வா.. வா... என் அன்பே...

Galing kay kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... Higit pa

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

அன்பே -14

1.3K 29 6
Galing kay kanidev86

பகுதி - 14

அன்னையின் இழப்பை எண்ணி மருகுவதற்கும், தாமரைக்கு அவகாசம் இல்லாமல் போகவே.. உடன்பிறப்புகளுக்காக ஓடத் துவங்கிவிட்டாள் . இருக்கும் இடத்திற்காக, உண்ணும் உணவிற்காக, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுப்பட வேண்டுமே.. பணத்தின் தேவை தங்கையின் மருத்துவ செலவிற்கு.. அதிக தேவையாக இருக்கவே, அதற்கும் சேர்த்து பாடுபட வேண்டிய நிலை .

பல மாதங்கள் கடந்துவிட்டது, புகைப்படத்தில் மாலையோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்‌‌.. அந்த வீட்டில் ஒற்றை ஆளாக, தன்னந்தனியாக.. அன்னையின் முகத்தை மட்டுமே.. பார்த்துக் கிடந்தாள் . அவளின் நிலையை பார்க்க.. சுந்தரியக்காவிற்கோ, மனமே தாளவில்லை..‌

தன் தாய் உடன் இருந்தவரை, தம்பி தங்கையரும்.. கூடவே இருந்தார்கள் . ஆனால் இப்பொழுது , இருவரையும் , அந்த காப்பகத்தில் விட்டு வந்திருக்கிறாள்.. வீட்டில் அவர்களை தனித்துவிட பயந்தவளாய்..

சினிமாவில் வேலை பார்க்கும் நேரம் போக.. அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் என்று அழைக்கும் விழாக்களுக்கு அலங்காரத்திற்கு அழைத்தால் சென்று வந்து கொண்டிருக்கிறாள் .

இருக்கும் இடத்திற்கு,உண்ணும் உணவிற்கு, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுபட வேண்டுமே.. ஒரு வாரத்திற்கு பிறகு , இன்று தான் வெளியூரில் இருந்து வீடு திரும்பியிருக்கிறாள் .

படுத்த நிலையிலேயே.. அன்னையின் முகத்தை மட்டுமே, பார்த்தவாறு வெறித்துக் கிடந்ததவளுக்கு.. பூதகரமாய் பயமுறுத்தியவாறு இருந்ததது, தங்கையின் உடல்நிலை. தாயின் இழப்பு அர்த்தமற்றதாகி விடக்கூடாது என்ற பதபதைப்பு..

கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு , அதே போன்ற சுழலுக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டது போல் இருந்தது சரணுக்கு . கையில் சிகரெட்டை பிடித்தவனாக.. தீவிர யோசனைக்கு ஆட்பட்டவனாய் . ஒருபுறம் விக்கியின் விலகல் மற்றொருபுறம் தாராவின் காதல்.. மீண்டும் ஒரு அத்தியாயமா ? என்றே தோன்றியது .

பல வருடங்களுக்கு பிறகு, தாராவை பார்த்ததில்.. அதிக சந்தோஷமே.. ஆனால் , அவள் காதலிக்கிறேன் என்று கூறியதில் இருந்து அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. தன் மேஜையில் இருந்த ரிப்போர்டை, அரைமணி நேரத்தில் இருந்து பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டான் . ஆனாலும், ஒரு நிலைக்கு வர முடியாமல் மனம் முரண்டு பிடித்தபடியே இருந்தது .

தொழிலில் எத்தனையோ சாதித்து இருந்தாலும், பல அதிரடியான முடிவுகளை முடிவெடுக்க முடிந்தவனால்.. குடும்பம், நண்பர்கள் என்று வருகையில் இன்று வரை தடுமாற்றமே, " முடிவெடுக்கத் தெரியாத நீ என்ன ஆம்பளை.." என்று அபஸ்வரமாய் மான்சியின் குரல்..

அவன் யோசனையை கலைக்கவே.. தாரா மற்றும் விக்கி, அவன் அறைக்கு வந்து சேர்ந்தார்கள் . கையில்லா டீசெர்டுடன்.. ட்ரேக் பேன்ட் அணிந்து.. புகைப்பிடித்துக் கொண்டிருந்தான் . முறுக்கேறிய அவன் தோற்றத்தில்.. இன்றும் ஆச்சரியப்பட்டாலும், அடியோடு மாறியிருக்கும் அவன் குணம், தாராவிற்கு வருத்தத்தையே அளித்தது. பல சந்தர்ப்பங்களில் நண்பன் மாற வேண்டும் என்று நினைத்தவளும் அவளே.. இன்று அதற்கு வருந்துவதும் அவளே..

