வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 45

1.5K 53 26
By kanidev86

பகுதி - 45

கண்களில் நீர் வழிய.. ரிச்சர்டின் முதுகையே வெறித்திருந்தவள்.. அவன் கொஞ்சமும் திரும்பியே பார்க்காமல் , வெளியேறியதும்.. அழுகையில் துடிக்க.. மேஜை மீது தன் கரங்களை வைத்து  , அதன் மீது சாய்ந்துவிட்டாள் ‌. உயிரை கொல்லும் வலியை கொடுப்பவனிடமே அடைக்கலம் தேடி.. அழையும் தன் மனதை நினைத்து வெட்கியவள்.. இருக்கும் இடத்தையும் மறந்து... அழுகையில் குழுங்க..

தன் இருசக்கர வாகனத்தில் , ஏறி அமர்ந்தவனுக்கு அது வரை இருந்த பிடிவாதத்தை தொடர , முடியாமல் போனது.. அதன் வெளி வாயிலை பார்க்க.. இதுவரை , அவள் வந்தது போல் தெரியவில்லை.. பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அலட்சியம் காட்ட முடிந்தவனால் , இப்பொழுது , முடியாமல் போக.. வேகமாக , அவளை தேடிச் சென்று..  அவள் முன் நின்றவனோ.. சொல்லொண்ணா , வேதனையில் தத்தளித்தவனாய்.. அதை அவன் அணிந்திருக்கும் முகமூடி எப்பொழுதும் போல் , கவசமாக.. ஐந்து நிமிடங்கள் கடந்தும் , அவள் நிலையில் மாற்றம் இல்லாமல் அழுதுக் கொண்டிருக்கவே , சினம் தலை தூக்க.. வேகமாக , மேஜையின் மீது ஓங்கித் தட்டினான் .

திடீரென்று , ஏற்பட்ட சத்தமும்.. அதிர்விலும் துள்ளி எழுந்தவளை , "வா.." என்ற அழைப்போடு.. முன்னே செல்ல.. முதலில் , அதிர்ந்து பின்.. திகைத்தவள்.. மீண்டும் அவன் காட்டிய அலட்சியத்தில்.. கோபம் கிளர்ந்தெழ.. அசையாது நிற்க.. இரண்டு எட்டுகள் வைத்தவன்.. 'உன்னை நான் அறிவேன் என்பது ', போல் திரும்பி பார்த்து.. ஏளனமாக உதட்டை சுழித்தவன்..

" எனக்கு தெரியும்.. நீ இப்படி தான் பண்ணுவன்னு.. தேடி வந்தேன்ல.. என்னை சொல்லணும்.. ஒழுங்கு மரியாதையா வா.. தேவை இல்லாம சீன் க்ரியேட் பண்ணாம.. எல்லோரும் , நம்மளையே பார்க்குறாங்க.. ", என்று  உதடுகள் அசைகிறது என்பது தெரியாத அளவிற்கு இறுகிக் கிடந்தாலும்.. குரலில் இருந்த உறுமல் மட்டும் குறைவில்லாமல் வெளிப்பட.. வேக வேகமாக.. அவளது மொபலை எடுத்துக் கொண்டு பின்னோடு ஓடினாள் .

அவனுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து.. மீண்டும் அழுத்தமான பார்வை பார்க்க.. அலைஅலையாய் , உள்ளுக்குள் எரிச்சல் மண்டினாலும்.. அமைதியாக , ஏறிக் கொண்டாள் .  "பின்னாடி உட்காருன்னு சொன்னா.., வாய் முத்தா குறைஞ்சிடும்..", என்று முணுமுணுக்க.. கடையோரத்தில்.. துடிக்கும் உதடுகளை மறைத்தவனாய்.. மீண்டும் ஆக்சிலேட்டரை.. முறுக்கிக் கொண்டு.. கண்ணாடியின் வழியே.. அவளை மட்டுமே பார்த்திருக்க.. இவ்வளவு நிமிடங்களாக.. தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த உதடுகளால்.. முடியாமல் போகவே.. " ரிட்ச்சா.. நீ ரொம்ப பண்றடா.. சொல்லிட்டேன்.. என் தோளை பிடிச்சிட்டு உட்காருன்னு சொல்ல கௌரவம் பார்க்கும் போது.. நான் மட்டும் வெட்கம் கெட்டு.. பிடிப்பேனா..   திரும்பியே பார்க்காம போனதுக்கு .. வேற எவளா இருந்தாலும்.. நடக்கறதே வேற.. நானுங்கறதால.. நீ மிரட்டதும்.. பேசாம வரேன்.. சொல்லீட்டேன்.. நீ சொல்லாம.. நான் உன்னை பிடிக்க மாட்டேன்டா..", என்று கூறியவள்.. 'உன்னால் முடிவதை செய்துக் கொள்.. ' என்று தெனாவட்டாக பார்த்த அடுத்த நொடி.. அவன் தோளை மட்டும் அல்ல.. இரு கரங்களால்.. அவன் இடையை இறுக்கிப் பிடித்து.. தன் முழு இடையையும் அவன் மீது சாய்த்து கண்களை அழுத்தமாக மூடியிருந்தவளாய் இருந்தாள் ‌ .

