வா.. வா.. என் அன்பே - 101

Start from the beginning
                                    

ஒற்றை புருவம் உயர்த்தி , ' இது எதுக்கு..', என்று சட்டையை பார்வையால் சுட்டெரிக்க ,

' ம்க்கும்..' என்று மனதளவில் நொடித்தவன் ,

" என்னைக்கு டா.. இந்த டார்க் ப்ளூ ப்ளேசருக்கு பச்சை சட்டை , ஆரஞ்சு டைய்னு போட ஆரம்பிச்ச.. நீ எது போட்டுகிட்டாலும்.. இல்லை எப்படி போட்டுக்கிட்டாலும்.. அது நியூ ஃபேஷன்னு ட்ரெண்ட் ஆகும் தான்டா மச்சி.. அதுக்குன்னு இப்படியா , முதல்ல சேஞ்ச் பண்ணு.. துரை ஏற்கனவே கால் பண்ணி ஞாபகப்படுத்திட்டாரு டா.. பத்து மணிக்குள்ள சிம் வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க.. சீக்கிரமா வா..", என்று அவசரப்படுத்தவும்..

" ம்.. ", என்றவனாக ஆடையை மாற்றி வர..  அதன்பின் விக்கியின் பேச்சு முழுவதும் தொழில் சார்ந்ததாகவே இருந்தது .

காரில் பயணிக்கையில் , " சரண்.. திடீர்னு என்ன சிம் கூட பெர்ஸ்னல் மீட்டிங்..", என்று விசாரிக்க..

வண்டியை இயக்கியவனாகவே ,
" அதுவா.. நட்பு ரீதியான சந்திப்பு..", என்று எகத்தாளமாக பதில் அளித்தவனை.. நன்கு முறைத்து... கோபம் கொண்டு முகம் திருப்ப..

" விளம்பர விஷயமா..", என்று சிறு புன்னகையுடன் கூறியதுடன் மீண்டும் மௌனமானவனாய்... முதல் அமைச்சரின் வீடு செல்லும் வரை அமைதியுடனே பயணம் நீடித்து இருந்தது .

சரண் வருகையை தெரிவிக்கப்பட்டதும் , வேலையாள் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல..

" சரணு வா.. வா.. ரொம்ப பெரிய ஆளாயிட்ட.. இது யாரு.. ", என்று தோளில் தட்டியவராக வரவேற்று.. இருக்கையை காட்டினார் முதல்வர்..

அழகாய் புன்னகை சிந்தியவனாய் , " நல்லா இருக்கீங்களா.. எனக்கு எல்லாமே இவன் தான் விக்கி..", என்று விக்கியையும் அறிமுகம் செய்து வைக்க..

" நல்லது.. பெரியவர் எப்படி இருக்காரு..", என்று அவரும் நலம் விசாரிக்க

" நல்ல இருக்காங்க ஐயா..", என்றான் .

" வாங்க தம்பி சௌக்கியமா.. வீட்டில எல்லோரும் நல்லாருக்காங்களா..", என்று முதல்வரின் மனைவியும் நட்பு பாராட்டியதிலேயே.. நீண்ட நாள் குடும்ப நண்பர்கள் என்று விக்கி புரிந்துக் கொண்டான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now