வா.. வா... என் அன்பே...

By kanidev86

203K 5.3K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 19

1.9K 31 7
By kanidev86

பகுதி - 19

தாமரை கூறியதை கேட்டதும்.. அனைவரும் அமைதியில் இருக்க.. மயூரியால் மட்டும் தாங்க முடியாதவராக.. கொந்தளித்துவிட்டார்.

"நீ இப்ப என்ன சொல்ற.. என் பையன்.. உன் தம்பி தங்கச்சிய கடத்தி வச்சுருக்கான்னா.. சொல்லு.. உன்னை யாரு அனுப்பி வச்சா.. இல்லை எவ்வளவு பணம் எங்கட்ட நீ எதிர்பார்க்குற.. " என்று கோபப்பட்டு கத்தவும்..

திகைத்து.. பயத்தில் மேலும் விழிகளை விரித்தவளாக.. மருண்டு நின்றிருக்க.. ராம் வேகமாக மனைவியை அணைத்து.. அடக்க முயன்றார்.

" என்ன விடுங்க ராம்.. இப்ப எதுக்காக என்னையே கன்ட்ரோல் பண்றீங்க.. இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.. நம்மகிட்டயே வந்து நம்ம பையனை தப்பா சொல்றதுக்கு.‌." என்று ஆத்திரம் அடங்க மறுத்தது.

" நான்.. நான்.. என் தம்பி.. தங்கச்சிக்காக.. உங்ககிட்ட வரல.. ஏன்னா.. ஸாராலா‌‌.. அவங்களுக்கு எப்பவும்.. எந்த ஆபத்தும் வராது.. அவிய.. இப்படி நடந்துக்க.. நான்தேன்.. காரணம் . தப்பு என் பக்கம் தான்.. இப்ப நான் வந்தது.. உங்க எல்லாருக்கும் உண்மைய சொல்லதான்.. "என்றாள் பதற்றமாக,

" என்ன பெரிய உண்மைய சொன்ன.." அதே கோபம் குறையாதவராக..

"என்னை.. என்..னை.. அவிய பொண்டாட்டியா நடிக்க கூப்பிடறாகன்ற உண்மைய... அடுத்தவியல.. ம்.. என்று செறுமி.. எது செஞ்சாலும்.. திருட்டோ.. பொரட்டோ.. இருக்க கூடாதுன்னு எங்கம்மா.. சொல்லி சொல்லி வளத்தாக.. அவியல.. பறிக்கொடுத்து முழுசா.. ஆறு மாசம் காங்களை.. அதுக்குள்ள.. குடி கெடுக்குற பாவத்தை என்னைய.. ஸாரு.. செய்ய சொல்றாக.. அது செய்ய மனம் வராமேதேன்.. உங்க முன்னாடி நான் நிக்கேன்.. மறந்தும்.. பணத்துக்காக வேண்டி இல்ல.. பணம் எனக்கு தேவைதே.. அதுக்காக அடுத்தவங்கள ஏமாத்தி சோறு திங்க.. என்னையால முடியாது.. என்ற மனசு ஆறுதலுக்காகதேன்.. இங்குன வந்தேன்.. உங்கட்ட எல்லாத்தையும் சொன்னே.. உங்கட்ட சொன்னா.. எல்லாம் மாறிப் போயிடும்னு நினைச்சு வரலை.. அவிய.. கூட்டியாற பொண்ணு நிரந்தரமில்லை..ன்னு சொல்லதான் வந்தேன்.. அது நானா இல்லாம.. வேற யாரு வந்தாலும்.. அதேன் நிலைம.. நீங்க அவிய நல்லா இருக்கனும்னு தான் கல்யாணம் பண்ணி பாக்க ஆசைபடுறீயா.. ஆனா அதைய புரிஞ்சுக்காம.. பிடிவாதமா.. எதைஎதையோ செய்ய போறாவ.. நீங்க யாரும் உண்மைன்னு நம்பிடாதிய.. ன்னு.. சொல்லதான் வந்தேன்.. உங்க காசுக்காக நான் யோசிக்கல.. நீங்களே நினைச்சாலும் நான் வரதை மாத்த முடியாது.. ஆனா.. நீங்க பயப்படுற மாதிரி.. எனக்கு.. ஒத்த பைசா.. இங்கனயிருந்து  வேணாம்.. எடுத்துட்டும் போக மாட்டேன்.. நா.. வாரே..ன்..", என்று அவர்கள் முன் அழுகவே கூடாது என்று நினைத்தவளாய் பேசினாலும்.. பேச.. பேச.. வழியும் கண்ணீரையும் நிறுத்தும் வழி தெரியாமல்.. புறங்கையால் துடைத்துக் கொண்டே பேசினாள் .