இமைக்கும் நொடிக்குள் , வாகனத்தின் முழு வேகத்தில் , இயக்கியிருந்தவனின் அதரங்களோ.. அழகாய் விரிந்திருந்தது.. ஆனால் , அதை தன் தலைகவசம் மூலமாக மறைத்திருந்தான்.. அவள் காதலன் .

மாலை , தன் வீட்டு வாயிலில் விட்டு சென்றவன்.‌.. ஒன்பது மணி போலவே வீடு நுழைகிறான் . சரணின்.. வருகையை அறிந்தவளோ.. வேகமாக.. சமையற்கட்டில் இருந்து ஓடி வர.. அதற்குள் அவன் மாடி ஏறியிருக்கவே.. வேகமாக.. மாடி ஏறியிருந்தாள் . அடுத்து பிடித்து ஓடியவளின் செயலை பார்த்து புருவச் சுளிப்போடு.. ராம் இருக்க.. மயூரியோ.. கண்டும் காணாமல் இருந்தவராய்.. எப்பொழுதும் , அவளுக்காக.. அதிகமாக வருந்தும் தன் மனைவி இன்று அமைதியாக இருக்கவே , " மயூ.. என்னாச்சு.. ஏன் தாமரை இப்படி ஓடுறா.. உன் பையன் திட்டினானா.. ", என்றார் .

" யாரு.. அவன் அவளை திட்டுறானா.. நீங்க வேற ராம்.. நம்ம நினைப்பு எல்லாம் நடக்காம இல்லை.. ஆனா , தலைகீழா நடக்குது.. ", என்று குறுஞ்சிரிப்போடு கூறி சிரித்தார் .

' புரியிற மாதிரி சொல்லு.. ' , என்று பார்வை பார்க்க.. " அதில்லை ராம்..", என்று கடையில் நடந்தவைகளை கூறியவர்..

"ஆனா ராம்.. எனக்கே அவ்வளவு கோபம்.. சரண்.. அங்க சரண் பேசாம வந்ததே.. அவளுக்காக.. ஆனா , அவன் இவ்வளவு கோபமா இருக்கறதுக்கு காரணம்.. வேறன்னு நினைக்கிறேன் ராம்.. பக்கத்தில இருந்த எனக்கு கூட கேட்கவே இல்லை.. அவன் எதோ சொன்னதும்.. தாமரை ரொம்ப ஷாக்கான மாதிரி இருந்தது.. இவ என்னவோ செஞ்சு இருக்கா.. அது மட்டும் புரிஞ்சது.. ", என்றவரிடம் ,

" உன் பையன் ரொம்பவே அந்த பொண்ணை மிரட்டுறான்.. கேட்க ஆளு இல்லேன்னு நினைச்சுட்டான் போல..", என்று அவருடைய சினம் தணிந்ததாக இல்லை..

" ராம்.. நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகவே வேண்டாம்.. அவனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு.. உங்களைவிட.. என்னை விட.. அவளுக்கு நல்லாவே தெரியும்.. அதை நான் நம்ம ஷாப்லையே புரிஞ்சுகிட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி.. அவனுக்கு நம்ம மருமக மேல இஷ்டம் இருக்கு ராம்.. கண்டிப்பா விட மாட்டான்..", என்று அவ்வளவு உறுதியாக சொல்லியவரின்.. நினைப்பை சரண் காப்பாற்ற வேண்டும் என்று தனக்குள் நினைத்தவராக.. மனைவியின் முகத்தில் இருக்கும் நிம்மதியான புன்னகையை அழிக்க விரும்பாதராய்..

