வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

அன்பே - 17

1.4K 32 4
By kanidev86

பகுதி - 17

மறுநாள் விடிந்ததும்.. ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த திருமணத்திற்கு சென்றவள்.. நன்பகல் பன்னிரண்டு மணி வரை அங்கேயே இருக்க நேரிடவே.. அதற்கு மேல் நீளாங்கரைக்கு சரண்மித்ரனின் வீட்டிற்கு விரைந்தாள் .

நேரடியாக பேருந்து இருக்காது என்பதால்.. செலவை பற்றி யோசிக்காமல் மெட்ரோ ரயிலை பிடித்து.. மௌன்ட் ரோடில் இறங்கி.. அங்கிருந்து பேருந்தில் ஏறி நீளாங்கரை செல்வதற்குள்.. மூன்று மணி நேரம் கடந்திருக்க.. அந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி.. அவன் வீட்டின் முன் இறங்கினாள் . அதற்கே மணி மூன்றுக்கு மேல் கடந்திருந்தது.. சுட்டெரிக்கும் சென்னை வெயில் அனைத்தும் அவள் தலையில் இறங்கியிருக்கவே.. மிகுந்த களைப்போடு இருந்தாள் .

ஆட்டோவில் இருந்து இறங்கியதும்.. பெரிய கேட் மட்டுமே வரவேற்க.. காவலாளி இருக்கும் துவாரத்தின் வழியே.. ராம் ப்ரசாத்தை பார்க்க வேண்டும் என்று கூறி.. தன் மொபைலில் இருக்கும் மெசேஜையும் காண்பிக்க.. அவரோ..

" ஒரு நிமிஷம் இருங்கம்மா.. " என்று தன்மையாக கூறியபின்.. தொலைபேசியில் தகவலை பரிமாற.. வாயிற்கதவில் நுழைய அனுமதி கிடைத்தது.

"தேங்க்ஸ் ண்ணே"என்று சிறு புன்னகையை சிந்தியவள்.. நடக்கத் தொடங்கவே.. மிகவும் பெரிய மாளிகை வரவேற்றது . தன் காரியத்தை பற்றியே, சிந்தித்து வந்தவளுக்கு.. மாளிகையின் அழகோ.. தோட்டத்தின் அழகோ.. கவராமல் போக.. அந்த வீட்டின் மேனேஜர் வரவேற்று.. வரவேற்பறையில் அமர வைத்திருந்தார் .

அதுவரை இருந்த தைரியம் ராம் ப்ரசாத்தின் வரவிற்காக, காத்திருந்த பொழுது முற்றிலும் வடிந்து போகவே.. அவசரப்பட்டுவிட்டேனோ.. என்று சிந்தித்தவளாய்.. நகங்களை கொய்து கொண்டிருக்கும் பொழுதே.. அவர் வந்துவிட்டார் .

மிக இயல்பான.. புன்னகையுடன் வந்தவர்.. இரு கரங்களையும் குவித்து.. "வாங்க.. உட்காருங்க.." என்று எதிரில் இருந்த கோச்சில் அமர்ந்துக் கொள்ளவே.. விழி விரித்து நின்றுவிட்டாள். அறுபதை தொட்டிருப்பவர். ஆனால் இளங்காளையர் போல் காட்சியளிக்க.. அவ்வளவு ஆச்சரியம்..

எதோ ஒரு உந்துதலில் இங்கு வந்துவிட்டாள். அவனின் அழைப்பேசி அழைப்பில் இருந்து கணன்று கொண்டிருந்த கோபம்.. அவள் தொடர்பு கொண்டவரோடு வெடித்தப் பிறகும் அடங்க மறுத்திருக்கவே.. ஒரு முடிவு எடுத்தவளாய்.. அவன் இல்லத்திற்கு வந்துவிட்டாள் . ஆனால் ராம் ப்ரசாத்தின் மிடுக்கிலும்.. அங்கிருந்த பணத்தின் செழுமையிலும்.. இயல்பான குணமான அச்சம் மேலோங்க.. வியர்த்து வழிந்தவள்.. ஏற்கனவே.. வெயிலின் தாக்கத்தினால் கலைத்து காணப்பட்யவளுக்கு.. அனைத்தும் சேர்ந்து.‌. உடலின் மொத்த சக்தியையும் உறிஞ்சி எடுப்பது போல் தோன்றி.. அவளது திகைப்பையும் சேர்த்து அதிகரிக்க.. அழகாய் புன்னகைத்து..

