வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.‌. என் அன்பே - 72

1.2K 37 20
By kanidev86

பகுதி - 72

தாமரை கூறியதை உள்வாங்கிக் கொள்ளவே சரணுக்கு முழுமையாக ஒரு நிமிடம் பிடித்திருக்க , அதற்குள் அவளும் அகன்றிருந்தாள்... மனைவியின் சொற்களின் அர்த்தம் புரிந்ததும்.. உள்ளத்தில் மகிழ்ச்சியால் பொங்கிய ஆர்ப்பரிப்பு தாளாதவனாய் ஸ்தம்பித்துவிட்டான் .

இப்படியான பேச்சை சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை . 'உன் மூச்சுக்காற்றும் என்னை சிலிர்த்தெழ செய்யும்.. '  என்றவளது வார்த்தைகள் இதுவரை , அவளது அதரங்கள் உதிர்க்காத ஐ லவ் யூ என்ற வாசகத்தையும் கோடி முறை கூறியது போல் , அவன் மனம் துள்ளிக் குதித்து பரவசம் அடைந்திருக்க.. உடனடியாக,  அவளை தேடிச் செல்ல மனம் கட்டளையிட்டு கால்கள் பரபரப்பாகவே.. அறையை விட்டு வேகமாக வெளி வந்திருந்தது.. அதே வேகத்துடன் பார்வையை சுழற்ற.. முதல்முறையாக , கீழே செல்லாமல்.. அவர்கள் அறைக்கு எதிராக அமைந்திருக்கும் ரூஃப் கார்டனின் கதவை திறந்து நின்றிருந்தாள் .

மெல்லியதாக முகத்தில் மோதி விளையாடிய காற்றிலும் கவனம் கொள்ளாமல் , தடதடக்கும் இதயத்தை அழுத்தமாக பிடித்து.. அதன் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தாலும்.. திடீரென்று தனக்கு முளைத்த துணிவை பற்றி சிந்தித்தவளாய் நின்றிருந்தாள் .

தாமரையின் மனமோ உச்சக்கட்ட பரிதவிப்பில் துடித்துக் கொண்டும்.. அவளையே சாடிக் கொண்டும் இருந்தது..

" உனக்கு எங்குட்டு இருந்து புள்ள.. இப்படி பேச இம்புட்டு தைரியம் வந்தது.. வெட்கங்கெட்டு என்னென்ன உளறீட்டு வந்திருக்க.. உன்னைய பற்றி என்ன நினைச்சிருப்பாக.. வெட்கமே இல்லாதவன்னு யோசிச்சுருப்பாகளோ.. இல்ல..", என்று அவன் கடத்திய ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் விதமாக நினைத்து தடுமாறியவளாக நின்றிருந்தவளுக்கோ , அவன் முகம் காணும் தைரியமும் சுத்தமாக வற்றிப் போனதாய்..

எப்பொழுதும் , அவன் அருகாமையில் நா மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு மனதை படபடக்க செய்யும் என்றாலும்.. அவன் காதலை கூறி நெருங்கும் பொழுதுகளிலோ , பதறும் நெஞ்சம்.. மான்சியால் உண்டான வலியை சினந்து காட்டினாலே.. துடிதுடித்து.. அவனிடத்தில் சரண் அடைபவளுக்கு.. கசங்கிய முகத்தை கண்டால் அமைதியாக இருந்திட முடியுமா என்ன.. படபடத்து தனக்குள் நிகழும்  உண்மையை கூறி ஓடி வந்துவிட்டாள் .

கூறும் பொழுது தெரியாத அதன் அர்த்தம் இப்பொழுது புரிய , வெட்கமின்றி பேசியதாக.. தவறாக நினைத்து விடுவானோ.. என்ற சிந்தனையே ஆட்டுவிக்க.. தன் இரு உள்ளங் கைகளையும்.. தொடைகளில் வைத்து.. புடவையை கசக்கிக் கொண்டிருந்தவளுக்கோ.. பதற்றம் அடங்க மறுத்ததாய் .

" எப்படி.. இனி.. எப்படி நா அவிய முகத்தை பார்ப்பேன்..", என்று குழப்பத்தில் உடல் நடுக்கம் எடுக்க.. வறண்ட தொண்டையை எச்சில் விழுங்கி தாகத்தை தணித்தவளின் செயலின் சத்தம் துள்ளியமாக , அவனையும் சென்றடைந்தது .

