வா.. வா.. என் அன்பே - 115

Start from the beginning
                                    

" ஷ்.. ஷ்..", என்று இதழ்களின் மீது விரல் வைத்து பேசாதே என்ற ஓசையுடன் அடக்கியதோடு , கால்கள் தள்ளாட மாடி ஏறியவன்.. சிறிது நேரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவளை கரத்தில் ஏந்தியவாறே வீட்டை விட்டே கிளம்ப முயற்சிக்க.. தாமரையோ , உறக்கம் கலைந்தவள் கணவனின் பிடியில் இருந்து விடுப்படுவதற்காக திமிறிக் கொண்டு இருந்தாள் .

அதை பார்த்ததில் முற்றிலும் உறக்கத்தில் இருந்து தெளிந்தவனாக , " சரண் என்னது இது . அவளை எங்க தூக்கீட்டு போறீங்க . ம்ச்சு , மறுபடியும் முடியாம வந்திடப் போகுது..", என்று  மற்றவர்களின் உறக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக பற்களைக் கடித்துக் கொண்டே அடிக்குரலில் சீறியவனை , கண்டுக் கொள்ளாதவனாய் அழுத்தமாக ஏற்றிட்டாலும் , அவனுக்கு பதில் கூறாமல் , மெதுவாக கீழே விட்டவன்.. பார்வையை அவள் மீது பதித்தவனாக , " வா போலாம்..", என்று கட்டளையாக கூறவே ,

அண்ணன் தங்கை இருவருக்குமே ஆத்திரம் பொங்க , முறைப்புடன் அமைதியாக அவள் அறைக்கு திரும்பியவளுக்கு சரணின் சொற்களால் மறு அடியும் எடுத்து வைக்க விடாமல் செய்து இருந்தது .

" ஒரு அடி நீ எடுத்து வச்சாலும்.. உன் மித்ரனை நீ  பார்க்கிற கடைசி நிமிஷம் இதுதான் தாமரை..", என்று அழுத்தம் திருத்தமாக ஆளுமையுடன் அதேநேரம் சொன்னதை செய்தே தீருவேன் என்பது போல் அவன் குரல் உறுதியாய் ஒலித்து திகைக்கச் செய்து இருந்தது .

சரண் அவ்வாறு கூறியதும் நொடிக்குள் பதறியவர்கள் , வேகமாக அவன் முகம் காண.. அதில் தெரிந்த உறுதியைக் கண்டு வாய் அடைக்க செய்ததாய் .  இருவருக்குமே , எவ்வளவு பெரிய வார்த்தையை சுலபமாக கூறிவிட்டான் என்று துடித்து போய் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் தங்களது பலவீனம் பார்த்து தாக்குபவனின் மீது ரிச்சர்ட்டிற்கு கொலைவெறியே உண்டாக , தாமரைக்கோ.. அவன் கண்களில் விரவி இருந்த பிடிவாதத்தில் மிரண்டவளாய் நடுங் நடுங்கி போய் இருந்தாள் . சரணின் மீது இருப்பது ஆதங்கம் நிறைந்த கோபம்.. ' என்னை பற்றி உனக்கு தெரியாதா..', என்னும் பரிதவிப்பில் கிளர்ந்து எழுந்து இருக்கும் ஆத்திரம் . அதற்காக , இவன் இல்லாமல் அவளால் இருக்க முடியுமா.. அவனை காணாத இந்த இரு நாட்களே அவளுக்கு நகரமாக இருக்கையில் , சரணின் கூற்றில் வெளிப்படையாகவே அவளை நடுங்க செய்வே , ரிச்சர்ட்டால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதில் வெடித்துவிட்டான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now