வா.. வா... என் அன்பே...

Od kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... Více

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 41

1.3K 41 6
Od kanidev86

பகுதி - 41

சினம் என்றால் அப்படி ஒரு சினம்.. தாமரைக்கு.. அவள் அழைத்தால் என்று காண வராமல் இருந்திருக்கிறாள்.. நிச்சயமாக , வருவேன் என்று தெரிந்தே.. கையில் மதுக் கோப்பையுடன் இருப்பதை காணவும் பொங்கி எழுந்தவள்.. இமைக்கும் பொழுதில்.. மான்சியின் கரத்தில் உள்ளதை பறித்து விட்டெறிந்திருந்தாள் .

அவள் பின்னாலேயே.. சுற்றிக் கொண்டிருந்த.. ஆரவ்வின் முகத்தில் , எறிய வேண்டும் என்பது போல் வேகம் இருந்தாலும்.. அதை செய்ய விரும்பாமல், காலில் எரிய.. அவன் சுதாரிக்கவில்லை என்றால்.. கண்டிப்பாக.. இரத்தக் காயம் ஏற்பட்டிருக்கும் .

" நீங்க திருந்தவே மாட்டியளா.. கொஞ்சமும் சுய புத்தியே இருக்காதா.. இவ்வளவு நாள் , உங்க அம்மாவோட பேச்ச கேட்டு.. சீரழிஞ்சீயன்னா.. இப்ப இந்த ஆளோட கூட்டு சேர்ந்து.. கெட்டு ஒழிஞ்சிப் போகணும்னு மூடிவே பண்ணீட்டியளா.. காலங்கார்த்தாலேயே.. இப்படி குடிச்சிட்டு இருக்கீய..", என்று எகுறிக் கொண்டிருந்தவளுக்கோ, அந்த கண்ணாடி டம்பளர்.. அவன் காலை பதம் பார்க்காமல் குறித் தப்பிவிட்டதே என்ற ஆத்திரமும் அதிகரித்தவளாய்.. ஆரவ் இருப்பதையே சட்டை செய்யாமல்.. கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவளை.. அவள் பின்பக்கமாக நின்று.. இரு தோள்களையும் பற்றி ,

" ஹேய்.. லோட்டஸ்.. அது ஆப்பீ கூல் ட்ரிங்.. அதுக்கு எதுக்கு இந்த குதிகுதிச்சிட்டு இருக்க..", என்று அடக்கியவனின் பிடியில் இருந்து திமிறியவளாக நகர்ந்து..

" என்னைய தொட்டுகிட்டு பேசிற வேலையெல்லாம் வச்சுக்காதீய.. அம்புடுதேன்.. சொல்லுவேன்.. ", என்று தன் சுட்டுவிரலை நீட்டி , கண்களை உருட்டி , மான்சியின் பக்கமாக நின்றுக் கொண்டு மிரட்டியவளை.. புன்சிரிப்போடு , ஏறிட்டவன்.. இரு கைகளையும் தூக்கிக் கொண்டு , " ஓகே.‌ ஓகே.. லோட்டஸ்.. நான் தொடலை..", என்று சிரித்தான்.. உக்கிரமாக முறைத்து முகத்தை சிலுப்பிக் கொள்ள.. வாய்விட்டு சத்தமாக.. இருந்த நிலையிலேயே , சிரித்துக் கொண்டு இருந்தாள் மான்சி...‌

" இப்படி.. பல்ல.. பல்ல காட்டிறத மட்டும் நிறுத்தமா செய்ங்க.. வேற எதுவும் செஞ்சுடாதீய..", என்று பொறுமியவளாய்.. அந்த ஒற்றை சோஃபாவின் அருகே தரையில் அமரவும்.. " தாமரை.. எந்திரிச்சு பக்கத்தில உட்கார.. மொதல்ல எழுந்திரி..", என்று படபடத்தவளை கண்டுக்காமல்..

" இப்ப அது முக்கியம் இல்லை.. நீங்க எப்படி இருக்கீய..", என்று வாஞ்சையாக அவளது கரத்தை பற்றிக் கொள்ள..

" எனக்கு என்ன.. நான் நல்லா இருக்கேன்.. நீ எந்திரிச்சு மேல உட்காருடா.. கிளாஸ் பீஸஸ் இருக்கப் போகுது.. ", என்று பதறியவளாய் கூற..

