வா.. வா... என் அன்பே...

بواسطة kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... المزيد

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 52

1.3K 41 13
بواسطة kanidev86

பகுதி - 52

இடையில் கட்டிய ஒற்றை துண்டுடன்.. தன் மனைவியின் மீது குறும்பு விழிகளால்.. குறுநகை புரிந்து கடைசியாக அவன் கேட்டது.. எதுவும் , அவளை சென்றடையவே இல்லை .

வியப்பு.. வியப்பினால் உண்டான அதிர்வு.. கருவண்டு விழிகளில் அதை தவிர எதுவும் தென்படாமல் இருக்க.. மென்மையாக , அவளை மேலும் தனக்கு இழுத்தாலும் , பேசிய ஒருமணி நேரத்திலோ , ஒரே நாளிலோ.. அவளிடத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.. என்று நினைப்பதே மடமை என்று புரிந்துக் கொண்டான் .

ஆடவனுக்கோ.. மனைவியின் நெருக்கம் , உடலில் வெப்பத்தை அதிகரிக்க செய்திருந்ததில் , தன் உணர்வுகளை வெளிப்படுத்த‌.. அவளது அதீத பதற்றமும்.. தவிப்பையும் கண்டவனோ..

" அவ இருக்க நிலைமைக்கு உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது..", என்று மனசாட்சி இடித்துரைத்ததோடு அல்லாமல்..
" இவள பார்த்த நாளில் இருந்தே.. நீ தப்பு தப்பாதான்டா பண்ற‌. " மீண்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வர.. ' நீ போடா டேய்.. எனக்கு தெரியும்‌‌ என் பொண்டாட்டிய பார்த்துக்க..' என்று ஒரே மிதியாய் மிதித்து ஏத்தித் தள்ளியவன்..
தாமரையை , அதே ஆதுரமான அணைப்போடு படுக்கைக்கு கூட்டிச் சென்று..

" தாமரை.. வா எதையும் யோசிக்காம தூங்கலாம்..", எனவும் , சமத்து பிள்ளையாய் படுக்கையில்.. அவன் கூறுவதை கேட்டு தலை சாய்ந்தாலும்.. பற்றிய அவன் கரத்தை விடாமல் உதடு பிதுக்க..

" ம்ச்சு பாப்பா.. என்ன டி இது.. காதலிக்கிறேன்னு சொன்னது ஒரு குத்தமா..", என்று அவன் வேதனையை மறைத்தவனாய் கேலியாக கூறுவது போல் கூறி.. அவள் அருகே , தானும் படுத்து.. தன் மேல் போட்டுக் கொள்ள.. அப்படியே , பசை போல் ஒட்டிக் கொண்டாள் .

முடி.. காடு போல் சுருண்டு வளர்ந்திருந்த நெஞ்சத்தில்.. தன் கன்னத்தை அழுத்தமாக பதித்து.. கடைவிழியோரம் , சூடாய் வழிந்த கண்ணீரோடு எப்பொழுது உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கியிருக்க.. பெண்ணவளின் துடிப்பு.. நொடிக்கு நொடி ஆடவனை அதிகமாக சிந்திக்க தூண்டியது.‌ இப்படியே , எவ்வளவு நாள் அவளை தாழ்விறக்கத்திலேயே வைத்திருக்க முடியும்.. என்று தன் மனைவியை பற்றிய யோசனையிலேயே பொட்டுறக்கம் வரவில்லை .

எப்படி இவளை மீட்டெப்பது .. என்று அதிகம் சிந்தித்தவனாய்.. தங்களது கடையின் , நிகழ்வே அதற்கு சான்று.. பிடிவாதமாய் அவமானப்பட்டு நின்றிருந்தாலும்.. அவர்களது எள்ளலான பார்வைக்கு அஞ்சியே.. தங்களது உறவை கூறாமல் இருந்ததாக கூறிய பொழுது.. ஏற்பதாகவே இருந்ததே.. பிறரின் பார்வைக்கு மதிப்பளித்து.. தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக் கொண்டே இருந்தால்.. எப்படி வாழ்வு மலரும்.. உடனடியாக , இதற்கு தீர்வு கண்டே ஆக வேண்டும்.. என்ன செய்ய.. என்று எண்ண சுழற்சியை விடாது தொடர்ந்தாலும், மென்மையாக , மனைவியின் தலைக்கோதியவனாய்.. பாதி உடல் அவன் மீது படர்ந்திருக்க.. கழுத்தை இறுக்கமாக , பற்றிக் கொண்டு உறங்குபவளை மென்னகை பூக்க.. " பாப்பா..", என்று அப்படியே இறுக்கிக் கொண்டாலும் ,

