வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 38

1.5K 42 7
By kanidev86

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

இப்படிக்கு
கனி தேவ்💕💕💕

பகுதி - 38

இருவரும் இருக்கும் இடம் சமையல் அறை என்பதையும் மறந்து.. அவளுள் மூழ்கியவனாக.. இதழோடு போட்டிப் போட்டது போதவில்லை என்று நினைத்திருப்பான் போலும்.. நெற்றி.. கன்னம் என்று முகத்தில் ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல்.. முத்தத்தால் அர்ச்சித்தவன்.. பின் அவளது கழுத்துக்கடியில் புதைய.. நிலையிழந்தவளாய் பின்னே சாய்ந்ததில்.. அடுப்பு மேடையில் இருந்த பாத்திரம் ஒன்று கீழே விழுந்து உருண்டோடி பெருஞ்சத்தத்தை உண்டு பண்ணியதில்.. தெளிந்த தாமரை.. பயத்தால் ஏற்பட்ட பிடிவாதத்தோடு , வேகமாக அவனை விலகிய செயல்.. சரணுக்கு , இருந்த இதம் அறுபட்டதில் கிளந்தெழுந்த சினத்தால்.. கண்கள் பளபளக்க நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு சில்லிட்டு போனாள்..

" அ.. தூ.. கி..ட்..சன்ல.. அதா..ன்..", என்று தந்தியடித்தவளை.. ஒற்றை கரத்தால் இரு கன்னத்தையும் பற்றியவன்.. " இனிமேல்.. இங்க வந்து படம் பிடிக்கச் சொல்லு.. புரிஞ்சதா..", என்று மீண்டும் குவிந்திருந்த இதழை சுவைத்த பின் திரும்பியே பார்க்காமல் வெளியேறினான் . அவன் சென்ற திசையையே வெறித்திருந்தவளுக்கு என்ன கூறினான் எதற்காக கூறினான் என்று புரியவே இல்லை.. படம் என்று கூறியதால் மட்டுமே அது வேந்தனாக இருக்கும் என்று அழுத்தமாக அவளது மனம் நம்பியது . அதனால் , அப்படி என்ன செய்திருப்பான் என்றே குழம்பியவளாய் நின்றிருக்க.. வேந்தனும் அழைத்திருத்திருந்தான்..

"என்னத்த செஞ்சீய.. அவிய அம்புட்டு கோவமா இருக்காவ..", என்று அவனிடம் பொறிந்துத் தள்ள..

" ஹேய் தாமரை.. என்னாச்சு ", என்று பதற்றத்தோடு கேட்டதில்..

" ஒன்னும் ஆகலை.. உங்கள இங்குன வந்து படம் பிடிக்கச் சொன்னாவ..", என்று அவளுக்கு புரியாதது.. தன் தமயனால் புரிந்துக் கொள்ள முடியுமோ என்று சொல்லவும்.. சிலகணங்கள் , ஆழ்ந்த அமைதியில் இருந்தவன்.. பின் சத்தமிட்டு சிரித்து.. " ஆமா , நீ எங்க இருந்த..", என்றான் .

"இது என்ன கேள்வி வீட்டுல.. அடுப்பாங்கறைலே..", என்று எரிச்சலான குரலோடு தொடங்கியவள்.. சரண் செய்து வைத்த செயலின் தாக்கம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டதில்.. நாணத்தால் சிவந்து.. முனங்களாய் பதில் அளித்த விதத்திலேயே.. அவன் செய்த செயல் புரிந்திருந்ததில் பலமாக நகைத்தவனின் மனம் குழப்பத்திலிருந்து சட்டென்று வெளி வந்திருந்தது .