" அதெல்லாம் என்னை எதுவும் செய்யாது.. நீங்களும்.. அந்த கடாமாடோட சேந்து.. என்னைய வம்பு இழுக்குறீயளா.. நீங்க குடிச்சா.. எனக்கு கோவம் வரும்ன்னு தெரிஞ்சே தான.. அந்த ஜுஸை உங்களுக்கு ஊத்திக் கொடுத்ததும் இல்லாம.. அந்த ஆளு நல்லவன் மாதிரி என் பின்னாடியே வந்தான்..", என்று ஏகபோகமாக பாராட்டு வழங்கிட..

"ஆனாலும் , அதிகம் தாமரைம்மா.. ஆரவ்வை இந்த அளவுக்கு நீ மரியாதை இல்லாம பேச கூடாது..", என்று சிறு கண்டிப்பை தேக்கியவளாக ,

" ஆமா.. பெரிய மரியாதை.. உங்க மனசை கலச்சு கூட்டியாந்து வச்சு இருக்க.. இவனுக்கு எல்லாம் இந்த மரியாதையே அதிகம்..", என்று முணுமுணுத்தாலும் சத்தமாகவே செய்ய.. அவள் விட்டெறிந்த கண்ணாடித் துகள்களை சுத்தம் செய்தவனின் அதரங்களில் துடித்துக் கொண்டிருந்த சிரிப்பு மட்டும் மாறவே இல்லை..  அதை பார்த்ததும்.. மேலும குமிறியவளாய்.. முறைத்து முகத்தை திருப்ப.. " நீ ஏன் எப்ப பார்த்தாலும் ஆரவ்வோட வம்பு பண்ணீட்டே இருக்க.. அவன் மட்டும் இல்லேனா.. என் நிலைமை என்னவாகியிருக்குமோ.. எப்பப்பாரு.. திட்டிட்டே இருக்க.. ",

" அதேன் நானும் கேட்கேன்.. இன்னும் எத்தனை நாளைக்கு யாரோ, பின்னாடி ஒண்டீட்டே காலம் தள்ள போறீய.. பிறர் சொல் புத்தி மட்டுந்தேன் இருக்குமா.. சுயபுத்தியே இத்தனை பட்டும் வரதா..", என்று மான்சியிடமும் தன் சினத்தை மறைக்காமல் வெளிப்படுத்தினாள்..

" லோட்டஸ்.. ஹேவ் இட்.. பாரு.. உனக்கு காஃபி தான் எடுத்து வந்திருக்கேன்.. இது எனக்கு..",  என்று அதே ட்ரேயில் இருந்த டின் பியரை காட்டி பயந்தவன் போல் சொல்ல.. உச்சம் இறங்காதவளை மேலும் கொம்பு சீவியவனின் செயலில்.. மான்சி மீண்டும் சிரிக்க.. தாமரையோ , பல் கடித்துக் கொண்டு பெற்றுக் கொண்டாள் .

" இந்த கருமத்தை தூக்கிட்டு.. எங்குட்டோ போய் குடிச்சு தொலை... என் முன்னாடி செய்யாத..", என்று கூற..

" ஏன் லோட்டஸ்.. இந்த மரியாதை.. மரியாதைன்ற சொல் தமிழ்ல இருக்காமே.. அது உனக்கு தெரியுமா..", என்று வம்பை தொடர..

" உன்கிட்ட தமிழ்ல மட்டும் இல்ல வேற எந்த மொழிலேயும் அர்த்தம் தெரியாது.. நீ நடையக்கட்டு.. நான் அவியளோட தனியா பேசணும்..", என்று கெத்தாக கூறியவளை.‌. முறைத்தவன்.. " உனக்கு இது தேவையா.. எதுக்காக அவட்ட வம்பு பண்ற.. கொஞ்சம் சும்மா இரு.. ஆரவ்.. அவ ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது . ",

" எப்படி டா இருக்க.. எப்போ.. நீ ஷான் வீட்டுக்கு போன..",

" ம்.. நல்லா இருக்கேன்க்கா.. நீங்க எப்படி இருக்கீய.." முதல் கேள்விக்கு பதில் அளித்து.. இரண்டாவதை அப்படியே கிடப்பில் போட்டவளாக பேச்சை மாற்ற..