அவள் விசிறி சென்ற சொற்களின் தாக்கம் குறையாது இருக்க.. பெண்ணவளின் தடுமாற்ற தோற்றமோ.. மொத்தமாய் மேலும் அவள் மீது பித்துக் கொள்ளவே செய்திருந்தது.

தாமரைக்கோ.. சரணின் வேதனையை துடைத்தெறிவதற்காகவே உண்மையை சொல்வதாக தன் உணர்வை வெளியிட்டாலும்... , கணவனிடத்தில் அவளுக்கு இருக்கும் காதலும்.. தெளிவாய் புரிந்த தருணமாக  , இன்பமும் துன்பமும் ஒரு சேர ஆட்டிப்படைத்து..    பெருகிய காதலையும் அனுபவிக்கவிடாமல் தடுத்திருந்ததில்.. அழுத்தமாக விழிகளை மூடி நின்றுவிட்டாள்.

வரைந்த  ஓவியமாக , நின்றிருந்தவளின் முதுகின் அருகே தன் வெப்ப மூச்சுக்காற்று உரச , "நீ என்ன சொன்ன..", என்று கம்பீரம் குறையாமல் கேட்டு திடுக்கிட செய்திருந்தான். .

பட்டென்று , கண்களை திறந்தவளுக்கோ.. அவன் முகம் காணும் துணிவும் வந்திருக்கவில்லை. அவள் பெயரை உச்சரித்தாலே  தன் வசமிழந்து தடுமாறும் ஆண் மகனுக்கு.. இக்கணம் சொல்லவும் வேண்டுமோ !

பின்புறமாய் , நின்றிருந்தவனின் மூச்சுக்காற்று.. பின்னங் கழுத்தில் மோதி மயற்கால்களை கூசச் செய்ய.. முன்புறமாக நகர்ந்துக் கொள்ளவும் வலு விழந்தவளாக.. அசையாமல் நின்றிருக்கவும் ,
"பாப்பா..", என்று மிருதுவாய் அவன் குரல் வருடியதில்.. அவனை காண , ஆடவனின் முகத்தில் மின்னிய ஆர்வமும்.. போட்டிப் போடும் காதலிலும் மீண்டுமாக தன் வசமிழந்தவள்.. தலை சாய்ந்து மௌனம் சாதிக்க..

மேலும் நெருங்கி, " சொல்லு பாப்பா.. ", என்று கெஞ்சலாக கேட்டிருப்பானோ.. மகுடிக்கு கட்டுப்படும் பாம்பைப் போல்.. அவன் உணர்வுகளுக்கு அடிப் பணிந்தவாய்.. வெட்கமே இல்லாதவள் என்று தவறாக கருதியிருப்பானோ.. என்று இதுவரை மறுகியது எல்லாம் நொடிக்குள் மாயமாகி.. திரும்ப மொழிந்திருந்தாள் .

" எப்போது இருந்து பாப்பா.. ", என்று சந்தோஷக் கடலில் மிதந்து குழைந்து கேட்டு நிற்க.. தாாரையோ , இமை சரிந்து .. நாணத்தில் முகம் காண மறுத்தவளாக நின்றிருந்தாலும்..
"ம்..  தெரியலை.."  , என்று கிசுகிசுப்பாக பதில் கூறினாள்..

" நா.. நா வேணா ஞாபகப்படுத்தவா..", என்று பார்வையால் மட்டுமாக தீண்டி , அவளை அவன் ஆட்டுவிக்க.. அவளுக்கு அவன் முன் நிற்கவும் பெரிதும் தடுமாறி போனாள் . அவன் சீண்டலில் எகிறி குதித்து எழும் உணர்வுகளின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்து.. அவனை விட்டு விலக நகர்ந்திருந்த மறுநொடி.. தன் வலக்கரத்தால் பெண்ணவளின் மெல்லிடையை வளைத்து தன்னை நோக்கி இழுத்துக் கொள்ள..  எதிர்பாரா செயலால்.. மெத்தென்று அவன் மீதே மோதி நின்றிருந்தாள் .

மெல்லிய மேனி திண்ணென்று ,  இறுகிய மார்பில் நிலைத் தடுமாறி மோதியதில்.. அதன் வேகத்தின் தாளாமல் மலர்பாகங்களில் சிறு வலியை ஏற்பட.. " ஸ்.. அ..ம்..மா.. ", என்று  மெல்லிய அலறலை அவள் அதரங்கள் உதிர்த்திருந்தது.

