வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 81

1.4K 42 39
By kanidev86

பகுதி - 81

எப்பொழுதோ , பின் வாயில் வழியாக யுவன் அவ்விடத்தில் இருந்து மறைந்திருந்தான் .

அழகான ஆடம்பரமான திருமண விழா.. பல வெளிநாட்டவர்களின் வருகை , ரிச்சர்ட்டின் மீது பெரும் கவனத்தை ஈர்க்க வைத்திருந்ததாய்.. விருந்தினர்களின் வாழ்த்துக்களும் , ஆசீர்வாதங்களும்.. அவர்களோடு புகைப்படங்கள் என்று மகிழ்ச்சியாக நடந்துக் கொண்டிருக்க.. மற்றொரு , பக்கம்.. இசைக் கலைஞர்களின் பாடல்கள் நடனங்கள்.. இடையிடையே , குட்டீஸ்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என்று கொண்டாட்டமாகவே இருந்தது .

அதில் ப்ரியாவின் குழுவும் இணைந்து.. அனைவரின் கவனத்தையும் இழுக்கும் விதமாக பாடல் ஆடல்.. என்று அமர்க்களம் செய்துக் கொண்டிருந்ததுடன்.. தாமரையையும் , பாடச் சொல்லி இழுத்து விட.. அவளோ , தவிர்க்க பல முயற்சிகள் செய்த போதும் , தோல்வியில் முடிவடைந்ததால்..

" சரி.. நான் பாடணும்னா.. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடணும்..", என்று மணமக்களை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள பார்க்க..

" பாப்பா.. அது எப்படி முடியும்.. முகூர்த்த ட்ரஸ்ல இருக்காங்க.. பட்டுப் புடவை வேற‌.. அதுவும் , இப்ப போய்.. ", என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல..

" அப்போ , நான் பாட மாட்டேன்..", என்று பிடிவாதம் பிடித்தவளாய் தாமரை..

" யாருகிட்ட.. ப்ரீயோடவா.. இரு வரேன்..", என்று சிலிர்த்தவளாக.. ப்ரியா.. தாராவை நெருங்கியவள்.. காதில் கிசுகிசுக்க.. அவள் ரிச்சர்ட்டிடம் எதுவோ சொல்ல.. பக்கத்தில் இருந்த விக்கியும் உடன் சேர‌.. என்று எண்ணி பத்தே நிமிடத்திற்குள்.. மணமக்கள் நடனமாட போகிறார்கள்.. தாமரை பாடப் போகிறார்.. என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி அறித்தவள் , அவளது கரத்தில் மைக்கையும் திணிக்க.. இதனை தாமரை எதிர்ப்பார்க்கவே இல்லை .

தன் சகோதரனின் கண்களை சந்தித்தால் , அவனும் நடனத்திற்கு தயாரானது போல் நின்றிருக்க.. அதற்கு மேல் அவளும் தாமதிக்கவில்லை ‌‌ .

எப்பொழுதுமே ஏதாவது காரணம் கொண்டோ.. அல்ல சூழ்நிலையை கூறி அதற்கு ஏற்றார் போலவோ, தான் மான்சி பாட சொல்வாள்.. அதுவே நாளடைவில் தாமரைக்கும் இயல்பாகி போக.. பல சமயங்களில் தன் மனநிலைக்கு ஏற்பவும் , பாடிப் பழகியிருந்தவளுக்கு.. அதுவே , இன்றும் உதித்ததாய்..

ரிச்சர்ட் மற்றும் தாராவின் காதலை மனதில் எண்ணியதும்.. மூளையில் தோன்றிய பாடலில்.. அதரங்களோ அழகாய் , தன் போல் விரிந்திருந்தது.. எதன் துவக்கமாக இருந்தாலும் சரி‌‌.. முடிவாக இருந்த போதிலும் சரி தன்னவனின் நினைப்பும் பின்னி பிணைந்ததாய் ,

உயிர் உருவாத
உருகுலைக்காத என்னில்
வந்து சேர நீ யோசிக்காத

திசை அறியாத
பறவைய போல பறக்கவும்
ஆச உன்னோடு தூர

வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
ஆண் : நான் உன் கூட

உன் நினைவு
நெஞ்சுக்குழிவாரா இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

உன் நினைவு
நெஞ்சுக்குழிவாரா இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒருவித வழிதான்
சுகம சுகம
எனக்குல ஊருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே
காலம் தோரும்
என்கூட நீ மட்டும் போது
போதும்
நீ நாளும்

நான் முழுசா
உன்னை எனக்குல போட்டேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