ஏழையாக பிறந்தால் தன்மானம் இருக்க கூடாது என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. இவர்களுடைய மகன்.. ஒருபக்கம் குத்தி கிழித்து வைக்கிறான் என்றால்.. அவனை பெற்ற அன்னையோ.. வார்த்தைகளால் செய்துவிட்டார் .

" உன் பேரு என்னம்மா..?", என்ற பலகீனமான குரல் அந்த அறையின் மௌனத்தை உடைக்க.. வேகமாக வெளியேற முயன்றாலும்.. அதீத நடுக்கத்தோடு இருந்த உடம்பும்.. துவண்ட கால்களுக்கும்.. அத்தனை வலிமை இல்லை.. அதனால் ஒரு எட்டு வைத்த உடனே.. பாட்டியின் குரல்.. அவளை தடுத்திருந்தது.

மெல்ல திரும்பியவள்.‌. மீண்டும் தன் கன்னத்தை துடைத்துக் கொண்டே.."தாமரை.." என்றாள். பெரிய மான்விழிகள், ஈரத்தால் மினுமினுத்து.‌. இடதும்.. வலதுமாக.. காய்ந்திருந்த கண்ணீர் கறைகளோடு.. கழுத்தெழும்பு துருத்த நின்றிருந்தவளை.. உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தார். தாமரை என்ற பதிலில்.. காய்ந்திருந்த அந்த முதியவரின் இதழ்களில்.. புன்சிரிப்பு..  பெயருக்கு ஏற்றார் போல்.. மென்மையானவளாகவே.. இருக்கிறாள் என்றே நினைக்க தோன்றியது .

தவறு செய்திருப்பது.. அவர்களின் வாரிசு.. கோபம் கொள்ள வேண்டியவளோ.. அவள்.. ஆனால் அனைத்தும் இங்கு தலைகீழாய் நடந்துக் கொணடிருக்கிறது. பேரனை விட்டு கொடுக்காமலும்.. தனக்கு என்ன தகுதி இருக்கிறது நடிப்பதற்காகவும் இங்கு வர வேண்டியுள்ளதே.. என்ற குற்றணர்ச்சி மேலோங்கியவளாக.. குறுகி நின்றவளின் செயலில்.. மெய் சிலிர்த்தார்.

பெயரை கேட்டதோடு.. அவரும் அமைதியாக இருந்ததில்.. நிமிர்ந்து பார்த்தவள்.. மீண்டும் வாசலை நோக்கி நடையை கட்ட நினைக்கும் பொழுதே.." உன் தங்கச்சிக்கு என்னம்மா உடம்புக்கு.‌." என்று அந்த மூத்த தலைவரின் கேள்வியால்.. வெளியே செல்ல நினைத்ததை கைவிட்டவளாக.. கூறத் தொடங்கினாள்.

"சுதா.. அவளுக்கு.. கணுக்காலு முழி எலும்பு.. பாதத்தில இருக்கு.. அதால.. சரிவர நம்மையாட்டக்கும்..  நடக்க முடியாது.. " என்று தங்கையின் நிலையை பரிதவிப்போடு கூறத் தொடங்கினாள்‌.சுதாவின் எலும்பு வளர வளர.. பாதிப்பும் அதிகமா  இருக்கும்.. நடக்க முடியாம கூட போகலாம் என்று கூறிவிட்டார்கள் . உடனே.. அங்கே இங்கே பணத்தை புரட்டி பணத்தை தயாராக வைத்திருந்த நிலையில்.. சராசரியாக எடுக்கப்படும்.. உடல் பரிசோதனையின் போது எடுத்த பரிசோதனைகளால்.. சுதாவிற்கு இருக்கும் ஆபத்து தெரிய வந்தது.

எப்பொழுதோ.. உண்ட.. பழத்தின் கொட்டை.. எப்படியோ.. கல்லீரலுக்குள் சென்றடைந்து விட்டதில்.. பத்திரமாக கல்லீரலால் பாதுகாக்கப்பட்டதால்.. அதற்கும் பாதிப்பு ஏற்பட்டது ! அந்த கொட்டையை சுற்றிய பூஞ்சை.. அது இருந்த வலப்பக்கமாக.. கால் பாகத்திற்கு அழுகி விடவே.. உடனே வெட்டி எடுக்க வேண்டிய நிலை..  75 % முதல் 80% வளரக்கூடிய உள் உறுப்பாக கல்லீரல் இருப்பதால்.. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் கூறிவிட்டார்கள் . இல்லையேல் முழுவதுமாக பழுது ஏற்பட்டு.. முழுமையாக அகற்ற வேண்டிய நிலை வரலாம்.. அப்படி இருக்கும் பட்சத்தில் மாற்றக் கூடிய நிலைக்கும் தள்ளப்படலாம்.. என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தார்கள் .

