வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.‌. வா.. என் அன்பே - 77

971 35 12
By kanidev86

பகுதி - 77

' மித்ரன்..',  என்று அவள் அறியாமல் இதழ்கள் உதிர்த்து இருக்க.. அந்தகணம் அவனது கண்கள் சிவந்திருந்த நிலையை கண்டு.. ஓர் அடி பின்னே , தாமரை நகர்ந்திருந்தாள் .

" நீ என்ன நோக்கத்தில.. என் லைஃப்ல நுழைஞ்சு இருக்கேன்னு தெரியாது.. ஆனா , கண்டிப்பா அது எதுவும் , இந்த ஆர். பீ. எஸ்கிட்ட.. எப்பவும் தடவை பலிக்காது.. புரிஞ்சதா.. நம்பவச்சு கழுத்தறுத்திட்ட.. ", என்று விஷமாய் தொய்த்த வார்த்தைகளை விசிறியடித்து திரும்பி செல்ல.. உள்ளுக்குள் நொறுங்கியவளாகவே இருந்தாலும் , மின்னல் வேகத்தில்.. அவன் முன்னால் சென்று நின்றவளாலும் ,  ஏற்றுக் கொள்ள முடியாததாய்.. ' தன் மீது இருக்கும் நம்பிக்கை அவ்வளவு தானா..' என்று மறுகித்  தடுமாறியவள்.. சட்டென்று , உற்பத்தியான கண்ணீரை உள்ளிழுக்க போராடியவளாய்.. அவனை மறித்தவளாக ,

" எ..ன்..ன.. என்ன பேசுறீய.. மி..", என்று முழுமையாக வாய் திறப்பதற்கு முன்பாகவே.. அடைத்திருந்தான் . ' அவ்வளவு தானா..', என்று ஓய்ந்தே போனவளாய்.. சரணின் இதழுக்குள் வதைப்பட்டிருக்கும் , தன் இதழை இழுத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லாமல்.. உயிர் வலியை புதைத்து.. அப்படியே நின்றிருந்தாள் .

அவன் தன் இதழ்களின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கோபத்தை தாங்கி நின்றிருந்தவளுக்கோ , அவள் இதயம் வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருந்தது . இவ்வளவு நாள் சேர்ந்து வாழ்ந்தற்கு உண்டான அர்த்தமே மடிந்தது போல்.. "என்னைய உங்களால நம்ப முடியலையா..", என்று மறுகிக் கொண்டிருந்தவளின் மனமோ , ஊமையாய் அழுதுக் கொண்டே இருக்க.. அசையாமல் நின்றுவிட்டாள் .

' எவ்வளவு தைரியம் இருந்திருந்தால்.. ', என்றதற்கு மேல் அவனால் தன் சிந்தனையையும் தொடர முடியாமல்.. அழுந்த புதைந்திருந்த இதழில் வெளிப்படுத்தித் தண்டித்துக் கொண்டிருந்தான் . இதற்கு முன் சரணின் , வன்மையான தீண்டலை கண்டிராதவள் அல்ல.. ஆனால் , இன்று கொடுக்கும் முத்தத்திலும்.. எலும்புகளே உடைப்படும் அளவிற்கு அணைக்கும் அணைப்பிலும் , கடுங்கோபம் மட்டும் அல்ல.. முழு வெறுப்பை மட்டுமே உணர்ந்திருந்தாள் .

தாமரையின் உதட்டில் இரத்தச் சுவையை உணர்ந்த பிறகே விலகியவன்.. அவள் முகம் காணவும் மறுத்தவனாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் . அவள் பேசுவதையே , அவன் விரும்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியதில்.. பொங்கிய கேவல்களை கரத்தால் அடக்கி.. அழுகையில் குழுங்கியவளாக.. . சரண் வருவதற்கு முன்பாகவே.. இதயம் கனக்க வெளியேறிவிடலாமா என்று சிந்திக்க துவங்கிட்டாள் . 

' ஏன் எப்படி செய்தாய்..? ', என்று கேள்வி கேட்டு அறைந்திருந்தாலும் தாங்கியிருப்பாள் ‌ போலும்... ஆனால் , பேசவும்.. முகம் காணவும் மறுக்கும் சரணின் செயல்.. இப்பொழுது , காட்டிய முழு வெறுப்பிலும்.. எங்கோ , ஓரத்தில் எதிர்ப்பார்த்திருந்த நம்பிக்கை செத்து மடிந்ததில்.. தாமரையும் சரணிற்கு நிகராக.. துடிதுடித்துக் கொண்டிருந்தாள் ‌ .

