வா.. வா... என் அன்பே...

By kanidev86

239K 6.1K 2K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124
வா.. வா.. என் அன்பே - 125
வா.. வா.. என் அன்பே - 126
வா.. வா.. என் அன்பே - 127
வா.. வா.. என் அன்பே - 128
வா.. வா.. என் அன்பே - 129
வா.. வா.. என் அன்பே - 130
வா.. வா.. என் அன்பே - 131
வா.. வா.. என் அன்பே - 132
வா.. வா.. என் அன்பே - 133
வா.. வா.. என் அன்பே - 134
வா.. வா.. என் அன்பே - 135
வா.. வா.. என் அன்பே - 136
வா.. வா.. என் அன்பே - 137
வா.. வா.. என் அன்பே - 138
வா.. வா.. என் அன்பே - 139
வா.. வா.. என் அன்பே - 140
வா.. வா.. என் அன்பே - 141

வா.. வா.. என் அன்பே - 40

1.5K 43 10
By kanidev86

பகுதி - 40

அலுவலகத்திற்குள் நுழைந்ததில் இருந்து , குதறியவனாய் சரண் இருந்தான் . சினம்  என்றால் அப்படியொரு சினம்.. சிறு தவறுக்கும் குதறும் வேங்கையாய் மாறி , அனைவரையும் கலவரத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தான் . தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமல்லாது , அவனுடயை தலைமை அலுவலகத்திலும் அதே நிலை.. அவள் இல்லாமல் அவன் இல்லை என்பதை செயல்களின் மூலம் உணர்த்திய பின்பும் , நேற்று இரவில் இருந்து தன்னை விலகியிருக்கும் மனைவியின் மீது காண்பிக்க வேண்டிய கோபத்தை , தனக்கு கீழ் உள்ளவர்களிடத்தில் காண்பித்து எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்கிறான் . நேற்றைய இரவில் தான் விறைத்து விலக்கி வைத்தாள் என்றால் , காலை முதல் கண்களிலும் தென்படவில்லை.. விழிக்கும் பொழுதே , கையணைப்பில் வைத்து.. மதி முகம் பார்க்க வேண்டும் என்று சிந்தித்தவனின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது போதாமல் , கீழ் இறங்கி.. அவள் அதிகம் விரும்பி மறைந்துக் கொள்ளும் இடத்திலும் ( அதாங்க , சமையலறை..😁😁😁) தேடினால் , அங்கும் இல்லாததோடு , வீட்டிலேயே இல்லை.. " எங்கே அவள் ..", என்று கேட்டால், " கோவிலுக்கு ..", என்று கூறிய சாவித்திரியின் கூர்மையான பார்வைக்கு பதில் அளிக்க விரும்பாமல் , அன்றாட வேலைகள் செய்து அலுவலகத்திற்கு தயாராக கிளம்பிய பின்னும் , அவள் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை ‌ . ஒருமுறைக்கு , இருமுறை அவளை பற்றி விசாரித்தால் , அவன் கௌரவம் என்ன ஆவது.. அதனால் , வாயே திறக்காமல் இருந்தவனுக்கு.. வீட்டிலேயே , மெல்லியதாய் படர்ந்த எரிச்சலோடு.. காலை உணவும் உண்ண விருப்பமில்லாமல் வெளியேறியவன்.. புயல் வேகத்தில் தன் வாகனத்தை கிளப்பி இருந்தான் .

இரு தினங்களில் , படப்பிடிப்பிற்காக வெளிநாட்டு பயணமும் காத்திருக்கிறது.. சென்றால் , குறைந்தது..  கட்டாயமாக , தொடர்ந்து முப்பது நாட்கள்.. அவளை பிரிந்து இருக்க  வேண்டும்.. அங்கு வேலையின் சூழ்நிலையால் எத்தனை நாட்கள் ஆகுமோ.. என்று மனம் வெதும்பியவனாய் அவன் இருக்க.. தன்னை நெருங்க விடாமல் உறங்கியதோடு அல்லாமல்.. கண்களிலும் படவில்லை.. என்று பொங்கிக் கொண்டிருப்பவனிடம் மாட்டியது என்னவோ.. அவன் எதிரில் அகப்படுபவர்கள் மட்டுமாக இருந்தார்கள் .

