வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 8

1.4K 39 22
By kanidev86

பகுதி - 8

விக்கிக்கோ... அவள் அழைத்த 'அண்ணே' என்ற சொல்லே , அடுத்த அடியை எடுத்து வைக்கவிடாமல் கட்டிப் போட்டது என்றால் ... மேற்கொண்டு கூறியதில் முடிவெடுத்து , பயங்காட்டுவதை நிறுத்தி அமர்ந்துவிட்டான் .

" யார் நீ ? " என்று ஆத்திரத்தை அடக்கியவனாக கேள்வி கேட்டவனை.. அஞ்சி நடுங்கியவளாக கூறத் தொடங்கினாள் .

அவள் நிலையை கேட்டால் கல்லும் கரையும்.. விக்கி ஊனும் உயிரும் கொண்டவன்.. அவன் இளகாமல் இருப்பானோ.. அதுவரை கடைப்பிடித்திருந்த அதிகாரத்தனத்தை கைவிட்டவனாக.. மடித்து அமர்ந்து கதறி துடிப்பவளை பார்ப்பதற்கே , அவ்வளவு பரிதாபமாக இருந்தது . பாவம் , சிறுபெண் வயதிற்கு அதிகமான சோதனைகளை தாங்கிக் கொண்டுயிருக்கிறாள் என்றே தோன்றியது .

நேற்று வரை நடந்ததை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவள் , சரண்மித்ரனை பற்றி மட்டும் வாயே திறக்கவில்லை . பணம் தருவதாக கூறினார் என்றதோடு முடித்துவிட்டாள் . 

இந்த கணம் வரை அவன் அவளிடம் நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும்.. பேதைக்கு ஏனோ , அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுக்கத் தோன்றவேயில்லை . தவறானவனாக சித்தரிக்கவும் விரும்பவில்லை . அவள் அறிந்த சரண்மித்ரன் இப்படிப்பட்டவன் அல்ல.. அதுமட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் இருக்கலாம் . 

தன் தலையை முட்டியில் வைத்து முகத்தை மறைத்தை அழுது துடிப்பவளின்.. அருகே சென்று , மென்மையாக தலையை கோத.. வெடுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகளில் நிறைந்து வழிந்த வலி.. விக்கியை பெரிதும் திருப்பிப் போட்டது .

" ஷ்..ஷ்.. பயப்படாதம்மா.. நீ யாருன்னு தெரிஞ்சுக்க தான், இப்படி நடந்துகிட்டேன்.. நீ பயப்படுற மாதிரி நா கெட்டவன் இல்ல.. சரண் உன்ட்ட பணம் கொடுக்க சொல்லியிருக்கான் . என்ன காரணம் சொல்லலை.. பெரிய தொகை அதான்.. நீ பயப்படாத சரியா.. உனக்கு ஹெல்ப் பண்ண சொன்னான். அதுவும் இல்லாம தூங்கிற உனக்கு காவல் காக்க சொன்னதுல ரொம்பவே கடுப்பாயிட்டேன் . ஐயம் ஸோ ஸாரி ஸிஸ்டர்.." ,  என்று மென்மையாக சிரிக்க..

வெளிர் ப்ரௌன் நிற கருவிழிகளை அழகாக உருட்டி விழித்து.. தூங்கும் தன்னை எழுப்பாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னான் என்றதில் எழுந்த வியப்பை.. மறைக்காமல் வெளிக்காட்டியது . அந்த சிறுபிள்ளை தனத்தில் மென்னகை உதயமானவனாக.. தன் கரத்தை அவள் முன்  நீட்டினான் . அவள் எழுவதற்காக.." பரவால்ல.. " என்று அழகாய் தவிர்த்து.. எழுந்து நின்றவளின் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு..

" ரொம்ப பயந்துட்டியா பாப்பூ.." என்றவன் அவள் கரத்தில் பணத்தை கொடுத்தான் .

" தாமரை.. ம்.. உன்னை சரண் தப்பா.." என்று வெளிப்படையாக தன் நண்பனை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் அதேசமயம் அவள் மேல் எழுந்த பரிவில்.. தயங்கியவாறே கேட்க முயன்றவனிடம் ,

" ச்சே.. ச்சே..‌ அப்படி எல்லாம் இல்லை.. நா.. உதவி கேட்டு தான் வந்தேன்னு தெரியும்.. " , என்று கூறுவதற்குள் குரல் உள்ளே சென்றுயிருந்தது .

விக்கிக்கு தெரியுமே.. காலையில் தன்னிடம் நடந்துக் கொண்ட முறையிலேயே... அவளிடம் எப்படி நடந்திருக்கிறான் என்பது . மறைக்க நினைக்கும் அப்பெண்ணிடம் தான் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளாமல்.. சரி என்பது போல் கேட்டுக் கொண்டான் .