" ஏய்.. என்னாச்சு.. வலிக்குதா.. ", என்று அவன் கைகள் தேய்த்து விடுவதற்காக உயர.. " இல்ல.. ஒன்னுமில்லை.. ", என்று பதறி உடல் நடுங்க.. விலக முற்பட்டவும்.. பளிச்சென்று, தன் வெண்பற்கள் தெரிய சத்தமில்லாமல் சிரித்து.. "சரி சொல்லு..", என்றான் .

அவன் அருகாமையிலேயே , சித்தம் தடுமாறி இருப்பவளுக்கு.. ஏதும் மூளையை சென்றடையாமல் திருதிருவென முழிக்க செய்ய.. மேலும் , அழகாய் புன்னகைத்தவன்.. குத்தீட்டியாய் , அவள் மேனி எங்கும் கூசி சிலிர்த்து எழுந்து நின்றிருக்கும் மயர்கால்களை மென்மையாக வருடியவாறே , " இதுக்கு பதில்..", என்று நினைவுப்படுத்த..

" தெ.. தெரி..லை..யே.. ", என்று பாவமாக பதில் அளித்தவளின் கண்களில் கரைபுரண்ட காதலை கண்ட பிறகோ.. சரணால் தன்னையே கட்டுக்குள் வைத்திருப்பது என்பதே பெரும் போராட்டமாகியது.. அதன் வேகம்.. சுருட்டியிருந்த அவளது இடையில் காண்பித்து.. எலும்புகளையும் சேர்த்தே இறுக்கிக் கொள்ள.. பளிங்கு முகம்.. அவளது உணர்வுகளை மறைக்காது வெளிப்படுத்தியதோடு அல்லாமல்.. துடிக்கும் அதரங்களும் எட்டப்பனாக மாறி காட்டிக் கொடுக்கவும்.. ஒளிந்துக் கொள்ள வகையறியாமல்.. அவன் மார் மீதே தலை சாய்த்து முகத்தை புதைத்துக் கொள்ள.. சத்தமாகவே வாய்விட்டு சிரித்தவன்.. இரு கரங்களாலும் அழுத்தமாக அணைத்திருந்தான்.

எப்பொழுதும் அச்சத்தை மட்டுமாக வெளிப்படுத்தும் அவளது கண்களில்.. அவ்வப்போது தென்படும் பயம் கலந்த நாணம்.. ஆனால் , இன்று முதன்முதலாக வழியும் காதலும்.. தவிப்பும் ... ஆடவனை கர்வம் கொள்ள செய்ததோடு , பெரும் சிலிர்ப்பையும்  ஏற்படுத்த.. அடுக்கடுக்காய் அணி வகுத்து நிற்கும் வேலைகளையும் மறந்தவனாய்.. தன்னவளின் கழுத்தில் புதையுண்டு கிடந்தான்.. மெதுவாய் , மீசை ரோமங்களால் கீறி.. இதழை சென்றடைந்து தனக்குள் சுருட்டிக் கொள்ள.. தாமரையின் விழிகளோ அழுத்தமாக மூடிக் கொண்டது .

கரைக்க கடந்த காதல் இருவருக்குள்ளும் பெருகியோட.. இதழ் வாயிலாகவே வெளிப்படுத்தியவனாக இருந்தான் . அவள் மீதான சினம் , ஆதங்கம் அனைத்தையும் துடைத்தவளை விட்டு , நகரவே விரும்பாதவனாக அழுத்தமாக ஒட்டிக் கொண்டான் . மூச்சுக்கு அவள் ஏங்கி தவித்ததில் விடுவித்தவன் ஆசையாக வருட.. இதுவரை , அவளது விழிகள் வெளியிட்ட நேசம் மறைந்து அலைபுரிதலோடு இருக்கவும்.. அழுத்தமாக மிக மிக அழுத்தமாக  நெற்றியில் முத்தம் பதித்து தெளிய வைக்க முயன்றான் .

அந்த அழுத்தம் தாமரைக்கு அலைப்புரிதலை மட்டுப்படுத்தி நிம்மதியை அளிக்க.. இரு கரங்களாலும் அவள் முகம் ஏந்தி நின்றவனிடம் ,

" என்னை நம்புறீயளா.. நான் எந்நாளும் தப்பு செய்யறவ இல்லை தான..", என்று பரிதவித்து வினவ.. அவள் தவறானவள் என்று நினைத்து பேசியதற்காக  கலங்குகிறாள் என்று மனம் வருந்தியவன்.. தன்னைத்தானே சாடிக் கொண்டு..

