வா.. வா... என் அன்பே...

By kanidev86

239K 6.1K 2K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124
வா.. வா.. என் அன்பே - 125
வா.. வா.. என் அன்பே - 126
வா.. வா.. என் அன்பே - 127
வா.. வா.. என் அன்பே - 128
வா.. வா.. என் அன்பே - 129
வா.. வா.. என் அன்பே - 130
வா.. வா.. என் அன்பே - 131
வா.. வா.. என் அன்பே - 132
வா.. வா.. என் அன்பே - 133
வா.. வா.. என் அன்பே - 134
வா.. வா.. என் அன்பே - 135
வா.. வா.. என் அன்பே - 136
வா.. வா.. என் அன்பே - 137
வா.. வா.. என் அன்பே - 138
வா.. வா.. என் அன்பே - 139
வா.. வா.. என் அன்பே - 140
வா.. வா.. என் அன்பே - 141

வா.‌. வா.. என் அன்பே - 79

1.4K 41 17
By kanidev86

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..

சும்மா சும்மா ஸாரி கேட்க கூடாது பட் சாரி.. லேட் அப்டேட்டுக்கு.. மொபைல் இல்லை ஸோ போஸ்ட் பண்ண முடியலை‌.‌.. மோர் தேன் 4000 words.. ஸோ , என்னை திட்டாம படிங்க.. கமென்ட் பண்ணுங்க.. நான் மெஸேஜ் கூட இன்னும் பார்க்கவில்லை ப்பா.. அதுனால , உங்க எல்லாருக்கும் பதில் போடலை.. தவறாக நினைக்க வேண்டாம் . முடிந்த வரை.. லேட் பண்ணாம போஸ்ட் போட முயற்சிக்கிறேன் . எடிட் பண்ணவே இல்லை மிஸ்டேக்ஸ் இருந்தாலும் ஸாரி..😁😁😁😁

இப்படிக்கு

கனி தேவ் 💕💕💕💕

பகுதி - 79

விளம்பர அட்டைகளில் மட்டுமாக பார்த்திருக்கும் ஆடம்பரக் கார்களுள் ஒன்று.. ஒருமுறைக்கு இரு முறையாக , அப்புத்தகத்தில் இருக்கும் படத்தின் பக்கத்தை பார்வையை திருப்பினாலும் ,

" போடீ.. போக்கத்தவளே..", என்று தாயின் வசவுகளும் துண்டுச் சீட்டு போல் இணைந்துவிடும்..

கனவிற்காகவும் நினைக்க மறுக்கும்.. இத்தகையான வாகனங்களின் நினைப்பற்றவளாய் இருப்பவள் தாமரை.. ஆனால் , இன்று அவ்வகைகளில் ஒன்றாக இருக்கும் வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள்.. தன் மாமனரின் பிடிவாதத்தால்.. அவர் கொண்டிருக்கும் அளவிற்கு அதிகமான பாசத்தின் அடையாளமாய் .இதுநாள் வரை , அவர்கள் இல்லத்தில் இருக்கும் கார்களின் எண்ணிக்கையோ.. பெயர்களையோ.. ஏன் இருக்கும் இடத்தையும் அறிந்து வைத்திருந்தது இல்லை. அவ்வாறு இருப்பவளுக்கு எங்ஙனம் இதன் பெயரை அறிந்து வைத்திருக்க..

ஓட்டுனருடன் , படகு போல் சாலையை நிறைத்து இருக்கும் தங்க நிற , அதீத சொகுசான மகிழூந்தில் பயணத்தில் ஈடுபட்டிருந்தவளுக்கோ , ராம் காட்டும் அக்கறையிலும்.. சரணின் எண்ணப் போக்கிலும் மூழ்கியவளாக இருந்தாள் .

சரண் நிராகரிப்பாய் நடந்துக் கொள்ளும் நிஜத்தையும் ஏற்க மறுக்கும் மனதுடன் போராடியவளாய் இருந்தாள் என்றால் மிஙச் சரியாக இருக்கும் . தம் நிலையை யோசித்து முடிப்பதற்கு முன்பாகவே , சேரும் இடமும் வந்திருக்க.. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவளாக இறங்க முனைகையில் , கார் கதவை திறந்து பணிவுடன் நின்றிருந்தார் ஒருவர் .

' நன்றி.. ' என்று இரு கரம் கூப்பி நழுவித்தவளின் செயலில் பெரிதும் தடுமாறியவராய்.. பதில் அளித்து பணிவுடன் நகர்ந்திருந்தாலும் , பூலோக அதிசியத்தை கண்டவர் போல் சிலையாக.. அவள் சென்ற திசையையே வெறித்தவராக நின்றிருந்தார். திகைத்து கேமராக்களின் கண்கள் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற எண்ணம் எழுந்தவுடனேயே சுற்றிப் பார்க்க.. அப்படியும் தெரியவில்லை என்றதும் மீள இயலாது நின்றுவிட்டார் .

இது எதுவும் அறியாமல் சிறுப்பிள்ளையென , விரைந்து ரிச்சர்ட் இருக்கும் தளத்தை அடைந்தவள்.. அவன் அறையின் முன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு காத்திருக்க.. ரிச்சர்ட் கதவு திறந்தான் .

" அண்ணே..", என்று அழகாய் புன்னகைத்து நுழைந்தவளின் பார்வையோ , தீவிரமாக தேடி அலைய..

" வா குட்டி.. யாரை தேடுற..", என்றான் மென்னகையுடன் ..

" சாந்தி அக்கா எங்க.. எல்லோரும் வந்துட்டாங்களா.‌. எங்க யாரையும் காணோம்.. நீங்க குளிச்சிட்டீயன்னு சொன்னீய.. என்ன இப்படியே நிக்குறீய...", என்று அடுக்கிக் கொண்டே போக..

" ஒன்னொன்னா கேளுடா குட்டி.. யாரோட வந்த..", என்று அவளது தலையில் கை வைத்து ஆட்டியவனாக சொல்லி சிரித்தான்.

" தனியாதே ண்ணே.. அவிய பொறவு ( பிறகு ) வருவாக.. அவிய வரப்படி வரட்டும்னு முன்னக்க ( முன்பாகவே ) கிளம்பீட்டேன்.. சாந்தி யக்கா எங்கே..", என்று மீண்டுமாக விழிகளை சுழற்ற..

உள்பக்கமாக , கையை காட்டியவனாய் , மீண்டும் புன்னகை சிந்தியவனிடம்.. " நல்லா மாட்டுனேன்..", என்றவளாகவே சென்றாள் ‌ .

தங்கையின் முதுகையே வெறித்திருந்தவாறு இருந்தவனின் கண்களில் தீவிர யோசனை குடியேறி இருந்தது . அவள் வயதிற்குள் எவ்வளவோ கஷ்டங்கள் , சுமைகளை கடந்து வந்திருக்கிறாள் என்பது அவனும் நன்கு அறிவான் . ஒருபொழுதும் , அவள் மலர்ந்த முகத்தில் மாறுதல் தென்பட்டது இல்லை . ஆனால் , இன்று.. அவள் கண்களில் வழியும் வேதனையும்.. அதனை தன் முன் காட்டிக் கொள்ள விரும்பாது மறைக்கும் விதத்திலும் , அதிகமாக குழம்பி நின்றான் .

சரணின் வருகைக்கு தென்பட வேண்டிய மகிழ்ச்சி தொலைந்திருப்பது வேறு அதிகமாகவே யோசனைக்குள் உள்ளாக்க.. தன்னை மறந்தவனாகவே நின்றுவிட்டான் .

தாமரை கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைய.. மொத்தக் கூட்டமும் அந்த அறையில் குழுமி இருந்தது . மஞ்சள் பட்டு சரசரக்க.. அங்கு இருந்த அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார் சாந்தி .

" அடியேய்.. எழுந்திருங்க.. என்ன இன்னும் உறக்கம் வேண்டி இருக்கு..", என்று சப்தமிட்டவராக ,

" கோசலை.. இன்னுமா புள்ளை எல்லாத்தையும் எடுத்து வைக்குற.. அஞ்சு மணிக்கு எல்லாம் மேடைக்கு போயிருக்கணும்.. வேகமா, எடுத்து வை.. எங்க உம் மக.. என்னத்தா இன்னும் குளிக்கிறா.. அடியேய்.. உங் கழுத்தில யாரும் தாலி கட்ட போறது இல்லை.. சீக்கிரமா வா..", என்று அடைந்திருந்த கதவை முறைத்தவராக விரட்ட.

" ஹா..ஹா.. ஒருத்தரையும் விட்டு வைக்குறது இல்லேனு முடிவு பண்ணீட்டிகளா.." , என்று தாமரையின் குரல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது .

" கௌசி அக்கா.. ஆலீஸ்.. ", என்று இளகிய குரலில் தன் ஆனந்தம் அனைத்தையும் தேக்கியவளாய் அழைத்து.. " எல்லோரும் எப்ப வந்தீங்க..", என்றாள் தாமரை மகிழ்ச்சியுடன் ..