" உட்காருங்க.‌" என்று மீண்டும் கூறியதுமே அமர்ந்தவளின நெஞ்சம் படபடப்பில் வேகமாக அடிக்க தொடங்கிவிட்டது. அவள் தீண்டிராத பானத்தை பார்த்தவருக்கு.. அவளது எளிமையான தோற்றமும் களைப்பு வெளிப்படையாக தெரியவே,

" ஜூஸ் பிடிக்கையா.. வேற கொண்டு வர சொல்ல வா.." என்றதும்..

"ம்.. இல்ல.. இல்ல வேண்டாம் ஸார்.. இதுவே போதும் "என்று கையில் எடுத்துக் கொள்ள..

"குட்.. முதல்ல குடிங்க.. அப்புறமா.. பேசலாம்.." என்று அமைதியாக அமர்ந்துவிட்டார்.. வேகமாக அருந்தியவள்.. ஒரே மூச்சில் குடித்து முடித்து நிமிரவே.. இரு புருவங்கள் நெளிய அவளை பார்த்ததில்.. ஒரிரு நொடிகள் தடுமாறினாலும்.. தன்னை சமன் செய்து கொண்டு யாரும் அருகில் இருககிறார்களா என்று விழிகளை சுழலவிட..

"என்னையும் உங்களையும் தவிர.. யாருமில்லை.. இங்க நான் சொல்லாம யாரும் வர மாட்டாங்க.‌" என்று அவள் எண்ணம் புரிந்தது போல் பதிலளித்ததில்.. மேலும் அவளை வியப்புக்கு உள்ளாக்கியது..

அதுவரை இருந்த தைரியம் முழுதாக வடிந்து போய்.. அவசரப்பட்டு வந்துவிட்டோமோ.. என்று சிந்தித்தவளாய்.. இருந்தவளை மேலும் அவர் குரல் கலைக்கவே.. இனியும் தாமதிக்க முடியாது என்று புரிந்துக் கொண்டு.. மென்று முழுங்கியவளாக..

"நான்.. அது.. வந்து.. சரண்மித்ரன் ஸார்.. மேரேஜ் விஷயமா பே..சணு..ம்.. இந்த வீட்டுல இருக்குறவங்க.. எல்லார் முன்னாடியும் பேசணா நல்லதுன்னு நினைக்கிறேன்.." என்று ஒருவாறு கூறி முடித்துவிட்டாள்..

ராம்பிரசாத் எவ்வாறு உணர்ந்தார் என்றே கூற முடியவில்லை.. தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.. சந்திக்க விரும்பும் பெண்ணிற்கு தன்னுடைய உதவி வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாலேயே.. அவளை சந்திக்க சம்மதித்தார்.

ஆனால் வந்தவளோ..  சரணின் திருமணம் பற்றி பேசுகிறாள் . அவன் திருமணத்திற்காக கொடுக்கப்படும் நெருக்கடி கூட..  அவனுக்கும் குடும்பத்தில் உள்ள அவரின் தாய் தந்தை... தன் மனைவி என்று இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க.. இந்த பெண் பேசுகிறாள் என்றால்.. பெரிய வில்லங்கமாக தன் முன் அமர்ந்திருக்கிறது என்று ஒரே நொடியில் புரிந்துக் கொண்டார் .

அவரின் அமைதி தாமரைக்கு கிலியை கொடுத்தாலும்.. அழுத்தமாய் இருந்தாளே ஒழிய.. பின் வாங்கவில்லை..

"உனக்கு யார் சொன்னது.." என்றவரின் குரலில் கடுமை ஏறி இருக்க..

மெல்லிய குரலில் "மித்ரன் ஸார்.." என்றாள்.

வந்தது முதல் அவனை மித்ரன் ஸார் என்றே அழைக்கிறாள். ஆனால் அவருக்கு தெரிய, இதுவரை அனைவரும் அவனை.. சரண் என்றே அழைப்பார்கள்.. சினித்துறையிலோ.. ஷான் என்று செல்லமாய் அழைக்கப்படும்.. ஆனால் மித்ரன் என்றில்லை.

