வா.. வா... என் அன்பே...

By kanidev86

238K 6.1K 2K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124
வா.. வா.. என் அன்பே - 125
வா.. வா.. என் அன்பே - 126
வா.. வா.. என் அன்பே - 127
வா.. வா.. என் அன்பே - 128
வா.. வா.. என் அன்பே - 129
வா.. வா.. என் அன்பே - 130
வா.. வா.. என் அன்பே - 131
வா.. வா.. என் அன்பே - 132
வா.. வா.. என் அன்பே - 133
வா.. வா.. என் அன்பே - 134
வா.. வா.. என் அன்பே - 135
வா.. வா.. என் அன்பே - 136
வா.. வா.. என் அன்பே - 137
வா.. வா.. என் அன்பே - 138
வா.. வா.. என் அன்பே - 139
வா.. வா.. என் அன்பே - 140

வா.. வா.. என் அன்பே - 28

1.9K 38 11
By kanidev86

பகுதி - 28

அந்த பெண் ஒற்றை கண்ணடித்து.. ' அட முகத்தை ஸார்..' என்று கூறி சிரித்ததில்.. பொங்கிய சிரிப்பை , இரு கன்னங்களை கடித்து அடக்கிக் கொண்டு.. தன் கூலரை கண்களில் இருந்து அகற்றி.. சட்டை பட்டனைகள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொள்ள.. மேலும் அவனுடைய கண்களின் பளபளப்பிலும்.. அந்த கண்ணாடி இடம் பிடித்திருந்த விதத்தில் அவனது அழகு மெறுகேறியது.

ஜன்னலை ஒட்டிக் கொண்டு தாமரை இருக்க.. அவள் அருகே அமர்ந்திருந்தவனோ.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. முன்னிருந்த ஸீட்டின் கம்பியை பிடித்திருந்தவாறு அமர்ந்திருந்தான். மேலும் ஆணும் பெண்ணுமாய் அவன் அருகே அமரந்திருந்தவர்கள் கீழ் இறங்க வேண்டி எழ.. அந்த பின்னிருக்கையில் தற்பொழுது.. அவர்கள் இருவர் மட்டுமே.

குறும்பு மிளிர்ந்த கண்களை ஏறிட்ட துடுக்கு பெண்ணிற்கோ.. கண்டிப்பாக அவன் முகத்தை பார்த்துவிடும் வேகம்..

" என்ன பாஸ்.. முகத்தை காட்டச் சொன்னா.. கண்ணை காட்டுறீங்க.." என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லியவள்..

" அட.. கண் அழகு எப்படின்னு கேக்குறீங்களா.." என்று அதற்கும் ஒர் அர்த்தம் கற்பித்தவளாய்..

"ப்..ப்..பா... கண்ணழகன் டா.." என்று விஜய்சேதுபதி பணியில் அவர்களுள் மற்றொருத்திக் கூற.. மிகவும் கலாட்டாவை ரசித்தவனாய்.. வாய்விட்டு நகைத்திருந்தான்.

காலியாக இருந்த இடத்தை எப்பொழுதோ.. அவர்கள் நிறைத்திருக்க.. அவன் எதிரே நின்றிருந்த வாயாடிக்கு மட்டும் இடம் இல்லாமல் போனது. சரணின் அருகே அமர்ந்திருந்தாலும்.. கண்ணியமாய்.. விலகி அமர்ந்திருந்த பெண்களினின் செயலால்.. ரசினையை மட்டுமே விதைத்திருந்தது அவனுள். அவனுடைய சிரிப்பை விழிவிரித்து பார்த்திருந்த தாமரையை கண்டதும்.. மிக மிக.. நெருக்கமாக அமர்ந்திருந்த விதத்திலும்.. அவளுக்கு பொறாமையை தூண்டிவிட்டதோ..!

" ஓய்.. பாப்பா எழுந்திரு.. ஓடு.. ஓடு முன்னாடி போய் உட்காரு.." என்று தன் குரலை உயர்த்தி விரட்டியதில்.. பயத்தில் எழுந்தேவிட்டாள்.

" பாப்..பா..வா.. " என்று அவளை பார்த்தவனுக்கும் ,  சுடிதார் அணிந்து.. இரு தோள்களிலும் அதனுடைய ஷால் நேர்த்தியாக இருக்க.. ஒற்றை கைப்பையை இறுக்கிப் பிடித்தவளாய் மிரண்டு இருந்தவளின் கண்களும், இறுதியாண்டில் இருக்கும் பள்ளி மாணவி போலவே இருந்தாள்.