பல சமயங்களில்.. தெளிவாய் பேசி.. அமைதியாக கோபத்தை வெளிப்படுத்துகையில்.. 'இவளா அவள்..' என்றே நினைக்க தோன்றும் . எதைஎதையோ , நினைத்து படுத்திருந்தவனுக்கு.. மின்னல் போல் மின்னி மறைந்த யோசனையில்.. ஒருவாறு நிம்மதி பிறந்திருக்க , எப்படி செயல்படுத்துவது.. என்று அடுத்தகட்ட நடவடிக்கை சிந்தித்தவாறே இருந்தவனை.. எப்பொழுது உறக்கம் தழுவியது என்று அறியாமல் விடியலின் பொழுதே கண் உறங்கியிருக்க.. பொழுது புலர்ந்ததில் தன்னிச்சை செயலாக.. அவன் பாப்பாவிற்கு , விழிப்பு தட்டியது .

கண் மலர்ந்தவளுக்கு , அவனுடைய.. மார்பிலேயே உறங்கி இருப்பது புரிய , வேகமாக.. எழ முயன்றாள்.. எங்கே , அவனும் விழித்துவிடுவானோ.. என்று தோன்றியவுடனேயே நிதானித்தவளாய்.. மெதுவாக , எழ.. தலையை மட்டுமாகவே தூக்க முடிந்தது . அவ்வளவு , அழுத்தமாக அவளது இடையை வளைத்திருந்தான் . " அப்..ப்..பா.. ", என்று புலம்பினாலும்.. குளியலறையில் இருந்து வந்த நிலையிலேயே அவன் இருப்பது.. நேற்றிரவு தெரியாதது.. இன்று உறைக்க..

" அய்யோ , இப்படியேவா இருக்காக.. ", என்று அலற..

"இப்படியே இருக்காக இல்லை.. தூங்க வச்சாகன்னு‌.. நீ அலறியிருக்கணும்..", என்று அவளிடமிருந்து வேகமாக எகுறி குதித்து மனசாட்சி பதில் கொடுக்க.. " ஓ..", என்று உள்வாங்கியவள்.. அவன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தவளாய்..

அவளது புருவத்தில் துவங்கிய ரசனையை விவரித்ததை நினைவு கூர்ந்தவளுக்கோ.. அவன் அழகை ரசிக்க தூண்டிட.. மெலிதாக அசைந்தாடிய கேசத்தில் துவங்கியது.. அவளது விழிகளின் பயணம்..

அப்..ப்பா.. மினுமினுவென கண்களையே கூச செய்யும் கேசம்.. மூடிய விழிகளில் தென்படும் கூர்மை.. உறக்கத்திலும் இறுகி கிடக்கும்.. உதடுகள்.. இதோ , வளைத்து பிடித்து கொண்டிருக்கும் பிடியில் நிறைந்த கரிசனம்.. என்று நினைத்தவளாக வந்தவளுக்கு.. ,

"இப்பவே இவுக.. இம்புட்டு பாசத்தை காமிக்கிறாக.. அப்போ சத்தமா பேசக் கூடத் தெரியாது , எப்படி எல்லாம் காட்டி இருப்பாக.. எப்படி தான் இந்த மான்சியக்காவுக்கு இவரோட அன்பை விட்டுட்டு போக மனசு வந்ததோ..", என்று தன்போல் சிந்தித்தவளுக்கு.. மான்சியின் திருமணமும் சேர்த்தே நினைவிற்கு வர..

