வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.‌. வா.. என் அன்பே - 75

1K 41 10
By kanidev86

பகுதி - 75

எதை பார்த்தாலும் , எதை தொட்டாலும் ஆட்டுவிக்கும் தாமரையின் நினைவுகளை... அவ்வளவு எளிதில் அவனால் கடந்துவிட முடியவில்லை .  மான்சியால் ஏற்பட்ட வலியை குடிக்குள் மூழ்கி மறந்திருந்தவனால் , இவளிடம் அனைத்திலும் தோற்றுதான் போனான் . கண்களை மூடினாலே மிரண்ட பார்வை..  கெஞ்சும் முகம்.. துடிக்கும் உதடுகள்.. என்று பதிந்த ஒவியமாக வலம் வர.. கசக்கிப் பிழியும் உணர்வில் இருந்து தப்பிக்க முடியவில்லை .

தொய்ந்து அமர்ந்தவனுக்கு நாளைய பணிகளின் அட்டவணை அணி வகுத்து நின்றிருக்க.. தன் புத்தியின் திசையை மாற்ற நினைத்தவனாக , பணிக்குள் மூழ்க நினைத்து.. கையெப்பமிட வேண்டிய கோப்பைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.. மூன்றாவதாக இருந்ததோ ,
காற்றில் படபடத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த  வங்கியின் காசோலை .

அதனை பார்த்ததும் , சிறிதுநேரம் உறங்கிக் கொண்டிருந்தது.. செல்லப்பிராணி விழித்து துள்ளிக் குதித்தது போல்.. மீண்டும் , தாமரையின் அசைவுகள் . மென்மையாக , அவன் விரல்கள் காசோலையை வருட.. மூளையின் யோசனைகளும்.. அவளுடன் கழித்த உன்னத நினைவுகளை தாங்கியதாய்..

காதலில் கெஞ்சலும் மிஞ்சலும் சுகம்.. அந்த சுகங்களை  அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாள் தாமரை.

மனைவியின் மீது இருக்கும் நேசத்தை உணர்ந்த தருணத்தில் இருந்து , சரண் மித்ரன்  தயக்கம் சிறிதுமின்றி , நாள் தவறாமல் அவள் இடத்தில்.. அவன் காதலை உணர்த்திக் கொண்டே இருக்கவும் தவறியதில்லை .

அதுபோலவே , ஒருமுறை , வேலையின் காரணமாய் இரு தின வெளியூர் பயணத்தை முடித்து வீடு திரும்பி வந்தவன்.. அன்றைய இரவில் , எப்பொழுதும் போல் அவளின் விலகலை கண்டு மனம் சுருங்கினாலும் , வெளிக்காட்டாதவனாய்.. பின்னிருந்து அவளது இடையை இறுக்கிக் கொள்ள.. எப்பொழுதும் போல் வெடவெடத்தவளாய்.. மிரண்ட விழிகளால் ஆடவனை வீழ்த்த.. அழுத்தமாக அவள் இதழில் முத்தம் பதித்து , அவர்கள் உறவை நினைவுப்படுத்து முனைப்பில் இறங்க ,

" ஸ்.. ஸ்.. ஸா..ர்.. ", என்று தாமரையின் குரல் பல தடுமாற்றத்துடன் வெளி வந்த அழகில்..

" ம்.. ம்..", என்று அதை ரசித்தவனாகவே , புதைந்திருந்த கழுத்தில் இருந்து விலகாமலேயே கேட்டிட..

" நா.. நா..ன் போ..கணு..ம்.. ", என்றாள் .

" ஏன்..", என்றதற்கு

' ம்ச்சு இது என்ன கேள்வி.. சாப்பிட கூப்பிட வந்தவளை விடாம பிடிச்சு வச்சிட்டு..', என்று உள்ளுக்குள் சலித்தவளாக..