" அப்படி நான் நினைப்பேனா.. என்னால நினைக்க முடியுமா..", என்று வாய் மொழிந்தாலும்..
' அப்படி நினைச்சா.. நான் மனுஷனே இல்லைடி..' என்று மனதோடு
குமைந்திருந்தான்.

" எக்காரணங் கொண்டும் என்னைய வெலக்கி வச்சுற மாட்டீயளே.. ", என்று மொத்த உயிரையும் விழிகளில் தேக்கியவளாய்... அழுத்தமாக ,  அவன் சட்டையை பற்றிக் கொண்டு  மொத்த உடலில் உதறல் எடுக்க இறைஞ்சிட.. சரணுக்கு அவள் கூறியது புரியவே இல்லை.. எதையோ நினைத்து தடுமாறுகிறாள் என்பதை மட்டுமாக உள்வாங்கிக் கொண்டவனுக்கு.. என்னை விட்டு பிரிந்திட மாட்டாயே என்று கூறுகிறாள் என்று தெரியவே இல்லை .

ஆனாலும் தன் முன் , கலங்கி தடுமாறி நிற்பவளின் ஏக்கம் சுமந்த முகத்தை காணவே தாள மாட்டாதவனாய்.. உள்ளுக்குள் துடித்து வெளியே மிகவும் இயல்பானவன் போன்று , அவளை அமைதிப்படுத்தும் விதமாக..

"என்னடா.. நீ இல்லேனா நான் இல்லை பாப்பா.. என்னால உன்னை இப்படி பார்க்கவே முடியலடா.. என் பக்கத்தில நிக்கவே தகுதி இல்லாத மாதிரி.. நீ பேசுவதை என்னால தாங்கிக்கவே முடியலை பாப்பா.. அடுத்தவங்க எப்படியோ நினைச்சிட்டு போகட்டும்.. எனக்கு நீ அழகு தேவதைன்னு எத்தனையோ விதத்தில சொல்லி பார்த்துட்டேன்.. ஆனா , உனக்கு அதெல்லாம் புரியற மாதிரியே தெரியலை.. அதுனால தான்டி.. நான் மட்டுமே ரசிச்ச என் மனைவியோட கள்ளங்கபடமில்லா ரசனைய விளம்பரமா மாத்தினேன் .. இதுவும் , உனக்காக.. என்னவோ எனக்கு பெரிய பாவத்தை பண்ணினவ மாதிரி துடிதுடிச்சு தவிக்கிறப்போ.. கையக்கட்டி போட்ட மாதிரி நின்னு வேடிக்கை பார்க்க முடியலை.. நம்ம பொருத்தம் எப்படின்னு இப்போ ஊரே பேசுது.. இப்பவாது , நீ கலங்காம இருப்பேன்னு நினைச்சா.. ம்ச்சு.. ", என்று அழுத்தமாக அவளது இடையை இறுக்கியவன்..  " பாப்பா.. நான் என்ன பண்ணணும்னு நீ எதிர்பார்க்குற..", என்று செய்வது அறியாமல் அவளிடமே கெஞ்சிக் கொண்டு நிற்க..

' இந்தளவுக்கு இவிய நேசம் வைக்க நா என்ன செய்தேன்..', என்று குழப்பம் மறைந்து அசையாமல் அவன் கண்களோடு தன் மீன் விழிகளை உறவாட விட்டாள் . இன்றே அனைத்து உண்மைகளையும் கூறி , தன் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்தவளாக..

" நான் தெரிஞ்சே  எதுனும் செய்யலேன்னு என்னைய நம்புறீகளா.. நா.. உ..ங்..க.. எ..ன..க்கு...", என்று பேசவே முடியாமல் கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட.. மேலும் அவனுடன் ஒட்டிக் கொண்டு உடல் வெடவெடத்து வார்த்தைகளை தேடி பரிதவித்தவளின் நிலையை காணவே முடியாதவனாய்...

