வா.. வா.. என் அன்பே - 100

Start from the beginning
                                    

" என்.. குழந்தை.. ", என்று அவள் கூறியதும்.. தன் அச்சத்தையும் வெளியிட்ட பிறகோ , அவரின் தலையில் பல லட்ச இடிகள் ஓருங்கே விழுந்த அதிர்ச்சி கொடுத்து இருந்தது . 'தாமரை..' என்று அலறவே விரும்பினார் . ஆனால் , அதிர்ச்சியில் அதிர்ந்த உடலில் இருந்து  மீளவே முடியாது போனதில்.. கண்களை விரித்தவராக சிலையாய் உறைந்து விட.. ஏதோ , உந்துதலால் திரும்பி பார்த்த , தாமரைக்கும் அங்கு தன் மயூரியையும்.. அவரின் நிலையை பார்த்த பிறகோ , மருத்தவர் கூறியது எதுவும் அவளது செவியில் விழுந்து இருக்கவில்லை .

அவசரமாக , அலைபேசியை அணைத்து.. அவரை நெருங்க.. " வா..", என்ற ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டவர்.. திரும்பியேபாராமல் முன்னேறி விட.. ' போச்சு.. போச்சு.. ', என்று புலம்பியவளாக பின்னால் ஓடி வர.. சிறிது தூரம் சென்றவருக்கு மருமகளின் குணம் நன்கு தெரியும் ஆதலால்.. சட்டென்று , திரும்பி பார்க்க.. அவர் எண்ணியது சரி என்பது போல்.. வேகமாக , ஓட்டமும் நடையுமாக அருகில் வந்துக் கொண்டிருந்தாள்..

" நடந்து வா..", என்றதுடன் முன்னேற.. அவரின் சினத்தின் போதும் கூட காட்டும் அக்கறையால்..  சட்டென்று , தாமரையின் கண்களை நனைக்கவே செய்திருந்தது .

முகம் இறுக வாகனத்தில் அமர்ந்து இருந்தவரிடம் பேசவே அச்சம் ஆட்டுவிக்க.. மௌனமாக.. அதேசமயம் ஏக்கம் சுமந்தவளாய்.. அவரையே பார்த்தவளாக அமர்ந்து இருந்தாள் .

சற்றுமுன் , அவள் முகத்தில் ஆடிய ரௌத்திரத்திற்கும்.. இப்பொழுது , கையை பிசைந்தவளாய்.. நாய்க்குட்டி போல் மயூரியின் பின்னால் வந்து  பரிதவிப்புடன் அமர்ந்து இருக்கும் இவள் ஓரே நபரா‌.. என்றே வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சங்கருக்கு வியக்க செய்திருந்ததாய் ..

பயணத்தின் போது மறந்தும் தாமரையின் முகத்தை அவர் காண மறுத்திருக்க.. அலைபேசி அழைப்புகளில் மிக தீவிரமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் .

தங்கும் இடத்தில் இறங்கி பின்னும் , " அத்தை..", என்று நளிந்த குரலில் அழைத்தவளை அவர் கண்டுக் கொள்ளாமல் முன்னேற.. நெஞ்சு அடைப்பது போலவே அவளுக்கு இருந்தது . 

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now