"  கீழே எல்லோரும் வெய்ட் பண்றாங்க.. டிபன் வைக்கணும்..", என்று கூறியவளுக்கோ , குரல் வெளி வரவே மறுத்து.. காற்றுக்கு தத்துப்பிள்ளையாகி போனது போல் , கிசுகிசுக்க.. மேலும்.. மேலும்.. தீவிர ரசிகனாக மாறியவனுக்கோ , அவளை விட்டு பிரியவே மனமில்லாமல் போக ,

" ஏன்.. நீ போகலேனா.. யாரும் சாப்பிட மாட்டார்களா..", என்று கூதூகலத்தை உள்ளுக்குள்ளே புதைத்து.. குதர்க்கமாக கேள்வி கேட்டவனின் குரல் இறுக்கத்துடனே வரவும் ,

" அச்சோ.. அப்படி இல்லை ஸார்.. பரிமாறிட்டு இருந்தேனா.. நீங்க கூப்பி..ட்..ட..தும்.. பா..தி..லேயே .. வ..ந்து..ட்..டேன்.. அ..தா..ன்.. எ..து..னும் முக்கியமான வே..லை.. இல்லேனா.. போ..க..வா..", என்று திக்கித் திணறி சொல்ல..

அடிப்பாவி என்று மனதோடு அதிர்ந்து.. பின் புலம்பலுக்கு தாவியதில்.. அரை விநாடி ,  எவ்வித அசைவுகளும் இல்லாமலேயே  அவனிடத்தில் போனது .

அவனது அசைவற்ற நிலையை கண்டவளுக்கோ , ' போச்சு.. என்ன சொல்ல போறாகன்னு தெரியலையே.. ', என்று அலறி.. கால்கள் வெடவெடத்து துவள , மறைக்க முயன்றவளாய் ,

" ஸா..ர்..", என்று இழுக்கவும்..

" அப்போ.. உனக்கு இது முக்கியமானதா தெரியலை.. நான்.. நான்.. உனக்கு முக்கியமானவனா‌.. தெரியலை.. இல்லையா..", என்று முழுமையாக அவளைவிட்டு பிரிந்து நின்று கூர்மையாக கேட்டிட..

" அச்சோ.. நான் அப்படி சொல்லல.. அ..து.. நா.. அங்கே எல்லோரும் இருக்கறாக.. நா..ன்.. நீ..ங்க.. " என்று கோர்வையாக கூற முடியாமல்.. அவன் முகம் காணவும் தடுமாறி நிற்க , கூர்மையான பார்வையை மட்டுமே வீசியவனாக நின்றிருந்ததில் மேலும் தடுமாறினாலும் , அவனது அசையா தோற்றம்.. ' உன் பதில்.. கண்டிப்பாக எனக்கு வேண்டும்..', என்ற அழுத்தமும் தொக்கி நிற்க..

' என்னவென்று சொல்ல முடியும்.. நீங்க அழைச்சதுக்கே.. உங்க தங்கை கேலி செஞ்சு ஒரு வழி பண்ணீட்டாங்க.. இப்போ , இப்படினா.. அம்புடுதேன்..', என்று வாய் திறவாமல் கதறியவள்.. விழிகளால் கெஞ்ச துவங்கவே , சுள்ளென்று , அவனுக்கு சினம் தலைக்கு ஏற.. வேகமாக , அவளது கையை பிடித்து இழுத்துச் சென்று.. கதவின் அருகே வந்ததும் , அதே வேகம் குறையாமல் , வெளியே தள்ளி விட்டு ,

" போ.. போய்.. வீட்டுல உள்ள அத்தனை பேருக்கும்.. என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செய்.. யாரு வேணாம்னு சொன்னது.. உன் பின்னாடி சுத்தி சுத்தி வரேன்ல.. அப்போ உனக்கு இப்படிதான் நினைக்க தோணும்.. உன்னை பார்த்து ரெண்டு நாள் ஆச்சேங்கற தவிப்பு , எனக்கு மட்டுந்தான்டீ இருக்கு.. தொல்லை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருந்திருக்க.. அது தெரியாம வந்து சேர்ந்துட்டேன் போல.. ", என்று அடங்கா சினத்தையும் , சத்தமில்லா உறுமலில் வெளியிட்டவன்.. " என் ஆசையும் காதலும்.. உனக்கு.. ச்சே..", என்று அதற்கு மேல் தாளாதவனாக அவளை தாண்டி செல்ல முயல..

