வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா..வா.. என் அன்பே - 36

2K 38 31
By kanidev86

பகுதி - 36

சரணிற்கு கட்டுப்பட்டவளாய்.. உடனே , கிளம்பியிருந்தாலும்.. தாய் தங்கையின் புகைப்படத்திற்கு முன் நின்று கண்ணீர் வடித்தவளுக்கோ , காலை மாலை.. தீபம் ஏற்றவும் இயலாதோ.. என்று எண்ணம் எழுந்தாலும்.. அவனிடத்தில் , அதைப் பற்றி கூறுவதற்கோ.. இல்லை எடுத்துச் செல்வதற்கும் தைரியம் அற்றவளாய்.. ஏக்கமாக பார்த்தவாறு நின்றிருக்க.. அழுத்தமாக , நின்றிருப்பவனுக்கும் .. அவளுடைய மனநிலை நன்கு புரிந்தே இருந்தாலும் , அமைதியாக  நின்றிருந்தான் .

சாந்தியிடம் நெருங்கியவள்.. "அக்கா.. பாத்துக்கங்க.. நான் போயிட்டு வரேன்.. க..க..பி..ல.ன்.. எங்க.. காலையில் இருந்து பாக்கவே இல்லையே.. கடைக்கு போயிருக்கானா.. ", என்று விம்மி வெடிக்க காத்திருக்கும் அழுகையை அடிக்கியவளாய்.. விழிகளை சுழற்றி கேட்டிட.. சரணின் அழுத்தம்.. மட்டுப்பட்டிருந்த கோபத்தை.. கிளப்பிக் கொண்டிருந்தது ரிச்சர்ட்டிற்கு.. அவனிடம் தன் முறைப்பையும் காட்ட இயலாதவனாய்.. வேகமாக , இருவருக்கும் இடையில் நுழைந்தவனாக.. " தாமரை.. இன்னும் எத்தனை நாளைக்கு அவனை ஸ்கூல்லுக்கு லீவு போட சொல்ல முடியும்.. அதுனால , காலேலையே விட்டுட்டு வந்தாச்சு.. நீ மொத்தல்ல நல்ல படியா கிளம்பு.. நாங்க பார்த்துக்குறோம்.. உனக்கு எதுனாலும் நாங்க இருக்கோம்ங்கறதை மட்டும் மறக்க வேணாம்.. புரிஞ்சதா..", என்று மிக மிக அழுத்தமாக உள்ளடக்கிய குரலில் கூறியவன்.. கடைசி வாக்கியத்தை.. சொல்லும் பொழுது , எவ்வளவு முயன்றும்.. தன் சினத்தை மறைக்க முடியாதவனாக.. தீப்பார்வையை சரணிடத்தில் வீசியவனாக கூறிட.. தன் தெனாவட்டான அலட்சியப் பார்வையை மட்டும் கைவிடாதவனாக அவன் நின்றிருந்ததில்.. மேலும் அவனுள் உஷ்ணத்தை கிளப்பிக் கொண்டிருக்க.. இது எதுவும் , அவள் கண்களில் விலாமலே போனது..

தொடர் ஷூட்டிங்கில் இருந்து வந்ததால் உதய்தாரா நல்ல உறக்கத்தில் இருக்க.. தொல்லை பேசியாய் அலைபேசி மாறி.. விடாமல் அடித்து அவளை எழுப்பியது.. அதிக உடல் சோர்வு , அவளுக்கு பிடித்த அந்த பாடலின் சத்தமும் முதலில் எட்டாமல் போனதில் வியப்பில்லை . ஆனால் , அழைத்துக் கொண்டு இருந்தவனின் பொறுமை எல்லையை கடந்ததில்.. அவனுடைய அலைபேசி முழுமையாக அணைக்கப்பட்டிருந்தது .

