வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 29

1.5K 35 12
By kanidev86

பகுதி - 29

கோயிலுக்குள் நுழைந்தவள் அவனையும் கவனியாது வேகமாகவே செல்ல.. பல வருடங்களுக்கு பிறகு சரணின் கண்களும் முகமும் தன் உண்மையான சிரிப்பை மீட்டெடுத்திருந்து.. இருக்கும் மனநிலையில் அவனும் அவள் கண்டுக்காமல் சென்றதையும் ரசித்தவனாகவே பின்னோடு , சென்று அவளை நெருங்கி சன்னிதியின் முன் நின்றிருந்தான் .

சரண் மித்ரனின் மனநிலைக்கு மாறுதலான நிலையில் தாமரை இருந்தாள் . அவன் மடியில் அமர்ந்ததில், அவள் உடலில் ஏற்பட்ட குறுகுறுப்பா.. இல்லை வேறெதுவுமா என்று நினைக்க முடியாமல் இருக்க.. எழுந்தருளி இருந்த பெருமாள் மற்றும் மகாலக்ஷ்மியின் அலங்காரத்தில் குழப்பங்கள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டு.. அழகில் லயித்தவளாக ஆழ்ந்துவிட்டாள் . ஐயர் ஆராதணையை நீட்டியவடன் சரண், 500 ரூபாய் தாளை எடுத்துப் போட்டதும்.. அவரின் மனம் குளிர்ந்து வாயெல்லாம் பல்லாக.. அவன் கரத்தில் சுவாமி மேல் இருந்த மாலையை கொண்டு வந்துக் கொடுத்தார்.

இவ்வளவு நடந்த பிறகும், அவளுக்கு கண் திறக்கும் யோசனையே இல்லை போலும்.. லேசாக, அவள் தோளை இடித்து அழைத்தவனை யாரென்று பார்க்க.. மீண்டும் அதிசயத்தை கண்டது போல் விழி விரித்தவளை கொலைவெறியோடு முறைத்தவன்.. " போ.." என்பது போல் சைகை.. முன் நோக்கி காண்பிக்கவும் செய்தான்.

" ம்.." என்று முன்னேறியவளை உரசிக் கொண்டே நடந்தவனின் செயலில்‌‌.. அச்சிறுப்பெண்ணுள் முதல் முறையாக ஒருவித தடுமாற்றம்.. அதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஒவ்வொரு லஷ்மியாக கும்பிட்டு வலம் வந்தவர்கள்,. பெரும்பாலான இடத்தில் ஐயர்கள் இல்லாமல் இருக்க.. மீண்டும் சந்தானலஷ்மியின் சன்னிதியில் ஆராத்தி வழங்கப்பட.. வள்ளல் அவன் மீண்டும் ஒரு இரு நூறு ரூபாய் தாளை.. தட்டில் வைக்கவும்.. அதிக மரியாதை கொடுத்தவர்.. இலவசமாகவே அவளது கரத்தில் இருந்த மஞ்சட் கயிறை கொடுத்து குங்குமத்தையும் வழங்கினார்.

மாலையும் அலைபேசியும்.. ஒருகையிலும் அவர் வழங்கிய குங்குமம் ஒரு கையிலும் வைத்திருந்ததால்.. நெற்றியில் பூசிக்கொள்ள முடியாமல் இருக்கவே.. அவன் கரங்களில் உள்ளதை அவள் முன் நீட்டியவன்..

" வச்சு விடு.. " என்றதில்

" நானா.." என்று தூக்கிவாரிப்
போட நிமிர்ந்தவளை ஒற்றை புருவம் உயர்த்தி வினவவே..

வேகமாக , ஒன்றுமில்லை என்று தலையசைத்து.. வாகாய் குனிந்திருந்தவனின் நெற்றில் குங்குமம் வைத்த ஊதியதும்.. அவள் வைத்திருந்த கரத்திற்கு அவனுடைய குங்குமத்தைணண இடம் மாற்றியவன்.. தயக்கம் சிறிதுமின்றி.. தாமரையின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை.. அவனே  வெளியே  இழுத்து மாங்கல்யத்திற்கும்
அவளது பிறை நெற்றியிலும் வைத்து எதுவும் நடவாவது போல்.. " வா.." என்று முன்னே சென்றுவிட்டான்.