" இந்த ஆரவ்.. சொன்னாப்புலையே கல்யாணம் பண்ணிகிட்டானே..", என்று சிந்தனை வயப்பட்ட மறுகணம் அவன் பிடியில் இருந்து நழுவி இருந்தாள் .

நேரத்தை பற்றியும் அக்கறையற்றவளாய் , மான்சியின் அலைபேசிக்கு அழைத்து காத்திருக்க.. எடுத்தது என்னவோ , ஆரவ்..

" ஹேய் லோட்டஸ்.. என்ன இந்த நேரத்தில.. ", என்று தூக்கத்தில் இருந்தாலும் ஒருவித அக்கறையுடன் வினவியவனுக்கு.. உடனேயே , தெளிவும் பிறந்துவிட்டது போலும்..

" ஹேய்.. லோட்டஸ்மா.. விஷஷ் பண்ண கூப்பிட்டியா.. ஆனாலும் , கொஞ்சம் லேட்டா கூப்பிட்டு இருக்கலாம்டா.. நைட் எல்லாம் தூங்கவே இல்ல.. நீ என்னன்னா.. ",

" ம்ச்சு.‌ போதும் ஆரவ் ஸார்.. அக்கா எப்படி இருக்காங்க.. ", என்றாள் ஒருவித பதற்றத்தோடு..

" எப்படி இருப்பான்னு நினைக்கிற..", என்று எதிர் கேள்வி கேட்டு நிறுத்த..

" ம்.. லூஸு மாதிரி அழுதுட்டே இருந்திருப்பாங்க..", என்று கடித்து துப்ப

" அதே தான்.. இப்போ.. தான் தூங்க ஆரம்பிச்சா..", என்றான்.

" என்ன திடீர்னு.. என்ட்ட கூட சொல்லலை.." என்று அவர்கள் திருமணத்தை பற்றி கேட்டிட

" ம் அதுவா லேட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு.. ஏற்கனவே , என்னால ஒரு லூஸோட.. போராட முடியலை.. இப்ப அவ இன்னொரு லூஸையும் ஜான் பண்ணிக்கிட்டாளா.. அதான்.. எப்படி நம்ம ட்ரீட்மெண்ட்.. ", என்று சிரிக்க.. பலத்த மௌனம் தாமரையிடம் இருந்து ..

" லோட்டஸ்.. ", என்று ஒற்றை புருவத்தை உயர்த்தியவனாக.. குரல் கொடுக்க..

" ஏன் ஸார்.. எனக்கு ரொம்ப குழப்பமாவே இருக்கு.. அதைவிட , ரொம்பவே பயமா இருக்கு.. எல்லாம் தெரிஞ்சும் நீங்களும் இப்படியே பேசுறீங்களே.." என்று கலங்கவும்..

" ஷ்.. என்ன தாமரை இது.. உனக்கே நல்லா தெரியும் என்னைக்கா இருந்தாலும் நான் மான்சிய மேரேஜ் பண்ணிக்காம இருக்க மாட்டேன்னு.. ஆனா , இவ்வளவு அவசரமா செஞ்சுக்க காரணம் முதல்ல அவங்க அம்மா.. அடுத்து நீ.. சரண் மனசுல உன்னை தவிர வேற யாருமே இல்லை லோட்டஸ்.. மான்சிக்கு சரண்கிட்ட நடந்ததுக்கான குற்றணர்ச்சி இருக்கே தவிர.. வேற எந்த நோக்கமும் இல்லை. நீ நினைக்கிற மாதிரி.. மறுபடியும் , அவங்களால ரிலேஷன்ஷிப்பை பற்றி யோசிக்கவே முடியுமான்னு தெரியாத போது.. தொடரனும்னு நீ நினைக்கிறது முட்டாள்தனம்.. அவ எனக்கு.. மித்ரன் உனக்கு.. இதுதான் கடவுள் போட்ட முடிச்சு.. என்ன அது செக்கென்ட் இன்னிங்ஸ்ல கிடைச்சிருக்கு அவ்வளவுதான்.. உங்க சரண் ஸாரைவிட ரொம்பவே நல்லா பார்த்துப்பேன்.. நீ அவனை கவனி அது போதும்.. ஆமா , எங்க மேட்டர் உனக்கு எப்படி தெரியும்.. ",

" ஏன் கேக்குறீய..", என்று முனங்க..

