வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

அன்பே - 15

1.3K 30 15
By kanidev86

பகுதி - 15

ரிச்சர்ட், இரவு பன்னிரண்டு மணிக்கு ,தன் அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தவன். அப்படியே படுக்கையில் விழுந்திருந்தான். உதயதாரா.. என்று உதடுகள் அசைவில்லாத முணுமுணுப்பு.. யாருக்கு பயந்து ஓடி ஒளிந்தானோ.. அவளே இன்று அவன் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து வந்துவிட்டாள் . இனிமேல் எங்கும் ஓட முடியாது.. அதற்கு விருப்பமும் இல்லை.

அவளை பார்க்கும் வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்தவனால்.. இன்று அப்படி இருக்க முடியவில்லை . அவள் தன்னை அடையாளம் கண்டு கொண்டு.. கண்களில் பொங்கி வழிந்த காதலோடு நெருங்குகையில்.. திகைத்து.. அதிர்ந்துவிட்டான் . அவன் மறந்து ஒதிக்கிய விஷயம்.. பல மடங்காக அவள் கண்களில் படர்த்திருந்ததை கண்டு , சந்தோஷிக்க முடியவில்லை.

இப்படியே விட்டத்தை வெறித்தவனாக.. கிடந்தவனின் கண்கள் எப்பொழுது சொருகியதோ ?, கும்மிருட்டில் அடைப்பட்டுக் கிடந்த மூன்று வயது குழந்தை.. கண் விழித்ததும்.. அந்த கோர இருட்டிற்கு அஞ்சியவனாக.. "அம்மா.. அம்மா.. பயமா இருக்குமா.. ஒரே இருட்டா இருக்கா..ம்மா‌‌.." என்ற அலறல் சத்தத்தில்.. முழிப்பு வர.. தொப்பலாக நனைந்திருந்தான் ரிச்சர்ட் . இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்லா.. ஆனால் ஒவ்வொரு முறையும் அதே நடுக்கம் அவனை இன்று வரை அவனை ஆட்டிப்படைக்கிறது.. அதையே நினைத்தவனாக.. என்ன? சிறிது காலமாக மறைந்திருந்த நினைவுகள், மறுபடியும் அலைக்கழிக்கவை தடுமாறி போனான் .

படுக்கையில் இருந்து உடை மாற்ற நினைத்து எழுந்தவனை.. அவன் அலைபேசி அழைத்து, அருகில் கூப்பிட.. யாரு இந்த நேரத்தில்,என்ற யோசனையோடு எடுக்கவே, விக்கியாக இருந்தான் . இவன் எதுக்காக என்று தன் விரல்களால் நெற்றியை தடவியவனாக.. அழைப்பை ஏற்காகமல் விட்டு விட.. விடாக்கண்டன் தொடர்ந்தவனாய் , எடுத்து பார்த்தவனின் இரத்த  அழுத்தம் ஏகத்திற்கு எகுறியது.

'எல்லாம் இவனால்..' என்று அர்ச்சித்தவாறே," ஹா..லோ.." என்ற அழைப்பிலேயே அனல் தெறிக்க..

"என்னடா.. சூடு இங்க வரை தெறிக்குது.. " என்று அடங்காமல் விக்கியும் , மேலும் அவனை உசுப்பேற்றுவது போல் பேசினான்‌. சிவந்த விழிகளை அழுத்தமாக மூடி திறந்தவன், "இப்ப எதுக்கு கூப்பிட்ட.." என்று நேரடியாகவே விஷயத்திற்கு வரவும்,

" அது ஒன்னுமில்லை மச்சி.. நாளைக்கு காலேல.. எட்டு மணிக்கு , சரண் உன்னை வர சொன்னான்.. பாக்க.. வீட்டுக்கு வந்துடு.." என்றான் .

சிந்தனை முடிச்சுகள் விழ.. "எதுக்கு?"