சரணின் நிலையோ , படு மோசமாக இருந்தது . தன் கடமை அழைக்க தவிர்க்க முடியாமல் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டிய தொழில் சார்ந்த கூட்டத்திற்கு வந்துவிட்டான் . ஆனாலும் நினைவுகள் என்னவோ , விட்டு வந்த இடத்தை சுற்றியே இருக்க..  மிகுந்த எரிச்சல் அடைந்தான் .

ஐந்து மணிக்கு மேல் ஆகியும் அவள் துயில் கலையாமல் போகவே.. எழுப்பவும் மனம் வரவில்லை . அதேசமயம் அவளை மட்டும் விட்டுவிட்டு செல்லவும் பிடித்தம் இல்லை .

ஒருவேளை , அச்சிறு பெண்ணிடம் இனிமையாக நடந்திருந்தாலோ.. அல்ல அவள் கூறவறுவதை பொறுமையாக கேட்டிருந்தாலோ... இந்த அவதிக்கு ஆளாகியிருக்க மாட்டான் . " நீங்க ரொம்ப நல்லவங்க மித்ரன் ஸார்.."  என்று தாமரையின் கூற்றே , அவனை முழு மிருகமாகி இருந்தது . அத்தோடு இல்லாமல் உன்னால் எனக்கு எதுவும் ஆகாது என்பது போலான பார்வை.. எனக்கு இது எதுவும் தேவையே இல்லை . நான் நல்லவனே கிடையாது என்று உரக்க மனதிற்குள் கத்தியவன்.. அவளிடத்தில் வேட்டையாடும் வேங்கையாய் மாறி.. கொத்திக் குதறித் திண்றான் .

அவள் பார்வையில் இருந்த ஆராய்ச்சியில் முழுதாய் தன்னிலை மறந்திருந்தான் . ' இதை நீ சொன்னது தவறு.. என்று உன்னை கதற வைப்பேன் ', என்பது போல் சபதம் மேற்கொண்டவனாக.. விடாமல் வார்த்தைகளாலும் செய்கையாலும் அவள் உடன் இருந்தவரை படுத்தி எடுத்துவிட்டான் .

ஆனால் இயல்பான குணம் என்பதை எவ்வளவு மாற்றிக் கொண்டாலும் ..  சிலவற்றில் நாம் நாமாகவே இருப்போம் . நம்மைவிட்டு அகலவே அகலாது.. அதுபோலவே அவனுடைய பூஞ்சை மனம் அவளுக்காக வருந்தியது .

அவ்வளவு மூர்க்கத்தை தான் காட்டியிக்கக் கூடாது என்று தன் மனமே எதிர்த்து கேள்வி கேட்டதில்.. செய்வது அறியாது திகைத்தான் . பின்னே , அவன் நன்கு அறிந்துக் கொண்டானே தான் படுத்தி எடுத்தவள்.. தன்னால் மட்டுமே தன் கன்னித்தன்மையை இழந்தாள் என்பதை .

யாருக்கு உன்னை நிரூபிக்க இவ்வாறு நடந்துக் கொண்டாய் என்ற மனசாட்சியின் கேள்வியே வண்டாய் குடைந்து கொண்டிருந்தது . குழந்தையென துயல் கொண்டிருந்தவளின் முகத்தை பல மணி நேரமாக பார்த்தே கண்டித்த மனதினிடமிருந்து தப்பிக்கவே.. அவளிடம் நேரடியாக தன்னால் பணம் கொடுக்க இயலாது என்று அஞ்சியே விக்கியிடம் பொறுப்பை ஒப்படைத்து  வந்தாகிவிட்டது . ஆனாலும் மனம் அவளை சுற்றியே வட்டமடிக்க.. மெல்ல மெல்ல உள்ளுக்குள் அனல் வீசத் தொடங்கிவிட்டது .

தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவளை எண்ணி வெந்து தணிந்தான் . " இவள யாரு என்னை தேடி வரச் சொன்னது.. வேற எங்கேயாவது போய் தொலைஞ்சு இருக்க வேண்டியது தான.. ச்சை.. நான் கேட்டேனா ‌.. இவட்ட.. நல்லவனா கெட்டவனான்னு.. கான்டெக்ட் சர்டிபிகேட்‌‌.. எங்க இருந்து கிளம்பி வந்து இருக்கான்னு தெரியல.. என் உயிர எடுக்க.. ச்சை.. " என்று பலவற்றை நினைத்து சித்தம் தடுமாறி போனான் .

அவள் கிளம்பி வந்த இடம் அறிந்தான்..? தாமரையின் நிலை அவ்வளவுதான் . இதற்கே அவனிடம் இவ்வளவு பாடு !