அவனுடைய உதவியாளன் வைஷ்ணவ்வின் நிலையை பற்றி கூறவும் தேவையிருக்க வில்லை.. நெருப்பில் நிற்கும் நிலையில் இருந்தவனை , மேலும் , கலவரத்தை உண்டு செய்வதற்கு என்றே.. அவனோடு பிறந்த இரட்டையர்கள் எவ்வித தகவல்களும் இன்றி.. அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள் ‌. ஏற்கனவே , " அந்த ப்ராஜெக்ட் என்னாச்சு... சூட்டிங் ஏன் கேன்சல் ஆச்சு.. டைரக்டர் பிரச்சனை பண்றான்னா.. ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணி.. லாயரை அனுப்பு.. கோர்ட் படியேறி.. எல்லாம் கைவிட்டு போகும்போது புத்தி வரும்.. ",  என்று குதித்துக் கொண்டிருக்க.. புதுமுக தேர்விற்கு என முடிவு செய்திருந்த ஆட்களிலும் குழறுபடியாக இருக்க.. என்று அனைத்தும் தலைகீழாக இருக்கையில் இவர்கள் வேறு.. என்று உதறல் எடுத்தவனாய் ,

" ஸார்.. உங்களை பார்க்க.. காலேஜ் ஸ்டூடென்ஸ் வந்திருக்காங்க.. இன்னும் பத்து நிமிஷத்தில.. நம்ம சேனல் டீவி ஷோக்கும் போகணும்..", பம்மியவனை..

" இவ்வளவு நேரமா ஞாபகப்படுத்தாம.. நீ என்ன **** இருந்த..", என்று சத்தமில்லாமலேயே உறும.. வெடவெடத்து போனான்‌ .

"காலேஜ் ஸ்டூடென்ஸ்ஸா.. இல்ல உன் தம்பி தங்கையா..", என்று நக்கல் அடிக்கவும் தவறவில்லை . எச்சில் விழுங்கி அமைதி காத்தவனை முறைத்தாலும் , ஏனோ அவர்களிடத்தில் பார்க்க இயலாது என்று முகத்தில் அடிப்பது போல் சொல்ல விரும்பாததாலேயே.. " 5 மினிட்ஸ்..", என்று கட்டளையிட்டு அனுமதி வழங்கினான் .

சரணுக்கு நிச்சயம்.. அவன் தங்கை கண்டிப்பாக ,5 நிமிடங்களில் எல்லாம் வெளியேறிவிட மாட்டாள் என்று தெரியும்.. அதேசமயம் , அவன் சகோதரன் கூறுகிறான் என்பதற்காகவே நேரத்தை கடத்துவாள்.. என்பதை நினைத்தவுடனேயே.. சிரிப்பை புதைத்துக் கொண்டவன்.. தன் வேலையில் மூழ்க.. வெளியே , வைஷ்ணவோ தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் .. " இங்க பாரு காலையில் இருந்து.. செத்து சுண்ணாம்பா போயிட்டேன்.. உனக்கு டைம் ஐஞ்சே நிமிஷம் தான்.. சொல்லீட்டேன்.. ஏற்கனவே , வாங்கிக் கட்டீட்டு தான் உங்க முன்னாடி நிக்குறேன்..", என்று பொறும முடியாமல் பொறும.. தலையை குனிந்து பாவமாக முகத்தை வைத்தவளாய்.. நல்லபிள்ளை போல் தலையை அசைத்துக் கொண்டிருந்தவளின் செயலால் , அருகில் இருந்த வாசுவாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. கணினியில் பார்த்தவனாலும்.. உதடு விரிப்பை மறைக்க முடியவில்லை.. வாய்விட்டு நகைத்தவன்.. அவர்களின் வருகையை உணர்ந்து.. தன் முகத்தில் இறுக்கத்தை தேக்கி வைத்தவனாக வரவேற்றான்..