அவளை பற்றிய ஆராய்ச்சி.. இப்பொழுது மன்மடங்க ஓடிக் கொண்டிருக்க.. அவருடைய கணகளும் அவளை மட்டுமே ஆராய்ந்துக் கொண்டிருந்தது.. மெல்லிய பூனம் புடவையல நேர்த்தியாக உடுத்தி.. மெலிதான தங்கக் கம்மல் இடம்பெற்று பளிச்சென்று அவள் தேகத்தின் நிறத்தில் எடுத்துக்காட்ட.. கழுத்தில்.. சன்னமான மணி மாலையும்.. கையில் கண்ணாடி வளையல்கள் இடம் பிடித்திருந்தது.. மூக்கிலும்.. பளிச்சென்று விழுந்த வெண்ணிற கல் மூக்குத்தி.. அவள் நிறத்தின் கருமையும்.. ஒல்லியான உடல்வாகே ஆனாலும்.. கிராமத்தில் அழகை கொண்டிருக்கவே.. பெரிதும் குழம்பி போனார் . இருவருக்கும் எப்படி தொடர்பு உண்டாகியிருக்கும் என்று .

அவரிடம்.. தைரியமாக ஒரிரு வார்த்தைகளை உதிர்த்துவிட்டாலும்.. ராமின் கூர்மையான பார்வையில்.. தடுமாறி போனாள் . அதுவரை தோன்றிறாத சிந்தனைகள் அவளை ஆட்கொள்ள.. "தாமர.. பேசாம திரும்பி போயிடு.. ஸாருகிட்ட இஷ்டமில்லைன்னு சொல்லி.. உன் வேலைய பாரு.. எதுக்காக புள்ள இங்கண வந்து கரச்சல குடுக்க.. நினைக்கே.. " என்று மேளத்தாளங்கள் வாசிக்கும் இதயத்தோடு.. மூளை வாதாடிக் கொண்டிருந்தது .

அவள் முகத்தை மட்டுமே கூர்ந்திருந்தவருக்கு.. இப்பொழுது.. அவளுள் எழுந்த தடுமாற்றமும் அப்பட்டமாக தெரியவே.. மீண்டும் அவளே வாய் திறக்க காத்திருந்தார் . வியர்வை வேர்த்து வழிய.. அமர்ந்திருந்தவளுக்கு.. எப்படி மற்றவற்றை கூறப் போகிறோம் என்றே தெரியவில்லை."உதவி கேட்டவரை போட்டு கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது.. பேசாம எதாவது சமாளுச்சு எழுந்து போயிடு புள்ள.." என்று அவனுக்கு வக்காளத்து வாங்கிய மூளையிடம்.. "அவய என்னுக்கிட்ட உதவியா கேட்டாவ.." என்று பதில் கேள்வி கேட்டு , அவளுக்குள் போராடியவாறு இருந்தவளிடம்..

தொண்டையை கனைத்து தன் இருப்பை உணர்த்தவே.. முன்னமே யோசித்திருக்க வேண்டும்.. இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைத்தவளாக.. அவரை பார்க்க, சொல்ல வந்ததை.. முழுமையாக சொல் என்பது போல் பார்வை கட்டளையிடவே..

ஆண்டவா.. என்று தானே தலையை கொடுத்ததை எண்ணியவளாக.. மென்குரலில் வாய் திறந்தாள் . "என் பெயர் தாமரை ஸார்.. எனக்கு தம்பி தங்கை ரெண்டு பேர் இருக்காங்க.. சினிமால்ல.‌. மேக்கப் ஆர்டிஸ்ட் ஹெல்பரா வேலை பாக்குறேன்.." என்று எச்சில் விழுங்கி அவரை பார்க்க.. மேலே சொல் என்பது போல் இருந்தது .

பாரீஸ் சென்ற பொழுது அவனை சந்தித்தது.. தங்கைக்காக உதவி கேட்டு.. அவன் கொடுத்ததாக கூறியவள்.‌. தற்போது தன்னிடம் அவன் உதவி எதிர்ப்பார்ப்பதாக கூறினாள்.. முழுவதுமாக உண்மையை கூறாமல்.. அதேசமயம்.. பொய்மையும் விடுக்காது சொன்னாள் . என்ன மாதிரி உதவி என்று அவள் கூறிய நொடி பட்டென்று எழுந்து விட்டார் .