" இன்னும் வெளில யாருக்குமே தெரியாது.. உன் புருஷனை தவிர..", என்று சிரித்தான்..

" ஏன்.."

" ஏன்னா.. மறுபடியும் ஒரு லூஸுட்ட மாட்டீகிட்டா.. பாவம் இல்லையா சரண் நிலைமை.. மாட்டிக்க கூடாதுல்ல..", என்று தீவிரமாக பதில் அளிக்க..

" நான் லூஸா.. ", என்று சிலிர்த்து எழ..

" இல்லையா பின்னே.. ", என்று புன்னகையுடன் மெதுவாக , அவர்களது அறையை விட்டு வெளியேறியவனாக.. தாமரையுடன் தொடர் பேச்சில் ஈடுபட்டிருக்க..

தாமரையால் , அவனது கேலியில் ஈடுபட முடியாதவளாய்.. எப்பொழுதும் அவனிடம் மட்டுமே காணப்படும் துடுக்குதனத்தை தொலைத்தவளாய்..

" ஏன் ஆரவ் ஸார்.. இப்படி பண்ணீய..", என்று கண்கள் கலங்கியவளாய் கேட்டவளுக்கு சுத்தமாக மறந்தே இருந்தது.. இரவு முழுவதும்.. சரண் வெளிப்படுத்திய காதல் வசனங்கள்.. சற்று முன்பு வரை.. அதை நினைவு கூர்ந்தவளாய் அவனை ரசித்திருந்ததும் .

பெருத்த மௌனம் சிலகணங்கள்.. அவன் பக்கம் நிலவ.. மீண்டும் , அவனாகவே , " நீ என்ன கேட்க வர தாமரை..", என்று அழுத்தம் கூடியிருந்ததோ..

" நிசமா உங்களுக்கு புரியலையா..", என்று விம்மியவளிடம்.. பெருமூச்சொன்றை வெளியேற்றியவனாக ,

" உனக்கு தான் டா புரிய மாட்டேங்குது.. அவங்க ரெண்டு பேரும் சரி வராதுன்னு பிரிஞ்சுட்டாங்க.. உனக்கு விளங்குதா இல்லையா..", என்று கோபமாக பேச நினைத்தாலும்.. ஆதங்கமாகவே வெளி வந்ததில்..

" மான்சி அக்கா.. ஸார் மேல உயிரே வச்சிருக்காங்க.. ரெண்டு பேரும் எவ்வளவு விரும்பினாங்க தெரியுமா..",

" விரும்பினாங்க.. விரும்பீட்டு இருக்காங்க இல்லை.. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கோ.. "என்றான் வெடுக்கென்று..

" சரணுக்கு மான்சி மேல இருக்கறது முழு வெறுப்பு.. மான்சிக்கு அவன் மேல இருக்கறது குற்றணர்ச்சி.. இவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் இழுத்து பிடிச்சு வைக்கிறதால.. நல்லா வாழ்ந்திடுவாங்கன்னு நினைக்கிறியா.. சொல்லு.. சரி அதெல்லாம் விடு.. மான்சிக்கு அவன் மேல லவ் இருக்குன்னா.. உன்கிட்ட எப்படி அவளால இயல்பா இருக்க முடியும் இல்ல.. என்னை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்.. இதை எதையுமே யோசிக்க மாட்டியா..

அங்க சரண் என்ன பண்றான்.. என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிகிட்டான்னு வருத்தப்பட்டுட்டே இருக்கானா.. ஒரு விஷயம் தெரியுமா.. மான்சிக்கே நேத்து காலேல தான் எங்க கல்யாணம்னு தெரியும்.. ஆனா , உன் புருஷனுக்கு எப்பவோ தெரியும்.. தெரியுமா உனக்கு..", என்றவன்..