" ம்..ம்.. நான் வந்து படம் பிடிச்சா சும்மா விடுவாரா..", என்று கேலியில் இறங்க.. இப்பொழுது தாமரைக்கு தலையே வெடிப்பது போல் ஆனது.. " அண்ணே அவியதான் எதுக்கு கோவப்படுறாக.. என்ன பேசுறாகன்னு தெரியாம இருக்கேன்னா.. நீங்களும் , சேர்த்து குழப்பிவிடாதிய.. உங்களுக்கு புண்ணியமா போவும்.. எதையும் தப்பு தப்பா செஞ்சு.. என்னைய வேதனைக்கு ஆளாக்காதீய..", என்று சரண் செய்த செயலால் உண்டான கோபமும் தன் தமயனின் கேலி சிரிப்பும்.. அவளை கொதிநிலைக்கு கொண்டு சென்றதில் வெடித்தவள் பட்டென்று , அலைபேசியை துண்டித்திருந்தாள் .

வேந்தனுக்கு தாமரையின் வார்த்தைகளை கேட்டு திக்கென்று இருந்தாலும்.. சரணின் நிலை புரிந்ததில் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான் . வந்த வேகத்திலேயே , வெளியேறிய சரணுக்கு வெகுவாக தாமரை தேவையாய் இருந்தாள் . மான்சியின் நிழலையும் தீண்டுவதற்கு இருக்கும் ஒவ்வாமையை நினைத்து வியந்து போனான் . அதேபோல் , தாமரையை பார்த்த நாள் முதலில் இருந்தே , ஏற்பட்ட உரிமையும் உணர்வும் மான்சியிடமும் வர மறுத்திருந்த ஒன்று.. அவளை தேடி அலைந்தவனுக்கு‌.. அவளது பிம்பம் விழுந்தவுடன்.. புதைந்துக் கொள்ள எழுந்த ஆசையையும்.. வேகமும்.. மோகமும்.. அவனுக்கே புதிதான ஒன்று.. அவள் மீது வைத்த காதலின் அளவை முழுதாக புரிந்துக் கொண்ட நேரம்.. மான்சியிடம் நடிப்பிற்காகவேனும் .. நெருங்க முடியாத அந்த நேரம்.. தாமரை அவனுக்கு எவ்வளவு உயிரானவள் என்று..

உடனேயே , மனைவியை தேடி ஓடி வந்தால்.. கொஞ்ச நேரம் அவளை காணது தவித்த தவிப்பின் உச்சத்தை இதழ்களின் மூலம் வெளிப்படுத்த.. வேந்தனின் வரிகள்.. அலையலையாய் எழுந்து.. மொத்தமாக வீழ்த்தியது.. தன்னிலை மறந்து மூழ்கியபொழுது.‌ அவளது விலகல் சமட்டி அடையாக தாக்க.. திக்கித்திணறி அளித்த பதிலால் வலி குறைந்தது போல் இருந்தாலும்.. 'அது எப்படி என்னை விலக்கலாம்..' என்று ஆத்திரம் மட்டுமே சொந்தமானது.. அதே சமயத்தில் , அவளது பயத்தை பார்த்த பின் அவளிடம் இதுவரை , காட்டுமிராண்டி போல் நடந்துக் கொண்ட முறை நினைவில் எழுந்து இம்சிக்க.. குற்றணர்ச்சியால் இதயத்தை கசக்கிப் பிழியும் உணர்வு.. உடனே , அவளிடத்தில் தன் நேசத்தை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.. என்ற வேகம்..