" நான் நல்லா இருக்கேன்டா.. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.. என்ன பற்றி பேசுவாங்களா.. ", என்று கேட்பதற்குள்ளாகவே , முகம் கனிந்து எதிர்ப்பார்ப்பை சுமந்திருக்க.. தாமரைக்கோ , இதயத்தில் பாரம் ஏற்றியது போல் ஆனது . அங்கிருப்பவர்கள் எவரும் இவளுடை பெயரை  உச்சரிப்பதையே.. ஏன் நினைப்பதையே  விரும்பாதவர்கள்.. எவ்வளவோ முறை , மாமானார் மாமியாரிடம்.. அந்த வீட்டுப் பெரியவர்களிடம் எல்லாம் தனித்து இருக்கும் பொழுது.. மான்சியுடன் இருந்த நாட்களை அவளோடு அப்படி இருப்பாள்.. இப்படி இருப்பாள் என்று கூறினாலும்.. ம்.. என்ற சத்தமும் வராது.. அதனால் , தாமரையே வாயை மூடிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.. ஆனால் , இந்த நிமிடம் அவள் முகம் பார்த்து அதை கூற முடியாமல் போகவே.. " ம்.. நல்ல பொண்ணுன்னு சொல்லுவாங்க..", என்று மெதுவாக முனங்க..

" ஓ.. அப்படியா.. ஆ..", என்று வியந்தவனை நன்கு முறைத்தவள்.. " அக்கா.. இப்ப இந்த ஆளை அங்குட்டு போகச் சொல்றீயலா இல்லையா..", என்று கடுப்புடன் கூற..

" என்ன தாமரை எப்ப பார்த்தாலும் மரியாதை இல்லாம பேசீட்டு..", என்று சலிப்பாக கூறி.. "  கொஞ்ச நேரம் சும்மா இரு.. ஆரவ்.. எப்பப்பாரு..", என்று அவனையும் அடக்க முயன்றாள் மான்சி..

" இந்த பாருங்கக்கா.. சத்தியமே சொல்றேன்.. இவயளோட நீங்க இருக்குற வரை உருப்படவே முடியாது.. அதுக்கு இந்த கடாமாடு விடவும் மாட்டாது.‌.. சொல்லிப் போட்டேன்..", என்று சத்தமிட்டவளை

" ம்ச்சு.. எ..ன்..ன.. லோட்டஸ்.. இப்படி என்னை புகழறதையே வேலையா வச்சு இருக்க..", தன் வெண்ணிற பற்கள் அனைத்தும் தெரிய சிரிப்பவனுக்கு.. ஐந்து வயது சிறுமியிடம் வம்பிழுத்து விளையாட்டுவது போல் , அவனும் விளையாடிக் கொண்டே இருக்க.. நம் தாமரையோ.. சுட்டெரிக்கும் சூரியனை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தாள் ‌.

" இப்போ , நீங்க பேசாம இருக்க போறீயளா.. இல்லையா..", என்று நேரடித் தாக்குதல் நடத்த.. ' ம்.. ம்..'  தன் வாயை பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தவனை பார்க்க சிரிப்பு வந்தாலும்.. வெளியிடாதவளாய் , மான்சியின் பக்கம் திரும்பி.. "என்ன க்கா.. நான் என்னன்னவோ கேள்விப்படுதேன்.. உண்மையா.. நீங்க வீட்டைவிட்டு வந்துட்டீயளா.. அம்மா , உங்க மேல கேஸ் கொடுத்திருக்கலாமே.. நிசமா..", என்று அடுக்கிக் கொண்டே போக..

" ஹேய்.. ஒவ்வொன்னா கேளு மொத்தமா கேட்டா.. எதுக்கு பதில் சொல்ல முடியும்.. " ஆரவ் வாய் திறக்க..

" நீங்க அடங்கவே மாட்டீயளா.. ஏன் இப்படி படுத்துறீய.. போங்க.. போய் வந்தவளுக்கு சாப்பிட எதாவது செஞ்சு போடுங்க.. அதை விட்டுட்டு பொம்பளைக.. வாய் பார்த்திட்டு..", என்று துளியளவும்.. அவனின் உயரத்தைப் பற்றி யோசிக்காதவளாய்.. சொல்ல..

அவளோடு வம்பளந்துக் கொண்டிருந்தவனும் , உடனே எழுந்து.. " என்ன வெரைட்டி ரைஸ் செய்யவா.. இல்ல ஹெவி லன்ச் ப்ரிப்பேர் பண்ணவா..", என்று கேட்டவனாக கீழ் இறங்கினான்..