" நீ சொன்ன மாதிரி.. நல்லதா.. இருந்தா சரி.. ", தன் மனச்சோர்வை மறைத்தவராக , சிரித்து வைக்கவும் செய்தார்..

மேல் மூச்சு.. கீழ் மூச்சு இரைக்க.. வேகமாக மாடியேறிய தாமரை.. விழிகளால் சரணை துலாவ.. அவனோ , கழுத்து பட்டனை கழட்டியவனாக , டிவியை இயக்கிக் கொண்டிருந்தான் . பிஸ்னஸ் சேனலை.. வைத்து அவள் ஒருவள் இருக்கிறாள் என்பதையே கண்டுக் கொள்ளாதவனாக.. குளியல் அறைக்குள் நுழைந்துக் கொள்ளவே.. . மெதுவாக உள்ளே நுழைந்தவளுக்கு , என்ன செய்வது என்று அறியாதவளாய்.. நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.  தொலைக்காட்சியிலும்.. கோர்ட் சூட் அணிந்தவர்கள்..  தஸ்புஸ்ன்னு.. சண்டையிடுபவர்கள் போன்று.. ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்க.. தலையை வலிக்கத் தொடங்கிவிட்டது .

குளியலறைக் கதவை பார்த்ததும்.. வேகமாக , கடித்தவளுக்கோ.. அதீத தவிப்பு.. இருக்கும் தனிமை.. அதிக எரிச்சலை ஏற்படுத்த.. இந்த நேரத்தில்.. ஓடிக் கொண்டிருக்கும்.. ப்ரோக்ராமின் சத்தமும்.. அவளுக்கு அதீத தலைவலியை ஏற்படுத்த.. முதல்ல சேனலை மாத்தணும்.. என்று எண்ணியவளாய் ,  ரிமோட்டை தேடி எடுத்து.. மாற்றினாள்.. தன் போல்.. அவளுக்கு மிகவும் பிடித்தமான பாட்டு சேனலை வைக்கவும்..

சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே..

என்று பாடல் வரிகள் அழகாய் அந்த அறையை நிறைக்க.. சரியாக.. அதே நேரம் சரணும் வெளி வந்திருந்தவன் கூர்மையாக.. அவள் விழிகளோடு கலக்கவிட்டவனாய்..

நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி...

தொடர்ந்த வரிகளால்.. அதற்கு மேல் தாள முடியாமல்..  வேகமாக.. தொலைக்காட்சியை அணைத்து..  அவன் ஆடைக்களை எடுக்க நகர்ந்துவிட்டாலும்..  ' இதெல்லாம்.. இவ தலையில் எங்க ஏறப் போகுது..' , என்று அவனது இதழ்கள் முணுமுணுத்தது.. எதையோ , கோபமாக.. கூறுகிறான் என்று தெரிந்தபோதும்.. என்ன கூறிகிறான் என்று கேட்கும் அளவிற்கு.. அவளுக்கு ஏது தைரியம்.. அதனால் , முகத்தில் தன் தவிப்பை வெளியிட்டவளாய்.. நின்றிருந்தாள் .

ஈரம் சொட்ட.. இடையில் கட்டிய ஒற்றை துண்டுடன் இருக்கிறான் என்பதெல்லாம்.. அவனுடைய மௌனத்தால்.. அவளுக்கு உறைக்கவே இல்லை..

" ஸாரி..", என்று மெல்லிய குரலில்.. கூறியவளாய்.. அவன் முகம் பார்க்க.. அவனிடத்தில்.. யாதொரு மாற்றமும் இருக்கவில்லை.. பார்வையாலேயே தொடர்ந்தவளை.. கண்டுக் கொள்ளாதவன் போல் நடந்துக் கொண்டாலும்.. சரணின் பார்வை. முழுவதும்.. தன்னவளையை வட்டம் அடித்ததாய் இருந்தது .

கண்டும் காணாமல்.. அவள் அசைவுகளில் மட்டுமே தன் பார்வையை பதித்தவனாக இருந்தான் ... அதை , அவள் அறிந்துக் கொள்ளாதவாறும்.. பார்த்துக் கொண்டான்.. தாமரை , அவன் பின்னே நின்றவளாய்.. " கோவமா இருக்கீயளா..", என்று மெல்லிய குரலில்.. அத்தனை தவிப்பையும் ஒன்று திரட்டியவளாக .. முந்தானையின் முனையை திருகியவளாய்.. கேட்டிட.. மீண்டும் அவனிடத்தில் , அதே மௌனம்..

