வா.. வா.. என் அன்பே - 89

Start from the beginning
                                    

தாமரையோ , சிறு மேஜை மீது வைத்து இருந்த கோப்பையை அவசரமாக எடுத்தவளாய்.. அவன் பின்னோடு ஓடி.. சரணின் வலக்கரத்தை பிடித்து  நிறுத்தியவளாய்.. தன் கையில் இருந்ததையும் நீட்டியவாறு கலங்கி தவிக்கும் விழிகளால் கெஞ்சிட.. வெந்து தணிந்தவனுக்கு மீண்டும் அமைதியின்றி போக.. அதே சமயத்தில் , அவளை அலட்சியம் செய்து கடக்க முடியாதவனாய் ,

" வேண்டாம்..", என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாய் பற்கள் நறநறவென கடித்தவன் பார்வையை அவள் தொடுகையில் பதிக்க..

உள்ளுக்குள் குறுகிய போதும் , கண்டுக் கொள்ளாதவளாக..,
" வெறும் வயித்தோட கிளம்புறீகளே.. இந்த காபியாவது குடிச்சிட்டு போங்க.. எம் மேல உள்ள கோபத்தை ஏன் உங்க வயித்துல காட்டுறீய.. அண்ணா அண்ணீ ரொம்பவே வருந்துவாக.. ப்ளீஸ்..", என்று கெஞ்சயவள் முன் தோற்று தான் போனான் .

அவளிடத்தில் வெடிக்கும் சினத்தையும் மீறி.. நேசமே மேலோங்கி நிற்க.. அருந்தாமல் போனால் , நாள் முழுவதும் அவள் உணவை எடுத்துக் கொள்ளவே மாட்டாள் .. என்று நன்கு தெரிந்து வைத்திருப்பதால் , முறைப்புடனே பெற்றுக் கொண்டான்.. அதுவரை , இருந்த இறுக்கம் தொலைந்தவளாக , இதழ் கடையின் ஓரத்தில்.. சிறு புன்னகை பூ பூக்க.. அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாக நின்றவள்..

" நான் ரெண்டு நாள்.. இங்கே இருந்திட்டு அங்க வரவா..", என்று தைரியத்தை வரவழைத்தவளாக வினவ.. இந்த நொடியிலும் ,' நம்ம வீட்டுக்கு வரவா..' என்று கூறாத அவளது பேச்சு.. சரணின் கோபத்திற்கு தூண்டுகோலாக அமைந்து இருந்ததில்..

" வந்தாலும் சரி.. வராமலேயே இங்கேயே இருந்தாலும் சரி.. அது உன் இஷ்டம்..", என்று நறநறவென கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தைகளை அரைத்து துப்பியவன்..  காலியான கோப்பையை அவளது கையில் திணித்தவனாக ,

முகம் வெளிறியவளாய் நின்று இருந்தவளையும் கண்டுக் கொள்ளாதவனாய்.. யாரையும் கண்டுக் கொள்ளாதவனாக விருட்டென்று , வெளியேறியவன்.. அதன் வேகம் குறையாமல் காரையும் கிளப்பி புறப்பட்டு விட..
தாமரையோ , அவன் கோபத்தில் மிரண்டு சமைந்துவிட்டாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now