அலுவலக உடையில் , கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் தோற்றம் கண்டு விழி விரித்தவர்களாக நின்றுவிட்டார்கள்.. அதற்கு மேல் , அவன் உடல்மொழி , பத்து அடி தள்ளியே நில் என்பது போல் இருந்தது. அலுவலகம் நுழைந்தது முதல் , சரண்மித்ரன் என்ற பெயரை விட ஆர்.பீ.எஸ். என்ற அழைப்பே புழக்கத்தில் அதிகம் இருக்க.. ஒரு சில டிப்பார்ட்மெண்டை கடந்து வருகையில்.. அந்த  மூன்று ஆங்கில எழுத்தையும் உச்சரிக்க.. அஞ்சியது கண்களில் விழுந்ததின் காரணம் , இப்பொழுது , அவன் தோரனையால் எவ்வளவு உண்மை என்று புரிந்ததில்.. அனைத்தையும் விளையாட்டாய் பார்க்கும் ப்ரியாவையே , இதழ் சேர்த்து வைக்க செய்திருந்தது.. சரணின் கூர்மையான பார்வை.. இருவரும் , மௌனமாக இருக்க , தன் மணிக்கட்டை அவன் ஏறிட்டு.. வைஷ்ணவின் பக்கமாக விழிகளை நகர்த்தவும்.. சுதாரித்த வாசு.. " ஸார்.. நாங்க ஆல்ரெடி உங்களை சீஃப் கெஸ்ட்டா இன்வைட் பண்ண கேட்டு இருந்தோம்.. உங்க..கிட்ட.. கன்ஃபர்ம் பண்றதுக்காக.. பார்க்க வந்தோம்..ஸார்..", என்று வந்த காரணத்தை கூறுவதற்குள் அவனே விதிர்விதிர்த்து போயிருந்தான்..

" உங்க பிரின்ஸிப்பல் நம்பர் கொடுங்க.. ஐ'ல் டாக் டூ ஹர்..", என்று தன் இடக்கரத்தால் வைஷ்ணவை காண்பித்து.. வேற என்ன என்பது போல் துளையிட.. முதல் ஆளாய் இருக்கையை விட்டு எழுந்திருந்தது ப்ரியா தான்.. " தேங்க் யூ.. தேங்க் யூ.. ஸார்..", என்று கண்களால் தமையனை வெளியே அழைக்கும் நேரத்தில் விக்கி நுழைந்திருந்தான் .

ப்ரியாவின் செயலால் , உதட்டைத் தாண்டி வெளிவரத் துடிக்கும் சிரிப்பை கட்டுக்குள் வைக்க.. சரண் பெரிதும் போராடிக் கொண்டிருக்கையில்.. கதவு வரை போனவள்.. மறுபடியும் , அவனை பார்த்தாவாறு நின்றதில்.. 'அதான.. நீயாவது சும்மா வெளிய போறதாவது..', என்று யோசித்தவனாய்.. தன் ரேசர் விழிகளால் துளையிட , குறும்புக்கார பெண்ணிற்கு அழுகையே வந்ததே தவிர வாய்மொழிகள் இல்லை.. ஆனால், முயன்று.. " உங்கள பெர்சனலா.. வீட்டுக்கு சாப்பிட கூப்பிடறதுக்காக கேட்கவும் வந்தோம்..", என்று திக்கி திணறி கூற.. அழுத்தமாக பின்னே சாய்ந்தவன் , " உங்க நம்பரையும் கொடுத்திட்டு போங்க.. ", என்றதோடு முடித்துக் கொண்டு.. உனக்கான நேரம் அவ்வளவு தான் என்பது போல் விக்கியிடம் திரும்பிவிட்டான் . முகத்தில் அறைந்தது போல் இருந்த செயலில்.. வேகமாக , வெளியேறியவள்.. அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறும் வரை கால்களுக்கு தடைவிதித்து இருக்கவில்லை .

" ஏய்.. ப்ரீ.. நில்லு.. நில்லுன்னு சொல்றேன்ல..", என்று அவள் கவனம் இல்லாமல் சாலையை கடந்து செல்வதை தாங்க முடியாதவனாய் , வாசு பிடித்து இழுத்திருந்தான் .

"எதுக்கு இவ்வளவு கோபம்..",  என்றவனிடம்.. கொந்தளித்துவிட்டாள்..  " அவனுக்கு எவ்வளவு திமிறு பார்த்தியா டா.. எவ்வளவு தெனாவட்டா.. போன்னு.. சொல்லாம சொல்லி துரத்திவிட்டான்.. அஞ்சு நிமிஷம்ன்னு சொன்னான்ல.. ஆனா நாலே நிமிஷத்தில துரத்திவிட்டுட்டான் டா‌.. டேய் , வாசு இந்த ஆளாடா நம்மலோட பேசி சிரிச்சது.. இல்லை அட்ரெஸ் மாறி வந்திட்டோமா..", என்று விடாது அனத்தியவளை , பெரிய கடைக்குள் அழைத்து சென்று.. அவளுக்கு மிகவும் பிடித்த ஜுஸை திணித்திருந்தான் .

