வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 39

1.4K 45 13
By kanidev86

பகுதி - 39

சரணின் இத்தகைய செயலை எதிரே பார்க்காத தாமரை.. படுக்கையில் விழ.. முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொண்டு தீண்டாமல் சீண்டிக் கொண்டிருப்பவனின் செயலால்.. பேசாமல் இவன் முத்தம் கொடுத்திருந்தாலும்.. இப்படி உணர்ந்திருக்க மாட்டோம் என்று உள்ளுக்குள் புலம்பியவளாய்..  கண்களை இடமும் வலமும்.. உருட்டி விழித்துக் கொண்டிருந்த அழகில் மதி மயங்கியவன்..

" பாரு.. உனக்காக , ரூம்லேருந்து சுடியெல்லாம் எடுத்து வந்துட்டேன்.. ஆனா , நீ வேண்டாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..", என்று குரலில் கடுமையை பூசிக் கொண்டு.. அவள் தவிப்பை ரசிக்க.. முதலில் மிரண்டவள்.. பின் கேலியை உணர்ந்து..

" நானே மாத்திக்குறேன்.. ", என்று முனங்கினாள்..

" ஏன்..", என்று அவன் நிலையில் இருந்து மாற்றம் இல்லாதது போல் தோன்றினாலும்.. மேலும் நெருங்கியிருப்பது போலவும் இருக்க..

" எ..ன்..ன .. ஏ..ன்..", என்று கேட்டவளின் குரல் சென்ற இடம் தெரியாமல் இருக்க..

" பா.. ப்..பா.. ஆ..", என்று குழைந்து ஒலித்த குரல் தனது தானா  என்ற சந்தேகம் அவனுக்கே எழும்பொழுது.. அவளை கேட்கவும் வேண்டுமா..

" ம்..", என்று அவனுக்கு குறையாத முனங்களை வெளியிட்டிருந்தாள்..

" ஏன் வேண்டாம்ன்னு சொல்ற.. நான் வேண்டாமா..", என்று கூறியவன்.. அவளது கன்னத்தோடு இழைய.. தாடி ஏற்படுத்திய குறுகுறுப்பில்.. படுக்கையின் விரிப்பை அழுத்தமாக பிடித்து.. கண்களை இறுக்கமாக மூடி , கன்னத்தை சாய்த்துக் கொள்ள.. அவன் கூறியது எதுவும் மூளைக்கு சென்றடையவே இல்லை.. இதுவரை , ஒரு பெண்ணிடத்தில் அவன் காணாத தவிப்பும் நாணமும்.. ஒவ்வொரு முறையும் அவளிடத்தில் தூண்டுகோலாக இருக்க.. கன்னம் , காது.. என்று உரசியவன்.. மீண்டும் இதழின் அருகே வந்து தீண்டாமல் இம்சித்துக் கொண்டிருந்தான்.. அவளோ , அவள் நிலையிலேயே இல்லை.. மாலை நேரத்தில் , பேயாட்டம் போட்ட உணர்வு மீண்டும் தலை தூக்கியது போல் இருக்க.. அதன் காரணம் அறியாதவளாய் , மயங்கிய விழிகளை திறக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.. சரண் தீண்டாமல் தீண்டிக் கொண்டிருந்த செயலால்..

அவளை அழைத்த காரணத்தையும் மறந்தவனாக , அவளிடத்தில் இருந்து புறப்படும் சுகந்தத்தை ஆழ்ந்து நுகர்ந்தவனுக்கோ , விலகவே மனமில்லை.. தன் அருகே , உணர்ச்சிகளின் பிடியால் துடிக்கும் அவளது இதழை.. உடனே பொருத்திக் கொள்ள எழுந்த வேகத்தை , சில நிமிடங்கள் கட்டுக்குள் வைத்திருந்தான்.. இனி முடியவே முடியாது என்றானதுமே , மேலும் நெருங்கிய பொழுது , கதவை தட்டியவாறு சாவித்திரியின் குரல்.. கரங்கள் இரண்டும் பின்னிக் கொள்ளாமல் , இதழில் தேன்சுவையை ருசிக்காத போதும்.. இருவரின் , மூச்சுக்காற்று மட்டும் அலையென கிளம்பி ஒன்றோடு ஒன்று உரசிய நிலையில் இருக்க.. மயக்கத்தில் இருந்து வெளிவரவே முடியாமல் போனது . முதலில் , சுதாரித்தவன்.. சரணே..

