வா.. வா.. என் அன்பே - 104

Start from the beginning
                                    

அவன் யார் என்று அறியும் வேகம்.. எந்த ஆணின் குரலுக்கும் அஞ்சி நடுங்கும் அவளது தேகம்.. இந்த குரலுக்கு கட்டுப்பட்டவளாய் ஆவலாக தேடி அலைய.. மீண்டும் , "இங்க..", என்று காற்றுடன் கரைந்து விளையாட.. தன் கால்களுக்கு வேகத்தை அதிகரித்தவளாக , அதன் திசையை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டே இருந்தாள்.. பளிங்கு முகம் , சிவந்து ரோஜாவின் நிறத்திற்கு மாறியதே தவிர.. வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரனின் உருவம் மட்டும் எங்கும் தென்படவில்லை .

இன்று , அவன் முகத்தை கண்டுவிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே மிதமிஞ்சி இருந்ததில் , வேகமாக.. ஓடியவள் கல் தடுக்கி , தலைக்குப்புற கீழே விழ.. மண்ணில் முகம் புதைந்து இருந்தவளின் அருகே மீண்டும் , அவன் குரல் பதற்றத்துடன் ,

" மெதுவா ஆரா.. நான் உன் பக்கத்தில தான் இருக்கேன்..", என்று அவன் கரத்தை நீட்ட , பிங் நிறம் பூண்டிருந்த அவனது உள்ளங்கையும் , வெண்மையான நகங்களும் தென்பட.. மெதுவாக , தன் கரத்தை உயர்த்தி அவன் முகம் காண முயன்றது பொழுது , பட்டென்று முகத்தில் எதுவோ விழந்ததில் பதறி அடித்து எழுந்தால் ஆராவின் முகத்தில் தலையணையை எறிந்து இருந்தார் சாந்தி .

சில நொடிகள் , அவளுக்கு இருக்கும் இடமும் மறந்து இருக்க.. திருதிரு என்று விழித்தவளால் கனவில் இருந்தும் வெளி வந்திருக்க முடியாமல் போனது . ஒரு ஆணின் கரத்தை அவளாக பற்றியதும் , அவன் முகம் காண தவித்ததையும் ஏற்க முடியாமல் தடுமாறியவளாக , எழுந்து தலையை தாங்கியவளாய் அமர்ந்து இருக்க ‌..

அதை பார்த்த சாந்தியோ ,
" அடியேயீ ஆரா.. எழுந்ததும் எப்படி உட்கார்ந்து இருக்க.. சீக்கிரமா கிளம்பு.. காலேஜ்க்கு லேட் ஆகலையா..", என்று தன் வெண்கல தொண்டையை திறக்கவும்.. இயல்புக்கு மீண்டவளாய் ,

" வந்துட்டேன் க்கா..", என்று குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள் . இயல்பாக இருக்க முயற்சித்தாலும் , தனக்கா.. இப்படி ஒரு கனவு.. தானே ஒரு ஆண் மகனை ஆவலாக தேடியது.. என்று திகைத்து , குழம்பி தவித்தவளுக்கு கல்லூரிக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தலையை உதறி.. சிந்தனைகளை விலக்கியவளாக , கிளம்பியவள்.. காலை உணவையும் உண்ணாது பறந்து இருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now