வா.. வா.. என் அன்பே - 99

Start from the beginning
                                    

பெருமூச்சை , வெளியேற்றியவள்.. அழுத்தமாக , கீழ் உதட்டை அவளது மேற்பற்களிடம் சிக்க வைத்து.. கண்களை உருட்டியவளாக.. சரணின் அருகாமையை நினைத்து தடுமாறிக் கொண்டிருந்தாள்.. அதன் தாக்கம், கண்கள் சுரக்கும் உவர்ப்பு நீரை தடுக்க இயலாது போக.. கண்களை நிலையில்லாமல் சுழற்றியவளாய் ,  வேகமாக , மூச்சை வெளியேற்றியவளாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் . 

வண்டியை ஓட்டிக் கொண்டே கண்ணாடி வழியாக , தாமரையை நோட்டமிட்ட சங்கருக்கு , அவள் வந்த பொழுது இருந்த ஆத்திரம்.. கனல் தெறிக்க இருந்த தோற்றம் இப்பொழுது இல்லை.. ஆனால் , மிடுக்கும்.. இறுகிய முகமும் அவளகடத்தே புதிதாய் குடி ஏறி இருக்க.. பேச நினைத்தாலும் குரல் தொண்டையில் சிக்கியது போல் தோற்றுவித்து இருந்தது .

" அய்யோ.. இந்த பொண்ணு எங்க போச்சுன்னு தெரியலையே.. மேம்மையும் பார்க்க முடியலை .. பதினைந்து நிமிஷத்தில  ப்ரோக்ராம் ஆரம்பிக்க இருக்கு.. இப்போ என்ன பண்றது.. ", என்று புலம்பியவளாக  ரேகா இடமும் வலமுமாய் நடந்து பயின்றுக் கொண்டிருந்த பொழுது.. பார்வையில் விழுந்த தாமரையின் தோற்றத்தில் அப்படியே உறைந்துவிட்டார் .

உடலை ஒட்டிய கருப்பு நிற ப்ளாக் பேன்ட்.. வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற மேல் அங்கி.. என்று அணிந்திருந்தவளின் கூந்தலோ.. உச்சந்தலையில் முடிச்சிட்டு  கொண்டையாக மாறி இருக்க.. நெற்றியில் இருந்த பொட்டின் அளவு குறைந்து இருந்தது . கண்களில் பளிச்சிட்டு இருந்த காஜல்.. அடர் நிற உதட்டுச் சாயம் என்று மொத்தமாக மாறி இருந்தாள் . காதில் மின்னிய வைரக் கம்மல்.. மணிக்கட்டில் , நட்சத்திரமாக ஒளிர்ந்த தற்போதைய விலை மிகுந்த கைக்கடிகாரம்.. பட்டன் மூடப்படாத கழுத்தில் , ஒட்டித் தெரிந்த மெல்லிய செயின்.. என்று மிடுக்குடன் நடந்து வந்தவளின் கம்பீரமும் நளினமும்.. செதுக்கி வைத்த உடலின் அமைப்பில் , வாய் பிளந்தவாராய் நின்றுவிட்டார் .

' இந்த அழகை.. இந்த பொண்ணு இவ்வளவு நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்தது..', என்ற நினைப்பே.. அவருக்கு இப்பொழுது இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி ஆகியிருக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now