" என்ன மேம் யோசிச்சு முடிச்சிட்டீங்களா.. நாம உள்ள போலாமா?", என்று கேலியாக.. விக்கி கேட்டதும்.‌ தன்னிலை அடைந்தவள் ,"போடா.. " என்றவளாய் நகர்ந்து விட்டாள் .

"சரண்.." என்று அழைக்க.. வா என்பது போல் தலையசைப்பில் வரவேற்பவனின் முன், இருவரும் அமர்ந்தார்கள்.

"நான் நாளைக்கு ஊருக்கு போகனும் சரண்.. உன் முடிவு என்ன?" என்றாள் . சரண் விக்கியை பார்க்க.. "அவன் எப்பவோ பதில் சொல்லீட்டான்.. நீ சொல்லு..," என்றாள்.

" இது உன் லைஃப் தாரா.. நான் என்ன டெசிஷன் எடுக்க முடியும்.." என்றான் அமர்த்தலாக..

திகைத்து விழித்தவள், "இதுக்கு முன்னாடி.. நீ சொன்ன போதெல்லாம் உனக்கு தெரியலையா?" என்றாள் சூடாக..

கேன்டி கேம் விளையாடிக் கொண்டிருந்த விக்கி , சரண் ஆடும் ஆட்டத்தையும் வேடிக்கை பார்த்தவனாக.. அழுத்தமான பார்வையை அவன் மீது பதித்து.. கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க போராடியவனாக..

" நீ.. ஒரு முடிவெடுத்து பேசும் போது.. என் பதில் உனக்கு எதுக்கு?", என்று ஆழமாக பார்த்தவனாய் கேட்டிட..

"நீ இப்போ நல்லா பேச கத்துகிட்ட.. வாக்குவாதம் பண்ணாம.. நீ என்ன நினைக்கிற அதை சொல்லு.."என்றாள்.

"எனக்கு இஷ்டமில்ல.." என்று பொட்டில் அடித்தார் போல் பதில் வர..

"ஏன்.. ?"

"இது என்ன கேள்வி.. பிடிக்கல.. அவன் சரி இல்ல.. அவ்ளோதான்.." என்றான் மிகுந்த எரிச்சலோடு..

"அப்போ நீ..?" என்று தன் கையை கட்டிக் கொண்டு வினவியவளை, ஒற்றை புருவத்தை மேல் ஏற்றி பார்க்க..

"இல்ல , பொண்ணுங்கள அனுப்புற அவரு தப்பானவர்னா.. பொண்ணுங்கள கூப்பிடற நீ.. யாருன்னு கேட்டேன்..?" என்றாள் .

அவ்வளவு தான், அவன் எழுந்த வேகத்திற்கு.. அவன் அமர்ந்திருந்த நாற்காலி எங்கோ மூலையில் விழ.. அவள் கரத்தை தரதரவென பற்றியவனாய்... வெளியே தள்ளியவன்.. " இந்த தப்பனவன் ஃப்ரெண்ட் ஷிப் உனக்கு வேண்டாம்." என்று கதவை அடைத்து விட்டான்.

இமைக்கும் நொடிக்குள் அனைத்து நடந்திருக்க.. விக்கி புரிந்து கொள்வதற்கு முன்பாக அனைத்தையும் முடித்துவிட்டான் . வேகமாக.. தாராவிடம் ஓடியவன், விழுந்து கிடந்தவளை தூக்கிவிட்டு.. "படுச்சு படுச்சு சொன்னேன்.. கேட்டியா நீ.. பாரு.. ரத்தம் வருது வா.." என்று அவன் பங்கிற்கு.. அவனும் கோபப்பட..

"இல்ல நா வரலை.. நா.."என்று அழுகையில் துடித்தவளை,

" வா தாரா.. இப்போ மட்டும் நீ வரலை.. அவன் இன்னும் மோசமான மனநிலைக்கு போயிடுவான்.. புரிஞ்சுக்கோ.. உள்ள வா.. உன் கேள்வி தப்பில்ல.. ஆனா நீயே இப்படி கேக்கலாமா?"என்று அப்பொழுதம் நண்பனை விட்டுக் கொடுக்காதவனாக..