மிகப் பெரிய அறையாக இருந்தாலும் , வந்தவர்கள் அனைவரும் அந்த ஒற்றையிலேயே குழுமி இருப்பதாலோ என்னவோ.. நெருக்கடியாகவே தெரிந்ததது . ஐம்பதிற்கு மேல் இருக்கும் வயதை ஒத்தவர்களாக மூவர் இருக்க.. முப்பதுகளுக்கு மேல் சிலர்.. பத்து வயதை ஒத்த குழந்தைகளாக ஐந்து சிட்டுக்கள் நிரம்பி என்று இருந்தார்கள் .

ஜுலியட் என்னும் பெண்மணி தன் வெளிர் நிற பச்சை விழிகள் மின்ன , " தாமு..", என்று வரவேற்பாய் அழைக்கவும் , அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்தவளை வாஞ்சையாக தலைக் கோத.. அனைவரின் செல்லப்பிள்ளை அவள் என்னும் அடையாளமாய் , சூழ்ந்திருந்தார்கள் .

அனைவரிடமும் பாகுபாடின்றி செல்லம் கொஞ்சி.. நலம் விசாரித்து என்று வந்த வேலையை மறந்திருந்ததுடன்.. அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொறுப்புக்களையும் மறக்கடிக்கச் செய்திருந்தவளின் தலையில் நச்சென்று கொட்டு வைத்து சாந்தி முறைத்தவராய் நிற்க..

" ஸ்..ஸ்.. அக்கா.. ஏன் இப்ப அடிச்சீக..", என்று மல்லுக்கு நின்றவளை..

" மரியாதையா ஓடிப் போயிடு.. எல்லாம் கல்யாணத்துக்கு கிளம்பீட்டு இருக்காக.. வந்ததும் வராததுமா கெடித்துப்புட்டு இருக்கறதோட அல்லாம கொஞ்சல் வேற நடக்குது இங்க.. ஆங்..", என்று முழு கருவிழிகளையும் உருட்டியவராக நிற்கவும்..

" யக்கோவ்.. செத்த அந்த கண்ணை தட்டித்தான் விழிக்கறது.. பாருங்க.. நம்ம புள்ளைக பயப்படுது இல்ல..", என்று கண்ணடித்தவளாக சிரிக்க..

" அடியேய்.. ", என்று பிடிக்க வந்தவரிடம் இருந்து.. மற்றொரு மென்கரங்களுக்குள் சிக்கிக் கொண்டாள் .

" ஆரூ‌... கண்ணுல இருந்து கைய எடு புள்ள.. ", என்று கோபம் போல் கத்த..

" அது எப்படி.. இம்புட்டு செரியா என்னைய இணங் காங்குற..", என்று கொள்ளை அழகுடன் வெள்ளை சிரிப்பை உதிர்த்தவளாய் , தாமரையின் வயதை ஒத்த ஆராதனா நின்றிருந்தாள் .

பனியில் நனைந்த புத்தம் புது மலராக , பால் வண்ண ரோஜா நிறத்துடனும்.. கடல் நீல வண்ணத்தை தன் கருவிழிகளிலும் சுமந்தவளாய் , இயற்கையாக சிவந்திருந்த உதடுகள்.. என்று பின்னிருந்து அணைத்திருக்கும் ஆராதனா..

ஒரு இந்திய பெண்மணியின் கௌசிக்கும் பாரிஸை பிறப்பிடமாக கொண்ட ஃப்ளாரன்ஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவள்.. அதனால் , இருநாடுகளின் கலவையில் அவளது தோற்றம் இருந்தாலும் , நிறமும்.. விழிகளும் தந்தையை கொண்டிருப்பதால் வெளிநாட்டவளாகவே பளிச்சென்று நினைக்கத் தோன்றும்.. அதனாலேயே , ஆரா பேசும் தமிழ்மொழியில் இருக்கும் தெளிவைக் கண்டு பார்ப்பவர்கள் வாய்ப் பிளப்பார்கள் .

" ஆரா.. என்னை வம்பு இழுக்காத..", என்று தாமரை முறைப்புடன் பற்களை கடித்தவளாக.. அவளை போலவே பேசி கேலி செய்ததில் சினங் கொண்டவளாய் சொல்ல..

" ஓகே.. ஓகே.. ", என்று சமாதானம் செய்யும் நோக்கில் ..

" எப்படி இருக்க.. நல்லா இருக்கியா.. ", என்று அணைத்தவாறே கேட்டு நின்றவளாக.. பல வருடங்களுக்கு பிறகு பார்க்கும் தோழியை விட்டு விலகாது நலம் விசாரிக்கவும் ,

" ரொம்ப.. நீ எப்படி இருக்க..", என்று கூறிய தாமரை , தோழியை முன் பக்கமாக இழுத்து.. உச்சி முதல் பாதம் வரை வஞ்சையாக வருடினாள்..

" ம்.. ஐயம் ஃபைன்..", என்று கன்னத்தில் குழி விழ சிரித்தவளின் சிரிப்பிலேயே , அவளுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகள் அனைத்தும் மறைந்து போனதாய் ..

" ஓய்.. என்ன அப்படி பாக்குற..", என்று ஆரா கிண்டலாக கேட்டாலும் , தாமரையின் பொழிவும்.. தென்பட்டிருக்கும் மிளிர்வும்.. நடத்தையில் , பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும்.. சிறு நிமிர்வும்.. அவளது ஆளுமையை அதிகரிக்கச் செய்திருப்பது போலவே தெரிய..

" குட்டி.. யூ லுக் ஸம்திங் டிஃப்ரண்ட்.. பட்.. ரொம்ப அழகா தெரியுற அழகி..", என்று இரு கன்னங்களையும் கிள்ளி சிரித்திருந்தாள் ஆராதனா..

" அச்சோ.. வலிக்குது.. விடு..", என்று அவளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள.. ரிச்சர்ட்டின் உதவி தேவையாய் ‌..

" ஆரா..", என்று அழுத்தமான கம்பீர அழைப்பு கேட்டவுடனேயே.‌. சட்டென்று விடுவித்தவள்.. சிறு மிரட்சியை வெளிப்படுத்தியதோடு‌.. தாமரையுடன் அதிகமாக ஒட்டிக் கொள்ள..

" என்ன.. இன்னும் நீ ரெடி ஆகலையா..", என்று அதே தோரணையில் அவன் வினவ..

" இதோ.. ஏய்.. வா..", என்று தோழியின் காதையும் கடிக்கத் தவறாதவளாய்.. குனிந்த தலை நிமிராது.. மற்றொரு அறைக்கு திரும்பிவிட்டாள் ‌.

மற்றவர்கள் இயல்பாக இருக்க.. அதேபோல் , கௌசியும் மகளின் செயலை பார்த்து அலட்டிக் கொள்ளாதவராய் பார்த்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தார் .

" இவ இன்னும் மாறலையா ண்ணே.. இப்பவும் மிரளத்தேன் செய்யுறாளோ..", என்று சிந்தனை வயப்பட்டவளாய் தாமரை ஆராதனாவின் முதுகை வெறித்தவளாக வினவிட..

" ம்ச்சு.. எவ்வளவோ பரவல்லை.. அப்பப்ப.. நேரடியா என்னோட பேசாட்டியும்.. கௌசிக்கா பக்கத்தில இருந்தா பதில் சொல்றா.. ஏன் கிண்டலே அடிக்குறா..", என்று தன் வருத்தத்தை மறைத்தவனாக..

" ம்.. ஆமா நீங்க என்ன கிளம்பாம நிக்கிறீங்க.. இப்படியேவா வர போறீங்க..", என்றாள்..

" ம்.. ஏன் நல்லா இல்லையா..", என்று அவன் புத்தம் புதிதாய் அணிந்திருந்த வெள்ளை சட்டையையும் நீல நிற பேன்ட்டையும்.. குனிந்து பார்த்தவனாக வினவ..

" ஆமா.. நல்லாவா இருக்கு.. உங்களுக்கு கல்யாணமா இல்லை வேற யாருக்கோவா..", என்று கண்டிப்புடன் அவள் சொல்லவும்..

லேசாக முகம் வாடிவிட்டான் , " ஏய் குட்டி.. நிஜமாவே நல்லா இல்லையா..", என்று மென்மையாக அவன் அணிந்திருந்த ஆடையை தடவியவனாக சொல்லியவாறே பாவமாக அவளது முகம் காண..

அடக்கி வைத்த குறுஞ்சிரிப்புடன் , கண்கள் பளிச்சிட நின்றிருந்தவளை கவனித்த சாந்தி , வேகமாக தாமரை நெருங்கி அவளது காதை திருகியவளாக ,

" உன்னைய நான் வஞ்சினதுக்கு.. என் புள்ளைய ஏன்டீ கலங்கடிக்கிற..", என்று காப்பாற்ற முன் வந்த பிறகே அவளது விளையாட்டு பேச்சு புரிந்ததாய்..

" என்ன சாந்தி க்கா.. உன்ற புள்ள முகம் ஃப்யூஸ் போன பல்பு ஆட்டாம் மாறி போச்சு.. அண்ணியார் வாங்கியாந்து ( வாங்கி வந்து ) கொடுத்ததோ..", என்று விடாது கிண்டலை தொடர..