கடைசி நொடியில் , தூக்கக் கலக்கத்தினோடே.. எடுக்க.. எவ்வித சத்தமும் இல்லை . அதில், நன்கு தெளிந்து , அழைத்தது யாரென பார்த்த நொடியிலேயே.. உறக்கம் எங்கோ தொலைந்து , மீண்டும் அதே எண்ணிற்கு அழைத்தாலோ.. ஸ்விட்ச் ஆஃப் என்ற அறிவிப்பு திவ்யமாக வர.. படுக்கையில் சம்மனமிட்டு தலையில் கை வைத்தவளாய் அமர்ந்துவிட்டாள் .

" இவனுங்க பஞ்சாயத்து பெரிசால்ல இருக்கு.. பக்கிக்கு சரணோட தகராறுன்னா.. மட்டும் என்னை தேடி வரும். இல்லேனா திரும்பியே பாக்காது.. எருமை.. எருமை.. ஒருத்தி பைத்தியமா சுத்த வைக்கிறோமேன்னு கொஞ்சமும் நினைப்பு இல்லை..", என்று பொறுமியவளாக இருந்தாலும்.. மீண்டும் மீண்டும் ரிச்சர்டின் எண்ணிற்கு.. முயற்சி செய்துக் கொண்டே இருக்க.. அவனை போலவே.. அவன் அலைபேசியும் இரக்கமற்றதாக செயல்படாமல் இருந்தது .

தாமரையை தனித்து விட்ட சரணின் செயலால்.. அவளுக்கும் அவன் மீது  கழுத்தளவிற்கு கோபம் இருப்பதால் , அவனுக்கு முயற்சி செய்யவில்லை .

ரிச்சர்ட்டின் அலைபேசி உயரற்ற நிலையில் இருக்கையில் , அதன் பிறகு.. தூக்கமாவது.. மண்ணாவது என்று சாந்திக்கு அழைத்திருந்தாள்‌.காதில் அவர் பொருத்தியுடனேயே , ரிச்சர்ட்டிடம் கொடுக்கச் சொல்ல.. திண்ணையில் விட்டத்தை வெறித்தவனாக கிடந்தவனிடம் கொடுத்துவிட்டு மறுபேச்சில்லாமல் நகர்ந்திருந்தார் . தான் பெற்ற மக்களாக நினைத்து வளர்த்த இரு பிள்ளைகளுக்கும் வாழ்க்கை சிறப்பாக அமைதிருப்பதாக நினைத்து உள்ளம் குளிர்ந்தவராய்.. அகமகிழ்ந்திருந்தார் . கணவன் மனைவியாக சரண் தாமரையின் நிலை நேராகி  இருக்க.. கூடிய விரைவில் ரிச்சர்ட்டும்.. தாராவோடு இணைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்தவராக.. உள்ளே மறைந்திருந்தார் .

ரிச்சர்ட்டிற்கு.. சாந்தியின் அலைபேசியில் அவள் அழைத்ததில் மனம் நிறைந்திருந்தாலும் , வெளியாடாதவனாய்.. மௌனத்தை சாதிக்க.. சில நொடிகள் , அவன் குரலுக்காக காத்திருந்தவளுக்கோ.. அது கிடைக்காமல் போகவும்.. " என்னை என்னடா பண்ண சொல்ற.. போன் போட்டு எடுக்கறதுக்குள்ள.. கட் ஆயிடுச்சு..  திரும்ப கூப்பிட்டா ஸ்விட்ச் ஆஃப்.. உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்.. இதோ, சாந்தியக்காக்கு கால் செஞ்சுயிருக்கேன்.. ஹலோன்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போயிடுவ.. ஏன்டா , இப்படி பண்ற.. ஏர்லி மார்னிங் தான் ரிட்டன் ஆனேன்.. டையர்ட்ல.. நல்லா தூங்கீட்டேன் போல.. நீ கூப்பிட்டு நான் எடுக்காம இருப்பேனா.. பேசேன்டா.. இவ்வளவு தூரம் சொல்றேன்ல.. எதாவது பேசேன்டா.. பேசக் கூடாதுன்னு நினைக்கிறவன்.. எதுக்கு என்னை கூப்பிட்ட.. என் தூக்கத்தை கெடுத்த.. பேசு ரிச்சர்ட்..    ஒவ்வொரு தடவையும், நான் உன்கிட்ட கெஞ்சீட்டு  இருக்கறதும்.. நீ  அலட்சியம் காட்டறதும்.. எனக்கு அழுகையா வருது டா.. ஏன்டா கூப்பிட்ட.. இப்ப என்னை ஏன்டா புலம்பவிடுற.. நான்‌..",