" போதும் டி.. எதையும் போட்டு குழப்பிக்காத.. என்னால தாங்கிக்க முடியலை..", என்று பேசவே விடாமல் அழுத்தமாக நெற்றியில் முத்தம் பதித்து .. நெஞ்சுடன் அவளது முகத்தை இறுக்கிக் கொள்ள.. காடு மேடுகளில் அலைந்து வந்தது போல் களைத்து கிடந்தவளுக்கு பெரும் நிம்மதி கிடைத்த இடமாக உருமாற .. அவன் நெஞ்சிற்குள்ளேயே புதைந்துவிடுபவள் போல் ஒடுங்கிக் கொண்டாள்.. சரணிற்கும் அவளது இந்த அடைக்கலம் தேவையாக இருந்தது போலும்‌... சுகமாகவே தாங்கிக் கொண்டான் .

தாமரைக்கு அவனது கதகதப்பில் இருந்து விலகிக் கொள்ளவே விருப்பம் இல்லை.. எங்கே அவன் வேலைகளுக்கு தடங்கல் செய்வதாக தோன்றியதில் மெல்ல தலை உயர்த்தி பார்க்க.. 

"என்னடா.. கீழ போலாமா.. ரொம்ப நேரமாச்சு..  ", என்று முன் நெற்றியில் பதிந்திருந்த கார் கூந்தலை விலக்கியவனாக வினவினான். அவனை விட்டு விலகுவதை ஏற்கவே  முடியாததால்.. சட்டென்று , குடியேறிய கலவரத்தை வெளிப்படுத்த , புருவம் நெறித்தவன்.. தன் குழப்பத்தை காட்டாது..

" பாப்பா.. என்ன..", என்று மிருதுவாய் வினவவும்..

" நா.. நா.. தூங்கணும்‌..", என்று பாவமாக முனங்கினாள்.. அலையென புறப்படும் சிரிப்பை தனக்குள் புதைத்தவனாய்..

" சரி.. போ.. போய் தூங்கு..", என்று வளைத்திருந்த கரங்களை விலக்கியவனாக சொல்லவும்.. அவளது கண்கள் மேலும் கலக்கத்தை சுமந்ததாகவே இருந்தது . பார்வையாலும் , கேள்வி கேட்டால் அதிகமாக சுருண்டு கொள்வாள் என்று நன்கு புரிந்ததால் , அவள் கரங்களோடு தன் விரல்களை பிணைத்தவனாக அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று தன் மார் மீது போட்டுக் கொண்டான் .

வெளியே , செல்வதற்காக கிளம்பி இருப்பதையும் மறந்தவன் போல் மனைவியுடன் இருக்க.. தாமரையின் நிலையோ‌.. இதயத்தை குத்திக் கொண்டிருக்கும் நெரிஞ்சி முள்ளை எடுத்து எறிவதிலேயே முனைப்பாக இருந்தது . இதுவரை , எப்படியோ.. கடந்த சில நாட்களாக.. ஒவ்வொரு அணுவும் அவன் அன்பில் குளிர்ந்து.. அன்பால் நிறைத்து.. உயிர் மூச்சாக மாறியிருக்க‌.. அவன் இல்லா நிலையை நினைக்கவும் அஞ்சி நடுங்கியவளாய் பரிதவித்தது.. அந்த பேதையின் குட்டி நெஞ்சம் .

அதனாலோ , என்னவோ அனைத்திற்கும் இன்றே முற்றுப்புள்ளி வைத்து... குறுகுறுப்பு அற்ற வாழ்க்கை வாழ நினைத்தவளாக.. சரணின் முகம் காண.. சொல் என்பது போல் வாஞ்சையாக வருடிய அவன் விழிகளில் மூழ்கியவளாய் ,

" மான்சி அ..க்..", என்று ஆரம்பிப்பதற்குள்ளாகவே முடிவிற்கு கொண்டு வந்திருந்தான்‌‌.. முரட்டு தனமான இதழ் முற்றுகையால்..

படுக்கையில், நொடிக்குள்ளாக அவனுக்கு அடியில் கொண்டு வந்தவன்.. தன் முழு எடையும் அவள் மீது அழுந்திக் கிடப்பதும் பொருட்படுத்தாது.. கீழ் உதட்டை உள்வாங்கிக் கொண்டு.. அவளது நாவோடு சண்டையிட்டு கொண்டிருந்தவனுக்கோ.. கட்டுக்குள் அடங்காத ஆத்திரம் மட்டுமாகவே இருந்தது . 