தான் அணிய வேண்டிய உடையை எடுத்து..  அவளை கடந்து சென்று ஆடையை அணிந்தவன்.. பதிலே பேசாமல்.. வெளியேற.. முயல.. வேகமாக , அவனுக்கும் கதவிற்கும்.. இடையில் புகுந்து நின்றவள்.. " பேச மாட்டியளா..", என்று இமைகள் நனைந்து.. படபடத்தவளை.. அதே அழுத்தத்துடன் ஏறிட்டவனாய் நின்றிருந்தான் . அவளது.. இந்த கலக்கத்தில் , அவன் மனதை அமைதியாக்க முயன்றாலும் .. அவள் செயலில் உண்டான  கோபம் அடங்க மறுத்திருக்க.. தடையின் இறுக்கத்தில் தெரிந்துக் கொண்டவளோ.. கூடுதலாக.. விழிகளில் நீர் தளும்பியது .

" உ..ங்க..ள போ.. ய்.. நா..ன்.. அதுக்கு எனக்கு தகுதி இருக்குன்னு.. நினைக்கிறீகளா..", என்று முடிக்கவும் இல்லை.. கதவை திறந்து வெளியேறியிருந்தான் .

சரண் தன் சினத்தை , எப்பொழுதும் போல் ,  வார்த்தைகளால் வெளியிட்டிருந்தாலும்.. அவளுக்கு இந்த அளவிற்கு தடுமாற்றமாய் இருந்திருக்காது . ' உனக்கும்.. என்னை.. உன் புருஷனா வெளில சொல்லிக்க முடியலை.. இல்லை..', என்றவனின் வலி.. மொத்தமாக புரட்டிப் போட்டிருந்தது என்றால் , இந்த அமைதியோ.. அதைவிட கொடுமையாக.. இதயத்தில்.. கத்தி வைத்து திருகியது போல்.. உயிர்வலியை கொடுத்திருந்தது .

முதல்முறை , அவளிடத்தில் இதுவரை கண்டிராத தவிப்பும் தடுமாற்றமும்.. காணுற்றவனுக்கோ.. மனதோடு மழைச்சாரல்..  உள்ளுக்குள் உற்சாக ஊற்றெடுத்தாலும்.. 'அதுக்கு..:, என்று கூறியவளால்.. இப்பொழுதும்.. 'உன் மனைவியாக.. ', என்ற சொல்லை.. உதிர்க்க முடியாமல் இருக்கவே.. ஏற்க முடியாமல்.. மீண்டும்.. மீண்டும்.. தன் மனதை புரிந்துக் கொள்ள மறுப்பவளாக பேசியதில்.. மட்டுப்பட்டிருந்த.. சினம்.. சீறிக் கொண்டு சிகரம் தொடவே.. கதவை திறந்துக் கொண்டு.. அவளை தாண்டியவனாய் , வெளியேறிவிட்டான் .

விம்மி வெடித்த அழுகையை.. உதட்டில் ரத்தம் வரும் அளவிற்கு கடித்துக் கொண்டு அடக்க முயன்று தோற்றவளாய்.. வழிந்தோடும் , கண்ணீரை துடைத்துக் கொண்டே மெதுவாக கீழ் இறங்கினாள் . அனைவரும் , உணவருந்தும் இடத்தில் ஒன்று கூடியிருக்க.. எப்பொழுதும் , அவனிடத்தில் நிற்கவே தயங்குபவள்.. இன்று , அனைத்தையும்.. தவிடு பொடியாக்கி இருந்தாள்..