" லோட்டஸ்.. நீ சின்ன குழந்தையில்லை.. இல்ல.. உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றதுக்கும் இல்லை.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே.. மான்சி நிலைமையை எனக்கு சொன்னதே நீதான் .. அப்போ , உனக்கு பதினைந்து வயசுன்னு நினைக்கிறேன்.. அவ கஷ்டப்படுறான்னு தெரிஞ்சு.. நீ ஏன் சரண் வீட்டுக்கு போகலை.. இல்ல சரணை பார்க்கலை..", என்று நிறுத்த

" நான் போனேன்.. ஆனா என்னை அவங்க பார்க்கவே விடல.. அக்கா பேரை சொன்னாலே துரத்திவிட்டாங்க.. சரண் ஸார் எங்கோ வெளியூர் போயிட்டதா சொன்னாங்க.. என்னால ரொம்பவும்.. அவங்கட்ட நெருங்க முடியலை.. அவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சு வச்சிருந்தாங்க..", என்று வருந்த..

" உனக்கே புரியுதுல்ல.. யாரும் செய்யவே கூடாத வேலையை செஞ்சான்னு.. இது இதைதான் நான் சொல்றேன்.. முடிஞ்சது.. முடிஞ்சது தான்.. மறுபடி.. மறுபடி.. அவங்களே யோசிக்காத விஷயத்தை நீ போட்டு.. உழற்றதால.‌. நடந்திடாது..", என்று உஷ்ணமாக கூறியவன்.. தொடர்ந்து ,

" மான்சி இப்பவும் அவனை லவ் பண்ணீட்டு இருந்தா.. என்னை எப்படி கல்யாணம் பண்ணி இருந்திருப்பா.. இல்லேனா.. சரண் எப்படி விலகி இருப்பான்.. எதுவுமே , மரமண்டைக்கு ஏறலையா.. இல்லை ஏத்த விடக் கூடாதுன்னு இருக்கியா..",

" ஆனாலும் , லோட்டஸ் உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க சரண் கொடுத்து வச்சு இருக்கணும்..", என்று படு நக்கலாக அவன் கூற..

" ஏன் ‌.. ", என்று அதரங்கள் வெடுக்கென்று கேட்கத் துடித்தாலும்.. இறுக்கமாக , உதடுகளை ஒட்டி வைத்திருந்தவளிடம்.. மேலும் , தொடர்ந்தவனாக.. " அட ஏன்னு கேளு.. சரி விடு நானே சொல்றேன்.. பாரு , அவனுக்கு நீயே.. பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க துடிக்கிற.. உன்னை மாதிரி பொண்டாட்டி.. இருந்தா எங்களை மாதிரி ஆம்பளைக்களுக்கு என்ன கவலை சொல்லு..", என்றான்.

" அவிய ஒன்னும்.. அப்படி நடந்துக்கறவுக இல்லை.. ",

" அப்போ , அவனை உன் புருஷன்னு ஒத்துக்குற..", என்று நிதானமாக கேட்டதில் திகைத்து தடுமாறியவளிடம் ,

" தாமரை.. இப்பவும் சொல்றேன்.. எப்பவும் சொல்லுவேன்.. சரண்னால உன்னை விட்டு ஒருநொடி கூட பிரிஞ்சு இருக்க முடியாது.. அந்த அளவுக்கு உன் மேல அவனுக்கு லவ் இருக்கு..",

" அவங்க ரெண்டு பேருமே.. மறந்திட்ட விஷயத்தை நீயேன் பிடிச்சு தொங்கீட்டு இருக்கறது நல்லதில்லை.. அவ என்னை விரும்புறா.. சரண் உன்னை விரும்புறான்.. இதுல எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.. தயவு செஞ்சு இனிமேல் , இப்படி உளறீட்டு இருக்காத.. உன் புருஷன விட்டுக் கொடுக்குற தியாகச் செம்மலா நீ இருந்துட்டு போ.‌ ஆனா , என் பொண்டாட்டிய அடுத்தவன்ட தாரவார்த்து கொடுக்கும் அளவுக்கு நான் கேடு கெட்டவன் இல்லை.. "

அதுவரை , குழப்ப மனநிலையிலேயே‌.. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று சிந்தித்து.. தடுமாறி உள்வாங்கிக் கொண்டிருந்தவளுக்கு.. ஆரவ்வின் கடைசி பேச்சு சூட்டை கிளப்பிவிட , " அப்போ , நான் அந்த மாதிரின்னு சொல்லுறீயளோ.. நீங்க.. நீங்க மட்டும் அன்னைக்கு நான் கெஞ்சினதுக்கு ஒத்துகிட்டு இருந்திருந்தா.. இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா.. ", என்று கொந்தளித்துவிட்டாள் .