" இதுக்கு முன்னாடி.. நீ இத்தனை கேள்வி கேட்டதா நினைப்பு இல்லையே மாமு.. " , என்று அதே நக்கலோடு கூறவே ,

" ச்சை இவன் வேற.. நேரங்கால தெரியாம.. சரி வரேன்.. " , என்று அவன் பதிலையும் எதிர்பாராமல் வைத்துவிட்டான் .

மறுநாள் காலையில், ப்ளாக் ஜீன்னும் ஸ்கை ப்ளூ சட்டையும் அணிந்து காற்றில் சிகையாட.. ஆறடி உயரத்தில்.. அளவான உடற்கட்டோடும்.‌. ஒருவித முரட்டு தனத்தை தனக்குள் அடக்கியவனாய்.. அலட்சியமாக தன் இரு சக்கர வாகனத்தை உயிர்பித்து.. அடங்கா காளையாக.. வேகமாக சரணின் இல்லத்தை நெருங்கியவன் . அதே திமிரு குறையாமல் , பார்வையால் மின்னல் தெறிக விக்கியை ஏறிட.. "போடா.. போடா.. உன்னை மாதிரி பல பேர பாத்தவன்டா..நான்.." என்பது போல் கிண்டலாக பார்த்தாலும்.."வாடா மாப்பிள.. என்ன சாப்பிடற..",

"எதுவும் வேண்டாம்.. எதுக்காக வரச் சொன்னீங்க.."என்று வந்த வேலையில் கவனமாக இருந்தவனிடம்.. புன்னகையை சிந்தியவன்.. " டேய்.. அவ ஊருக்கு போயிட்டா டா.." என்று தோள் தட்டி, உட்காரு என்று அங்கிருந்த சோஃபாவில் தள்ளிவிட்டு.. அருகே அவனும் அமர.. அவனை கடுமையாக திட்ட போனவன்.. புயலென வேகமாக நுழைந்த சரணின் வரவால் , அமைதியாகிவிட்டான் .

கம்பீரமாக தன் அலுவலக உடையில் மிடுக்காக வந்தவனின் கண்களில் இருந்த கூர்மை.. அதுவரை தேக்கி வைத்திருந்த திமிரை கைவிட்ட வைத்தது . அமைதியாய் தலை தாழ்த்தி நின்றிருந்தவனையே, அசராமல் பார்த்தவனின் மனதில் என்ன இருக்கிறது என்று விக்கியியாலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை . நேற்று இப்படியே இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றவனின் குரலில் என்ன இருந்தது.. இல்லை என்ன நினைக்கிறான் என்று ஒன்றுமே புரியவில்லை.

இதில் இவன் வேறு பலி ஆடாய் இருந்துக் கொண்டே.. அதிகமாக சிலிர்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவனாய்,5 அமைதியாக இருந்தான் விக்கி . பார்வையால் வரவேற்று.. இருக்கையை காட்டிவிட்டு அவனும் அமர்ந்த மிடுக்கிலும்.. அவன் ஆளுமையில்.. இருவரும் கட்டுண்டு இருந்தார்கள். அவன் ஆளுமையில் வியந்து ரிச்சர்ட் பார்த்தான் என்றால் விக்கியோ எங்கிருந்து வந்தது கூர்மையும்.. கடினமும்.. என்று சிந்தித்தவனாய் .

தன் கால் மேல் கால் போட்டு.‌. மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கேள்வியாய் பார்த்து சொல்ல என்பது போல் பார்க்க.. அவன் முன் எச்சில் விழுங்கியவனாய் அமைதியாய் நிமிராமல் அமர்ந்திருந்தான் . "பார்டா.. இவ்வளவு நேரமா படங்காட்டினான் .. இப்ப பொட்டிப் பாம்பா அடங்கியிருக்கான் ." என்று வியந்தாலும்.. இவன் பார்வையே சரியில்லையே.. பேசினாலே தப்பிக்க முடியாது.. இப்ப பேசாம வேற இருக்கான்.. " என்று யோசித்தவனாய்.. " என்னடா பண்ணித் தொலைஞ்ச ?" என்று கிசுகிசுக்க.. ரிச்சர்ட்டிடம் எந்த மாற்றமும் இல்லை .