மலுக்கென்று , கண்களில் இருந்து வெளி வந்த நீருடன்.. அவனை மறித்த தாமரை , " நான் அப்படி எல்லாம் யோசிக்கவே இல்லை.. நீங்க வந்ததும் வராததுமா மாடிக்கு வர சொன்னதுக்கே.. சசி ரொம்பவே கேலி பண்ணாவ.. இப்ப.. லே..ட்..", என்று அவள் பேச பேச.. அதிகமாக , முறைப்பை வழங்கியவன் கடந்து செல்ல முயல..

" அதேன்.. ஒருதா ( முழுமையாக ) வேலைய முடி..ச்..சு..ட் டு.. சீக்கிரமா ரூமுக்கு வரலாம்னு.." என்று அவசர அவசரமாக அவன் செல்வதற்கு முன்பாக கூற வேண்டும் என்று  சத்தமாக கூறியவளால் முழுவதுமாக , கூற முடியாமல் தடுமாற.. அந்த தடுமாற்றமும் அவளுக்கு , மேலும் அழுகையை அதிகரிக்க செய்ததாய் இருந்ததில் தலை கவிழ்ந்து.. கண்ணீரை தொடர..

எப்பொழுது அவள் அருகே வந்திருந்தானோ , " சீக்கிரமா ரூமுக்கு வந்து..", என்று இழுத்து நிறுத்த.. தாமரையோ , தலையை நிமிரவே இல்லை..

" பாப்பா..", என்று அவளது தாடையை தொட்டு  தூக்கி நிமிர்ந்து பார்க்க அவன் வைக்க.. அழுத்தமாக , இறுக்கி விழிமூடி நின்றிருந்தாள்.. அறையின் வெளியே இருக்கும் நினைப்பே இல்லாதவர்களாக.. சரணோ , அவனை காண மறுத்த விழிகளில் வலுவாக , தன் முரட்டு இதழை பதித்து மீள.. எப்பொழுதும் போல் , அவளது விழகள் பேசிய அலைபுரிதலில்.. அவனே , இறங்கி வர வேண்டியதாக இருந்தது .

" ஓய்.. பாப்பா.. ம்ச்சு.. பாரு.. என்னை பாருன்னு சொல்றேன்ல..", என்று அழுத்தமாக சொல்லிய பிறகே.. பார்த்தவளின் இரு கன்னங்களை தாங்கியவன்..

" சசி.. கிண்டல் பண்ணினா என்ன.. ஆமா.. என் ஹஸ்பென்ட் என்னை கூப்பிட்றாங்க.. உனக்கு என்னன்னு கேட்க வேண்டியது தான..", என்று கூற.. அதில் , மேலும் மலைத்தவளாய் விழி விரிக்க.. தாமரையின் மலைப்பு சரணிற்கு வலியையே கொடுத்திருந்தது .

" வா.. கீழே போலாம்..", என்று எதுவுமே பேசாமல் , கரம் பிடித்து அழைத்து சென்றுவிட்டான் .

கீழே மொத்தக் குடும்பமும் , உணவு மேஜையின் முன் அமர்ந்திருக்க.. அவர்களுடன் மிகவும் , இயல்பாகவே சரண் உரையாடிக் கொண்டிருந்தான். ஆனால் , தாமரையே பெரிது தடுமாறி போனவளாய்... அவன் சினந்து வெளியிட்ட வார்த்தைகளே தலைக்கு மேல் சுற்றி.. சுற்றி வருவது போல் இருக்க.. அதன் தாக்கம் , ராம் சாம்பார் கேட்ட ராமிற்கு.. அவள் பரிமாறிய சட்டினியில் தெரிந்தது .

" அண்ணீ.. அப்பா சாம்பார் கேட்டாங்க..", என்று விஷமமாய் நமுட்டு சிரிப்புடன் சொல்லி.. சசி  சமத்தாய் தட்டில் புதைந்து கொள்ள..

" அச்சோ.. ஸாரி.. ஸாரி மாமா.. நா.. தெ.‌ரி..யா.. ஸாரி மாமா..", என்று படபடப்பு கூடியவளாய் பதறவும்.. சரணின் கண்டன பார்வைக்கு ஆளான சசியோ.. ' க்ரேட் எஸ்கேப்..', என்று முணுமுணுத்து காலியான சட்டை தூக்கி கொண்டு கைக் கழுவும் சாக்கில்.. அவ்விடத்தில் இருந்து நகர்ந்திருந்தாள் .