அதை செயல்படுத்த நினைத்து.. மீண்டும் தன் வாகனத்தை வீட்டிற்கு திருப்பும் எண்ணத்தில் இயக்க.. அவனுடைய உதவியாளனிடம் இருந்து வந்த அழைப்பு முக்கிய வேலையை நினைவுப்படுத்தவே.. நிதானமாக , இரவில் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவனாய்.. தொழில் பின்னே சென்றுவிட்டான் . வேந்தனிடம் பேசிய பிறகு , தாமரையால் அந்த இடத்திலேயே நிற்க முடியவில்லை.. எத்தனை வேலையாட்கள் பாரத்திருப்பார்களோ.. என்ன நினைத்திருப்பார்களோ என்ற எண்ணத்திலேயே உழன்றவள்.. ஒன்றை மறந்திருந்தாள்.. சரணுடைய மனைவி அவள் என்பதை.. அவளை பொருத்தவரை பணத்தின் தேவைக்காக ஒப்புக் கொண்ட உறவு.. அந்த நினைப்பில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பவளுக்கு.. திருமணத்திற்கு பிறகு.. அவன் விலிகி இருந்தது கூட பாதிப்பு ஏற்படுத்தவில்லை.. ஆனால் , மீண்டும் இந்த நெருக்கம்.. அவனிடத்தில் அதுவும் வியப்பு அளிக்கவில்லை.. ஏனெனில் , பணத்திற்காக வரும் பெண்களோடும் உறவு வைத்திருக்கும் குணத்தையும் பழக்கப்படுத்தியவனாக இருப்பதால் புதுமையாக இல்லை.. கொடுத்த பணத்திற்காக தன்னை நாடுவதாகவே அவளுக்கு தோன்றுகிறது .

ஆனால் , அவளுள் ஏற்படும் மாற்றம்.. மிகுந்த அதிர்ச்சியை அளிக்க , தலை விண்ணுவிண்ணு என்று தெறிக்க துவங்கவே , பார்த்துக் கொண்டிருந்த வேலையை வேலைப் பார்ப்பவர்களிடம் ஒப்படைத்து‌.. படுக்கை அறைக்குள் முடங்கிக் கொண்டாள் . புதிதாய் முளைத்த.. உணர்வு , தன் தாய் வீட்டில் துவங்கியது.. வெளிநாட்டில் உறவுக் கொண்ட பின்.. தீண்டாமல்.. ஏன் , விலகி வைத்தவன் மீண்டும் நாடியது என்னவோ.. அவளது இல்லத்தில் தான்.. அன்று கிளர்ந்தெழுந்த உணர்வு இது.. அது என்ன.. ஏன்.. என்று புரியாது தத்தளித்தவளை மீண்டும் இந்த முத்தத்தால் ஏற்பட்டுவிட.. மனமும் உடலும் வெகுவாக சரணின் அணைப்பில் இருக்க ஏங்குவதை தவிர்க்க முடியாமல் தடுமாறியது அந்த பேதை நெஞ்சம்.. இந்த உணர்வுக்கு காதல் என்றோ.. கணவன் மனைவியின் நேசத்திற்கான அடையாளம் என்றெல்லாம் அவளுக்கு நினைக்கவே தோன்றவில்லை‌.. மாறாக , மான்சிக்கு இழைக்கும் துரோகமாக கருதி துடித்துக் கொண்டிருந்தாள் . அவளது துடிப்பையும் விரட்டிக் கொண்டிருந்தது.. சரணின் விரல் மொழிகள்.. அவனால் மூட்டப்பட்ட தீயை அணைக்க வழி தெரியாதவளாய்.. நகத்தை கடித்து தின்றுக் கொண்டிருந்தாள் .

அலை பாய்ந்த கண்களுமாய்.. விரல்களை தன் பற்களுக்கு கொடுத்து.. மெத்தையில் அமராமல்.. தரையில் அமர்ந்து.. அதன் மீது சாய்ந்தவளாய் , தாயின் இழப்போ.. தங்கையின் இழப்பை பற்றிய சிந்தனையோ இல்லாதவளாய்.. உடலில் அதிகரிக்கும் வெப்பத்தையும்.. அடிவயிற்றில் பிசையும் உணர்வில் இருந்தும் விடுபட முடியாமல் , இறுக்கமாக , இரு கண்களையும் மூடி பாதத்தை அழுத்தமாக தரையில் பதித்து போராடிக் கொண்டிருந்தவளுக்கு , சாவித்திரி வருகையும் தெரிந்திருக்கவில்லை.. அவளது நிலையை பார்த்ததும்.. திகைத்துவிட்டார் .

" தாமரை..", என்று மென்குரலில் அழைத்து தோளை தொட.. திடுக்கிட்டு விழித்தவள்.. பதறி எழவும்.. " என்னாச்சு டா..", என்றார் தன் அதிர்ச்சியை தனக்குள் பொதித்தவராய்..