நான் முழுசா
உன்னை எனக்குல போட்டேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் முழுவதும்
நீயும் தான் ஓரவா வரனும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பேரனும்

பெண்ணே பெண்ணே
வாழ்க நீலா
என் கூட நீ மட்டும் போது
போதும்
நீ நாளும்

என்று அனைவரின் கவனத்தையும் ஒரே நொடிக்குள் தன்வசம் தாமரை இழுத்திருந்தாள் என்றால் , அப்பாடலின் வரிகளும் இசைக்கும் ஏற்ப ஜோடிப்புறாக்களுக்கோ , தங்களை மறந்தவர்களாக நடனத்தில் மூழ்கியிருக்க துவங்கி இருந்தார்கள் .

தாராவின் நடனத் திறமையை பற்றி பெரும்பாலோருக்கு நன்கு தெரிந்த ஒன்று.. ஆனால் , ரிச்சர்ட்.. அவன் தோற்றமும் , மிடுக்கும்.. தன் இணையுடன் உலகத்தையே மறந்தவனாக , அவன் உதயாவின் விழிகளை தவிர, தன் கண்களை வேறெங்கும் கலக்காதவனாய் , அதன் வழியாகவே உயிரில் கலந்தது போல் வரிகளுக்கும் இசைக்கும் ஏற்ப.. மெல்லிய நடனத்தை வெளிப்படுத்த.. மிகச் கச்சிதமாய் பொருந்திய காட்சியில் அங்கிருப்பவர்களை ரசிக்கத் தூண்டி.. ஆரவாரம் கிளப்பியது..

மூடிய விழிகளை திறவாமல் , தன் உலகிற்குள் மூழ்கி இருந்தவளின் கரத்தில் இருந்த மைக்கை.. பின்னிருந்து பற்றிய சரணின் செயலினால்.. பட்டென்று , விழிகளைத் திறந்து யாரென காண.. நெருக்கத்திலும் விலகலை கடைப்பிடித்தவனாக நின்றிருந்த.. சரணின் அருகாமையினால்.. தன்னை மறந்து.. மூளை என்ற உறுப்பு வேலை நிறுத்தம் செய்திருந்ததால் தாமரை அப்படியே விழிவிரிய நின்றிருக்க.. சரணோ , வாங்கிய கருவியை இசைக்குழுவினரிடம் கொடுத்தவனாய் நகர்ந்துவிட்டான் .

அவன் நடத்தும் நாடகம் அவளை தவிர.. வேறு யாருக்குமே.. ஏன் அங்கு இருக்கும் ஒருவருக்கும்.. வேறுபாடாய் தெரியவில்லை. அவ்விருவரை சுற்றி நின்றிருந்தவர்களுகே , சரண் அவளை அழைப்பது போல் தெரிந்ததது என்றால் , தொலைவில் இருப்பவர்களுக்கு சொல்லவும் வேண்டுமோ.. அவன் காதலையும் நேசத்தையும் எப்படி அவளுக்கு மட்டுமே புரியும் விதமாக.. உணரும்படியாக நடந்துக் கொண்டானோ.. இப்பொழுது , அவன் காட்டும் சினமும் தாமரையால் மட்டுமே அறிந்துக் கொள்ள முடிந்ததாய் .

அவள் பாடுவதை அவன் விரும்பவில்லை.. உண்மை கசப்பை ஏற்க முடியாமல் , தன் யோசனையில் திகைத்து மூழ்கியிருந்தவளை இறுக்கமாக அணைத்து பாராட்டிய ப்ரியாவின் செயலால் வெளி வந்து.. சரணை தேட.. அவனோ , மண்டப வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தான் .
இருக்கும் சூழல் , அவன் பின்னே ஓட முடியாமல் கட்டிப் போட்டுவிட.. அமைதியாகவே , இருக்க வேண்டிய கட்டாயம் .

ஏற்கனவே சாந்தியின் கோபத்திற்கு ஆளானதால் , மண்டபத்தில் இருந்தும் உடனடியாக அவளால் வெளியேற முடியவில்லை . அதனால் , அங்கேயே தேங்கியவள் மணமக்களுடன் இருக்க ,

" ஏய்.. தாமரை.. நீதான் கூட இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும் புரிஞ்சதா.. உனக்கு உன் மாமனார் மாமியார் கிட்ட சொல்ல கஷ்டமா இருந்தா சொல்லு.. நான் பேசுறேன்..", என்று கோபமாகவே கூறியிருந்தார் .