" ம்.. ஏன்.. கொடுக்க மாட்டாகளோ.. போ டீ.. போய்.. எம் மருமக புள்ளை கிளம்பீடுச்சான்னு பாரு.. விருந்தாளி கணக்கா வந்ததும் இல்லாம நையாண்டி வேற.. போக்கத்தவ சொல்லறான்னு.. உனக்கு முகம் சுண்டுதாக்கும்..", என்று அவனையும் கண்டிக்கவும்.. இருவரும் , ஒரு சேர சிரித்தவர்கள்.. சாந்தியின் தோள் சாய்ந்திருந்தார்கள் .

இடமும் வலமுமாய் கன்னத்தோடு ஓட்டியவர்களை.. இரு கரங்களாலும் அவர்களது கன்னம் தாங்கியதுடன் மெல்ல கண் கலங்கியவராய் ,

" நீங்க ரெண்டு பேரு மட்டும் இந்த சிறுக்கி வாழ்க்கையில இல்லாம போயிருந்தா.. நான் என்னவாயிருப்பேனோ.. என்னை யாட்டமே.. உன் வாழ்க்கையும் திசை மாறி போச்சேன்னு ரொம்பவே , தவிச்சு போயிருந்தேன்டா.. நா கும்பிட்ற குலசாமி கணக்கா.. அந்த மகமாயியே உனக்கு பொஞ்சாதியா வரப் போகுது கண்ணு.. ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்.. ராசாத்தி , என் பச்சைமண்ணை ரெண்டாந் தாரமான்னு.. கட்டிக்க கேட்குறாவன்னு இவன் சொன்னப்ப.. வெட்டவே அரிவாளை தூக்கீட்டேன்.. ஆனா , அது ராம் ஸார் பையன் சரண் தம்பிக்குன்னு நினைக்கவே இல்லை ராசாத்தி.. அவியன்னு தெரிஞ்சும் மனசு ஒப்பாமதேன் இருந்தேன்.. ஆனா , உன்னைய.. உன் தம்பி் தங்கைய கண்ணுக்குள் வச்சு பார்த்துக்கறதும்.. நம்ம சனத்தோட சமம்மா நடந்துக்கிட்டதும்.. உனக்காக , அம்புட்டு பெரிய இடத்து புள்ளை.. நம் வீடு தேடி வந்து தங்கினதை பார்க்கறச்சை மனசு நிறைஞ்சு போச்சு.. நான் வளர்த்த புள்ளைக நல்லா இருக்கீயன்னு.. நான் பட்ட கஷ்டமெல்லாம் மறைஞ்சு போச்சு.. கண்ணுகளா.. எப்பவும் இதே போல நல்லா இருக்கணும்‌.. ", என்று மனம் திறந்து அணைத்தவராக பேசியவருக்கும் சரி.. கட்டுண்டு இருந்தவர்களுக்கும் சரி.. பத்து மாத சுமந்து பெறாத குழந்தைகள் என்றோ.. பெற்றவள் அவர் அல்ல என்ற நினைப்போ மூவருக்கும் இருந்ததாக தெரியவில்லை .

சில நிமிடங்கள் , மௌனத்தில் கழிய.. அதனை மீட்டு எடுத்ததும் சாந்தியாகவே இருந்தார் .

" சரி கிளம்புங்க.. நாழிய ஆவுது.. நல்ல நாளும் அதுவுமா கண் கலங்கக் கூடாது.. போங்க.. தாமரை போய் அண்ணி கிளம்பீட்டாவளான்னு பாரு..", என்று முகத்தை முந்தாணையால் துடைத்து மீண்டவராய்..

ஆராதனாவும் தாமரையும்.. அதே ஹோட்டலில் மற்றொரு பகுதியில் தங்கி இருந்த தாராவை தேடிச் சென்ற பொழுது..

" தாமரை.. உன் ஹஸ்பெண்ட் எங்க.. பார்த்தியா காட்டவே மாட்டேங்குற..", என்று சிணுங்க..

" ஆமா காட்டீட்டாலும்.. நின்னு பேசீடுவ.. ", என்று தாமரை நொடிக்க.. அவளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தவளை கைப் பிடித்து நிறுத்தி..

" கண்டிப்பா பேசுவேன்.. என் தாமரைக் குட்டிய இவ்வளவு பத்திரமா பார்த்துக்கும் போது.. அவரோட , நான் பேச மாட்டேனா.. ", என்று சவால் போல் வினவ..

" அப்போ ஏன் ரிச்சர்ட் அண்ணாவோட பேச மாட்டேங்குற..", என்றாள் .

" ஆங்.. அதூ... எப்ப பார்த்தாலும் மாமா விரட்டீட்டே இருக்காங்க.. ஆனா பாரு.. இப்பெல்லாம் நான் பேசுறேன் தெரியுமா..", என்று வழக்காட..

" ஆ.. ஆ.. ஆமாம் சொன்னாங்க..", என்று கழுத்தை நொடிக்க..

" நீ நம்பினாலும் நம்பாட்டியும்.. நான் ஒரு ஆண்ணோட பேசுறேன்னா.. அதுக்கு மாமாதான் காரணம்..", என்று அதுவரை அடக்கி வைத்திருந்த உற்சாகம் முழுவதையும் தொலைத்து‌.. உணர்ச்சி பெருக்கில் கூறியவளை மென்மையாக அணைத்தவள்..

" சரி வா போலாம்..", என்று முன்னேறி இருந்தாள் .

" ஹேய் தாமரை.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. மாமாவோட ஓனர் ரொம்பவே நல்லவங்க..", என்றாள் .

சட்டென்று நின்று , " நீ எப்போ அவங்கள பார்த்த..", என்று விழிகள் ஒளிர வினவ..

" மச்சு இது என்ன கேள்வி.. தினமும் , நம்ம ப்ளேட்டுக்கு வராம போகவே மாட்டாங்க.. மாமா சொன்னதுனால தான் நானும் அவரோட பேசுறேன் தெரியுமா.. வேணா நீயே கேட்டு பாரு..", என்றாள்.

" யாருட்ட..", என்று புருவம் நெறிக

" ம்ச்சு.. ஆர் . பி . எஸ் ரெஸிடன்ஸி சேர்மேன்ட்ட..", என்றவள்.. தொடர்ந்து ,

" அவரு எவ்வளவு நல்லவரு தெரியுமா.. நீ அடிக்கடி சொல்லுவியே.. உன்னோட கனவு.. அதான் ட்ரஸ்ட் விஷயம்.. நான் ஒருநாள் அவருகிட்ட சொன்னேன்.. அதை உடனே செஞ்சு கொடுத்துட்டாங்க தெரியுமா.. ", என்றாள்..

" என்ன சொல்ற.. ரிச்சர்ட் அண்ணா யாரோட பேச சொன்னாரு..", என்று இரு புருவங்களையும் உயர்த்தி வினவியவளுக்கோ , மீண்டும் ஆரா சிக்கலில் மாட்டிவிடக் கூடாதே என்ற தவிப்பு மட்டுமே மிகுதியாக ,

" மச்சு.. உனக்கும் அவங்கள நல்லா தெரியும்னு மாமா இன்ட்ரோ பண்ணாங்க.. நீ யாருன்னு கேட்குற..", என்று ஆராவின் உள்ளங்கை உடனடியாக வியர்வையில் நனையத் துவங்கவும்..

" ஏய்.. அவிய பேரு என்னன்னு கேட்குறேன்.. அதுக்கு ஏன் இப்படி நடுங்குற.. ", என்று இயல்பாக முயல..

" எனக்கு பேரு தெரியாது.. ஆனா , தாமரையோட ஆசைன்னு சொன்னதுக்கு அப்புறமா தான்.. என்ன ஏதுன்னு.. டீடைய்லா கேட்டுகிட்டாங்க.. இப்ப நம்ம ஆலீஸ் ஆன்டி வச்சே சின்ன அளவுல ஸ்டார்ட் செஞ்சு இருக்காங்க.. ", என்றாள் .

மறுவாழ்வு அமைக்கும் கனவு என்பது.. ஆதரவற்ற குழந்தைகளுக்கானது அல்ல.. விபாச்சார விடுதிகளில் இருந்து மீட்டெக்கப்படும் பெண்களுக்கும் அங்கு அகப்பட்டு தத்தளிக்கும் குழந்தைகளுக்கான காப்பகத்தையும்.. அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் மற்றும் மறுவாழ்விற்கான இடத்தை உருவாக்க நினைத்தது . இதுவரை , ரிச்சர்ட்டால் சிறிய அளவில் குடும்பமாக பாதுகாத்து வருவதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இருவரின் கனவு . ஆசை கடலளவு இருந்து என்ன பயன் அதற்கு உண்டான வசதி.. இருவருக்குமே இருந்தது இல்லையே..