" உ..த..யா.. நான் கொஞ்ச நேரத்தில ஊருக்கு கிளம்புறேன்..", என்றான் தகவலாக..

" ஊருக்கா.. ஏன்.. தாமரை.. தாமரை எங்க.. அவ எப்படி தனியா இருப்பா..",  என்று இப்பொழுதும் மூச்சுவிடாமல் கேள்வி தொடுத்தவளின் செயலில் மெல்ல இதழ்கள் விரிந்திருந்தாலும் , 

"எதுக்கு உன் ஃப்ரெண்ட் இருக்கான்.. அப்ப அப்ப எதையாவது கிளப்ப மாட்டான்.. ", என்று பல்லை கடித்துக் கொண்டு கூற..

' ரைட்டு.. இவன் என்னத்தை செஞ்சான்னு தெரியலையே.. எதையாவது பண்ணித் தொலைச்சு என் வாழ்க்கைல சங்கு நல்லா ஊதுறான்..' என்று மெதுவாகவே அவள் முனங்க தெளிவாகவே அவன் காதுகளிலும் தப்பாமல் விழுந்தது. அவள் கூறிய விதத்தில் சத்தம் இல்லாமலும் நகைக்க செய்திருந்தது . அவனை கட்டுப்படுத்தியவனாக சிரித்ததாலோ என்னவோ , விழிகளிலும் நீர் வழிந்திருந்தாலும் ,

" என்ன முனங்குற சத்தமா பேசு ", என்று அதட்டல் போட்டவனிடம்..

" இந்த ஜம்பம் எல்லாம் என்கிட்ட தான்.. எங்க அவன்ட்ட வாயை தொறக்கறது..", என்று இப்பொழுது சத்தமாகவே மொழிய..

இதுவரை இருந்த இதம் தொலைந்தவனாய்.. , " ஏன்.. நான் அவனுக்கு பயந்துட்டு இருக்குற.. *** பையன்னு நினைக்கிறியா..", என்று நறநறவென தன் பற்கள் அரைப்பட கேட்டதில்.. முழுதாய் திகைத்தவள்..

" இப்போ நான் என்ன சொ..சொ..ன்..னேன்.. இ..ப்..படி எல்லாம்.. பேசுறீங்க.. ரிச்சர்ட்..", என்று தாராவின் குரல் உடனே தளுதளுக்க.. அவனுக்கே அவனுடைய பேச்சு அதிகப்படியாக தோன்றினாலும், அழுத்தமாக கண்களையும் வாயையும் மூடியவனாய் நின்றிருந்தான் . யார் மீதோ இருக்கும் கோபமும் இயலாமையும்.. அவளிடத்தில் தன்னை மீறி வெடித்திருப்பதை உணர்ந்தே இருந்தாலும்.. மௌனம் சாதித்தவனாய்.. ' ஏன் நான் இப்படி தான்னு இவளுக்கு தெரியாதா.. தெரிஞ்சுதான பேசுறா.. அப்புறம் என்ன..', என்று மனதில் நினைத்ததை.. வார்த்தைகளாவும் வெளியிட.. சிலகணங்கள் அவள் பக்கம் சத்தமே இல்லை .