" ஆங்.. இதோ வரேன் அத்தை..", என்று கழுத்தை திருப்பி சப்தமாக குரல் கொடுக்கவும் , விழியை திறக்க.. அப்பொழுதும் மலங்க மலங்க விழித்தவளாய்..

" ம்கூம்.. இப்படியே இருந்தா சரி வராது.. நீ சீக்கிரமா ட்ரஸ் சேஞ்ச் பண்ணீட்டு வா..", என்று விலகி கதவை நெருங்கி இருந்தாலும்.. "வா.. வந்து லாக் பண்ணிக்க..", என்று அசையாமல் அவள் இருந்ததை பார்த்து.. கேள்வியாக சொல்லவும்.. " ம்..", என்று அருகே வந்தவளிடம் , தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக , வேகமாக இதழோடு இதழ் பொறுத்தி தன் முத்திரையை பதித்தவன்.. அதே வேகத்தோடு வெளியேறி இருந்தான் .  அவன் செய்த செயலின் மாயங்கள் தாளாமல் , தடுமாறியவளாக இருந்தது என்னவோ தாமரையாகவே இருந்தாள் .

தவிப்பாய் , நின்றிருந்த சாவித்திரியிடமும் அவள் துணி மாற்றுவதாக கூறி.. மீண்டும் உணவருந்து இடத்தில் அமர்ந்துக் கொள்ள.. பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் வராமல் இருக்கவே.. இருமுறைக்கு மேல் சரணின் பார்வை அந்த அறையின் கதவை மீண்டு வந்திருந்தது..

" தாமரை.. என்ன பண்ற..",  என்று குரல் கொடுத்திருந்தார் மயூரி.. அவனை கவனித்தவராய்.. அவர் குரலுக்கே கலைந்தவள்.. " இதோ .. இதோ வந்துட்டேன் அத்தை ", என்று விரைந்து ஆடையை மாற்றிக் கொண்டு வெளி வர.. அனைவரும் அவளுக்காக காத்திருந்தார்கள் .

" என்னாச்சு.. ஏன் ட்ரஸ் சேஞ்சு பண்ணீட்ட..", என்றார்.

" இல்ல.. அது ஈரமா இருந்தது.. கால்ல ஃப்லீட்ஸ் உரசினா எரியுது.. அதேன்.. அவிய எடுத்துட்டு வந்து கொடுத்தாவ..", என்று கூறி முடிப்பதற்குள்ளாக தலையை..  விட்டால் பூமிக்குள்ளே புதைத்துக் கொள்பவள் போல் சொல்லி முடிக்க.. தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல் உணவு தட்டில் கவனமாக இருந்தாலும்.. சரணின் உல்லாச மனநிலையும்.. அவன் உதடுகளில் நெளிந்த இதழ் சுழிப்பும்  தென்படாமல் இல்லை.. கண்டும் காணாமல் , மகிழ்ச்சி பொங்க..  இருந்தவர்கள்.. "  சரி வா.. சாப்பிடு..", என்று அவன் அருகில் அமரச் சொல்ல.. உள்ளுக்குள் அலறியவள்..

" இல்ல.‌ வேண்டாம்.. நா.. உங்களோட சாப்பிட்டுக்குறேன்..", என்று கூறினாள்.. உண்ணும் உணவை வாயிற்குள் அடைத்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன்.. " மேல தான்டீ நீ வரணும்..", என்று உல்லாசமாக நினைத்துக் கொண்டான் .

பெரியவர்கள் அனைவரும் கண்டுக் கொள்ளாமல் இருந்தாலும்.. சசிரேகாவால் அப்படி இருக்க முடியவில்லை.. " அம்மோ.. இன்னைக்கு இவன் இருக்குற வேகத்தை பார்த்தா அண்ணி காலி.. ", என்று சந்தோஷிடம் கூறி முறைப்பை பரிசாக பெற்றாள் .

