வா.. வா... என் அன்பே...

Galing kay kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... Higit pa

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 44

1.5K 42 14
Galing kay kanidev86

பகுதி - 44

அந்த கட்டிடமே இடிந்து விழும் அளவிற்கு, கர்ஜித்தவனை கண்டு.. அச்சத்தால் , இரண்டடி பின்னே நகர்ந்திருந்தாள் தாமரை . ஏற்கனவே, அவமானத்தில் குறுகி நின்றிருப்பவளுக்கு.. இப்பொழுது சரணும் , அவ்வாறு கூறி.. இதயத்தை கசக்கி பிழிந்து மரண அடியை வழங்கியதில் .. தாமரையின் நிலை வரையறுக்க முடியாததாகவே இருந்தது என்றால்.. அங்கு பணிபுரிவர்களுக்கோ.. இதயம் தொண்டையில் வந்து நின்று.. அடைத்துக் கொண்டது போல் ஆனது .

தாமரை.. அவளிடத்தில் கூறுவதாக நினைத்து.. பூமிக்குள்ளேயே தலையை விடுபவளாக குனிந்திருக்க.. ஆனால் , அவனது சிவப்பேறிய விழிகளோ , எதிரே நின்றிருந்தவர்கள் மீது இருந்தது .

" ஸார்.. ஷீ... டு..க்.. த..ட்..", என்று ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல் ,

" ஷட் ஆப்.. ", என்று வாய் அடைக்கச் செய்தவன்..

தாமரையின் அருகே சென்று.. வேகமாக , அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி.. நேருக்கு நேராக முகம் காண வைத்து , " என்ன நடந்தது..", என்று கூர்மையுடன் வினவ.. மென்குரலில் , நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாலும் , விழிகளை இறுக்கமாக மூடி.. அழுகையை அடைக்கப் போராடிக் கொண்டு ,தனக்குள்ளேயே உழன்றவளாக இருந்தவளின் செவிகளில்.. திடீரென்று , அவன் குரல் செவிகளை தீண்டி சில்லிட வைத்திருந்தது .

" இவ்வளவு நடந்தும்.. உனக்கும்.. என்னை உன் புருஷனா வெளில சொல்லிக்க முடியலை.. இல்லை..", என்று எவருக்கும் கேட்காதவாறு.. கூர்மையாக வினவவும்.. அவள் விழிகளில் வழியும் வலியையும் விட அதிகமாகவே , தெரிந்ததோ.. என்று திகைத்து நிற்கும் பொழுதே.. அவளைவிட்டு விலகியிருந்தான் ,

" மாம்.. இன்னும்.. ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம் கூட.. இந்த ஃப்ளோர்ல வொர்க் பண்ணினவங்க.. யாரும் இனிமேல் இங்க இருக்க கூடாது.. எல்லோரையும் வெளிய அனுப்புங்க..", என்று கட்டளையிட்டவனாய்..
புயல் வேகத்தில் வெளியேற முயன்றவனை.. அவசரமாக பேசிய தாமரையின் குரல் , "அத்தை.. பாவம் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க..", என்று கூறி அவனை தேக்கியிருந்தாள். அதே வேகத்தில் திரும்பியவனின் கூர்மையான பார்வையை .. ஏறிட தைரியம் அற்றவளாக , மயூரியின் பக்கமாக தன் பார்வையை திருப்பிக் கொள்ள..

தன் நிதான நடையில் , அவளை நெருங்கியவன்.. தன் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு.. "ஏன்..", என்று தன் குரலை உயர்த்தாமல்.. மனக் கொந்தளிப்பையும் தவறாமல் வெளியிட.. அவன் காண்பித்த நிதானத்தில்.. உள்ளுக்குள் குளிர்காய்ச்சல் கண்டவள் போல்.. வெடவெடத்து.. நின்றிருந்தாள் .