அந்த மௌனம் அவனையும் படுத்தியிருக்கும் போலும் , "உதயா.. ", என்று உயிரை தீண்டும் குரலில் அவன் அழைக்க.. தன் மனதில் உதித்த வினாவை மறைத்தவள்.." ம்.. சொல்லுங்க ரிச்சர்ட்..  ",

தயக்கம் எழுந்தாலும் , அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாமலேயே அழைத்துவிட்டான் .. ஆனால், இவ்வளவு பேசிய பிறகு..  உன்னை காண என் கண்களில் ஏக்கம் வழிகிறது.. என் நெஞ்சம் துடிக்கிறது என்று எப்படி கூறுவான் .

" அது.. தாமரைய பத்திரமா பார்த்துக்க..", என்று கூறி முடிப்பதற்குள்ளேயே.. வியர்த்து விட்டது.. எந்த உரிமையில் நீ இதை என்னிடம் கூறினாய் என்று கேட்டுவிடுவாளோ என்று அச்சம் பிறந்ததில் . தாராவிற்கு அந்த சிந்தனை எழாமல் இல்லை.. ஆனால், அதை அவனிடத்தில் கேட்டு.. இருக்கும் இதத்தை கெடுத்துக் கொள்ள விரும்பாதவளாய்.. தன் மனதிற்குள் நுழைய அனுமதித்தவன்.. அவளிடத்தில் ஏற்றுக் கொள்ள மறுப்பதில் காண்பிக்கும் பிடிவாதத்தின் காரணத்தை தான் அவளால் அறிந்துக் கொள்ளவே முடியவில்லை .

சரண் தாமரை திருமணத்தன்று அவள் மடி சாய்ந்து ஆறுதல் தேடிய பின்பு இருந்து.. அதுபோல் , நெருங்காத போதும்.. முகத்தை திருப்பியதும் இல்லை . தன் காதலை கூறிய பின் , ஏற்றுக் கொள்ளாத போதும்.. பாரீஸில் முகம் காணவும் மறுத்தது போல் நடந்துக் கொள்ளவும் இல்லை . இருவருக்கும் , இடையில் இருக்கும்    ஏற்ற தாழ்வை நினைத்து ஒதுங்குகிறான் என்று தெளிவாய் புரிந்தே இருந்தாலும்.. அந்த ஒன்று மட்டுமே‌‌.. காரணமாக இருக்கிறது என்று நினைக்கவும் முடியவில்லை.. வேறேதோன்று.. அவனுள் ஆழப் புதைந்துக் கிடக்கிறது.. என்றும் புரியாமல் இல்லை .

இவை அனைத்தையும் மீறி சில நேரங்களில் அவன் தன்னை தேடுவதிலேயே , அதிக மகிழ்ச்சியில் திளைத்திருப்பவளுக்கு.. கெடுத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லை . அனைத்தும் மனதிற்குள் ஓடினாலும் , " சரண் வந்தானா.. தாமரைய.. கூட்டீட்டு போயிட்டானா.‌.. இல்ல.. அங்கிள் வந்திருந்தாரா..", என்று நிலமையை அறிய கேட்டிட..

நேற்று முதல் நடந்ததை அனைத்தையும் மென்குரலில் பகிர்ந்துக் கொண்டவன்.. " எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரில உதயா.. அவருக்கு நம்ம தாமரைய ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா, அதை  அவ புரிஞ்சுக்கிட்டாளா இல்லாயான்றதுல தான் குழப்பமா இருக்கு.. நானும் இல்லேனா.. ",

" அவன் பொண்டாட்டிய.. அவன் பத்திரமா பார்த்துக்குவான்.. நீங்க கவலை படாம.. உங்க வேலைய பாருங்க.. நானும் பாத்துக்குறேன் போதுமா..", என்று ஆறுதல் மொழிகளை உதிர்க்க..

" ம்..", என்றான் .

" வேற என்ன..", என்றவள் எதிர்ப்பார்ப்பாய் கேட்க

" உன்னை பார்க்கனும்..", என்று சொல்ல துடித்த நாவை கட்டிப்போட அரும்பாடுபட்டவனாய்.. "பார்க்கணும்னு.. ஒரு வார்த்தை சொல்லுடா..", என்று அவளும் மனதோடு தவித்துக் கொண்டிருந்தாள் .