ஒற்றை வார்த்தை பேசாது அவன் நகர்ந்திருந்த செயல்.. வெகுவாகவே , அவளை தாக்கி இருக்க.. மீண்டும் , அதே அறையில் நின்றிருந்தால் , எங்கே.. அவன் திருமணத்திற்கும் வராமல் சென்று விடுவானோ.. என்று அச்சம் ஒருபுறம் எழுந்தாலும்.. மேலும் , காயப்பட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவளாய் தவிக்கையில் , ரிச்சர்ட்டிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது..

" அண்ணே.. சொல்லுங்க அண்ணே.. எழுந்துட்டீயளா..", என்றாள் வரவழைத்த உற்சாகத்துடன்...

எவ்வளவுக்கு எவ்வளவு இயல்பாக காட்டிக் கொண்டாலும் , ரிச்சர்ட் , அவளது எதிர்பார்ப்பை கேள்வியால் முறியடித்து இருந்தான் .

" தாமரைம்மா.. என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி பேசுற.. ", என்று அக்கறையுடன் அவன் வினவ..
கண்களை அதிகமாக கரித்துக் கொண்டு வந்தது .

" அப்படி எல்லாம் எதுனும் இல்லை.. ண்ணே.. சரியா தூக்கம் இல்லேல.. அதேன்.. ஆமா , கல்யாண மாப்பிள்ளை நீங்க என்ன.. எனக்கு போன் செஞ்சு பேசீட்டு இருக்கீய.. கிளம்ப ஆரம்புச்சுட்டீகளா இல்லையா..", என்றாள்.

" ம்.. அதுல்லாம் நான் குளிச்சிட்டேன்.. நீ இன்னும் இங்க வராம என்ன பண்ற.. பாரீஸ்ல இருந்தே எல்லோரும் வந்து சேர்ந்துட்டாங்க.. இங்க இருந்துட்டே நீ இன்னும் வர..", என்று முறுக்கிக் கொள்ள.. ஹா..ஹா.. என்று தன் சோகம் மறந்து அழகாய் சிரித்தவள்..

" நானும் கிளம்பீட்டேன் ண்ணே.. அதிகபட்சம் பதினஞ்சு நிமிஷத்துல.. அங்க இருப்பேன்..", என்று சமாதானம் சொல்கையிலேயே..

சாந்தியக்கா.. அவனிடம் இருந்து அலைபேசியை  கைப்பற்றியவர் , "இந்த வியாக்கியானம் எல்லாம் நல்லாதேன் பேசுற.. ரவைக்கே ( இரவிலேயே..) இங்குன தங்கியிருந்தா‌.. ஆயி சிரசம் ( தலை ) வெடிச்சிருக்குமோ.. இன்னும் செத்த நேரத்துல முகூர்த்தமே ஆரம்பிக்க போகுதாம்.. இதுல தங்கச்சிகாரி.. வர காமணி ( கால் மணி ) நேரமாகுமாக்கும்.. உன்னோட கலியாணத்தில.. எம் புள்ள இப்படியா இருந்தான்.. எம்புட்டு பாடுபட்டான்.. அத்தனையும் ஏத்தம்.. ஏன் இருக்காதுங்கறேன்.. ", என்று நிறுத்தாது.. அவள் கூற வருவதையும் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டேன் என்கிற பிடிவாதத்துடன்.. விடியலின் வெளிச்சமும் பரவியிராத ,
அந்நாளில் இரண்டாம் ஆளாய் , சுப்ரபாதமாக வசைப் பாடியவரின் கரத்தில் இருந்து பறிப்பதற்குள்.. ரிச்சர்ட் நொந்தே போனான் .

" ம்ச்சு.. யக்கா.. இப்போ என்னத்துக்கு புள்ளைய வையுறீய.. நீங்க அங்குட்டு போய்.. கெளம்புற வழிய பாருங்க..", என்று கவசமாய் காத்தவன்..

" குட்டி.. சரண் வந்துட்டாரா..", என்றான் .

" ம்.. வந்துட்டாக ண்ணே.. ஹா..ஹா.. என்ன சாந்தியக்கா.. என் மேல கொலைவெறில இருக்கா போல..", என்று அழகாய் புன்னகைத்தவள்..