மதியம் , மணமக்கள் ஒரு வாகனத்திலும்.. தாமரை , ஆரா.. சாந்தி.. கௌசி என்று நான்கு நபர்கள்.. அவள் வந்திருந்த வாகனத்தில்.. நண்பர்கள் மற்றவர்கள் ஒரு வண்டியிலும் பின் தொடர்ந்து வந்திருக்க.. மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருப்பதால்.. ஓயாது பேசிக் கொண்டே வந்த சாந்தியை மௌனமாய் வருடியவளாக பயணத்தில் ஈடுப்பட்டிருந்தாள் ‌தாமரை .

தாராவின் இல்லம் நோக்கி பயணிப்பதாக , தாமரை நினைத்திருக்க.. வண்டி நின்ற பிறகே , ஒரு புதிய கட்டிடத்தின் முன் கார் நின்றிருப்பதை கவனித்திருந்தாள் .

" அக்கா.. யாரு வீடு..", என்று கேட்க நினைத்தவளிடம்..

" ஏய் தாமரை.. சீக்கிரமா இறங்கி வா.. பொண்ணு மாப்பிள்ளை வரதுக்குள்ள ஆரத்தி எடுக்க வேண்டாமா..?" என்று சாந்தி சப்தமிட.. உடனே , இறங்கியவள் நின்றிருந்ததோ.. ஐந்து அடுக்கு புதிய கட்டிடத்தின் முன்பாக.. புதிய வீடு இருக்கும் இடமோ , மிகவும் பரிச்சியமாக தோன்ற சுற்றுப்புறத்தை கவனித்தவளுக்கோ.. பெரும் வியப்பு.

" இது..", என்று மீண்டும் அவசரமாக ஊன்றி கவனிக்க.. பிரம்மாண்டமான கட்டிடமாக மாறியிருந்தது அவர்கள் குடியிருந்த பழைய வாடகை வீடு . அத்துடன் , சாந்தி என்று தங்க எழுத்துக்களால் ஜொலித்திருக்க.. தாமரையால் பிரமிப்பில் இருந்து வெளி வரவே முடியவில்லை .

" என்ன.. உங்க குட்டி இப்படியே நிக்கிறதுன்னு முடிவில இருக்காங்களா..", என்று காதருகே மிகவும் கம்பீரமாக சரணின் குரல் கேட்கவும் வேகமாக , திரும்பி பார்த்தால்.. அவன் மட்டும் அல்லாது மேலும் இரு வாகனங்களில் , வந்து விட்டிருந்தார்கள் .

அவ்வாறு கூறியதும் ஆராவித்தில் போலும் , அவளோ.. நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தாள் ‌.

" எல்லோரும் உள்ள வாங்க..", என்று சாந்தி வரவேற்றாலும் .. ரிச்சர்ட் தாராவுடன் சரண் தாமரையையும் நிற்க கூற..

"இன்னைக்கு அவங்களுக்கு தான் ஸ்பெஷல் டே..", என்று சரண் சிரித்தவனாக.. சொல்லிய போதும் மனைவியின் அருகே உள்ளே நுழையாது நின்றுவிட்டான் . அவன் பிறரிடம் பேசு இயல்பான பேச்சைக் கேட்டு தாமரைக்கே , துக்கம் அடைத்ததில் , தொண்டையில் குண்டு ஒன்று மேலும் கீழுமாய் உருண்டோடிக் கொண்டிருந்தது .

" பரவால்ல தம்பி.. முதல் முறையா வரீங்க.. சேர்ந்தே நில்லுங்க..", என்று சாந்தி கூறியவர்.. ஆலம் சுற்றி வரவேற்க.. அனைவரும் உள்ளே நுழைந்தார்கள் .

" ஏய்.. எங்க உன் ஆள் வேலையா கிளம்பீட்டாங்கன்ன.. உனக்கு முன்னாடி இங்க இருக்காங்க..", என்று ஆரா கிசுகிசுக்க..

" நானே என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கேன்.. இவ வேற படுத்துறா..", என்று மனதிற்குள் புலம்பியவளை

" என்ன மசமசன்னு நிக்குற.. உள்ள வா.. வேலை கிடக்குல்ல..", என்று சாந்தி முறைத்தவராக தாமரையிடம் விரட்டிக் கொண்டிருந்தார் ..

அவளும் " ஆங்.. வந்துட்டேன் க்கா..", என்று சிட்டாக பறந்திருந்தாள் .