" அதையே சொல்லாத லோட்டஸ்..", என்று உள்ளடங்கிய குரலில் முகம் கசங்க பேசியவனிடம் ,

" ஏன்.. ஏன் சொல்லக் கூடாது.. நீங்க பணம் கொடுக்காம போனதுக்கு நான் சொல்லலை.. என் தங்கச்சிய.. வச்சு பயங்காட்டினதும் யார்கிட்ட ஓடி வந்தேன்.. உங்கிட்ட தான.. பொண்டாட்டியா நடிக்க சொல்றாவ.‌. கண்டிப்பா என்னால முடியாது.. ஸாரால அம்முக்கு எதுவும் ஆகாது.. நீங்க என்னோட வாங்கன்னு எப்படி கெஞ்சினேன்.. கேட்டீயளா.. நீங்களும் பணம் வாங்கிட்டு நடின்னுதான சொன்னிய.. எதுக்காக.. எதுக்காக அப்படி பண்ணீய.. அக்காவை கல்யாணம் பண்ணிக்க நினைச்சதுனால தான.. உங்க தங்கச்சியா இருந்திருந்தா.. இப்படி என்னைய போன்னு விட்டு இருப்பீயளா.. சட்டைய பிடிச்சு கேள்வி கேட்டு இருக்க மாட்டிய.. ", என்று மூக்கு விடைக்க.. குற்றம் சாட்ட..

" நான் வராட்டியும்.. நீ உண்மைய சொல்லாம இல்லையே டா..", என்று கெஞ்சலாகவே அவன் குரல் ஒலித்தது.. அவள் கூறுவதில் தவறேது..

" சொன்னேனே ஆனா , யாரு கேட்டா.. அவிய விரும்புறாக.. விரும்புறாகன்னே .. சொல்லுறீயளே.‌. என்னை.. என் மனசை பத்தி யாராவது.. யோசிச்சீயளா.. எனக்கும் ஆசை.. கனவு எல்லாம் இருக்கும் தானே.. உங்களால , அக்காவோட கம்பீரமா வெளிய போக முடியும்.. அவியலால முடியுமா.. நான் யாருன்னு அவியலுக்கு வேணா தெரியாது.. ஆனா , என்னையும் தெரிஞ்சவுக இருப்பாக தான.. அவிய கௌரவம் என்னாகும்னு யோசிச்சீயளா.. இதெல்லாம் போதாதுன்னு.. என்னைய முழு ஏமாத்துகாரியா மாத்தீட்டியளே.. நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறது.. உங்களுக்கு எங்க தெரிய போகுது.. நான் மான்சியக்காட்ட வேலை பார்த்தவன்னோ.. நான் பாட்டு பாடினதோ தெரிஞ்சதுன்னு வைங்க.. என்னாகும்.. என் நிலைமை என்ன.. எதையாவது நினைக்குறீகளா.. உங்களுக்கு என்ன.. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை வாழணும்.. ", என்று மூக்கு விடைக்க பொறிந்தவளின் கேள்விகளால் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் .