இதுவரை , அதை பற்றி சரணிடம் தாமரை வாய் திறந்தது இல்லை.. பார்த்த நாள் முதல் அவளை தவறாக நினைப்பவனிடம் இது போன்ற பெண்களுக்கு உதவிகரம் நீட்டக்கோரி அவளுக்கு நா எழ ஒத்துழைத்ததே இல்லை என்லாம் . இப்பொழுது , தாராவை ரிச்சர்ட்டிற்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்த போதும் , பணத்திற்காக படுக்கையில் விழும் பெண்களின் மீது நன்மதிப்பு கொண்டிருப்பது போல் சரணின் பேச்சு இல்லாததாலேயே ‌.. அமைதி காத்தவளாய் இருக்கிறாள் . அப்படி இருக்கும் பொழுது , தன்னுடைய ஆசை என்று கூறியதற்காக அமைப்பை உருவாக்குவதாக ஆரா கூறுவதை கேட்டு.. எப்படி உணர்கிறாள் என்றே சொல்வதற்கு இல்லை .

முதன்முதலாக , ஆராவின் அதரங்கள் ஒரு ஆணின் மீதான நன்மதிப்பும் பாராட்டிலும் அதிகம் மகிழ்ச்சி கொண்டிருப்பதை மறைக்க முடியாததாகவே இருக்க ,

" சரி விடு.. அது யாருன்னு.. நான் அண்ணாவையே கேட்டு தெரிஞ்சுக்குறேன்.. ", என்று பேசிக் கொண்டே வந்ததில் இருவரும் , விரைவாகவே தாராவின் அறையை நெருங்கி கதவை தட்டி காத்திருக்க.. அவளோ , முழு அலங்காரத்தில் ஜொலித்தவளாய்..

" ஏய்.. தா..ம..ரை... நீ எப்ப வந்த..", என்று ஆர்ப்பாட்டமாக தாரா வரவேற்றாள்..

" வாம்மா.. வாங்கம்மா.. ", என்று தாமரையுடன் இருந்த ஆராதனாவையும் இரு குரல்களாய் அவளது பெற்றோர்களும் வரவேற்று இருந்தார்கள். எங்கும் நிறைந்திருக்கும் கண் காணிப்பாளர்களும்.. கேமராக்களும் என்று தாமரைக்கே ஒருவித சங்கோஜத்தை உண்டு செய்திருந்தாலும்.. ஆராதனாவை போல் வாய் பிளக்க செய்திருக்கவில்லை .

பிரபல நடிகையான உதயதாரா , ரிச்சர்ட்டின் மனைவியாக வர போகிறாள் என்பதே ஆராவிற்கு குதூகலம் என்றால் முதல்முறையாக , அவளை நேரில் சந்திக்கப் போவது என்பது பெரும் திகிலாகவே இருந்ததில்.. ஆரா மிரட்சியாகவே காணப்பட்டாள் .

ஆராதனாவை பார்த்தவுடனேயே..
" ஹேய் ஆரா.. எப்படி இருக்க..", என்று எழுந்து கட்டிக் கொண்டதோ.. அதிக வியப்பை கொடுக்க.. அவளோ , தாமரையுடன் ஒட்டிக் கொண்டவள்...

" மாமா.. என்னை பற்றி எல்லாம் சொல்லுவாங்களா..", என்று தாமரையிடம் முணுமுணுக்க..

அதை கண்டு கொண்டாலும் , அழகாய் சிரித்து புறம் தள்ளியவளாய் , " என்ன நீ மட்டும் வந்திருக்க எங்க உன் ஹஸ்பெண்ட்..", என்று தாரா தாமரையை குடையவும்..

" அவிய வந்துட்டாவ.. வருவாக..", என்று முடித்துக் கொண்டாள் .

அதன் பின் நேரம் ரெக்கைக்கட்டி பறக்க துவங்கி இருந்ததில் மணமக்களோ , நெருங்கிய சுற்றம் சூழ மணமேடையில் அமர்ந்திருக்க.. வருவோரை அக்குடும்பத்தில் ஒருத்தியாக நின்று வரவேற்று பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தாள் தாமரை . தாராவின் நெருங்கிய உறவுகள் , நட்புகள்.. மற்றும் பிரபலங்களின் வருகை என்று கோலாகலமாக அந்த இடமே இருக்க.. விக்கி மற்றும் ப்ரியா அவளது சகோதரன் வாசு.. நண்பர்கள் என்று அவர்கள் ஒருபுறம் கொண்டாட்டமாய் வலம் வந்தவர்களாக..

ஆங்காங்கே , இயந்திர பட்டாம்பூச்சியாக வட்டம் அடித்துக் கொண்டிருந்த ட்ரோன்கள்..
ரிச்சர்ட் மற்றும் தாராவோ பார்வையாலேயே ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொள்பவர்களாக இருந்தார்கள் .

காஞ்சிபுரம் வெண்பட்டு உடுத்தி.. அழகான ஆபரணங்களால் மேனியை அலங்கரித்திருக்க.. விண்ணுலகு தேவதையாய் மருதாணியால் சிவந்திருந்த விரல்களால்.. தன் அருகில்.. இணைந்து பூஜித்துக் கொண்டிருந்தவளின் மீதே கண்ணாக இருந்தவனை கீழ் கண்களால் ஏறிட்டதிலேயே உடல் முழுவதும் சிவந்து இருந்தாள் அவனது உதயா..

உதிக்கும் ஆதவனின் , தகதகக்கும் மஞ்சள் நிறத்தில் , வெட்கச் சிவப்பை தனக்குள் பூசிக் கொண்டு குளுமையை தெளித்துக் கொண்டிருந்தவளின் கழுத்தில் மாலையை அணிவித்த பிறகும் பார்வையை அகற்ற முடியாமல் தடுமாறிய ஆண் மகனின் அழகோ.. கொள்ளை அழகாய்..

பம்பரமாய் சுழன்றாலும் , தாமரையின் கண்களோ.. வாயிலில் மட்டுமாக , நொடிக்கு நொடிக்கு தாவி மீண்டுக் கொண்டிருந்தது. அதிக காலம் தாழ்த்தாமலேயே , ராம் பிரசாத் குடும்பத்துடன் வருகை புரிந்திருந்தார்.. வேகமாக , அவர்களின் அருகே ஓடிய தாமரை வரவேற்று முன் இருக்கையில் அமர வைத்து.. மீண்டுமாக சுழற்ற..

" யாரை தேடுறீங்க..", என்று கிண்டலாக சசி கேட்டு குறும்பு சிரிப்பு சிரிக்கவும் தவறவில்லை..

அவளது கேலியை கண்டுக் கொள்ளாமல் , " அவிய எங்க.. உங்க அண்ணா வரலையா..", என்று பதிலாக கேள்வி கேட்டாலும் அவளது கண்களில் தென்பட்ட பரபரப்பில் நிதானித்தவள் .

" அண்ணி.. அண்ணா வந்துட்டாங்க.. கார் பார்க்கிங் பண்ண போயிருக்காங்க..", என்று கைப்பிடித்து சொல்லிய பிறகே , மீண்டது போல் காணப்பட்டாள் .

அவ்வாறு சசி கூறியதும் , தாமரையின் பார்வை அவளது முகத்தில் யோசனையுடன் நிலைத்திருந்தது . வாகனத்தை நிறுத்துவதற்கு ஆட்கள் இருக்கையில் , இத்தகைய பதில் சந்தேகத்தை விதைக்க..

" அட நிஜமாலுமே.. நானே பார்க் பண்றேன்னு சொல்லீட்டாரு..", என்று சொல்ல.. அவ்விருவரையும் ப்ரியா நெருங்கி இருந்தாள் .

" ஹாய்..", என்று சசியை அணைத்து விடுவித்தவள்..

"பாப்பா.. யாரை சல்லடையா தேடுற..", என்று அவள் பங்கிற்கு தொடர.. இவளது கேலிக்குள் சிக்கினால்.. நிச்சயமாக அவ்வளவு சுலபமாக தப்பிக்க இயலாது என்பதால் சட்டென்று சுதாரித்த தாமரை ,

" ஆங்.. உங்க ஆளைதேன்.. கடைத்தெருக்கு போனாலே.. விக்கி அண்ணே ஒரு பொண்ணை விட மாட்டாரு.. இங்குன சொல்லவே வேண்டாம்.. அதோ பாருங்க.. எப்படி கட்டிப்பிடிக்குறாருன்னு..", என்று ஒரு நடிகையை அணைத்து விடுவித்ததை சுட்டிக் காண்பிக்க..

" இவனை.." என்று பல் கடித்து.. நின்ற ப்ரியாவின் மூக்கு நுனி சிவந்தவளாய் விக்கியிடம் செல்ல.. அழகான சிரிப்பலை ஒன்று எழுந்து ஓய்ந்திருந்தது .

" ஆமா , ரிச்சர்ட் ஸார் பக்கத்தில நிக்குற அப்சரஸ் யாரு..", என்று ப்ரி சங்கத்தில் இருக்கும் ஒருத்தி கேட்க..