மீண்டும் சிங்கத்தின் கர்ஜனையோடு , சிலிர்த்துக் கொண்டு நிற்பவனிடம்.. நா அசைய மறுத்திருக்கவே.. மயூரியிடம் திரும்பியவள்.." பாவம்.. அத்தை..", என்று காற்றோடு பேசிக் கொள்பவள் போல் சத்தம் வெளிவராமல் கூறி.. அதிகமாக , அவனை வெறி ஏற்றியிருந்தாள் . எவ்வளவு அடக்க முயன்றும் தோற்றவனாய்.. தாமரையில் தோளைப் பிடித்து அருகே இழுத்தவன்.. " யாரை பாவம்ன்னு சொல்ற.. ", என்று சிலிர்த்தெழ..

" அத்தை.. ", என்று மீண்டும் அவர்புறமாக , திரும்பி.. அவன் பிடியில் ஏற்பட்ட வலியையும் முகத்தில் காட்டாமல் அழைத்தவளிடம்..

" இது உன் கடை.. நீ சம்பளம் கொடுத்து வாழ்றவங்க.. உன்னை திருடிங்கறாங்க.. அவமானப்படுத்தி இருக்காங்க..  அவங்களை வேலைய விட்டு தூக்காம.. வேண்டாம்.. பாவம்ன்னு சொல்ற..", என்று மயூரியும் சினம் குறையாதவராய் அவளிடம் சத்தமிட துவங்கிவிட்டார்..

தாமரையின் கண்களிலோ.. நீர் சூழ்ந்து பார்வையை மறைக்க.. அவருடைய வார்த்தைகளால் ஏற்பட்ட  ,  தன் கண்ணீர் கன்னத்தை தொட விரும்பாதவளாய்.. இமைத்தட்டி உள்ளே இழுத்துக் கொண்டவளாய்.. போராடுபவளுக்கு தெரியுமே.. அவருடைய பெருந்தன்மையை பற்றி.. சரணின் உத்தரவில் தான்.. இது மயூரியின் நிர்வாகத்தில் இயக்கப்படுவது என்றே தெரியும்.. இதில் , அவளா.. இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி.. அவளே , அவனிடம் பணம் பெற்று மனைவி என்ற பெயரில் வந்தவள்.. அனைத்தும் தெரிந்தும்.. இத்தகைய உரிமையை காட்டுவதிலும்.. அவளுக்கு வழங்குவதிலும்.. கணம் தாளாமல்.. அதனை ஏற்க முடியாமல் தடுமாறியவளாய் இருந்தாள் . அவள் முகத்தில் இருந்தே சரியாக , அவளது மனதை படித்தவனுக்கோ..    ' இவளை என்ன செய்தால் தகும்..?', என்று மண்டைக்குள் ஓலம் எழ..  எங்கே இங்கேயே நின்றிருந்தால் , தன் கோபம் கரையை உடைத்து.. இவளிடம் வெடித்துவிடுமோ.. என்று தன்னை நிதானித்தவனாக..

" மாம் ‌.. நான் கார்ல வெயிட் பண்றேன்..", என்று தாமரையின் முகம் காணவும் மறுத்தவனாக பேசினாலும்.. அனைவரும் இருக்க.. ஆறுதல் கூறவே முடியாத நிலையில்.. தன்னை தள்ளியே வைத்திருப்பவளின் செயலில்.. மறுகி.. உள்ளம் பரிதவித்தவனாய்.. வெளியேற நகர்ந்தால்.. அதற்கும் வழிவிடாதவளாய் , அவன் மணிக்கட்டை வேகமாக பிடித்து அவள்புறமாய் இழுத்து.. போகவிடாமல் செய்ததோடு அல்லாமல்,' சரியென்று சொல்லேன்.. ', என்று அவன் பதிலுக்காக.. அவளது விழிகள் கெஞ்சிற்று..

மயூரிக்கும்.. தாமரையின் கெஞ்சலில் உடன்பாடில்லை.. அதனால் , மௌனமாக.. வாயே திறக்காமல் நின்றிருந்தார் . "அத்தை.." என்று கெஞ்சலான அழைப்பை கைவிடாதவளிடம்.. கடுமையையும் தொடர முடியவில்லை .