அவன் செயல்கள் அனைத்திலும் திடுக்கிட்டு நிற்பதும்‌.. விழிவரித்து பார்பதுமாய் இருந்தவளின் அழகில் ஆடவனின் மனம் ஏனோ.. அவன் அறியாமலேயே தன்னை தொலைத்தவனாக இருந்தான் . தாமரைக்கு.. குங்குமம் வைத்ததை அந்த இளைய பட்டாளக் கண்களுக்கு விழாமல் போனலும்.. மற்றோரு ஜோடிக்கு தப்பாமல் விழிந்ததில்.. அவர்களுள் இருந்த ஆடவனின் அதரங்கள் புன்னகையை உதிர்த்ததென்றால்.. பெண்ணவளின் கண்கள் முதலில் நம்பாமல்.. பின் விழியை சிமிட்டி.. பார்வையிட.. கிளசரின் இல்லாமலேயே அவளது கண்கள் கண்ணீரை சுரந்திருந்தது .

" இவிய.. என்ன இப்படி யெல்லாம் செய்றாவ.. " என்று மனதோடு அலறிய தாமரையின் அலறல் வெளியே தெரியாவிடினும்.. முகம் காட்டிக் கொடுக்க.. அதில் கொஞ்சம் கடுப்பானவன்.. " ஏய்.. வா டீ.." என்று அதட்டிவிட்டு முன்னே சென்றான் .

" அதான.. ஒரு நிமிஷம் நான் பயந்தே போனே.‌. மித்ரன் ஸாரா இதுன்னு.." என்று நொடித்துக் கொண்டவளாய் பின்னோடு சென்று மற்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கியவளுக்கு.. கடைசியாக பார்வை அங்கிருந்த சிறிய கடையின் பக்கமாக செல்ல.. அவனை பார்ப்பதும் கடையை பார்ப்பதுமாய் இருந்தவளின் செயலில்.. " என்ன.. அங்க போகனுமா.. சரி நீ போயிட்டு வா.. நான் கார்கிட்ட வெய்ட் பண்றேன்.. " என்று கண்களில் உறைந்த புன்னகையுடன் கூறியவன்..

"சீக்கிரமா வந்திடு பாப்பா.. ஆ...." என்று சிரிக்க.. " நா.. ஒன்னும் பாப்பா இல்ல.." மெதுவாகவே என்றாலும் அவளது சிலுப்பல் புன்னகையை வர வழைக்க.‌. சத்தமாக சிரித்தே நகர்ந்துவிட்டான் . தாமரைக்குத் தான் பேருந்தில் இருந்தே அவனது செயல்கள் அனைத்தையும் பார்த்ததுக் கொண்டிருப்பதில் , கிட்டதட்ட மயக்கமே வந்து கீழே விழுந்துவிடுவோமோ என்று இருந்தது .

இவளது நிலையை ஒத்தே.. இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த நான்கு விழிகளுக்கும் அதே நிலை.. ஆனால் தாமரை போல் குழப்பமாக அல்ல.. பூரிப்பால் வரும் மயக்கமாக இருந்தது..

வெளியேறிய சரண்.. தன் மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருக்க.. அவனுடைய பிஏவான வைஷ்ணவிடம் இருந்து பல அழைப்புகள்..

தன் வாகனத்தின் மீதே சாய்ந்து நின்றிருந்தவன்.. முதல் வேளையாக தன் அலைபேசியை எடுத்து.. ஆராய்ந்துக் கொண்டிருக்க , சற்றுமுன் எடுத்த புகைப்படத்தை பார்த்தவனுக்கோ.. உற்சாக ஊற்று..
புகைப்படத்தை எடுப்பதற்காக எப்பொழுதோ முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றியிருந்தான் . உடனேயே  நிறுத்தம் வரவில்லை என்றால் நிச்சயமாக.. ரெட்டைகளுள் ஒருத்தி இனங்கண்டிருப்பாள் .

வைஷ்ணவ் இருக்கவே.. யோசனையின்றி இறங்கியும் விட்டான். கண்டிப்பாக.. இல்லாத கலாட்டாக்களை மச்சீ என்று அழைக்க சொன்னப் பெண் செய்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணிய நொடியே.. தன் அருகே குறும்பு மிளர முகம் கொள்ளா சிரிப்போடு.. கல்லூரி கால வயதிற்கே உரிய துள்ளலுமாய் நின்றிருந்தவளின் அழகு.. அவ்வளவு எதார்த்தமாக இருந்தது .

