வா.. வா.. என் அன்பே - 117

Start from the beginning
                                    

சரண் தன் அறையின் கதவில் , அத்தனை ஆத்திரத்தையும் காண்பித்தவனாக , தன் வேக நடையால் கீழ் இறங்கி இருந்தான் .  அந்த இடத்தையே நிறைத்த அவளது அலைபேசியின் சத்தம் மிக அருகே அவளுக்கும் கேட்க , தாமரையும் வேகமாக திரும்பிய போது , சமையல் அறையின் வாயிலில் நின்று இருந்தவனின் முகம் பெரும் இறுக்கத்தில் இருந்தாலும்.. மனைவியின் கரத்தை பிடித்து , அழைப்பை ஏற்காத நிலையிலேயே  கொடுக்க , அழைப்பிற்கு சொந்தகாரர் யார் என்று திரையை கண்டவளுக்கோ , விழிகள் இரண்டும் தெறித்து விழும் அளவிற்கு விரிந்து , மிக அவசரமாய் , நன்கு உற்று நோக்கியவளாக அவன் முகம் காண , பற்களின் இறுக்கம் தாடையில் காண்பித்து , துடைத்த முகத்துடன் , "ம்..", என்ற உறுமலையும் மறக்காமல் வெளியிட்டவனாக வேகமாக அங்கு இருந்து நகர்ந்துவிட்டான் . ' இந்தா பிடி..', என்ற உறுமலா அல்ல ' பேசு‌..', என்ற தோரணையா என்று குழம்பு அளவிற்கே , அவன் உடல்மொழி இருந்ததாய் .

ஒருமுறை இசைத்து ஓய்ந்தது மீண்டும் தொடங்கவே , " தாமரை யாரு விடாம கால்  பண்றது.. அடென் பண்ணி பேசு..", என்று சாவித்திரி ஓங்கி குரல் கொடுத்தவராய் அவள் கரத்தில் மின்னிய பெயரில் திகைத்துவிட்டார் .

மான்சியின் பெயர் மிளிர்ந்து இனி நான் ஓய்ந்துவிடுவேன் என்ற கடைசி நொடியில்  , அழைப்பை ஏற்றவுடனே , " உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்க . என் ஷான் வாரிசுக்கு மட்டும் எதாவது ஆச்சு . நான் மனிஷியா  இருக்க மாட்டேன் ‌..", என்று எரிதணலாய் முகம் சிவக்க கத்தியவளிடம் ,

வெகு நிதானமாகவே , " ஏன் இதுக்கு முன்னாடியும் நீங்க மனுஷியா இருந்ததா நினைப்பா . நான் இப்போதேன் க்கா எழுந்திருச்சேன் . அப்புறமா பேசுறேன் . நல்லா சில்லுன்னு எதையாவது குடிச்சிட்டு போய் வேலைய பாருங்க..", என்று படு நக்கலாகவே பதில் கூறியவளாய் அழைப்பை துண்டித்துவிட்டாள் ‌ .

கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய ஆரா , நேராக தன் வகுப்பு அறைக்கு செல்லும் பாதையில் குனிந்த தலை நிமிராதவளாய் ,. என்றும் போல் தோழிகளற்றவளாய்.. இன்றும் தனித்தே நடக்கத் துவங்கி இருந்தாள் ஆராதனா .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now