"நா..நா.. அது.. அது.. வந்து.. அவ இனிமேல் என்னை பா.‌க்..க.. வர.. கூடாது.." என்று வார்த்தைகளை கோர்வையாக சொல்ல முடியாமல் தடுமாறியவனுக்கு தெரியுமே.. அவன் பார்வையின் அர்த்தத்தை‌‌.. ரிச்சர்ட்டும், நேற்றில் இருந்து அதைதானே சிந்தித்துக் கொண்டிருகிறான் ‌. ஏன் அவ்வாறு நடந்து கொண்டான் என்று .

சரண் அருகே நின்றிருந்த , அவன் பிஏவை பார்க்க.. ஸார் என்று ஃபைலை கொடுக்கவும்.. அதை வாங்கியவன்.. மொத்தென்று மேஜை மீது ஸ்டைலாக தூக்கி போட்டு.. எடுத்துப் பார் என்பது போல் சைகை செய்ய.. விக்கி வாய் பிளந்த நிலையில் தான் இருந்தான் .

இரு புருவங்கள் மேல் ஏற.. அதை எடுத்துப் பார்த்தவன்.. சட்டென்று எழுந்து நிற்கவும்.. மெலிதாய் அரும்பிய வியர்வை துளிகளுமாய் நின்றிருந்தவனை, அலட்சியமாக பார்த்தவன்.. " டெஷிஷன் இஸ் அப் டூ யூ" என்று விளைந்த இதழ்களோடு.. அலட்சியமாக பார்த்தவனை.. சிவந்த விழிகளால் உறுத்தவன்..

"உங்க பணத்தால.. என்னை விலைக்கு வாங்க முடியும் நினைக்கிறீங்களா..?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கர்ஜிக்க..

ஹா..ஹா.. என்று அலட்சியமாக சிரித்தவன் ," வாங்க முடியுமா இல்ல.. வாங்குவேன்.. " என்றான் அமர்த்தலாக..  "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கணும்" என்று உறுமவே..
தலை தாழ்த்தி நின்றவனிடம்.. வேகமாக அவனை நெருங்கியவன்..  , "பெரிய தப்பு பண்ணீட்ட.. அதுக்கு தண்டனை வேணாம்.. உனக்கு.. பதினொரு மணிக்கு நீ என் இடத்தில வந்து இருக்கணும்.. இல்ல பதினொன்னு ஒன்னுக்கு  இந்தியால இருக்க உன் வளர்ப்பு தங்கச்சிக்கு நான் பொறுப்பில்லை.. " , என்று அலட்சியமாக கூறி.. திமிராக வெளியேறியவனின் செயலில்..  தெனாவட்டு இருந்த இடம் காணமல் போனது .

ரிச்சர்ட்டை எவ்வளவு வலிக்க அடித்தாலும் தாங்கிக் கொள்வான் . ஆனால் அவனை நம்பியிருப்போருக்கு ஒன்று,  என்றால் சும்மா இருக்கும் அளவிற்கு பழக்கவழக்கம் அற்றவன் அல்ல..
என்ன ! சரணை எதிர்க்க முடியாவிட்டாலும் ,போராடி காத்துக் கொள்ள முடியும்.. ஆனால், இந்தியாவில் இருப்பவளுக்கு ஒன்று என்றால்.. அதுவும் அவன் அடிக்க நினைப்பது.. அவன் பலவீனத்தில் என்றால்.. அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டான் .