" தாமரை பரவால்ல.. விடு இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்,", என்று ஒருவர் மாற்றி ஒருவர் அமைதிப்படுத்த முயன்றும் தெளியாமல் அவள் தவிக்க..

" பாப்பா.. வந்து உட்கார்.. பூமா.. இங்க வாங்க..", என்று சரண் அழைத்ததுடன் சாப்பாட்டில் கவனமாக , ஒருவாறு உணவை வயிற்றுக்குள் திணித்தவள்.. சில வேலைகளில் உதவி செய்த பின் மீண்டுமாக ராமிடம் மன்னிப்பு வேண்டி நிற்க , ' அட ஆண்டவா.. இந்த புள்ளைய எப்படி சமாளிக்கிறான்னே தெரியலையே..' என்று அவரையும் கதறடித்த பின்பே மாடி ஏறி இருந்தாள் .

அன்னநடை பயின்று , ஒருவழியாக.. தயக்கங்களை கை விடாதவளாக  , அவர்களது அறைக்குள் அடியெடுத்து வைக்க.. ஆறடி சொகுசு மெத்தையில் , கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தவனின் கைகளோ மார்பில் பின்னிக் கிடக்க.. ரோஜா வண்ணத்தில் இருக்கும் இரு உள்ளம் பாதங்களும் பளிச்சென்று தெரியும் விதமாக கால் நீட்டி சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தவன் .. அசையா பனிப் பார்வையில் வரவேற்க ,

தாமரைக்கோ.. அறையின் வாயிலேயே கால்கள் பின்னிக் கொள்ள துவங்கிவிட்டது..  அதன் விளைவாய் , கதவின் அருகேயே உறைந்து நின்று விட்டாள்..

அவளது பயமும் தடுமாற்றமும்.. ஆயிரமாயிரம் அரிவாளால் இதயத்தை வெட்டுவது போல் வலியை கொடுக்கவே ,   " நான் என்ன செய்தா.. நீ என்னை ஏத்துப்ப..", என்று சரண் ஆழ்ந்த குரலில் தவிப்புடன் வினவியவனுக்கோ , அரைநொடி தாமதமும் பெரும் தவிப்பிற்கு உள்ளாகியது போலானது .

" அச்சோ.. என்னங்க ஸார்.. இம்புட்டு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீய.. நா.. நா..ன்.. ", என்று வேகமாக ஓடிச் சென்றவள்.. சிறிதளவும் , தயக்கமில்லாமல்.. தரையில் அமர்ந்து அவனது பாதங்களை பிடித்துக் கொண்டு கண்ணீர் சொரிய.. தவிப்புடன் கேவியவளின் செயலும் ஆடவனை குளிர்விக்கவில்லை..

சரணோ , அவளைவிடவும் வேகமாக எழுந்தவன்.. அவள் கரத்தை தனக்குள்ளாக பொதித்துக் கொண்டதோடு அல்லாமல் சம்மனமிட்டவனாய்.. மெதுவாக , பிடித்து இழுத்து அவன் மடியிலேயே அமர வைத்துக் கொண்டான்..

அவளது தோள் வளைவில் தன் தாடையை பதித்து , " நான் என்ன சொல்லீட்டு இருக்கேன்.. நீ என்ன செய்ற.. புரிஞ்சுக்கவே மாட்டியா..", என்று கலங்கி வெளி வர..

அவளால் , வாய் திறக்கவும் முடியாமல் போனதில்.. அமைதியாக , தலைக் குனிந்த நிலையிலேயே அமர்ந்திருந்தாள்.. அவள் தாடை தொட்டு முகம் காண வைக்க போராடி தோற்றவனாக..

" நான் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கினா.. நம்புவியா.. நான் உன்னை மனசார ஏத்துகிட்டேன்னு..  நம்ம மேரேஜ்ஜை அக்செப்ட் பண்ணீட்டேன்னு நம்புவியா.. ", என்று விரல்களால் அவன் அணிவித்திருந்த தாலி செயினை மென்மையாக வருடிக் கொண்டே அழுத்தமாக வினவ..

