வா.‌ வா‌‌.. என் அன்பே - 82

Start from the beginning
                                    

பார்வையாலேயே மேசை மேல வைக்க சொல்லியவன்.. மீண்டுமாக கணினிக்குள் மூழ்கிவிட .. துடிக்கும் இதழ்களை கடித்தவளாக கையை பிசைந்தவாறு நின்றிருந்தவளுக்கோ , எவ்வளவு நேரம் நின்றிருந்தாலும் அவன் திரும்ப போவது இல்லை.. என்று புரிய , மெத்தையில் விழுந்தவுடன் அடக்க முடியாமல் குமறிக் கொண்டு கண்ணீர் வர.. முதுகு குலுங்குவதில் அவளது அழுகையை உணர்ந்தவனாகவே இருந்தாலும் , மனைவியை நெருங்க சரண் தன்மானம் இடம் தர மறுத்ததாய்..

சரண் ஆத்திரத்தில் வெடித்தாலும் பரவாயில்லை என்று எண்ணும் அளவிற்கு அவனது மௌனம் அவளை கொல்ல.. அன்றைய நாளின் நினைவில் மூழ்க துவங்கினாள் .

கணவனின் தீண்டலில் நேரங்காலம் பார்க்காமல் கரைந்து.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள்.. விழிப்பு தட்டி எழவும்.. மிருதுவான நைட்டி ஒன்று மேனியை தழுவி இருக்கவும்.. வெட்கத்தில் சிவந்து புன்னகை சிந்தியவளாய்.. மணியை ஏறிட்டாள்.. அவன் அளித்த காதல் மிச்சங்கள் யாவும் நொடிக்குள் தேகத்தில் இருந்து மாயமாகியிருக்க.. பதற்றம் தொற்றியவளாய் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் .

மதியம் கடந்தே கீழ் இறங்கி வந்தவளுக்கு... அங்கிருப்பவர்களின் முகங்களை ஏறிடும் துணிவில்லாதவளாய் நெளிந்தவளாக நடந்து வர , அவளை சங்கடத்திற்கு ஆளாக்காமல் , உணவருந்த கூறி.. சசியின் கேலியில் இருந்து கண்டன பார்வையால் பெரியவர்கள் அரணாக இருந்திருக்க.. இது எதுவும் அறயாத தாமரையோ , மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள் . அந்த நேரத்தில் ,

" இந்தாங்க..", என்று ஒரு பையை நீட்டிக் கொண்டு சசி அவள் அருகே நின்றிருக்கவும்..

" என்ன இது..", என்று குழப்பமாக தாமரை கேட்கவும்.. " அது உங்க ஆத்துக்காரரை கேட்கணும்.. பிடிங்க.. முதல்ல இதை வாங்குங்க..", என்று அலைபேசியையும் ஒரு பையையும் நீட்டிக் கொண்டிருந்ததை பெற்றவள்..

" அண்ணா லைன்ல இருக்காங்க..", என்று நகர்ந்திருந்தவள் சத்தமாக கூறி செல்ல..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now