" வி.‌க்கி.. நா.. எனக்கு.. "

" விடு.. உள்ள வா.. அவன் என்ன பண்றான்னு தெரியலை..", என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சரண் அவளை தேடி வந்துவிட்டான் . அமைதியாக உள்ளே வர , முதலுதவி பெட்டியை விக்கி எடுக்க.. அவன் கரத்தில் இருந்து வாங்கியவன், அவளுக்கு ஏற்படுத்திய காயத்திற்கு மருந்திட்டவனாய் ,

"ரிச்சர்ட் , இங்க வந்து ஏழு வருஷம் ஆகுது.. ஒரு வருஷம்.. ஹோட்டல வேலை பாத்திருக்கான்.‌. அப்புறம் இந்த தொழிலுக்கு மாறிட்டான்.. அவனா எந்த பொண்ணையும் பர்பஸா யாருக்கும் அனுப்ப மாட்டான்.. அதே மாதிரி.. அவன்கிட்ட கேக்குறவங்களுக்கு தானா கேக்குறவங்களுக்கு மட்டும்.. இதுல வர பணத்துல, பாதிக்கப்பட்ட சில பெண்கள்.. குழந்தைகளுக்கு ஆதரவு கொடுக்குறான்.. ஃபேமிலி மாதிரி.. அவுட் டாஃப் டவுன்ல வீடு இருக்கு. அவனுக்கு சொந்தம்ன்னு யாருமில்லை.. ஆனா ஒரு பொண்ணு ரொம்ப நெருக்கமாக இருக்கா.. அவன் அட்ரெஸ்.. நம்பர் இதுல இருக்கு." என்றவன் உண்ணும் உணவு வரை.. அவனைப் பற்றி சொல்லி முடித்தான்.. அவனுடைய சில கருப்புப் பக்கங்களை தவிர்த்து.. ஏன்..? மறைத்திருந்தான் என்றும் சொல்லலாம் .

தாரா , விக்கி இருவரும் அதிர்ந்துவிட்டார்கள் . ஏனென்றால் , தாரா அவனை விரும்புவதாக சொல்லி முழுதாய் இரண்டு மணி நேரம் முடிந்திருக்கவில்லை.. ஆனால் அதற்குள்ளாக.. அவனுடன் இருப்பவர்களின் சுயம் வரை ஆராய்ந்து.. நூறு பக்கத்திற்கான தகவல்களை சேகரித்து விட்டான் . கூடவே இருந்த விக்கிக்கும் வியப்பே!

"அவன் சரியில்லைன்னு சொன்னது.. குணத்தை இல்ல.. இந்தியால ஒரு பொண்ணோட.. இன்னும் தொடர்புல இருக்கான்.. அவளை பத்தின டீடெயில்ஸ் நாளைக்கு வந்துரும்.. ஒருவேளை கேர்ள் ஃப்ரெண்டாவோ.. மே பீ ஃவைப்.. எது வேணாலும்..", என்று தோள் குழுக்களோடு நகர்ந்துவிட..

" அது அவன் தங்கச்சி.. " என்று முடித்தான் விக்கி .

அவ்வாறு அவன் கூறவே வேகமாக திரும்பிப் பார்க்க , " ஒரு தடவை ரிச்சர்ட் என்கிட்ட சொன்னான் " , என்றான் .

" எனக்கு அவரு வேண்டாமாம்.. ஆனா, எனக்கு அவரு மட்டும் தான்டா வேணும்.. நீயும் ஏன் புரிஞ்சுக்காம கோபப்படுற?" என்றாள் அழுகையோடு..

விக்கியும் அந்த வாக்கியத்தை தவிர்த்து வேறெதுவும் பேசவில்லை. "அவரை நம்பி போறவங்களை உயிரை கொடுத்து பாதுகாப்பா வச்சு பாத்துப்பாரே தவிர.. கோடி ருபா கொடுத்தா கூட வாங்க மாட்டாரு சரண்.. ஏன்னா எனக்கு அவரை பற்றி நல்லா தெரியும்.. இதுக்கு தான நீ பயப்படுற.." என்றாள் . அதுவே உண்மையும் கூட ஆனால் எப்படி தாரா கண்டு கொண்டாள் என்பது அவனுக்கு அறியாத புதிரே..

" சரி .. சார் என்ன சொல்றாரு?" நண்பனை இழுக்க..

"என் நியாய தராசுல.. சரண் ஒருபக்கம் ரிச்சர்ட் ஒருபக்கம் வச்சா.. சரி சமமா நிப்பாங்க.." என்று தாராவின் முகம் பார்த்தவனாய்.. தன் பேச்சை முடித்துக் கொண்டான் . இதற்கு மேல், விளக்கம் தேவையில்லை என்பது போல்.. முன்னால் போலீஸ்காரன் வாயிலிருந்து வெளி வந்த முத்தான வார்த்தைகள் .