அடுத்தகணம் துள்ளி எழுந்தவள்.. "நிசமாதான் சொல்லுறீயளா.. ", என்று விழி விரித்து ஆச்சரியமாக கேட்டதோடு அல்லாமல் சிறு படபடப்பும் தொற்றுக் கொண்டவளாக அவசர அவசரமாய் கேட்ட செயலில் , அழுத்தமாக எழுந்த குற்றணர்ச்சியை அடக்கியவன்.. தன் எதிரே , பரபரப்புடன் இருப்பவளை ஆர்வமுடன் வருடியவரே , " ம்..", என்பது போல் தலையசைக்க..

" செத்த பொறுங்க.. ( சிறிது நேரம் காத்திருங்கள் ) நான் இப்பவே எடுத்தாறேன்..", என்று அவசரமாக மொழிந்தவள்.‌.. சிட்டாக பறந்து அவளது பெட்டியை திறக்க.. வருத்தம் தொய்ந்த புன்னகையை சிந்திருந்தது சரணின் அதரங்கள் .

ஐந்து நிமிடங்களுக்கு மேலாக , அவளது பெட்டியை குடைந்துக் கொண்டிருந்தவள்.. " ஆங்.. இதேன்..", என்று திருப்தியை வெளியிட்டவளாக , சரணை நெருங்கி..

" இந்தாங்க.. அ..ப்..பாடி.. இப்பதேன் எனக்கு நிம்மதியா இருக்கு..", என்று கோடி மின்னல்கள் முகத்தில் இறங்கியவளாய்.. அவன் முன் நீட்டிட..

சரண்.. " என்ன இது..", என்றான் .

அவன் அவ்வாறு கேட்கவும் , நொடிக்குள் குழப்பத்தை தத்தெடுத்தவளாக.. துள்ளல் மறைந்து போக உள்ளடங்கிய குரலில் , " நீ.. நீ..ங்க.. தான பணத்தை திரும்ப பெறதா ( வாங்குவதாக) சொன்னீய.." என்று சொல்ல..

மிக மிக இயல்பாகவும் எழிலாகவும்.. அவளது வட்டார மொழியில் பேசுகையில்.. உடனடியாக, புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறினாலும்.. நிதானமாக யோசித்துப் பார்த்தால் , இதழ் ஓரத்தின் துடிப்பை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவனுக்கு சவாலாகவே இருக்கும் .

" ஆமா.. நான் இல்லேன்னு சொல்லலையே.. ஆனா , இது எதுக்கு தர..", என்று அவள் நீட்டிக் கொண்டிருந்த வங்கி புத்தகத்தை வாங்கியவனாய்.. சாதாரணமாக பேசிக் கொண்டே , முன்பு போலவே இழுத்து மடியில் அவன் அமர்த்திக் கொள்ள.. குழப்பத்தில் இருந்ததாலோ என்னவோ , தாமரையும் ஒற்றை தொடையில் அமர்ந்து.. அவனை பார்த்தவளாக..

" அப்புறம்.. இதை வங்கில கொடுத்தா தானே.. பணம் கொடுப்பாக.. ", என்று இரு புருவங்கள் முடிச்சிட்டு குழப்பம் மிகுந்தவளாய் அவனிடமே கேள்வி எழுப்பினாள்.. அதற்கு மேல் , மனைவியின் வெகுளித்தனத்தை தாளாமல்.. கர்வந்தவனாக வாய்விட்டு சிரித்து..

" ஓ.. அப்போ பேங்க்ல பாஸ் புக்கை நீட்டினாலே போதும் பணம் தந்திருவாங்களா.. ", என்று கண்கள் மின்ன பேசி.. கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு சிரித்தவனால் , வெகுநேரம்.. சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை..

" பா..ப்..பா.. பாப்பா..ஆ..", என்று நெற்றியுடன் முட்டியவனாக , சிரிப்பை தொடர , கேலி செய்கிறான் என்று தெளிவாகவே புரிந்திருந்துக் கொண்டவளுக்கு முகமே கூம்பியதாய்‌..

மனைவியின் முகம் வாடவும் , நிதானத்திற்கு வந்தவன்..  ம்.. ம்க்கும்.. என்று கனைத்து என்று சிரிப்பை அடக்க முயல.. தாமரையோ.. அவன் மடியில் இருந்து எழுவதற்கு குறியானாள் . அதில் , சுதாரித்தவன்.. வலக்கரத்தால் அவளது இடையை இறுக்கமாக பிடித்து நகரவிடாது செய்து ,

  " ஓய் பாப்பா.. எந்த பேங்க்ல பாஸ் புக் நீட்டினாலே பணம் கொடுக்குறாங்க..", என்று கேட்டவனின் குரல் முற்றிலும் கேலி மறைந்து விசாரணை தோரணையில் இறங்கி இருக்க..