எதிரில் இருந்த விக்கிக்கோ ஒரு எழவும் புரியவில்லை.. கேங் ஸ்டார்.. டான் மூவி பார்த்த பாதிப்பில் இருந்தவன்.. தொய்ந்து விழுந்த ரிச்சர்டைப் பார்த்து வேகமாக நெருங்கி.. " என்ன எழவுடா நடக்குது இங்கே ? " , என்று கையில் இருப்பதை பார்க்க.. அவனுக்கும் அதிர்ச்சி தான் . இந்த அதிரடி தேவையா என்பது போல்.. ரிச்சர்ட்டிம் " டேய்.." என்று அவன் தோள் தொட.. வேகமாக தட்டிவிட்டவன்.. " நான் செஞ்சது.. பேசுனது தப்பு தான் .. அதுக்கு அவர்.. என்னை எதாவது பண்ண வேண்டியது தான.. எதுக்காகடா.. என்கூட இருக்கறவுங்கள பலி வாங்கணும்.. அவ.. தாமரை ஏற்கனவே இவர் அழிச்சது பத்தாதா.. இன்னும் அசிங்கப்படுத்தணுமா.. அவள... அவள போய்.. என்னை பத்தி தெரிஞ்சா உதயா திரும்பி கூட பாக்க மாட்டா.. " , என்று முகத்தை மூடிக் கொள்ள.. நண்பனிடம் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும்.. என்று எண்ணியவன் ..

" உனக்கு நான் இருக்கேன்டா.. " என்று விக்கி மனதார கூறவும்.. " நீ இங்கேயே இருந்தும் தான்.. உனக்கே தெரியாம இவ்வளவு விஷயம் நடந்து இருக்கு.. " என்று வெளியேற போனவனை போகவிடாமல் தடுத்து.. தன் நண்பனுக்கு அழைத்தான்.

பத்து நிமிடத்தில் விக்கியிடமிருந்து அழைப்பு வர.. "என்ன சொல்றான்.. உன் ஃப்ரெண்ட்.. " என்று எள்ளலை விடாது கேட்டிட..

" ஏன்டா இப்படியெல்லாம் செய்யுற..?  நேத்து நீ பேசுனதுக்கும்.. இப்ப நீ நடந்துக்குறதுக்கும் சமந்தம் இருக்கா..? " தன் ஆதங்கத்தை வெளியிட்டவனாய்.. பதிலில்லை..

" டேய் சரண்.. இது அவங்க வாழ்க்கைடா.. நாம நுழைஞ்சு.."  இடையிட்ட சரண்..

" அவன் என்னை வந்து பாக்கணும்.. இனிமேல் நான் சொல்றது தான் கேக்கணும்.. இல்லேனா.. இந்த ஆர்.பீ.எஸ் சொன்னதை செய்வேன்.."  என்றவுடன் கீங்..கீங்.. என்ற ஓசை மட்டுமே இடம் பெற..

முழு அரக்கனாய் மாறியிருக்கும் தன் நண்பனை நினைத்து , அவன் அருகே விக்கியும்.. பொத்தென்று அமர்ந்துவிட்டான் . ஏளனமாக உதடு வளைந்தவனை.. " என்னை ஓட்றத நிறுத்தீட்டு போ.. போய் அவன் முன்னாடி நில்லு.. பாவம் அந்த தாமரை பொண்ணு.. உன் பங்குக்கு அவளை நீயும் கஷ்டப்படுத்தாதே.."  என்றவனாய் வெளியேறிவிட்டான்.

ரிச்சர்ட்டிற்கு வேறு வழி இருக்கவில்லை.. வாழ்நாள் முழுவதிற்கும்.. ஆர்.பீ.எஸ்ஸிற்கு அடிமை சாஸனம்.. எழுதிக் கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அவன் கூறிய நேரத்திற்கு முன்பாகவே சரணின் முன் நிற்க.. வெற்றிப் புன்னகை அவன் முகத்தில் ஆணவமாய் அரங்கேறியதாக ரிச்சர்டும், விக்கியும் நினைக்க..

அவன் முகம் பல வருடங்களுக்கு பிறகு.. வைர கற்களாக ஜொலித்த... ஆத்மார்த்தமான சிரிப்பு என்பதை அவன் மட்டுமே அறிவான் .

Continue Reading

You'll Also Like

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...