வா.. வா.. என் அன்பே - 98

Start from the beginning
                                    

பார்த்துக் கொண்டு இருந்த வேலையை , பாதியில் விட்டவராக.. அவளை நெருங்கியவர் ,  "தாமரை ம்மா.. என்னாச்சு டா.. அமைதியா தூங்கு அத்தை உன் கூடவே இருக்கேன்.. தூங்குடா ம்மா.. எதையும் யோசிக்காம தூங்கு..", என்று அவள் அருகில் அமர்ந்து மென்மையாக , அரைமணி நேரத்திற்கு மேலாக தலைக் கோதிய பிறகே.. அமைதியாய் ஆழ்ந்த துயிலுக்கு சென்றிருந்தாள் . அவளிடம் சீராக வந்த மூச்சுக்காற்றை பார்த்த பிறகே எழுந்தவர்.. தன் அலைபேசியுடன் சிட் அவுட்டிற்கு சென்று ராம் ப்ரசாத்தை அழைத்திருந்தார் .

ராம் ப்ரசாத்தும் , தன் நடிப்பின் காரணமாக லண்டனில் இருக்க.. மனைவி அழைத்த உடனேயே அழைப்பை ஏற்றவர்.." மயூ.. ரீச் ஆயிட்டீங்களா.. சாப்பிட்டாச்சா..", என்று நலம் விசாரிக்கவும்..

" ஆச்சு ராம்..", என்று சோர்வாய் பதில் கூறியதை கண்டுக் கொண்டவர்..

" ஏன்டா டல்லா பேசுற.. எனி ப்ராப்ளம்..",

" ம்.. என்ன சொல்லறது ராம்.. பேசாம , நாம தாமரைய அவன் நடிக்க கூட்டீட்டு வந்தது தெரியும்னு சொல்லி இருந்திருக்கனும்... அப்புறமாக , கல்யாணம் செய்து வச்சிருக்கணும்.. பெரிய தப்பு பண்ணீட்டோம்.. பெரிய தப்பு ராம்..", என்று கண் கலங்கியவராய் புலம்ப..

" மயூ.. என்ன நடந்தது.. தாமரை எங்கே..", என்று அழுத்தமாக வினவும்.. நடந்ததை கூறத் துவங்கினார் .

" ஒரே அழுகை.. அப்படி அழறா ராம்.. என்னன்னு கூட கேட்க முடியலை . சரணை சத்தம் போடலாம்னு நினைச்சு மொபைல் எடுத்தா.. அவனே கூப்பிட்டு அவளை பத்திரமா பார்த்துக்கங்கன்னு சொல்றான் . அவ்வளவு பிடிவாதமா , இந்த பேஷன் ஷோக்கு.. 
நம்ம கடை டிசைனரா பார்ட்டிஸிப்பேட்.. பண்ண வச்சவன்.. எது சின்ன விஷ் பண்ணலேன்னு தெரியலை . நாம , சரண் எப்படி தாமரையை கூட்டீட்டு வந்தான்னு தெரியும்னு சொல்லி மேரேஜ் செஞ்சு வச்சு இருக்கணும் ராம் . பெரிய தப்பு பண்ணியாச்சு.. அவன் நோக்கத்துக்கு விட்டுப் பிடிக்க முடிவு செய்து.. எங்க வந்து நிக்குது பாருங்க.. இவளுக்கும் பிடிவாதம் ஜாஸ்தி.. இப்போ , நம்மளால என்ன பண்ண முடியும் .. இவ அந்த மான்சி பொண்ணு மாதிரி ஆள் உண்டான்னு சொல்லீட்டு திரியுறா.. ஆனா , நம்ம பார்த்த மான்சி.. நம்ம பையன் அவளால பட்ட கஷ்டத்தை நினைக்கும் போது.. கோபமா வருது.. ரிச்சர்ட் மேரேஜ்ல.. அந்த பொண்ணு கேட்ட மன்னிப்பு.. சொன்ன விஷயத்தை யோசிச்சா.. கெஸ் பண்ணவும் பயமா இருக்கு ராம் . நம்ம கண்ணு முன்னாடியே நம்ம சரணை விட்டுட்டோமே ராம் . மறுபடி மறுபடி.. அவனுக்கு..",

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now