அப்பொழுதே , ப்ரியாவின் சகோதரனின் பார்வை ஆராவிடதில் பாய்ந்தது . வெண் சிற்பத்திற்கு எடுப்பாக இருக்கும் அடர் சிவப்பு சீக்குவன்ஸ் முழு நீள க்வௌனில் தேவதையாய் சிரித்துக் கொண்டிருந்தவளை காணவும் , வாய் பிளந்து நின்றுவிட்டான் .

தாமரையோ , " ஆராதனா.. ரிச்சர்ட் அண்ணாக்கு அக்கா பொண்ணு..", என்றாள் . நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவளை மேடைக்கு சாந்தி அழைக்கவும் , அங்கு சென்று நின்றுக் கொள்ள..

தன் ஆளுமை குறையாத நடையுடன் நுழைந்திருந்தான் சரண் மித்ரன் . ஆடை மாற்ற வேண்டி அறைக்கு சென்று வந்திருந்த ரிச்சர்ட் ராமின் குடும்பத்தை காணவும் , சிறிதளவு யோசிக்காது , மேடையில் இருந்து இறங்கியவனாக , பாலகிருஷ்ணன் தம்பதியினரின் கால்களில் பணிந்து எழ.. ராமின் கரத்தை பற்றி குலுக்கியவன் மயூரியையும் வரவேற்று.. சரணை ஆரத் தளுவி இருந்தான் .

ரிச்சர்ட்டின் செய்கை ஆச்சரியம் கொள்ள செய்திருந்திலும் , சரணும் நண்பனை ஆரத்தழுவிக் கொண்டான் . மச்சினனாக , நண்பனாக.. எவ்வளவு நெருக்கம் காட்டிய போதும் விலகியே இருப்பவனின் அணைப்பு வியப்பிலேயே ஆழ்த்தி இருந்தது . தன் போல் தாராவை காண மேடையை நோக்க , அதன் பிறகே.. மூச்சை விடாது பிடித்து வைத்தவளாக நின்றிருந்த தாமரையை கவனித்தான் .

அவளது பார்வை சரணின் ஆடையிலேயே நிலைத்திருந்ததாய்.. ஏக்கத்தை சுமந்தவளாய்.. அவன் கண்ணோடு கண் கலக்க முயல.. அவனோ பிடிவாதமாக தவிர்த்து இருந்தான் .

அவள் தேர்ந்தெடுத்து வடிவமைத்திருந்த இளம் ரோஜா நிற பட்டு சட்டையில் எம்ராயிடரி வேலைப்பாடு செய்திருக்க.. குர்த்தாவும் அல்லாது சட்டையும் அல்லாது இரண்டையும் கலந்தது போல்.. அதே நிறத்தில் இருந்த தங்க பட்டு வேஷ்டிக்கு ஏற்றார் போல் வடிவமைத்திருந்தாள் ‌. தான் எடுத்து வைத்திருந்த ஆடையை அணிவானோ , நிராகரிப்பானோ என்ற எண்ணமே இவ்வளவு நேரமாய் அலைகழித்துக் கொண்டதுடனே நடனமாடிக் கொண்டகருந்தாள் .. அதனை முறியடித்து மகிழ்ச்சி கொள்ள செய்திருந்தாலும்.. பார்வையாலும் சீண்ட விருப்பமற்றவனாக அவனோ, வதைத்துக் கொண்டிருந்தான் .

அவள் தைத்திருந்த
உடையில் ஆண் மகனின் இலக்கணமாய்.. தன் கம்பீரம் குறையாத நடையினால் அனைவரையும் ஈர்த்ததுடன்.. ரிச்சர்ட்டையும் அணைத்து விடுவித்ததுடன் அல்லாது , கரம் பற்றி மேடையில் அமர வைத்து.. மனைவியின் அருகிலும் நின்றுக் கொண்டான் . பிறரின் கவனம் அவர்களிடத்தில் அதிகம் இருப்பதை கவனத்தில் பதித்தவனாக , தாமரையின் அருகில் நின்றுவிட்டாலும் , அவளது முகம் காண மறுத்தவனாய் இருந்து , தாமரைக்குள் இருக்கும் இதயத்தை கூறுப்போட்டுக் கொண்டிருப்பதிலும் தவறவில்லை .

மூத்த பிரபலங்கள் பலரும் வருகை புரிந்திருக்க.. அதில் , ஒளிப்பதிவாளரான பரணியும் கலந்திருந்தார்‌.. பல தயாரிப்பாளர்களுக்கு ரிச்சர்ட் சாந்தியின் மகனாக அறிமுகம் ஆனது வியப்பாகவே இருந்தாலும் , பத்தாண்டுகளுக்கு முன்பாக அவனை பற்றி நன்கு அறிந்திருந்தவர்களுக்கும் இன்றைய அவனது வளர்ச்சியையும் அடையாளத்தையும் கண்டு பிரம்மிக்கவே தோன்றியது.. கூடவே , அவனது உயரமும் சரணின் நெருக்கமும் அவனது கடந்த காலத்தை பற்றிய விமர்சனங்களை வாய் அடைக்க செய்திருந்தாலும் , பொறாமையால் வெந்து தணியவே செய்ததாய்.. சாந்தியின் மைந்தனாக அறியப்பட நேர்கையில் ஏளன புன்னகைகளுக்கும் நக்கலான பேச்சுகளுக்கும் இடம் இல்லாமல் போகவில்லை .

அவற்றில் இருந்து இந்த ஒரு மாத காலமாக , அரணாக காப்பவன் சரண்.. என்றால் ஆறுதலாக , மடித்தாங்கி இருந்தவளோ , அவனது உதயா..

" நீ எப்படிப்பட்டவன்னு உன்னை விட வேற யாருக்கு தெரியும் ரிச்சா.. இல்லை உனக்காகவே காத்திருக்க என்னை விட வேற யாருக்கு தெரியணும்.. நீ மட்டும் இல்லாம போயிருந்தா இந்த சினிமாத்துறைல தாரான்னு ஒருத்திய யாருமே பார்த்து இருக்க மாட்டாங்க.. இத்தனை வருஷமா , நான் வாழ்றதே உன்னாலதான்.. ஒரு நொடி கூட உன் முகம் என் கண்ணு முன்னாடி வராம இருந்ததே இல்லை . நீ யாருன்னு தெரியாம இருந்ததப்பவே என் மூச்சுக் காத்துல கலந்திருந்தவன் நீ மட்டுமே.. நான் இதுவரைக்கும் நடிச்ச எல்லா படமும் ஹிட் கொடுத்திருக்குன்னா.. அதுக்கு முழு காரணம் யாரு தெரியுமா.. நீ .. நீ மட்டுந்தான்.. என் வெற்றியால மட்டுந்தான் உலகத்தில நீ எந்த மூலையில் இருந்தாலும் , உன்னால என்னை பார்க்க முடியும்னு செலக்ட் பண்ணி நடிச்சுட்டு வரேன் . இந்த செக் வரை நான் நானா இருக்கேன்னா அதுக்கு முழு காரணமும் நீதான்.. நீ கேட்ட கேள்வி.. நீ கத்துக் கொடுத்த பாடம்.. ரிச்சர்ட்..", என்று கண்கள் கலங்கி அணைத்திருந்தாள் . தாராவின் பெற்றவர்களின் முன்னிலையில் தன் கறைப் படிந்த கடந்த காலத்தை கூறி முடித்த பின்பு ..

"இப்பவும் , என்னை நம்பி உங்க பெண்ணை எனக்கு கட்டி வைப்பீங்களா..", என்று சிவந்து கலங்கிய கண்களை மறைக்க முயன்றவனாக , நின்றிருந்த பொழுது.. பெற்றோர் முன்னிலை என்றும் பாராமல்.. விட்டுக் கொடுக்காது பேசியதுடன் .. இறுக்கமாக மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலக்க இறுக்கி அணைத்து இருந்தாள் அவனுடைய உதயா..

பலவற்றை நினைத்து தாராவின் கரத்தை அழுத்தமாக , மணவறையில் அவன் பிடிக்கவும்.. பளிச்சென்ற , புன்னகையால் சூழ்ந்திருந்த கலங்கங்கள் அனைத்தையும் விரட்டி அடித்ததுடன் , அவனை நெருங்கி தலை சாய்த்தவளாக ,

" ரிச்சா.. எதையும் யோசிக்காம.. ஹேப்பியா என்னை சைட் அடிக்கிற வேலைய மட்டும் பாரு.. சரியா..", என்று கண்டிக்க.. பளிச்சென்று சிரித்திருந்தான் . அவை அழகாய்.. பாந்தமாய்.. புகைப்படக் கருவிக்குள் குடிப் பெயர்ந்துவிட்டது .

ப்ரியாவின் சகோதரனான வாசுவின் கண்களோ.. மீண்டும் மீண்டுமாக , ஆராதனாவையே தழுவியதாய்..

ராமின் பக்கத்தில் அமர்ந்திருந்த பரணியோ , மணமேடையில் நின்றிருந்த தாமரையிடமே நிலைத்ததாக இருந்தது . உள்ளே வந்ததுமே ஓடி வந்தவளை , " நீ போ.. நீ போய் மத்தது பாரு.. ", என்று செல்லமாக விரட்டி இருந்தார் .