எப்பொழுதும் போல் சரண் இருக்க.. குட்டிப் போட்ட பூனையாக , அவனை சுற்றி.. சுற்றி.. வந்தவளாய் தாமரை இருந்தாள் . மயூரிக்கோ , வியப்பா.. அல்ல ஆனந்தமா.. என்று பிரித்தறியாத நிலையில் இருந்தவராய்.. அரும்பும் இதழ்களை பிடிவாதமாக.. பிடித்து வைத்தவராய்.. உணவருந்திக் கொண்டிருந்தார் ‌. ஊமை நாடகம் நடத்தும் மகனின் மீது.. சின்ன கோபமும் எழாமல் இல்லை.. ' இப்படி அவளை தவிக்க விடுகிறானே.. ', என்று.. ஆனாலும் , அனைவரும் நாகரீகம் கருதி அமைதியாக.. இருக்க.. அவனோ , எப்பொழுதும் போல் மாடியேறிவிட்டான் . அதன் பின் உணவருந்தியவள்.. அனைத்தையும் சாவித்திரியோடும் வேலையாட்களுடனும்... இருந்து உதவி செய்பவள்.. இன்றோ, "அம்மா இன்னைக்கு.. மட்டும் பாத்துகுறீகளா..நா..ன்.. ப..டுக்..க.. போ..க..வா..", என்று தவிறிழைப்பவள் போல் தயங்கிக் கொண்டே.. முந்தானையை திருகிக் கொண்டே கேட்க..

" உன்னை யாரு.. இதெல்லாம் முடிச்சிட்டு தான் தூங்கணும்னு சொன்னது.. போ.. ", என்று சிரித்தவாறே அனுப்பி வைக்க சிட்டாக பறந்திருந்திருந்தாள் . அவள் சென்ற வேகத்தை பார்த்து.. அனைவரும் சிரிக்க.. மயூரியும் நின்றிருக்கவே.. " பாவம் அண்ணி.. ரொம்பவே சரண் மிரட்டுறான்.. ", என்று கூறினாலும்.. கோபம் இருக்கவில்லை. 

" எல்லாம் சரியா நடந்தா.. சந்தோஷம் தானே சாவி.. ", என்று எதிர்ப்பார்ப்போடு கூறவும்.. அவர் தன் அண்ணன் மனைவியின்  கரத்தை பற்றி.. " நம்ம சரண்.. நல்லா இருப்பான் அண்ணி.. நீங்க கவலைப்பாடாதீங்க.. நம்மளே தேடி பிடிச்சு இருந்தாலும்.. இப்படி ஒரு தங்கமான பொண்ணை கூடீட்டு வந்திருக்க முடியாது.. ", என்று மகளாக நினைக்கும் தாமரையின் மீது நம்பிக்கை வைத்து கூற.. மையமாக தலையாட்டி இருந்தார் .

அவன் பின்னோடு , மாடி ஏறி வந்திருந்தாலும்.. அறை வாயிலில் கால்கள் தன் போல் பிண்ணிக் கொள்ள.. பெரிதும் தடுமாறி இருந்தாள் . எவ்வளவு நேரம் , அப்படியே நிற்க முடியும்.. அதனால் , தைரியத்தை வரவழைத்து உள்ளே நுழைய.. அவனோ , எப்பொழுதும் போல்.. படுக்கையில் சாய்வாய் அமர்ந்து.. கால்களை படுக்கையில் நீட்டிக் கொண்டு.. மடியில் மடிக்கணியுடன் இருந்தான் .

மெதுவாய் அடியெடுத்து வைத்தவள்.. அவன்புறமாய் அமைதியாக நிற்க.. வந்தது முதல் கவனித்தாலும்.. தன் பேசாநிலையை கைவிடாது இருக்கவும் , தாள மாட்டாமல் ,

"பேசவே மாட்டீயளா..",  என்று கெஞ்சியதற்கும் பதில் இல்லாமல் போகவே.. தன் கண்ணீரை அவன் முன் காட்டாது இருக்க பெரிதும் பாடுபட்டவளாய்.. குனிந்த நிலையில் நின்றிருந்தவளை பார்கையில்.. அவனுள் சிறு சுவாரஸ்யம்.. கிளர்ந்தெழவே.. அமைதியாக , கணினியை மூடி வைத்தவன்.. அழுத்தமாக உதடுகளை போல் கைகளையும் போல்  கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க.. அச்சிறுபெண்ணால் தாளவே முடியவில்லை..