" பொறந்ததுலேருந்து அவமானப்படுறது எனக்கு பழகினது தான்.. ஆனா, என்னால.. இந்த குடும்பத்தில உள்ளவுகளையும் பகுடி( கேலி ) பேச ஆளாக்கிட்டியளே.. என்னால , ஏமாத்துக்காரியாவும் இருக்க முடியாம.. உண்மைய போட்டு உடைக்கவும் முடியாம.. படுறபாடு பத்தி என்ன தெரியும் உங்களுக்கு ‌.. நீங்க முன்னமே சொல்லியிருந்திருந்தா.‌. எங்கையாவது காணாத இடத்துக் ஓடி போயிருப்பேனே.. என் தங்கச்சியாவது உயிரோட இருந்திருப்பா.. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. மித்ரன் ஸாருக்கு உண்மை தெரிஞ்சா.. சும்மா விடுவாகன்னு.. என்னைய வாழவும் விடாம.. சாகவும் விடாம கொன்னுப் போட்டியலே.. ", என்று கோபம் பாதியாக ஆதங்கம் மீதியாக துடிதுடித்தவளை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை . ஆனாலும் ,

" ராம் அங்கிள் என்ன சொல்றாரு..", என்று தயக்கமாக கேட்டிட ,

" ஏன்.. ஏங்கறேன்.. அதை தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ண போறீய.. ", என்று சூடாய் எதிர் கேள்வியை அவள் கிளப்ப..

" தாமரை.. நீ நினைக்கிற மாதிரி நான் நினைச்சு செய்யலம்மா.. பாரீஸ்ல நீ அவனை பார்த்தேன் சொன்னதால மட்டுந்தான்டா.. உன்னை போக சொன்னேன்.. இப்படி நடந்துக்குவான்னு நினைச்சே பார்க்கலைடா.. உன்னை தப்பா நினைச்சு நடந்துகிட்டான்னு.. நீயாவா சொன்ன.. நாங்களா தெரிஞ்சுகிட்டது . பெரிய தப்பு பண்ணீட்டேன்னு நாங்க துடிச்சிட்டு இருந்தப்போ.. அவனே , உன்னை மறுபடியும் தேடி வந்ததை சொன்ன.. காரணம் எதுவா இருந்தாலும்.. நீ எதோ ஒரு விதத்தில அவனை டிஸ்டர்ப் பண்ணியிருக்கேன்னு தோணுச்சு.. அதுனால தான்டா.. சரின்னு சொல்ல சொன்னேன்.. எங்கே உன் மனசாட்சிய தொட்டு சொல்லு.. வேற யாராவது.. இப்படி ஒரு கூப்பிட்டு இருந்தா பணத்துக்காகவேனாலும்.. நீயே சம்மதம் சொல்லி இருப்பியா.. எனக்கு எந்த அளவுக்கு உன் லைஃப் முக்கியம் தெரியுமா.. மான்சி எங்க ரிலேஷன்ஷிப் பத்தி யோசிக்கிறதுக்கு முன்னாடியே , கல்யாணம் செஞ்சுகிட்ட அளவுக்கு.. லோட்டஸ்.. நீ ஏத்துகிட்டாலும் இல்லேனாலும் சரி.. நீ எனக்கு எப்பவும் குட்டி தான் . நீ சொன்ன மாதிரி நான் நடந்திருக்கணும்.. ஆனா , சரணோட நீ வாழணும்னு அமைதியா இருந்துட்டேன்.. உங்களோட கல்யாணம்.. உனக்காக நடக்கனும்னு ஆசைப்பட்டேனே தவிர எனக்காக இல்லை.. உன்னுடைய ஆசை கனவு.. இதை பத்தி நான் யோசிக்கலைங்கறது உண்மை தான்.. ஆனா , இனிமேல் நடக்கும் ‌.. நடத்தி வைப்பேன் . ஒரே விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சுக்க.. தாமரை.. நீ.. நீ தான் அவனோட வைஃப்.. புரிஞ்சதா..", என்று சில நிமிடங்களுக்கு உள்ளாகவே , பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தவன்.. இறுதியாக , அழுத்தத்தோடு கண்டிப்பை வெளிப்படுத்த.. வாயடைத்துப் போனாள் .

பதிலற்ற நிலையில் அவள் இருப்பதை புரிந்துக் கொண்டு.. "சரணை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.. முடிஞ்சா.. என்னை மன்னிச்சிடு..", என்று அழைப்பை துண்டித்தவனின் மனம் , ' உன் தங்கையாக இருந்திருந்தால்..', என்று அவளது குரல் வெகுவாக.. பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது .

واصل القراءة

ستعجبك أيضاً

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
23K 907 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...