" ம்.. எங்க பேங்குல.. நான் ரமேஷ் அண்ணேட்ட கொடுத்தா.. கேஷியர் கூப்பிட்டு பணம் கொடுப்பாக..", என்றாள் வெடுக்கென்று முகத்தை தூக்கி வைத்தவளாக.. அதில் , சரண் மயங்க.. இதழின் மிக அருகே இருந்த அவளது கன்னத்தில்.. பற்கள் பதிய வலிக்காமல் கடித்தவன் ,

" அந்த பேங்க பெயர் என்ன.. என் பொண்டாட்டி பாஸ் புக் நீட்டினாலே பணம் கொடுக்குற  பேங்க்..   ", என்று கடித்த இடத்தில் மூக்கை உரசி விளையாட..

" கேலி பேசாதீய.. நான் இதுவரைக்கும்..  எனக்கு அப்படி தான் பணம் கொடுத்தாக.. நீங்க போய் கொடுத்தாலும் பணம் தருவாக.. ", என்று கடுகடுவென சொல்ல..

" ஹா.. ஹா.. எது.. உன் பாஸ்புக் நான் கொடுத்தா.. எனக்கும் பணம் தருவாங்களா.. இதுல உன் போட்டோ தான இருக்கு.. என்னோடது இல்லையே அப்புறம் எப்படி தருவாங்க.. " என்று அதே சிரிப்புடன் சொல்ல.. தாமரை திருதிருத்திருந்தாள் .

" அச்சோ.. அப்போ.. என்கிட்ட தான் கொடுப்பாகளா‌.. உங்களுக்கு தர மாட்டாகளா.. ", என்று அதையும் அப்படியே நம்பியவளாய் திகைக்கவும் , அவ்வளவே , சரணால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

" ஸா..ரி..", என்றவனாய் அவளை இறுக்கமாக அணைத்து தொடர்ந்து மனம்விட்டு சிரிக்க.. முதலில் செல்ல கோபத்தில் சிலிர்த்தவள்.‌. பின் , அவன் மனம் திறந்த சிரிப்பை மெல்ல ரசிக்க துவங்கியதில் அமைதியானவளாய் , விரும்பியே அவன் கைச்சிறைக்குள் அடங்கி இருந்தாள் .

சில பல நிமிடங்கள் கடந்தே இயல்பானவன்.. தாமரையிடம் வங்கியில் பணம் பெறும் முறையையும்.. காசோலை பற்றிய விவரங்களையும் பொறுமையாக விளக்க.. அமைதியாக , உள்வாங்கியவள்..

" ஓ.. அப்போ , அந்த பேப்பர்ல.. ரமேஷ் அண்ணா கையெழுத்து போட சொல்லுவாங்களே.. அதுக்கா..ஆ.. ", என்று கீழ் உதட்டை நசுக்கியவளாய் சிந்தித்தவளாய் கேட்டிட..

" ம்.. இருக்கலாம்.. பாப்பா.. உனக்கு இங்லீஷ் தெரியுமே.. படிச்சு பார்க்க மாட்டியா..", என்று தலையை தட்டியவனாய் கேட்டிட..

" எனக்கு பேச மட்டுந்தான் தெரியும்..  படிக்க தெரியாது..", என்று சட்டென்று துளிர்த்த விழிநீருடன் தலைக் கவிழ்ந்து சொல்ல.. அந்த அறையில் , மௌனம் மட்டுமே ஆதிக்கம் புரிந்ததாய்...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

வெரி வெரி லாங் கேப் யூடி அப்டேஷன்.. ஸாரி.. ஸாரி.. வெரி ஸாரி.. தினமும் அப்டேட் போஸ்ட் பண்ண நினைக்கிறேன்.. ஸோ , லென்தியா இல்லேனாலும் ரெகுலரா போஸ்ட் போட முயற்சிக்கிறேன்..

இப்படிக்கு

கனி தேவ்💕💕💕

Continue Reading

You'll Also Like

118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...