" அப்புறம்.. அவங்களுக்கும் நமக்கும் என்னத்தை வித்தியாசம் இருக்கும்.. இப்போ , இவங்க எல்லாரையும் வேலைய விட்டு தூக்கீட்டா மட்டும் அவங்க பேசுனது இல்லேன்னு.. ஆச்சா.. இனிமேல் , இப்படி பண்ணாதீயன்னு கண்டிச்சு சொல்லீட்டா போச்சு.. இதுக்கு போய்.. வேலைய விட்டு தூக்கீனா.. அவங்கல நம்பி இருக்கும் குடும்பத்தை நினைச்சு பார்த்தீயளா..", என்று அவள் அவர்களுக்கே பரிந்து வாதிட்டதில்.. இருவருக்கும் கோபம் பெருகியதே தவிர.. குறையவில்லை . அழுத்தமாக , இதழ்களை தன் அடர்ந்த மீசைக்கடியில் புதைத்துக் கொண்டான் .

" அந்த அக்கறை யாருக்கு இருக்கணும்.. உனக்கா.. இல்லை , இவங்களுக்கா..", என்று வெடித்த மயூடனும் சேராதவனாய்.. மௌனம் சாதிக்க...

" ப்ளீஸ் அத்தை.. எனக்காக.. இதை பெரிய இஷ்யூவா ஆக்க வேணாமே..", என்று மயூரியிடம் வேண்டி நின்றாலும் , கண்கள் சரணிடம் யாசித்து.. அவள் பிடியில் அழுத்தம் கொடுத்து.. நின்றிருப்பவளின்.. செய்கையே.. சிறிது மட்டுப்படுத்தியது என்றால் , ' எனக்காக..', என்று அவள் கூறிய பின் அவர்களால் எப்படி மறுக்க முடியும்.. தாயின் சம்மதம் கிடைத்தாலும்.. அவனுடைய பதிலுக்காக.. காத்திருந்தவளின் சிறு செயலுக்கு பின்.. அவனால் மறுக்க முடியுமா.. ஆனாலும் , கூர்மையான பார்வையை விலக்காமல்.. அமைதியாக நின்றிருந்தான் .

இந்த பெண்ணிடமா.. இப்படி நடந்துக் கொண்டோம் என்று கேலி பேசியவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இவ்வளவு நல்ல பெண்ணிடம் , தரையிறங்கியவர்களாக நடந்துக் கொண்டதை நினைத்து.. வெட்கி தலைக் கவிழ்ந்து நின்றிருந்தார்கள்.. முதலில் கேலியை தொடங்கி வைத்த அப்பெண்ணிற்கோ..  அவர்களின் நிலையில் இருந்து யோசித்து.. பேசுபவளை காண்கையில் , கேலி செய்யத் தூண்டிய அவளுடைய மேனியின் நிறமும்.. ஏழ்மையும்.. தெரியாமல் போனது.. தான் புறத்தோற்றத்தின் நிறத்தை பார்த்த அளவிற்கு.. அகத் தோற்றத்தின் வண்ணத்தை நினைக்காமல் போன மடமையை எண்ணி.. " ஐயம் ஸாரி.. மேம்..", என்று கையெடுத்து கும்பிட..

தாமரை.. அவள் கண்ணோடு கண் கலந்தவளாய்.. " நீங்க எத்தனை வருஷமா.. இங்க வேலை பார்க்குறீங்க.. ", என்றாள் .

தன்னிலையில் மாற்றம் இல்லாமல் , " அஞ்சு வருஷமா..",

" இந்த அஞ்சு வருஷத்தில.. எத்தனை கைக்குட்டை.. நீங்க இங்க வாங்கி இருப்பீங்க.. ", என்றாள் அதே நிதானத்தோடு..

" மே..ம்..", என்று அதிர்ந்து விழித்த அவள் முகத்தில் இருந்து பார்வையையும் திருப்பாதவளாய் , " அப்போ , உங்களுக்கும் இங்க பொருட்களை தொட தகுதி கிடையாது.. இல்லையா..", என்று திருப்பியடித்தவள்..

