வா.‌. வா.‌ என் அன்பே - 90

Začít od začátku
                                    

" ரெண்டு பேருக்கும் அப்படி என்ன வருத்தமா இருக்கும்.. ", என்று நெற்றி மத்தியில் முடிச்சிட்டவனாக , யோசித்தவாறே தங்கையை கண்ணாடியின் வழியாக கவனிக்க..

அவளோ , வழியும் கண்ணீரை அவசர அவசரமாக துடைத்தவளாக இருந்தாள் . இனியும் , மௌனம் காக்க வேண்டாம் என்று நினைத்தவன்..

" குட்டி.. என்னாச்சு ஏன் சரண் கோபமா இருக்காரு..", என்று அழுத்தமாக கேட்டிட..

' ஒன்னுமில்லை ண்ணே..', என்று சொல்லவே மனம் பரபரத்தாலும் , தன் உள்ளக்குமுறலை எவரிடமாவது பகிர்ந்துக் கொண்டால் அழுத்தம் குறையாதோ என்ற பரிதவிப்பில் இருந்தவளுக்கு.. சகோதரனிடம் ஆறுதல் தேடச் செல்லி மனம் கூக்குரலிட்டது .

அசோக் பில்லரை நெருங்கியதும் , அங்கிருந்த கடைக்கு முன்பாக நிறுத்தியவன் , " இறங்கு.." என்று சொல்ல.. கண்களாலேயே , ஏன் என்று வினவிய தாமரையிடம்..

" என்ன குடிக்கிற.." என்றான் .

எவரிடமும் பகிர்ந்து இருக்காத போதும்.. அவள் உடல்நிலையைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியுமே.. அதனால் , " சாத்துக்குடி ஜுஸ் சொல்லு ண்ணே.." என்றவளாக.. கண்களை சுழற்றி.. காலியான இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் . உடல் சோர்வை.. காட்டிலும் மனச்சோர்வு பெரிதும் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது .

" என் பலவீனம் தெரிந்தே அடுச்சுட்டேல்ல..", என்று வலி நிறைந்த சரணின் குரலே இதயம் முழுவதிலும் எதிரொலிக்க.. கண்களில் உற்பத்தியாகும் கண்ணீரை நிறுத்தவே பெரும் போராட்டத்திற்குள் ஆளானாள் .

'என் அருகாமை அவரை வசம் இழக்கச் செய்கிறது..' என்று ஒருபுறம் மழைச்சாரலாய் மனதை குளிர்வித்த போதும்.. அதை வெறுத்து.. விரும்பாத தன்னவனின் நினைப்பு.. எரித்தணலை கொட்டுவது போல் வலி கொடுத்திருந்தது . தன் சிந்தனையில் முழக்கியவள் விழிகளை மூடி தன்னைத்தானே நிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க.. கரத்தில் ஏந்திய பழச்சாறுடன் நின்றிருந்த ரிச்சர்ட்டிற்கே , தனக்கு அடியில் பூமி பிளந்திருப்பது போலானது .

வா.. வா... என் அன்பே...Kde žijí příběhy. Začni objevovat