" அவ பேர் உன் வாயால சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்றேன்.. உனக்கு புரியவே புரியாதாடீ.."என்று கடித்துக் கொண்டிருந்த இதழையும் விடாது.. சிவப்பேறிய கண்களால் கர்ஜிக்க.. அதுவரை ,இதழில் வலியும்.. அவன் எடையின் கணம் தாளாதவளாய் , திணறிக் கொண்டிருந்தவளுக்கு.. அனைத்தும் மாயமாகி போக உறைந்துவிட்டாள் .

புற்றீசல் போல் பொங்கிய உணர்ச்சிகளை கொட்டியவனுக்கோ.. உன் அதரங்கள்.. அவள் பெயரை உதிர்ப்பதற்கும் அருகதையற்றவள் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது .

" சரி சொல்லு.. எதுக்காக இப்ப அவ பேச்சு..", என்று உறும.. தன் உள்ளக் குமுறலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சேர்த்தே உறுஞ்சி இருந்தததில்.. எதுவும் இல்லை என்பது போல் தலையசைக்கவும்.. சலிப்போடு விலக போனவனை கரம் பிடித்து வேகமாக இழுத்திருந்தாள் .

இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காமல் இருந்ததாலோ என்னவோ‌.. நிலைத் தடுமாறி முழுவதுமாய் அவள் மீதே விழ.. சரணின் பதற்றம் கொஞ்சமும் அவளுக்கு இல்லை .

" ஹேய் பாப்பா.. என்ன பண்ற.. அடிப்பட்டுடுச்சா..", என்று அவசரமாக எழ முயல.. தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டவளோ.. காதிலேயே வாங்காமல் ,

" தூங்க வைக்க சொன்னேனே..", என்றாள் . அவள் குரலின் சத்தம் மெதுவாகவே வந்திருத்தாலும்.. மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளி வர.. அதற்கு மேல் அவனால் அசைய முடியுமா ..

இதழில் குறுநகை பரவ.. " எப்படி..", என்று ஒற்றை புருவம் மேல் தூக்கி வினவ..

" இதுக்கு முன்னாடி எப்படி தூங்க வச்சீய..", என்று கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டு‌.. மேலும் , தன்னோடு இழுத்தவளாக முனங்க..ஹா..ஹா.. என்று நகைத்தவன்..

" ஓய்.. பாப்பா.. உன்னை தூங்க வச்சிட்டு இருந்தா.. என் வேலையை யாரு பார்ப்பா..?" , என்று குறும்பாய் கேட்க..

கீழ் உதட்டை பற்களுக்கு கொடுத்தவள் , மெதுவாக கண்களை திறந்து.." அப்புறமா பார்த்துக்கலாம்.. எனக்கு இப்பவே தூங்கணும்.. ", என்று சிறு குழந்தையின் பிடிவாதத்துடன் உரிமையாக கூறினாள்.. மிக மிக புதுமையாக அடம்பிடித்து நடந்துக் கொள்ளும் மனைவியின் செயலில்.. திகைத்தாலும்.. தன் ஏக்கங்கள் அனைத்தையும் மறந்து  கிறங்கியவனாக  இருந்தான் .

" அதுசரி.. ஆமா‌‌.. அப்படியே உங்களை எப்படி தூங்க வைக்கறதும்னு சொல்லீடுங்க.. அதையே செஞ்சிடுவோம்‌..", என்று குறும்பு கொப்பளிக்க மூக்கோடு மூக்கு உரசியவனாய் கிண்டல் செய்தவனுக்கு.. அவன் எடையின் கணம் தாளாமல் அவள் திணறுவதும் நன்கு புரிந்தே இருந்தது .

அதற்காக அவள் தன் சிரமத்தை வெளிப்படுத்தாததோடு.. மேலும் , தன்னோடு வளைத்திருந்த கழுத்தை இழுத்துவளாக ,

" எனக்கு கண்ணு ரெண்டும் எரியுது.. ", என்று தன் காரியத்தில் முனைப்பாக .. நான் கூறியதை நீ செய்யவில்லை என்று சூட்டிக்காட்டியவளாய்..

" ஏன்டீ இம்சிக்கிற.. ", என்று  கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியவாறு கூறியனாலும், அவள் கடத்தும் உணர்வுகளின் பிடியில் சிக்கியவனாய் .

" எப்படி தூங்க வைக்கணும்னு சொல்லு.. அப்படியே செய்றேன்.. ", என்று கன்னத்தோடு இழைந்தவனாக.. இதழுடன் உரசியவாறு முனங்க..