மடியில் விழ வைத்ததில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளாய்.. இருந்த நிலையில் இருவர் மட்டும் நன்கு தெரியுமாறு இருக்க.. அதை உறைந்த புன்னகையுடன் எடிட் செய்துக் கொண்டிருந்தான்.. தாமரை வெளி வந்தவள்.. அவனை நெருங்கிய பின் இவர்கள் கிளம்பிச் செனறவனுடனேயே, கதைத்தவாறு நுழைந்தார்கள்.. அந்த கல்லூரிப் பட்டாளம் .

காரில் ஏறியதில் இருந்து , சரணின் முகத்தையும் பாராமல் வந்தவளை.. இமையையும் சிமிட்டாமல் நோக்கியவனாக வந்தவன்.. அவளது குழப்பமான மனநிலையை தெளிவாக தெரிந்துக் கொண்ட போதிலும்..

" ஆமா... எங்க போயிட்டு வர.." என்று திடீரென்று அவன் குரல் ஒலித்ததில்.. தூக்கிவாரிப் போட்டு நிமிர்ந்தவளாய் அவனை பார்க்க.. எழுந்த சிரிப்பை உதட்டிற்குள் மறைத்தவனாய்.. மிகவும் தீவிரமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதில்.. குழப்பம் மறைந்து பயம் வேகமாக படையெடுக்க.. அதே வேகமாக அவனை ஆராய்ந்தவளுக்கோ.. ஏமாற்றமே பரிசாய் ... முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளியிடாதவனாய் அமர்ந்திருந்தான் .

கடினமான கேள்வியை கேட்டு பதில் தெரியாமல் திருதிருக்கும் மாணவர்களின் நிலையில் இருந்தாள் தாமரை.. அவள் முகத்தில் சட்டென்று வெளிறிய விதத்தில்.. அழுத்தமான பார்வையை பதிக்க.. சிக்குண்டவளுக்கோ.. பதில் சொல்லாத வரை விடவே மாட்டேன் என்று தெரிந்த பின்.. பல தயக்கங்களுக்கு இடையில்.. சில நிமிடங்கள் அமைதியை சொந்தமாக்கியவள்.. அவனுடைய பொறுமை எல்லையை கடக்கப் போவதற்கு அடையாளமாக..

"இப்படி பேசாம இருந்தா.. என்ன அர்த்தம் தாமரை.. " என்று அழுத்தமாக.. மாறுப்பட்டு அவன் குரல் ஒலித்ததிலேயே.. தன் வாய் பூட்டை அவிழ்த்துவிட்டாள் .

" தெரிஞ்சவிய ரிசப்ஷனுக்கு.. மணப்பெண் அலங்காரத்துக்கு.. ஏற்கனவே ஒத்துக்கிட்டேன்.. அதுனால , ம்..ம்.. நாளைக்கு தான் கல்யாணம்.. போகணும்.. அத்தட்ட சொல்லீட்டு தான் வந்தேன்.." என்று மென் குரலில் கூற..

" நீ ப்யூட்டிஷியன் படிச்சு இருக்கியா.." என்றான்.. அவளைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆர்வம் பளிச்சிட்டதோ..

" ம்.. ம்ஹும்.. சும்மா.. ஆறு மாச கோர்ஸ் போயிருக்கேன்.. ஆனா மா.. ம்.. க்கும்.. ப்யூட்டி பார்லர்ல.. வேலை பாத்திருக்கேன்.." என்று முடிப்பதற்குள்.. அந்த ஏசி காரிலும்.. வியர்த்து வழிந்தது.. தன்னை அறியாமல் மான்சியிடம் வேலை பார்த்துள்ளேன் என்று கூறப் பார்த்தாளே.. அவளுக்கும் அவனுடைய இந்த இணக்கமான நெருக்கம் தேவைப்பட்டது போலும்.. அதை இன்று கெடுத்துக் கொள்ள விரும்பாமல்.. தவிர்த்து விட்டாள் .

கேட்டுக்கொண்டு வந்தவனின் முகத்தில் இருந்து எவ்விதமா உணர்ச்சிகளும் தென்படவில்லை.. அவன் என்ன நினைக்கிறான் என்பதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.. மீண்டும் அவன் ஏதோ கேட்பதற்காக வாய் திறக்கும் வேளையில் அலைபேசி அழைப்பு வர இருவரின் பேச்சு பேச்சும் தடைப்பட.. சரணின் முழு கவனமும் அதில் இருக்க நேரிட்டது. மெதுவாக , வேடிக்கை பார்க்கும் நினைப்பில் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டாள்..