" சிக்கன் பிரியாணி..", என்று குரல் கொடுத்தவள்.. மான்சியின் பக்கமாக, திரும்ப.. தாமரையை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ‌. மான்சியின் தற்போதைய , பாய் ஃப்ரெண்ட்.. பெரிய தயாரிப்பாளர் ஆரவ் என்று தமிழகம் எங்கும் பிரபலம்.. அவர்கள் இருவரும் , தற்காலத்தில் பிரபலமாகி இருக்கும் லிவிங் டுகெதர் என்ற முறையில் திருமணமே ஆகாமல் இணைந்து , கணவன் மனைவி போல் வாழ்வதாகவும்.. மீடியாக்களில், அதிகமாக உலா வரும் செய்தியாக உள்ளது .

பிரபலங்களாக இருந்தால் , அவர்களின் சொந்த வாழ்க்கையும் கண்ணாடிக் கட்டிடத்திற்குள் இருப்பது போலவே அமைந்துவிடும்.. அவ்வாறு இல்லையென்றாலும் , கண்களால் பார்த்தவர்கள் போன்றே.. தங்களது பேனாக்களில் காட்டிவிடுவார்கள்.. இப்பொழுதோ, யூ ட்யூபர்களின்.. பதிவுகள் கூடுதலாக அவ்வளவே.. 

மான்சியின் இடர்காலத்தில் தோள் கொடுத்தவன் ஆரவ்.. அத்தோடு அல்லாமல் இந்த நொடி வரை தாங்கிக் கொண்டிருப்பவனும் அவனே.. ஆனால் , சமையல்.. வீட்டு வேலை..  இது போன்ற விஷயங்களில் எல்லாம் மான்சிக்காக என்று அவன் சிறு துரும்பையும் அசைத்துப் போட்டதில்லை.. அதேசமயம்.. அவனுக்காக என்று அவளை வேலை வாங்கியதும் இல்லை.. இருவரும் , சேர்ந்து வீட்டில் தங்கி இருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று அச்சமயங்களிலும்.. வேலைகளை பகிர்ந்தவர்களாகவே  இருப்பார்கள் . ஆனால் , இன்று இச்சிறுபெண் சொன்னதற்காகவே , அவள் விருப்பத்தையும் கேட்டறிந்து..
சமையல்காரனாக மாறியவனை.. வியந்து பார்த்தாள் மான்சி.. சொல்லப் போனால், தாமரையிடம் அப்படி என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.. ஆரவ் காண்பிக்கும் அன்பாகட்டும்.. இன்று சரண் கண்களில் தெரியும் அவளுக்கான காதலாகட்டும் பொறாமையையே விதைத்தது.. விழியசையாதவளாய் , அவளது முகம் பார்த்தால்.. கருணை ததும்பும் முகத்தில் தோன்றிய கோபமும்.. சிறுபிள்ளையின் முறைப்பாகவே தெரிய.. நகைத்துக் கொண்டாள் .

" அக்கா.. என்ன என்னை அப்படியே பார்க்குறீய.. ",

" அதுவா.. அது எப்படி எங்க எல்லாரையும் நொடிக்குள்ள.. தலைக்குப்பற விழ வைக்கிறேன்னு பார்த்தேன்.. ", என்றாள்..

" ச்சு.‌ போங்க க்கா.. சும்மா கேலி பேசாதீய.. இப்ப அந்தாளு என்கிட்ட பாசமா கேட்டு போனத நினைச்சு சொல்றீயலா.. வேணா பாருங்க.. எனக்கு பிடிக்காததைத் தான் முதல்ல கொண்டு வந்து வைப்பான்.. நீங்க என்னவோ நல்லவன்னு நம்பீட்டு இருக்கீய..", என்று அப்பொழுதும் வருத்து எடுக்க..

" நீ ஒத்துகிட்டாலும் இல்லேனாலும்.. அவன் நல்லவன் தான்..", என்று அதே மென்மை மாறாமல் கூற.. எதற்கோ , மாடியேறிய.. ஆரவ்வின் செவிகளிலும் தீண்டி.. புன்னகையும் , மகிழ்ச்சியையும் சேர்த்தே விதைத்தது.. அதனால் , அமைதியாக வந்த சுவடு தெரியாமல் இறங்கிவிட்டான் .