காய்ந்த உதடுகளை நினைத்தவள்.." தெரியலை அம்மா.. என்னமோ மாதிரி இருக்கு..", என்று சொல்லி முடிப்பதற்குள் கண்களில் நீர் வழிய.. தாமரை அவள் உணர்வுகளோடு போராடுவது.. வெளிப்படையாகவே தெரிந்ததில்.. சரணின் மீது கட்டுக்கடங்காமல் கோபமாக வந்தது அவருக்கு..

" தாமரை.. இந்தா முதல்ல தண்ணிய குடி.. ", என்று குடிக்க வைத்தவர்.. " போ.. முதல்ல முகம் கழுவீட்டு வா.. அம்மா விளக்கு ஏத்த வர சொன்னாங்க..", என்றதும்.. "இதோ.. வரேன்ம்மா..", என்று குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள.. விரைந்து , வெளியேறியவர்.. அன்னபூரணியிடம் ,

" அம்மா கீழ வாங்க.. சாமி ரூமுக்கு..", என்று வேகமாக சொல்லவும் , " ஏன்டாம்மா..", என்றவருக்கு..

" வாங்கம்மா.. தாமரைய வர சொல்லியிருக்கேன்.. நீங்க சொன்னதா.. ", என்றதில் புரிந்தது போல் இருக்க.. அவரோடனே.. மின்தூக்கியின் வழியே அவள் வருவதற்கு முன் நின்றிருந்தார் .

அவள் வருவதற்கு முன்பாகவே கூடியிருந்த பெரியவர்களுக்கு புன்னகையை விரித்தவள்.. விளக்கை ஏற்ற.. மயூரியும் இணைந்துவிட்டார்..

" தாமரை.. நீ நல்லா பாடுவியாமே.. ஒரு பாட்டு பாடும்மா..", என்று பெரியவர் சொல்ல..

" பாட்டா.. ஆ..", என்று யோசித்தாலும் இருந்த மனநிலைக்கு.. எதிரே.. அவ்வளவு அழகாய் இருந்த ஏழுமாலையினை நிறைத்துக் கொண்டவளாய்..

" குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.."

என்று தன் விழிமூடி கரம் குவித்து தன்னை மறந்தவளாய்.. மனக்கண் முன் தெரிந்த இறைவனின் அழகில் , மெய் மறந்து பாடிட.. அவளது குரல் மேலும் மிளிர்ந்து.. தெய்வீக சூழலை எங்கு பரப்பி.. அனைவரையும் அங்கு வர வைக்கப்பட்டிருந்தது . முழு பாடலையும் பாடி முடித்து விழி திறந்த பொழுது , முழுதாய் தெளிந்திருந்தாள்.. அதில் அவளது முகம் பெயருக்கு ஏற்றார் போல் மலரவே.. தாயும் மகளும் அர்த்தமாக பார்த்துக் கொண்டார்கள் என்றால்.. அழுத்தமாக , முத்தம் பதித்திருந்தாள்.. சசிரேகா.. அவளது செயலை பின் தொடர்ந்தவளாய் ஹரினி.. சந்தோஷின் கண்கள் சசியிடம் மிரட்டலை விடுத்துக் கொண்டிருந்தாலும்.. " அழகா பாடின.. தாமரை.. ", என்றான் புன்னகையுடன்..

" தேங்க்ஸ் ண்ணே..", என்று சிரித்தவளை.. அருகே அழைத்து ஆசீர்வாதம் வழங்கினார்கள் பெரியவர்கள் . அதன் பிறகு சிறுவர்களின் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருக்க.. இரவு உணவிற்கு அழைப்பதற்குள் சோர்ந்தே போனார் சாவித்திரி..

ஒன்பது மணி போல் உணவருந்த கூடிய வேளையில் சரண் நுழையவும்.. " சரண் கண்ணா.. நீயும் சாப்பிட வா.. எல்லோருமா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு..", என்றார் அன்னபூரணி..