" நான் போய் பெண்ணு , புள்ளைக்கு பால், பழம் கொடுக்குறேன்.. அந்த.. அந்த ஹாட்பாக்ஸ்ல பிரியாணியும் கோழியும் இருக்கு.. ரெமிட்ட ஒரு தட்டுல கொடுத்து அனுப்பு.. அப்படியே , அந்த ஜாமுன்னையும் ஒரே கிண்ணத்துல வச்சு அனுப்பு.. சீக்கிரமா , ஒரு கேசரி செய்.. சாய்ந்தரமா ( சாய்ங்காலமா) வீட்டுல இருக்குறவுகளுக்கு எல்லாருக்கும் கொடுக்க.. சரியா.. ஏம் புள்ள , எல்லாஞ் சரியா செஞ்சிடு.. புரியுதா.. என்னையால சமையகட்டுக்கு வர முடியாது.. ஒத்தாசைக்கு ( உதவிக்கு) யாரையாவது அழைச்சுக்க.. புரியுதா.. பரபரன்னு பாரு..", என்று வெளியேறிவிட.. அவ்விடத்தில் , அடைமழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது .

சசியும் , ப்ரியாவும் சமையல் அறை வாயில் நின்றிருந்தவர்.. நெஞ்சில் , கை வைத்துக் கொண்டு வாய்ப்பிளந்தவாறு இருக்க..

" வழிய அடைச்சுப்புட்டு என்ன புள்ளைங்களா.. நகருங்க..", என்று இடித்தவறாக கண்டுக் கொள்ளாமல் அவரும் வெளியேறிட்டுர்..

" அம்மோ பாப்பா.. அவங்க நான் ஸ்டாப்பா சொன்னது எல்லாத்தையும் நீ ஒருத்தியா செய்ய போறியா.. ", என்று ப்ரியா முழிகள் இரண்டும் வெளி வந்தது போல் நின்றிருக்க..

" அம்மோ.. தாராக்கா பாவம் அண்ணி..", என்று வாய் பொத்தியவளாக சசி திகைத்தவளாய் நின்றிருக்க.. அழகாய் சிரித்தவள்.. சசியின் கையில் ,

" இந்தா இதை போய்.. அண்ணா அண்ணிகிட்ட கொடுங்க‌..", என்று பிரியாணியும் ஜாமூனும் ஒரு தட்டில் இடம் பிடித்திருந்தது.

கேசரி செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் அடுப்புத்திட்டில் எடுத்து வைத்தவள்.. ப்ரியாவிடம் ,

" நான் துணி மாத்தீட்டு வந்துறேன்.. இந்தாங்க , குடிக்க எல்லோருக்கும் கொண்டு போய் கொடுங்க..", என்று பேசியவாறே பழச்சாறு நிரம்பிய கோப்பைகளை தட்டில் நிறைத்து அவள் கரத்திலும் கொடுத்தவளாக , தனது அறை எதுவென கேட்டறிந்து நகர்ந்திருந்தாள் .

மூளையில் பல யோசனைகள்.. புதிய வீடு.. எப்பொழுது கட்டியது.. ஏன் தனக்கு யாரும் சொல்லவில்லை.. வீட்டிற்குள் நுழைந்ததுமே , தாமரையின் தாயும் தங்கையும் சிரித்த முகமாய் பெரிய சட்டத்திற்குள் வீற்றிருக்க.. இந்த அறைக்குள் நுழைந்ததும் மேலும் அழுகை அதிகரித்ததாய்.. முன்னதாக அவர்கள் பயன்படுத்திய மர பீரோல் மற்றும் மேஜை.. கட்டில் என்று இருந்த போதும் புதிப்பித்திருந்ததாய் .

எதையும் யோசிக்கவும் நேரம் இல்லை அதேநேரம் பீறிட்டு வரும் அழுகையையும் அடக்க வழி தெரியவில்லை . அறை எங்கே என சாந்தியை கேட்ட பொழுது.. " தம்பி பார்த்து பார்த்து செஞ்சது.. உனக்கு சப்ரைசா காட்டணும்னு சொன்னுச்சு.. உன்னோட தான் வரணும்னு , கிரகப்பிரவேசத்துக்கு கூட.. அவிய வரலை.. என்னைய பூஜைல உட்காரவச்சாவ.. அதுவும் உன்ற மாமனார் மாமியாரே.. ", என்று பெருமையாக விழிநீர் ததும்ப சிரிக்க..

" இந்த ஹவுஸ் ஓனர் வித்துட்டாவளா.. அவியட்டையா..", என்று பல குழப்பங்களை சுமந்தவளாய் வினவ‌..