" ஆரா வந்துட்டாளாண்ணே..", என்று விசாரிக்க..

" ஆரு ( யாரு ) வந்தா இவளுக்கு என்னவாம்.. இவளால எப்பதேன் இங்குன வர முடியுமாம்.. முதல்ல.. அதை கேட்டு சொல்லு.. ", என்று சாந்தியே பதிலடி கொடுக்க..

" யக்கா.. இப்ப நீ சும்மா அங்குட்டு போறியா இல்லையா.. போ.. போய் வேற வேலை இருந்தா பாரு.. சும்மா புள்ளைய வஞ்சீட்டே இல்லாம.. நாலு மாசம் கழுச்சு வீடு திரும்பியிருக்க மனுஷனை , அவ பத்துக்காம.. யாரு பார்த்துப்பா.. நீ போ.. நீ போய் கிளம்புற வழிய பாரு.. நான் பேசீட்டு வரேன்.. ", என்று சத்தமிட்டவன்.. அலைபேசியுடன் வெளியேறியவனாய்..

" குட்டி..  சரண் எப்ப வந்தாரு..", என்று தாமரையிடம் உரையாட துவங்கி இருக்க.. சாந்தியின் சத்தம் கதவை தாண்டியும் இருவருக்கும் கேட்டதாக இருந்தது .

" ம்ஹும்.. ", என்று அழகாய்  உதட்டை சுழித்தவள்..

" இப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. ", என்று சோர்வாய் பதில் சொல்லியவாறு தாமரை அமைதியாக..

" ம்ச்சு.. அக்கா பேசுறதை மனசுல வச்சுக்காத.. சரியா.. நீ இங்கேயே தங்கலேன்னு ரொம்பவே வருத்தம்.. அவங்க கோபத்தை பற்றி உனக்கு தெரியாததா.. நேர்ல பார்க்கறச்ச.. பறந்தே போயிடும்.. ஓகேவா.. சமத்துப் புள்ளையா சீக்கிரமா ரெண்டு பேரும் கிளம்பி வாங்க..", என்று ரிச்சர்ட் பக்குவமாக பேச.. ' ரெண்டு பேருமா..' என்று தோன்றிய மறுநிமிடம் விரக்தி புன்னகை பிறக்க.. எதிரில் தெரிந்த பிம்பத்தின் இதழ் காயம்.. பல கதைகள் பேசியதாய்..

" சரி ண்ணே.. வைங்க.. உடனே வரேன் ...", என்று கூறி அழைப்பை துண்டித்து.. அழுத்தமாக , தலையை பிடித்தவளாக அமர்ந்திருந்தாள்.. சரணின் கோபம் , எதிலும் இயல்பாக இருக்க முடியாமல் தடுமாற வைத்திருந்தது . அத்துடன் சாந்தியின் சினமும் இணைந்துக் கொள்ள.. சரண் வந்த பிறகு , தனித்து செல்லவும் விருப்பம் இல்லை.. அதேநேரத்தில் , அவன் என்ன சொல்வானோ என்ற கவலையும் ஆட்கொள்ள.. சோர்ந்தவளாய்.. அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டாள் ‌.

ரிச்சர்ட்.‌.. எங்கே தனிமரமாக நின்றுவிடுவானோ.. என்று ஏங்கிய எத்தனை இரவுகள் உண்டு . ஆனால் , அது உடைப்படப் போகும் சந்தோஷமான நந்நாளான இன்று.. அதன் மகிழ்ச்சியை முழுமை கொண்டாட முடியாமல் அழித்திருந்தது.. தெரியாமலேயே , செய்திருந்த பிழை .. அச்சிறுப் பெண்ணிற்கு , அவனால் அறியப்படும் வரை அது பிழை என்றே தெரியாமலும் இருந்தது அதைவிடவும் கொடுமையான ஒன்று .

அன்று யாரோ ஒருவரின் சதியால் , பலியானாள் என்றால்.. இன்று , தன்  நிலையை கேட்கவும் விருப்பமற்று இருப்பவனாக.. நடந்துக் கொள்பவனின் செயல்.. கோடாளியால் இதயத்தை இரண்டாக பிளப்பது போல் வலி கொடுத்ததில் , வழியும் வெப்ப நீரால் தன் நிலையை நொந்தவளாக ஓய்ந்து இருந்தவளின் தோள் மீது கரம் விழ..  திடுக்கிட்டு யாரென நிமிர்ந்து பார்த்தாள் .