தன் அலைபேசியில் கவனமாக இருந்தவன்.. முடித்து அவளை பார்க்க.‌. நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.. மென்னகை உதயமாக வந்தவனை.. அவளது செல்பேசி தீண்டிட.. அதிலும் கலையாதவளாய்.. தூங்கிக் கொண்டிருந்தாள் .

மெதுவாக , அவனே கைப்பையில் இருந்து எடுக்க.. மயூரி அழைத்திருக்கவே.. அழைப்பை ஏற்றான்.. ஹலோ என்றும் கூறாமல் " தாமரை எங்க இருக்க நீ.. மூனு மணிக்கே கிளம்பீட்டேன்னு சொன்ன.. " என்று பதற்றத்தை மறைக்க முயன்று முடியாமல் கத்திக் கொண்டே போக..

" மாம்.. ஷீ இஸ் வித் மீ.. நீங்க என்ன உங்கள நம்பி அவளை விட்டுட்டு போனா.. மிரட்டியே பயப்பட வச்சு இருக்கீங்க.." என்று கேலியாக சரண் குரல் ஒலித்ததிலேயே திகைத்தவர்‌‌..

"சரண்.. தாமரை எங்க.. நீ ஏன் அவ போன் பேசுற..",என்றார்

" மாம்.. அவ நல்லா தூங்குறா.. நம்ம வீட்டுக்கு வந்திட்டு இருக்கோம்.. நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன்.." என்று சிரிக்க..

" வேற.. வேற.. ஒன்னுமில்லையே..",  என்று கேட்டதில் அவனுக்கே.‌. அவன் மாற்றத்தின் மீது சிறு வெறுப்பு..

" மாம் நத்திங்.. வழில அவள பார்த்துட்டேன்.. அதுனால சேர்ந்தே நானும் அவளும் கோயிலுக்கு போயிட்டு வரோம்.. வீட்டு வந்துட்டு இருக்கோம்.. எனக்கு ஒரு ஃபோன் கால்.. பேசீட்டு திரும்பா பார்க்கதுக்குள்ள.. தூங்கீட்டு இருக்கா.. மொபைல் அடிக்கறதும் தெரியாம தூங்குறா.. வேணா எழுப்பி கொடுக்கவா.. " என்றான்

" ம்.. வேணாம்.. நல்லா தூங்கட்டும்..  சீக்கிரமா வந்திடுவீங்களா.."

" மேக்ஸிமம்.. 30 மினிட்ஸ் மாம்.. " என்று பதில் அளிக்கவும் விடைப் பெற்று வைத்தார் .

மயூரி அவனிடம் எதையும் வெளிப்படுத்தாத போதும்.. அவர் உடைந்தது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது.

வீட்டை  அடைந்ததில் வாகனம் நின்ற பின்னும் அவளுக்கு உறக்கம் கலைந்திருக்கவில்லல  , மிக நெருக்கமாக அமர்ந்து அவளது முகத்தை பார்த்தவனுக்கு.. குழந்தை போல் வாய் திறந்து.. தூங்குபவளை என்ன செய்தால் என்று தோன்றியதில்.. தன் கரத்தால் அவளது கன்னத்தை மெதுவாக தட்டியதில் விழித்தவள்.. மிக அருகே குறும்பு பார்வை வீசியவனாய் அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு மூச்சடைக்கும் உணர்வு..

சரணின் கண்களும்.. ஆண்மை நிறைந்த மீசையின் அழகும்.. அதிகம் ரசிக்கத் தூண்டிட.. அவனிடமிருந்து வெளி வந்த டியோடரன்ட் நறுமணமும்.. நாசியை தீண்டி.. ஒருவித உணர்வை கிளர்த்தெழச் செய்ய..  உடனே தன் பார்வையை தழைத்துக் கொண்டவளின் செயலில் , மனதிற்குள் சிரிப்பை அமிழ்த்தியவனாக, " இறங்குற ஐடியா இல்லையா.." என்றான் .