" ஸாரி.. உங்களை குத்திக்காட்டி பேசலை.. உங்க தப்பை சுட்டிக்காட்டுறேன்.. அந்த காதணி எப்படி என் பைக்குள்ள வந்தது.. இந்த அளவுக்கு என் நிறத்தை வச்சு காயப்படுத்தணுமா.. அதுனால உங்களுக்கு கிடைக்க போறது என்ன.. என்னை மட்டம் தட்டி நீங்க சாதிக்க போறது தான் என்ன.. சொல்லுங்க.. நீங்க வேலை பார்க்குற இடம் இது.. இங்க.. உங்க விருப்பு வெறுப்பை.. காட்ட வேண்டிய தேவை என்ன.. அதுனால , யாருக்கு நஷ்டம்.. இனிமேல் இது மாதிரி நடந்துக்காதீங்க.. கறுப்பா இருக்கறவங்களும் மனுஷங்க தான்.. ஏன் என் ரத்தம் நிறம் கூட உங்க ரத்த கலர்தான்.. இங்க சூப்பர்வைசர்ன்னு ஒருத்தர் இருக்கறதே.. உங்களுக்கு கீழ உள்ளவர்களை.. சரியா வழி நடத்தணும்ங்கறதுக்காக.. ஆனா , நீங்க.. அவங்களுக்கு மேல நடந்துக்கிட்டீங்க..  நான் பேசறது உங்க எல்லோரையும் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க.. இத்தோட, மறந்திட்டு.. வேலைய பாருங்க.. போங்க.. ", என்று அனைவரையும் அவரவர் இடங்களுக்கு செல்லும்படி கூறி.. கலைந்த பின்..  இருவரையும் , ஏறிட..

மயூரி , மருமகளின் மென்மையான கண்டிப்பில்.. அக மகிழ்ந்தவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.. ஒருவரால்.. இவ்வளவு மென்மையாக தவறை சுட்டிக்காட்ட இயலுமா என்று.. ஆளுமையின் உருவமாய்.. அவள் அருகே அவன் நின்றிருக்க.. அதற்கு முற்றிலும் மாறுப்பட்டவளாய்.. தாமரை இருப்பதும்.. வியப்பையே அளித்திருந்தது . ஆளுமை நிறைந்து கம்பீரமாக.. அவள் குரல் ஒலிக்கவில்லை.. மாறாக , நேர்க்கொண்ட பார்வையால் , மென்மையான அணுகுமுறையில்.. அனைவரையும் வீழ்த்தி இருந்தாள் . அந்த பூரிப்பை மறைக்காமல் வெளிப்படுத்தியவர்.. அவளது கன்னத்தை தடவி..  " ட்ரஸ் பார்க்குறீயா..", என்றதற்கு..

" நாளைக்கு வரேன் அத்தை..", என்று பதிலளித்து.. சரணின் முகத்தை ஏறிட.. அவன் முகத்தில் இருந்து எதுவும் கண்டுப்பிடிக்க முடியவில்லை .

" சரி.. சரண்.. அவளை வீட்டுல விட்டுட்டு.. உன் வேலையை கவனிக்க போ..", என்று கூறியவர்.. அவருடைய அறைக்குள் நுழைந்துக் கொண்டார் . இவ்வளவு பேசியவள் , மறந்தும் பற்றிய சரணின் மணிக்கட்டில் இருந்து.. அவளதே கரத்தை  எடுத்திருக்கவில்லை.. தைரியமாக வெளிப்படுத்திக் கொண்டாலும்.. மனதளவில் , பெரிதும் அடிவாங்கியிருப்பதை.. அவள் பேச.. பேசக் கொடுத்த அழுத்தங்களில் மூலம் புரிந்துக் கொண்டவனால் , அவ்வளவு கோபமும்.. நிகரான வருத்தமும்.. ஆட்டிப் படைக்க.. தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக ,

"வா..", என்று கடித்து துப்பியவனின் சினத்தில் வெகுவாக , மிரண்டாலும்.. அவனோடு செல்வதை தவிர.. வேறு வழியிருக்கவில்லை . வீட்டின் முன், நிறுத்தியவன்.. அவள் இறங்கிய பின்பும் இறங்காமல் இருக்கவே , ' நீங்க வீட்டுக்கு உள்ள வரலையா..', என்று கேட்ட தோன்றினாலும் , துணிவற்றவளால்.. அவன் முகத்தை மட்டுமே பார்த்து நின்றிருக்க.. விருட்டென்று.. கேட்டை தாண்டி கிளம்பியிருந்தான்.. அவளை திரும்பியும் பாராமல்.. தாமரையோ , அதிர்ந்த நிலையில் அப்படியே நின்றுவிட்டாள் .