" அதெல்லாம் எனக்கு தெரியாது..", என்று பட்டென்று கூறினாள் . தாமரைக்கும் சில விஷயங்களில் இருந்து உடனடியாக தப்பித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.. என்று சொன்னாலும் அதிகம் ஆகாது . சரணின்  அருகாமை மட்டுமே அவளது சிந்தனைகளுக்கும்.. மனதிற்கும்.. அமைதியை வழங்கிட முடியும் என்பதை.. அவனை பார்த்த நாளில் இருந்தே உணர்ந்ததாலேயே பிடிவாதமாக  தன்னவனின் காதலையும்.. நேசத்தையும் அனுபவித்து , அனுபவிக்க வைக்கவுமே விரும்பியவளாக.. பிடிவாதத்தை வெளிப்படுத்தி , உரசி ஆட்டுவித்துக் கொண்டிருந்த அவன் முரட்டு இதழை தனக்குள்  உள்வாங்கிக் கொண்டாள் .

தாமரையின் செயலால் சரண் முழுமையாக அதிர்ந்திருந்தான் என்பது விரிந்த கண்களிலேயே தெரிய.. அதை கண்டுக் கொள்ளும் நிலையில் எல்லாம் அவள் இல்லை . ஒளிய வேண்டும்.. அனைத்தில் இருந்தும் ஒளிந்துக் கொள்ள வேண்டும்.. அதுவும் அவனிடம் மட்டுமே முடியும் என்பதால் மிரட்சியை விடுத்து.. அச்சம் மறந்து..  வெட்கம் துறந்தவளாய்.. அழுத்தமாக சுருட்டிக் கொண்டு சுவைக்க.. சரணிற்கு ஒருபக்கம் அதிர்வாகவும்.. ஆச்சரியமாகவும் இருந்தது .

அவள் தன் கரங்களில் நெகிழ்ந்து இருப்பதையும் ஆசையாக அனுபவித்துக் கொண்டிருந்தான் ‌. தாமரை அளித்துக் கொண்டிருந்த முத்த சுவையை ஆசையாக வாங்கிக் கொண்டிருந்தான் .. கொஞ்சம் கொஞ்சமாக அவள் செய்கையால் கிளர்ந்தவன் . அவள் பின்னங் கழுத்திற்கு கீழ் கையை கொண்டு சென்று.. வாகாய் அவளது முகத்தை வைத்துக் கொண்டவன்.. அவள் வழங்கிக் கொண்டிருக்கும் முத்தத்தை தனதாக மாற்றிக் கொள்ள துவங்கி இருந்தான்.

சங்கு கழுத்தில் அவன் முகம் புதைக்க.. அவனுக்கு ஏதுவாக காட்டியவளின் செயலும் தூண்டிட ஆழமாக மூச்சிழுத்து அவள் வாசனையை நெஞ்சில் நிரப்பிக் கொண்டான் . அவளுக்கே உரிய சோப்பு வாசனையுடன் கலந்த மஞ்சள் கிழங்கின் மணம்.. அணுவணுவாக பித்துக் கொள்ள செய்திருந்தது .

ரிச்சர்ட் , தன் வேக நடையால் .. இரண்டே  எட்டில் , சரண் இல்லத்திற்குள் நுழைந்தவன்.. அதே வேகம் குறையாமல் விழிகளை சுழற்ற..

" டேய் மச்சான்.. வாடா.. வா.. வா.. ", என்று ஆர்ப்பாட்டமாக அழைத்த விக்கி இருக்கையை காட்டிட.. அங்கு கூடியிருந்த அனைவரையும் பார்த்து சற்று நிதானித்திருந்தான் . 

" அட வா மச்சான்.. டெ‌‌ல்லீ..ஈ...ல.. இருந்து நீ..யே.. வந்துட்ட மச்சி.. ஆனா , அவன் இன்னும் மாடில இருந்து வரான்‌.‌. நீ வா .. நீயும் நம்ம ஜோதில ஐக்கியமாயிடு‌.. வா..வா.. வா மச்சி..", என்று அருகே சோஃபாவை தட்டி அழைக்க.. தாராவோ பெரியவர்கள்  முன்னிலையில் சிரிப்பை அடக்க முடியாமல் தலைக் குனிந்து மறைத்துக் கொண்டாள் .

Continue Reading

You'll Also Like

150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
19.4K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்