வா.. வா.. என் அன்பே - 88

En başından başla
                                    

மீண்டும் , நாடினான்.. சற்றுமுன் கிடைத்த மகிழ்ச்சியும் , சுகமும் தொலைந்த மாயம் புரியவில்லை . பூந்தென்றல்.. எரி தணலாய் மாறிய விந்தை இருவருக்குமே புரியவில்லை . வன்மையாக , கையாளும் சரணும் அதே நிலையில் அகப்பட்டு தவித்தவன்..

அவன் கரங்களும் பற்களுக்கும் கொடுத்த வேகம்.. அந்த நிலையிலும் சங்கமத்தில் காட்டவில்லை.. காண்பிக்க முடியவில்லை . பட்டென்று , விலகி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் .

அவளிடத்தே முழுமையான கோபத்தை காட்டவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அல்லாடும் நிலையை முழுமையாக வெறுத்தவனாய் நீருக்கு அடியில் விழிமூடி நின்று விட்டான் .

அதே நிலையில் , வெறுமையாக கிடந்தவளுக்கோ.. இரு கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தோடி காதை நனைத்துக் கொண்டிருந்தது .

சற்றுமுன் , அவன் விரல்கள் வயிற்றில் நர்த்தனமாடியதும்.. " ம் , கொஞ்சம் தொப்பை போட்டு இருக்க..", என்று வருடியவாறு திருப்தி அடைந்தது போல் பேசியதும் நினைவில் உலா வந்து.. வறண்ட புன்னகையை உதிர்க்க செய்திருந்தாலும் , ' உங்க அப்பாக்கு ... இது தொப்பை இல்லைன்னு தெரியும் போது என்ன செய்வாராம்.. ', என்று வயிற்றில் உருவாகி இருக்கும் தன் மகவிடம் முறையிட்டவளால் அவ்வளவு சுலபமாக தன்னை மீட்டு எடுக்கவே முடியவில்லை .

மான்சியின் மீதான கோபம் , தன்னையும் தவறாக நினைக்கத் தோன்றிகிறது புரிய வைத்துவிடலாம்.. என்று எத்தனை சமாதானங்களை தனக்குள்ளாக , கூறிக் கொண்டாலும்.. அவன் சிதறிய வார்த்தைகளின் தாக்கமும்.. பின் நடந்துக் கொண்ட முறையில் இருந்தும் வெளி வர முடியாதவளாய்.. மௌனமான அழுகை அதன் எல்லையை கடந்து கேவலாய் வெடித்துச் சிதறியது .

' அம்மா.. நான் எந்த தப்பும் செய்யலையே..', என்று புழுவாய் துடித்தவளுக்கோ , ' அவியளுக்கு கொஞ்சம் கூட என் பாசம் புரியவே புரியாதா.. ' என்று அதிகமாக மறுக.. எங்கே தான் தாய்மை அடைந்திருப்பதை தெரிவித்தால் , அதுவும் தவறாகிப் போகுமோ என்று எழுந்த அச்சம் அவனிடம் இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று சுயபச்சாதாபத்தினால் முடிவு எடுக்க வைத்திருந்ததில்.. தன்னை மீட்டெடுக்க முயற்சித்தவளாய் மெல்ல எழுந்தவள்.. சரண் வெளி வருவதற்கு முன்பாகவே , அவர்களின் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin