வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 74

1.7K 42 11
By kanidev86

பகுதி - 74

காலத்தின் வேகத்திற்கு முன் நாம் அனைவரும் பார்வையாளர்களே.. ஏன்.. அதனுடைய பொம்மைகள் என்றும் சொல்லலாம் . நமக்கான விருப்பத்திற்கு இடமே கிடையாது.. இருந்தபோதும் , அதன் சுழற்சிக்குள் நாமும் சுழன்றுக் கொண்டே இருப்போம்.. அதுவும் , சுழற்ற வைத்துவிடும் .

நேற்று போல் இருந்தது.. ஆனால் , மூன்று மாதங்கள் , சொடுக்கிடும் மணித்துளிகளுக்குள்ளாக.. கடந்து இருக்க.. அவன் கைச்சிறைக்குள் பகல் என்று பாராமல் கட்டுண்டு கிடந்ததே தாமரையின் நினைவில் எழுந்து ஆட்டுவித்ததாய் .

இரவு பகலும் போல் இன்பமும்.. துன்பமும்.. சூரியன் சந்திரன் போல் கோபமும் தாபமும்.. இந்த உவமை எவ்வளவு உண்மை என்றே நினைத்தவளாக இருண்ட வானில் ஒற்றை நிலவை தேடியவளாய்‌.. தன் மார்பில் கரங்களை கட்டிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள் தாமரை .

வெளிர் நிற இரவுடையில்.. நின்றிருந்தவளின் தோற்றமோ.. எண்ணில் அடங்கா சோகத்தை தனக்குள் பொதித்தது போல் இருக்க ‌ . மூன்றே மாதத்தில்.. மூவாயிரம் மாற்றங்கள் தன் வாழ்க்கையில் அரங்கேறி இருப்பதை நினைத்து மகிழவும் முடியாமல்.. தன்னவனில் நினைவால் மனம் வெதும்பியவளாக தன்னித்து நின்றுக் கொண்டிருகிறாள் ‌ அவள்..

உறங்குவதற்கும் நேரம் கிடைத்திருக்கவில்லை . மூச்சு முட்டும் அளவிற்கு வேலைகளும் பொறுப்புக்களும் அவளை இழுத்துக் கொண்டதில்.. திண்டாடியே இருந்தாலும் சரணின் மௌனத்தை நினைத்து கலங்குவதற்கு இடம் இல்லாமல் இருப்பதும் மனதிற்கு இதமாகவே இருந்தாலும் கூட.. அலைபேசியின் , அழைப்பையும் ஏற்க மறுத்துக் கொண்டிருக்கும் தன்னவனின் செயலால் அதிகம் துவண்டவளாய் , உரிமேறியிருக்கும் அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்துக்  கதறவே தவியாய் தவித்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளி வர முடியவில்லை ..

மகிழ்ச்சியை கொட்டிக் கொடுத்த அந்நாளிலேயே மீண்டும் நரகத்தின் வலியையும் காட்டிவிட்டான் . எவிரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியவில்லை .  'நான் தவறு செய்துவிட்டேனோ..' என்று கோடி முறை நினைத்து நினைத்து மறுகியாகிவிட்டது . ஆனால் , பலன் பற்றி மட்டும் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை ‌ .

அனைவரும் ஆவலே உருவாக , காத்திருந்த ரிச்சர்ட் மற்றும் தாராவின் திருமணம் நாளை.. ஆனால் , தன்னவன் வருவானா என்று பயந்தவளாக நின்றிருக்கிறாள் . அவர்களது திருமணத்திற்கான ஆடைகள் அனைத்தும் தாமாரையின்  கைவண்ணங்களே.. அதேபோல் , தினமும் நடைபெறும் கோர்ஸிலும் சேர்ந்துவிட்டாள் ‌. இதனோடு , மேக்கப் செய்வதையும் விடாமல் இருக்கவே காலில் சக்கரத்தை கட்டாத குறையாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாள் ‌ . இவை அத்தனையையும் தாண்டி.. சில மணித்துளிகளே என்றாலும் உடல் ஓய்விற்கு கெஞ்சும் மணித்துளிகளில் ஓட்டிக் கொள்ளும் தன்னவனின் நினைவுகளும்.. அவன்   மௌனமும் கொன்றுப் புதைத்ததாகவே இருக்க.. பரிதவித்திருந்தாள் .

' மூனு மாசமாச்சு‌.. நாளைக்காவது வருவாங்களா.. என்னை பார்ப்பாங்களா...' என்று தனக்குள்ளாக புலம்பியவளை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தது‌ அவளது மனசாட்சி . ' உனக்கு எதுக்கு அவசரங்கறேன்.. இப்பவே அத்தனையும் கொட்டிக் கவிழ்கலேனா‌.. தான் என்னங்கறேன்..' என்று காறித் துப்பிக் கொண்டிருக்க.. விண்ணுவிண்ணு என்று தலைதெறிக்க துவங்கிவிடவே.. மெதுவாக , கீழ் இறங்கி இருந்தாள்..

கோபம் கொண்டு கரத்தால் பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க.. சரணோ மௌனத்தால் மட்டுமல்ல.. முகம் காணவும் மறுத்தவனாக நடந்துக் கொள்கிறான் .  ' ஆண்டவா.. இந்த தவிப்பெல்லாம் நாளைக்கு அவங்க வரதோட முடிஞ்சு போயிடணும்..", என்று தனக்குள்ளாக சமதானம் கூறியவளாய்.. கீழ் இறங்கி.. உறங்குபவர்களின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அடி மேல் அடி வைத்து சமையற்கட்டிற்குள் நுழைந்து காபியை தயாரித்துக் கொண்டிருக்க..

" தாமரை இங்க என்ன பண்ற.." என்று ராமின் குரல் இருட்டின் அமைதியை மென்மையாக விரட்டியவாறு கேட்டதில் திரும்பி பார்த்தவள் .

" மாமா.. அது.. அது ஒன்னும் இல்லை.. லேசான , தலைவலி அதான் காபி..", என்று தன் சோகத்தை உள் இழுத்தவளாக கூறி..

" நீங்க.. நீங்க இன்னும் தூங்கலையா மாமா..", என்றாள் .

" ம்... கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. யாருன்னு பார்க்க வந்தேன்..", என்றவரின் பார்வை அழுத்தமாக படிந்தவாறு இருக்க.. அதன் வீச்சு தாளாமல்..  கோப்பையின் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்..

" உன்னை ஸ்ட்ரென் செஞ்சுக்காதேன்னு சொல்றோமா இல்லையா.. தாமரை..", என்று மென்மையாக கண்டிக்கவும்..

" அப்படி எதுவும் இல்ல மாமா.. சொல்ல போனா ரொம்பவே பிடிச்சிருக்கு..", என்றவள்..

" உங்களுக்கு காபி..", என்று இழுக்க..

" வேண்டாம்..", என்று அவளுக்காக காத்திருக்கவும்.. மெதுவாக , அவருடன் வெளி வந்தவளை.. அவருடைய கேள்வி தேக்க செய்திருந்தது .

" சரண் கோபமா இருக்கானா..", என்றதில் ...

அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளி வர.. கண்ணீரின் தடங்கள் கன்னத்தில் இறங்கி இருக்க.. துடிக்கும் இதழ்களை கட்டுப்படுத்த முடியாமல்.. உதடு கடித்து தன்னைதானே அடக்கும் முயற்சியில் இறங்கி இருக்கவும்.. அதிர்ந்தவர்..

" என்னாச்சு டா.. அவன்.. அவன்.. உன்னோட கோபமா இருக்கானா..", என்று பதற்றமாக கேட்டிருந்தார் .

" அவியலுக்கு.. அவிய.. தெரிஞ்சுட்டாக போல மாமா.. என் முகத்தையும் பார்க்காம.. போனவுக.. ஒத்த வார்த்தை பேச மாட்டேங்குறாக..", என்று விம்மி வெடிக்கும் நெஞ்சத்தை கட்டுபடுத்தியவளாக இத்தனை நாட்களாக தனக்குள்ளாக மறுகி வைத்திருந்ததை கடந்து பகிர்ந்திருந்தாள் .

" வா...ட்.. அப்போ.. உன்னோட சரண் பேசுறதே இல்லையா..", என்று அவள் சொல்வதை ஜீரணிக்க முடியாதவராய்.. மீண்டுமாக , கேட்க.. தாமரையோ , இல்லை என்று தலையசைத்து தன்  துக்கத்தை விழுங்கிக் கொண்டவள்..

" அதுனால என்ன மாமா.. நீங்க வெசனப்படாதீய.. நாளைக்கு அண்ணன் கல்யாணத்துக்கதேன் வருவாகளே.. அப்போ , எல்லாஞ் செரியா போகும்..", என்று அவரின் முகத்தில் இருந்த தவிப்பை காண முடியாதவளாய்.. அவருக்கே சமாதானம் கூறினாள் .

" ம்ச்சு.. நான் இப்படி நினைக்கலைடா..  ரிச்சர்ட் வேலையும் சேர்ந்ததால.. இங்க வராம இருக்கறதா நினைச்சுட்டேன்.. எப்பவும் போல பேசினானா.. அதான்..உன்.. உன்..னை புரி..ஞ்..சுகி..ட்டதா... நீ.. ஏன்டா.. இவ்வளவு நாள் சொல்லலை..", என்று அழுத்தமாக தன் நெற்றியை நீவியவராய்.. மெதுவான குரலில் துடிக்க..

" மனசு வரலை..  உங்கட்டையும் அவிய காட்டிக்காம இருந்ததும்..  மறுபடி நீங்க எல்லாம் என்னையால.. வருந்தினா எப்படி மாமா.. அதேன் காட்டிக்கலை..  என்னையால எப்படி மாமா முடியும்.. ரொம்ப வருஷம் கழிச்சு எல்லோரும் சந்தோஷமா இருக்கறச்சை.. நானா கலைப்பேனா..  அதேன்.. உங்கட்டையும் சொல்லலை..", என்று தன் வருத்தங்கள் யாவையும் நெஞ்சுகுழிக்குள் புதைத்து.. இதழ் விரித்தவளாக நின்றிக்க..

" உனக்காக நீ எப்போ டா வாழ போற..", என்று ஆதங்கத்தை மறைக்கவே முடியாதவராய்‌.. வருத்தம் தோய்ந்தவராக சொல்லி..  மென்மையாக தலைக்கோத..

" எனக்கு என்ன குறைன்னு இப்படி எல்லாம் பேசுறீய.. நான் ரொம்பவே நல்லாதேன் இருக்கேன்.. நீங்க எதுனும் நினைக்காம நிம்மதியா தூங்குங்க... அண்ணனுக்கு  அங்கேயே தங்காதது ரொம்பவே வருத்தம்.. நாளைக்கு வெல்லன ( விரைவாக ) கிளம்பணும்.. நானும் தூங்க போறேன்..", என்று மாடி ஏறிவிட்டாள் ... அதன் பிறகு ராமிற்கு தூக்கம் எங்கோ தொலை தூரத்திற்கு சென்றுவிட்டது.

அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆடவனையும் ஆட்டிவித்தவளாய்.. அவனது மைவிழியாள் இருக்கிறாள் என்பதை தாங்க இயலாதவனாய்.. அதே இரவில் பல மையில்களுக்கு அப்பால் இருந்தவனாக சரண் மித்ரன்  துடித்துக் கொண்டிருந்தான் ..

அலுவலக வேலைக்குள் வலுக்கட்டாயமாக , தன்னைத்தானே திணித்தவனாக.. ஊன் உறக்கத்திற்கும் நேரம் வழங்காதவனாய்.. பிடிவாதமாக மூன்று மாதங்களாக சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு.. தாமரையிடத்தில் சினங் கொண்டு இருந்தாலும்.. ஏனோ , அவளிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள மட்டும் விருப்பம் இல்லை.. எங்கே.. அவனால் எழுப்பப்பட்டும் வினாவிற்கு ஆம் என்று கூறிவிடுவாளோ.. என்று அஞ்சியவனாகவே.. அவளது முகம் காணவும்.. குரல் கேட்கவும் மறுத்தவனாக.. 
சுற்றிக் கொண்டிருக்கிறான் .

தன் உயிர்தோழியின் திருமண வரவேற்பிற்கும் கலந்துக் கொள்ள முடியாதவனாய் இருந்த செயலை மொத்தமாக வெறுத்து நொந்தவனாய்.. அவன் நின்றிருக்க.. உள்ளிழுத்து கொண்டிருக்கும் புகையாலும் மண்டிக் கிடந்த மனதின் எரிச்சலை  அடக்க முடியாமல் போகவே.. பட்டென்று , தன் விரல் கொண்டே சுண்டிவிட்டிருந்தான் .

எவ்வளவு எதிர்ப்பார்ப்புகளோடு அந்நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான் என்பது அவன் மட்டுமே அறிவான் . எப்படி காலையில் தாமரை கொடுத்த இன்ப அதிர்ச்சியை நினைக்கவில்லையோ.. அதேபோல் , மாலையில் அவள் கொடுத்த.. மரண அடியையும் நினைத்திருக்கவில்லை .

மண்டிக் கிடக்கும் வலியையும்.. கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பொசுக்கி இருக்க.. அவளை காண மறுத்தவனாக அனைத்தையும் ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தான் . மனதின் ஓரத்தில் எங்கோ , ஓர் மூலையில்.. உன் சிந்தனைகள் அனைத்தும் தவறு.. தாமரையாக இருக்க முடியாது.. என்று நிஜத்தை ஏற்க மறுத்து அரித்துக் கொண்டே இருக்கும் தொணதொணப்பால்.. அதுவே உண்மையானதாக இருத்தல் வேண்டும் என்று வேண்டியவனாய் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறான் .

ஆனால் , நாளைய விடியல் அவளை கண்டிப்பாக நேருக்கு நேர் காண வேண்டும்.. என்ற நினைவே அலைக்கழிக்க..  அழுத்தமாக தன் விழிகளை மூடி.. முகம் இறுக நின்றிருந்தவனுக்கோ.. இதயத்தை கசக்கி பிழியும் வலியில் இருந்து மட்டும் நிவாரணம் கிடைக்காமல் போனது ‌.

மணமகனாக , மாறி இருந்த ரிச்சர்ட்டும்‌... பல பழைய சிந்தனைகளுக்குள் பின்னி பிணைந்திருந்தான்.. இந்த இனிய நாள் , அவன் வாழ்வில் வரவே வராதோ.. என்று தத்தளித்த நாட்களும் ஏறாலம் . சரணிடமும் தெரிவிக்காமல்.‌. அவனையும் மறந்தவனாக‌.. பார்த்த வீடியோவின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாததாலேயே..
பாய்ந்தோடி சென்னை வத்துவிட்டான்.. அதன் பிறகே , அவன் வருகைக்காக முன்பாக சரண் அங்கு இருக்கிறான் என்ற செய்தியும் தெரிய முற்றிலும் புதியதாக இருந்தது . தன் மனப்புழுக்கத்தை விக்கியிடம் வெடித்துவிட்டதாலோ என்னவோ சிறிதளவு அவன் அமைதி பெற.. சரணை நேருக்கு நேர் சந்தித்த பிறகோ.. சொல்லவும் தேவை இருக்கவில்லை .

அன்றைய நாளுக்குள்ளேயே தன் எண்ணத்தை மிதக்கவிட்டவனாக , இருக்கும் பொழுதில்.. தாரா அழைத்திருந்தாள் . மென்னகை புரிந்தவனாய்.. அழைப்பை ஏற்று ,

"சொல்லு உதயா.. தூங்கலையா.. ஏன் கால் பண்ணின....", என்று கேட்கவும்.. தன் நெற்றியில் வேகமாக அடித்துக் கொண்டே..