பாவமாக அப்பெண்னை பார்த்த தாமரையோ.. அவன் தடுப்பாய் வைத்திருந்த கையும் காலையும் ஒரு முறை பார்க்க.. " அடிப்பாவி.." என்றே உள்ளுக்குள் அலறியவன்.. அசையாமல் இருக்க..

" ஸார்.. பாருங்க பாப்பா.. உங்கள பார்த்து ரொம்ப பயப்படுத்து.. கொஞ்சம் வழிவிடுங்க.." அப்பெண்ணே , அவளுக்காகவும் கண்னை சுருக்கி.. கைகளை அசைத்து என்று சிரிப்போடு கெஞ்ச..

அதுவரை அமைதியாய் வாய் திறவாமல் இருந்தவன்.. தாமரையிடம் திரும்பி , "பயப்படுறியா பாப்பா.." என்று குறுநகையை அடக்கிக் கொண்டு வினவியவன்.. " நீ வேணா இங்க உட்கார்.. ", என்று மூன்று ஸ்கேல் வைக்கும் அளவிற்கு இடம் அளித்து மேலும் நகர்ந்து.. அவளை உரசியவன்.. "  அக்காக்கு உட்கார இந்த இடம் போதும்.. " என்று அருகே இருந்த பெண்ணையும் நகரச் சொல்லி இடத்தை ஏற்படுத்த..

" அக்காவா.." என்று அவளது அலறல் பேருந்து முழுவது எதிரொளிக்க.. பெரும்பாலானோர் வாய்விட்டு சிரித்திருந்தார்கள்..

" பாஸ் சூப்பர் பாஸ்.. " என்று அவள் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் ஹைஃபை செய்துக் கொள்ள.. அவனை தீப்பார்வை பார்த்தவள்.. சரணிடம் திரும்பி.. "ஹேன்ட்சம்.. அக்கால்லாம் சொல்ல கூடாது.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை.. வருத்தப்பட வைக்கக் கூடாது.." என்று வடிவேலுவை மிமிக் செய்ய.. தன்னை மறந்து சரண் சிரித்ததில்.. நெற்றியில் அடித்துக் கொண்டு இருந்தான் ஒருவன்..

மீண்டும் அவள் வாய் திறப்பதற்குள்.. அவளது அலைபேசி அலற.. " கூஸ் இஸ் தட் பிளாக் ஷீப்.." என்று அதே மாடுலேஷனில் தொடர்ந்தவளை.. பார்த்துக் கொண்டே , " இவ எப்படிடா.. உன்னோடவே பிறந்தா.." என்று ஒருவன் கேட்க.. வியந்து பார்த்தவனிடம்..

" டிவின்ஸ் ஸார்.. " என்றான் வாசு புன்னகைத்துக் கெண்டே

" என்ன.. வைஷூ மாதா.. நீ என்ன சொல்ற.. இல்லையா.. டேய் நாங்க எங்க படையோட புறப்பட்டாச்சு.. திரும்பி எல்லாம் போக முடியாது.. த்தூ.. வெளில சொல்லிக்காத நீயெல்லாம் ஆக்டர் சரண் மித்ரனோட பிஏன்னு.. எத்தனை தடவை உன்னை கேட்டேன்.. பெரிசா பீதுன.. மரியாதையா இன்னைக்கு நாங்க அவர பாத்தே ஆகனும்.. நாளைக்கெல்லாம்.. புளி மூட்டைக்கிட்ட தலைகுனிஞ்சு நிக்க முடியாது.. உன்னை எல்லாம் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்.. இங்க பாருடா.. மரியாதையா.. நா சொன்னத செய் இல்லை திங்கற சோத்துல விஷம் வச்சுடுவேன்.." என்றாள்

" அய்யோ.. டேய்.. வாசு எப்படி டா இவளோட ஒரே வீட்டுல இருக்க.." என்று அலறிய தோழனிடம்..

"இவளோட.. ஒன்னா எங்க அம்மா வயித்துல இருந்தே உசுரோட வெளில வந்துட்டேன்..  வீட்டுல இருக்கறது எல்லாம் ஒரு மேட்டரா.." என்று சாகசம் போல்சொல்லி சிரிக்க..