" மாம்.. எனக்கு போதும்..", என்று எழுந்தவன்.. " சீக்கிரமா பால் கொண்டு வா..", என்று தாமரையிடமும் கட்டளையாக கூறி மாடி ஏறிவிட்டான் . அவன் தலை மறையும் வரை அமைதியாக இருந்த அவனது தங்கை.. வாய்விட்டு சிரிக்க.. நச்சென்று தலையில் கொட்டிய சாவித்திரியிடம் தொடர்ந்து வம்பு செய்தாள். அவளை அடக்க முயன்றவனாய் சந்தோஷ் மீண்டும் தலையில் தட்ட.. அடங்காதவளோ ,  "பார்த்துக்கோ.. என் அண்ணணை பார்த்து ரொமான்ஸ் எப்படி பண்றதுன்னு கத்துக்க.. சும்மா சும்மா.. அடிக்காத.. ", என்று குனிந்து காதிற்குள் கூறுவது போல் கூறியவள்.. நொடிக்குள் காதோடு தன் இதழை உரசிக் கொண்டு எதுவும் அறியாதது போல் நகர்ந்து விட.. அவனே , பயந்து சுற்றி இருப்பவர்கள் யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டு தலையில் அடித்துக் கொண்டான் . ஆனாலும் , ஒரு பெண்ணின் ஸ்பரிசத் தீண்டல் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா..

உணவருந்திய பின்பும் நேரத்தை கடத்தியவளை நோட்டம் விட்ட சாவித்திரிக்கு தெளிவாகவே புரிந்திருந்தது . சரண் காண்பிக்கும் நெருக்கமும்.. தாமரை கணவனுக்கான தேடலை புரிந்துக் கொள்ள முடியாமல் , ஏற்படும் தடுமாற்றத்தையும் கவனித்தவருக்கு.. மகளாக நினைப்பவரால் , அவள் வாழ்க்கை மலரவே விரும்பியவராக.. " நீ இன்னும் இங்க என்ன பண்ணீட்டு இருக்க.. கால்ல சூடுப்பட்டது போதாதா.. மொத்தல்ல அவனுக்கு பால் கொடுத்திட்டு வா.. இங்க நான் கவனிச்சுக்கிறேன்.. ", என்று அனுப்பி வைத்தவருக்கு நன்றாக தெரியுமே.. இனி அவளால் காலையில் தான் கீழே வர முடியும் என்று .

தயங்கி.‌. தயங்கி அடியெடுத்து வைத்தவள்.. பார்வையால் அவனை தேட.. சரணோ , மும்மரமாக தன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . அவள் அறைக்குள் நுழைந்தவுடனேயே  , கடிகாரத்தில் மணியை கவனித்து பற்களை கடித்தவனாக , கண்டுக் கொள்ளாமல் வேலையிலேயே கவனமாக இருக்க.. மெல்ல அவனை நெருங்கியவள்.. " ஸார்.. பால்..", என்றாள் .

" ஸார்..", எனற அழைப்பால் நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டு தன் சினத்தை கட்டுப்படுத்தியவன்.. நிமிர்ந்தும் பாராமல் , " அங்கே வச்சிட்டு போ..", என்று எஃகு இரும்பாய் கூற.. உதடு கடித்துக் கொண்டு , நிலையில் மாற்றமில்லாதவளாய்.. கண்ணீரை மறைத்தவளாய் குனிந்தவாறே இருக்கவ.. அதற்கு மேல் கணினிக்குள் மூழ்க முடியாமல் ,
"ஷிட்.. எதுக்காக இப்ப நீ நின்னுட்டு இருக்க.. உங்க வேலை எல்லாம் முடிச்சிட்டே கொண்டு வர வேண்டியது தான.. நீ வந்து தரும் போது குடிச்சுக்க போறோம்..", என்று சாப்பிட்ட உடனே வராத கோபமும் சேர்ந்துக் கொண்டதில் கத்த துவங்கிவிட்டான் .

