வா.. வா.. என் அன்பே - 106

Start from the beginning
                                    

" எங்க இருக்கீங்க.. எப்போ , வீட்டுக்கு வருவீங்க.", என்று விசாரணையில் ஈடுபட்டு இருந்தவளின் செயல்.. முற்றிலும் புதுமையாக இருக்கவே  ,

" வாவ் மானு..  ஷாக் மேல ஷாக்கா கொடுக்குறியே.. நான் கனவு எதுவும் காணுறேனா..", என்று தொடர் வம்பு அளந்தவனாய் , ஆள் அரவம் அற்ற பாதையில்.. அழுத்தமான தன் வேக நடையை தொடர்ந்ததில் , அதன் மெல்லிய சப்தம்.. டக்..டக்.. என்று மான்சியின் காதையும் தீண்டவே ,

" ஆரவ்.. ஆபீஸ்ல யாரும் இல்லையா என்ன.. அப்புறம் , நீங்க அங்கே என்ன பண்றீங்க..", என்று அவன் கேட்கும் காரணத்திற்கு பதில் கூறாதவளாய்.. அவன் நிலையை அறிய விரும்பியவளாய் ,  குழப்பத்துடன் கேள்விபுரிந்தவளின் பேச்சால்.. மேலும் , இதழ் விரித்தவனாக ,

" ஸ்டுடியோல இருந்து வரேன் மான்சி.. ஆமா , என்ன என் மேல இத்தனை பாசம் , அக்கறை. புதுசா இருக்கு.. ரொம்பவே , என்னை எதிர்பார்த்திட்டு இருக்க போல..", என்று விஷமாக கூறியவனின் பேச்சும் அவளுக்கு புரிந்து இருக்கவில்லை .

" ஆமா.. உங்களுக்காக டூ ஹார்ஸ்ஸா வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.. வேலை பார்த்தா மொபைல் ஆன்ல வச்சுக்கவே கூடாதுனு எதாவது இருக்கா.. அப்புறம் நான் எப்படி உங்களோட பேச.. ", என்று தாமரையின் அறைக் கதவை பார்த்தவாறே  பொறிந்து தள்ள..

" மை காட்.. என்ன பேபி.. இவ்வளவு ஹாட்டா இருக்கே.. எதுக்கு கால் ( call ) பண்ணின எனக்கு.. இந்த அளவுக்கு நீ கோவப்படுறதை பார்த்தா.. என்னை விட , நீ ஸ்வீட் நியூஸ் சொல்ல கூப்பிட்டு இருப்ப போல‌. என்ன இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் வச்சுக்கலாம்னு சொல்ல கூப்பிட்டியா.. நான்  சொதப்பிட்டேனா.. வித் இன் டென் மினிட்ஸ் டியர்.. ஐ ல் பீ தேர்..", என்று உற்சாகத்தை வர வழைத்தவனாக வம்பிற்கு இழுக்க..

" ஆர்வ் , டோன்ட் ப்ளே.. தாமரை நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா..", என்று சொல்லி நிறுத்தி இருந்தாள் ,

காரில் அமர்ந்து வண்டியை ஆன் செய்தவன் .. அப்படியே , அசையாமல் ஒரு விநாடி இருக்க..
" ஆரவ்.. என்ன எதுவும் சொல்லாம இருக்கீங்க..", என்று அவள் கேட்ட பிறகே ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now