" இந்த தாக்குதல்.. யாருக்கு.." மென்னகையோடு சரண் கேட்டதும்

" வேற யாரு.. எல்லாம் எங்க அண்ணனுக்கு.. இவளோட போட்டி போடாதன்னா அவன் கேட்டானா.. மாட்டுனான்.. என்னன்னு தெரியலை.." என்று  பதில் அளித்தாலும்..

அந்த பெண்ணின் சுருதி ஏறிக் கொண்டே போக.. " ஏய் தாடீ.." என்று அவளது கரத்தில் இருந்து பிடிங்கிவிட்டான் . புதிய பார்வையாளர்களாக சரணும் தாமரையும் இணைந்ததே இன்றைய தினத்தின் புதுமை..

" பாருங்க.. பாஸ் , இவன நம்பினதுக்கு நடுத் தெருவுல நிக்க வச்சுட்டான் . " என்று உண்மையான கோபமும் தவிப்புமாய் பேசியவளிடம்..

தாமரைக்கோ.. இதுவரை மலர்ந்திருந்த பெண்ணின் முகம் கூம்பியதில் வருத்தம் ஏற்பட்டவளாய்.." என்னாச்சுக்கா.. " என்று  கேள்வி எழுப்ப..

" ம்ச்சு.. பாப்பா.. எங்க காலேஜுக்கு நடிகர் சரண் இருக்காருல்ல கூப்பிடனுன்னு எங்க.. புளி மூட்டை என்கிட்ட சொல்லீடுச்சு.. சரி நம்ம அண்ணன் வேலை பாக்குறானே.. அவனவிட்டு காரியத்தை நடத்திக்கலாம்ன்னு பாத்தா.. எருமை இழுத்தடிக்குது.. என் மானமே போகப் போகுது.." என்று சோக கீதம் வாசிக்க..

" அதுக்கே.. ஏன் உன் மானம் போகப் போகுது.. " என்று சரண் சந்தேகமாக

" பின்னே ஏன் போகாது.. இவ என்னமோ அவரோடைய சுத்துற மாதிரி.. காலேஜ் முழுக்க சொல்லீட்டு திரிஞ்சா.. என் அண்ணன் ஒன்னு சொன்னா பத்தாக்கி.. அவரு ஃபாரின் போனதே இவ பர்மிஷனோடன்னு அளந்தா.. நீ கூப்பிடு அவரை..அவர்  இப்ப இருக்க பொசிஷனுக்கு.. நம்ம காலேஜ்க்கு பாப்புலாரிடி வரும்ன்னு.. எங்க பிரின்ஸி.. இவளுக்கு ஆடர் போட்டாச்சு.. மேடம் அப்படியே காரியம் ஆகணும்னு.. அண்ணாட்ட பம்மீட்டு இருந்தாங்க..போச்சா..  போ.. போ.. உங்க சங்கத்தோட தூக்குல தொங்கு.. " என்றான் வாசு..

" ஸார்.. இவ அத்தோட விட்டாங்குறீங்க.. அவரு ஃபாரின் போறதுலேருந்து யூரின் போற வரைக்கும் பர்மிஷன் அவள கேட்டு தான் போவாங்கன்னு சொன்னாலே பாக்கணும்.. இவள கேட்காம எதுவும் செய்ய மாட்டாராம்.. அது எந்த படம்.. ஆங்.. கஜினி அசின் தோத்தாங்க.. இவ விட்ட பீலால.." என்று உடன் பிறந்தவன் சொல்ல.. சொல்ல சரணால் கட்டுப்படுத்தவே முடியவில்லை..

" அம்மோ.." என்று தாமரை வாயில் கையை வைத்துக் கொண்டாள் .

" டேய்.. வாசு அப்ப அவ நம்மகிட்ட சொன்னதெல்லாம் பீலாவா.." என்று அவளுடைய சங்கத்தில் ஒவ்வொருவராய் கொந்தளிக்க.. சரணின் சிரிப்பு சத்தம் நிற்கவே இல்லை.. சிலர் சிரிப்பு நமக்கே ஒரு புன்சிரிப்பை வரவழைக்கும் .. அவர்களோடு நாமும் இணைந்துவிடுவோம்.. அப்படியொரு, மனம்விட்டு சிரித்ததாய் இருக்கும்.. அவன் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு அவளுடைய அலப்பறைகள் இருந்திருக்கும் போல் .