இதுவரை , அதன் பாதிப்பு பெரிய அளவில் தெரியாமல் இருந்தது. ஆனால் சில நாட்களாக.. சுதா மிகவும் சிரமப்படுகிறாள்.. அதன் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர் கூறுகிறார்கள்.. உடனடியாக அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யவும் சொல்லுகிறார்கள்.. என்று முழுமையாக தன் நிலையை விளக்கவும்.. இப்படியெல்லாம் பாதிப்புகள் வரக் கூடுமா என்றே எண்ணத் தோன்றியது .

"இப்ப உன் தம்பி தங்கச்சி எங்கன்னு தெரியுமா.. " என்று கேட்க.. ம்ஹூம்.. என்பது போல் தலையசைத்தவளின் முதுகு அழுகையால் குழுங்கவே.. பாவமாக இருந்தது.

" இங்க வா.."  என்பது போல் தன் தலையை மெதுவாக அசைத்து.. அழைக்க.. அருகில் நெருங்கியவளின் கரத்தை பற்றியவராக.. அன்னபூரணி.. "நல்லபாம்புகிட்ட கொத்து வாங்கி.. வாங்கியே.. இப்ப அவன் உடம்பு முழுக்க.. விஷமா ஏறியிருக்கு போல.. அதுனால.. பாகுபாடு இல்லாம விஷத்தையா கக்குறான்.. நீ.."என்று அதற்கு  மேல் தொண்டை அடைத்து பேச முடியாதவராக.. அவளுடைய கரத்தை பற்றி தன் முகத்தில் பதித்தவரின் செயலில் வெடவெடத்தவள்..

"அய்யோ..‌ அப்படி எல்லாம் செய்யாதீய.. நான்.. நான்.. உங்கள பயமுறுத்த இங்குன சத்தியமா வரலை.. " தன் கரங்களை விலக்கிக் கொள்ள முயன்றவளால்.. பலமிழந்து இருக்கும் அவரிடம் இருந்து.. அவளால் அவள் கரத்தை உருவிக் கொள்ள முடியவில்லை.

அதிர்ந்து.. அருகில் இருந்தவரை பார்க்க.. திரைதுறையின் முடிசூடா மன்னனாக இன்றளவும் இருக்கும் பாலகிருஷ்ணனின் விழிகளில் கெஞ்சலை கண்டிடவும்.. அதிகமாக பதற்றம் அடைந்தவள்.. "ஐய்யோ.. என்ன மேடம் இது.. நான் .. நான்‌‌.. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறீய.. முதல்ல என் கைய விடுங்க.. நீங்க போய் எங்கைய புடிக்கலாமா.. நானுல்ல.. விழுகணும்.." என்ற அதிகமான பதற்றத்தோடு அழுகையும் சேர்ந்துக் கொள்ளவே.. அவளின் நிலை உணர்ந்தவராக.. ராம் அருகில் வந்தார் .

" இப்ப ஏம்மா.. தாமரைய இப்படி பயமுறுத்துறீங்க..", என்று சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு கிண்டல் செய்ய.. அவரும் புரிந்து கொண்டவராக.. சங்கடமாய் சிரித்தார்.

தான் நினைத்தது வந்தது ஒன்று.. நடந்தது ஒன்றாக மாறியதில் தாமரையும்.. அதிக சங்கோஜத்தில் திளைத்தவளாக.. அதேசமயம் அவர் வெளியிட்ட சொற்களை ஏற்றுக் கொள்ளவும் முடியாதவளாக.. தடுமாறினாலும், " நான் இங்குன வந்ததே.. உண்மைய சொல்லி..."

" சொல்லி.. ம்.. ஒரு குடும்பத்தோட சந்தோஷத்தையே குழி பறிக்க வந்தேன்னு சொல்றியா.." என்று மயூரி தன்பிடியிலே இருந்தவராக.. தாள முடியாமல் வெடித்தார்.

" எம் பையன்.. என் பையன்.. உங்களுக்கு விஷமா போயிட்டானா.. அதுவும்.. இவளுக்காக.. இவ சொன்னதை நம்பி.. " தாயின் மனதால் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகவே.. அதுவும் அவள் மாமியார் அதரங்களில் இருந்து வெளி வந்த சொற்களால்.. பெரிதும் காயப்பட்டவராக.. துடிதுடித்து போனார்.

" மயூரி.."  என்று அழுத்தமாக அழைத்து தன் கோபமான கண்டிப்பை வெளிப்படுத்திய ராமிற்கும் வருத்தமே..

