" வாவ்.. ஆரா யூ லுக் வெரி பிரிட்டி..", என்று கிட்டத்தட்ட அலறிய தாராவை பிடித்து நிறுத்தி ரிச்சர்ட் ,

" எதுக்கு இப்படி கத்துற.. அவளும் பக்கத்தில தான நின்று இருக்கிறாள்..", என்று அறைக்குள் அவள் நடத்திய நாடகத்தின் எரிச்சலை அப்பட்டமாக காட்டியவனை.. ஒரு முறைப்புடன் கடந்தவள்..

" ஆரா , நீ வா.. நாம கீழ போகலாம்.. உங்க மாமா நிதானமா நின்னு முறைச்சிட்டு மெதுவா கீழ வரட்டும் , அத்தை ரெடியா இருங்காங்களான்னு பார்ப்போம்.. வா.. ", என்று அவள் கைப்பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக முன்னே நடக்க.. ஆராதனாவோ , மிரண்ட பார்வையை ரிச்சர்ட் மீது பதித்தவளாக , அவளது இழுப்பிற்கு சென்றவாய் , படிகளில் கீழ் இறங்கும் பொழுது ,

" அச்சோ , அக்கா என்ன எப்படி பேசுறீங்க.. மாமா பயங்கர கோவத்தில இருக்க மாதிரி இருக்காங்க..", என்று மெதுவான குரலில் திரும்பி திரும்பி பார்த்தவளாய் நடக்க.. அவனிடத்திலோ , பார்வையில் இம்மியளவும் மாற்றம் இல்லாமல் இருப்பது போல் , அவனது கால்களும் வேரூன்றி அசைய மறுத்ததாய் இருந்ததில் ,

" அக்கா.. அக்கா.. மாமா அப்படியே நிக்குறாங்க..", என்று ஆரா பயந்த குரலில் சொல்ல..

" இவ வேற.. வேணா நானும் கூடவே பக்கத்தில நின்னுக்கட்டுமா..", என்று நக்கலாக வினவவும் , திருதிருத்து பாவமாக பார்க்கவும் ,

" ஆரா.. அவரு சரண் செஞ்சதுக்கு என்னைய முறைக்கிறாரு.. இதுக்கு , நான் என்ன பண்ண முடியும் .. சொல்லு.. இதுங்க ரெண்டும் ( சரண் மற்றும் ரிச்சர்ட்டை குறிப்பிட்டவளாக )  எது செஞ்சாலும் நம்மள கேட்டா செய்யுறாங்க.. இல்லை நாம சொல்றதை அப்படியே ஃபாளோ பண்ணுவாங்களா.. அவன் அவனுக்கு என்ன தோணுதோ அதைத்தான் நடத்திக் காட்டுவான் .  அது தான் நடக்கும்.. இதுக்கு என்னைய திட்டினா.. நானா காரணம் .. நீயே சொல்லு.. எது எப்படியோ நல்லது நடந்தா சரின்னு நினைக்கலாம் இல்லை.. அதை விட்டுட்டு.. ரெண்டு நாளா குதிச்சிட்டே இருந்தா.. நானும் என்னதான் பண்ணட்டும்..", என்று மெல்லிய சீறலை வெளிப்படுத்த

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now