" ஆமா.. ஏகப்பட்ட ரூவா கூட கொடுத்து வாங்கினாவா.. அதுக்கு.. சரி.. சரி.. அந்த கதை எல்லாம் பேச நேரமில்லை.. நீ போய்.. சோலிய பாரு போ..", என்று அவர் நகர்ந்துக் கொள்ள.. இவை சரணின் செயல் என்று மிகத் தெளிவாய் புரிந்துக் கொள்ள முடிந்தது . ஆனால் , ஏன்‌.. தனக்காகவா.. என்ற நினைப்பும் துடிக்க வைத்ததாய்..

" இன்னும் எனக்காக என்ன என்ன செஞ்சு இருக்காக.. நான் இல்லாம வரவே இல்லையாமே..", என்று பரிதவித்த பேதை நெஞ்சமோ.. அவனை நெருங்க வழித் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது .

களைந்திருந்த ஆடையுடன் நின்றிருந்தவள்.. கட்டிலை மென்மையாக தடவிட.. அவர்களது கூடலின் நினைவு எழுந்து.. மெல்லிய குறுகுறுப்புடன் நிலையில் நாணம் மெய் மறக்க செய்திருந்த போது.. இடையூறுக்கு என்றே கதவு தட்டப்படும் ஓசை..

" இதோ வரேன்..", என்று குரல் கொடுத்தவள்.. அதன் பின் பம்பரம் தான் .

மாலை விருந்து , மணமக்களின் அறையில் அலங்காரங்கள் என்று வேலை நெட்டித் தள்ள.. தாரா பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் .. சரண் குடும்பத்தவர் என்று இரவின் சடங்கில் ஒன்றாக.. மணமக்கள் வாழ்க்கை துவங்குவதற்கு முன்பு பெரியவர்கள் ஆசீர்வாதம் புரிந்து வழி அனுப்பி வைக்க..

சாந்தியின் அன்புக் கட்டளைக்கு அடிப்பணிந்தவனாக , சரணும் தாமரையும் அங்கேயே தங்கிவிட.. மற்றவர்கள் கிளம்பத் துவங்கியிருந்தார்கள் . வெளிநாட்டில் இருந்து வந்திருந்தவர்களும் ஹோட்டலுக்கே திரும்பி விட.. அங்கே , அந்த இரு ஜோடிகளுடன் சாந்தியோடு மேலும் இருவர் மட்டுமே தங்கிக் கொண்டார்கள் .

முன்னதாகவே ரிச்சர்ட்.. அவர்களுக்கான அறைக்குள் நுழைந்திருந்தான் ‌.
ஒரு வழியாக , ஒன்பது மணிக்கு மேல் தாராவையும் மெல்லிய அலங்காரத்தில் சாந்தியும் தாமரையும் உள்ளே அனுப்பி வைத்து , இருவருமாய் கீழ் இறங்கிக் வர..

" சரி கண்ணு.. நீ போய் தூங்கு.. மாப்பிள்ளை ரொம்ப நேரமாக தனியா இருக்காரு.. அவியல சரியாவே கவனிக்க முடியலை.. பால் எதும் குடிச்சாகளான்னு கேட்டு.. மறக்காம கொடு.. கபி என்னோட ரூம்ல படுத்து இருக்கான்.. நான் பார்த்துக்குறேன்.. நீயும் தூங்கு.. ", என்று தன் களைப்பையும் மறைத்தவராக சொல்ல..

" நீயும் எதுவுமே சொல்லலை..", என்று படிகளின் கம்பியை தடவியவளாக தாமரை ஆதங்கமாக சொல்லவும்..

" அல்லாத்ததையும் ( எல்லாவற்றையும்) காலேல பேசிக்கலாம்.. நீ அவியலை தொண தொணக்காம.. போய் படு.. என்ன..", என்று கூறியவர் அவரது அறைக்குள் முடங்கிக் கொண்டார் .

இதுவரை , ஒரு வார்த்தை.. அவளிடத்தில் அவன் பேசவே இல்லை.. திக் திக்.. என்று அதிர்ந்த இதயத்தை அடக்கி ஆள மூச்சை இறுக்கிப் பிடித்தவளாக கரத்தில் ஏந்திய பால் குவளையுடன் மாடி ஏறி , அறையின் முன்பாக அரும்பும் வியர்வையுடன் நின்றிருந்தாள் .

Continue Reading

You'll Also Like

13K 920 16
Vikram...namma kadhaioda hero...elaroda love uh success la mudiyaathu...apdi success agatha love dha namma vikram odathu...romba painful breakup ku a...
498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
67.2K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
80.8K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...