வா.. வா.. என் அன்பே - 93

Start from the beginning
                                    

ஜாஸ்ஸின் மூளை சரணின் ஆளுமையால் கவர்ந்து இழுக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல்.. அவனுடைய ஏற்கும் மனநிலையும் அவளை அதிகமாக சூடேற்றிவிட்டு இருந்ததில்.. திடீரென்று , கேட்ட கதவின் திறப்பு சத்தத்தில் நிலைத் தடுமாறியவளாக.. அமர்ந்திருத்த சரணின் மீது.. முழுமையாக விழுந்து , அழுத்தமாக இதழுடன் தீண்டியவளாக அவன் மீதே சரிய.. நொடிக்குள் , அக்காட்சி முழுவுதும் தாமரைக்கு விருந்தாகி இருந்தது .

சரணின் நிலையில் மாற்றம் இல்லை.. விழுந்தவளையும் தன் மேனியில் இருந்து அவனாக தூக்கவில்லை.. அதேநேரத்தில் , அதிர்ந்து நின்று இருந்த மனைவியிடமும் எவ்வித வார்த்தைகளையும் வெளியிடவில்லை .  பதற்றத்தில் எழுந்த ஜாஸ் அந்நிலையிலும் வேண்டும் என்றே.. அவளது மேல் பாகங்கள் இரண்டும்.. அவனின் முகத்தை உரசியவாறே எழுந்தவள்..

" ஸா.. ஸா..ரி.. ஸாரி..", என்று மொழிந்து..  " கண்டிப்பா.. நீங்க வரணும்.. ", என்று மீண்டும் அவனை கன்னத்துடன் கன்னம் இழைந்தவளாக முத்தத்தை வெளிநாட்டு பாணியில் கொடுத்து.. " பாய்..", என்று கூறி வெளி ஏறி இருந்தாள் .

வாயில் சிலையென நின்றுக் கொண்டிருந்த தாமரையிடம் வலுக்கட்டாயமான புன்னகையை சிந்தியவாறு வெளியேறிவிட்டாள் . போகும் அவளது முதுகையே வெறித்தவளாக தாமரை நின்றிருக்க.. அவள் கண்களில் இருந்து மறையும் வரையும்.. தாமரை அசைந்து இருக்கவில்லை .

நிர்மலமான பார்வையால் சில நொடிகளே மனைவியை அளந்தவன்..  அவளை வா என்றும் அழைக்காமல்.. தன் கணினியில் , முகத்தை புதைத்துக் கொண்டான் .

" என்ன மேம்.. இங்கேயே நின்னுட்டீங்க..", என்று வெளியே அங்கு வந்த வைஷ்ணவ் வினவிய பிறகே , " ஆங்..", என்று கையில் வைத்திருந்த கூடையை அழுத்தமாக பிடித்தவளாக.. உள்ளே நுழைத்து.. கதவையும் சாற்றி.. சரணை பார்க்க.. அவள் நின்றுக் கொண்டு இருப்பதையும் பொருட்படுத்தாமல் , வேலையில் ஈடுபட்டு இருப்பதையும் காணவும் , அவன் அலட்சியத்தை ஏற்க முடியாதவளாக , உதடு கடித்து தன் உள்ளக் குமறுலை அவன் கண்டுவிடக் கூடாது என்கின்ற பிடிவாதத்துடன் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now