மிகவும் எளிமையான , நடுத்தர ரெஸ்டாரண்டில்... தன் இரு கன்னங்களிலும்.. உள்ளங்கையை வைத்து.. தனக்கு எதிரே இருந்தவனை .. குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள் உதயதாரா..

இதற்கு மேல் ஆகாது என்பது போல் , " ரிச்சா.. நான் இங்க வந்து அரைமணி நேரம் ஆச்சு.. உனக்காக , டெல்லிக்கு வந்து ரெண்டு நாள் ஆச்சு.. ஆனா , நீ என்னடான்னு.. யாருக்கு வந்த விருந்தோன்னு.. கொட்டீட்டு இருக்க.. உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. ", என்று காட்டுக் கத்தல் போட்டுக் கொண்டிருக்க..

" ஏய்.. இப்ப எதுக்காக இப்படி அலறுற.. எவனாவது.. எதிலையாவது.. வீடியோ.. பிடிச்சு போடவா.. மெதுவா பேசு..", என்று உணவோடு வார்த்தைகளும் அதிகமாக அரைப்பட்டதில்.. அழகாய் , புன்னகைத்தவள்..

"திஸ்.. திஸ் மை பாய்..", என்று பாராட்டு வழங்கி அதற்கும் முறைப்பை வாங்கிக் கொள்ள..

மேலும் அழகாய் சிரித்தவள்.. , "ஏன்டா.. இப்படி பண்ற.. நீ என்ன தான் என்கிட்ட எதிர்ப்பார்க்குற.. அதையாவது சொல்லீடு.. ஆனா , இப்படி பைத்தியக்காரி மாதிரி.. உன் பின்னாடி சுத்த வைக்காத ரிச்சர்ட்.. சத்தியமா என்னால முடியலை.. அன்னைக்கு தூங்கினவளை தூங்கவிடாம.. பண்ணின.. சரி.. ஊருக்கு போறேன்னு சொல்றானேன்னு.. எப்போ.. எங்கன்னு கேட்டு ஓடி வந்தா.. மனுஷியா கூட மதிக்காம.. உன்னை நானா வர சொன்னேன்னு திரும்பியே பார்க்காம வந்துட்ட.. மூனு நாள் முன்னாடி.. தாரா எங்க இருக்கேன்னு.. நீ கேட்டதிலேயே.. வான்னு ஏங்கி கூப்பிட்ட மாதிரி.. இருந்தது.. எல்லாத்தையும் உனக்காக தூக்கிப் போட்டுட்டு.. வந்தா.. யார் நீங்கற ரேஞ்சுக்கு பார்த்து.. அவமானப்படுத்துற.. ஏன்டா.. இப்படி பண்ற.. உனக்கு என்ன தானடா வேணும்.. வாய் திறந்து சொல்லேன்.. நான் உன்னை உயிரா நினைக்கிறேன் ரிச்சர்ட்.. ஆனா , நீ.. கால்லுல  இருக்குற செருப்பா கூட நினைக்க மாட்டேங்குற..", என்று விளையாட்டாய் துவங்கி.. கோபத்தில் பயணத்து.. வேதனையை சுமந்து.. கண்களில் கண்ணீரை தேக்கிக் கொண்டு அழுகைக்கு தாவியவளின் செயலில் , காண முடியாதவனாய்.. விருட்டென்று.. எழுந்து வெளியேறி இருந்தான் ரிச்சர்ட்..

எவ்வளவு மறைக்க முயன்றாலும் , அடங்காமல் வழியும் விழிநீரோடு , ஏக்கம் சுமந்தவளாய்.. தன்னைவிட்டு.. தன் பார்வையில் இருந்தும் மறையும் பரந்த முதுகையே வெறித்தவளாய்.. தன் உயரத்தையும் மறந்தவளாய்.. துடிக்கும் இதழ்களை கடித்துக் கொண்டு சிலையாய் அமர்ந்திருந்தாள் பிரபல நடிகை உதயதாரா... ஒருவனின் காதலுக்காக..

Ipagpatuloy ang Pagbabasa

Magugustuhan mo rin

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...