"என்னால.. என்னால  முடியலையே ராம்.. இந்த பொண்ணு சொல்றதையே.. ஏத்துக்க முடியலை.‌. அத்த.. இப்படி ஒரு வார்த்தை சொல்லீட்டாங்களே ராம்.." என்று அழுகையில் புலம்பி தவித்தவராக..

அவரின் துடிப்பும்.. அழுகையும் தாமரையை விதிர்க்க செய்தாலும்.. கணமான வார்த்தைகளே காரணம் என்று புரிந்தவள்.. அன்னப்பூரணியையே பார்த்தவளாய்.. " நல்ல பாம்பு விஷம் தீராத நோய்க்கு மருந்தா பயன்படுத்துறாங்க.. ம்மா.‌. மித்ரன் ஸாரால மருந்தாதேன் இருக்க முடியும்.. நீங்க எதுக்காகவும் வெசனப்படாதீய.." என்று மென்குரலில், அவள் சொல்ல.. அங்கிருந்த அனைவரும் திகைத்து போய் பார்த்திருந்தார்கள்.

"நாளை பின்ன.‌. விஷயம் தெரிஞ்சா.. ரொம்பவே வருந்துவீயன்னுதேன்.. உண்மைய சொல்ல வந்தேன்.. சத்தியமா.. ஸார பத்தி புகார் வாசிக்கவோ.. தப்பர்த்தத்துக்கோ.. இல்ல.."என்று கரங்ளையும் கூப்பி நின்றிருந்தவளின் செயலிலும்.. அதிர்ச்சியே..

பாட்டி அழைத்ததால் அவள் அருகே சென்றவள்.. அமர்ந்திருந்த இடத்திலேயே.. அலைபேசியை வைத்துவிட்டு வந்திருக்க.. இப்பொழுது.. யாரோ அழைக்கவே.. மயூரியின் அருகே இருக்கவும்.‌‌. பார்த்தவருக்கு.. அதில் தெரிந்த எண்ணில்.. திக்பிரம்மை பிடிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டார்.

வேகமாக வந்து எடுத்து பார்த்த தாமரையும்... அவரின் நிலைக்கு கொஞ்சம் குறையாதவளாக.. கைகள் நடுங்க அப்படியே நின்றிருந்தாள். இரண்டாம் முறையும் ,அவள் அவ்வாறு நின்றிருக்கவும்.. மயூரிக்கு சற்று முன் இருந்த கோபம் அவள் பதிலாலேயே மட்டுபட்டிருக்க.. இப்பொழுது அவளையே  மறந்தவளாய் நின்றிருந்த நிலையிலேயே.. கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வந்ததாலும்..

" ஏன்.. ஏன்.. பாத்துட்டே நிக்குற..‌ எங்க எடுத்து பேசுனா.. எங்களுக்கு நீ சொன்னதெல்லாம் பொய்ன்னு தெரிஞ்சிடுமா.." என்று குரலை உயர்த்தி சத்தம் போட.. நிற்கப் போகும் தருவாயில் அழைப்பை ஏற்றுவிட்டாள்.

அர்த்தமான பார்வையை கணவனிடமும்.. பெரியவர்களிடமும் பதித்தவராக.. அவர் இருந்ததில், அவர்களும் அமைதியாக.. அவளை கவனிக்கத் தொடங்கினார்கள்.

அழைப்பை ஏற்ற மறுநொடியே.. "உடனே எடுக்காம.. என்னடீ பண்ணீட்டு இருக்க..", என்று எஃகு இரும்பாய் மோதிய அவன் குரல்.. அவளுக்கு மட்டுமல்லாமல்.. மற்றவர்களுக்கும் தெளிவாய் கேட்டிட.. அவரவர்களின் மனதினை விவரிக்க.. வார்த்தைகள் அற்றுப் போனது.

" அது.. அது.‌. நான்.. ", என்று செய்த செயலின் தீவிரத்தை முழுதாக புரிந்து.. அவனுக்கு தெரிந்தால்.. என்ற எண்ணத்தில் அதிகமாக உதறல் எடுக்க.. பார்க்கவே பாவமாக இருந்தது. உடனே.‌. ராம் அவளை நெருங்கியவராக.. பேசு.. என்று தலையசைவில் மொழிந்து.. இங்கு வந்திருப்பதை சொல்லாதே என்பதை.. இதழ் அசைவுகளில் மூலம் 'சொல்லாதே' என்று கூறவும்..

அவரிடம் தலையசைத்தவளாக.. "நா.. நா.. க்ளையிட் பாக்க வந்திருக்கேன்.." என்று திக்கித் திணறி கூறி முடித்து.. அவள் அறியாமலேயே பெரிய தவறிழைத்துவிட்டாள் .

Continue Reading

You'll Also Like

15.2K 633 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
95K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
7K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)