" எப்படிடா.. இந்த சைக்கோவோட.. அந்த பாப்பா குடும்பம் நடத்துது.. ", என்று அப்பொழுதும் சரணின் நடத்தையை ஏற்க முடியாதவளாய் தடுமாற.. " அது அந்த பொண்ணு பிரச்சனை.. நீ எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற..", என்றவனுக்கும் வியப்பை அடக்கவே முடியவில்லை.. தன் தங்கைக்கே வாய்ப்பூட்டு மாட்டியவனின் மீது கொள்ளை மரியாதை பெருகியது.. அதை நினைத்தவுடன் நகைத்து.. " ப்ரீ.. நிஜமாலுமே சரண் ஸாருக்கு.. ஒரு கோயில் கட்டணும்.. ", என்றதும் நன்கு முறைத்தவளை கண்டுக்காமல்.. " இல்லை.. அ..ஞ்..சு நிமிஷம் உ..ன்..னை..யே.. பேச விடாம.. செஞ்ச திறமைசாலி இல்லையா..", என்று கூறி முடிப்பதற்குள்ளாகவே.. அவள் துரத்துவாள் என்று அறிந்து ஓட்டம் எடுக்க தொடங்கி இருந்தான் .

சரணும் மிக தீவிரமாகவே , விக்கியிடம் தன் ரெஸிடென்ஸி , சென்னையில் துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் தாமதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்க.. அவன் மனையாளோ , " உடனே , மான்சி உன்னை பார்க்கணும்னு சொல்றா தாமரை.. ", என்ற ஆரவ்வின் அலைபேசி அழைப்பால் , தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள் .

மயூரியிடம் மான்சியை பார்ப்பதற்காக என்று கூறி சென்றால் , அதிகமாக கோபம் கொள்வார் என்று தெரிந்த ஒன்று என்பதாலேயே , பொய்யும் அல்லாது மெய்யும் அல்லாதுமாய் ஒன்றை கூறி வெளியேறி இருந்தாள் . எதார்த்தமாக , கர்ப்பிணி பெண் ஒருத்திக்கு பூ தைத்து புகைப்படம் எடுப்பதற்காக அலங்காரம் செய்ய அழைத்திருக்க.. அதை கூறியவளாய் , மான்சியையும் சந்திக்க முடிவெடுத்து அதை கூறாமல்.. கிளம்பியிருந்தாள் .

சோழிங்கநல்லூரில் இருந்து.. அசோக்பில்லரில் இருக்கும் , அந்த விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் ஆட்டோவில் இருந்து இறங்கியவள்.. விரைந்து , நுழைந்தவள் 3சி வீட்டின் முன் நின்று அழைப்பு மணியையும் அடிக்க விரும்பாதவளாய்.. வேகமாக, கதவை தட்ட.. இரு தட்டலுக்கே , திட்டிக்கொண்டே ஒருவன் கதவை திறக்க.. அவனை மனிதனாகவும் நினைக்காதவளாய் , நுழைந்து.. "அக்கா.. அக்கா.. எங்க இருக்கீய.. எதுக்காக என்னைய வர சொன்னீய..", என்று கத்திக் கொண்டே.. இங்கும் அங்குமாய் தேடியலைந்தவள் , கீழே அவள் இல்லாததைக் கண்டு..

"உங்களுக்காக தானே.. இங்குன வந்தேன்.. எங்கதேன்க்கா இருக்கீய..", என்று புலம்பியவளாய் அதே வேகத்தில் மாடியேறினாள் . டீசார்ட்டும்.. ட்ராக்கும்.. சகிதமுமாய், அவள் பின்னேயே , அலையும் ஆரவ்வை கிஞ்சித்தும் கண்டுக் கொள்ளவில்லை..

தாமரை தேடி.. காண துடித்துக் கொண்டிருந்த மான்சியோ , அந்த விலையுயர்ந்த இருக்கையில் அமர்ந்து, தங்க நிற திரவத்தை  கோப்பையில் ஏந்தி.. உதட்டிற்குள் செலுத்தியவளாய்.. குடித்துக் கொண்டிருந்தாள் . 



Continue Reading

You'll Also Like

121K 5.6K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
30K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
206K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்