அவளை காண்பதற்காகவே , ராம் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து தாமரையை, பரணியின் செல்லப் பிள்ளையாக நினைக்க தொடங்கி இருந்தார் . சென்னையில் தங்கும் சமயங்களில் , அவளை சமைத்து கொடுத்து அனுப்ப கூறும் அளவிற்கு , உரிமையையும் கொண்டிருந்தார் .

சரணுடன் பேசிய பிறகு அவரால் ‌தாமரையை அத்தனை சுலபமாக தவிர்த்து வேறொரு பெண்ணை.. தன் படத்திற்குள் புகுத்து பார்க்க இயலாமலேயே இருக்க.. அதனால் , ராமிடன் பேச நினைத்தவராக.. அவர்கள் வீட்டிற்கே சென்றுவிட்டார்.. தோட்டத்தில் ராம் அமர்ந்திருந்ததால் , அவரும் அங்கேயே தேங்கி நட்பு பாராட்ட துவங்கி விட்டார்கள் .

வெகு நாட்களுக்கு பிறகான சந்திப்பாகவே இருந்ததில் , இருவரும் பல கதைகளை பேசிய பிறகே , வந்திருக்கும் காரணத்தை தெரிவிக்க.. ராமிடம் நீண்ட மௌனமே இடம் பிடித்திருந்தது .

" என்ன ராம்.. எதுவும் சொல்ல மாட்டேங்குற‌.. இது ஜஸ்ட் ஷார்ட்ஸ் தான்..", என்றார் பரணி..

" பரணி.. இதுல என்னை கேட்குறதுல எந்த அர்த்தமும் இல்லை.. நீ தாமரைய கேளு.. அவ சரின்னு சொன்னா ஓகே.. ஆனா , எந்த பாயிண்ட்லேயும் நீ தாமரைய கட்டாயப்படுத்தக் கூடாது. அவ விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்.. அவள ஃபோர்ஸ் பண்ற எந்த விஷயமும் இங்க நடக்காது..", என்று அவ்வளவு அழுத்தத்துடனும் கண்டிப்புடனும் கூறியதே அவ்வளவு ஆச்சரியம் கொள்ள செய்திருந்தது என்றால் வீட்டிற்குள் நுழைந்ததும் தாமரையை பார்த்த பிறகோ.. ஸ்தப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும் .

இடையில் சொறுகிய புடவையுடன் , பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் . தோளில் தட்டிய ராம் , " என்ன..", என்று புன்னகையுடன் கேட்டிட..

" இந்த மாதிரி என் பொண்டாட்டி வீட்டு வேலை பார்த்தே பல வருஷம் ஆச்சுடா..", என்று சிரிக்க..

" தாமரை..", என்று அழைக்கவும்..

" ஆங்.. வரேன் மாமா..", என்று அப்படியே வர.. பரணியை அங்கு பார்த்ததும் மெதுவாக புடவையை இறக்கியவளாய் , " வாங்க ஸார்..", என்று கரம் குவித்தவளாய்.. சிறிய தயக்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது போல் நின்றிருக்க..

மின்னிய மூக்குத்தி.. அள்ளி முடித்திருந்த கூந்தல்.. ஒற்றை திலகம்.. சிறிய தங்கத் காதணி.. தங்க வளைகளுடன் இணைந்திருந்த கண்ணாடி வளையல்கள்.. கழுத்தில் தாலிச்சரடு.. அரும்பி இருந்த வியர்வை.. இப்படி ஒருநிலையில் , சரணின் மனைவி..

" என்னம்மா இப்படி நிக்குற..", என்று பரணி வாய்விட்டே கேட்டுவிடவும்.. தவறு செய்த பிள்ளைப் போல் பரிதவிப்பாய் தன் மாமனாரை ஏறிட.. வாய்விட்டு சிரித்தவரோ..

" இல்லை.. எங்க அம்மாவை பார்த்த மாதிரி இருக்க.. இந்த டீ- சர்ட்ஸ் , ட்ராக்.. நைட்டீஸ்.. இது மாதிரி தான் என் மருமக போட்டுக்குவாங்க.. என் பொண்ணு சொல்லவே வேண்டாம்.. என் மனைவி சுடிதான்.. உன்னை இப்படி பார்த்தும் என் அம்மா ஞாபகம்.. இந்த காலத்துப் பிள்ளைங்க எங்க இது மாதிரி ட்ரஸ் பண்ணறீங்க.. இல்லை இப்படி வேலை பார்க்குறாங்க..", என்று தொடர்ந்து தன் வியப்பை பற்றி கூறி சிரிக்க..

" அப்படி எதுவும் இல்லை அங்கிள்.. அவங்க அவங்க வளரும் சூழ்நிலை.. இங்க அத்தை மாமா.. எதுவும் சொல்ல மாட்டாங்க.. எனக்கு நம் வீட்டு வேலை பார்க்கறது என்ன கஷ்டம் இருக்க போகுது.. கூப்பிட்ட குரலுக்கு ஆளுங்களும் இருக்காங்க.. வேற எதுவும் இல்லை..", என்று சங்கடமாக சிரித்தவளை.. பக்கத்தில் அமர சொல்லவும்.. நுனி சீட்டில் அமர்ந்துக் கொள்ள வாஞ்சையாக பார்த்திருந்தார் ராம்.

பரணியின் பேச்சிற்கோ.. தாமரையின் மொழிதலுக்கோ இடைப்புகாமல் அமைதி காத்தவராய் அமர்ந்திருக்க..

" இங்க வா.. நல்லா உட்கார்.. நல்லா சமைப்பியா.. ", என்று பேச..

" சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க ஸார்..", என்று புன்னகைத்து இருந்தாள் ‌ .

" கண்டிப்பா சாப்பிடாம போறது இல்லை.." என்று ஆர்ப்பாட்டமாக சிரிக்கவும்..

" வாங்க அண்ணா.. என்ன ஆச்சரியம் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க.. ", மயூரியும் இணைந்துக் கொள்ள..

" உங்க வீட்டு அதிசயத்தை பார்க்க வந்தேன்..", என்று தாமரையை சுட்டி காண்பித்து கூறியவர்.. அவளிடம் , " நீ நடிச்ச ஆட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது .. பிரமாதமா பண்ணின..", என்றார் பரணி .

பரணியின் இயக்கத்திலும் மான்சி நடித்திருக்கிறாள்.. இவளும் அவளுடன் அப்படக்குழுவில் வேலைப் பார்த்திருப்பவள் தான்.. இதுவரை , தாமரை அறிந்த பரணி.. சிடுசிடுவென கத்திக் கொண்டே இருக்கும் மனிதராக தான்.. அதனாலேயே , தன் உதறலை மறைத்து சரணின் மனைவியாக நடந்துக் கொள்ள முயற்சித்திருக்க.. அவருடைய பாராட்டில் விழி விரித்துவிட்டாள் .

எத்தனை வசவுகள்.. பேச்சுகளை முன்னணி நடிகர் நடிகைகள் அவரிடம் வாங்கி இருக்க.. இவரிடம் இருந்து பெறும்.. இந்த ஒற்றை பாராட்டு , நடிப்பையே உயிர் மூச்சாக கொண்டிருப்பவர்களுக்கு இமயத்திடம் இருந்து பெறும் விருதாகவே நினைத்து உச்சி மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள் . ஆனால் , நமது பாப்பாவோ ,

"அ.‌து... நான் நடிக்கலை.. ", என்று சனக்குரலில் கூறியிருந்தாள் .

" வாட்.. நடிக்கலையா.. ", என்று அவர் அதிர்ந்து ராமை ஏறிட.. அவள் வந்த பொழுது எப்படி இருந்தாரோ.. அவ்வாறே , இருக்கவும்.. மீண்டும் பரணியின் கண்கள் அவளிடத்தில் பாய்ந்து விழிகளால் வினா எழுப்ப..

" அது.. அது வந்து..", என்று தடுமாற..

" டேய் பரணி.. நீ எதுக்காக தாமரை பார்க்கணும்னு நினைச்ச.. அதை கேளு..", என்று ராம் இடைப்புகுந்து சொல்லவும்..

" நீ என்னோட படத்தில நடிக்கிறியாம்மா..", என்று அவளிடமே நேரடியாக கேட்டுவிட்டார் . சரணுடன் பேசியதை முன்பே அவளும் கேட்டிருந்ததால் , தன் படபடப்பை வெளிக்காட்டாது.. " ஸாரி ஸார்.. எனக்கு நடிப்பெல்லாம் வராது.. அ..து..ல.. இஷ்டமும் இல்லை..", என்று தெளிவாகவே கூற..

" அது இல்லம்மா..", என்று மேலும் எதையோ சொல்ல துவங்கவும்..

" ப..ர..ணி.. ", என்று அழுத்தமாக அழைத்து , " நோ..", என்று முடித்து எழுந்துவிட்டார் ராம்‌..

" மயூரி.. என்னம்மா பேசவே விட மாட்டேங்குறான்..", என்று குறைபட..