" ரோபோட்.. ரோபோட்.. நாளைக்கு நமக்கு கல்யாணம்.. என் வுட்பி.. நீ  எனக்கு போன் செஞ்சு இருக்கணும்.. அதுதான் தெரிலேனாலும்.. ஏன் போன் பண்றேன்னாவது கேட்காம இருக்கலாம்ல்ல..", என்று படபடக்க..

" ஹா.. ஹா..  சரி சொல்லு..", என்று சிரித்தவனாய்..

" ம்ஹூம்.. என்ன சரி சொல்லு.. ரிச்சரா நீ டோட்டலி வேஸ்ட் பீஸ்டா‌..", என்று தன் ஏமாற்றத்தை மறைக்காமல் வெளியிட.. காதை நிறைக்கும் நகைப்பொலியில் மனம்  நிறைந்தவளாய்.. அவளது அதரங்களிலும் புன்னகை குடிக் கொள்ள துவங்கி இருந்தது .

" ரிச்சா.. எதுக்கு இப்படி சிரிக்கிற..", என்று சிவந்த முகத்துடன் வினவிட..

" நான் வேஸ்ட் பீஸா..", என்று  குழைந்து ஆழ்ந்த குரலில் அவன் கேள்வி தொடுக்க.. அதுவரை மஞ்சள் நிறம் கொண்டவள்.. செந்நிறப் பூக்களை மேனி முழுவதிலும் பூசிக் கொண்டவளாக சிவந்து.. வார்த்தைகள் வெளிவர தடுமாறியவளாய்.. செவ்விதழ்களை ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பூட்டிக் கொள்ள..

" உதயா.. நான் நினைச்சே பார்த்தது இல்லை..  ஏன்.. நினைக்கவும் பயந்த விஷயம்.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு.. ", என்று மீண்டும் கறகறத்து குழைந்து வரவும்..

" வேணா.. இங்க வாங்க கனவா... நிஜமான்னு.. தெரிஞ்சுக்கலாம்..", என்று ஆசையுடன் சொல்ல..

" ம்ஹும்.. " என்று அழகாய் சிரித்து..

" இப்ப வேணாம்.. நாளைக்கு இந்நேரமா தெரிஞ்சுக்குறேன்..", என்று மோகனமாய் அவன் குரல் காதை நிறைக்க.. நொடிக்குள் இதயத்தை படபடக்க செய்து கட்டிப் போட்டவனிடம்.. விரும்பியே கட்டுண்டு கிடந்தாள் .

" சரிடா.. நீ போய் தூங்கு.. நாளைக்கு பேசிக்கலாம்..", என்று சொல்லவும்.. துண்டித்துவிட்டாள் . மீண்டும் , கரிய நிறத்தை சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த வானில் தன் பார்வையை பதித்து.. அவளது பெற்றோரிடம் பேச சென்றதை நினைக்க.. தன் போல் சரணின் நினைவு வந்து ஒட்டிக் கொண்டது .

முதல் நாள் வரவேற்பிற்கு வர முடியாது என்று முன்னரே கூறிவிட்டான் . ஆவலே உருவாகி அலைபாய்ந்துக் கொண்டிருந்த தாமரையின் விழிகளை மேடையில்  நின்றே இருந்தாலும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது .

அதனை நினைத்ததுமே , வேகமாக பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்.. ' இவர் என்ன நினைக்குறாருன்னே புரிய மாட்டேங்குது.. அந்த புள்ளைய வாழவும்.. விடாம.. சா..' அதற்கு மேல் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு.. படுக்கையில் விழுந்துவிட்டான் .

நாளைய தினத்தில் , சரண் கைவிடப் போகும் மௌனத்தால்  தாமரைக்கு ஏற்படப் போவது.. ? என்று உள்ளம் வெதும்பியவராய் ராம் இருந்தார்...

அவரின் நினைப்பை மெய்யாகுவானோ.. அல்ல பொய்யாக வருவானோ...! 

Continue Reading

You'll Also Like

15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
53K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
7.1K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...