.. அவனை கடந்து செல்ல முயல.. ஆரவ் அதே நிலையில் நின்றவனாய் , அவளது மணிக்கட்டை பிடித்து தடுத்து நிறுத்தியவன்..

" என்ன பரிகாரம்.. யாருக்கு..? ", என்று  அவள் மனநிலை முழுதாக தெரிந்தே இருந்தபோதும் கேட்க..

" இப்போ.. என்னை எதுவும் கேட்காதீங்க.. ப்ளீஸ்.. என்னால.. என்னால அவங்க பண்றதை தாங்கிக்க முடியலை..", என்று அவன் கரத்தின் மீதே முகம்  புதைத்து அழுதவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டவன்..

" நீ எது செய்யறதா இருந்தாலும்.. அவசரப்படாமல் இரு.. புரியுதா.. உன்னுடைய பரிகாரமாவே இருந்தாலும் என்னை கேட்காம.. என்கிட்ட சொல்லாம செய்யக் கூடாது.. புரியுதா.. ", என்றவனாக அணைத்துக் கொண்டான் .

ஆரவ்வின் அழுத்தமான பேச்சை , மான்சி தன் சிந்தனையிலேயே மூழ்கி இருந்ததில் கவனிக்க தவறியதால் தாமரையின் வாழ்க்கையையே  புரட்டிப் போடப்போவது அறியாதவளாய்.. ஏற்கனவே , ஊசல் ஆடிக் கொண்டிருக்கும் அவர்களது பந்தத்தை முழுமையாக அறுந்து விழ போவதற்கு மீண்டுமாக , அவளே காரணமாக போவதை அறியாதவள் ஆரவ்வின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடிக் கொண்டிருந்தாள் .

המשך קריאה

You'll Also Like

23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
9.9K 361 29
தேவதையின் மௌனமான அழுகை
425K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...