" ஏய்.. நீ போட.. பாஸ்.. எனக்கு ஒரு ஐடியா..  நீங்க அதுக்கு ஹெல்ப் பண்ணா.. நான் என் கெத்தை மெயின்டெய்ன் பண்ண முடியும் செய்வீங்களா.." என்றாள் மற்றவர்களை கண்டுக் கொள்ளாது..

" அதான.. நீயாவது.. உன் புருடா மூட்டைய நிறுத்திறதாவது.. அது என்ன.. நான் கஜினி படம்ன்னு சொன்னதும் அதேமாதிரி சொல்லணும்னு தோணுதோ.‌.. அதுக்கு.. " என்று தொடர்ந்துக் கொண்டே போனவனை..

" லூஸாடா நீ.. அவரை யாருமே படத்துல பாத்துருக்க மாட்டாஙகளா.. நான் எப்படி நம்ம பாஸ் நிக்க வைக்க முடியும்ன்னு யோசிக்கிறேன்.."

" நம்ம பாஸா.. அது சரி.. " என்று நினைத்தவனாக சரண் இருக்க..
" இப்போ.. என்ன அக்கா ஹெல்ப் வேணும்.."

" முதல்ல அக்கான்னு கூப்படறத நிறுத்தி ஹெல்ப பண்ணுங்க பாஸ்.. "என்று கடுகடுவென்று அவள் கூறிய விதத்தில்  எல்லாரும் சிரிக்க..

" மச்சி.. நல்லாயிருக்கும் பாஸ்.. என்னை எல்லாரும் மச்சின்னு தான் கூப்பிடுவாங்க.." இலவச இணைப்பாக

நின்றுக் கொண்டிருந்த தாமரையோ..வாசுவிடம்.. "நிஜமாலுமே இவங்க உங்க தங்கச்சியா.." என்று கேடட்தும்

" பாப்பா.. உன் டவுட்டை .. நான் கிளியர் பண்றேன்.. இப்ப பேசப்படாது.." என்று விரல் வைத்து சைகையில் செய்தவள்..

" பாஸ்.. உங்கள எங்க காலேஜ்ல சீஃப்கெஸ்டா.‌. நிறுத்த போறேன்.. ஏய்.. ஷ்.. பாப்பாக்கு மட்டும் இல்லை பாப்பாவோட அண்ணனும் பேசக் கூடாது.. என்று வாசுவை தாமரைக்கு அண்ணானை அவனை மாற்றிவிட.. பல் கடித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்..

நமுட்டு சிரிப்பு தாமரை வெளியிட..  " நீ மேட்டருக்கு வா மச்சி.. " என்று சரணும் மனைவியின் முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தவாறே ,

" அதாவது.. நம்ம சரண் சாரின் புது முகம்.. பெரிய படத்தின் நாயகன்.. இதுவரைக்கும் யாருக்குமே தெரியாம இருந்ததை.. என்கிட்ட மட்டும் சொன்னாரு.. ன்னு பில்டப் கொடுத்திடுவேன்.. நீங்க ரொம்ப.. ரொம்ப அழகா இருக்கீங்களா.. அதுனால நான் தப்புச்சுடுவேன்.."

வாங்க என்பது போல காதில் நான்கு விரலை வைத்து அசைத்து.. அவனை குனியச் சொன்னவள்.. "பாருங்க பாஸ்.. இந்த காஞ்ச கருவாடெல்லாம்.. பாலிவுட் ஹீரோ ரேஜ்சுக்கு பில்டப் கொடுத்து.. எங்கள.. வாழ வேண்டிய வயசுல பரலோகம் அனுப்பப் பாக்குதுங்க.. இதோ இந்த மாதிரி அப்ப.. அப்ப.‌ கலர் கலரா யாரையாவது பார்த்தா தான் உண்டு.." என்று மனதில் எவ்வித கல்மிஷமும் இல்லாமல் பேசியவளுக்கும்.. அவனிடத்தில் உடன் தமயன் இருக்கும் தைரியத்தில் வந்ததோ.. அல்ல எதிராளியின் நேர்மையான பார்வையால் தொடர தூண்டியதோ.. அவளும் நன்கு பழகியவள் போல் நட்பு பாராட்ட  சரணும்.. அவளிடத்தில் இருக்கும் குறும்புத்தனத்தை ரசித்தவனாய் இருந்தான்.

" எப்படி நான் சொன்ன ஐடியா.. " சுற்றி சுற்றி அனைவரையும் பார்த்திட..