நினைத்தால் முத்தம் கொடுத்து இம்சிப்பது , இல்லையேல்.. காரணமே இல்லாமல் வசைப்பாடுவது என்று அவன் செயலை ஏற்க முடியாமல் தத்தளித்தவள்.. கண்ணீர் மல்க நிற்க.. மனைவியின் நிலையை பார்த்து தன்னையே நொந்தவனாக , வேகமாக.. தன் மடிக்கணினியை மூடி , அதன் இடத்தில் வைத்து அவளை நெருங்கியவன்.. கையில் இருந்த பாலை வாங்கி பருகிய பின்.. மேஜை மீது வைத்து.. அவள் கரத்தை பிடித்து இழுத்துக் கொள்ள.. வாயே திறவாமல் இருந்தவளின் உடல்.. நெகிழ்வை வெளியிடாமல் , விறைப்பை வெளிப்படுத்த.. " ம்ச்சு.. வான்னு சொன்னவுடனே வரலேன்னு கோபம்.. எதுக்கு இப்ப மூஞ்சிய இப்படி வச்சிட்டு இருக்க.. ", என்று முகத்தை நிமிர்த்தி பார்க்க முயன்றவனாய்.. குனிந்த தலையை நிமிராமல் அலுச்சாட்டியம் செய்தவளிடம் வீம்பு பிடிக்க வேண்டாம் என்று நினைத்தவனாக , " சரி போய் படு..", என்றதும் மெத்தையில் ஏறி முதுகுக்காட்டி படுத்துக் கொண்டவளை நெருங்கத் தோன்றாமல்.. கொஞ்ச நேரம் பால்கனிக்கு சென்று புகைத்துக் கொண்டிருந்தான்..

மீண்டும் அவளை பார்க்க.. தாமரை நன்றாக உறங்கிவிட்டது தெரிந்தது உள்ளே வந்தவன்.. ஆழமாக மூச்செறிந்து.. உறங்கும் மனைவியை தன்புறம் திருப்பிப் போட்டவன்.. குழந்தையென தூங்குபவளை ஆசையுடன் , வருடி.. மெல்ல தன் மீது சாய்த்துக் கொண்டு கண்களை மூடியவுடனேயே.. உறக்கம் அவனையும் சுகமாக தழுவிக் கொண்டது . 

வீசும் தென்றல் குளிர்ந்திருக்க.. நீல வானை வெண்மேகங்கள் சூழ்ந்து , வெளி வர துடிக்கும் பகலவனின் ஒளியால் மேலும் மிளிர்ந்து அழகு சேர்த்தது , பொழுது புலர்ந்ததை உணர்த்தி.. பறவைகளையும் மற்ற உயிரினங்களை தட்டி எழுப்பிவிட.. ஏழு அறிவு படைத்த மனிதன் மட்டும் , கைபேசியில் ஒலிக்கும் அலாரச் சத்தத்தில் விழித்துக் கொண்டிருந்தான் . அதில் , நம் தாமரையும் விதிவிலக்கல்ல.. எங்கும் சாற்றியிருந்த ஜன்னல் திரையின் வழியே , நுழைய முடியாத இயற்கை அன்னை.. உள்ளே நுழையவும் விரும்பாதவள் போன்று வெளியில் இருந்தே உறவாடிக் கொண்டிருக்க.. மனிதனின் படைப்பில் பிறந்த அலாரம்.. தன் கடமையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தது .