" சரி.. அவிய ரொ..ம்..ப.. நல்..ல.வுகளா..வே இருக்கட்டும்.. நா.. எதுனும் சொல்லலை..", என்று முகத்தை திருப்ப.. வாய்விட்டு நகைத்தவள்.. தன் கரங்களால் , அவளது முகம் காண வைத்து.. "சரி.. அவனை விடு.. நீ எப்படிடா இருக்க... நான் நினைக்கலைடா.. அம்முக்கு இது மாதிரி ஆகும்ன்னு..",

உடனே , கண்ணீரால் கண்கள் நனைந்திருக்க.. " என்னையால எதுனும் செய்ய முடியலையேக்கா.. அவளுக்கு.. அவளுக்காக தானே நீங்க சொன்னதை கேட்டேன்.. இப்போ, அவளே இல்லாம போயிட்டா..", என்று விசும்பி அழ..

" அதுனால என்னடா.. அம்முவால உனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைச்சிருக்கே.. எனக்கு தான் அவங்க எல்லாரோட.. அருமையும் தெரியாம போச்சு.. உனக்கு நல்லா தெரியுமே டா..  நீயே இப்படி சொல்லலாமா..", என்று மான்சி ஆறுதலாக பேச..

" அது நா.. எனக்காக போகலையேக்கா.. உங்களை அங்கே கொண்டு சேர்க்கதான.. ஒத்துகிட்டேன்.. ஆனா , நீங்க எதையும் புரிஞ்சிக்காம.. இவனோட , இருந்தா என்ன அர்த்தம்.. மித்ரன் ஸார் உங்களை எப்படி ஏத்துக்குவாரு.. இந்த கடாமாடு நல்லா ப்ளான் பண்ணி.. உங்களை அவருகிட்ட இருந்து பிரிச்சுட்டான் ..", என்று அப்பொழுதும் சினம் மிகுதியால் பொறும..

" அவன் என்ன செஞ்சான்.. நீ ஏன் தேவையில்லாமல் அவனை திட்டுற.. சொல்ல போனால் ஆரவ்னால தான்.. என் அம்மாவையே எதிர்க்கிற தைரியம் எனக்கு வந்திருக்கு.. இல்லேனா.. அவங்க சொல் பேச்சு கேட்டு நடந்திருக்க மாட்டேன்.. என் ஷான்.. என் கண்ணு முன்னாடியே செத்திருக்க மாட்டான்..  உனக்கே எல்லாம் தெரியுமே.. நீ.. உன் அம்மாவோட சுமைய குறைக்குறதுக்காக.. ஸ்கூலுக்கு போகாம இருந்திருக்க. நான் என் அம்மாவை சொகுசா வாழணும்கறதுக்காக ஸ்கூல் போகாம இருந்திருக்கேன்.. உனக்கு புரிஞ்ச அளவுக்கு கூட.. எனக்கு என் இழப்போட வலி புரியாம தான்டா இருந்தேன்..", என்று அழுகையில் குழுங்க.. அவளுக்கே ஆறுதல் சொல்ல ஆட்கள் தேவைபடும் பொழுது.. மான்சிக்கு இவள் என்ன கூற முடியும்..

" அழாதீயா.. அக்கா.. நா.. அங்கே போனதே உங்களுக்காக தானே.. எப்பாடு பட்டாவது.. மித்ரன் ஸார் கால்ல விழுந்தாவது.. உங்களை அங்கே கொண்டு போய் சேர்க்கேன்.. நீங்க வருந்தாதீய..", என்று அவ்வளவு வேதனையை சுமந்தவளாய் , சமாதானம் செய்பவளுக்கு எப்படி.. எங்கிருந்து ஆரம்பித்து.. மான்சியை அவர்கள் மனதிலும்.. வீட்டிலும் இடம் பிடிக்க செய்வது என்றே புரியவில்லை..