சரி என்று தலையசைத்து பதில் அளித்தாலும் விழிகள் மனைவியை தேடுவதில் முனைப்பாக இருக்க.. கண்டும் காணாதவர்களாக நடந்துக் கொண்டார்கள்.. அவன் காரின் சத்தம் கேட்ட உடனேயே அடுக்களைக்குள் நுழைந்துக் கொண்டாள் தாமரை..

மாடியேறுபவனுக்கும் நிச்சயம் , அவள் கீழே தான் இருக்கிறாள்.. தான் வந்திருப்பதை அறிந்தும் வெளி வராமல் இருக்கிறாள் என்றே புரிந்திருந்தான் . " எங்க டீ போகப் போற.. என்கிட்ட தான வந்தாகணும்..", என்று முணுமுணுத்தவனாய் , தன்னை சுத்தம் செய்து கீழ் இறங்கி வந்தவன்.. மேஜையில் அமர்ந்தவுடனேயே..

" அண்ணா.. இன்னைக்கு அண்ணி எவ்வளவு சூப்பரா பாடினாங்க தெரியுமா..", என்று முடிப்பதற்குள்.. கரத்தில் இருந்த பாத்திரத்தை நழுவவிட்டிருந்தாள் தாமரை..

" ஏய்.. என்னாச்சு.. ", என்று அனைவருக்கும் முன் ஓடிய சரண்.. தாமரை சூடு தாங்காமல் , தன் இடக்காலை உதறிக் கொண்டிருந்தை பார்த்து பதற்றம் கொண்டவன்...

" உனக்கு அறிவே இல்லையாடீ.. உன்னால ஒழுங்கா ஒரு வேலைய பார்க்க முடியலைன்னா.. எதுக்காக , நீ இந்த வேலை பார்க்குற..", என்று அவளை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல..

" சரண்.. இங்க விடு அவளை.. விடுன்னு சொல்றேன்ல..", என்று மயூரி சத்தம் போட்ட பிறகே அவளது தோளை விடுவித்திருந்தான். " எதுக்கு இவ்வளவு கோபம் வருது.. நீ நகரு..", என்று தாமரையிடம் அவர் நெருங்க.. " என்னமோ , பண்ணுங்க..", என்று மீண்டும் மாடியேறி இருந்தவனுக்கோ , " இவ எதுக்கு இந்த வேலை பார்க்கணும்.. இத்தனை வேலைகாரங்க இருக்கும் போது..", என்று உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்ததை.. வாய் வழியே கூறாமல் இருந்த செயல் பெரும் பிழையாகிப் போனது..

மயூரியோ.‌. சமையல் அறையை ஒட்டி வெளியே இருந்த குழாய் நீரை திறந்து தாமரையின் காலை நனைக்கச் செய்திருந்தார் . சுட்ட காயத்தின் சிவப்பு தெரியாத போதும்.. அதன் எரிச்சல் முகத்தில் பிரதிபளிக்க.. அவருக்கு கஷ்டமாக போனது..

அதிலும் அவள் சமாளித்தவளாய்.. " பரவால்ல அத்தை.. இப்ப எரிச்சல் அடங்கீடுச்சு..", என்று மெல்ல அடியெடுத்து நகர்ந்தவளை தடுத்தவர்..

" உனக்கு அடிப்பட்டுச்சுன்னு கோபமா பேசியிருப்பான்.. ம்.. போ.. போய்.. உள்ளே உட்கார்..", என்று சமாதானமாக கூறியவரிடம் கலங்கிய கண்களை மறைத்தவளாய் உள்ளே நுழைய.. அவனும் கீழ் இறங்கி வந்திருந்தான்.. தயக்கமாக , டைனிங் சேரில் அமர போனவளை..

" ஏய் இங்க வா..", என்று அதட்டவும்..