" இதுக்கு.. நீங்க என்னைய.. நாலு அறை அங்குனையே விட்டுருக்கலாம் .. ", என்று செறும.. அவனுக்கும் வலிக்கவே செய்திருந்தது.. ஆனால் , அவளுக்கு தான் யார்.. தன்னை எந்த அளவிற்கு நிறுத்தி இருக்கிறாள்.. என்றே தெரிந்தே ஆக வேண்டும் என்ற வேகம் மாலை முதல் ஆட்டிப்படைக்க.. தன் நிலையில் இருந்து மாறாதவனாய் ,

" உன்னை அறைய.. நான் யாரு..", என்று அழுத்தத்தோடு கேட்டாலும்.. வாய் மலர்ந்திருக்க.. எப்படி அவனை சமாதானம் செய்வது என்று அறியாமல்.. அதிகமாக தடுமாறி.. சுணங்கினாலும்.. மென்குரலில் தன்நிலையை விளக்கியவளாய்.. " .. அவியட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல.. சொன்னாலும்.. நம்ப மாட்டாக.. அதேன்.. நீங்க வர வரைக்கும்.. அங்குனையே இருக்க நினைச்சு.. அமைதியா இருந்துட்டேன்.. ஆனாலும் , திரு..டி..யா..க்கு..வாக..ன்னு.. நினைக்கலை.. அதுக்கப்புறம்.. என் நிறமும்.. உடுப்போட விலையும்.. உங்க பொண்டாட்டியா.. மாறி போறதுல.. எனக்கு.. இஷ்டம் இல்லை.. அதேன் சொல்லலை.. ", என்று தைரியமாக கூற முயன்றாலும்.. உடைந்தவளாய் .. கூறி முடித்தவள்..

"இ..ப்ப.. வும்.. பேச.. மாட்டியளா..", என்று அழுகையுடன்.. அவள் அறியாமலேயே.. அவனருகே , அமர்ந்தவள்.. " என்ட்ட.. பே..ச..வே.. மாட்டியளா..", என்றாள்.. " ஏ‌. ன். அப்படி.. சொன்னீய.. நான்.. நீங்க.. உங்க.. பொண்டாட்டியா இருக்க.. எனக்கு என்ன தகுதி இருக்கு.. என்ட்ட‌.. இப்படி.. ஒரு வார்த்தை.. சொல்லீட்டியளே.. ", என்று வருந்தியவள்..  எப்பொழுது.. என்று அறியாமலேயே , அவன் மார்பில் விழுந்து வெடித்து சிதறியிருக்க.. முதன்முதலாக , அவள் காட்டும்.. இந்த உரிமையான நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தவனாய்.. விழிமூடி தன் கரத்தையும் விலக்காமல் அமர்ந்திருக்க.. அவன் வாய்மொழிவான்.. என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் அளிக்கவும்.. தளும்பும் விழி நீரோடு.. ஏறிட்டவளிடம்..

"அதுமட்டுந்தான் காரணமா..", என்று கூர்மையாக வினவ.. அதிகமாக , அவளது கண்ணீர் உடைப்பெடுத்ததே தவிர.. குறையவில்லை..

" சொல்லு டீ..", என்று ஊக்குவிப்பது போல் பேசியவன்.. தன் நிலையில் இருந்து மாறாமல்.. தன் மேல் விழுந்திருந்தவளை அணைக்கவும் இல்லை அதேசமயத்தில்.. விலக்கவும் இல்லாமல்.. அவளது முகம் நோக்கி குனிந்தவனாய்.. வினவ.. இமையுயர்த்தி , அவனை ஏறிடும் தைரியமுமற்று.. தன் கண்ணீரால் அவன் சட்டையை நனைக்க துவங்க..

" நீ ரொம்பவே தெளிவா.. தான்டி இருக்க.. ஆனா.. நான்..", என்று இறுக்கமாக விழிகளை மூடித் திறந்தவன்..

"உன் விருப்பம் தெரியாம.. இந்த தாலியை கூட நான் கட்டலை.. அதுதான் உனக்கு புரியலேன்னா.. நான் கொடுத்த முத்தம் கூடவா.. நம்ம உறவை புரிய வைக்காம இருந்திச்சு.. அப்படினா‌.. என்ன டீ அர்த்தம்.. கொடுத்த காசுக்கு உன்னை.. உன் கிட்ட வந்தேன்னு.. நீ அமைதியா என்னை ஏது இருந்திருக்க.. என் லவ்.. நம்பணும் ரிலேஷன்ப்.. உனக்கு எதுவுமே புரியல.. புரியலையா.. ? இல்ல..  வேண்டான்னு நினைக்கிறீயா...?
", என்றவனின் கசங்கிய குரல்.. வெளிப்படுத்திய அவள் மீதான நேசம்..  அதில் இருந்த உண்மையும்.. தவிப்பும்..  அவளை அப்படியே புரட்டிப் போட்டது என்றாலும் மிகையில்லை..

Continue Reading

You'll Also Like

25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