மான்சியோ , விரக்தியாக சிரித்து அவளது கன்னம் தடவியவளுக்கு.. தாமரையின் மீது அவன் வைத்துள்ள நேசத்தையும்.. பாசத்தையும் புரியாமல் வெள்ளை மனதோடனே இருக்கிறாளே.. என்று வருந்தியவள்.. இச்சிறுப்பெண்னை எப்படியெல்லாம் தன் தாய் பேசியிருக்கிறார்.. எதுவும் புரியாமலேயே.. எவ்வளவு தானும் வதைத்திருக்கிறோம் என்று மனம் வருந்தியவளுக்கு.. அப்படியே தன் உணர்ச்சிகளை அவளிடத்தில் கொட்டி விட வேண்டும் என்ற வேட்கை.. ஆனால் , ஆரவ் அவள் வருவதற்கு முன்பே தடைவிதித்திருந்தான் .

" மான்சி.. நீ நிஜமாலுமே தாமரைக்காக வருந்தினேன்னா.. மறந்தும் , சரணோட நீ வாழ்வதை பற்றி பேசக் கூடாது.. அவன் பொண்டாட்டி , தாமரைன்ற நினைப்போட மட்டுமே இருக்கனும்.. செஞ்ச பாவம் இதுனாலையாவது கரையட்டும்.. ", என்று கட்டளையாகவே கூறியிருந்தான் . அதை நினைத்து பார்த்தவளாய் அமைதியாக ,

" என்ன அக்கா.. எதுவுமே பேச மாட்டேங்குறீய.. உங்களோட , அவிய நடிக்கிறாவன்னதும் எம்புட்டு சந்தோஷமா இருக்கேன்.. நீங்க என்னன்னா.. சரி... விடுங்க.. கொஞ்ச நாள் பொருத்துக்கோங்க.. என்னையால முடிஞ்ச வரை சீக்கிரமா நல்லது நடக்க முயற்சி செய்யறேன்.. நீங்க சொல்லுங்க.. அம்மா எங்க இருக்காவ.. ", என்றவளிடம்..

விரக்தியாக உதடு சுளித்து.. "அவங்க வீடடுல.. மாசம் மாசம்‌.. இத்தனை கோடின்னு நான் கொடுத்தே ஆகணுமா.. ஷானோட டிவோர்ஸைக் காரணமாக்காட்டி , கேஸ் ப்ரோஸீட் பண்ணியிருக்காங்க.. ஆரவ் வெளில தெரியாம பார்த்துக்குறாரு.. ஆனா , நாம நினைச்சா மட்டும் போதுமா.. அவங்களும் மனசு வைக்கணும் இல்லை.. ரொம்பவே அசிங்கமா இருக்கு.. இவங்களுக்காகவா.. நான் என் ஸ்கூல் காலேஜ் லைஃப்.. இது எல்லாத்துக்கும் மேல.. என் ஷான்.. என் ஷான் ஃபேமலின்னு விட்டுக் கொடுத்தேன்னு வருத்தமா இருக்கு.. இப்பவும் பாரு.. என்னால , நீ உன் லைஃபையே இழந்திட்டு இருக்க.. ", என்று அழுதவளை ..

" அக்கா.. ப்ளீஸ் அழாதீயக்கா.. உங்களால என்னைக்குமே எனக்கு கஷ்டம் தர முடியாது.. பாருங்க.. அந்த குடும்பத்தில எல்லோரும் என்னைய எப்படி தாங்குறாக தெரியுமா.. ஒருத்தவங்க கூட.. நான் கருப்பா இருக்கேன்னோ.. காசு இல்லாதவன்னோ.. சொல்லிக் காட்டினதே இல்லை.. சொல்லப் போனா.. அவங்க பையனோட சேர்த்து வைக்கதான் துடிக்கிறாவ.. அவங்க இருக்குற இடம் என்ன.. என்னைய போய்.. அப்படி தாங்குறாவ.. இதெல்லாம் யாராலக்கா .. வந்தது.. நீங்க அனுப்பி வச்சதாலதானே..", என்று நல்லதை மட்டுமே அவள் எடுத்துக் கூற.. கூனி குறுகி நின்றுவிட்டாள் .

அந்த வீட்டை விட்டு வெளியேறும் பொழுது , எதிர்காலத்தில் அவளது நிலை ,  என்ன என்று சிறிதளவும் நினைக்காதவளாய்.. பேசிக் கொண்டே போனவளின் நல்ல மனம் அவளிடம் கொஞ்சம் போல் ஒட்டிக் கொண்டிருந்த தாயின் ரத்தம்.. ஆரவ் கூறும் வரை நினைக்கத் தோன்றவில்லை போலும்.. என்று உள்ளுக்குள் கதறி.. வெளியே வரண்ட புன்னகையை சிந்தி.. தன்னை இயல்பு போல் காட்டிக் கொள்வது அவ்வளவு கடினமாக இல்லை . பழகிய விஷயம்.. சுலபமாகவே எப்பொழுதும் போல் கைக் கொடுத்தது..