தாமரையும் உடன் எழுந்து வாய் திறக்க போகையில்.. "மாடிக்கு வா.." என்றவருக்கு அவள் ஏன் குடும்ப நபர்களின் முன்னிலையில் பேச வேணடும் என்று கூறினாள் என்பது தெளிவாய் புரியவே.. இருக்கும் சூழ்நிலையின் காரணமாக.. அவராலும் அவளிடம் தனித்து பேச விரும்பாதவராய்.. அன்னையிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார் .

அவள் வாசலிலேயே தயங்கி, உள்ளே நுழையாமல் நிற்கவே.. அவளிடம் நெருங்கி வா என்று அழைக்க.. "இங்க பாட்டி இருப்பாங்களே.. ஏற்கனவே உடம்பு.. சரி.. யில்லாம இருக்கும் போது..." என்று தயங்கி தயங்கி பேச.. ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவர்.. பின் மென்னகை புரிந்து.. "ப்ராப்ளம் இல்லம்மா.. நீ வா.." என்றார் . 

ராம் ப்ரசாத்திற்கும் தாமரை கூறிய விஷயம் பொதுகூடத்தில் வைத்து பேசக்கூடியது அல்ல என்று தெரிந்ததாலேயும்.. அதேசமயம் தாய் தந்தையும் உடன் இருக்க வேண்டும் என்று எண்ணியவராக.. அவளை அழைத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தார். மனைவியையும் வரும்மாறு பணிந்திருக்க..தாமரைக்கோ முள்ளில் மேல் அமர்ந்திருக்கும் உணர்வு‌.

ஏற்கனவே அவர்கள் மான்சியால் பட்ட அவமானங்கள் போதாதென்று தன்னாலும் நேரிட வேண்டாம் என்று எண்ணியே.. பெரியவர்களை சந்திக்க விரும்பினாள் . அவர்களிடம் விஷயத்தை தெரிவித்து விட்டால்  அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. நேரடியாக, தானும் தங்கையின் நிலையை குறித்து கூறி உதவி பெறலாம் என்று எண்ணியே.. வந்துவிட்டாள். ஆனால் இங்கிருக்கும் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்குள்.. பெரிய பெரிய புலிகளுக்கு முன் மாட்டியது போல் இருக்கிறது .

"யாரு ராம் இந்த பொண்ணு.., அத்தைய டேக் கேர் செய்ய வந்திருக்கா.. " என்றவாறே நுழைந்த மனைவியை பார்த்ததும்.. ராமே தடுமாற்றத்திற்கு ஆளானார் என்றால் தாமரையின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா..

"ஷ்.. முதல்ல வந்து உட்காரு மயூ..", என்று தன் அருகே அமர்த்திக் கொள்ள.. இப்பொழுது அனுபவ மிக்கவரான் பாலகிருஷ்ணன் தன் மகனை கேள்வியாக பார்த்தாலும்.. "வாம்மா.." என்று தாமரையை வரவேற்று அமரச் சொல்லவே..

உள்ளே நுழைந்தது முதல் தாமரையின் பார்வை.. பஞ்சணையோடு பஞ்சணையாக.. வெண்மேகத்தை தன் தலையில் தாங்கியவராக.. ஒட்டிய கன்னங்களும்.. விடாது ஏறிக் கொண்டிருக்கும் ட்ரிப்ஸ் பாட்டில்களுமாய்.. படுக்கையில கிழிந்த நார்போல்..  கிடந்தவரை காணவும்.. செய்தது பிழையோ.. என்றே எண்ணத் தோன்றியது .

"இப்ப எப்படி இருக்காங்க ஸார்.." என்று விழிமூடி உறக்கத்தில் இருந்தவரை பார்த்து பொதுவாக கேட்டிடவே.. "நல்லா இருக்காங்கம்மா.." என்றவர்..

நேரடியாக மகனிடம், "என்ன விஷயம் ராம்.." என்றார் . மீண்டும் தாமரையிடம் பார்வையை திருப்பியவர்.. சொல் என்பது போல் பார்க்க.‌. மறுபடியுமா.. என்று உள்ளுக்குள் கலங்கியவள்.‌.
மொட்டு போல் குவிந்த கரங்களோடு.‌. எத்தனை எத்தனையோ முறை ஒத்திகை பார்த்தவளாய் ,

" நான் தாமரை..  மான்சியின் ப்ர்சினல் மேக்கப் ஆர்டிஸ்ட்" என்று கூறவே மூவரும் அதிர்ந்து விழித்தார்கள் .

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.