" த்தூ.. இப்பவும் நீ திருந்த மாட்ட.." என்று கோரசாக குரல் எழும்பினார்கள்..

" ம்ச்சு.. அதுங்கல விடுங்க பாஸ்.. நீங்க சொல்லுங்க.. இவ்வளவு சொல்றதுக்காவாவது.. நீங்க பாவம் பார்த்து மாஸ்க கழட்டலாம் இல்லை.‌" என்று தன் காரியத்தில் கண்ணாக

" அக்கா.. அப்ப காலேஜ்ல படிக்க மாட்டீங்களா.." என்று அதிமுக்கியமான கேள்வியை அப்பாவியாய் தாமரை எழுப்ப..

" அது பாப்பா.. நீ வரும் தெரிஞ்சுக்குவ.. இப்ப கிட்ஸ் நாட் அலௌட்.. ஓகேயா.. பா.. ஸ்.." என்று ஆரம்பித்தவளிடம்

" செல்ஃபி எடுத்துக்கலாமா.. எல்லோருமா.. " என்று சரண் கேட்டான்..

" ஹேய்.. நிஜமாவா.. காய்ஸ் பீ.. ரெடி.. " என்று உற்சாக கூக்குரலோடு.. முன் நின்றிருந்த ஆண்கள் பின்னிருக்கையில் இருந்த பெண்கள் என்று அனைவரும் கேமரா முன் ஆஜராகும் மும்மரத்தில் இருந்தார்கள்..

சரண்.. தாமரையின் கரத்தை பிடித்திழுத்து‌.‌. அவன் மடியில் அமர்த்திக் கொண்டதையோ‌‌.. அழுத்தமாக.. அவளது இடையை மற்றொரு கையால் வளைத்து இறுக்கி பிடித்து வைத்து.. அவளையும் இணையும் புகைப்படத்தில் இருக்குமாறு செய்த செயலோ, யாருடைய பார்வையிலும் விழாமலே போனது.

செல்ஃபி எடுக்கையில் அவரவர் முகத்தை மட்டுமே பார்த்திருப்போம்.. பிறரின் மீது கவனமே வராது.. அதுவே மிகவும் வசதியாகி போனது அவனுக்கு.‌. அவளை அமர சொன்னதற்கு ,  அவனுடைய பாதி தொடையில் அமரும் நிலை வரும் என்றே.. நின்றுக் கொண்டு வந்தாள்..

கல்லூரி படிப்பை பற்றி ப்ரீ சொன்னதும்.. தாமரையின் முகத்தில் கவிழ்ந்த இருளை மற்றவர்கள் கவனிக்காத போது.. அவன் பார்வையில் விழுந்துவிட.. அதுவே அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது..

போட்டோ எடுக்க நினைத்ததும்.. அனைவரும் ஒன்று கூட.. தாமரை ஒதுங்கும் விதமாக.. ஜன்னலோடு ஒட்டிக் கொள்ளப் பார்த்ததை கவனிக்கவும்..  உடனே கரத்தை பிடித்து இழுத்து விட்டான்.

மணிக்கட்டை இழுத்த வேகத்திற்கு.. அப்படியே அவனது தொடையில் வந்து விழ இறுக்கிக் கொண்டவன்.. அவள் செவியில் "கேமரா பாரு.." என்று கவனம் பதிய வைத்து ‌.. ப்ரீ என்று அழைக்கப்படும் ப்ரியாவின் அலைபேசியில் எடுக்காமல்.. அவனுடையதிலேயே எடுத்தும்விட்டான்.

புகைப்படம் எடுத்து முடிக்கவும்.. கோயில்.. என்று நடத்துனரின் குரலும் வர.. இறங்குவதில் முனைப்பாகவே.. அந்த கூட்டம் சரணை இனம் காண்பதற்குள் முன்பாகவே இறங்கிவிட்டார்கள் .

" ஹேய்.. ப்ரீ.. ஆளு செம்மல.. அந்த பாப்பாவும் சூப்பர்ல்ல.. எங்க போட்டோ காமி.. " என்று ஜோதி கேட்ட பிறகே..

" ஏய்.. அவ.. என் மொபைல்ல போட்ட எடுக்கல.. என்னுதுல இல்ல.. " என்று ஆளாளுக்கு சொல்லவும்.. வண்டிய நிறுத்துங்க..  என்று அலறி பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிவிட்டார்கள் . 