இருவரும் , அவன் சமைத்து முடித்து மேலே ஏறி வரும் வரை , அவர்கள் இருவரும்.. பலவற்றை பேசிக் கொண்டே இருந்தார்கள்.. "யப்பா.. லேடீஸ் பேச ஆரம்பிச்சா டேம் போறதே தெரியாதா.. வாங்க சாப்பிட..", என்று கேலி பேசியவனிடம்.. உதடு சுளித்த தாமரை.. " அக்கா.. நீங்க எதை சரி பண்றீங்களோ இல்லையோ.. இந்தோ , இந்த ஆளை விட்டு ஒழிங்க.. நல்லா இருப்பீங்க.. இவியளோட.. தினம் ஷுட்டிங் போனீயன்னா.. ஸாரோட சேர்ந்த மாதிரிதேன்.. வெளங்கீடும்.. ", என்று அதுவரை மறைந்திருந்த கோபம்.. உடனே எங்கிருந்து வந்து ஒட்டிக் கொண்டது.. என்பது போல் பொறிய..

" நிச்சயமாக.. மை டியர் லோட்டஸ்.. என் ப்ளானை ப்ர்வெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்க...", என்று கூறியவன் , அவளது தோளில் கை போட..

" லோட்டஸ்.. கீட்டஸ்ன்னு கூப்பிடறதை நிறுத்து.. இதில மை‌டியர்... கியர்ன்னா.. பார்த்துக்க.. ஆமா.. ", என்று வேகமாக அவன் கரத்தை தட்டிவிட்டு.. கத்தியவளை.. தன் அக்மார்க் சிரிப்பால் மேலும் , கொதிக்க செய்தான்..

" சரி.. விடு.. உன் புருஷன் கூப்பிடற மாதிரி பாப்பான்னே.. கூப்பிட்டுகிறேன்.. பாப்பா..  ம்.. வேண்டாம்.. நான் அதையும் இங்கிலீஷ்லேயே கூப்பிட்டுகிறேன்.. பே.. பே..பி..", என்று கூறியதும்.. அவள் என்ன செய்வாள் என்று தெரிந்தே ஓட்டம் எடுக்க.. கொஞ்சமும் தயங்காதவளாய்.. கையில் அகப்பட்ட பொருளோடு அவனை துரத்த துவங்கினாள்.. அமர்க்களம் செய்துக் கொண்டிருந்த இருவரையும் , அடக்குவதற்குள் மான்சிக்கோ, போதும்.. போதும்.. என்றானது .

" ஏய்.. தாமரை.. சும்மா இரு.. அவன்தான் நீ வந்தில் இருந்து வம்பு பண்றான்னு தெரியுதுல்ல‌‌ .. அப்புறம் என்ன.. வா.. ", என்று கத்திக் கொண்டு இருந்தவளை யார்.. அங்கே கண்டு கொண்டது. "எனக்கு பசிக்குது.. வரப் போறீங்களா இல்லையா..", என்றவுடன் தான் இருவரும் ஓட்டத்தை நிறுத்தி.. சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்தார்கள்..

அப்பொழுதும் அடங்காதவனாக, "பாரு.. சொர்ணாக்கா மாதிரி.. புடவைய தூக்கி சொறுகீட்டு துரத்திறா.. இவளை போய்.. நல்லவன்னு ஒரு குடும்பமே நம்புது.. அந்த சோ..", என்று ஆரம்பிக்க.. " ஆ..ர..வ்..", என்று அழுத்தம் திருத்தமாக.. அழைத்த மான்சியின் குரலுக்கு கட்டுப்பட்டவனாக.. அமைதியாக , மான்சி  இருவருக்கும் பரிமாறிய உணவில் கவனம் செழுத்தியவர்களாக.. சாப்பிடத் துவங்க.. எப்பொழுதும் போல்.. தாமரைக்கு அதன் சுவை பிரமாதமாக இருக்கவே.. சப்புக் கொட்டியவளாய்.. உண்டு கொண்டிருந்தாள் .

Pokračovat ve čtení

Mohlo by se ti líbit

81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...