" அவளுக்கு வேண்டாம்னா வேணாம் அண்ணா.. இஷ்டம் இல்லாததை செய்து கஷ்டப்படக் கூடாது.. என் மருமக என்னை மாதிரி.. ஃபேஷன் டிசைனிங்ல தான் இன்ட்ரஸ்ட்..", என்று சிரித்த முகமாய் கூற.. அவளே சங்கடப்பட்டு போனாள் . எவ்வளவு பெரிய மனிதர்.. இவரிடம் ஒரு படமாவது நடிக்க மாட்டோமா.. என்று ஏங்குபவர்கள் எத்தனை நபர்கள் உண்டு.. தன்னை தேடி வரும் அளவிற்கு என்ன இருக்கிறது தன்னிடம் என்று அதிகமாக தனக்குள் போராடிக் கொண்டிருந்தவளை காண முடியாதவராய் ,

ராம் , " நீ போம்மா..", என்று தாமரையிடமும் சொல்ல.. அவளும் மறைந்துவிட்டாள் .

" ராம்‌.. நான் என்ன சொல்றேன்னு.. கேட்காமலே..",

" ம்ச்சு ஸ்டாப்பிட் மேன்.. நான் முன்னாடியே சொல்லீட்டேன்.. ", என்று முற்றுப்புள்ளி வைத்துவிட.. அதற்கு மேல் அவராலும் எதுவும் செய்ய முடியாமலேயே போனது .

இப்பொழுதும் இங்கேயும் , தன் திராவிட நிறத்தாலேயே அனைவரையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருப்பதுடன் அல்லாமல்.. சரணின் நெருக்கமும்.. அவளது சுறுசுறுப்பும் மேலும் கவர்ந்ததாய் இருந்ததில் ,

" ராம்.. ரொம்பவே நல்ல பிள்ளைடா.. மான்சிக்கு நேர் எதிர்.. கொஞ்சம் யோசிச்சு சொல்லு.. என்னால தாமரையை தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை.. அவ்வளவு ஆடிஷன்ஸ் எடுத்தாச்சு..", என்று சிரிப்புடன் புலம்பவே துவங்கிவிட்டார் .

சத்தமாக சிரித்த ராம் பிரசாத்தோ , "உன்னை கெஞ்ச வைக்கவும் ஆள் இருக்கு இல்ல.. ", என்று கேலி பேசினாலும் ,

" அவ இன்டரஸ்ட் நடிப்பில இல்லை டா.. இல்லேனா இவ்வளவு தூரம் நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா.. ரொம்பவே அமைதியான குணம். படிக்கவும் வீட்டை விட்டு போக விரும்ப மாட்டா‌.. நாங்க இல்லாம சசி இருந்திடுவா.. ஆனா தாமரை.. ம்ஹும்.. ", என்று அவ்வளவு பரிவுடன் மருமகளை விட்டுக் கொடுக்காது பேசினாலும்.. அருகிலேயே , நின்று அவளை தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் மகனை என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் .

தன் அருகே மிகவும் அமைதியாக நின்றிருந்த சரணின் கரத்தை பிறரின் கண்களுக்கு விருந்தாக்காதவாறு பிடிக்க.. அக்கிரேக்க சிலை மேலும் விறைத்து காணப்பட்டதாய்..

" நான்..", என்று அவள் துவங்குவதற்கு முன்பாகவே..

" நான் கல்யாணம் பார்க்க வேண்டாம்னா.. நீ பேசலாம்..", என்று அடிக்குரலில் என்று உறுமி.. பிடித்திருக்கும் பிடியில் பார்வையை பதித்து.. ' என்னை தொடலாம்..', என்று சொல்லாமல் சொல்ல.. பொங்கி வெடித்து வர இருந்த அழுகையை விழுங்கியவளாக.. பட்டென்று , மின்சாரம் தாக்கியது போல் தன் கையை எடுத்த நேரம் , சாந்தியின் அழைப்பும் இணைந்துவிடவே , நகர்ந்துவிட்டாள் .

தன் மின்னும் விழிநீரும் , கவன் ஒருவனை தவிர.. அனைவரையும துடிக்க வைத்துவிடும் என்பதாலேயே , நெருப்புத் தூண்டங்களை விழுங்கியவள் போல் தனக்குள்ளாக அனுப்பியவள் , சந்தோஷமாகவே ,

" என்ன அக்கா..", எனவும்.. அருகிலேயே தாராவின் தாய் நின்றிருக்க.. அவரோ , " தாமரை.. தட்டு கேட்குறாங்க.. ரூம்ல வெள்ளி தட்டு இருக்கு எடுத்து வரியா.. பெட் மேலேயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்.. ", என்று சொல்லவும் சாவியை வாங்கி மாடிக்கு சென்றிருந்தாள் .

சடங்குகள் அரங்கேறிக் கொண்டிருக்க.. அவர்கள் கேட்டதை எடுத்ததும்.. மீண்டும் கதவை அடைக்க முயன்றவளால் .. தட்டுடன் முடியாது தடுமாறி கீழே வைக்க நினைத்த நேரத்தில் ,

" மே ஐ.. ( நான் வேணா..) " , என்று ஒரு ஆணின் கரம் நீட்டிக் கொண்டிருக்க.. அவன் யார் என்று கண்டுக் கொண்டவளுக்கு வியப்பு உச்சம் தொட்டதாகவே இருந்தது .

ஆனாலும் , " ம்.. தேங்க்ஸ்..", என்று அவனிடம் கொடுத்து , கதவை அடைத்தவள்.. அத்தளத்தில் , ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செக்யூரிட்டியை விழிகளால் தேடவும் செய்திருந்தவளாய்.. மீண்டும் , பெற்றுக் கொண்டு.. உடன் வந்தவனிடம் பேசாது வர , அவனே தொடர்ந்தான் .

" உங்களுக்கு என்னை யார்னு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன் ..", என்று கூறகயவனின் குரலில் அவ்வளவு தற்பெருமை.. சிரிப்பிலும் அத்தனை கர்வம்..

ஆம் என்பது போல் தலையசைத்திருந்தாலும் , தாமரையுள் எழும் படபடப்பை மறைக்க முடியவில்லை . யுவன் தமிழ்நாட்டின் பிரபல நட்சத்திர நாயகன்.. பட்டித்தொட்டிகளின் வாண்டுகளின் மனது வரை கொள்ளை கொண்டவன்.. திரையுலகில் , அதிகமான சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இடம் வகிப்பவன்.. அதேபோல் , அதிக வெற்றிப் படங்களின் அடிப்படையிலும் முதன்மை வகிப்பவனும் இவனே..

நிழலில் சொக்கத் தங்கம்.. நிஜத்தில் எதிர் திசையில் பயணிப்பவன் . சரணின் விளம்பரம் , பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல் யுவனுக்கும்.. அதில் இருந்த யுவதியின் மீது பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்க.. சரணின் மனைவி என்று தெரிந்த போது.. அலட்சிய புன்னகையே அவன் இதழ்களில் வளைந்திருந்தது .

அழகானவன்.. அலட்டிக் கொள்ளாத கமர்ஷியல் படத்தில் மட்டுமாக நடித்து.. ஆட்டம் பாட்டம் , சண்டைக்காட்சிகள் , காதல் வசனங்கள்.. என்று மக்களை வசியம் செய்திருப்பவன் . வெளிப்பார்வைக்கு ராமன்.. கொடை வல்லல்.. ஆனால் , அவனை நன்கு தெரிந்தவர்களுக்கு ஒரே சொல் ' பொம்பளை பொறுக்கி..'

" மிஸஸ் சரண்.. ரைட்..", என்று பேச்சை தொடர ,

" ம்..",

" நைஸ் ஆட்.. யூ லக் ப்ரிட்டி..", என்றதற்கும்.. தாமரை மையமாக சிரித்து நடப்பதை தொடர..

" நேர்ல.. ரொம்பவே அழகாக இருக்கீங்க.. ப்ரீத் டேக்கிங்..", என்று அவன் சொல்லவும் சட்டென்றூ நின்றுவிட்டாள் . இப்பொழுது , அவளே அவன் முகம் பார்க்க நடையை நிறுத்திவிட்டதில்.. வெற்றிப் பெருமிதம் அவனுள் கிளர்ந்ததாய் ,

" உங்க மேரேஜ் லைஃப் எப்படி போகுது.. சரண்.. சரண் உங்களை எந்தளவுக்கு சேட்டிஸ்ஃபை பண்றான்.. வொர்த்தா இருக்கானா.. ஏன்னா மான்சி டிவோர்ஸ் பண்ணினதே அதுனால தான.. ", என்று அலட்சியம் போல் ஸ்டைலாக தூண்டில் போடுவதாக நினைத்து கேட்க..

முகம் வெளிறினாலும் காட்டிக் கொள்ளாது , தைரியம் வந்தவளாக , " புரியலை.. என்ன கேட்குறீங்க..", என்று வெகு நிதானமாய் அவனிடமே மீண்டும் கேட்டவள்... அங்கே வந்த ஒருவரிடம் தட்டை சாந்தியிடம் கொடுக்க சொல்லி , கூர்மையாக ஏறிடவும் ,

தாமரையின் அழுத்தமான பேச்சு , அக்கோழையை பின் வாங்க செய்திருந்ததில் , " ஐ.. ஐ.. மீன்‌.. உங்களை எந்தளவுக்கு பார்த்துக்குறான்னு கேட்டேன்.. யூ நோ.. ஹீ இஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்..", என்று அதே அலட்டலால் கிலியை மறைத்து தொடர..