தன் உறக்கத்திற்கு இடையூராக இருந்த சத்தத்தில்.. முகத்தை அழுத்தமாக தேய்த்து திருப்பிக் கொண்டவளுக்கு , தலையணையின் மென்மை தொலைந்தது போல் இருக்கவே.. அரைகுறையாக விழித்தால் , மிக நெருக்கமாக தெரிந்தது சட்டை பொத்தான்.. அதில் , திகைத்து மேலும் நன்றாக விழித்து பார்க்க.. சிறு குழந்தை நெஞ்சில் படுத்திருப்பது போன்று படுத்துக்கிடந்திருந்தாள் . வேகமாக , எழ முயன்றாலோ.. இரும்புப் பிடியாய் அவனுடைய அணைப்பு.. அதிர்ந்து மலங்க.. மலங்க.. விழித்தவள்.. பின் அவனுடைய முகத்தில் தன்னை மீறி கவனமாக , அவன் முகத்தில் ஏற்கனவே முடியை வைத்து திரிந்துக் கொண்டிருப்பவன்.. இப்பொழுது நடிக்கும் படத்திற்காக , காடுபோல் வளர்த்திருந்தான் . உறங்கும் பொழுதும் ,  உதட்டை அழுத்தமாக மூடிக் கொண்டு , முகத்தை இறுக்கமாக  வைத்துக் கொண்டு இருப்பவனை.. ' பாரு தூங்கும் போதும் உர்ன்னு‌.. ', என்று சலித்தவள்.. ' எனக்கு இந்த மித்ரன் ஸார்  பிடிக்கவே இல்லை.. அங்க பாருங்க.. எவ்வளவு அழகாக சிரிச்சிட்டு இருக்காங்கன்னு..' என்று மான்சியுடன் இணைந்திருந்த படத்தை திரும்பி பார்க்க.. அந்த இடமோ ,  வெறுமையாக இருந்தது. ' எங்க போட்டோ.. காணுமே... எங்க போச்சு.. அச்சோ.. அவ்வளவு அழகா இருப்பாங்களே.. ', என்று இருவரையும் நினைத்து ,  அசையவே முடியாத போதும் பரபரப்பு தொற்றிக் கொள்ள.. அதை உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு கடத்திக் கொண்டு இருந்தாள் .

அந்த புகைப்படம் தாமரைக்கு மிகவும் , பிடிக்கும்.. மான்சியின் அறையில் இருந்ததை பார்த்ததில் இருந்து , இருவரின் கண்களில் இருக்கும் மகிழ்ச்சி.. எவ்வளவு துயரங்களில் இருந்தபோது பார்த்தாலும் துடைத்தெறியும் , அவளுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.. அப்படிப்பட்ட அழகிய ஜோடிகளின் புகைப்படம்.. காணாமல் இருப்பதை தாங்கிக் கொள்ளவே முடியாமல்.. அவள் அறியாமல் , சரணையே உலுக்க துவங்கிவிட்டாள் ‌.

" ஸார்.. ஸார்.. எழுந்திரிங்க.. இங்க பாருங்க.. உங்களோட போட்டோவை காணோம்.. மான்சியக்காவோட இருந்த படத்தை காணோம்..", என்று எழுப்ப..

" ம்.. ", என்று உறக்கத்திலேயே முனங்கி ,  மேலும் அவளை இறுக்கி புரட்டிப் போட்டவனாய் , இடப்பக்கமாக வளைத்து உறக்கத்தை தொடர.. " அ..ம்..மா.. இரும்பு பிடி விடுங்க என்னைய.. வலிக்கு.. ", என்று மூச்சுக்கு திணற..

" ம்ச்சு.. ஏன்டீ தூங்க விடாம தொல்லை பண்ணீட்டு இருக்க.. பேசாம தூங்கு..", என்று மீண்டும் கழுத்தோடு இறுக்கி.. நெஞ்சில் அழுத்திக் கொண்டவனின் செயலில் மேலும் சுவாசத்திற்கு ஏங்கியவளாக.. அவனிடம் இருந்து விலக முயன்றவளுக்கு.. அந்த படத்தை பற்றிய நினைவையே மறக்கடிக்கச் செய்திருந்தான் . பெரிய சிகரத்தின் அடியில் சிக்கிய சுண்டெலியின் நிலைக்கு ஆளானவளுக்கு.. மற்றது எதுவும் நினைவில் இல்லாமல் போக.. தன் தலையை தூக்கி நெளிந்து என்று போராடி வெளி வந்தவளுக்கோ.. மல்யுத்ததில் வென்றது போல் ஆனது .

ஹா..ஹா.. என்று சுவாசத்தை இழுத்துவிட்டுக் கொண்டவள்.. விழித்தால் என்ன செய்வானோ என்று தோன்றியதில்.. அலறியடித்துக் கொண்டு வெளியேறி விட்டாள் .

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
56.3K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...