" வேற ஒன்னும் இல்லை.. வைக்கவா..", என்று குரல் கரகரத்து வெளி வந்திருந்ததோ..  " ம்..", என்றதோடு அணைத்தவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது . அவன் அவளை தவிர்க்கிறான் என்பதை காட்டிலும்.. தவிப்பில்.. தன்னைவிட அதிகம் துடிப்பவனும் அவனாகவே இருக்கிறானே என்று காதலனின் நிலையை துள்ளியமாக கணித்தவளாய்.. மௌனமாய் கண்ணீர் சிந்தினாள் .

தன் நான்கு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சரணோ , சாலையின் மீது ஒரு கண்ணும்.. கதவோடு கதவாக ஒட்டிக் கொண்டு வந்தவள் .. கண்ணீரை தெரியாமல் துடைப்பஉதாக நினைத்து துடைத்துக் கொண்டிருந்தவளின் மீது ஒரு கண்ணுமாய் தன் பற்களை கடித்துக் கொண்டே வந்தான் . அவன் சினத்திற்கு தடைவிதித்தவளாய் தாரா அழைக்க , ' அவனுக்கு தான் வேற வேலை இல்லேனா.. இவளுக்கும் இருக்காது..' என்று முனங்கியவன்.. அழைப்பை ஏற்காமல் இருந்திடவே நினைத்தான் . ஆனால் , மகிழூந்துவையே மிதக்க வைத்துக் கொண்டிருப்பவளிடம்.. அடக்க முடியாமல் எங்கே வெடித்துவிடுவோமோ என்று அஞ்சியவனாக.. தாராவிடம் பேச முடிவெடுத்து அழைப்பை ப்ளூடூத்தில் ஏற்றவுடனே..

" ஒரு மணிக்கு கிளம்பீடுவான்.. போய் ஏர்ப்போர்ட்ல பாரு..", என்றவன் ஹலோ என்பதையும் சொல்லாமல் ஆரம்பிக்க..

" ஆமாண்டா நல்லவனே , இதெல்லாம் நல்லா வக்கணையா சொல்லு.. ஆனா , ஏன்டா எங்களை இந்த பாடுபடுத்துற.. சத்தியமா முடியலை சரண்..", என்று நொந்தவளிடம்..

" நான் என்ன செஞ்சேன்..", குறுநகை அதரங்களில் குடியேறி கேள்வி கேட்டதில்..

" நீ என்ன பண்ணல.. இல்லை.. இப்ப என்ன பண்ணாம இருக்க.. முழுசா எங்க எல்லோரையும் சட்டையை கிழிச்சு அலைய விடாம நீ அடங்கவே மாட்டியா டா..", என்று நிறுத்தாமல் தொடர்ந்துக் கொண்டே போனவளை..

" தாரா.. அவனை குதற முடியாததுக்கு.. என் மேல பாயாத‌‌.. சரியா.. இப்பவே நீ கிளம்பினாதான்.. டிங்கரிங் பெயிண்டிங்.. இதுல ரிச்சர்ட்ட பாக்கறதுக்காக.. எக்ஸ்ட்ரா.. பாலீஷ் வேற போட்டு கிளம்புறதுக்கு சரியா இருக்கும்.. போ.. போ.. அவனை உன் மேக்கப் லெஸ் முகத்தை காட்டி பயமுறுத்தாம.. ஓடு.. ", என்று தன் கேலியை நிறுத்தாமல் தொடர்ந்தவனாய் லாவகமாக வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்க.. கேட்டுக் கொண்டிருந்தவளின் நிலைதான் மேலும் , சுழற்றிக் கொண்டே போனது .