"ஆல்ரைட்.. உனக்கு ஷூட்ஸ் முடிஞ்சிடுச்சா..?"

"ம்.." என்றாள் .

"அப்ப நீ கிளம்பு.. நாளைக்கே.. தூங்கு.. நீ வாடா.. " என்று தோளோடு அணைத்து அழைத்து வந்தவன்.. மறக்காமல் விக்கியையும் உடன் இழுத்துச் சென்றான் . தனிமை, அவளுக்கும் தேவையாக இருக்கவே.. அமைதியாய் ஏற்றுக் கொண்டாள் .

" உனக்கு என் மேல என்ன கோபம் ?" என்று விக்கியின் முகம் பார்த்து கேட்ட..

" அட.. பரவால்லையே.. சீக்கிரமா கேட்டுட..", என்று கேலியாக கேட்டாலும்.. அவன் வலியை உணர்ந்தவன்.. அமைதியாக நின்றிருந்தான் .

"கோபம் இருந்தது.. ஆனா இப்ப இல்ல..", என்றவன் சிரித்து.. அதிகமாக சரணின் தலையை சுற்ற வைத்தான் . மீண்டும் என்ன என்று கேட்டு, தன்னை குழப்பிக் கொள்ள விரும்பாமல்.. தாராவிடம் சொல்லாமல் விட்ட ரிச்சர்ட்டின் கருப்பு நாட்களை நண்பனுடன் பகிர்ந்தான் . சரண் சொல்ல.. சொல்ல.. துடித்தே விட்டான் என்றே சொல்லலாம். இருவரின் மனங்களும் கணத்தே கிடக்க..

"நம்ம தாரா தவிர.. வேற யாரால அவன பாத்துக்க முடியும்னு நினைக்குற.. " விக்கி கேட்கவும்..

ம்ஹும்.. என்று ஆழமான பெருமூச்சை வெளியேற்றியவன்.. "அவ நினைக்கிற மாதிரி.. அவனை நான் நினைக்கலடா.. இதோ இந்த ரிப்போர்ட் பாக்குற வரைக்கும் தான்.. என் நினைப்பு மாறல.. ஆனா அதுக்காக.. அவன் இப்படியே இருக்குறதுல.. எனக்கு உடன்பாடு இல்லை. உதய்தாராவோட கணவன்.. இந்த மாதிரி ஐடென்டியோட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.." என்றான் .

" அ..து..க்..கு.. ', என்று அலறியவனாய்.. ஒருவனையே வைத்து சமாளிக்க முடியவில்லை.. இதில், இவனைப் போன்றே.. ம்ஹூம் சரணுக்கே அப்பானாய் குணத்தில் இருப்பவனோடுமா.. என்ற எண்ணத்தில்..

" ஹா..ஹா.. என்ன பண்றது நண்பா.‌. நீயா புதுசா தேடிக்கிட்ட ஃப்ரெண்டு.. அப்ப.. தலைய உருட்டிக்க வேண்டியது தான.." என்று கூறி.. அவனோடு இருந்த உன் பழக்கம் எனக்கு பிடிக்கவில்லை என்பதை கோடிட்டு காட்டியவனை ..

புன்னகை தவழும் முகத்தோடு... "எவ்வளவு மாறினாலும்.. உனக்கு இந்த பொறாமை குணம் மட்டும் மாறலடா.." என்று மனம்விட்டு சிரித்து தோழனை இறுக்கிக் கொண்டான் .

இருவரும் நாளைக்கு செய்ய வேண்டியவைகளை திட்டமிட்ட பின்.. தானே, தாமரையின் துயரங்களுக்கு காரணமாக போவது அறியாமல் , விக்கி ரிச்சர்ட்டின் தங்கை பற்றிய தகவல்களை சேகரிக்கத் தேவையில்லை என்று கூறிவிட.. சரணும் அப்படியே விட்டுவிட்டான் .

ஒருவேளை, தடுக்காமல் இருந்திருந்தால்.. வரும் நாட்களில் தாமரை அனுபவிக்கப் போகும் துயரங்களில் இருந்து தப்பித்திருக்கலாமோ..!

Ipagpatuloy ang Pagbabasa

Magugustuhan mo rin

62.6K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
95.2K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
9.9K 361 29
தேவதையின் மௌனமான அழுகை
56.3K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...