அவள் கண்களில் விரவி இருத்த சோகத்தில்.. மனம் வருந்திய ராம்..

"  எப்போ ம்மா கிளம்புற.. ", என்றார் .

" இதோ.. இப்போ மாமா..", என்று இமைக்கொட்டி நிலைப்படுத்த முயன்று தோற்றவளாய்.. இவர் எப்பொழுது வந்தார் என்பது போல் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றிருந்தவள் நினைக்க..

சரண் வருகையை தெரிந்ததும் விழித்திருந்த ராம்.. எவ்வித சிந்தனைக்கும் வழி வகுக்காதவராய் வேகமாக , மாடிக்கே வந்துவிட்டார் . ஆனால் , திறந்திருந்த கதவின் வழியே , அவன் கோபத்தால் அவன் நடந்துக் கொண்ட முறையும்.. பேச்சும்.. இப்பொழுது , தடித்திருந்த மேல் உதட்டில் இருந்த இரத்தக் கசிவும்.. பெண் பிள்ளையை பெற்றவராய் துடிதுடித்து போனார் . அதேசமயம் , மகனகன் மீது கடுங்கோபமும் கிளர்ந்து எழுந்திருந்ததாய் . ஒரு முடிவிற்கு வந்தவர் போல் ,

" நீ முதல்ல புறப்படு ம்மா.. நாங்க எல்லோரும் வரோம்..", என்று சொல்ல.. அவளது பார்வை குளியலறையை தொட்டு மீண்டதாய்.. அதை அவரும் கவனிக்க.. அய்யோ.. என்றே நினைக்கத் தூண்டியது . மருமகளின் கண்ணீர் பலமாக தாக்கயதில் ,

" ஷ்.. அழக் கூடாது.. இன்னைக்கு உன்னை நினைச்சு கவலைப்படுற நாள் இல்லை . ரிச்சர்ட் , ரொம்பவே உன்னை எதிர்ப்பார்த்திட்டு இருப்பான்.. ஸோ , சீக்கிரமா கிளம்பு.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.. சரியா..", என்று ஆதுரமாய் கோதியவராய் சொல்ல.. ம்.. என்பது போல தலையசைத்து நகர்ந்திருந்தாள் .
ராமும் அகன்றிருக்க , தாமரை ஈன்ற பெயருக்கு ஏற்றார் போல் தாமரை வண்ணத்தில் தங்க சரிகை பட்டு உடுத்தி.. இளம் பச்சை நிறத்தில் அவளது கைவண்ணத்தில் அலங்கரித்திருந்த குந்தன் வேலைப்பாடு மிகுந்த ஜாக்கெட்.. என்று அணிந்து வந்தவள் . தளர்வாய் கூந்தலை பின்னலிட்டு .. ஏற்கனவே , சரண் பரிசளித்து இருந்த ரூபி நகைகளை காது , கழுத்து.. மற்றும் இரு கரங்களுக்கும் அணிந்து.. தடித்திருந்த உதட்டை மறைக்கும் வேலையில் மூழ்கியவள்.. அதில் வெற்றியையும் அடைந்துவிட.. பார்வை தன் போல் திறக்கப்படாத கதவின் மீது நிலைத்து.. தான் வெளியேறாத வரை அவன் வரப் போவது இல்லை என்று புரிந்த தருணத்தில்.. துணிவு இழந்தவளாய்.. இறுக விழிகளை மூடி , தன்னைத்தானே.. போராடி சமன் செய்து , சகோதரனின் திருமணத்தை முன் நிறுத்தி.. அதற்குள் மூழ்க , நினைத்து  வெளியேறிவிட்டாள் .

தாமரையின் கால்கள் வெளியேறியதும்.. சரண் தன் அழுத்தமான கால் தடங்கள் அறைக்குள் எதிரொலிக்க துவங்கி இருந்தது .

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

ஸாரிப்பா.. 😔😔😜😜😜💕💕💕 கண்டிப்பா, எடிட்டிங் மிஸ்டேக்ஸ் இருக்கும்.. எப்பவும் போல நீங்களே திருத்தி சரியா படிச்சிடுங்க..

கனி தேவ் 💕💕💕

Continue Reading

You'll Also Like

67.1K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
27.4K 2.6K 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.