வா.. வா.. என் அன்பே - 114

Start from the beginning
                                    

அவசரச் சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்ததும்.. மருத்துவரை தேடி அதீத பதற்றத்தில் துடித்த சரணிடம்  ,

" ஸார்.. ப்ளீஸ் காம் டவுன்.. கொஞ்சம் நகருங்க..", என்று அங்கு பணி புரியும் பெண் மருத்துவர் தாமரையின் நிலையை  சோதித்தவாறே ,

" என்னாச்சு..", என்று விசாரிக்க , சரணின் பார்வை மிக அவசரமாய் ரிச்சர்ட்டை தேடிட , அவனின் பரிதவிப்பான பார்வையின் சுழற்சியை கண்டவர் , எழும் பரிதாபத்தையும் மறைத்துக் கொண்டே திரும்பி பார்க்க .. மற்றொரு , ஆடவன் நின்று இருந்தான் .

" மேம் பேசீட்டே இருந்தவங்க திடீர்னு மயங்கீட்டாங்க . அப்புறம் , இப்படி ஆயிடுச்சு..", என்றான்

"மயங்கினதுல  கீழே விழுந்துட்டாங்களா.. ", என்று அவனோடு உரையாடியவராக இருந்தாலும் , அவளை பரிதோசித்தவராகவே வினவ ,

" இல்லை.. டாக்டர்.. பேசீட்டே இருக்கும் போது வயிறை பிடிச்சு சுருண்டு தரைல படுத்துட்டாங்க.. அப்போ , இப்படி ஆச்சு..", என்று அவளது ஆடையை சுட்டிக் காண்பித்து கூறினான் .

ஆனால் , அக்கேள்வியோ சரணை மாபெரும் சுழலுக்குள் சுழற்றி அடித்தது . அறியாமலேயே என்னும் போதும் , அவன் தோட்டத்தில் பிடித்துத் தள்ளியதே படமாக விரிய , ஆடவனின் அதரங்கள் வறண்டு‌.. இதயம் நொறுங்கி விடவே , அதன் பிறகு அவரின் எந்த கேள்விகளும் அவனை சென்று அடையாமல் போனதாய் ,

"  எத்தனையாவது மாசம்..", என்று அவரின் விசாரணைக்கு

" அஞ்சு..", என்று தயக்கமாகவே ரிச்சர்டே பதில் அளித்து இருந்தான் .

" ஓகே , ஸிஸ்டர் எழுதி தரதை வாங்கீட்டு வாங்க..  வெளில வெயிட் பண்ணுங்க..", என்றவர் அருகில் இருந்த செவிலியர் இடம் விவரங்களை தெரிவித்து மற்றொரு பெண்ணிடம் ஸ்கேனுக்கான ஏற்பாடுகளையும் , சில இரத்த பரிசோதனைகள் பற்றியும் கூறி அவளது வயிற்றில் குழந்தையின் ஆரோக்கியத்தின் நிலையை அறியும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் .

வெளியே காத்து இருந்தவர்களின் முகங்கள் பெரும் கவலையை பிரதிபலித்தவாறு இருந்தது.. சரணின் உயிரோ , அவன் வசத்தில் இல்லாதது போல் துடிதுடித்துக் கொண்டு இருக்க. அவசர சிகிச்சை பிரிவின் கதவையே வெறித்தவனாய் நின்று இருந்தான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now