" எதுக்கு டீ இப்ப இறங்குன.." என்று வாசு கத்தவும்..

" போட்டோ.. "

" ப்ரியா.." என்று பல் கடிக்க..

" இல்லடா.. அவங்க.. எவ்வளவு ஹேப்பியா சிரிச்சாங்க தெரியுமா.. நான் பேசுனத.. ரசிச்சு சிரிச்ச மாதிரி இருந்தது.. எனக்கு அவனை ரொம்ப பிடிச்சுடுச்சு‌.. ச்சே.‌."

" அந்த பொண்ணு.. அது கோயிலுக்கு போகணும்னு சொன்னுச்சு.. " என்றான்

" ஏய்.. போட்டோ எடுத்தது பாஸ்.. நீ எதுக்கு பாப்பாவ தேடுற.." மார்க்கமாக வினவியவளின் தலையில் தட்டி விட்டு என்னமோ பண்ணித் தொலை.. என்று கோயில் பக்கமாக சென்றான் .

" ச்சை.‌ சரி வா.. நாம வந்ததும் வந்தோம்.. அஷ்டலஷ்மி கோயிலுக்கு போய்  செல்ஃபியா எடுத்து தள்ளுவோம்.. " என்று ப்ரியாவை கலைக்க.‌ அவளோ அழுவது போல் நின்றிருந்தாள் .

" நான் அதுல ரொம்ப அழகா இருந்தேன்.." என்று கண் கலங்கியவளை கொலைவெறியோடு முறைத்திருந்தார்கள்.. வருத்தப்படாத வாலிபிகள் சங்க உறுப்பினர்கள்..

" ஏய்.. எருமை இப்ப போட்டோ முக்கியம் இல்லை.. மேடம் கிட்ட என்ன சொல்லப் போற.. உன் ஸீட்ட கிழிக்காம விடாது.. அதுக்கு என்ன வழின்னு பாரு.." என்றதும்

" அட ஆமால்ல.. சரி வா.. லஷ்மிட்ட.. காசு பணத்தோட.. சரண் மித்ரனையும் குடுன்னு மனு போட்டு வைப்போம்.." என்று நகர்ந்திருந்தாள் .

பேருந்தில் இருந்து இறங்கியதும்.. சங்கர் வண்டியோடு முன் நிற்க.. தாமரையின் கரத்தை விடாமல்.. அவனோடு.. பின் இருக்கைக்கு இழுக்க..  இருவருமாய் பின்னால் ஏறினார்கள் . 

இந்த நொடி வரை அவளுடைய சுவாசம் சீராகவில்லை. அனைவருக்கும் முன் அவன் மடியில்.. அவள்.. அதுவும் புகைப்படத்தில் என்று நினைக்க நினைக்க.. உதறல் எடுத்தது.. ஆனால் சரணுக்கு.. உல்லாசமாக.. அவர்களுடைய கேலியால்.. தன் கல்லூரி நாட்களுக்கே சென்றவனாக.. அவள் விலகியதும் முதலில் கோபமே உருவாக பிடித்து இழுத்திருந்தான் .

அவள் மென்மையை‌.. அவன் உள்வாங்கிய பிறகோ.. மனைவியை விடுவிக்கும் எண்ணமே இல்லாதவனாக இருந்தான் . சங்கர் வந்தது மிகவும் வசதியாகவே போயிற்று.. மென்குரலில்.. " பாப்பா.. எந்த ஸ்கூல்.." என்று சீண்டிட..

அவளோ.. அவன் ஏற்படுத்திய தாக்குதலில் இருந்தே வெளிவர முடியாமல் இருக்கும் பொழுது.. இந்த சீண்டல் , வலியை ஏற்படுத்த.. "நான்  போனதே இல்லை.." என்று வந்த அழுகையை உள் இழுத்து குனிந்த நிலையில் கூற..

சங்கர்,  "ஸார் கோயில் வந்திடுச்சு..," என்று கதவை திறந்ததில் இருவருடைய பேச்சும் பாதியிலேயே தடைப்பட்டுவிட்டது .

இருந்த மனநிலைக்கு தாமரை பின்னோடு அவன் வருகிறானா இல்லையா என்று கவனிக்காதவளாய்.. வேகமாக கோயிலை நோக்கி நடந்துவிட்டாள்.

Continue Reading

You'll Also Like

35.3K 2.4K 50
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
107K 3K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
30K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
72.2K 4.3K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...