ம்.. என்று அடித்துப் பிடித்து திரும்பியவள்.. அவனை உரசிக் கொண்டிருப்பதும் பொருட்படுத்தாமல்.. கதவை திறக்க முயல.. அது திறப்பேனா என்று இருந்தது. அதற்கு மேல்  முடியாது என்பது போல் , அவள் கரத்தின் மீதே கை வைத்து லாக்கை ஓபன் செய்தவன்.. "இறங்கு.. " என்றவனுக்கும் அவன் குரல்தானா.. இது என்பது போல் கறகறத்திருக்க.. ‌ பின்னங்கழுத்தில் அவனுடைய மூச்சு காற்று.. பட்டு தெறித்துக் கொண்டிருந்த போதும் நகராது   இம்சித்துக் கொண்டிருந்தவனின் செயலில்.. பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடி மறைந்தவளை பின் தொடர்ந்து வந்தது.. அவனுடைய வெடிச் சிரிப்பு.

அவர்களின் வரவிற்காக , அமர்ந்திருந்த மயூரியின் கண்களிலும் அவளது ஓட்டம் விழ.. பதற்றத்தோடு எழுந்தவரின் செவிகளையும் சரணின் சிரிப்பு தீண்டிட , அப்பொழுது தான் முழுமையாக கவனித்தார்.. தாமரையின் வெட்கம் கலந்த பதற்றத்தையும்.. சரண் முகத்தில் இருந்த விகாசிப்பையும்.. அடுத்தகணம் இருவரையும் கண்டுக் கொள்ளாதவர் போல் சிறு தலையசைப்புடன்.. வேலைப்பார்ப்போரிடம் வேலையை ஏவுவது போல் நகர்ந்துவிட்டார்.

மாடி ஏறி.. வந்தவளுக்கு பதட்டம் இன்னும் மிச்சம் இருக்க.. எப்படி குறைப்பது என்று தெரியாமல்.. நகத்தை திண்றுக் கொண்டிருநுதாள்..‌ கதவை தாளிடும் சத்தத்தில்.. பதறி திரும்பியவளின் அருகே, அழுத்தமான கால் தடங்களோடு நெருங்கியவனாக.. சரண் வர.. தாமரையோ.. ' நாளைக்கு போகக் கூடாதுன்னு சொல்லிட்டா.. என்ன செய்ய.. ', என்று கிலி படர ரேக்கின் அருகே நின்றிருந்தாள் .

சரணின் காலடி முன்னேற்றத்தோட இருக்கவே , தாமரையின் அடிகளோ அவளையும் மீறி.. பின்னோக்கி செல்ல.. இருவருக்கும் மயிரிழை இடைவெளி இருக்கையில்.. மேலும்  பின்னே சென்றவள்.. ரேக்கின் மீதே தலை மோதி நகர்வதற்கு தடை ஏற்பட.. மிரட்சியான கண்களால் கவரப்பட்டவன்.. குதூகலித்து மேலும் அவளை சீண்டிப் பார்க்கும் ஆசையெழ.. சிறை செய்தது போல் ஒற்றை கரத்தை அவள் பின்னே இருந்த மரச் சட்டத்தின் மீது வைத்ததும் மேலும் அதனோடு ஒட்டிக் கொண்டவளிடம் வம்பு செய்யும் நோக்கில் குனிந்த பொழுது.. இருவருக்கும் இடையில் ஒரு பெரிய கற்றை காகிதம்.. மேல் இருந்து கீழே விழுந்து.. மதியம் முதல் இருந்த மாயை தெளிய வைத்ததில்.. அதிர்ந்து விலகிவிட்டான் .

ஹாய் பிரண்ட்ஸ்,

எனக்கு நல்லா தெரியும், இந்த தடவை பயங்கர லேட் யூ டி போஸ்ட் பண்றதுக்கு ஆச்சு.. அதுக்கு  என்னை மன்னிச்சிடுங்க.. ஆயுத பூஜை வேலை ஹெவியா இருந்ததால என்னால ஆன் டைம்க்கு பண்ண முடியல.. இனி தீபாவளி வேற வந்துரும்.. சோ வீட்டில ஸ்வீட்ஸ் எல்லாம் செய்யனும்.. ஸோ, இந்த மந்த் கொஞ்சம் லேட்டா இருந்தாலும் கன்சிடர் பண்ணுங்க.. மேக்ஸிமம் லேட் ஆகாத மாதிரி பார்த்துக்கிறேன். எனக்கு போஸ்ட் பண்ண எந்த சகோஸ்க்கும் என்னால ப்ராப்பரான ரிப்ளை பண்ண முடியல.. சாரி பார் தட் டூ.. இந்த யூடி எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க‌..

கனிதேவ்💕💕

Continue Reading

You'll Also Like

25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
95.2K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.