மனதிற்குள் சிரித்தவள் , "உங்களுக்கு தெரியுமா.. சில வருஷத்துக்கு முன்னாடி , ஒரு பொறம்போக்கு.. என்னை disgusting rat.. don't touch me move away ..ன்னு எப்பவும் சொல்லீட்டே இருப்பான் . கடைசியா , பார்த்தப்போ , என்னைய பிடிச்சு தள்ளி.. காலால் எட்டி உதைஞ்சுட்டான்.. எப்பவும் என்னை irritating wog ன்னு தான் கூப்பிடுவான் . எனக்கு அந்த *"* அப்படியே எட்டி உதைக்கணும்னு தோணும்.. ஆனா , இதுவரைக்கும் செஞ்சது இல்லை.. அதை விட கொடுமை என்னன்னா.. இப்போ , அதே வாய் என்னை gargeous.. breath taking ன்னு அடுத்தவன் மனைவகய சொல்லுது.. அப்படியே , கால்ல கிடக்கறதாலேயே போட்டாதான் என்ன இந்த மாதிரி ஆளுங்களை இல்ல ஸார் .‌ , நீங்களே சொல்லுங்க.. மித்ரன் எந்த அளவுக்கு என்னை பார்த்துக்கிட்டா.. அவன் கண்ணுக்கே இவ்வளவு அழகா தெரிவேன் . ம்.. அப்புறம் , என்னவோ கேட்டீங்களே.. ஆங்.. சேட்டிஸ்ஃபைவ் , வொர்த் அப்படின்னு.. இல்லை.. ஆனா , எதுக்குன்னு நீங்க சொல்லையே.. பரவால்ல.. எதுக்காக இருந்தாலும் என்னை கேட்டதுக்கு பதிலா , நீங்க உங்க மனைவிய கேட்டாலே தெளிவா பதில் தெரிஞ்சுடுமே ஸார்..", என்று அலட்டிக் கொள்ளாமல் நக்கலாக பதில் கூறியவளாய் நகர்ந்துவிட்டாள் .

யுவனின் முகமோ , பேயறைந்தது போல் இருந்தது என்றால் , அவர்களுக்கு எதிரே நின்று கேட்டுக் கொண்டிருந்த.. மான்சியின் கண்கள் கலங்கியதாய்..

மான்சியிடம் வேலை பார்த்தவளா இவள் என்று யுவன் திகைத்து , அவள் வெளிப்படையாகவே மனைவியை இழுத்து வைத்து பேசியதில் வெளிறியவனாக நின்றுவிட.. மான்சியோ , எத்தனை முறை அவள் வீட்டில் நடக்கும் விருந்துகளில் யுவனுடன் சேர்ந்து கேலி செய்வதாக நினைத்து.. சிறுபெண்ணின் மனதை குத்திக் கொல்லபட்டிருக்கிறது என்று உணர்ந்து துடித்தவளாய் நின்றிருந்தாள் .

மூக்கு நுனி சிவக்கும் அளவிற்கு சினம் எழுந்த போதும் காட்டும் சமயம் இதுவல்ல என்பதால் , தாமரை நக்கலுடன் வார்த்தைகளால் விலசியதுடன் வந்திருந்தாலும் , கோபம் அடங்க மறுத்ததாகவே இருக்க.. எதிரே , கலங்கி நின்றிருந்த மான்சியை காணவும் உச்சம் தொட்டதாக இருந்தது .

அதனால் , " வாங்க எப்ப வந்தீய.. ஏன் இங்குன நிக்குறீய..", என்று விறுவிறுவென நடந்தவாறே ஒட்டாத தன்மையுடன் விசாரிக்கவும்..

" ஸாரி.. தாமரை.. நான் தெரியாம அவனோட சேர்ந்து ..", என்று கரம் பிடிக்கவும்..

" நீங்க எதைதான் தெரிஞ்சு செஞ்சீய.. சொல்லுங்க.. உன் புருஷன் படுக்கையில் எப்படின்னு வெளிப்படையா கேட்குறான்.. இவனெல்லாம் , உங்க உயிர்தோழன்.. ச்சீ... என்னைய அவனுக்கு அடையாளம் கூட தெரியலைக்கா.. முதல்முறை பேசுறோம்ங்கற நினைப்பு இல்லாம தரங்கெட்டத்தனமா பேசுறான்.. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு தூக்கி வச்சு கொண்டாடி.. கூட சேர்ந்து குடிச்சு கூத்தடுச்சதும் இல்லாம.. சீரழிஞ்சு நிக்குறீய.. இல்லை.. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. உங்கட்ட அவன் இது மாதிரி பேசுனதே இல்லேன்னு.. இன்னும் , கொச்சையா கேட்டு இருப்பான்.. அதுக்கு நீங்களும் ஈன்னு அவனுக்கு இளிச்சுட்டு விளக்கி இருப்பீங்க.. அப்படிதான.. ஒரு நல்ல மனுஷன எந்த அளவுக்கு சாகடிக்க முடியணுமோ அவ்வளவும் செஞ்சாசு.. போங்க.. போய் கட்டிப்பிடிச்சு.. யுவான்னு கொஞ்சீட்டு வாங்க.. பயந்தாங்கொள்ளி.. கீழ ஓடி போயிருப்பான் .. போய் , ஆரவ் ஸார் என்ன பண்றான்னு கேட்பான்.. விளக்கு பி...", என்று கத்திக் கொண்டே போகவும்..

" தா..ம.. ரை..", என்று அலறி இருந்தாள் மான்சி.. இசைக்கும் வாத்தியங்களின் சத்தத்தையும் மீறி அவளது குரல் ஒலித்திருக்க.. சினத்தில் நடுக்கத்தில் வெடவெடத்தவள் இதழ்களை இறுக்கிக் கொண்டு பார்வையால் சுட்டெறித்து நின்றிருந்தாள் தாமரை .

" அவன் இவ்வளவு வல்கரா நினைச்சு பேசி இருப்பான்னு எனக்கு தெரியலை.. ", என்று கண் கலங்கியவளாய் சொல்லவும் ,

" தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன செஞ்சு இருப்பீங்க..", என்று கைகளை கட்டிக் கொண்டு அவளும் ஆத்திரம் குறையாமல் கேட்டிட..

" ஏன்.. குட்டி இப்படி பேசுற..", என்றாள்..

" என்னை பலியாகிட்டீங்களே க்கா.. மென்மையான மனுஷனை பாறையா மாதீட்டீங்களே க்கா.. என் முகத்தை கூட பார்க்க மாட்டாங்கறாங்க.. ", என்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கதறிட.. மான்சிக்கும் என்ன செய்வது என்றே தெரியாமல் தாங்கியவளாக நின்றிருந்தாள் .

" எனக்கு அவிய காதலை முழுசா அனுபவிக்கணும் அக்கா.. ஒரே ஒருநாள் , என் பயம்.. துரோகம்.. குற்றணர்ச்சி இப்படி எதுவுமே இல்லாம அவியளோட வாழணும்.. அதேன் , நானே மறைமுகமா உண்மைய சொல்லீட்டேன்.. ஆத்திரப்படுவாக.. வேகப்படுவாகன்னு நினைச்சேன்.. ஆனா , என் மொகத்தையும் ( முகத்தையும் ) பார்க்க மறுப்பாகன்னு நினைக்கவே இல்லையே.. என்னால தாங்கிக்க முடியலை அக்கா.. ஏன்.. ஏன் இப்படி பண்ணீய.. ஏன் என்னை அனுப்புனீய.. ஏன் எனக்கு அவிய மேல இம்புட்டு பிரியம் வரணும்..", என்று கதற.. மான்சியின் அழுகை அதிகரித்ததே தவிர வார்த்தைகள் வெளி வரவில்லை .

தாமரையின் கதறலும் குறையாமல் போக.. ஆரவ்வை தேடத் துவங்கிவிட்டாள் . ஆனால் , அதிகம் சிரமத்திற்கு ஆளாக்காமல் அங்கு ஓடி வந்த ஆரா , தாமரையை பார்த்து ,

" குட்டி.. மாமா உன்னை தேடீட்டே இருக்காங்க.. உன்னை எங்கெல்லாம் தேடுறது.. தாலிகட்டுற நேரம் வந்திடுச்சு.. சீக்கிரமா வா.. மேடைல நிக்காம இங்க என்ன பண்ற.. ", என்று கைப்பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்ல.. இருந்த பரபரப்பில் , தாமரை நின்றிருந்த நிலைமையோ , கண்ணீரையோ.. கவனிக்க தவறியிருந்தாள் ஆரா .

Continue Reading

You'll Also Like

20.4K 428 58
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பா...
36.1K 2.4K 51
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
121K 5.6K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