தன் அலைபேசியில் கண் பதித்தவனுக்கு.. இவ்வளவு நேரங்கடந்தும் விக்கியிடமிருந்து அழைப்பு வந்திருக்கவில்லை . அதுவேறு ஒரு பக்கம் எரிச்சலை அதிகப்படுத்தியவாறு இருக்க..  அவள் இதுவரை தன் ஹோட்டலை விட்டு வெளியேறியிருக்கவில்லை என்பதும் கேமரவின் மூலம் கண்டுக்கொண்டான் .

ஷிட் என்று கொதித்துக் கொண்டிருக்கும் பொழுதே‌... அவன் கண்கள் எங்கும் அசையாமல் நிலைக் குத்தி நின்றுவிட்டது . வாயிலில் சிரிப்போடு ரிச்சர்டின் தோள் வளைவில் விக்கியுடன் பேசிக் கொண்டிருந்தாள் . அவ்வளவே.. சரண்மித்ரன்.. சுட்டெறிக்கும் பகலவனாக மாறி.. பலி வெறியோடு தாமரையையே வெறித்தவனாய்...

இன்று காலையில் அவன் விழிப்பதற்குள்ளாக அவள் சென்றுவிடவே.. நேற்று இரவு பணத்திற்காக வந்தாக கூறியவள் வாங்காமல் போனாளே.. என்று அதிகம் யோசித்தவனுக்கு.. தன் மொபைலை வைத்து விட்டேன்.. என்று பதற்றத்தோடு வந்தாலும்... அதை மீறிய அதிக சோர்வும் தெரிய பாவமாகவே நினைத்தான் . ஆனாலும் பயங்காட்டவே , அவள் மீது விழுந்தவனுக்கு.. நேற்றைய பார்வையே வீசவும்.. சுறுசுறுவென கோபம் பெருகியதில்.. ' உன் நினைப்பு தவறு பெண்ணே..' என்று கொக்கரித்தவனாக படர்ந்து விட்டான் .

அவள் கழுத்து வளைவில் புதைந்தவனாக..  " எப்ப.. உனக்கு ப்ரியட்ஸ்.." என்று அலட்சியமாக கேள்வி கேட்கவும்..

அவன் அதிரடியான பகிரங்க கேள்விகளில் உதடு துடிக்க.. இந்தோ விழுந்துவிடுவேன் என்று காத்திருக்கும் கண்ணீரை உள்ளே இழுத்தவளாக.. அவன் முகத்தை பார்த்தாள் ..

" ஏய் சொல்லு.. அவசரத்துல நா வேற எதுவுமே யூஸ் பண்ணல.. நீ எப்பவும் போல சேஃப்டியா தான இருப்ப.. இல்ல.‌. பணம் வாங்கனும்னு எதுவும் ப்ளான் பண்றியா.. அதாவது.. என் குழந்தை.. நான் ஏமாத்திட்டேன்னு.. பணத்துக்காக படுக்க வந்தவளுக்கு.. இது மாதிரி பண்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே " என்று லாவா திரவத்தை அவள் மீது தெளித்தவனாக.. எழுந்து அமர்ந்தவனை.. இமைக்காமல் மட்டுமே பார்த்திருந்தாள் .

அந்த பார்வையே , அவளைவிட்டு இத்தனை தொலைவிற்கு வந்த பின்னும்.. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் , அவனை அரிப்பூச்சியாய் அரித்துக் கொண்டிருக்க..

இவளோ அதற்கெல்லாம் நான் தகுதியானவளே அல்ல என்னும் விதமாய் குலாவிக் கொண்டிருக்கிறாள் . அதுவும் அவனிடத்தில் இருந்தே..

" உன்னை விட மாட்டேன் டீ.. என்னையே ஏமாத்திட்ட இல்ல.. நல்லா சிரி.. இனிமேல் எப்படி சிரிக்கிறேன்னு பாக்குறேன்.."

இதுவரை அவளிற்காக தன்னைத்தானே வதைத்துக் கொண்டவனுக்கு.. கோபம் தாளவில்லை . இப்பொழுது அவன் தோள் வளைவில் சுகமாக சாய்ந்திருப்பதில்.. மறுபடியும் ஏமாந்து போனே.. என்று கண்மண் தெரியாத கோபம் . அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.. விக்கியிடமும் அவள் வேலையை காட்டியதாக நினைத்தான் .

அவளையே பார்த்திருந்தவனின் விழிகளில் , அத்தனை குரூரத்தை சுமந்தவனாக.. இமைக்காமல் பார்த்திருந்தான் . அதற்கு மகுடம் சூட்டுவது போல் விக்கியின் செயல் இருந்தது .

Continue Reading

You'll Also Like

138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
19.4K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
56.3K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்