" சரண்.. அவளுக்கு அடிப்பட்டு இருக்கு.. நீ.. ",

" அம்மா.. ஆ..", என்ற அழுத்தத்தில் , அதன் பிறகு ஒருவருக்கும் வாய் திறக்கும் தைரியம் வரவில்லை.. அவன் அருகே மெதுவாக ,செல்லும் வரையில் அழுத்தமாக நின்றிருந்தவன்.‌

" சீக்கிரமா உள்ளே வா..", என்று கீழ் இருந்த அறைக்குள் நுழைந்துக் கொள்ள.. மனதில் உள்ளவற்றை வெளியே காண்பிக்காதவாறு இருக்க பாடுபட்டு நுழைவதற்காக , அறையின் வாசலில் கால் வைத்தாலோ இல்லையோ.. வேகமாக , கையில் ஏந்தியவன்.. காலால் கதவை உதைத்து அடைத்து மெத்தையில் அமர வைத்து.. அவளது காலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பதறி இழுக்க முயல ,

" ஏன் டீ இப்படி பண்ற.. பாரு.. எப்படி சிவந்திருக்குன்னு..", என்று மேல் பாதத்தை மென்மையாக வருட.. கரத்தில் இருந்த மருந்தை எடுத்து தடவவும்.. அதில் எல்லாம் அவளது கவனம் செல்லவே இல்லை..

அவன் கரத்தின் பிடியில் அவளது பாதம்.. என்பதிலேயே கவனமாக இருந்ததில்.. " ப்ளீஸ் ஸார்.. எனக்கு எதுவும் இல்லை.. விடுங்களேன்..", என்று உருவிக் கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்கவே... அவனுடைய தவிப்பு , அவளது கவனத்திற்கு விழாமலே போனது..

" ரொம்ப வலிக்குதா..", என்று கேட்கவும் தான் அவனது முகத்தையே ஏறிட்டாள் .

" உனக்கு எதுக்கு , இந்த வேண்டாத வேலை.. ம்.. எனக்கு பயந்துட்டு உள்ளே ஒளிஞ்சிருந்தா.. உன்னை தேடி நான் வர மாட்டேனா.. நீ செஞ்ச வேலை.. எங்க போய் முடிஞ்சிருக்கு பாரு.. நல்லா சிவந்து போச்சு.. ரொம்பவே எரியுதா..", என்று அவளது பாதத்தையே பார்த்தவனாக , இருந்ததை பார்க்கவும் அதிர்ந்துவிட்டாள் .

" மி.. மித்..ர..ன்.. ஸா..ர்.. எனக்கு ஒன்னும் ஆகலை..", என்று திக்கித் திணறவும்..

" புடவைய மாத்து.. ரொம்ப ஈரமா இருக்கு பாரு.. உன்னால நிக்க முடியுமா.. இல்ல.. நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா..", என்று இயல்பாக கேட்டதற்கு..

" இல்லை.. இல்லை.. அதை.. அதெல்லாம்.. நானே பார்த்துக்குறேன்.. ", என்று அவள் பதறியதில்.. மின்னல் வெட்டியவனாய் நிமிர்ந்து பார்த்திருந்தான் . அதன் பிறகே , தன் தவறு புரிந்தவளாய் .. அதிர்ந்து விழிக்க , அவளிடம் வம்பு செய்ய தோன்றியது..

" ஏன்.. நீ நடக்கவே கஷ்டப்படுற.. நீ சுடி சேன்ஞ் பண்ணினா.. காயத்தில உரசாதுல்ல.. ", என்றான் .

" ஆ..ங்.. ஆமா.. நா..னே..", என்று தந்தியடித்தவளாய்..

" எப்படி..", என்று ஒற்றைக் கன்னத்தை உள்ளுக்குள் கடித்துக் கொண்டு மெதுவாக அவளை நெருங்கிக் கொண்டிருக்க.. அப்படியே , பின்னே நகர்ந்ததில் படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே விழுந்துவிட்டவளை.. இரு கைகளையும் , மெத்தையில் ஊன்றி.. அவளை தீண்டாமல் வளைத்துக் கொள்ள.. மூச்சு விடவும் மறந்தவளாய்..


Continue Reading

You'll Also Like

23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
56.3K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...