' இவிய என்ன சொல்றாவ..', என்று மனதோடு அலறியவளாய்..
தாராவை ரிச்சர்ட்டோடு இணைத்து வைத்து பேசியது தலையை கிறுகிறுக்க வைத்தது.. ' இது என்னடா புது குழப்பம்.. தாராக்கா.. அண்ணாவை விரும்புராவளா..',  என்று அழுகையால் துடித்துக் கொண்டிருந்த.. விழிகள்.. இப்பொழுது , யோசனையை தாங்கியிருக்க.. ஓரவிழியால் மனைவியை கவனித்தாலும், தோழியோடு, தொடர்ந்து வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான் .

அவளோடு உரையாடி முடித்த பின் , தயக்கம் எழுந்தாலும்.. என்ன நடக்குது.. அண்ணனிடத்தில் இருக்கும் அளவுக்கதிகமான அக்கறையே.. தயக்கத்தை உடைத்து அவனிடத்தில்  "அண்ணா.. தாரா அக்காவை விரும்புறாங்களா.. ஸார்.. ", என்று தைரியமாக.. கேட்டேவிட்டாள்  .

முறைப்பை வழங்கி , வாயே திறக்காமல்.. வண்டியை இயக்கி கொண்டிருக்க.. மீண்டும் அவளது அதரங்கள் அதே கேள்வியை உதித்திக்கவும்.. " அண்ணீன்னு சொல்லு டீ.. அண்ணா அக்காவை காதலிக்கரானான்னு இதுல கேள்வி வேற..", என்று காலை முதல் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று காத்துக் கொண்டிருந்தவனுக்கு.. அவளது கேள்வியே  வழிவகுத்து , அளவிற்கு அதிகமாக எகுறத் தூண்டியது .

இதில் போதாக் குறைக்கு.. ரிச்சர்ட்டின் வார்த்தைகள் வேறு தூபம் போடுவது போல் அமைய.. எப்பொழுதும் போல் , அவளிடத்தில் கத்தத் தொடங்கிவிட்டான் . மேலும் , என்ன பேசியிருப்பானோ.. வீடு வரவும் இருவரும் அத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களாக.. இறங்கினார்கள் .

அன்று சென்றவன்.. அதன் பிறகு தாமரையுடன் வந்திருக்கிறான் . மிளா துயரத்தில அவள் ஆழ்ந்திருந்த போது அணைத்து ஆறுதல் அளிக்க வேண்டியவன்.. அவள் அருகே நெருங்காமல் இருந்ததோடு அல்லாமல்.. அவள் வீட்டிற்கு அதன் பிறகு போகவே இல்லை..  ஆனால், இன்றோ.. அவளுடன் நுழைகிறான் .   இவன் நடப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குடும்பத்தவர்கள்.. தடுமாறி திகைத்து நின்றுவிட்டார்கள் ..

எதைப் பற்றியும் அக்கறையோ கவலையோ படாமல்.. வீட்டில் விட்டவுடனேயே வேலையை பார்க்க சென்றுவிட்டான் . அதன் பிறகு , வீடு திரும்பியது.. இரவு வேளையில் மட்டுமாக..

சரணிற்கோ , " ச்சை.. எவ்வளவு வேகமாக வேலைய முடிச்சாலும்.. மணி பதினொன்னு ஆயிடுச்சு..", என்று மனதிற்குள்ளே சலித்தவனாக.. நடுவிரலில் தன் கார் சாவியை சுழற்றவாறே மாடியேறி தங்களது அறைக்குள்.. ஆர்வத்தோடு நுழைந்தால் , அத்தனையையும் தண்ணீர் ஊற்றி அணைத்திருந்தாள்.. அவனுடைய பாப்பா.. எப்பொழுதும் போல் தரையில் படுத்து உறங்கியவளாய்.. கீழே தன் மனைவியை காணவும்.. மேலே பார்வை எழுந்து சுவற்றைப் பார்க்க.. மீண்டும் தன்னவளை அசையாது பார்த்தவனாய்.. பல கனவுகளோடு , தாமரையின் காத்திருப்பை எதிர்ப்பார்த்து வந்தவனின் உணர்வுகள் அத்தனையும் அழித்திருந்தாள் ஒற்றை செய்கையால்...






Continue Reading

You'll Also Like

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...